எம் கே தியாகராஜ பாகவதர்

1940களுக்கும் 1955களுக்கும் இடைபட்ட காலங்களை ஆட்டிவைத்தவர் அவர், அன்றே அரசியலில் சினிமா கலந்திருக்குமானால் ராஜாஜி,காமராஜர் என்ற தலைவர்கள் எல்லாம் காணாமலே போயிருப்பார்கள்.

சுமார் 20 ஆண்டு காலம் தமிழகத்தை கட்டிவைத்தவர்
எம்.கே. தியாகராஜ பாகவதர், தமிழ் சினிமாவின் கதல் வசூல் மன்னன். நாடக மேடையில் அவர் பாடிக் கொண்டே தோன்றும்போது, ரசிகர்கள் எழுப்பிய ஆரவார வரவேற்பு வேறெந்த நடிகருக்கும் கிடைத்ததில்லை.

பாமரர்களும் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியவர்.

பிண்ணணி பாடலே படத்திற்கு பிரதானம் என்ற தொடக்க காலங்களில் தன் காந்தர்வ குரலால் திரையுலகினை கட்டியாண்ட சக்கரவர்த்தி

ஒரே சமயத்தில் நாடகம், சினிமா, இசை என்று மூன்று குதிரைகளில் ராஜ பவனி வந்த பெருமை பாகவதருக்கு
எம்.கே தியாகராஜ பாகவதர் பற்றி அவரது ரசிகர்களிடம் கேட்டால் அப்படி உருகி சொல்வார்கள்

அப்படி பெரும் கூட்டம் அவருக்கு இருந்திருக்கின்றது

அக்கால முடிதிருத்துவோருக்கும் இளைஞர்களுக்கும் வரும் தகராறே இப்படித்தான் இருக்குமாம்

“எனக்கு பாகவதர் மாதிரி முடிவெட்டணும்”

“அது அவர் முடிக்கு தான் வரும்,உங்க முடிக்கெல்லாம் வராது..சொன்னா கேளு இல்லண்ணா மொட்டை அடிச்சி விட்டுருவேன்”

இன்னும் சில வாலிபர்கள் கொஞ்சம யோசித்து அடிக்கடி முன் தலையை சுவரில் உரசிகொண்டே இருப்பார்களாம்.
காரணம் பாகவதருக்கு முன்நெற்றி வழுக்கை.

அக்கால கொண்டயிடும் (குடுமி) ஆண்களில், இவரைப்போல் கிராப் வெட்டி கிட்டதட்ட விகார‌ அலங்கோலமாகி பின் மொட்டையிட்டவர்களும் உண்டு

அக்கால எம்.ஜி.ஆர், கமலஹாசன்,இம்ரான்கான் போல இவருக்கும் எண்ணெற்ற பெண்கள் கடிதம் எழுதுவார்களாம், அவருக்காக காத்திருந்த பெண்கள் ஏராளம்.

ஒரு கலெக்டர் மகள் இவரிடம் பாடல் கற்றுகொள்ள ஏற்பாடு, முதல் நாள் பாடல் வகுப்பு முடியும் போது கலெக்டர் தலையில் இடிவிழுந்தது,
“எனக்கு பாகவதரை திருமணம் செய்து வைக்காவிட்டால் சாவுதான்” என்றாள் மகள்

உண்மையில், பாகவதரின் அந்த இமை அசைவில் இதயம் தொலைத்து, பித்துப் பிடித்து அலைந்த பெண்கள்தான் அதிகம்.

“பிராணநாதா! உம்மை நேரிலே ஒரே ஒருமுறை தரிசித்துவிட்டால் போதும். மறுநொடியே தற்கொலை செய்து கொள்ளக் கூடத் தயார்” என்கிற ரீதியில் பெண்களின் கடிதங்கள் பாகவதரை மொய்த்த நாள்கள் உண்டு

அந்த அளவிற்க்கு பார்ப்போரை வசீகரிக்கும் தோற்றமும், தெய்வீககுரலும் ஒருங்கே அமையப்பெற்ற தேவலோக மனிதனாகவே மக்களுக்கு தோன்றினார் பாகவதர்
அவருடைய ரசிகர்கள் பாகவதர் நடந்து வந்த பாதையில் உள்ள மண்ணை எடுத்துவைத்துக் கொள்வார்களாம்.

இன்னும் சில ரசிகர்கள் அவர் தொட்ட பொருட்களை முத்தமிட்டு மகிழ்வார்களாம். .

ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தால் ஆங்காங்கே பாகவதர் தரிசனம் கிடைத்தால் மட்டுமே ரசிகர்கள் ரயிலை செல்ல அனுமதிபபர்.அந்த அளவிற்க்கு பாகவதர் என்றால் அப்படி ஒரு மயக்கம்.ஒருசமயம் காரில் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை சென்று கொண்டிருந்தபோது, ரயில்வே கிராசிங் அருகே கார் நிற்க்க நேரிட்டது.பாகவதர் காரிலிருக்கிறார் என்பதை கேள்விப்பட்ட மக்கள் கூட்டம் அலைமோதியது.

ரயிலையே நிறுத்தி மன்மதலீலை பாடலை பாடினால் மட்டுமே ரயிலை போக அனுமதிப்போம் என்று தங்கள் ஆசையை பூர்த்தி செய்து கொண்டனர்.

வெள்ளைக்குதிரை, அதன் மேல் ஒய்யாரமாக பாகவதர். மந்தகாசப் புன்னகையோடு பவனி வர, பெண்கள் எல்லாம் வெட்கப்பட்டு ஓடுவர். அங்குள்ள ஒரு பெண்ணைப் பார்த்து பாகவதர் மன்மதனாகக் கண்ணடிக்க, அந்தப் பெண் மிரண்டு ஓடுவாள்.

இது ஹரிதாஸ் படத்தில் இடம்பெற்ற காட்சி.பார்த்து கொண்டிருக்கும் பெண்கள் சொல்லுவார்களாம் “பாகவதர பாத்து ஓடுதாபாரு நானா இருந்தா ஓடிப்போய் குதிரைமேல ஏறிருப்பேன்”

இன்னொரு படத்தில் “வதனமே சந்திரபிம்பமோ” பாடிகொண்டே 20 அடி தள்ளி நிற்கும் காதலிக்கு பறக்கும் முத்தம் கொடுப்பாராம், தியேட்டரில் ஆரவாரம் கூரை பிளக்குமாம்..

(அட பாவமே ஒரு பறக்கும் முத்தத்திற்கா…இது சன்னி லியோன் எல்லாம் தமிழில் நடிக்கும் காலமல்லவா நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் 🙂 )

பாகவதர் தங்க தட்டுலதான் சாப்டுவாராம், பன்னீர்ல வாய் கொப்பளிப்பாராம், அரேபியா செண்ட் போடுவாராம், காஷ்மீர் குங்கும பூவுல தான் தூங்குவாரம் இன்னும் பல செய்திகள் வந்துகொண்டே இருந்தது.

திரையுலகம்,நாடக உலகம்,இசை உலகம் என மூன்று உலகங்களையும் ஆண்ட, தமிழக நெஞ்சங்களை எல்லாம் கொள்ளையடித்த அவரின் வாழ்வு ஒரு கொலைவழக்கில் தலைகீழானது. (இப்பொழுதெல்லாம் கொலை செய்து தப்புவது எவ்வளவு எளிது)

நீதிமன்றமும், பிரபல வக்கீல் எத்திராஜும் (எத்திராஜ் கல்லூரி நிறுவணர்) அவர் சொத்துக்களை எல்லாம் கரைக்க, மிக பெரும் சாம்ராஜ்ய சக்கரவர்த்தி போல வாழ்ந்த பாகவதர், மிக பரிதாபமாக குடிக்கு அடிமையாகி திருச்சி காவேரி ஆற்று கரையோரம் 50 வயதுக்குள்ளாக அனாதையாக செத்துகிடந்தாராம்.

சினிமா கலைஞர்கள் கோடியில் புரளமுடியும் என முதலில் நிரூபித்து காட்டிய , பெரும் ரசிகர் பட்டாளமும், கிட்டதட்ட அரசனுக்கு உண்டான வாழ்வும் வாழ்ந்த பாகவதர் கல்லறை திருச்சி சங்கிலியாண்டவர்புரத்தில் அனாதையாய் இருக்கின்றது

ஒரு நொடியில் மாறுவதுதான் வாழ்க்கை

நிலாவில் இனி யாரும் கால் பதிக்கலாம், ஆனால் ஆம்ஸ்ட்ராங்கின் இடத்தை யாரும் மறைக்கமுடியாது, அப்படி ஆயிரம் ஸ்டார்கள் வந்தாலும் பாகவதருக்கு இருந்த மவுசே தனி.

காலம் பொல்லாதது, கொடுமையானது, இரக்கமில்லாதது மிககொடூரமாக எதையும் செய்யும் என்பதற்கு பாகவதர் வாழ்வு பெரும் உதாரணம், நொடிப்பொழுதில் யாரையும் கோபுரத்திலும் வைக்கும், கொண்டாட வைக்கும், ஒரே நொடியில் குப்பைமேட்டிலும் வீசும்.

அப்படி கோபுரத்தில் வாழ்ந்து,குப்பை மேட்டில் வீசபட்ட உன்னத கலைஞர்களில் ஆண்களில் பாகவதரும் பெண்களில் சாவித்திரியும் மறக்கமுடியாதவர்கள்.

அந்த பாகவதரின்பிறந்த நாள் இன்று

தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் அவர்தான். பெரும் வாழ்க்கை தத்துவத்தை அனுபவித்து சொல்லி 49 வயதிலே விடைபெற்றவரும் அவர்தான்.

இவ்வளவு மக்கள் அபிமானமிக்க நடிகர்கள் அரசியலில் இருந்து தள்ளி இருந்திருக்கின்றார்கள். அதனால் அக்கால அரசியல் நன்றாய் இருந்திருக்கின்றது,’

அதிமுக தேமுதிக கூட்டணி

அதிமுக தேமுதிக கூட்டணி உறுதி செய்யபட்டது

முக ஸ்டாலின் பிறந்தநாளில் அவருக்கு அதிர்ச்சி கொடுக்க காத்திருந்து அப்படியே அடித்துவிட்டார்கள்.

திமுகவினர் அப்பொழுதே இரு அறிக்கைகள் எழுதி தயாராக வைத்திருந்தனர், ஒன்று விஜயகாந்த் இப்பக்கம் வந்தால் வாசிக்க‌

இன்னொன்று விஜயகாந்த் வராவிட்டால் அர்ச்சிக்க‌

அப்பக்கம் சென்றுவிட்டார் அல்லவா? இனி பொளந்துகட்டி அடிப்பார்கள்

ஆனால் அவருக்கு ஆறுதல் சொல்ல ராமதாஸ் வருவார். இருவரும் எப்படி சந்தித்து கொள்ளா போகின்றார்கள் என்பதுதான் சுவாரஸ்யமே

டாக்டர் &சன் தனியாக வாங்கும் வசவுகளை பங்கு போட மிஸ்டர் & மிஸஸ் கேப்டன் செல்கின்றார்கள்

சவுதியும் முயற்சி

இந்தியா பாகிஸ்தான் போரை தவிர்க்க சவுதியும் கடும் முயற்சி எடுத்ததாக செய்திகள் சொல்கின்றன‌

சில வாய்ப்புகள் இருக்கலாம்

சவுதியின் முதலீடும், ஈரானுக்கு எதிரான சில நகர்வுகளும் பாகிஸ்தானில் உண்டு. இன்னொன்று இஸ்லாமிய சாம்ராஜ்யமான சவுதியின் திட்டங்களை பெரும்பாலும் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் எதிர்க்கபோவதில்லை

பல பில்லியன் டாலர்களை பாகிஸ்தானில் கொட்டுகின்றது சவுதி

சவுதியினை அணைத்து மெதுவாக சீனபிடியில் இருந்து நழுவபார்க்கின்றது பாகிஸ்தான்

போர்மூண்டால் எல்லாம் நாசமாகும் என்பதாலும், இன்னும் பல அரசியல் காரணங்களாலும் சவுதியும் போரை தவிர்க்க விரும்பிற்று என்கின்றார்கள்

ஆக இனி பாகிஸ்தானிடம் பேச்சு எதற்கு? எதுவானாலும் சவுதியிடம் பேசிவிட்டால் போதுமோ?

வைகோ மீது கல்வீச்சு

மோடிக்கு கருப்புகொடி காட்ட கன்னியாகுமரி சென்ற வைகோ மீது காவல்கிணற்று பகுதியில் கல்வீச்சு, போலிசார் மீட்டு திருப்பி அனுப்பினர் : செய்தி

முன்பே சொன்னதுதான் இந்த கருப்பு சட்டைகள், இந்திய எதிர்ப்பு எல்லாம் மதுரை தாண்டினாலே செல்லாது அதுவும் கன்னியாகுமரி பக்கம் நெருப்பாய் இருப்பார்கள்

பாஜக வலுவாக காலூன்றியிருக்கும் பகுதி அது, அப்பக்கம் மிக வேகமாக வளர்ந்தும் வருகின்றது

கூடங்குளம் உதயகுமார் செயலற்றுபோக பாஜகவின் வளர்ச்சியும் காரணம்

அந்த கோட்டைக்கு வரும் மோடியினை கோட்டை வாசலில் சென்று வைகோ எதிர்த்தால் விடுவார்களா?

அங்கு வைகோ வருகின்றார் என்றவுடன் பாஜவினர் ஏராளம் பேர் திரண்டிருக்கின்றார்கள், நமக்கு இவ்வளவு கூட்டமா என மகிழ்ந்த வைகோ இறங்கி தன் வழக்கமான 8 கட்டை ராகத்தில் பாட ஆரம்பித்திருக்கின்றார்

கூட்டம் பொறுக்கமுடியாமல் கற்களை வீசி அடித்திருக்கின்றது, சிங்கள துப்பாக்கிகளையே சமாளித்த வைகோவுக்கு இந்த தாக்குதல் புதிது என்பதால் திணறியிருக்கின்றார்

தெளிவாக சொன்னால் “அடித்து துவைத்து கல் எறிந்து சனியனே போ” என விரட்டியிருக்கின்றார்கள்

காவல்துறை வரவில்லை என்றால் விபரீதம் நடந்திருக்கலாம் , எப்படியோ காப்பாற்றபட்டுவிட்டார்

வைகோ இன்ன்னும் திருந்தமாட்டார் என்பதால் என்ன செய்வார் தெரியுமா?

காவல்கிணறிலிருந்து நெல்லை திரும்பும் வழியில் சூட்டு பொத்தை என்றொரு வனாந்திர பகுதி உண்டு

அங்கு தனியாக நின்று கொண்டு “இவன் தமிழருக்கு ஊழியஞ்செய்தானே, தமிழருக்காக பாடுபடுகின்றானே, இவன் இன்னும் எவ்வளவு நாளு உயிரோட இருப்பாண்ணே தெரியாதே.. என அழுது கொண்டிருப்பார்

பொதுமக்களிடம் வைகோ அடிக்கடி அடிவாங்க என்ன காரணம்?

திமுகவினர் வைகோவின் பழைய பேச்சுக்கு இப்பொழுது பழிவாங்குகின்றார்களோ?

எப்படியோ மோடி என்பதை வைகோ என மாற்றிகாட்டியவர்களுக்கு வாழ்த்துக்கள்

மிஸ்டர் வைகோ, பாரும் நீர் மட்டும்தான் அடிவாங்குகின்றீர் ஆனால் ஸ்டாலினோ திருமாவோ உம்மை தூண்டிவிடுகின்றார்களே தவிர அடிவாங்குகின்றார்களா?

கொஞ்சமாவது யோசியும் அய்யா…

Funny Guys

“ஏம்மா, நான் தமிழ்நாட்டிலே நிரந்தரமா தங்க போறேன்னு யாராச்சும் சொன்னீங்களா?

இல்லீங்க ஐயா

பின்ன ஏன் இவனுக GoBack மோடின்னு கத்திட்டே இருக்கானுக‌, நான் தான் உடனே போயிருவேனே?

அவனுக அப்படித்தான் பிரதமரே

தமிழ்நாடு வந்துட்டா தங்குற அளவுக்கா இங்க ஆட்சிசெய்து வளர்த்துட்டானுக

கொஞ்சநாள்தான் பிரதமரே, அப்புறம் ஒருவேளை மெஜாரிட்டி கிடைக்காம அவனுகளுக்கு ஒரு மந்திரி சீட் கொடுத்தொம்னு வைங்க , டெல்லி வரைக்கும் வாழைமரம் நட்டு கூப்பிடுவானுக‌

இஸ் இட்?

இந்திரா காந்திக்கும் இப்படித்தான் விரட்டுனானுக, அந்தம்மா சீட் தாரேன்னு சொன்னதும் கால்ல கிடந்தானுக..

அப்படியா?

நானும் சீட் கொடுத்தா பேசாம இருப்பானுகளா?

அட குடும்பம் குடும்பமா உருண்டு வந்து காவடி எடுத்து வந்து கும்பிடுவானுக‌,
டவுட்டு இருந்த அத்வானிஜி கிட்ட கேளுங்க. குனிஞ்சே நின்னானுக தெரியுமா?

அர்ரே ராம்..

இதுக்கு பின்னால இருக்குறது முக ஸ்டாலின் ஜி, அந்த முரசொலிமாறன அமெரிக்கா சிகிச்சைக்கு அனுப்பி வாஜ்பாய் கவர்மென்ட் எவ்வளவு செஞ்சாங்க தெரியுமா? அதெல்லாம் மறந்துட்டானுக‌

செஞ்ச நல்லது எல்லாம் மறந்துரும் போல..

ஆமா பதவி இல்லண்ணா அவனுகளுக்கு எல்லாம் மறந்துரும்

Funny Guys

Ya Ya…

சீக்கிரம் வந்துவிடுவார்

அபிநந்தன் இன்னும் சிறிது நேரத்தில் இந்தியா வந்துவிடுவார்

நிச்சயம் அவர் பேட்டி கொடுக்க முடியாது என எதிர்பார்க்கலாம், பேட்டி கொடுத்தாலும் ராணுவ விதிகளுக்கு கட்டுபட்ட பேட்டியாகவே இருக்கும்

ஒருவிஷயம் அவர் விளக்குவார் என எதிர்பார்க்கபடுகின்றது

அவர் விழுந்த இடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், அங்கிருந்தவர்கள்தான் அவரை தாக்கியிருக்கின்றார்கள்

முதலில் பார்த்த ரசாக் என்பவர் சொல்வதை கவனியுங்கள், சில விவகாரம் புரியும்

“நான் விமானத்திலிருந்து விமானி விழுவதை பார்த்தேன், தண்ணீர் கேட்டார், நான் இவரை பற்றி இளைஞர்களுக்கு தெரிவித்தேன்

அவர்கள் வந்தார்கள், அவர்களிடம் இது என்ன இடம் என கேட்டார் அபினந்தன் அவர்கள் இந்தியா என்றார்கள், உடனே ஜெய் இந்தியா என கத்தினார், இவர்களோ பாகிஸ்தான் வாழ்க சொல் என்றார்கள், கைகலப்பானது அபினந்தன் தப்பும்பொழுது ராணுவம் வந்தது”

அதுவும் ராணுவம் என்ன செய்தது பார்தீர்களா? கண்ணை கட்டி அழைத்து சென்றது

அதாவது இங்கு அவர் எதையும் பார்த்துவிட கூடாது என்பதில் கவனமாக இருந்திருகின்றார்கள், அதுதான் விஷயம்

இப்போது யோசியுங்கள்

நிச்சயம் பாகிஸ்தானின் மக்கள் சாககிடக்கும் ஒருவனிடம் இது இந்தியா என பரிகசிக்க மாட்டார்கள், அவர்கள் சுபாவம் வேறு

இவரை சூழ நின்று தாக்கிய, பாகிஸ்தான் வாழ்க என சொல்ல சொன்ன அந்த “இளைஞர்கள்” ஏதோ ஒரு தீவிரவாத கூட்டம் என்கின்றது சில தகவல்கள்

ஆக ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தீவிரவாத முகாமை இந்தியா மறுபடியும் குறிவைத்ததா? என்றொரு வாதம் கிளம்பினாலும் ஒரு விஷயம் உண்மை

அபினந்தனை தாக்கியவர்கள் தீவிரவாதிகள் என்றால் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடப்பது என்ன?

ஏன் கண்ணை அவசரமாக கட்டி இழுத்து சென்றார்கள்?

இப்படி பல கேள்விகள் அபினந்தன் வரவையொட்டி எழுகின்றன‌

மறுபடியும் களம் சூடாகின்றது

நிச்சயம் அபினந்தன் பெரும் பேட்டி கொடுக்க வாய்ப்பு குறைவு எனினும் பல விஷயங்கள் கசியலாம்

காஷ்மீர் துளி 01/03/2019

‘‘மசூத் அசார் பாகிஸ்தானில் தான் இருக்கிறார்; அவருக்கு உடல்நிலை சரியில்லை’’ – வெளியுறவு அமைச்சர் குரேஷி ஒப்புதல்

அழகா இம்ரான்கான், கேட்டிச்சா? முடிந்தால் அவனுக்கு தைலம் தேய்த்துவிட்டு கால் அமுக்கிவிடவும்

முடியவில்லை என்றால் எங்களிடம் ஒப்படைக்கவும், நாங்கள் அமுக்க வேண்டியதை அமுக்கி அவனுக்கு நல்ல சிகிச்சை கொடுப்போம்

*********

எல்லை தாண்டி போய் அடிச்சா இப்படி ஏக சிக்கல் வருமா? அமெரிக்கா, ஐ.நா, ஜெனிலியா ஒப்பந்தம்னு என்னவெல்லாமோ சொல்றானுக‌

பிரதமராகாம எங்கிருந்துண்ணே கச்சதீவை மீட்கிறதுன்னு எவனாவது என் புள்ளைங்க‌ கேட்டுட்டா என்ன செய்றது?

பிரதமரானாலும் கச்சதீவை மீட்கிறதை விட அந்த யுத்தத்தில‌ சிங்களன்கிட்ட என் தம்பிகள் சிக்கிட்டா அவனுகள‌ மீட்க பெரும் பாடு படனும் போல இருக்கு…

*********

எங்களிடம் ஒற்றுமை இருக்கிறது- பாகிஸ்தான் அமைச்சர்

யாருக்கு எல்லாம்?

உங்கள் அரசு, ராணுவம், ஐ.எஸ்.ஐ, தீவிரவாத கும்பல்கள், இவர்களுக்குள்ளே தானே?

இதிலென்ன ரகசியம்?

ஹினா ரப்பானி

இம்ரான்கானுக்கு இந்திய பெண்கள் பக்கம் ஆதரவென்றால் இந்த ஹினா ரப்பானிக்கு இந்திய ஆண்கள் முழுக்க ரசிகர்கள்

ஹினா முன்பு பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சராக இருந்தபொழுது உலக கவனம் பெற்றார்

இவர் காலத்தில்தான் பின்லேடனும் கொல்லபட்டான் என்பது வேறு விஷயம்

இந்தியாவுக்கு தன் புன்னகை சிந்த வந்த ரப்பானியினை மறக்க முடியாது, பெனசிர் இடத்தை நிரப்புவார் என அன்றே சொல்லபட்டது

ஹினா ரப்பானி கார் இந்திய ஆண்களின் கனவு தேவதையாக மாறியது அப்பொழுதுதான்

அன்றே இவரே பாகிஸ்தானுக்கு சரியான பிரதமர் என இந்தியா முழுக்க ஆண்கள் சங்கம் சார்பாக சொல்லபட்டது

ஐ.எஸ்.ஐ எனப்படும் பாகிஸ்தானிய உளவு அமைப்புக்கு இவரை காக்கவே நேரம் இருக்குமா? பின் எங்கிருந்து தீவிரவாதம் வளர்க்கும்?

பாகிஸ்தான் ராணுவமே இவருக்கு காவல் இருக்கும்பொழுது ஏது போர்?

முல்லா உமரே ஷேவ் செய்துவிட்டு அழகாக மாறமாட்டாரா?

அந்த மசூத் அசார் சவரம் செய்துவிட்டு டிப்டாப்பாக மாறமாட்டானா? தீவிரவாத பக்கம் திரும்புவானா?

அதனால்தான் சொல்கின்றோம் “பாகிஸ்தானிய குஷ்பு” இந்த ஹினா அங்கு பிரதமரானால் தீவிரவாதம் ஒழியும்

இம்ரான்கான் ஒழிக, ஹினா வாழ்க‌

“ரப்பானி மகளே வருக….. ரப்பர்வாயன் இம்ரான்கானை விரட்டுக””

புதிது

வழக்கமாக இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடந்தால் இந்தியா நிறைய பேசிகொண்டிருக்கும், பாகிஸ்தான் அமைதியாயிருக்கும்

கொஞ்சமும் அலட்டிகொள்ளாது அது போக்கில் வருத்தம் கவலை என சொல்லிவிட்டு ஜனகராஜ் ஸ்டைலில் சிரித்து கொள்ளும்

இம்முறை புல்வாமாவினை தொடர்ந்து இந்தியா உள்ளே புகுந்து அடித்த அடியில் பாகிஸ்தான் பேசிகொண்டே இருக்கின்றது

அபிநந்தன் என்ன? யாரை கேட்டாலும் கொடுக்க தயாராக இருபபார்கள் போலிருக்கின்றது

பாகிஸ்தான் கமாண்டர்களும் இம்ரான்கானும் தூக்கத்திலும் பேசிகொண்டே இருக்கின்றார்கள்

இந்தியா அலட்டிகொள்ளவில்லை பிரதமர் மோடி அதிகம் கண்டுகொள்ளவுமில்லை

இந்திரா காலத்திற்கு பின் இது புதிது

பொறுப்பேற்றது ஜெய்ஸ் இ முகமது

புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஜெய்ஸ் இ முகமது அமைப்பு

அது எங்கே இருக்கின்றது பாகிஸ்தானில் இருக்கின்றது, அதன் தலைவன் அங்குதான் இருக்கின்றான்

அதை லாவகமாக மறைத்து விடுதலைபுலி தாக்குதல் இன்னும் பல தாக்குதல்களை சொல்லி மழுப்புகின்றான் அழகன் இம்ரான்கான்.

அவனை ஏதோ நெல்சன் மண்டேலா அளவிற்கு சொல்லிகொண்டிருக்கினன இங்கிருக்கும் பதர்கள்

காஷ்மீரை தாக்கும் தீவிரவாதிக்கெல்லாம் பாகிஸ்தானே தாய்வீடு

ஏன் அமெரிக்கா முதல் சகல்நாடுகளை தாக்கியவர்களுக்கெல்லாம் பாகிஸ்தானே புகுந்த வீடு

இதை எல்லாம் உலகம் அறியாதா? இம்ரானை பார்த்து சிரிக்காதா

உலகம் அவன் நடிப்பினை ரசித்துகொண்டே முறைக்க, இங்கிருக்கும் பதர்கள் உருகி உருகி கைதட்டுகின்றன