அவனே அயோக்கியன்

கிறிஸ்தவர்கள் ரத்தசாட்சியாக சாவது ஒன்றும் புதிதல்ல‌

அவர்கள் ஜெருசலேமில் செத்தார்கள், சிரியாவில் செத்தார்கள், துருக்கியில் செத்தார்கள்

அதுவும் டயொகிளிசியவும், நீரோவும் அவர்களை கொடுமைபடுத்தி கொன்றவிதம் ஹிட்லர் அவர்களிடம் பிச்சை எடுக்க வேண்டும்

2000 வருட கிறிஸ்தவ வரலாறு முழுக்க ரத்தமே சுவடாக கிடக்கின்றது

தமிழகத்தை எடுத்தாலும் அதுவே, தோமையார் பரங்கிமலை வரவில்லைதான் ஆனால் ஒரு கிறிஸ்தவன் அங்கே கொல்லபட்டிருக்கின்றான்

ராமநாதபுரத்தில் அருளாந்தர் எனும் துறவி தலைவெட்டபட்டு கொல்லபட்டிருக்கின்றார்

ஆரல்வாய்மொழியில் தேவசகாயம் பிள்ளை என்பவர் வரலாறு மணியாய் ஒலித்து சொல்கின்றது

ஆம், கிறிஸ்தவர்கள் இங்கு சாவது ஒன்றும் புதிதல்ல 500 வருடமாக நடக்கும் ஒரு விஷயம், வரலாறுகள் காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை உண்டு

ஆனால் அன்றெல்லாம் அமைதி ஏன்?

முதலில் மன்னனுக்கு பயம், அதன் பின் வெள்ளையன் என்ற ரகசிய ஆதரவு

இப்பொழுது மக்களாட்சி அல்லவா? மறுபடி இதோ கிரகாம் ஸ்டெயின்ஸ், இதோ கிறிஸ்தவர்களுக்கு ஆபத்து என கிளம்பிவிட்டார்கள்

தேர்தல் என்றால் இதை எல்லாம் சொல்லிகொண்டிருப்பது சுத்த அயோக்கியதனமும் இடுகட்டிய தந்திரமுமாகும்

இங்கு தோமையாரின் சீடன் பரங்கிமலையில் கொல்லபட்டதில் இருந்து , தடியதேவனால் கொல்லபட்ட அருளானந்தர், தேவசகாயம் பிள்ளை போன்றோரின் தொடர்ச்சிதான் ஸ்டெயின்ஸ்

ஆனால் ஸ்டெயின்ஸை மட்டும் அரசியலாக்குவதில்தான் கிறிஸ்தவ தந்திரம் இருக்கின்றது

ரத்தம் சிந்தி தியாகத்தில் வளர்ந்ததுதான் கிறிஸ்தவம், அவ்வகையில் ஸ்டெயின்ஸை நினைத்து பெருமை அடையலாம், கடவுளுக்காக செத்த நல்ல கிறிஸ்தவன் அவன்

தன் கணவனின் கொலையாளியினை மன்னித்த கிளாராவும் நல்ல கிறிஸ்துவச்சியே

அதை வைத்து அரசியல் செய்கின்றான் அல்லவா? அவனே அயோக்கியன்

கிரகாம் ஸ்டெயின்ஸ் படம்

கிரகாம் ஸ்டெயின்ஸ் கதையினை படமாக எடுத்துவிட்டார்கள், அது இனி திரையிடபடுமாம்

தேர்தலுக்கு முன்பா பின்பா என தெரியவில்லை

இது எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியாது, தமிழகத்தில் நிகழா படுகொலைகள் இல்லை அதெல்லாம் பல படங்களில் வரத்தான் செய்கின்றது

தா.கிருட்டினன் கொலையினை அந்த சுப்பிரமணியபுரம் படத்தை விட இன்னொரு படம் சொல்லிவிட முடியாது

இவ்வளவுக்கும் அப்படம் வரும்பொழுது திமுக ஆட்சியில்தான் இருந்தது ஒரு தடையுமில்லை, சத்தமுமில்லை

தர்மபுரி பேருந்து எரிப்பு கூட தமண்ணா நடித்த படத்தில் வந்தது

அது என்றல்ல, எல்லா அரசியல் பரபரப்புகளும் கொலையும் ஊழலும் இங்கு சினிமாவில் எதிரொலிக்கும், தமிழக யதார்த்தம் அது

மணிரத்னம் அப்படித்தான் தன்னை நிரூபித்தார்

அப்படி இருந்தும் இங்கெல்லாம் ஒரு பரபரப்பும் மாற்றமும் வரவில்லை, வரவே வராது

அப்படி ஸ்டெயின்ஸ் கதையும் இங்கு பெரும் தாக்கம் ஏற்படுத்தாது

தமிழகம் இம்மாதிரி படங்களை எல்லாம் எப்பொழுதோ எடுத்தாகிவிட்டது, ஆனால் கிரகாம் ஸ்டெயின்ஸ் படம் பாஜக அடுத்த தேர்தலில் வெற்றிபெறும் முனைப்பில் இருக்கும் பொழுதுதான் வருகின்றது

எமக்கு மகிழ்ச்சியே

நாலு பேர் வாழ்த்துகின்றார்கள் என்பதற்காக பச்சை பொய்களையும் எழுத முடியாது, நாலு பேர் கண்டிக்கின்றார்கள் என்பதற்காக உண்மையினையும் எம்மால் சொல்லாமல் இருக்க முடியாது

அதை எதிர்பார்த்து இவ்விடம் வரவேண்டாம்

எது மனதை தொடும் உண்மையோ அதை சொல்லிகொண்டே இருப்போம்

பூமியில் கூட பருவநிலை மாறும், சந்திரன் கூட தேய்ந்து வளரும், சூரியன் கூட இரவில் மறையும்

இது இயற்கையின் நியதி, அப்படியே எல்லா விஷயங்களிலும் உண்மையும் இருக்கும் அதன் மறுபக்கமும் இருக்கும்

நாம் அந்த ரகம், இயற்கையான மனம் என்றால் அப்படித்தான்

மற்றபடி நிரந்தரமாக இருப்பது எண்ணெய் விளக்கு, எவனோ அடிக்கடி ஏற்றும் தீபம், அப்படி நமக்கு எண்ணெய் ஊற்ற யாருமில்லை அது நமக்கு தேவையுமில்லை

எம் இயல்பிலே நாம் இருப்போம், , மழை வந்தால் நதி கலங்கத்தான் செய்யும்

அடிக்கடி மழைபெய்யும் காலத்தில் புது புது வெள்ளம் வரும் அது கலங்கித்தான் வரும், அதற்காக அது நதியின் பிழையன்று , காலத்தின் பிழை

கட்சி சார்பு, மத சார்பு, இனசார்பு, சாதி சார்பு என இங்கு எதுவுமில்லை அதை தேடி இங்கு வரவேண்டாம்

அதெல்லாம் இல்லா பைத்தியகாரன் இவன் என்றால் அப்படியே இருந்துவிட்டு போகின்றோம் அதில் எமக்கு மகிழ்ச்சியே..

ஆனந்தரங்கம் பிள்ளை

17ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் பெரும் போர் ஐரோப்பியரால் நிகழ்த்தபட்டன, காரணம் அவர்களா என்றால் இல்லை

இங்கிருந்த சிற்றரசர்கள் வாரிசு சண்டையில் அவர்கள் உதவியினை கேட்க ராபர்ட் கிளைவும் டுப்ளெவும் ஆளுக்கொரு பக்கம் குதித்தனர்

உண்மையில் டெல்லி மொகலாய அரசு அன்று பலமாக இருந்தது, இந்த சிற்றரசர்கள் கப்பம் கட்டிகொண்டுதான் இருந்தார்கள்

யார் உரிமையாக‌ கப்பம் கட்டுவோம் என்பதில்தான் சண்டை, அதற்குத்தான் போர்.

முதலில் கிளைவும் டுப்ளெவும் ஆற்காடு நவாபின் வாரிசுகளுக்கு ஆதரவாக மோதினாலும், ஒரு கட்டத்தில் நவாபினை தள்ளிவிட்டு இவர்கள் இருவரும் பகிரங்கமாக மோதினார்கள்

இதில் சென்னை கோட்டையே சில நேரம் டூப்ளேவால் கைபற்றபபட்டது, இறுதியில் ராபர்ட் கிளைவின் அடி முன்னால் நிற்க முடியாது பிரான்ஸ் படை அன்று பிரான்சில் நடந்த குழப்பங்களாலும் தன் எல்லையினை பாண்டிச்சேரியோடு சுருக்கிற்று

இன்றும் பாண்டிச்சேரியில் டூப்ளே சிலை உண்டு

இந்த ஐரோப்பிய காலணியாக்கத்தை நமக்கு யார் வரலாறாக கொடுத்தவர் என்றால் டூப்ளேவின் மொழிபெயர்ப்பாளராக இருந்த சில தமிழர்கள்

அவர்கள் அன்றாடம் நடந்த நிகழ்வுகளை எழுதி வைத்திருக்கின்றார்கள்

இதனால்தான் எப்படி ஆங்கிலேயன் காலூன்றினான், எப்படி பிரென்ஞ்படை பின் வாங்கியது? ஏன் ஆங்கில ஆட்சி ஏற்பட்டது பிரென்ஞ் ஆட்சி ஏன் இந்தியாவில் மலரவில்லை என பல கேள்விகளுக்கு விடை கிடைக்கின்றது

அன்றைய டெல்லி சுல்தான், நவாப், தமிழக பாளையத்தார் என பல வரலாறுகளை அது வெளிச்சம் போட்டு காட்டுகின்றது

மாவீரன் மருதநாயகம் பற்றிய குறிப்புகளை இவர்கள்தான் எழுதி வைத்தார்கள்

அவர்களில் ஒருவர் ஆனந்தரங்கம் பிள்ளை,

அன்றே சில மொழிகள் படித்தவர். சொந்தமாக கப்பல் இருந்த வியாபாரியும் கூட, இதனால் ஐரோப்பியர் பழக்கம் உருவாகி அப்படியே சென்னை கோட்டையில் திவானாக இருந்தவர்.

அப்பொழுது அங்கு வந்தவனே ராபர்ட் கிளைவ்

இவர் மூலமே தமிழக நிலவரத்தை அறிந்தான் கிளைவ்

சென்னை கோட்டையினை பிரென்ஞ்படை பிடித்தபொழுது பிரென்ஞ் பக்கம் சென்றார், அம்மொழியும் அவருக்கு தெரிந்திருக்கின்றது. அவர் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளவர்

அன்றைய அரசுபணிக்கு அது அவசியமாகவும் இருந்தது.

1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார் என்பதுதான் இவரின் சாதனை

அவர் கடமைக்காக எழுதினாலும் பின்னாளில் அது பெரும் வரலாற்று பெட்டகம் ஆனது

அந்த காலகட்டத்தை கண் முன் நிறுத்தும் பெரும் கல்வெட்டாக அவரின் நாட்குறிப்பு நிற்கின்றது

இந்தியா ஆங்கில அடிமையான அந்த தொடக்க காலங்கள் சுவாரஸ்யமானவை, துரோகம், அவமானம், வீரம் என எல்லாம் கலந்த கலவை

நாமும் பழைய வரலாறுகளை ஊன்றி படிக்கின்றோம், அரசர்களின் ராஜ வாழ்க்கை மிக கொண்டாட்டமாய் இருந்திருக்கின்றது

சாதி என்பது அரசனை பாதுகாக்கவே வகுக்கபட்டிருகின்றது, அவனுக்கே எல்லோரும் பணியாளாய் இருந்திருக்கின்றனர்

பிராமணன் அவனுக்காக பிரார்த்திருக்கின்றான், சத்ரியன் அவனுக்காக சண்டையிட்டிருக்கின்றான், வைசியன் அவனுக்காக வியாபாரம் பார்த்திருக்கின்றான், சூத்திரன் அவனுக்காகவே உழைத்திருக்கின்றான்

ஆண்டாண்டு காலம் நாங்கள் ஒடுக்கபட்டோம் எங்கள் சாதி ஒடுக்கபட்ட சாதி , பிராமணிய கொடுமை என்பதெல்லாம் சுத்த அரசியல்

எல்லாம் அரசனுக்கு அடிமை சாதியாகவே இருந்திருக்கின்றது, வெள்ளையன் வருமுன் அப்படித்தான் இருந்திருக்க்கின்றது

மனுதர்மம் என்பது பிராமணுக்காக அல்ல, அரசனுக்காகவே உருவாக்கபட்டிருக்கின்றது

அப்படித்தான் அக்கால அரசவைகள் இருந்திருகின்றன, இந்தியா என்றெல்ல ரஷ்ய ஜார் மன்னனின் அரசு வரை அப்படித்தான் இருந்திருக்கின்றது

அதில் வெள்ளையன் வந்த காலம், அவன் ஆட்சி இங்கு துளிர்விட்ட காலம் எல்லாம் வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டம்

அந்த சரித்திரத்தை நமக்கு பதிந்து தந்தவர் ஆனந்தரங்கம் பிள்ளை

இன்று அவருக்கு பிறந்தநாள். அந்த வரலாற்று தமிழனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

எது தேவை

இந்திய விஞ்ஞானிகள் அறிக்கைபடியும் உலக பத்திரிகைகள் தந்திருக்கும் தரவின் படியுமே எழுதுகின்றோம்

இந்தியா செய்திருக்கும் இந்த செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகனை சோதனைக்கு DRDO 2012லே அனுமதி கேட்டது

ஆனால் அப்போதிருந்த காங்கிரஸ் அரசு அதற்கு மறுத்தது, ஏனென்றால் அதற்கு முன்பிருந்தே பல சிக்கல்களை அது சர்வதேச அளவில் சந்தித்தது

உதாரணம் அணு ஆயுத பரவல் உட்பட பல நெருக்கடிகள் இருந்தன, ஜெயா கூட சீறினார் நினைவிருக்கின்றதா?

ஆம் இந்த ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்திட்டால் இந்தியா இனி அணு ஆயுதம் செய்யமுடியாது என மிக உக்கிரமாக குரல் எழுப்பிய முதல் இந்திய அரசியல்வாதி ஜெயலலிதா

அப்படி எதற்கெல்லாமோ பன்னாட்டு சக்திகளுக்கு அஞ்சிய காங்கிரஸ் இந்த செயற்கைளோளை அழிக்கும் நுட்பத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை

அரசு அனுமதி கொடுத்து நிதி ஒதுக்கினால்தான் திட்டத்தை செயல்படுத்த முடியும், காங்கிரஸ் அரசு நிதி கொடுக்கவில்லை என்பதற்கு அப்போதைய DRDO தலைவர் சரஸந்த் சாட்சி

இப்பொழுது அதாவது 2016ல் மோடி அரசு அதற்கான உத்தரவினை உடனே கொடுத்தது, 2019ல் நாம் அந்த சாதனையினை செய்துவிட்டோம்

பாஜகவிற்கும் காங்கிரசுக்கும் வித்தியாசம் என்ன தெரியுமா? கூர்ந்து கவனியுங்கள் புரியும்

காங்கிரஸ் இந்திரா காலத்திற்கு பின் மாறிவிட்டது, அந்த பழைய தைரியமான காங்கிரஸ் இப்போது இல்லை

“காட்” ஒப்பந்தம் என உலகசந்தையினை இந்தியாவுக்குள் விட்டது, இன்னும் பல விஷயங்களில் இந்திய நலனை பலிகொடுத்து வெளிநாட்டு சக்திகளுக்கு கட்டுபட்டு கிடந்தது

அதாவது காங்கிரஸின் கொள்கை என்னவென்றால் மக்கள் சுகமாக வாழட்டும் பணம் புழங்கட்டும் மற்றபடி நாட்டின் பாதுகாப்பு இன்னபிற விஷயமெல்லாம் எதற்கு? என்ற ஒரு மனநிலை

அதாவது மக்களை பற்றி நிரம்ப கவலைபடும், பொருளாதார தடை என வந்தால் மக்கள் என்னாவார்கள்? பணம் என்னாகும்? வெளிநாட்டுக்காரன் பணத்திற்கு என்ன சொல்வது என ஏக விஷயங்களை அது பார்க்கும்

பாஜக அப்படி அல்ல, நாட்டுக்கு எது தேவையோ அதுவே அவர்களுக்கு முதலிடம்

அதனால்தான் கருப்புபண ஒழிப்பு உட்பட பல காரியங்களில் அவர்கள் மக்கள் நலனை அதிகம் யோசிப்பவர்கள் அல்ல‌

அவர்களின் பல திட்டங்களை கவனியுங்கள் அது தெரியும், இப்பொழுது இந்த ஏவுகனை சோதனை கூட பொருளாதார தடை விதிக்கும் அளவு கடுமையானது, அணு சோதனைக்கு இணையானது

ஆனால் துணிந்து செய்தார்கள், நாட்டுக்காக செய்தார்கள்,இதில் ஏதும் சிக்கல் வருமாயின் மக்கள் தாங்க வேண்டும் என்பது அவர்களின் எண்ணம்

ஒரு வளரும் நாடு நாட்டுக்கு எது முக்கியமோ அதைத்தான் செய்ய வேண்டும்

இதைத்தான் அமெரிக்கா, சைனா, ரஷ்யா, சிங்கப்பூர் என எல்லா நாட்டினையும் வளர்த்த தலைவர்கள் சொல்லியிருக்கின்றார்கள்

அது கென்னடியோ , டெங் ஜியோ பிங்கோ, ஸ்டாலினோ இல்லை லீ யோ அவர்கள் சொன்னதெல்லாம் அதுதான்

நாட்டுக்கு அவசியமானதை செய்யுங்கள் அதில் சிக்கல் வந்தாலும் பின்வாங்காதீர்கள், பின்னொரு நாளில் மக்கள் உங்களை புரிந்து கொள்வார்கள்

ஆம் இந்திராவிற்கு பின்னரான காங்கிரஸ் மக்களை தாலாட்டிவிட்டு நாட்டுக்கு தேவையானதை செய்ய தயங்க்கும் கட்சி, பாஜக நாடே முதலிடம் என பல காரியங்களை செய்யும் கட்சி

இரு கட்சிகளின் நிலைப்பாட்டை சொல்லிவிட்டோம் அல்லவா? இனி நாட்டுக்கு எது தேவை என உங்களுக்கே புரிந்திருக்கும்

கராத்தே செல்வினின் மனைவி

கராத்தே செல்வினின் மனைவி திமுகவுக்கு ஆதரவளித்துவிட்டாராம், அதற்கு அம்மணி சொல்லும் விஷயம்தான் கவனிக்கதக்கது

அதாவது திமுக கிறிஸ்தவர்களுக்கு காவலாம், போதாதா? இதோ இந்துக்களின் காவலன் என பாஜகவினை அதிமுக காட்டாதா?

கராத்தே செல்வின் தென்னகத்தில் 1990களில் பிரபல நாடார் தாதா, இந்த வெங்கடேஷ பண்ணையார், ராக்கெட் ராஜா எல்லாம் அவரிடம் நிற்கமுடியாது

பல கொலை தீரா புகழ் என சுற்றிவந்தார், ஜாண் பாண்டியனும் பசுபதிபாண்டியனும் அவர் இருந்தபொழுது பெரும் பிம்பமில்லை

ஒரு கட்சி கூட நடத்தினார் செல்வின்

அடுத்த எம்பி ஆகும் நிலையில் அவர் இருந்தார், அவ்வளவு பெரும் செல்வாக்கு அவருக்கு கூடியிருந்தது, சுய சாதி கிறிஸ்தவ நாடார்களை தாண்டி இந்துநாடார் வரை அவருக்கு செல்வாக்கு இருந்தது

சில வழக்குகளில் விடுதலையாகி சில வழக்குகளை எதிர்கொள்ளும்பொழுது பாளை சிறைவாசலில் கொல்லபட்டார்

25 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை நாடார்களின் பெரும் பிம்பமாக கருதபட்ட அந்த செல்வினின் மனைவியினை களமிறக்கியிருக்கின்றது திமுக தரப்பு

முன்பு வெங்கடேஷ பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வியினை இழுத்து வந்தது போல திமுக இவரை இழுத்து வந்திருகின்றது

ஆனால் இது எவ்வளவு தூரம் பலனளிக்கும் என தெரியாது, காரணம் செல்வின் கொல்லபடும் பொழுது திமுகதான் ஆட்சியில் இருந்தது

எனினும் ஒரு விஷயம் உண்மை

பொதுவாக திமுக மேடைகளில் “பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே” என அந்த பிராண்ட் பாடலை நாகூர் அனிபா குரலில் பாடவிடுவார்கள்

இனி செல்வினுக்கும் அப்பாடல் பொருந்தும், ஆம் செல்வினும் அச்சிறையில் பல்லாண்டு இருந்தார்

ஆக இனி திமுக மேடையில் அப்பாடல் ஒலித்தால் அது கலைஞருடன் செல்வினுக்கும் சேர்த்து என நாடார்கள் ஆனந்த கண்ணீர் விடுவார்கள்..

பாஜக விளம்பர கோஷ்டி

பாஜக விளம்பர கோஷ்டி என்பது இந்த அரசில் அல்ல அது வாஜ்பாய் அரசிலே தெரிந்தது

வீண் விளம்பரத்திற்கு 1998 அணுகுண்டு வெடித்து பொருளாதார தடை தேடினார்கள், நாடுபட்ட சிக்கல் கொஞ்சமல்ல‌

திருந்தா தேசம் என ஒதுக்கி வைத்த பாகிஸ்தானுக்கு விளம்பரத்திற்கு பஸ் விட்டார்கள், பூரா பயலும் அதில் ஏறி கார்கிலில் வந்து பதுங்கினான் அதன் பின் பஸ்ஸை நிறுத்திவிட்டு போருக்கு சென்றார்கள்

ஒவ்வொரு செயலிலும் விளம்பரத்தை அந்த அரசு செய்தது கொஞ்சமல்ல‌

மோடி விளம்பரத்திற்கு வாஜ்பாய் அரசுதான் முன்னோடி, விளம்பர அரசை தொடங்கியதே அவர்கள்தான்

ஆனால் இன்று மோடி வெற்று விளம்பரம் என கொக்கரிக்கும் திமுக, அன்று அமைதியாய் இருந்தது. அன்று வாஜ்பாய் செய்ததைத்தான் இன்று மோடியும் செய்கின்றார்

ஆனால் அன்று அமைதி , இன்று அலறல் ஏன்?

ஆம், அந்த வாஜ்பாய் ஆட்சியில் திமுக இருந்தது, அதற்கு அமைச்சர்களும் இருந்தனர்.

முகநூல் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றது

இந்த முகநூல் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றது என்ற சம்பவம் தொடர்கின்றது

சென்னை வாலிபருக்கும் இலங்கை பெண்ணுக்கும் முகநூலில் காதல் மலர்ந்திருக்கின்றது, அப்பெண்ணும் அவனை தேடி சென்னை வந்திருக்கின்றாள்

இருவரும் ஓர்மனம் கண்டு , ஒருவழியாகி பல இடங்களுக்கு சுற்றியிருக்கின்றார்கள்

விசா காலம் முடிவடைந்து அப்பெண் செல்லவேண்டிய நேரம் வந்திருக்கின்றது

அவளோ தாலிகட்டி இங்கே இருக்க விரும்பியிருக்கின்றாள், அதில் தவறோன்றும் சொல்ல முடியாது

இந்த பாதகன் ஏனோ இழுத்திருகின்றான் உறவுகள்தானே தொடர்கதை , உணர்வுகள் சிறுகதை என அவன் முடித்து கொள்ள அந்த அபலைபெண் தற்கொலை செய்துவிட்டாள்

விஷயம் இலங்கை தூதரகம் வழியாக வெடிக்க அந்த காதலனிடம் விசாரணை நடக்கின்றது

இந்த விஞ்ஞான வளர்ச்சியில் உலகின் எந்த மூலையில் இருந்தும் ஆணும் பெண்ணும் எளிதில் சந்திக்கலாம் பழகலாம் அதற்காக வாழ்வின் எல்லா விஷயங்களையும் இங்கேயே தேர்ந்தெடுப்பது சரியல்ல

அடேய் கருப்பு சட்டைகளா

அடேய் கருப்பு சட்டைகளா

உங்கள் ஆராய்ச்சியினை புராணங்களோடு நிறுத்துங்கள், இந்த விண்வெளி விஞ்ஞானமும் ஏவுகனை நுட்பமும் உங்களுக்கு புரியாது

உங்கள் பகுத்தறிவு என்பது எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்கும், ஆனால் அவ்வளவு உயரத்திற்கு உங்களை இழுத்து சென்று யாரும் காட்டமுடியாது

சீனா தன் செயற்கை கோளை உடைக்கும் பொழுதே அமெரிக்கா ஆதாரம் கொடுத்து சண்டைக்கு செல்லவில்லை

விஷயம் அவ்வளவு சிக்கலானது

உங்களுக்கு ஒன்று புரியவில்லை என்றால் அது இல்லை என்றாகிவிடாது..

எய்ட்ஸ் கிருமி கூட உங்கள் கண்ணுக்கு தெரியாது, அதற்காக அந்த கிருமி இல்லை என்றாகுமா? அந்த ரத்தத்தை உங்களுக்கு ஏற்றிவிடலாமா?

கல்வி புரட்சியா?

தமிழ்நாடு கல்வியில் முன்னேறிற்று, அது திமுகவின் சாதனை அதனால் பாஜக உள்ளே வரவே கூடாது வந்தால் மற்ற மாநிலம் போல ஆக்கிவிடுவார்கள் : திராவிட சேனை

இங்கு கல்வியினை காமராஜர் பெரும் வேகத்துடன் வளர்த்தார், 1967 வரை வளர்த்தார் அதன் பின் என்னாயிற்று?

1970களுக்கு பின்பகுதியில் இருந்தே தனியார் கல்வி நிறுவணங்கள் வந்தன, திமுக ஆட்சியில் கிறிஸ்தவ நிறுவணங்களுக்கு அனுமதி அள்ளி கொடுக்கபட்டது

வெள்ளைகாரன் ஆட்சியின் தொடர்ச்சியாக ஆங்கில பள்ளிகள்,கான்வென்டுகள், பன்னாட்டு பள்ளிகள் என அவர்கள் அள்ளிகுவிக்க திமுக துணைபோனது..

காமராஜரை சரித்துவிட்டு இதுதான் நடந்தது

கொஞ்சநாளில் கட்சிகாரனுக்கே கொடுத்தார்கள்,சாராயம் விற்றவன், கட்ட பஞ்சாயத்துகாரன், ஊர் சுற்றியவன் எல்லாம் கல்வி தந்தையானார்கள்

அதுவும் 1980களில் ராமசந்திரன் ஆட்சியில் நிலை மகா மோசம்

ஏகபட்ட பொறியியல், மருத்துவ கல்லூரிகள் மார்டன் ஆங்கில பள்ளிகள் அப்பொழுதுதான் வந்தன‌

விளைவு அரசு கட்டுபாட்டில் இருந்து கல்வி தனியார் மயமாயிற்று, மருத்துவமும் அப்படியே

தமிழகம் இவர்கள் ஆட்சியின் திறமையில் இப்படி மாறவில்லை, கல்வி மருத்துவ துறைகளை தனியாருக்கு விற்றார்கள் அல்லது தங்கள் பினாமிகளுக்கு மாற்றினார்கள்

இன்று எல்லா கட்சிகாரனுக்கும் இங்கு கல்லூரி, மருத்துவமனை அது இது என தனி அரசாங்கமே நடக்கின்றது

அத்தோடு விட்டார்களா சண்டாளர்கள்? சாதி சங்கங்கள் எல்லாம் கல்வி நிறுவணம் நடத்த வழிவிட்டார்கள், ஆம் வாக்கு வங்கி அரசியல்

சாதிவாரியாக கல்லூரிகள் வந்தன, இன்னும் என்னவெல்லாமோ வந்தது

சுயதொழிலும் தெரியாத, டிகிரி தவிர வேறு வேலை செய்ய தெரியாத கூமுட்டை தலைமுறை ஒன்றை உருவாக்கியது அதன் சாதனை..

மற்றமாநிலங்களில் இது இல்லை, நிச்சயமாக இல்லை

அவர்கள் மனசாட்சிபடி யோசிக்கின்றார்கள், இதெல்லாம் அரசு கடமை கல்வியும் மருத்துவமும் தனியாரிடம் சென்றால் மக்கள் பாதிக்கபடுவார்கள் என அஞ்சுகின்றார்கள்

அவர்களுக்கு மனசாட்சி இருக்கின்றது, தன் கட்சிக்காரன் சம்பாதிக்க மாநிலத்தை சூறையாடும் அநியாயத்தை அவர்கள் செய்யவில்லை

அதனால் அவை எல்லாம் பின் தங்கியது போலவும் இவர்கள் கொள்ளையடித்தும் முறைகேடாகவும் உருவாக்கிய சாம்ராஜ்யங்கள் கல்வி முன்னேற்றம் போலவும் காட்சியளிகின்றன‌

உண்மையில் அரசுடமையினை தனியாருடமை ஆக்கி கோடிகணக்கில் சம்பாதிக்க்க இவர்கள் செய்ததே இந்த கல்வி மருத்துவ பணி அன்றி வேறல்ல‌

இதனால் கொஞ்சமும் தரமில்லா பட்டதாரிகளை பிராய்லர் கோழியாக உருவாக்கிவிட்டார்கள், உதவாக்கரைகள் அதிகம்

பல்கலை கழகம் முதல் எல்லா இடங்களிலும் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகின்றது

எவ்வளவுக்கு என்றால் ஜெயா இறந்தபின் சசிகலாவினை சந்திக்க சென்ற துணைவேந்தர்களும் கல்வி தந்தைகளுமே சாட்சி

எல்கேஜி முதல் மருத்துவகல்வி வரை பூராவும் தனியாருக்கு கொடுத்துவிட்டு அதில் கட்சிக்காரனும் கட்சியும் சம்பாதிக்க முழு வகை செய்த செயலுக்கு பெயர் கல்வி புரட்சியாம்

பச்சையப்ப முதலியாரும், அண்ணாமலை செட்டியாரும் இன்னும் ஏராள ஆதீனங்களும் சொந்த பணத்தில் கல்லூரி கட்டினார்கள்

சாரா டக்கர் முதல் ஐடா ஸ்கேடர் வரை லண்டனில் இருந்து பணம் கொண்டுவந்து கல்லூரி கட்டினார்கள்

அதில் எல்லாம் இலவசம்

இன்று அப்படியா? கல்வி தந்தைகள் எல்லாம் தேர்தலை நிர்ணயிக்கும் அளவு செல்வத்தில் புரள்கின்றார்கள்

இங்கு என்ன கல்வி புரட்சி நடந்தது என இனியாவது தெரிந்து கொள்வது தமிழகத்திற்கு நல்லது

நல்ல அரசு வரவேண்டும் இதை எல்லாம் நாட்டுடமை ஆக்க வேண்டும்

முன்பு தனியார் வசமிருந்த போக்குவரத்து முதல் வங்கி வரை அரசுகள் அரசுடமை ஆக்கிற்று

பல அரசர்களின் சொத்துக்கள் அப்படி பறிக்கபட்டன‌

அவ்வாறே இந்த இம்சை கல்விதந்தைகளின் சொத்துகளையும் பறித்து அவற்றை அரசுடமை ஆக்கினால் இவர்கள் செய்திருக்கும் கல்வி புரட்சி என்னவென தெரியும்