செத்தது 300 செல்போனா

செத்தது 300 செல்போனா என வழக்கம் போல சில இம்ரான் பாசறைகள் கிளம்பிவிட்டன‌

தாகுதலுக்கு பின் 30 தீவிரவாதிகளின் செல்போன் இயங்கவிலை என எதற்கு சொன்னார்கள்? விஷயமிருகின்றது

ஒருவரை ரகசியமாக கண்காணிக்கும் பொழுது இன்றைய மகா முக்கியமான விஷயம் செல்போன்கள்

ஒருவர் பயன்படுத்தும் எண் கிடைத்துவிட்டால் மட மடவென்று அவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்துவிடும் விஞ்ஞான காலமிது

முதலில் இதை பரீசிலித்த நாடு அமெரிக்கா, 1997ல் ஆப்கனில் பின்லேடன் மேல் பரிசீலித்தார்கள்

2001ல் அமெரிக்கா தாக்கபட்டபொழுது பின்லேடனை கொல்லாமல் விட்டதற்காக என்னை மன்னியுங்கள் என கிளிண்டன் மண்டியிட்டு அழுதபொழுது இந்த தாக்குதல் விவரம் உறுதிபடுத்தபட்டது

என்ன மாதிரி விஷயம் இது?

ஒருவரின் போனை கண்காணிப்பார்கள் அவர் பேசும் பொழுது இருப்பிடத்தை அறிவார்கள், சட்டென விமானமோ இல்லை ஏவுகனையோ அந்த இடத்தை குறிவைத்து தாக்கும், மனிதர் காலி

பின்லேடனை குறிவைக்க சில நிமிடம் தாமதமானது, ஆனால் சரியாக அந்த இடத்திற்கு அரபிகடலில் இருந்த கப்பலில் இருந்து ஏவுகனைகளை வீசினார்கள், பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்த பின்லேடன் உயிர்தப்பினான்

தொழில்நுட்பத்தை உள்ளங்கையில் வைத்திருந்த பின்லேடனுக்கு உண்மை புரிந்து தூர வீசினான் போனை, அதன் பின் எல்லாம் குதிரை விடு தூது, கழுதை விடு தூது அவன் சாகும் வரை அதுதான் தகவல் தொடர்பு

போனை பின் தொடர்ந்து ஒருவரை போட்டு தள்ளிய சம்பவத்திற்கு ஈழபுலி தமிழ்செல்வன் பெரும் உதாரணம்

ஆம் அவர் லண்டனோடு பேசிகொண்டிருந்தார், லண்டனில் இருந்த உளவாளிகள் கொழும்பிற்கு துரித கதியில் விஷயத்தை கடத்தினர், தமிழ்செல்வன் இருந்த பதுங்கு குழியின் துல்லிய லொக்கேஷன் கண்டறியபட்டது

விளைவு கிபீர் விமானங்கள் அந்த இடத்தை முக்கோண வடிவில் நின்று துல்லியமாக தாக்கின, பதுங்கு குழிகளில் அதிர்வினை ஏற்படுத்தி கொல்லும் வித்தியாசமான குண்டுகள் அவை

தமிழ்செல்வன் காலி, அவர் உடலை கவனித்தால் தெரியும் அது சிதையவில்லை சிதறவில்லை மாறாக அதிவிலே உள்ளுருப்புகள் சிதைந்து காதில் ரத்தம் வடிந்து செத்தார்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இம்மாதிரியான உளவு தகவல் வந்ததை அடுத்து, நன்றாக உறுதி செய்திவிட்டு இந்திய படை அதே பாணியில் நொறுக்கிவிட்டது

பின்லேடன், தமிழ்செல்வன் மேல் தொடுக்கபட்ட அதே தாக்குதல் வரிசை இது

இதனால்தான் 30 செல்போன்கள் இயங்கவில்லை என்ற விஷயம் இப்பொழுது கசிகின்றது

இது நிச்சயம் வெளிதெரிய கூடா தகவல் காரணம் இனி அடுத்த தீவிரவாத குழு உஷாராகிவிடும், ஆனாலும் நம் அரசியல்வாதிகள் இருக்கின்றார்களே…

எனினும் சில உண்மைகளை மறைக்க முடியாது, ஒருவேளை யார் செத்தார் என்ற விவரம் தங்களிடம் இருக்கின்றது என மறைமுகமாக பாகிஸ்தானுக்கு சொல்லலாம்

ஒரு விஷயம் சொல்ல வேண்டும்

லொக்கேஷன் கண்டுபிடித்து அடிப்பது நம் போனில் செய்வது போல ஈஸியானது அல்ல‌

அதற்கு மாபெரும் தொழில்நுட்பம் வேண்டும், மிக பெரிய விஞ்ஞான அறிவு வேண்டும்

இலங்கைக்கு அதை கொடுத்து தமிழ்செல்வனை கொன்றது அந்த மிகபெரிய சக்தி, நிச்சயம் அது இந்தியா அல்ல‌

ஆனால் இப்பொழுது அந்த சக்தி இந்தியாவிற்கும் உதவியிருப்பது நிஜம்

எப்படியோ பாகிஸ்தானில் இந்தியாவின் தாக்குதல் மாபெரும் வெற்றி என்பதற்கான ஆதாரங்கள் இவை

மற்றபடி எதற்கெடுத்தாலும் பூம்பூம் மாடு போல தலையாட்டுபவன் யாரும் சாகவில்லையா? 30 போன் செத்ததா என அவனாக சிரித்துகொண்டிருப்பான்

அவனை எல்லாம் பரிதாபமாக கடந்து செல்வதுதான் நல்லது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s