கலாபவன் மணி

அவரது சிரித்த முகமும், கலகலப்பான நடிப்பும் தமிழ்சினிமாவின் வரலாற்று பக்கங்களில் ஒன்று.

எப்படிபட்ட நடிகன்? முகத்தில் அத்தனை உணர்ச்சியும் குரலிலும் உடல் மொழியிலும் அத்தனை ரசனையினையும் காட்டும் மகா கலைஞன்

நகைச்சுவையும் வில்லதனமும் அவனுக்கு எல்லா விதங்களிலும் வந்தது

மறுமலர்ச்சி எனும் முதல்படத்தில் டப்பிங் குரலில் அடையாளம் தெரியாவிட்டாலும் நடிப்பில் கலக்கியிருந்தார்

மிக சிறந்த நடிகர்கள் எல்லாம் அல்பாயிசில் மறைவதும், சாக வேண்டியவர்கள் நீண்ட காலம் இருந்து சினிமாவினையும், அரசியலையும் கெடுப்பது இங்கு சாபக்கேடு

தியாகராஜ பாகவதர், கண்ணதாசன் , சந்திரபாபு, சாவித்திரி, நா.முத்துகுமார், சுருளிராஜன் போல மது அரக்கன் பறித்துகொண்ட பொக்கிஷம் கலாபவன் மணி

நாசருக்கும், பிரகாஷ்ராஜுக்கும் பின் மாபெரும் நடிகனாக உருவெடுப்பான் என எதிர்பார்த்தபொழுதுதான் மரணம் அவனை கொண்டு போயிற்று

மதுபழக்கமே அவரின் மிக இளவயது சாவுக்கு முதல் காரணம்

அந்த மகா கலைஞனின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி. மறக்க முடியாத நடிகன் அந்த மணி..

இன்னொரு முறை பிறந்து வந்துவிடுங்கள் மணி…

யதார்த்த களமா

அண்ணே நீங்க திமுகவினை சாடுகின்றீர்கள், கட்சி என்றால் அதிமுக போல் இருக்க வேண்டும் என சொல்லவந்தது ஒரு ரத்த துளி

அவனுகளாவது கொள்கை என்று ஒன்றை வைத்திருப்பார்கள், உங்கள் கொள்கை எது என கேட்டால் மனிதர் சீறிவிட்டார்

அவர் சொன்னதிலும் சில கருத்துக்கள் இருந்தன‌

“கொள்கை எல்லாம் ராஜாஜி காலத்திலே போய்விட்டது, வெள்ளையனொடு அதையும் அனுப்பியாயிற்று

(பெரியார் மண் எல்லாம் கணக்கிலே வராது, வந்திருந்தால் வீரமணி பெரும் சக்தி ஆகியிருப்பார்..)

இது கொள்கையினை பார்த்து வாக்களிக்கும் மாநிலம் என்றால் நல்லாட்சியினை நேசிக்கும் மாநிலம் என்றால் காமராஜர் தோற்றிருப்பாரா? தோற்றவராகவே செத்திருப்பாரா?

அதன் பின் நடப்பதெல்லாம் அரசியல். அண்ணாவின் எழுத்துக்கும் கலைஞரின் சுவாரஸ்யத்தையும் மீறி ராமசந்திரனுக்கு மக்கள் அபிமானம் இருந்தது

இதை கணகிட்ட டெல்லி அவரை பிரித்து காமராஜருடண் இணைக்க முயற்சித்தது கிட்டதட்ட ஆந்திர சிரஞ்சீவி ஸ்டைல்

ஆனால் காமராஜருக்கு தயக்கம் இருந்தது, காமராஜரிடம் ஒருவித மோசமான குணம் இருந்தது, அதாவது அரசியலில் நேர்மையாளர் சந்தேகமில்லை ஆனால் கட்சிக்குள் இன்னொருவரை வளரவிட மாட்டார்

ஈவிகேஎஸ் சம்பத் எல்லாம் இப்படித்தான் காணாமல் போனார், ராமசந்திரனை இணைக்கவும் தயக்கம் இருந்தது

இதனால் தனிகட்சி கண்டார் ராமசந்திரன் நிச்சயம் வெல்வோம் என்ற நம்பிக்கை எல்லாம் இல்லை ஆனால் தமிழகம் அவரை கொண்டாடியது

அண்ணே அவருக்கு அரசியல் தெரியாது, திராவிடம் புரியாது ஆனால் தன்னை நம்பியவர்களுக்கு கொடுத்தார்

யார் யாரை எல்லாமோ தூக்கிவிட்டார், தமிழகம் அவரை கொண்டாட அதுதான் காரணம், கட்சிக்குள் புதிதாய் வந்தவரை எல்லாம் அமைச்சர் ஆக்கினார், பெரும் பொறுப்பு கொடுத்தார்

அதிமுகவில் சேர்ந்தால் சீக்கிரம் பொறுப்பு கிடைக்கும், அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற நிலைக்கு அது கியாரண்டியான கட்சியாக இருந்தது அவர் முதல்வராகவே இறந்தார்

பின் ஜெயா அப்படி வந்தார், அவரும் அப்படியே புதுமுக எம்.எல்.ஏ எல்லாம் அமைச்சராக முடிந்தது, பெரும் பொறுப்பு பெற முடிந்தது

காலில் விழுந்தொம், டயரை நக்கினோம் என்பதெல்லாம் வேறுகதை, அவனவன் கம்பெனியில் முதலாளி முன் குனியவில்லையா? குட்டிகரணம் அடிக்கவில்லையா அப்படி

ஆனால் அவர் முன்னால் குனிந்தோமே தவிர கட்சிக்குள் நிமிர்ந்தோம் , யாரும் எப்பொழுதும் அமைச்சராகலாம் எந்த பதவிக்கும் வரலாம் என்ற நிலை இருந்தது

அதே நேரம் மாவட்ட செயலாளரோ வட்டமோ அமைச்சரோ ஏதும் நிரந்தரம் என நினைத்தால் முதுகில் மிதிக்கபட்டு விரட்டவும் பட்டார்கள்

புதுமுகங்களை தூக்கிவிட்டதுதான் அதிமுகவின் வெற்றிக்கு காரணம், சாகும் பொழுதும் ஜெயா முதல்வராகவே மறைந்தார்

இப்பொழுதும் பாருங்கள் ஜெயாவிற்கு பின் கட்சி தலமையாக பன்னீர் செல்வம், பழனிச்சாமி என யாரோ வரமுடிகின்றது

திமுகவில் இதெல்லாம் முடியுமா? அதிமுகவில் இருக்கும் இம்மாதிரி விஷயங்கள் திமுகவில் நடக்குமா?

ஒருகாலமும் நடக்காது

அங்கு தலமை முதல் மாவட்ட செயலலாளர் வரை 50 வருடமாக எல்லாம் விளம்பரம்

ஒப்புகொள்கின்றோம் அவர்களுக்கு கொள்கை உண்டு, வரலாறு உண்டு இன்னபிற அடையாளம் உண்டு

ஆனால் மக்கள் பெரும் ஆதரவு ஏன் கிடைக்கவில்லை என்றால் எல்லாமே அங்கு நிரந்தரம், அடுத்து இவர்தான் என எளிதாக கணிக்கபடும் விஷயம் இன்னபிற‌

ஆனால் அதிமுகவில் சுவாரஸ்யமே அடுத்தவர் யாரென தெரியாது, அடுத்தது நாம் என ஆளாளுக்கு துடிப்பார்கள் அதில் சிலருக்கு வாய்ப்பும் கிடைக்கும்

இதுதான் அதிமுகவின் வெற்றி, இன்னும் நிலைத்து நிற்கும் காரணம்

இப்பொழுதும் பாருங்கள் பழனிச்சாமி அமைதியாக ஆட்சி புரிகின்றார், டெல்லி காக்கின்றது மோடி பிடி கொடுக்கின்றார் என்பதெல்லாம் இன்னொரு பக்கம்

ஆனால் தமிழக அரசியல்வாதியாக பழனிச்சாமி உருவாகின்றார், அவர் இன்னும் சில வருடங்களை நிறைவு செய்துவிட்டால், வெற்றிகரமாக முடித்துவிட்டால் தனி அடையாளம் பெற்றுவிடுவார்

பழனிச்சாமிக்கே வாய்ப்பு அப்படி என்றால் நமக்கும் வராதா என ஆளாளுக்கு அவர் பின் வருவார்கள், காரணம் யாரும் முதல்வராக வாய்ப்பு உள்ள கட்சி அதிமுக‌

இது நிச்சயம் நடக்கும் இருந்து பாருங்கள், அடிதட்டு தொண்டனும் மிக உயரிய இடத்திற்கு வருவது பாஜகவிலும், அதிமுகவிலும் மட்டுமே சாத்தியம்

டீக்கடை மோடி பிரதமராக முடிகின்றது , பால்பண்ணை பன்னீர் செல்வமும், மாட்டுபண்ணை பழனிச்ச்சாமியும் முதல்வராக முடிகின்றது

காங்கிரஸிலோ திமுகவிலோ இது சாத்தியமா? விடுவார்களா?

உழைப்பிற்கும் உண்மையான தொண்டிற்கும் மரியாதை கொடுக்கும் கட்சி, தொண்டனுக்கு அதிசய வாய்ப்புகளை கொடுக்கும் கட்சி

இதனால்தான் இவை ஆளும் கட்சியாக நிற்கின்றது, காங்கிரசும் திமுகவும் வாரிசு அரசியல், உட்கட்சி வாரிசு அரசியலால் தவிக்கின்றன‌

திமுகவில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு அடுத்த தலைவர் யார் என இப்பொழுதே எல்லோராலும் சொல்லமுடியும், காங்கிரசிலும் சொல்ல முடியும் , பிரியங்காவிற்கும் குழந்தைகள் உண்டு

ஆனால் அதிமுகவில் அடுத்த தலைவர் யாரென சொல்ல முடியுமா? யாரும் வரலாம்

எங்கள் கட்சி அசைக்கமுடியா இடத்தில் இருக்க இதுதான் காரணம்

அடுத்த தேர்தலிலும் பாருங்கள் எங்களுக்கும் குறிப்பிட்ட இடம் கிடைக்கும், காரணம் இது லக்கி பிரைஸ் கட்சி அதிர்ஷ்டம் யாருக்கும் அடிக்கலாம் எனபதால் உற்சாகமாக உழைக்க வருவார்கள்

மற்ற கட்சிகளில் எல்லாமே நிரந்தரம் என்பதால் தங்கள் எல்லை அவர்களுக்கு தெரியும் என்பதால் சுணங்குவார்கள்

எதிர்கட்சிகள் இப்படி இருக்கும் வரை எங்களுக்கு என்ன கவலை, அரசியல் கொள்கை வேறு, யாதார்த்த களம் வேறு

களத்தில் நாங்கள்தான் ஹீரோ

பாருங்கள் ராமசந்திரன் இறந்தார் ராமாவரத்தில் ஒருமாதம் அன்னதானம் வழங்கினார்கள், அறிவாலயத்தில் ஒரு பிஸ்கட் கொடுப்பார்களா என்றால் இல்லை, காரணம் அவர்கள் அப்படித்தான்

திமுகவின் சரிவு இதுதான் , இதே பிஸ்கட் கொடுக்காத கதைதான் கட்சி பதவிகளிலும் இருக்கின்றது, அதன் இயக்கத்திலும் இருக்கின்றது

இருந்து பாருங்கள் இன்னும் வெல்வோம், முகநூலில் உங்களை சீண்டி பின்னூட்டமும் நீ சங்கி என திட்டுகின்றார்களே அவர்களால் கட்சிக்கு 5 பைசா லாபமுமில்லை, லாபம் வந்தாலும் இவர்களுக்கு ஒன்றும் கிடைக்க போவதுமில்லை

அதனால் அந்த இம்சைகளை கண்டுகொள்ளாமல் உங்கள் போக்கில் எழுதுங்கள்

அவர்களை நினைத்தால் எங்களுக்கே பாவமாகத்தான் இருக்கின்றது, விட்டு தள்ளுங்கள்”

தேர்தல் துளி 06/03/2019

விஜயகாந்தினை திமுகவும் அதிமுகவும் பழிவாங்க மிகசிறந்த வழி அவரை அப்படியே விட்டுவது

இப்பொழுது 7 சீட் கேட்டு அடம்பிடிக்கும் கேப்டனுக்கு அதன் பின் வழி தெரியாது, தனியாக நின்றால் அவர் அடையபோவது ஒன்றுமில்லை

கெஞ்சினால் மிஞ்சுவதும் மிஞ்சினால் கெஞ்சுவதும் அவரின் சுபாவம்

இரு துருவமும் அமைதியாக இருந்தால் 1 சீட் போதும் என தானாக கதவினை தட்டுவார் கேப்டன்…

*******

“40 வேட்பாளரே கிடைக்கல, அட தமிழ்நாட்டுலதான் கிடைக்கலன்னா இந்தியாவுல இருந்து கூட கிடைக்கல‌

வெட்கத்தவிட்டு யார் வேணும்னாலும் வாங்க போட்டியிடுங்கன்னு சொன்னா ஒருத்தரும் வரல, இவ்வளவுதான் நம்ம மரியாதை

பேசாம இந்த‌ நாட்ட விட்டே போயிரலாம்னு இருக்க்கேன்..”

*********

எல்லா வியாதியும் மொபைல் போன்ல தான் இருக்கு‍ : நடிகர் தனுஷ்

பாடகி சுசித்திரா மொபைல் போனை வைத்து இவர்களை படுத்தியபாடு மறக்குமா என்ன?

******

அதிமுக கூட்டணியில் மிக ரகசியமாக இணைந்தார் வாசன், பேச்சு வார்த்தை பரம ரகசியமாக நடந்ததால் பரபரப்பு

என்ன பரபரப்பு?

இவர் என்ன ரகசியமாகவா தோற்க போகின்றார்? பகிரங்கமாகத்தான் தோற்பார்

********

நிலக்கரி ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்ற பிராதன வழக்குகளிலும் இதே போல் ஆவணங்கள் தொலைந்தன என காங்கிரஸ் அரசு சொன்னது நினைவுக்கு வந்து தொலைக்கின்றது

இதற்குதான் ஆவணங்களை கொடநாட்டில் மாளிகை கட்டி ஜெயலலிதா பாதுகாப்பாக‌ வைத்தாரோ என்னமோ?

உபிக்கள் ஆனந்த கண்ணீர்

திருகுறளை உலகிற்கு சொன்னதே திமுகதான் : உபிக்கள் ஆனந்த கண்ணீர்

திருகுறளை அச்சிக்கு கொண்டுவந்து மக்களிடம் சேர்த்தவர் உ.வே சாமிநாதய்யர்

சைவ சித்தாந்த கழகம் போன்றவை அதை மக்களிடம் சொல்லிகொண்டே இருந்தன, குறள் மட்டுமல்ல நாலடியார் முதல் திவ்யபிரபந்தம் வரை அவை பரப்பின‌

வீரமாமுனிவர், கால்டுவெல் போன்றோர் திருகுறளை மொழிபெயர்த்து ஐரோப்பாவுக்கே கொண்டு சென்று பரப்பினர்

எல்லீஸ் ஆங்கில போன்ற கலெக்டர்கள் திருகுறளில் மயங்கி அதை கல்வெட்டாக்கி ஏன் திருவள்ளுவருக்கு நாணயமே வெளியிட்டனர்

மறைமலை அடிகள் இயக்கம் முதல் எத்தனையோ இயக்கம் குறள் முதல் கம்பராமாயணம் வரை வளர்த்தன பரப்பின‌

திராவிட கும்பல்கள் மெதுவாக வந்தன, வந்து பார்த்தால் தமிழனின் இலக்கியம் எல்லாம் கடவுள் மயமாக இருந்தன‌

கம்பராமாயணம், சிலப்பதிகாரம், நாலடியார், மூதுரை என எல்லாவற்றிலும் கடவுள்கள் வந்தார்கள்

தத்துவநூலான திருகுறளில் பெரும்பாலும் பக்திசாயல் நிரம்ப இல்லை ஆனால் தமிழ் என்ற பெயரும் இல்லை

இவர்களுக்கு தமிழா முக்கியம்? கடவுள்தான் முக்கியம்

வேறு வழி இல்லாததால் திருகுறளில் தொங்கினார்கள், முப்பாலையும் மனப்பாடம் செய்தார்களோ இல்லையோ ஒரு பிரிவுக்கு ஒரு மனைவி கொண்டு திருகுறளை பரிசோதித்தும் பார்த்தார்கள்

திருவள்ளுவன் கொண்டாடபடவேண்டியவன் ஆனால் கம்பனும் இன்னும் பலரும் என்ன பாவம் செய்தார்கள்

அவர்கள் செய்த பாவம் தெய்வங்களை பாடியது அவ்வையார் உட்பட

செத்தது 300 செல்போனா

செத்தது 300 செல்போனா என வழக்கம் போல சில இம்ரான் பாசறைகள் கிளம்பிவிட்டன‌

தாகுதலுக்கு பின் 30 தீவிரவாதிகளின் செல்போன் இயங்கவிலை என எதற்கு சொன்னார்கள்? விஷயமிருகின்றது

ஒருவரை ரகசியமாக கண்காணிக்கும் பொழுது இன்றைய மகா முக்கியமான விஷயம் செல்போன்கள்

ஒருவர் பயன்படுத்தும் எண் கிடைத்துவிட்டால் மட மடவென்று அவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்துவிடும் விஞ்ஞான காலமிது

முதலில் இதை பரீசிலித்த நாடு அமெரிக்கா, 1997ல் ஆப்கனில் பின்லேடன் மேல் பரிசீலித்தார்கள்

2001ல் அமெரிக்கா தாக்கபட்டபொழுது பின்லேடனை கொல்லாமல் விட்டதற்காக என்னை மன்னியுங்கள் என கிளிண்டன் மண்டியிட்டு அழுதபொழுது இந்த தாக்குதல் விவரம் உறுதிபடுத்தபட்டது

என்ன மாதிரி விஷயம் இது?

ஒருவரின் போனை கண்காணிப்பார்கள் அவர் பேசும் பொழுது இருப்பிடத்தை அறிவார்கள், சட்டென விமானமோ இல்லை ஏவுகனையோ அந்த இடத்தை குறிவைத்து தாக்கும், மனிதர் காலி

பின்லேடனை குறிவைக்க சில நிமிடம் தாமதமானது, ஆனால் சரியாக அந்த இடத்திற்கு அரபிகடலில் இருந்த கப்பலில் இருந்து ஏவுகனைகளை வீசினார்கள், பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்த பின்லேடன் உயிர்தப்பினான்

தொழில்நுட்பத்தை உள்ளங்கையில் வைத்திருந்த பின்லேடனுக்கு உண்மை புரிந்து தூர வீசினான் போனை, அதன் பின் எல்லாம் குதிரை விடு தூது, கழுதை விடு தூது அவன் சாகும் வரை அதுதான் தகவல் தொடர்பு

போனை பின் தொடர்ந்து ஒருவரை போட்டு தள்ளிய சம்பவத்திற்கு ஈழபுலி தமிழ்செல்வன் பெரும் உதாரணம்

ஆம் அவர் லண்டனோடு பேசிகொண்டிருந்தார், லண்டனில் இருந்த உளவாளிகள் கொழும்பிற்கு துரித கதியில் விஷயத்தை கடத்தினர், தமிழ்செல்வன் இருந்த பதுங்கு குழியின் துல்லிய லொக்கேஷன் கண்டறியபட்டது

விளைவு கிபீர் விமானங்கள் அந்த இடத்தை முக்கோண வடிவில் நின்று துல்லியமாக தாக்கின, பதுங்கு குழிகளில் அதிர்வினை ஏற்படுத்தி கொல்லும் வித்தியாசமான குண்டுகள் அவை

தமிழ்செல்வன் காலி, அவர் உடலை கவனித்தால் தெரியும் அது சிதையவில்லை சிதறவில்லை மாறாக அதிவிலே உள்ளுருப்புகள் சிதைந்து காதில் ரத்தம் வடிந்து செத்தார்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இம்மாதிரியான உளவு தகவல் வந்ததை அடுத்து, நன்றாக உறுதி செய்திவிட்டு இந்திய படை அதே பாணியில் நொறுக்கிவிட்டது

பின்லேடன், தமிழ்செல்வன் மேல் தொடுக்கபட்ட அதே தாக்குதல் வரிசை இது

இதனால்தான் 30 செல்போன்கள் இயங்கவில்லை என்ற விஷயம் இப்பொழுது கசிகின்றது

இது நிச்சயம் வெளிதெரிய கூடா தகவல் காரணம் இனி அடுத்த தீவிரவாத குழு உஷாராகிவிடும், ஆனாலும் நம் அரசியல்வாதிகள் இருக்கின்றார்களே…

எனினும் சில உண்மைகளை மறைக்க முடியாது, ஒருவேளை யார் செத்தார் என்ற விவரம் தங்களிடம் இருக்கின்றது என மறைமுகமாக பாகிஸ்தானுக்கு சொல்லலாம்

ஒரு விஷயம் சொல்ல வேண்டும்

லொக்கேஷன் கண்டுபிடித்து அடிப்பது நம் போனில் செய்வது போல ஈஸியானது அல்ல‌

அதற்கு மாபெரும் தொழில்நுட்பம் வேண்டும், மிக பெரிய விஞ்ஞான அறிவு வேண்டும்

இலங்கைக்கு அதை கொடுத்து தமிழ்செல்வனை கொன்றது அந்த மிகபெரிய சக்தி, நிச்சயம் அது இந்தியா அல்ல‌

ஆனால் இப்பொழுது அந்த சக்தி இந்தியாவிற்கும் உதவியிருப்பது நிஜம்

எப்படியோ பாகிஸ்தானில் இந்தியாவின் தாக்குதல் மாபெரும் வெற்றி என்பதற்கான ஆதாரங்கள் இவை

மற்றபடி எதற்கெடுத்தாலும் பூம்பூம் மாடு போல தலையாட்டுபவன் யாரும் சாகவில்லையா? 30 போன் செத்ததா என அவனாக சிரித்துகொண்டிருப்பான்

அவனை எல்லாம் பரிதாபமாக கடந்து செல்வதுதான் நல்லது

இன்றைய துளிகள் – 06/03/2019 (1)

அண்ணே பெரியார் என்ன சொல்லிருக்காரு

என்ன சொன்னாரு?

நாட்டுபற்று தேசபற்று எல்லாம் பொய், அதெல்லாம் மக்களை ஏமாற்றும் தந்திரம்னு சொல்லிருக்காரு

அதனால‌

சும்மா இந்த தேசம், நாடுன்னு பொங்காதீங்க, அதெல்லாம் பிராமண சதி

“அடேய் மானமும் அறிவும் மானிடருக்கு அழகுண்ணு” யார் சொன்னா?

இது தெரியாதா? பெரியார்ணே

அதாண்டா, இது என் நாடு எனக்கு மானம் இருக்கு அதனால‌ நான் பொங்குறேன், உனக்கு மானமில்ல , அறிவுமில்ல‌ நீ இம்ரான்கான் வாழ்கன்னு சொல்லிட்டே இரு போடா, அடி வாங்குறதுக்குள்ள ஓடிரு”

என்னது மோடியினை எதிர்ப்பது இந்து மதத்தை ஆதரிப்பது ஆகாதா?

அதையும் தெளிவாக சத்தமாகவுமா ஒருவர் உளறுவார்?

அதற்கு கைதட்ட 4 அல்லக்கைகள் வேறா?

கலைஞர் புரியாமல் பேசி குழப்புவதில் வல்லவர், அது சுவாரஸ்யமானது

இவரோ எழுதி வைத்ததையும் தப்பு தப்பாக பேசிகொண்டிருக்கின்றார்

இப்பொழுது உபிக்களுக்கு சிக்கலான நிலை

மோடியினை எதிர்த்து முக ஸ்டாலின் இந்துமதத்தை ஆதரிக்கவில்லை என எப்படி முட்டிகொடுப்பது என கடும் ஆலோசனையில் இருக்கின்றார்கள்

கெடு முடிய இன்னும் 24 மணிநேரமே உள்ள நிலையிலும் சத்திய மூர்த்தி பவனும், டெல்லி அக்பர் சாலை காங்கிரஸ் அலுவலகமும் தொடர்ந்து அமைதி காப்பது நல்லதல்ல‌

உடனே தலைவி குஷ்புவிற்கான தொகுதியினை அறிவித்து பேரழிவினை தவிர்க்குமாறு சங்கம் கேட்டுகொள்கின்றது

ஒரு கையில் வரவேற்கும் மலர்செண்டு இன்னொரு கையில் காங்கிரசை குழிதோண்டி புதைக்க மண்வெட்டியும் கையுமாக சங்கம் காத்திருக்கின்றது

எது வேண்டும் உங்களுக்கு என்பதை நீங்களே இன்னும் 23 நிமிடம் 59 நிமிடங்களுக்குள் முடிவு செய்யுங்கள்

வியாபார தொடர்ச்சி” எனும் “Business Continuity”

பெரும் பணமுதலைகள் ஒரு தொழிலில் பணம் கொட்டும் பொழுது ஏகபட்ட கேள்விகளை கேட்கின்றார்கள்

அப்படி ஒரு கூட்டத்தில் பங்குபெறும் பொழுது எழும்பிய கேள்விகள் ஏராளம்

திடீரென எதிர்பாரா நெருக்கடி உதாரணம் வெள்ளம், குண்டுவெடிப்பு, நோய் , கலவரம் இல்லை பூமி அதிர்ச்சி இது போன்ற சிக்கல் வந்தால் அதாவது இந்த அலுவலகம் இருக்கும் இடத்திற்கு ஆபத்து வந்தால் வியாபாரத்தை எங்கு தொடர்வீர்கள்?

உங்கள் “வியாபார தொடர்ச்சி” எனும் “Business Continuity” எங்கு நடக்கும்?

எந்த சூழலிலும் உங்கள் நிறுவணம் தொடர்ந்து இயங்க என்ன ஏற்பாடு உண்டு? நாங்கள் கொட்டும் பணம் பெரிதல்லவா? ஒரு நாள் உங்கள் வேலை முடங்கினாலும் பெரும் மில்லியன் டாலர் நஷ்டமாகும் இல்லையா?

அதற்கு முழு உத்திரவாதமும் இன்னபிற உறுதியான ஆவணங்களும் கொடுங்கள் என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள்

“Business Continuity Plan” என்பது இதுதான்

அவர்கள் சொல்லிவிட்டு சென்றபொழுது இந்த வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் , திமுக, காங்கிரஸ், அதிமுக , பாஜக எனும் சகல கட்சிகளும் நினைவுக்கு வந்தன‌

எப்படியாவது தங்கள் வியாபாரத்தை எந்த முகாமுக்கும், எந்த இடத்திற்கும் நடத்தி அட்டகாசமாக செய்து கொண்டேதான் இருக்கின்றார்கள்


அட அவர்களும் “”Business Continuity Plan” அவர்களின் எனும் வியாபார நகர்வினை செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள்

எல்லா சூழலிலும் அவர்களிடம் “Recovery Plan” இருக்கின்றது

வியாபாரம்தான் அரசியல், அரசியல்தான் வியாபாரம்

வியாபார உலகின் எல்லா கொள்கைகளும் பாதுகாப்பும் அரசியலில் அப்படியே இருகின்றது