அம்மாவுக்கே அல்வாவா?

என்னது அம்மாவுக்கே அல்வாவா?

வழக்கமாக இட்லிதானே கொடுத்ததாக சொன்னார்கள், அல்வா கொடுத்தது யார்?

மகான் கவுண்டர் அப்பொழுதே தன் சீடர் செந்திலிடம் சொன்னதுதான்

“உன்ன யார்ரா அல்வா கொடுக்க சொன்னது..”

அந்த பொன்னான வாக்கு இப்பொழுது நிறைவேறியிருக்கின்றது

கவுண்டமணி எவ்வளவு பெரும் தீர்க்கதரிசி…

அது தான் விஷயமா?

சந்தோஷமா சென்னைக்கு போங்க, அந்த கருப்பு பலூன் வியாபாரி இனி கருப்புகொடி காட்டமாட்டாராம்

ஆச்சரியமா இருக்கு, திருந்திட்டாரா?

திருந்துறதா? அவரா?

பின்ன எப்படி?

அவருக்கு ராஜ்யசபா சீட் தர்றதா சொல்லிட்டாங்களாம், அவர் டெல்லிபக்கம் வரணும்ல, அங்க கருப்புகொடி காட்டிட்டு இங்க வரமுடியுமா? விட்ருவோமா?

எப்படி வருவாரு? 4 தேசதுரோக வழக்கு போட்டா அவர் எப்படி எம்பி ஆகி வரமுடியும்? பழைய கேஸ தோண்டுனா போதும், அட ஏன் யூடியூப்ல அவர் ஜாதகமே இருக்கு, நம்மகிட்ட ஒரு பேக் அப் காப்பியும் இருக்கு

ஓஓஓ அதுதான் விஷயமா?

அட ஒரு அமைச்சர் பதவி கொடுத்தோம்னு வைங்க, கருப்பு பலூனுக்கு பதிலா கலர் கலரா பலூன்விட்டு வரவேற்பாரு, அவ்வளவுதான் அவர்”

வைகோ 2019

திமுகவினர் இனி வைகோவுக்கும் நாஞ்சில் சம்பத்துக்கும் முட்டு கொடுக்க வேண்டும் அப்படியே அவர்கள்மேல் விழும் கல்லையும் கட்டையினையும் தாங்கியாக வேண்டும்

அங்கிள் சைமன் திமுகவினரை பழிவாங்க மிகசிறந்த வழி அவர்களோடு கூட்டணி வைப்பது

அப்படி நடந்தால் சைமனுக்கு முழு பாதுகாப்பினை அவர்களே வழங்குவார்கள், அவரை முழு திராவிட இன உணர்வு சிங்கமாக ஏற்றும் கொள்வார்கள்

********

எந்த வைகோ 2009 மற்றும் 2016 தேர்தல்களில் படு மோசமாக திமுகவினை விமர்சித்தாரோ?

எந்த வைகோ திமுகவினரால் தாக்கபடும்வரை சென்றிருக்கின்றாரோ, அவருக்கு மகா உற்சாகமாக முட்டு கொடுக்க துவங்கியிருக்கின்றன உபிக்கள்

ஒருவிஷயம் உண்மையாகின்றது

அதாவது 1991க்கு பின் திமுக சந்தித்த பல தோல்விகளுக்கு காரணம் வைகோ, பெரும் காரணம் அவரே

ஒன்று எதிராக இருப்பார் அல்லது ஏதாவது கூட்டணி வைத்து வோட்டை பிரிப்பார் அது ஜெயாவுக்கு அனுகூலமாக இருந்தது

ஜெயா இருக்கும் வரை வைகோ அவருக்கு ஆதரவாகவே இருந்தார், பொடாவில் போட்டாலும் பொடரியில் போட்டாலும் வைகோவின் கண்கள் ஜெயாவின் கால் செருப்பை நோக்கியே இருந்தது

ஜெயாவிற்கு பெரும் விசுவாசமாக இருந்த வைகோ இப்பொழுது அவர் இல்லா காலத்தில் திமுகவிற்கு வந்திருக்கின்றார்

அவரை திட்டி தீர்த்த திமுகவினர் இனி அவருக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும்

இனி எந்த திமுகவினர் தங்களை கலாய்த்தாலும் பிய்ந்த செருப்புடன் டாக்டர் & சன் கோஷ்டி தயாராக இருக்கும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

தேர்தல் துளி – 05/03/2019(1)

மதிமுகவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

ஆக திமுக அணிக்கு அந்த ஒரு தொகுதி பாகிஸ்தான் எல்லைக்குள் வீழ்ந்த விமான கதைதான்

வெற்றிகணக்கில் இப்பொழுதே ஒரு தொகுதியினை திமுக மறந்தே ஆகவேண்டும்

********

“பங்கு, அவங்க எல்லாம் சேர்ந்து நமக்கு எவ்வளவு தொகுதி ஒதுக்கிருக்காங்க?

சரியா தெரியல, விஜயகாந்த் வாசன் கோஷ்டின்னு கொஞ்சம் பங்கு வைப்பாங்களாம், ஆக அவங்களுக்கு போக நமக்கு 10 தொகுதி வரும் போல பங்கு,

அடேயப்பா அவ்வளவு தருவாங்களா?

பின்ன விட்ருவோமா?

சரி அடுத்த விருந்து விஜயகாந்த் வீட்லதான, எப்போ கிளம்பணும்”

**********

திமுகவினர் இனி வைகோவுக்கும் நாஞ்சில் சம்பத்துக்கும் முட்டு கொடுக்க வேண்டும் அப்படியே அவர்கள்மேல் விழும் கல்லையும் கட்டையினையும் தாங்கியாக வேண்டும்

அங்கிள் சைமன் திமுகவினரை பழிவாங்க மிகசிறந்த வழி அவர்களோடு கூட்டணி வைப்பது

அப்படி நடந்தால் சைமனுக்கு முழு பாதுகாப்பினை அவர்களே வழங்குவார்கள், அவரை முழு திராவிட இன உணர்வு சிங்கமாக ஏற்றும் கொள்வார்கள்

***********

“எப்பா மொத்தமே தமிழ்நாட்டுல 39 தொகுதிதாம்ப்பா வருது, இவனுக கேக்குறது கூட்டிபார்த்தால் 50 தாண்டி போகுதுப்பா

அதுவும் இந்த கேப்டன் தமிழ்நாட்டு தொகுதி மொத்தமும் எனக்கு பாண்டிச்சேரி தொகுதி உங்களுக்குன்னு சொல்லும்பொழுது ரொம்ப கடுப்பாகுதுப்பா”

************

இன்னும் 48 மணிநேரத்தில் தலைவி குஷ்புவிற்கான தொகுதி எது என அறிவிக்காவிட்டால் சென்னை சத்யமூர்த்தி பவன் அதி தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகலாம் என சர்வதேச உளவுதுறை எச்சரிக்கின்றது

கஞ்சா சாமியார்?

அதென்ன கஞ்சா சாமியார்?

கஞ்சா என்பது அக்காலத்தில் இருந்தே இந்திய மரபில் ஒன்று, அதுவும் இமயமலை சாமியார், கங்கை கரை அகோரி கூட்டத்தில் அது சாதாரண விஷயம்

அதன் பெயரே “சிவஞான மூலிகை”

ஞானம் அளிக்கும் மருந்தாகவே அது கருதபட்டது, மருத்துவம் உட்பட பல விஷயங்களுக்கு அது பயன்பட்டது

பாரதி அதில் மூழ்கி கிடந்தான், ஏன் ஜெயகாந்தனே அதை விடமுடியாமல் சிக்கி இருந்தார்

கஞ்சா அளவோடு பயன்படுத்தினால் மிகபெரும் அறிவையும், புத்தி கூர்மையினையும் கொடுக்குமாம்

சாட்சி வேண்டுமா?

நம் ஜக்கிசாமியினையே பாருங்கள், 10 ரூபாய்க்கு வழி இல்லாமல் அலைந்த ஜெகதீசன் கஞ்சா பழகியிருக்கின்றார்

அதன் பின் இன்று அம்பானிக்கு நிகராக வளர்ந்து தேசத்தின் மிக பெரும் சக்தியாக நிற்கின்றார்

அரசுகள் அவருக்கு பணிகின்றன‌

இதெல்லாம் எப்படி? எல்லாம் கஞ்சா அடித்து வந்த புத்தி கூர்மையன்றி வேறேன்ன?

ஆக கஞ்சா என அதை பழிக்காதீர்கள், வளங்களை அள்ளிதரும் “சிவஞான மூலிகை” என கொண்டாடுங்கள்..

ஜெய்ஹிந்த் சொல்லுங்கள்

ஒவ்வோர் அறிவிப்புக்குப் பிறகும் ஜெய்ஹிந்த் சொல்லுங்கள்: ஊழியர்களுக்கு ஏர் இந்தியா உத்தரவு

மிக நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது

விமானத்தில் புளியோதரை வழங்கியது முதல், பாம்பு எலி புகுந்தது வரை ஏகபட்ட விஷயங்கள்

அது போக விமானம் அடிக்கடி பயமுறுத்தும் விஷயங்களும் உண்டு

இதில் ஏர் இந்தியாவில் ஜெய்ஹிந்த் சொல்ல வேண்டுமாம்

எலி புகுந்துவிட்டது என பயணி கத்தினால் இனி ஜெய்ஹிந்த் என சொல்லியபடியே எலியினை தேடவேண்டும்

மூட்டை பூச்சியினை நசுக்கும் பொழுதும் ஜெய்ஹிந்த் சொல்ல வேண்டும், பாம்பினை அடித்தாலும் அப்படியே

ஜெய்ஹிந்த் என சொல்லி புளியோதரை கொடுத்தால் அடுத்தமுறை பயணி அந்த விமானம் ஏறுவாரா?

இனி கடத்தல்காரர்களும் ஜெய்ஹிந்த் என சொல்லி கடத்தினால் எப்படி இருக்கும்?

தேர்தல் துளி – 05/03/2019

ஈழபோரை தடுக்காத , பிரபாகரனை சாகவிட்ட‌ சோனியாவும் ராகுலும் சென்னை வரலாம்

ஆனால் சிங்கள கடற்படையின் துப்பாக்கி சூட்டை தடுத்திருக்கும் மோடி சென்னைக்கு வரகூடாது

இதெல்லாம் வைகோவின் நியாயங்கள்

“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்… நீ பேச வேண்டும்..

நாள்தோறும் பொழுதோறும் உறவாட வேண்டும்.. உறவாட வேண்டும்

“பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்
உனக்காக வேண்டும்.

சாமி உன்முகம் பார்த்து பசியாற வேண்டும்”

ஆயிரத்து ஐநூறு வீரர்களை இழந்து, ஏராளமானோர் காயபட்டு லங்கையிலிருந்து திரும்பிய இந்திய ராணுவத்தை கலைஞர் வரவேற்காமல் அவமானபடுத்தியதை வசமாக மறந்துவிட்டு..

மோடி ஏன் அபினந்தனை வரவேற்கவில்லை என சத்தமாக கேட்கின்றான் அல்லவா?

அவன் தான் திமுககாரன்..

கேப்டன் சார், ஒரு சீட்டாவது தரசொல்லுங்க சார், ரொம்ப அவமானமா இருக்கு சார். எங்கப்பா மரியாதை எல்லாம் நாசமா போகுது சார்

அட போங்க வாசன், எனக்கே 3 சீட்டுதான் தருவானுக போல, உங்களுக்கு எப்படி நான் கேக்குறது?”

இன்னோவா காருக்கு ஒரு பேச்சு

ஸ்விப்ட் காருக்கு இன்னொரு பேச்சு…

(ஒரு சைக்கிள் கூட , ஒரு குக்கர் கூட‌ கொடுக்காததால் தினகரன் கட்சியில் அன்னார் கொஞ்சநாள் கூட தங்கவில்லை

முன்பே சொன்னதுதான், தொழில்நுட்பமும் யூடியூப்பும் இவர்களின் மாபெரும் எதிரிகள்)

திமுக எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல : முக ஸ்டாலின்

இவரென்ன தேர்தலுக்கு பின்பு சொல்லவேண்டியதை முன்னாலே சொல்லிவிட்டார்?

தீபாவளி, விஜயதசமி இன்னும் பல பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட சொல்லமாட்டார்கள், நெற்றியில் குங்குமமிட்டால் அழிப்பார்கள், பெரிய பகுத்தறிவு தத்துவெல்லாம் பேசுவார்கள்

ஆனால் தேர்தல் வந்துவிட்டால் சர்வத சமத்துவம் மட்டும் வந்துவிடுகின்றது

தேசவிரோதி வைகோ, இந்து விரோதியும் புத்தமத அபிமானியுமான திருமா, இன்னும் சில இஸ்லாமிய சக்திகளுடன் கூட்டு என ஒருமாதிரி முகம் காட்டும் திமுகவினை மக்கள்முன் நிறுத்தும்பொழுது ஸ்டாலினுக்கு ஏதோ உறுத்தியிருகின்றது என்பது மட்டும் நிஜம்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமனுவை தலைமை கழகத்தில் தாக்கல் செய்தார் கனிமொழி

திமுகவின் முதல் வெற்றிஅறிவிக்கபட்டாயிற்று