இந்தியாவின் அதிகாரமிக்கவர்கள்

இந்தியாவின் அதிகாரமிக்கவர்கள் வரிசையினை எடுத்துகொண்டால் யாரெல்லாம் துணிச்சலும் நாட்டுபற்றும் குடிகளை காக்கும் பொறுப்பும் வாக்குவங்கி கவலையும் இல்லையோ அவர்களே பெரும் யுத்தம் நடத்தியிருக்கின்றார்கள்

முதலில் பட்டேல் நடத்தினார் நாடு வலிமையானது, பாகிஸ்தானை சீனாவினை நம்பிய நேரு முதுகில் வாங்கினார்

சாஸ்திரி மிக துணிச்சலான யுத்தத்தை முன்னெடுத்தார்

தந்தை வழியில் இருந்து விலகினார் இந்திரா, அந்நிய சக்திக்கோ வாக்கு வங்கிக்கோ அவர் அஞ்சவில்லை இஸ்லாமிய வாக்குகள் பாதிக்குமோ என்ற தயக்கம் ஏதுமே இல்லை

அவர் அடித்த அடியில் பாகிஸ்தான் உடைந்தே போனது

பஞ்சாபில் பெரும் வாக்குசரிவு ஏற்படும் என யோசிக்காமல் பொற்கோவிலையே தாக்கி தன் உயிரையே கொடுத்தார் அந்த அன்னை

ராஜிவ் தமிழக வாக்குகளை கிஞ்சித்தும் கணக்கிடாமல் முக்கியமான நிலையில் இலங்கைக்கு ராணுவம் அனுப்பினார் இல்லாவிடில் அமெரிக்க ராணுவம் கால்பதித்திருக்கும்

அதற்காக உயிரை கொடுத்தார் ராஜிவ்

கார்கிலில் ஒரு சென்ட் இடம் கூட ஆக்கிரமிக்க விடமாட்டோம் என மீட்டது வாஜ்பாயின் அரசு

2008 மும்பை தாக்குதலில் பல கணக்குகளோடு காங்கிரஸ் அமைதியானது ஏன் என தெரியாது

மோடி அரசு பதன்கோட் தாக்குதலுக்கே சிறிய பதிலடி கொடுத்தது, இப்பொழுது புல்வாமா தாக்குதலுக்கு போர் தயாரிப்பு வரை சென்றாயிற்று

தைரியமும் நாட்டுபற்றுமிக்க பிரதமர்கள் என்ன செய்தார்களோ அதைத்தான் மோடியும் செய்தார்

“எதிரி என்ன வகையில் பேசுகின்றானோ அந்த வகையில் பேசு, அதுவும் அடி ஒன்றுக்குத்தான் பாகிஸ்தான் அடங்கும்..” என்பது பட்டேல், சாஸ்திரி, இந்திரா, வாஜ்பாய் என எல்லோரும் உணர்ந்து சென்ற பாதையில்தான் மோடியும் சென்றார்

இதில் அரசியலோ இன்னபிற கணக்குகள் சுத்தமாக இல்லை

போர், பொருளாதாரம், பாகிஸ்தானியரும் நல்லவர்கள், போர் என்றால் அழிவு என்றேல்லாம் பழைய பிரதமர்கள் என்ணியிருப்பார்கள் என்றால் இன்று பாகிஸ்தான் உடைந்திருக்காது, வங்கம் டூ லாகூர் சாலை அமைத்திருப்பார்கள், அதில் சுட்டுகொண்டே பாகிஸ்தானியர் பயணித்துகொண்டிருந்திருப்பார்கள்

பட்டேல் சொன்ன வார்த்தைதான் “போர் என்பது வலிதான் ஆனால் அறுவை சிகிச்சை உடலுக்கு பின்னாளில் நலம் கொடுக்கும் என்றால் அதை தவிர்க்கவா முடியும்?”

இந்திராவும் அதைத்தான் செய்தார், அனுபவ பூர்வமாக செய்தார் , அந்த தாய் காட்டிய வழியில்தான் இவ்வளவாவது அமைதி

மோடி அவ்வழி சென்றால் என்ன தவறு?

இதை சொல்வதால் நாம் ஒரு சங்கி என்றால் அதை தயக்கமின்றி ஏற்றுகொள்ளலாம்

ஆழ்ந்த அஞ்சலிகள்

அபினந்தன் மீட்கபட்டிருக்கின்றார் மகிழ்ச்சி அதே நேரம் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ஆறு வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்த மறக்க கூடாது

ஆழ்ந்த அஞ்சலிகள்

எல்லை இன்னும் பதற்றத்திலே இருக்கின்றது, அவமானபட்ட பாகிஸ்தான் வழக்கமான துப்பாக்கி சண்டைக்கு வந்திருக்கின்றது இருபக்கமும் சிலர் இறந்திருக்கின்றார்கள்

இன்னும் பதற்றம் தீரவில்லை அவர்கள் தீரவிடவும் மாட்டார்கள்

வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம்

இலக்கை விட்டிருக்குமா?

பாகிஸ்தானில் இந்தியா தாக்குமுன் பல தந்திரங்களை காட்டியிருகின்றது, பல விதங்களில் பாகிஸ்தானை ஏமாற்றி அலையவிட்டு தாக்கி இருக்கின்றார்கள் எனும் தகவல் இப்பொழுது ஒவ்வொன்றாக வெளிவருகின்றது

பாகிஸ்தானுக்குள் புகுந்துதாக்குவது பிரச்சினை அல்ல, ஆனால் அதன் விமானங்கள் உடனே வந்துவிட்டால், பின்லேடன் கொல்லபட்டதில் இருந்து அவர்கள் மிக அலர்ட்டாக இருப்பது வேறுவிஷயம்

இதனால் பாகிஸ்தானை திசைதிருப்ப திட்டமிட்டிருக்கின்றார்கள்

முதலில் ராஜஸ்தான் பக்கம் பாகிஸ்தானுக்குள் இந்தியா ஊடுருவதாக பாவலா காட்டியிருக்கின்றார்கள், எல்லை பக்கம் போய் பாகிஸ்தான் ரேடார்கள் எப்படி என சோதித்திருக்கின்றார்கள் அவை அலறியிருக்கின்றன‌

உடனே பாகிஸ்தான் விமானங்கள் தாக்க வர திரும்பியிருக்கின்றார்கள்

அதன்பின் பஞ்சாபின் பதான்கோட்டில் இதே ஆட்டம்

ராஜஸ்தான் எல்லை பஞ்சாப் எல்லை இதே ஆட்டத்தை பலமுறை ஆட குழம்பியிருக்கின்றது பாகிஸ்தான்

ஆயினும் முழு கவனத்தை இங்கே திருப்பி பல விமானங்களை பாகிஸ்தானை இப்பக்கமே சுற்ற வைத்திருக்கின்றார்கள்

தீடீரென பறப்பதும் பின் இந்தியா திரும்புவதுமாக கொஞ்சநேரம் ஆட்டம் காட்டிகொண்டே இருக்கும்பொழுது வடக்கே இன்னொரு பிரிவு சட்டென இறங்கி தாக்கியிருக்கின்றது

அதுவும் இந்தியாவின் பல இடங்களில் இருந்து கிளம்பிய இந்தியாவின் 12 விமானங்கள் திடீரென உட்புகுந்து நொறுக்கியிருக்கின்றன‌

தங்களுக்கு தெற்கே போக்கு காட்டிவிடு வடக்கே தாக்குதல் நடப்பதை தெரிந்து பாகிஸ்தான் விமானங்கள் வருமுன் இந்திய விமானங்கள் திரும்பிவிட்டன‌

இவ்வளவு திட்டமிட்டு மிக நுட்பமாக தாக்கிய இந்திய விமானபடை இலக்கை விட்டிருக்குமா?

ஏராளமான பலிகள் நடந்திருக்கின்றன, ஆனால் அதை சொல்லமுடியாமல் பல்லை கடித்துகொண்டு நடித்துகொண்டிருக்கின்றது பாகிஸ்தான்

மர்மமா?

அபினந்தன் பாகிஸ்தானுக்கு அரசியல் பயணம் செல்லவில்லை, மாறாக கைதுசெய்யபட்டு வெளியில் விடபட்டிருக்கின்றார்

இதனால் அவர் முடிக்க வேண்டிய ராணுவ சம்பிரதாயங்கள் நிறைய உண்டு

முதலில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடக்கும் அதன் பின் அவர் பாகிஸ்தானில் எதிர்கொண்ட சிக்கல்கள் அனுபவங்கள் என பல விசாரிப்புகள் நடக்கும்

அதில் பல ஆவணபடுத்தபடும் பல ஆவணபடுத்தமாட்டாது

நிச்சயம் அபினந்தன் நாட்டுபற்று மிக்கவர் சந்தேகமில்லை, ஆனால் எதெல்லாம் அவர் சொல்லியிருக்க கூடும் எதை சொல்லியிருக்கமாட்டார் என்றேல்லாம் பல கோண விசாரணை உண்டு

அடுத்து அவரின் மனநலம் எப்படி இருக்கின்றது, தொடர்ந்து இயங்க அவர் மனம் ஒத்துழைக்குமா? இல்லை வேறுபணிக்கு மாற்றலாமா என பல விஷயங்கள் பார்க்கபடும்

இன்னும் ஏராளம் உண்டு , அதன்பின்பே அபினந்தன் வீட்டிற்கு அனுப்பபடுவார், எல்லாம் ஓகே என்றால் அவர் ராணுவத்தில் தொடரலாம்

ஏன் இவ்வளவு சிக்கல் என்றால் விஷயம் அப்படி

எதிரிநாட்டில் சிக்கும் வீரர்களை கடும் மூளை சலவை எல்லாம் செய்வார்கள், மிக நல்லவர்களாக நடித்து அவர்கள் மனதை மாற்றி அல்லது மிரட்டி ஒருமாதிரி ஆக்கி உளவாளியாகவோ இல்லை வேறு ஏதுமாகவோ ஆக்கிவிடுவார்கள்

ஆம் கைது செய்யபடும் வீரர்களுக்கு இருட்டு அறையினை தவிர ஏதும் தெரியாது , உணவு தவிர ஏதும் கிடைக்காது

இந்திய பாகிஸ்தான் அதிகாரிகள் பேசுவதை இவர்களுக்கு யாரும் சொல்லவும் மாட்டார்கள் என்பதால் கைதி மனதால் குழம்பி, தன்னை தேசம் கைவிட்டுவிட்டது எனும் விரக்தியில் மனம் உடைய நேரிடும்

இதை எதிரி நாடுகள் நான் உன்னை விடுவிக்கின்றேன் உன் தேசம் உன்னை தேடவே இல்லை ஆகையால் நான் சொன்னதை செய்வாயாக என மனதை மாற்றிவிடுவார்கள்

பல நாடுகளில் இது நடந்தது, இதனால்தான் ஒருமுறை எதிரியிடம் சிக்கி மீண்ட வீரன் மேல் பல கண்கள் எப்பொழுதும் உண்டு, சர்வதேச நடைமுறை இது

வெறும் 3 நாட்களே இருந்ததால் அபிக்கு இப்படிபட்ட சிக்கல் வராது

இதனை போல சுவாரஸ்ய சம்பவம் நிறைய உண்டு

இதே பாகிஸ்தானுடம் நடந்த போரில் 1971ல் பல வீரர்கள் பாகிஸ்தானிடம் சிக்கினர் அவர்களை பாகிஸ்தான் சிறையில் போட்டது

கொஞ்சகாலம் ஆனது , வீரர்களுக்கு இந்தியா தங்களை மீட்கும் என்ற நம்பிக்கை உடைந்தது, பாகிஸ்தான் அதிர்காரிகளும் உங்கள் தேசம் உங்களை தேடவில்லை, நீங்கள் இங்கே சாக வேண்டியத்துதான் என சொல்லிகொண்டே இருந்தார்கள்

ஒருநாள் பாகிஸ்தான் பிரதமர் பூட்டோ வந்தார், அவர்களிடம் உருக உருக பேசினார்

“உங்கள் நாட்டுக்கு உங்கள் மேல் அக்கறை இல்லை, உங்கள் குடும்பம் பற்றி கவலை இல்லை. உங்கள் குடும்பம் வறுமையில் வாடி மிக துயரபடுகின்றது

அந்த தேசம் அப்படித்தான், ஆனால் நாங்கள் நல்லவர்கள், இன்னொரு நாடென்றால் உங்களை என்றொ கொன்றிருக்கும் ஆனால் சத்தியம் தர்மத்தை காக்க அவதரித்திருக்கும் பாகிஸ்தான் அதை செய்யாது

நீங்களும் வாழவேண்டும் என்பதால் கருணையோடு வெளிவிடுகின்றேன், பாகிஸ்தானுக்கு விசுவாசமாக இருங்கள்” என பேசி விடுதலை செய்தார்

அவர்கள் மனம் நிறைய வெறுப்போடு எல்லைக்கு வந்தனர்

அங்கே இந்திய ஜனாதிபதி ஜெயில்சிங்கும் லட்சகணக்கான மக்கள் அவர்களை ஆரதழுவி வரவேற்றனர்

ஏகபட்ட உதவிகள் குவிந்தன‌

நடப்பது புரியாமல் குழம்பி தவித்தர் வீரர்கள், அவர்களுக்கு இந்தியா அவர்களை மீட்க செய்த உதவிகள் எல்லாம் ஆவணமாக காட்டபட்டன‌

அவர்கள் குடும்ப உறுப்பினர்களும் சாட்சிகளாய்ய் நின்றனர்

தங்களை கைவிடாத தேசம் செய்த எல்லா விஷயங்களையும் கண்ட வீரர்கள், பாகிஸ்தான் சிறையில் தங்கள் மனதை கரைக்க முயன்ற அயொக்கியரை நொறுக்க மறுபடியும் துப்பாக்கி தூக்கினர்

இப்படி எல்லாம் பல குழப்ப வேலைகளை பாகிஸ்தான் செய்யும் என்பதால் அபினந்தன் பல கட்டங்களை தாண்டிவர வேண்டும் அவர் வரட்டும்

இப்போது கடைசி செய்தி என்ன தெரியுமா? தங்களை பற்றி நல்லவிதமாக சான்றிதழ் கொடுக்கும்படி பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அபினந்தனை வற்புறுத்தியதாக செய்திகள் வருகின்றன‌

ஏன் அப்படி செய்தது ஐஎஸ்ஐ? பாகிஸ்தான் ராணுவமும் சிறையும்தானே அதை கேட்க வேண்டும்?

ஆக அவர் விழுந்த, தாக்கபட்ட‌ இடத்தில் ஏதோ ஐஎஸ்ஐ மர்மம் இருக்கின்றது அப்படித்தான்?

அரசியல்

1964ல் வரலாறு காணா கொடும்புயலில் தனுஷ்கோடி புயலில் அழிந்தபொழுது சாஸ்திரியும் இந்திராவும் என்ன தமிழகத்திற்கு குடிபுகுந்தார்களா?

ஆனால் 1971ல் திமுக வங்க யுத்தத்தில் இந்திராவினை ஆதரிக்கவில்லையா? நிதி வசூலித்து கொடுக்கவில்லையா?

அதே இந்திராவின் காலில் விழுந்து கிடக்கவில்லையா?

தனுஷ்கோடி அழிவினைவிடவா காஜா பெரிது?

அன்று ஏன் திமுக வைகோ எல்லாம் பேசவில்லை?

ஆம் அன்று ஆட்சி இவர்கள் கையில் இருந்தது

ஆட்சி இருந்தால் புயலால் சுத்தமாக அழிந்தாலும் கம்மென்று இருப்பார்கள், ஆட்சி இல்லை என்றால் சாதாரண புயலுக்கும் மத்திய அரசை பொங்கி தீர்ப்பார்கள்

இதெல்லாம் அவர்கள் அரசியல்

விஷயம் பெரிது

இதென்ன? சுடபட்ட பாகிஸ்தான் விமானத்தை காட்டசொன்னால் தகரம் பொறுக்கி வந்திருக்கின்றார்கள்? பேரீட்சை பழம் வாங்கவா? என சொல்லி அவர்களாகவே சிரித்து கொண்டது பகுத்தறிவு + இம்ரான் கோஷ்டி

இந்திய தளபதி ஒருவர் சும்மா தகரம் தூக்கி கொண்டு வருவாரா? விஷயம் இல்லாமலா இருக்கும்

விஷயம் பெரிதாக இருகின்றது

ஆம் அந்த தகரம் விமானத்தில் இருந்து விமானத்தை அழிக்க ஏவும் Advanced Medium-Range Air-to-Air Missile சுருக்கமாக AMRAAM என்பார்கள்

விமானத்தில் இருந்து எதிரி நாட்டு விமானத்தை அந்தரத்தில் அழிக்க இதை பயன்படுத்துவார்கள், பாகிஸ்தானின் எப்16 விமானத்தில் இது இருந்தது

இந்தியவிமானம் அதை அழிக்கும்பொழுது அந்த ஏவுகனை இருந்து வெடித்து அதன் கழிவான இந்த தகடு இந்தியா கையில் சிக்கியது

பொதுவாக சர்வதேச விதிப்படி எந்தநாடு தயாரித்தாலும் அதில் சில எண்கள் பதியபட வேண்டும்

அப்படி அமெரிக்காவின் தயாரிப்பாக இந்த ஏவுகனை தயாரிக்கபட்டு இந்த நம்பரும் பொறிக்கபட்டிருந்தது

பாகிஸ்தான் என்னவகை ஆயுதம் வாங்குகின்றது என்ற மிக துல்லிய தகவலை வைத்திருந்த இந்தியா, அது அமெரிக்க தயாரிப்பு எனினும் பாகிஸ்தானுக்கு அது கொடுத்த பட்டியலில் இல்லை என்பதை உணர்ந்து மிக தந்திரமாக காட்சியினை வெளியில் கொண்டுவந்தது

அமெரிக்க பத்திரிகைகள் விஷயத்தை பெரிதாக்கின , விஷயம் அமெரிக்க அரசுக்கு சிக்கலாயிற்று

அதாவது இந்த ஏவுகனையினை அமெரிக்கா விற்றது நிஜம் ஆனால் தைவானுக்கு என அவர்கள் பட்டியலில் இருக்கின்றது, அமெரிக்க செனட்டிலு அந்த ஒப்புதலே இருக்கின்றது

அதாவது 2008 மற்றும் 2010ல் இந்த ஏவுகனை தைவானுக்கு விற்கபட்டதாக ஒப்புதல் பெறபட்டுள்ளது

அமெரிக்க சட்டபடி அபாய ஆயுதங்களை இன்னொருநாட்டுக்கு விற்கும்பொழுது செனட்டின அனுமதி வேண்டும்

விஷயம் வெளிவந்ததும் தைவான் அவசரமாக மறுக்கின்றது, தங்களுக்கு அப்படிபட்ட ஏவுகனை ஏதும் விற்கபடவில்லை எனவும், அதை பொறுத்தும் அளவு விமானம் தங்களிடம் இல்லை எனவும் சொல்லிவிட்டது தைவான்

(தைவான் இப்படி சொன்னதும் சீனா புன்னகைப்பது வேறுவிஷயம், தைவானின் ராணுவ ரகசியம் வெளியாயிற்று)

ஆக தைவானுக்கு விற்பதாக சொல்லி அமெரிக்க அரசோ ராணுவமோ திருட்டுதனம் செய்து செனட்டில் ஒப்புதல் வாங்கியதா என சலசலக்கின்றது அமெரிக்கா

ஏற்கனவே எப்16 விமானத்தை தாக்குதலுக்கு பயன்படுத்தியதை அமெரிக்கா கண்டித்து கொண்டிருக்கின்றது , அங்கு அதுவும் சிக்கல்

இப்பொழுது அமெரிக்க தயாரிப்பான AMRAAM வகை ஏவுகனைகள் தைவானுக்கு கொடுக்கபட்டதாக எப்படி பாகிஸ்தானுக்கு போனது என அடுத்த சிக்கல்

விரைவில் அமெரிக்க ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்தில் ஆடிட் செய்யும் வேலை நடக்குமோ என்னமோ

பாகிஸ்தான் விஷயத்தில் அமெரிக்கா காட்டும் இரட்டை வேடத்தை போட்டு உடைத்திருகின்றது இந்தியா

ஒருபக்கம் பாகிஸ்தான் தீவிரவாதத்தை கண்டிப்பதும், இன்னொரு பக்கம் ரகசியமாக அமெரிக்க செனட்டை ஏமாற்றி ஆயுதம் கொடுப்பதுமாக அது ஆடியிருப்பதை கண்டு பலர் முகம் சுளிக்கின்றனர்

பல சர்வதேச சிக்கல்களை ஏற்படுத்திவிட்டு, அதில் பாகிஸ்தானை பல வகையில் சிக்கவைத்துவிட்டு அமைதியாக புன்னகைகின்றது இந்தியா

மிகபெரிய ராஜதந்திரம் இது

என்ன இருந்தாலும் பகவான் கண்ணன் வாழ்ந்த தேசமல்லவா? கொஞ்சமாவது ராஜதந்திரம் வராதா என்ன?

பாக் விமானி நிலை

புதன் கிழமை நடந்த மோதலில் இந்திய விமானம் ஒன்றும் பாகிஸ்தான் விமானம் ஒன்றும் வீழ்த்தபட்டது

அதில் ஒரு பரிதாபம் நிகழ்ந்திருக்கின்றது

முதலில் பாகிஸ்தான் விமானம் விழுந்திருக்கின்றது, அதில் தப்பி குதித்த விமானி பாகிஸ்தானி என தெரியாமலே பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரிகள் அடித்து நொறுக்கியிருக்கின்றார்கள்

சம்பவம் அறிந்து பாகிஸ்தான் ராணுவம் ஓடிசென்று மீட்டபொழுதுதான் அபிநந்தனின் விமானமும் விழுந்து ஆவரும் அடிபட்டிருக்கின்றார்

அவரையும் பாக் ராணுவம் மீட்டிருக்கின்றது

நினைவிருகின்றதா? முதலில் இரு இந்திய விமானங்கள் என தகவல் வந்ததல்லவா? அந்த குழப்பம் இதுதான்

அதுவும் இந்திய விமானி ஒருவர் மருத்துவமனையில் இருக்கின்றார் என பாகிஸ்தான் குழப்பி அடித்த கதையும் இதுதான்

இதில் அடிபட்ட பாகிஸ்தான் விமானி மரணமடைந்துவிட்டார்

தாக்கியது பொதுமக்களா? பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாதிகளா? எனும் குழப்பம் நீடிக்கின்றது பொதுமக்கள் பெரும்பாலும் ஆபத்தில் இருப்பவனை அடிப்பதில்லை

நல்ல வேளையாக பாக் விமானி விழுந்தபின்பு அபிநந்தன் விழுந்திருக்கின்றார், அபிநந்தன் முந்தி விழுந்திருந்தால் நிலமை சுமூகமாக இருந்திருக்காது

ஆக பாக் விமானி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களாலேயே அடித்து கொல்லபட்டிருக்கின்றார்

ஒருவேளை பொதுமக்கள்தான் அடித்திருப்பார்களோ? நான் பாகிஸ்தான் விமானி என்றவுடன் வெறிகொண்டு அடித்து துவைத்திருப்பார்களோ?