மணியம்மை

என்னதான் திமுக பெண் விடுதலை, பெண் உரிமை என பேசினாலும் ஒரு பெண்ணின் மாபெரும் தியாகத்தை அவ்வளவாக சொல்லமாட்டார்கள், ஒரு மாதிரி நழுவுவார்கள்

அப்பெண்ணே திமுக தோன்றுவதற்கு வாய்ப்பாகவும் பின் அது ஆட்சி அளவிற்கு வந்து நிற்க காரணமாகவும் இருந்திருக்கின்றார், அவர் இல்லாவிட்டால் திமுக என்றொரு கட்சி உதயமாகியிருக்க வாய்ப்பு இல்லாமே போயிருக்கும்

அவர் மணியம்மை, திகவின் பிரதான தொண்டராக இருந்த வேலூர் கனகசபை என்பவரின் மகள், கனகசபை நீதிகட்சி, சுயமரியாதை தொண்டர் ஆதலால் அன்றே பள்ளி படிப்பும் , அதை தாண்டி தமிழ்புலவர் பட்டமும் தன் மகளை பெறவைத்திருந்தார்

காந்திமதி பெரும் தமிழறிஞர், பேச்சாளர், எழுத்தாளர். ஆம் 1940களில் முற்போக்கு பெண்களின் அடையாளமாக அவர் காணபட்டார்,சிறு வயதில் இருந்தே பெரியாரின் பேச்சு, சிந்தனையில் வளர்ந்தவர் அவர்.

அரசியலை அப்பொழுதே பேசிய பெண்மணி அவர், இதனால்தான் அவரின் காந்திமதி என்றபெயர் மாறி, “அரசியல் மணி” ஆயிற்று

பெரியாருக்கு 1940களில் நாக்கில் பிரச்சினை வந்தது, புற்று நோய் என்றார்கள். கடவுளை பழித்ததால் ராமசாமி சாகபோகின்றான் என்றார்கள். அவர் கொஞ்சம் உடல் நலம் குன்றிய காலங்கள் அவை

ஒருவன் உடல்நலம் குன்றும்பொழுதுதான் அவரின் உண்மையான அபிமானிகள் தெரியவருவார்கள், அதுவும் பணக்காரன் என்றால் சொத்துசண்டை, வாரிசு சண்டை அப்பொழுதுதான் முளைக்கும்

அப்பொழுதுதான் பெரியார் உணர்ந்தார், அவர் பாணியிலே சொன்னார், “ஒரு பயலும் எனக்கு விசுவாசமாய் இல்லை, பூரா பயலும் என் சொத்துமேலே குறியா இருக்கான், என் மோதிரத்தை கூட விடமாட்டானுக போல”

எல்லோரும் தூர இருந்து 70 வயதை நெருங்கிய பெரியாரை உடலை பார்த்துகொள்ளுங்கள் என்றார்களே தவிர யாரும் அருகிருந்து பார்க்க முன்வரவில்லை , இந்நிலையில்தான் கனகசபை மகளோடு அவரை நலம் விசாரிக்க வந்தார்

சிறு வயதிலிருந்தே பெரியாரை பார்த்துவளர்ந்த அரசியல் மணிக்கு பெரியாரை சந்திக்க வந்தபொழுது , இனி பெரியாரை நான் அருகிருந்து கவனிக்கின்றேன் என பொறுப்பை ஏற்றார் அரசியல் மணி

பெரியாரை அருகிலிருந்து அவர் கவனிக்க தொடங்கியபொழுது வயது 24, பெரியாருக்கு 60

எல்லோரும் தன் சொத்துக்களை குறிவைத்து நிற்க, தன்னை உள்ளார்ந்த அர்பணிப்போடு வாழவேண்டிய வயதில் ஒரு இளம்பெண் வந்து நிற்பது பெரியாருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

தலையில் பூவும், சூடி தளைய பட்டுசேலை உடுத்தி திருமணம் குழந்தை என மகிழவேண்டிய வயதில். கருப்பு சேலை கட்டி சமூக இழிவை துடைக்க ஒரு துறவி வேடத்தில் ஒரு அசாத்தியபெண் தன் முன்னால் வந்து அமர்ந்திருப்பது அவருக்கு பெரும் ஆச்சரியமானது

தன்னால் வளர்க்கபட்ட எத்தனையோ பேர் தன் முதுகில் குத்த தயாராகிவிட்டபொழுது எங்கிருந்தோ வந்த மணியம்மை தன்னை முழு பாசத்தோடு கவனித்துகொள்வது அவர் மனதை உருக்கியது

நிச்சயம் பெரியாரின் அழகுக்கோ, பணத்திற்கோ ஆசைபட்டு மணியம்மை வரவில்லை. பெரியார் மிக பெரும் போராளி என்பதும் , வராமல் வந்த மாமணி என்பதும், இச்சமுகத்தை புரட்டிபோட வந்த புரட்சிக்காரன் என்பதுமே மணியம்மை பெரியார் முன் மண்டியிட்ட காரணம்

பெரியாரை கவனித்துகொண்ட அரசியல்மணி, மரியாதையாக மணியம்மை என அழைக்கபட்டார்

பெரியாருக்கு அருகிருந்து அவரை மணியம்மை பார்த்துகொண்ட விதத்தில் பெரியாருக்கு நோய் பறந்தது, மனிதர் உற்சாகம் ஆனார்

மணியம்மை பெரியார் கூட்டங்களுக்கு கூடவே செல்வார், பெரியார் கூட்டம் நடக்கும் இடத்தில் பெரியாரின் புத்தகங்களை எல்லாம் அவர்தான் விற்பனை செய்வார்.

பெரியாருக்கு பூர்வீக சொத்து நிறைய இருந்தது, வாரிசாக ஈவிகே சம்பத் வருவார் என கருதிய பெரும் கூட்டம் அவரை சுற்றி இருந்தது, சம்பத் பெரும் அடையாளமாக இருந்தார்

ஆனால் சம்பத்தின் திருமணம் பெரியாரின் விருப்பத்தில் நடைபெறாததிலும் , பெரியார் தங்களை அரசியலுக்கு விடவில்லை என்பதிலும் ஒரு கூட்டம் குறியாக இருந்தது

பெரியாருக்கு மன உளைச்சல் அதிகரித்தடு, தன் கொள்கைகளை விலைபேசி, தன் சொத்துக்களுக்காக தன் அருகே இருக்கும் கூட்டத்தை நம்பி தன் சொத்டுக்கள், மக்கள் கொடுத்த நன்கொடைகளை விட்டுவிட அவர் விரும்பவில்லை

இந்நிலையில்தான் சுதந்திரம் வந்தது, அதிலிருந்தே அண்ணாவிற்கும் பெரியாருக்கும் முட்டிகொண்டது

பெரியார் முடிவிற்கு வந்தார், அக்கால சட்டபடி ஒரே சாதியில் தத்தெடுக்க முடியாது, பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது. இவை எல்லாம் 1956க்கு பின் வந்த சட்டங்கள்

இதனால் வேறுவழியின்றி மணியம்மையினை திருமணம் செய்யும் முடிவிற்கு வந்தார். இதுதான் சாக்கு என பொங்கிய அண்ணா கும்பல் இதை காரணம் காட்டி தனிகட்சி கண்டன‌

சம்பத் கூட ஓடிவிட்டார்

பெரியாருடன் மணியம்மையும் வீரமணியும் மட்டுமே இருந்தனர். பெரியார் கொஞ்சமும் அசரவில்லை

உண்மையில் பெரியாரின் தீவிரம் அப்படியே மணியம்மைக்கும் வந்தது, பெரும் போராட்டங்களை நடத்தினார்

குடந்தை போராட்டத்தில் சிறை சென்றது, 1949ல் இந்தி எதிர்ப்பு போரில் கலந்து சிறை சென்றது என பெரும் தீவிரமாய் களத்தில் நின்றார்

அவரின் பேச்சும், எழுத்தும் பெரும் சீறலாய் இருந்தன, பெரியாரின் பேச்சையும், சிந்தனையினையும் அருகிருந்தே எழுதி பெரும் புத்தகங்களாய் கொண்டுவந்தார்

இன்று நாம் காணும் பல பெரியாரின் புத்தகங்கள் அவரால் வந்தது

1958ல் போருக்கு புறப்படு தமிழா என அவர் கட்டுரை எழுதியபொழுது கலவரத்தை தூண்டுகின்றார் என சிறையில் அடைக்கபட்டார்

1974ல் இந்திராகாந்தி டெல்லி ராம்லீலா விழாவில் கலந்துகொண்ட பொழுது, ஒரு மதசார்பற்ற நாட்டின் பிரதமர் மத விழாக்களில் கலந்துகொள்ள கூடாது என்ற ஒரே குரலாக மணியம்மை குரல் ஒலித்தது

அதையும் மீறி இந்திரா கலந்து கொண்டபொழுது சென்னையில் ராமன், சீதை படங்களை எரித்து சிறை சென்றவர் மணியம்மை, அவரின் தைரியம் அப்படி இருந்திருக்கின்றது

1976ல் மணியம்மை நெருக்கடி நிலையில் கைது செய்யபட இதுவே முதல் காரணம். நெருக்கடி நிலை அறிவிக்கபட்டகாலத்தில் கைது செய்யபட்ட சில பெண்களில் அவரும் ஒருவர்

1977ல் இந்திரா தமிழகம் வந்தபொழுது சர்வாதிகாரியே திரும்ப போ என தைரியமாக கருப்புகொடி காட்டினார் மணியம்மை

பெரியாரின் மறைவிற்கு பின் திராவிட கழக தலைவராகவும் நியமிக்கபட்டார், அவரின் செயல்பாடு மிக நன்றாகவே இருந்தது

சிறுவயதில் இருந்தே பெரியாரை தவிர ஏதும் அறியாத அந்த ஒரே பெரியாரிஸ்ட் பெரியார் இறந்த 4 வருடங்களில் மரித்தார், அவருக்கு வயது அப்பொழுது 58

இதே மார்ச் 10ம் நாள்

அப்பெண் ஆச்சரியமானவர், அக்காலத்திலே ஒரு பெண்ணாக பெரியாரை குருவாக ஏற்க பெரியாரை முழுக்க புரிந்துகொள்ளும் அவருக்கு பக்குவம் இருந்திருக்கின்றது

24 வயதில் எனக்கு திருமணமே வேண்டாம், பெரியாரை கவனித்துகொள்வதே என்பணி என அர்பணித்து நிற்க அவருக்கு அர்பணிப்பு உணர்வு இருந்திருகின்றது

திராவிட நாடே இவள் பெரியாரை மயக்கிவிட்டாள் என வாரி தூற்றும்பொழுது அதை 28 வயது பெண்ணாக கடந்து செல்லும் பக்குவம் இருந்திருக்கின்றது

பெரியாரின் மனைவியாக வாழவும் அவர் தயாராகியிருகின்றார், பெரியாருக்காக எந்த சவாலையும் ஏற்கும் அளவு அவரின் அர்பணிப்பு இருந்திருக்கின்றது

நிச்சயம் பெரியாரின் சொத்துக்களுக்கு அவர்தான் வாரிசு

ஆனால் அந்த சொத்துக்களை சுருட்டினாரா? இல்லை கனகசபை குடும்பத்தை மன்னார்குடி குடும்பமோல் வளர்த்தாரா?

இல்லை தன்குடும்ப ஆட்களை எல்லாம் திராவிடர் கழகத்தில் பொறுப்புக்கு கொண்டுவந்தாரா?

இல்லை, பெரியார் எந்த நோக்கத்திற்காக அதனை கொடுத்தாரோ அதனை இறுதிவரை காத்து நின்றவர் மணியம்மை

இதனால்தான் முதல்வர் ஆனபின் பெரியாரை சந்திக்க வந்த அண்ணாவிற்கு மணியம்மையினை நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை

இந்த பதவிக்காகதானே என் மீது இல்ல பழிசுமத்தினீர்கள் என அவர் பார்வையில் இருந்த வீரியத்தை அண்ணாவால் தாங்கமுடியவில்லை

முகத்தை திருப்பியபடியே அண்ணா சொன்னார், “இத்தனை காலம் பெரியாரை காத்து, அவர் கனவு நனவாக காரணம் நீங்கள் தான், நீங்கள் ஒருவர்தான்”

புன்னகையுடன் அதனை கடந்தார் மணியம்மை, அண்ணாவின் வார்த்தைகளை கவனித்தால் அதிலே மணியம்மையின் பெருமை அடங்கும்

பெரியார் வாழ்வின் இரண்டாம் கட்டத்தை அவர்தான் தாங்கி நின்றார்

கலைஞரை சந்திக்க சென்றபொழுது அங்கு நித்தி என்ற இளைஞர் அவரை உடனிருந்தே கவனிப்பதாக சொன்னார்கள்

அன்றைய கலைஞர் நிலையினையும் அவரையும் பார்த்தபொழுது , அங்கிருந்த பெரியார் படத்தினையும் பார்த்தபொழுது மணியம்மையும் பெரியாரை இப்படித்தான் கவனித்தார் என்ற நினைவு வந்து போயிற்று

பெரியாரை பற்றி பேசும்பொழுதெல்லாம் மணியம்மை பற்றி பேசியே தீரவேண்டும், பெரியாரின் கடைசி 30 வருடங்களின் ஒவ்வொரு நொடியிலும் அருகில் இருந்து கவனித்து, பெரும் சிந்தனை புத்தகம் எல்லாம் வர அவரே காரணம்

பல காரணங்களுக்காக மணியம்மை பெருமை மறைக்கபட்டது, நிச்சயம் “அம்மா” என தமிழகத்தில் அழைக்கபட்டிருக்க வேண்டியது அவர்தான், பெரியார் கொள்கையாளராக, திராவிட பெண் ஒளியாக அவர் வாழ்வு அப்படி

ஆனால் யாரோ ஒரு பிராமணத்தியினை “அம்மா” என பெரியார் வழி வந்த அதிமுகவினர் சொன்னது காலத்தின் கோலம்

போகட்டும்

பெரியாரின் போராட்டத்தில் உருவான மிகபெரும் பிம்பம் மணியம்மை, பெண்களின் விடுதலைக்கும் உரிமைக்கும் பகுத்தறிவிக்க்கும் அவர் பாடுபட்டது கொஞ்சமல்ல, பெரியாரோடு இணைந்து அவர் அந்த அளவு பாடுபட்டிருக்கின்றார்

திராவிட இயக்கம் கொடுத்த உந்துதலில் போராட வந்த பெண்கள் பலருண்டு எனினும் இறுதிவரை பெண் போராளியாக நின்ற மணியம்மை மறக்க முடியாதவர்

அவர் அந்த மாபெரும் பொறுப்பையும், தீரா பழியினையும் சுமந்திராவிட்டால் இங்கு மாபெரும் மாற்றங்கள் நிகழ்திருக்காது

போரில் களப்பலி கொடுக்கவேண்டும் என்பார்கள், ஒரு உயிர் துடிக்க சாகவேண்டும். அப்படி கொள்கைக்காக மனதளவில் செத்து பெரும் மாறுதலை கொடுத்தவர் மணியம்மை

தான் பெரியாரின் சொத்துக்களுக்காக வந்தவள் அல்ல, அவரிடம் இதர சுகம் பெற வந்தவள் அல்ல, அரசியலுக்கு வந்து சம்பாத்க்கவும் வந்தவள் அல்ல‌

மாறாக அவரின் கொளைக்காக வந்தேன், போராடினேன். அவர் இருக்குமட்டும் அவருக்காக வாழ்ந்தேன் அவர் இல்லா உலகில் இருந்துவிடைபெற்றேன் என நிரூபித்துநின்ற வாழ்வு மணியம்மையுடையது

அதில் துளியும் களங்களும், பழியும் யாரும் சொல்ல முடியாது.

அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி

போலியோ மருந்து

அந்த வியாதி கொடூரமானது, ஒருவன் வாழ்வினையே முடக்கும் அளவு இரக்கமே இல்லாதது. இளம்பிள்ளை வாதம் என தமிழிலும், போலியோ என ஆங்கிலத்திலும் அழைக்கபட்ட வியாதி அது

அது ஆதிகாலத்திலே இருந்திருக்கின்றது, இயேசு கூட அப்படி ஒருவனை குணமாக்கியதாக தெரிகின்றது, சப்பாணிகள் என்றும் முடவர்கள் என்றும் கடவுள் குணப்படுத்துவார் என ஜெருசலேம் கோவிலில் காத்து கிடந்தவர்கள் எல்லாம் அந்நோயால் பாதிக்கபட்டவர்கள் என்கின்றது வரலாறு

அப்படிபட்ட நோயின் தாக்கம் கடந்த தலைமுறைவரை இருந்தது, ஒவ்வொரு ஊரிலும் போலியோ தாக்கபட்டவர்களை காணாலம் இருக்க முடியாது

சில குழந்தைகளை இரு கை இரு கால் என முடக்கும், சிலருக்கு ஒரு கை ஒரு கால் என முடக்கும்

1997வரை ஒவ்வொரு வகுப்பிலும் போலியாவால் தாக்கபட்டு அங்ககீனமான ஒரு மாணவனோ இல்லை பலரோ சாதாரணம்

அவர்கள் இன்றும் சரியான பணி இன்றியும், குடும்ப வாழ்வு இன்றியும் வாழ்வதை சாதாரணமாக பார்க்கலாம். மாற்று திறனாளிகள் என கலைஞர்தான் அழைக்க ஆரம்பித்தாரே தவிர அதற்கு முன்பு அழைக்கபட்டதெல்லாம் மிக கொடூரமான மனதனை பாதிக்கும் வார்தைகள்

உடலால் செத்த அவர்களை மனதாலும் கொல்லும் நோய் போலியோ

குழந்தையிலே அவர்களை தாக்கும் அந்நோய், காலமெல்லாம் யாரையாவது நம்பியே அவர்கள் அன்றாட கடமையினை செய்யுமளவு அவர்களை முடக்கிவிடும் பெரும் வலியினை கொடுத்து விடுகின்றது

அப்படிபட்ட கொடூரமான நோய் வருதற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை, அம்மை நோய் என்றால் அம்மனை காட்டும் சமூகம் விஞ்ஞானமாக வேப்பிலை மருந்தை சொன்னாலும், போலியோ என்றால் விதிபயன் என சொல்லிவிட்டது

நோய்க்கு சாதி, மதம், இனம், மொழி எதுவும் தெரியாது, போலியோ பல்லாண்டு காலமாக உலகில் ஆட்சி புரிந்தது, உலகம் முழுக்க குழந்தைகளை தாக்கி அவர்கள் வாழ்வினை முடக்கியது அந்நோய்

இரண்டாம் உலகபோருக்கு பின் நச்சு ஆயுதங்களுக்கு பயன்படுத்தப்ட்ட பல கொடூர வைரஸ்களை கட்டுபடுத்தி மருத்துவத்திற்கு பயன்படுத்தமுடியுமா என்ற ஆய்வு தொடங்கிற்று

அதில் ஏதாவது ஒரு மருந்தை கொண்டு இந்த போலியோவினை வெல்லமுடியுமா என கனவு கண்டவர் டாகடர் யோனஸ் சால்க்

அவர் அமெரிக்க யூதர், அப்பொழுதே டாக்டர். இந்த பாலும் பழமும் சிவாஜி கணேசன் சினிமாவில் புற்றுநோய்க்கு பாடுபட்ட காலங்களில் அவர் அமெரிக்காவில் உண்மையாக போலியோவிற்கு எதிராக பாடுபட்டார்

ஒரு நோய் குணமாக முதலில் அதற்கான வைரஸ் கண்டுபிடிக்கபட வேண்டும் , சால்க் முதலில் எந்த வைரசால் அந்நோய் ஏற்படுகின்றது என கண்டறிந்து உறுதிபடுத்தினார்

ஆம் அது நரம்பு மண்டலத்தை தாக்கும் ஒருவித வைரஸ் என்பது உறுதியானது

நரம்பு மண்டலத்தை தாக்கும் ஒருவித வைரஸ் ஆயுதம் ஹிட்லரால் உருவாக்கபட்டது என்பதும், அதற்கு அமெரிக்கா பதில் மருந்து உருவாக்கியது என்பதும் அக்கால செய்திகள்

ஆனால் அந்த அடிப்படைதான் சால்கினை போலியோவினை குணபடுத்த முடியும் என்ற நம்பிக்கையினை கொடுத்தது

அதன் பின் தன் வாழ்வினை அதற்காக அர்பணித்து பெரும் உழைப்பிற்கு பின் அந்த அருமருந்தினை கண்டுபிடித்தார்

ஆனால் பரிசோதனைக்கு யாரை பயன்படுத்துவது? நன்றாக இருப்பவர்களுக்கு கொடுத்து ஏதும் ஆகிவிட்டால்?

மனிதர் தானே பரிசோதனை ஆனார், அந்த மருந்தை தன் உடலில் செலுத்தி நம்பிக்கை அளித்தார்

அதன் பின் அந்த மருந்து பயன்பாட்டுக்கு வந்தது, அமெரிக்காவில் இளம்பிள்ளை வாதம் ஒழிந்தது

உலக நாடுகள் அதை குறித்து கொண்டன, சால்க் மிகபெரும் கொண்டாட்டத்தை பெற்றார், உலகெல்லாம் அம்மருந்து குழந்தைகளுக்காக கொடுக்கபட்டது

உலக சுகாதார அமைப்பு அந்த அருமருந்தினை உலக மக்கள் எல்லோருக்கும் கொடுத்து நோயினை ஒழிக்க உறுதி பூண்டது

எதுவுமே தாமதமாக வரும் இந்தியாவில் பின்னாளில் போலியோ மருந்து அரசால் வழங்கபட்டு இன்று எல்லா குழந்தைகளுக்கும் இலவசமாக வழங்கபடுகின்றது

உறுதியாக சொல்லலாம், இந்தியாவில் இப்பொழுது இளம்பிள்ளைவாதம் ஒழிக்கபட்டிருக்கின்றது, பழைய தாக்கம் இல்லை

ஆரோக்கியமாக குழந்தைகள் வளர்கின்றன, மறுக்கமுடியாது

உலகின் மாபெரும் சொத்துக்கள் குழந்தைகள், அவர்கள்தான் உலகின் எதிர்காலம், அவ்வகையில் அந்த அருமருந்தினை கண்டறிந்த சால்க் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியாக கொண்டாடபடுகின்றார்

பைபிளில் சூம்பிய கையினை குணமாக்கினார் யூத ஞானி இயேசு கிறிஸ்து, அதன் பின் அந்த நோய்க்கு மருந்தும் யூத விஞ்ஞானியிடம் இருந்தே வந்தது

இன்று நாமெல்லாம் இலவசமாக அம்மருந்தினை பெறுகின்றோம் , ஏன் உலகெல்லாம் சல்லிவிலையில் கிடைக்கின்றது. ஆம் இலவசமாக கிடைக்கும் பொருள் எவ்வளவு அருமருந்தாயினும் மதிப்பில்லை

இதுவே மிகபெரும் விலையான மருந்தென்றால் என்னாகும்? குழந்தைகள் விவகாரம் அல்லவா? காசு கொடுத்துத்தான் வாங்கி இருக்க வேண்டும்

ஆனால் எப்படி இவ்வளவு மலிவாக கிடைக்கின்றது, அரசுகளின் கருணையா?

இல்லை, சால்க் தன் கண்டுபிடிப்பினை பதியவில்லை, அதற்கான பாட்டன்ட் எனும் காப்புரிமையோ இம்மருந்தால் கிடைகும் வருமானம் தனக்கும் தன் குடும்பத்திற்கும் என்றோ அவர் எழுதி வைக்கவுமில்லை, சட்டபடி பதியவுமில்லை

ஏன் கவனகுறைவா என்றால் இல்லை, அந்த பெருமகன் அதுபற்றி கேட்டபொழுது மெதுவாக சொன்னான் “சூரியன் தன் ஒளிக்கு காசு கேட்டால் உலகம் தாங்குமா?”

நல்ல மருத்துவனின் மனம் என்பது இதுதான், நோயினை விரட்ட வேண்டும், மானிட குலம் காக்கபட வேண்டும் , பணம் என்பதெல்லாம் யாருக்கு வேண்டும்?

மானிட நேயமும் மருத்துவமும் கலந்த சில மேதைகள் இப்படித்தான் இருந்திருக்கின்றார்கள்

அவர் மட்டும் மருந்துதினை பதிந்து சம்பாதித்திருந்தால் இன்றைய பில்கேட்ஸ் இன்னபிற மில்லியனர்களை விட பெரும் உயரத்தில் இருந்திருப்பார்

அதன் பின்னாலும் சால்கின் ஆராய்ச்சி தொடர்ந்தது தன் இறுதி காலங்களில் எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வில் இருந்தார், ஆனால் விதி முடிந்தது

இந்தியாவில் இன்று போலியோ முகாம் என சொட்டு மருந்து கொடுக்கபடும் பொழுது அந்த தன்னலமற்ற விஞ்ஞானிக்கும் நன்றி சொல்லியே ஆக வேண்டும்

நிச்சயம் அந்த யூத விஞ்ஞானி இரண்டாம் கிறிஸ்து, அதில் சந்தேகமில்லை

டார்ச்லைட் சின்னம்

கமலஹாசனுக்கு டார்ச்லைட் சின்னம் வழங்கபட்டது

பேட்டரியும் பல்பும் இல்லாத டார்ச்லைட்டை வைத்து கமல் என்ன செய்வாரோ தெரியாது

இப்பொழுது கமலஹாசனுக்கு மகா மோசமான நேரம்

ஆம், பாலியல் தொழிலாளிகளின் வாழ்வினை வைத்து “டார்ச்லைட்” என்றொரு படம் முன்பு வந்தது, சதா ரித்விகா போன்றவர்கள் நடித்தும் படம் பெட்டிக்குள்ளே முடங்கியது

(இம்மாதிரி படங்களை எல்லாம் கட்டாயம் பார்க்க வேண்டும் ஆனால் விமர்சனம் எழுத கூடாது என்பது நம் கொள்கை என்பதால் படம் பார்த்துவிட்ட பின்பும் கம்மென்று இருந்தோம்)

இப்பொழுது அந்த படம் கமலஹாசனால் புத்துயிர் பெற்றாயிற்று, இனி ஆளாளுக்கு தேடி தேடி பார்ப்பார்கள்

அடுத்து கோவை சரளாவினை தொடர்ந்துகட்சியில் சதாவினையும் ரித்விகாவினையும் இணைக்கும் கட்டாயத்தில் கமலஹாசன் இருக்கின்றார்

2 லட்சம் காரட் வைரம்????

திமுக ஸ்பெக்டரமில் 2 லட்சம் கோடி ஊழல் என சொன்னது எவ்வளவு அபத்தமோ அப்படி 3 லட்சம் கோடி வைரம் என கிளம்பிவிட்டார்கள்.

அதுவும் 2 லட்சம் காரட் வைரமாம், இதுதான் காமெடியிலும் காமெடி

உதாரணமாக விஜயகாந்த் கட்சி சீனாவின் செஞ்சேனை போல உலகை வெல்லும் அளவு வலுவானது என்றால் சிரிக்கமாட்டோமா? அப்படித்தான் விஷயம்

விற்பனைக்கு வரும் பெரிய வைரங்களேஒரு பெரும் வைரத்தின் அளவே 20 காரட்டை தாண்டாது, இவர்களோ ஊட்டி காரட் மூட்டை அளவு பேசிகொண்டிருகின்றார்கள்

புகழ்பெற்ற வைரங்களே சில நூறு கேரட்டுகளை தாண்டாது

(படத்தை பாருங்கள் புரியும்..)

ஆனால் ஒருவிஷயம் உண்மை, பெருவாரியான மதிப்பு வாய்ந்த வைரங்கள் எங்கோ விலைபேசபட்டிருக்கின்றன, நெருப்பில்லாமல் புகையாது

நிச்சயம் ஒரு வைரமாக இருக்காது, ஒரு வைரம் என்றால் அதிகபட்சம் சில கோடிகள்தான் வரும் அது 20 ரூபாய் என டோக்கன் கொடுக்கவே பத்தாது

கருப்பு பண பதுக்கல், தங்கம் என்பதை விட வைரத்தை பதுக்குவது மிக நுட்பமான வழி, மிக மிக துணுக்கான வைரத்தில் முதலீடோ இல்லை பதுக்கியோ வைத்தால் பணமாக்க எளிய வழி

அதை சில கோஷ்டி செய்திருக்கலாம், தேர்தல் நேரம் என்பதால் அதை காசாக்க வழி செய்திருக்கலாம், விஷயம் கசிந்திருக்கலாம்

இது ஜெயலலிதா வீட்டு வைரம் என சிலர் சொல்கின்றார்கள், வாய்ப்பு இல்லாலும் இல்லை, 1996 அந்த போயஸ் கார்டன் வீட்டில் வைர அட்டிகை கைபற்றபட்டது குறிப்பிடதக்கது

அதன் பின்பும் அக்கட்சி வைரம் குவித்திருக்கலாம், அது ஜெயா நில்லா நிலையில் யாருக்கோ பயன்பட்டிருக்கலாம்

கொடநாடு கொள்ளைகள் இன்னும் பல விஷயங்கள் இப்பொழுது வேறு நினைவுக்கு வந்து தொலைக்கின்றது, அந்த பெரும் ரெய்டுக்கு பின் போயஸ் கார்டனிலே ரகசியம் காக்க ஜெயா ஒன்றும் முட்டாள் அல்ல‌

ஆக இஸ்ரேலுக்கு அடுத்து பெரும் வைரசந்தையான சூரத்தில் செய்தி கசிந்திருப்பதால் விஷயம் இருக்கலாம்

சரி வைரம் எப்படிபட்டது?

பொதுவாக வைரம் வாங்க ஏகபட்ட சாஸ்திரம் உண்டு, அது சிலப்பதிகார காலத்தில் இருந்தே உண்டு

சில ராசிக்கு, சில குடும்பங்களுக்கு பொருந்தா வைரம் பெரும் கெடுதலை கொண்டுவரும் என்பார்கள்

கண்ணகி கால் சிலம்பில் மாணிக்கமும் வைரமும் இருந்ததாம், அது முதலில் கண்ணகி குடும்பத்தை கெடுத்தது, பின் களவெடுத்த பொற்கொல்லனை அழித்தது அப்படியே பாண்டிய மன்னனையும் சாய்த்தது

அதை தொடாத மாதவி காவியமானாள்

வரலாற்றில் வைர சென்டிமென்டால் சிலர் அழிந்த முதல் காட்சி இதுதான், அது ஏகபட்ட சாட்சிகளுடன் சாலமோன் அரசர்,, அலெக்ஸ்டாண்டர், நெப்போலியன் வரை வருகின்றது

கண்முன் கண்ட காட்சி கோஹினூர் வைரம், கிட்டதட்ட 2000 ஆண்டு பழமையானது

ஆனால் புகுந்த இடத்தில் எல்லாம் அழிவினை கொண்டுவந்து கடைசியாக பிரிட்டனுக்கு சென்றது, அத்தோடு அரச குடும்பமும் ஆட்சி இழந்து அதிகாரத்தை இழந்தது

அதாவது வைரம் வாங்கும்பொழுது பல விஷயங்கள் பார்ப்பார்கள், ரேகை ஓட்டம் என்பார்கள், முகம் என்பார்கள் , முக்கியமாக கடல் கடந்து வரவேண்டும் என்பார்கள் , ராசிக்கு பொருந்த வேண்டும் என்பார்கள் இன்னும் ஏக விஷயங்கள்

அப்படி இல்லா வைரம் உரிமையாளரை அழித்துவிடும் அல்லது பெரும் துன்பம் கொடுக்கும் என்கின்றது சாஸ்திரம்

ஒருவேளை மிக மர்மமாக இறந்த ஜெயா அப்படி ஒரு சில வைத்திருந்திருப்பாரோ?

அந்த சென்டிமென்ட் தான் அவரை வீழ்த்தி, சின்னமாவினை சிறைக்கு அனுப்பியும் இருக்க்குமோ?

எல்லாவற்றிற்கும் வாய்பிருக்கின்றது

பொதுவாக வைரத்திற்கும் ஜெயாவிற்கும் அக்காலத்தில் இருந்தே பொருந்தாது

“வைரம்” என்றொரு படத்தில் ஜெய்சங்கரோடு நடித்து அதில் எழுந்த சர்ச்சை மிக பெரிது, ஆதாரம் வேண்டுமென்றால் திமுகவினரிடம் கேட்கலாம்

வைர அட்டிகை அணிந்து மிகபெரிய வழக்கில் சிக்கினார் ஜெயா

அப்படியான வைர சென்டிமென்ட் அவர் இறந்தபின்பும் துறத்துகின்றதுதான் ஆச்சரியம்

நிச்சயம் 2 லட்சம் காரட் 3 ஆயிரம் கோடி எல்லாம் இல்லை , ஆனால் பல நூறு கோடிகள் புழங்கும் அளவு பல வைர புதையல் விற்பனைக்கு வந்திருக்கலாம்

இனி பல பல விஷயங்கள் வரும்

நிச்சயம் ஜெயா வீட்டு வைரம் இல்லை என சொல்ல முடியாது, காரணம் பழைய காட்சிகளும் பெங்களூரில் இருக்கும் ஜெயாவிடமிருந்து மீட்கபட்ட தங்க, வைர நகைகளின் அணிவகுப்பும் சாட்சியாய் நின்ற்கின்றது

ஜெயா வீட்டை புரட்டினார்கள் தங்கமும் வைரமும் கொட்டியது

இதுவே கலைஞர் வீட்டை புரட்டினால் என்னாகும்? குறிப்பாக கலைஞர் அறையினை புரட்டினால் என்னாகும்?

ஏராளமான புத்தகங்கள், எழுத்து குறிப்புகள், பேனாக்கள், பெரியார் அண்ணா புகைபடங்கள், அண்ணாவின் கடிதங்கள் இது தவிர என்ன இருக்கும்?

ஒன்றே ஒன்று இருக்கும், அது அவரின் பாசமிகு உறவுகளான சகோதரிகள், முரசொலிமாறன் மற்றும் அன்னை அஞ்சுகத்தின் படம்

நிச்சயம் இதை மீறி ஒன்றும் இருக்காது

அண்ணா அணிவித்த மோதிரம் தவிர அவரிடம் நகை இருந்ததா? இல்லை தயாளு அம்மாவுடன் பெரும் நகை கூடமாக காட்சி அளித்தாரா?

இல்லவே இல்லை, அவருக்கு மிக பிடித்தமான ஏற்காட்டில் ஒரு குடிசை கூட அவர் கட்டியதில்லை

ஒரு எளிய தலைவன் எப்படி வாழவேண்டுமோ அப்படி வாழ்ந்தார் அவர்

இன்னும் ஏராள செய்திகள் வரும், அது ஒவ்வொன்றும் கலைஞர் நிச்சயம் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார், மிக வெளிப்படையான வாழ்வு வாழ்ந்தார் என சொல்லிகொண்டே இருக்கும்

அம்மனிதனை அன்று இந்த உலகம் புரிந்து கொள்ளும், எதையும் தாமதமாகவே புரியும் தமிழகம் இதையும் நிச்சயம் ஒருநாள் புரிந்து அம்மனிதனை கொண்டாடும்