அபிநந்தன்

இந்திய பைலட் அபிநந்தனை பாகிஸ்தான் சிறைபிடித்திருக்கின்றது இதன் பிண்ணணி தகவல்கள் ஒன்றும் மகிழ்ச்சி கொடுப்பவை அல்ல‌

விஷயம் பாகிஸ்தான் பதிலடி கொடுப்பதில் தொடங்கியிருக்கின்றது, பால்கோடு தாக்குதல் தொடங்கியபின் இந்திய ராணுவம் பயிற்சிகளில் இருந்தது

அப்பொழுது பாகிஸ்தானின் எப் 16 தாக்க வர பதிலுக்கு இந்திய விமானங்கள் எழும்பியிருக்கின்றன, அங்குதான் சிக்கல் இருந்திருக்கின்றது

ஆம் இந்திய ராணுவம் எப் 16ஐ எதிர்க்க பழைய மிக் 21 விமானங்களை அனுப்பியிருக்கின்றது, இதுதான் சிக்கலுக்கு முதல் காரணம்

ஏனென்றால் எப்16 என்பது லேட்டஸ்ட் கார் ரகம் என்றால் மிக் 21 அம்பாஸிடருக்கும் முந்தியரகம் பின் எப்படி சரிவரும்

இருவித தகவல்கள் வருகின்றன‌

அதாவது அவசரத்தில் மிக் 21ஐ இயக்கினார்கள் என்பது ஒரு பக்கமும் இல்லை இல்லை தாக்குதல் விமானங்களை தற்காப்புக்கு இயக்குவதில்லை அதனால் மிக் 21 தவிர வேறு வழி இல்லை என இன்னொரு தரப்பும் சொல்கின்றது

எதுவாக இருந்தாலும் இது அவமானமே

ரபேலை மிக அவசரமாக வாங்கியிருக்க வேண்டும் இந்த மிக் 21ஐ என்றோ தலைமுழுகியிருக்க வேண்டும்

இது நிச்சயம் அரசின் கோளாறு காங்கிரஸ் பாஜக என இருவருக்குமே பங்கு உண்டு

சரி இனி பிடிபட அபிநந்தன் என்னாவார்?

ஒன்றும் ஆகமாட்டார், அவரை உயிரோடு பிடித்திருக்கின்றொம் என வீடியோ சகிதம் காட்டிவிட்டார்கள்

அதனால் அவருக்கு ஆபத்தில்லை, சர்வதேச சட்டபடி அவர் ஒப்படைக்கபட்டே தீரவேண்டும்

எத்தனையோ போர்கள் நடந்திருக்கின்றன , எத்தனையோ வீரர்கள் இருபுறமும் கைதாகி விடுதலையாகியிருக்கின்றார்கள்

ஏன் இதைபோல் ஒரு இந்திய‌ விமானபடை வீரர் பாகிஸ்தானின் ராவல்பிண்டி சிறையில் இருந்து தப்பிய சம்பவம் உண்டு, அதைத்தான் மணிரத்னம் காற்று வெளியிட என படமாக எடுத்தார்

அப்படி சிறைபிடிப்புகள் எக்காலமும் உண்டு, அதில் விடுதலையும் உண்டு

நிச்சயம் அபிநந்தன் வெளிவருவார் ஆனால் தனக்கு சாதகமான விடுதலையாக அது இருக்க வேண்டும் என பாகிஸ்தான் விரும்பும்

அதுவும் சண்டை தவிர்க்க விரும்பும் தற்போதைய பாகிஸ்தான் நிச்சயம் விரும்பும்

அதைத்தான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் விரும்புகின்றார், அபிநந்தன் விவகாரத்தை வைத்து பேசி போரை தவிர்ப்பது அவரின் திட்டம்

எப்படியோ போர் நின்று போகட்டும்

பொறுப்பில்லா தீவிரவாதிகளின் செயலால் இருநாட்டு அப்பாவி மக்களும் ஏன் பாதிக்கபடவேண்டும்?

கொடும்போர் ஓயட்டும் மகிழ்ச்சி திரும்பட்டும்

இந்நேரத்தில் அபிநந்தன் குடும்பத்தினருக்கு ஆறுதலும் உறுதியும் கொடுத்து துணைநிற்க வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை

அவ்வகையில் இந்தியா அக்குடும்பத்திற்கு துணை நிற்கின்றது

பூட்டோவிற்கு பின் பாகிஸ்தான் கண்ட தனிபெரும் பிரதமர் இம்ரான்கான் , ஓரளவு பக்குவமும் உலக நடப்பும் தெரிந்தவர்

அவரிடம் பேச்சுவார்த்தைக்கு சென்று அபிநந்தனை மீட்டுவருவது இத்தேசத்தின் கடமை

இவ்விஷயம் சொல்லவருவது ஒன்றுதான்

இந்த அரசுகள் ராணுவ விவகாரங்களில் மெத்தனமாக இருந்திருப்பது தெரிகின்றது, கழிக்க வேண்டிய மிக் ரக விமானங்களை இன்னும் வைத்திருப்பது கண்டிக்க வேண்டிய ஒன்று

இனியாவது இந்திய விமானபடை பழையன கழிந்து புதியனவற்றில் புகட்டும்

பாழும் அரசியல் ஒழிந்து இனியாவது தகுந்த பலத்தை இந்திய விமானபடை பெறட்டும்

ஒரு ராணுவ எம்.ஐ ஹெலிகாப்டர் விபத்து

உண்மையில் ஒரு ராணுவ எம்.ஐ ஹெலிகாப்டர் காலை 10மணிக்கு விபத்துகுள்ளாகியிருகின்றது

அதாவது போர் பயிற்சியில் ஈடுபட்ட பல விமானங்களில் இதுவும் ஒன்று

அது இரண்டாக உடைந்து விழுந்திருப்பதுதான் ஆச்சரியம், ஆம் யாராவது தாக்காமால் உடைந்திருக்க வாய்ப்பில்லை

இந்திய ராணுவம் தொழில்நுட்ப கொளாறு என சொன்னாலும் உடைந்து விழுவது என்பது சாதாரணம் அல்ல‌

இதெல்லாம் வெளிசொல்லபடவில்லை, இந்திய ராணுவத்தால் சொல்லவும் முடியாது

விஷயம் சீரியசாகின்றது, அபிநந்தன் என்பவர் அதில் இருந்திருக்கலாம்

அவர் இறந்திருக்கலாம் இல்லை ஏதும் கோஷ்டி தப்பியவரை கடத்தியிருக்கலாம் இரண்டுக்கும் வாய்புண்டு

மிக பயங்கர கருவிகளை காஷ்மிர் தீவிரவாதிகளுக்கு கொடுத்து கார்கில் போல மினி யுத்ததிற்கு தூண்டிவிட்டிருக்கலாம்

இதனாலே காஷ்மிரில் அவசரநிலை பிரகடனபடுத்துள்ளது

ஜெட்லி சொன்னது போல ஏதும் எப்பொழுதும் நடக்கலாம்

பாகிஸ்தான் பிடித்த விமானம் இதோ

பாகிஸ்தான் பிடித்த விமானம் இதோ என TU 657 என்ற வீழ்ந்த மிக் விமானத்தை காட்டி பல குழுக்கள் சந்தோஷபடுகின்றன‌

இந்த மிக் TU 657 விமானம் 2016லே விபத்துகுள்ளானது, அதன் விவரங்களை இணைத்துள்ளோம் நீங்களே பாருங்கள்

பாகிஸ்தான் ஏராளமான கட்டுகதைகளை யுத்த நேரத்தில் அவிழ்த்துவிடும், அவர்களுக்கு தெரிந்தது பொய் ஒன்றுதான்

சுஜாதா ரங்கராஜன்

ஜனரஞ்சகமான எழுத்து என்றால் என்ன? அதனை தமிழில் எழுதுவது எப்படி என தமிழகம் இவன் மூலம் அறிந்துகொள்ளட்டும்..” என‌ உலகிற்கு , இறைவன் அனுப்பிய எழுத்தாளன் சுஜாதா ரங்கராஜன் நினைவு நாள் இன்று

உலகின் எந்த துறையினை எடுத்தாலும் அதன் அடி ஆழம் வரை எழுதும் அறிவு அவருக்கு இருந்தது

ஆன்மீகம் முதல் விஞ்ஞானம் வரை, சங்க இலக்கியம் முதல் விண்வெளி வரை, கண மருத்துவம் முதல் கணிணி வரை, வரலாறு முதல் ரோபோக்கள் வரை

முந்தைய நாள் ஆழ்வார்கள் பெருமையினை அழகிய தமிழில் பேசிவிட்டு, மறுநாள் காலையில் சினிமா விவாதங்களில் பங்கெடுத்துவிட்டு, மாலையே கணிப்பொறியில் தமிழை கொண்டுவருவது எப்படி என அவர் பேசியபொழுது இப்படியும் ஒரு மனிதன் சாத்தியமா என்றெல்லாம் வியந்த காலங்கள் உண்டு

எல்லா விஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார் அவர், அதனை சுவைபட சொல்லும் அழகும் இருந்தது

தொல்காப்பியன், ஆழ்வார்கள், சாக்ரடீஸ், ஐன்ஸ்டீன், பாரதி, புதுமை பித்தன் என எல்லாமும் கலந்த அப்படி ஒரு எழுத்தாளன் இனி தமிழுலக்கிற்கு சாத்தியமே இல்லை

கண்ணதாசனும், சீனிவாச ராமனுஜனும் கலந்த கலவை அவர்

பிறவி அறிவு அவரிடம் அப்படி இருந்திருக்கின்றது

தமிழுலகம் மறக்கவே முடியாத மாமனிதன், தமிழர் அறிவின் பெரும் அடையாளம்

நல்ல எழுத்து எது? எப்படி எழுதவேண்டும் என்பதற்கு நவீன காலத்தில் அவரே இலக்கணம்.

அவர் எழுதிய காலங்கள் தமிழ் எழுத்துலகின் பொற்காலம், படிக்க படிக்க அப்படி ஒரு சுகமும் , திருப்தியும் மகிழ்வும் கொடுத்த எழுத்துக்கள் அவை

மனிதர் எல்லாவற்றையும் ரசித்திருக்கின்றார், அதுவும் முழுக்க முழுக்க ரசித்திருக்கின்றார் என்பது மட்டும் உண்மை

அந்த ரசனையினை எழுத்தில் கொடுத்தார்.

முழுநேர எழுத்தாளன் எல்லாம் அல்ல, அடிப்படையில் அவர் ஒரு பொறியாளர். நேரம் கிடைக்கும்பொழுது எழுதி தள்ளியிருக்கின்றார் அவ்வளவுதான்

எழுத்தில் சம்பாதிக்கும் ஆர்வம் அவருக்கு துளியுமில்லை, தனக்கு தோன்றியதை எழுதியிருக்கின்றார், எழுத்து அவருக்கு பிடித்தமான பொழுதுபோக்காக இருந்திருக்கின்றது

வியாபார நோக்கம் அதில் சுத்தமாக இல்லை.

தன் பார்வையில் இந்த உலகத்தை எந்த நிர்பந்தமும் இன்றி ரசித்திருக்கின்றார், அதனால்தான் அவரின் எழுத்துக்கள் அப்படி வரம்பெற்று வந்திருக்கின்றன.

பெரும் ஞானிக்குள்ள மனபக்குவம் அவருக்கு இருந்திருக்கின்றது,

யார் எதனை கேட்டாலும் எழுதிகொடுத்துவிட்டு அவர்போக்கில் இருந்திருக்கின்றார்.

பூமியின் எல்லா பக்கங்களையும், மானிட வாழ்வின் எல்லா உணர்வுகளையும், விஞ்ஞானத்தின் எல்லா புத்தகங்களையும் , சமூகத்தின் எல்லா நகர்வுகளையும் கவனித்திருக்கின்றார்

குறுகிய வட்டம் அவர் எழுத்தில் இருந்ததல்ல, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தத்துவம் அவர் எழுத்தெல்லாம் ஊறி இருந்தது. அவரின் ஒரு புத்தகத்தை படித்தால் பல நூலகங்களை சுற்றி வந்த அளவு அனுபவம் கிடைத்தது, நீங்களும் படியுங்கள் நிச்சயம் கிடைக்கும்

தமிழருக்கு பல்சுவை விஞ்ஞான‌ “எழுத்தறிவித்த இறைவன்” நிச்சயம் அவர்தான்.

அந்த பல்லறிவு மிக்க எழுத்து ஞானிக்கு அறிவார்ந்த கோடி அஞ்சலிகள்

பெரும் அச்சுறுத்தல்

போர் பயிற்சியில் இந்திய மிக்ரக விமானம் விழுந்திருகின்றது, இருவர் பலியாகியிருக்கின்றார்கள்

அவர்களுக்கு அஞ்சலிகள்

மிக் 29 ரக விமானங்கள் பழமையானதும் அடிக்கடி விபத்தும் ஏற்படுவதால் மிக் 35 என புதியரக விமானங்களை வாங்க சென்றவாரம் பேச்சு நடந்தது

100 மிக் 35 விமானங்களை வாங்க ரஷ்யாவுடன் பேச்சு நடத்தினார் நிர்மலா சீத்தாராமன்

சில மிக் ரக விபத்துக்களை போலவே இதுவும் விபத்தே

அதற்குள் இந்திய விமானத்தை தாங்கள் சுட்டுவிட்டதாக பாகிஸ்தான் கதை அளக்கின்றது

அதனை இங்குள்ள பதர்கள் கொண்டாடுகின்றன‌

மிக் 29 விமானத்தை பாகிஸ்தானுக்குள் தாக்குதலுக்கு அனுப்பாது இந்தியா என்பது ராணுவ திட்டம்

ஆம் மிக எளிதாக சிக்கிவிடும் பழைய ரகம் அவை என்பதால் மிராஜ், ஜாகுவார், சுகோய் ரகமே இந்திய தாக்குதல் விமானங்கள்

பயிற்சி விமான விழுந்ததை தான் சுட்டேன் என காமெடி செய்கின்றது பாகிஸ்தான் அதற்கு கைதட்டவும் சில அரைபைத்தியங்கள் இங்குள்ளன

எப்பொழுது இந்தியன் சாவான் , அவனுக்கு கைதட்டலாம் என்ற அளவு மூளை மழுங்கிய கூட்டமொன்று பாஜக எதிர்பு எனும்பெயரில் இங்கு சுற்றி திரிவது பெரும் அச்சுறுத்தல்

பாகிஸ்தானின் எப்16 ரக விமானம் வீழ்த்தபட்டது நிச்சயம்

இந்தியாவில் தாக்க தன் மிகசிறந்த விமானமான எப்16 ரக விமானத்தை அனுப்பியிருகின்றது பாகிஸ்தான்

நிச்சயம் அது மிக தரமான விமானம், அமெரிக்காவுக்கு அதை வழங்க பலத்த கண்டனம் அமெரிக்காவில் அன்று இருந்தது அதையும் மீறி கொடுத்து இந்தியாவுக்கு எதிராக கொம்பு சீவியது அமெரிக்கா

மிகுந்த வேகம், துல்லிய தாக்குதல் வசதி , ரேடாரில் சிக்காத நுட்பம் என பல விஷயங்கள் அதில் உண்டு

தன் துருப்புசீட்டாக அதை வைத்திருந்தது பாகிஸ்தான்

அதனை இன்று ஏவியிருக்கின்றார்கள், இரு விமானங்கள் வந்திருக்கின்றன, ஒன்று தப்பிவிட்டது

ஒன்றை இந்தியா வீழ்த்தி இருக்கின்றது, இது மிகபெரும் விஷயம்

தன் அணுகுண்டுக்கும் ஏவுகனைக்கும் அடுத்ததாக இதைத்தான் பாகிஸ்தான் நம்பி இருந்தது

பாகிஸ்தானின் எப்16 ரக விமானம் வீழ்த்தபட்டது நிச்சயம் அவர்களுக்கு அடி

தாக்குதலில் மட்டுமல்ல தற்காப்பிலும் விமானபடை பின்னுகின்றது

அக்காலத்தில் கண்ணதாசன் எழுதிய வரிகள்தான் இப்பொழுதும்

“எல்லையில் வந்து நின்ற எதிரிகளை 
நம் படைகள் பந்து விளையாடுதம்மா..”

வாக்கு மெஷினில் தில்லுமுல்லு


வாக்கு மெஷினில் தில்லுமுல்லு செய்து என்னை தோற்கடிக்கின்றார்கள் என ஜெயா புலம்பிய காலமது

“மின்னணு வாக்கு எந்திரங்களை உருவாக்கியவன் என்ற முறையில் சொல்கின்றேன், அதில் தில்லுமுல்லு எல்லாம் செய்ய முடியாது மிக மிக பாதுகாப்பானது அது

ஜெயலலிதா தன் தோல்விக்கு வேறு காரணங்களை தேடுவது நல்லது” என சொன்னார் சுஜாதா

ஜெயாதான் இல்லையே தவிர தோல்வியுறும் எல்லோரும் அதையேதான் சொல்கின்றார்கள்

அவர்கள் சுஜாதா சொன்னபடி தோல்விக்கு வேறு காரணம் தேடுவதுதான் சரி