அடித்திருக்கின்றார்கள் : இம்ரான்

இந்தியா தாக்குதல் நடத்தியதாக சொல்லும் இடங்கள் பத்திரிக்கையாளர்களுக்கு காட்டப்படும் : இம்ரான்கான்

இந்தியா எங்கே தாக்குதல் நடத்தினோம் என துல்லியமாக அதாவது முகவரி சகிதம் சொல்லாதபொழுது இவர் எதை காட்டுவாராம்?

சம்பந்தமே இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று இதுதான் அந்த இடம் பாருங்கள் என்பார், அங்கு தாக்குதலுக்கான தடயமே இருக்காது

இந்தியா கண்டிப்பாக அந்த இடத்தை சொல்லாது

பின் இம்ரான்கானும் அவரின் இந்திய ரசிகர்களும் வெற்றி புன்னகை பூப்பார்கள்

அடிபட்டவன் முதுகை காட்ட சொன்னால் தன் அடிபடாத முதுகை காட்டுவது இம்ரான் ஸ்டைல்

ஆனால் அடித்திருக்கின்றார்கள் என ஒப்புகொள்கின்றார் அல்லவா இம்ரான் அதுதான் இந்தியாவின் வெற்றி

இந்திய தரப்புக்கு இது அதிர்ச்சிதான்

சிரிய போரில் ரஷ்ய பக்கம் நில்லாதது, சில விவகாரங்களில் இஸ்ரேலுடனும் அமெரிக்காவுடனும் நெருங்குவது, அணுசக்தி விவகாரங்களுக்கு வேறு கூட்டாளிகளை தேடுவது என பல விவகாரங்களை மனதில் வைத்து ரஷ்யா இந்த பதற்ற நேரத்தில் அமைதி காக்கின்றது

ரஷ்யா பல சிக்கல்களை சந்தித்தபொழுது இந்தியா காட்டிய அமைதிக்கு அது பதிலடி கொடுக்கின்றது

இந்திய தரப்புக்கு இது அதிர்ச்சிதான், புட்டீன் என்பவர் ஒருமாதிரி மனிதர் அல்லவா?

இனி அவரை சமாதானபடுத்த ஏதாவது செய்தாக வேண்டும் இந்தியா

பேச்சுவார்த்தை : மலாலா

இரு நாட்டுதலைவர்களும் கைகுலுக்கி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: மலாலா

ஏம்மா உன்னை சுட்ட தாலிபன்களிடம் உன்னால் கைகுலுக்கி பேசமுடியுமா?

சிக்கல் பாகிஸ்தானிடம் உள்ளது, அவர்களிடம் இதுவரை பேசிய எந்த பேச்சு பலனளித்தது, இந்தியாவிடம் கைகுலுக்கிகொண்டே ஒருபக்கம் தீவிரவாதிகளுக்கு இன்னொரு கையால் தடவிகொடுப்பவர்கள் அவர்கள்

எத்தனையோ ஒப்பந்தங்கள் போடபட்டும் முடிவு எடுக்கபட்டும் எதை மதித்தார்கள் அவர்கள்?

அவர்கள் திருந்தும் வரை கைகொடுப்பதில் எந்த பலனுமில்லை

வாஜ்பாய் கூட லாகூருக்கு பஸ் விட்டு பார்த்தார், சண்டாளர்கள் அதில் ஏறிவந்து கார்கிலில் அமர்ந்து கொண்டனர்

திருந்தாத கூட்டத்திடம் உறவு பாராட்டுவதில் அர்த்தமே இல்லை

தேர்தலுக்கு பயன்படுத்துகின்றாரா?

மோடி யுத்த நேரத்தை தேர்தலுக்கு பயன்படுத்துகின்றார் என சொல்லும் கூமுட்டைகள் எவரும், தேர்தல் நேரம் பார்த்து இந்தியாவிற்கு தீவிரவாதிகள் செக் வைக்கின்றனர் என யோசிப்பதாக தெரியவில்லை

இந்திராவின் அதிரடி நடவடிக்கையில் எப்படி துளியும் அரசியல் இல்லையோ அப்படியேத்தான் இன்றைய காட்சிகளும் என்பதில் துளியும் சந்தேகமில்லை

ராணுவ நடவடிக்கையில் வெற்றிமேல் வெற்றிபெற்ற இந்திரா தேர்தலில் பகிரங்கமாக தோற்ற வரலாறும் உண்டு

மானெக்ஷா போன்ற மாபெரும் தளபதிகள் மாபெரும் வெற்றிபெற்ற தளபதிகள் அரசியலுக்கு வர தயங்கிய தேசம் இது

ராணுவம் வேறு அரசியல் வேறு என்பதுதான் நிலைப்பாடு, இல்லையேல் பொற்கோவில் சம்பவத்திலே ராணுவம் பிளவுண்டிருக்கும்

பாகிஸ்தான் உளவுதுறை பொல்லாதது, எந்த நேரம் எங்கு அடித்தால் இந்தியாவுக்கும் அதை ஆளும் தலமைக்கும் மகா சிக்கல் வரும் என்பது அதற்கு தெரியும்

அதனால் மிக சரியாக தேர்தல் நேரம்பார்த்து அடித்துவிட்டார்கள்

அதை புரியாமல் இது தேசபாதுகாப்பு என்பதும் புரியாமல் ஏக இம்சைகள்

எம்ஜி ராமசந்திரனும் ஜெயலலிதாவும் பழனிச்சாமியும் எப்படி தமிழக‌ முதல்வரானார்கள் என்பதும்,

முகஸ்டாலின் கூட தமிழக முதலமைச்சராக முடியும் என ஏன் நம்புகின்றார் என்பதும் கண்கூடாக தெரியும் நேரமிது

இம்ரான்கான் கேட்டுச்சா..

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து தடை செய்யுங்கள்: அமெரிக்கா, இங்கிலாந்து பிரான்ஸ் வலியுறுத்தல்

ஏம்பா “அழகா..” இம்ரான்கான் கேட்டுச்சா..

நீர் கேட்டாலும் கேக்காதமாதிரியேதான இருப்பீர்..

இன்றைய துளி – 28/02/2019 (1)

மோடிக்கு கருப்பு கொடி

மார்ச் 1ம் தேதி ஆரல்வாய்மொழியில் மோடிக்கு கருப்பு கொடி : வைகோ அறிவிப்பு

அடிக்கடி இவரின் காமெடி வேறு

சோனியாவும் ராகுலும் இனத்தை ஒழித்தவர்கள் என்பார், அவர்கள் வந்தால் பல்லிளித்து கொண்டு கூட்டணியில் 2 சீட் என குனிந்து நிற்பார்

மோடியினை கண்டால் தன் தோளின் துண்டை எடுத்து கொடியாக காட்டுவார்

நல்ல வேளையாக வைகோ கருப்பு வேட்டி அணிவதில்லை

இம்மாதிரி சங்கிகள் நாட்டுக்க்கு மகா ஆபத்தானவை

கர்நாடகாவில் பாஜக அதிக இடங்களை கைப்பற்ற விமானப்படை தாக்குதல் உதவும் – எடியூரப்பா

பாஜகவின் எதிரிகள் வேறு எங்குமே அல்ல, இம்மாதிரி சங்கிகள் நாட்டுக்க்கு மகா ஆபத்தானவை

ராணுவ சேவையினை கட்சிக்கு பயன்படுத்தும் இவரை தேசதுரோக வழக்கில் இவரை உள்ளே தள்ள வேண்டும்

*************

மோடி கண்ணசைத்தால் ஒரு மணி நேரத்தில் பாகிஸ்தான் இருக்காது’ – ராஜேந்திர பாலாஜி

திராவிட நாடு

அப்படியே மோடி இன்னொரு கண்ணை பிரியாவாரியார் ஸ்டைலில் அசைத்தால் அதிமுகவும் இருக்காது அல்லவா அமைச்சரே?

திராவிட நாடு அடைந்தால் ராணுவம் அமைக்க வேண்டும்,

ஆனால் நாடு அமைந்தாலும் இங்கு ஒருபயலும் ராணுவம் என்றாலோ, உயிர்தியாகம் செய்யவேண்டும் என்றாலோ வரவே மாட்டான் என நன்றாக உணர்ந்தே திராவிட நாடு கோரிக்கையினை கைவிட்டிருக்கின்றார் அண்ணா

காஷ்மீர் துளி – 28/02/2019 (1)

இப்பொழுதும் அமெரிக்க பாணியில் தாக்கி அபிநந்தனை மீட்க வேண்டும் என சொல்லும் வெறிபிடித்த மூளை மழுங்கிய கூட்டம் இருக்கத்தான் செய்கின்றது

இவர்களை பிணையாக‌ கொடுத்துவிட்டு அபிநந்தனை மீட்டால் மிக நல்ல நடவடிக்கையாக இருக்கும்

காற்றுவெளியிடை

மணிரத்னத்திற்கு இப்பொழுதெல்லாம் நேரம் சரியில்லை

அந்த “காற்றுவெளியிடை” இப்பொழுது வரவேண்டிய படம்,

தமிழில் விமானபடை வீரர்களின் கதை என “பார்த்தால் பசிதீரும்” படத்திற்கு பின்பு வந்த கதை அதுதான்

இப்பொழுது வந்தால் படம் பிய்த்து கொண்டு ஓடும், ஆனால் முன்பே வந்து சறுக்கிவிட்ட

***************

“என்னய்யா ஹேர் ஸ்டைல் இது, தமிழ்நாட்டு நடிகர் செந்தில் மாதிரி?

சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாய்யா, இந்தியா பாகிஸ்தான் கூட ஒரு பஞ்சயாத்து பேசவேண்டி இருக்கு , சீக்கிரம்யா”

பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றார் இம்ரான்கான்

தாவுத் இப்ரஹிமினை கொடுக்கும் வரை, மசூத் அசார் போன்ற , லஷ்கர் இயக்க கமாண்டர் போன்றவர்களை விடுவிக்கும்வரை , தீவிரவாதிகளை கைவிடும் வரை பேச்சு என்பதே கூடாது என்பதுதான் சரியான நிலைப்பாடு

அபிநந்தனை வீடியோ போட்டு காட்டியிருப்பதால் அவரின் பாதுகாப்புக்கு பாகிஸ்தானே பொறுப்பு என்பதால் சர்வதேச அளவில் பேசி அவரை விடுவிக்க வேண்டும்

****************

பாகிஸ்தான் எப்16 விமானம் இந்திய பகுதியில் வீழ்த்தபட்டிருந்தால் நிச்சயம் புகைபட ஆதாரமாக இந்தியா கொடுத்திருக்கும், ஏன் தப்பிய அந்த பைலட்டே இந்தியாவில் விழுந்திருப்பார் தூக்கியிருக்கலாம்

ஆனால் அது பாகிஸ்தானின் காஷ்மீரில் விழுந்திருக்கின்றது, அந்த சண்டையில் அபிநந்தனின் விமானமும் வீழ்த்தபட்டு அவர் பிடிபட்டிருக்கின்றார்

அதாவது பாகிஸ்தானில் புகுந்து அடித்த சண்டையில்தான் அவர் பிடிபட்டிருக்கின்றார்

இதை சொன்னால் திரைகதை வசனம் என்கின்றார்கள்

நடந்த மிக யதார்த்தமான உண்மையினை சொன்னாலும் வசனமா?

பராசக்தி முதல் பல படங்களுக்கு வசனம் எழுதியவரின் கட்சிக்காரர்களுக்கு எல்லாமே திரைகதை வசனம் போலவே தெரியும் போல…

குத்தீட்டி, கேடயம், போர்வாள், ஈட்டி, சேனை,தளபதி, போர்களம், முரசு என வாயிலே வடைசுட்ட, பேப்பரிலே பேனாவால் தோசைசுட்ட கட்சி எது என யாருக்கு தெரியாது?

*****************

முதலில் #saynototerrorism என்பதை பாகிஸ்தான் சொல்லட்டும்

#saynotowar என்பதை நாம் உடனே சொல்லலாம்

**************

இந்த இருநாட்களில் கண்டுகொண்ட விஷயம் ஒன்றுதான்

சீக்கிய இனத்திற்கு ராஜ்புத் இனபிரிவுகளுக்கு அடுத்தபடியாக இங்கு நாட்டுபற்றோடு இருப்பது பிராமண இனமே

சீக்கியர்களுக்குள்ள அதே சீற்றம் அவர்களுக்கும் அப்படியே நாடு என்றால் இருக்கின்றது

அதை சொல்வதில் தயக்கம் ஏதுமில்லை