அதென்ன பனங்காட்டு படை?

அதென்ன பனங்காட்டு படை?

பனைமரம் வைத்திருக்கும் அல்லது மரமேறும் நாடார்களுக்கு மட்டுமான கட்சியோ?

பனைஏறுபவர்களுக்கு கிரேன் எல்லாம் கொடுக்கும் கட்சி போல் இருக்கின்றது

ஆக இந்த பனங்காட்டு படையில் சிவகாசி, மதுரை கன்னியாகுமரி நாடார்களுக்கு தொடர்பே இல்லை என்று தெளிவாக சொல்லிகொள்கின்றார்களாம்

இந்த கட்சி இனி உடைந்தால் என்னாகும்?

பனங்காட்டு பதனீர் கட்சி, பனங்கற்கண்டு கட்சி, பனங்காட்டு கள் கட்சி, என பல துண்டுகளாக உடையும்

இப்போதைய நிலையில் இது ஒத்தபனை கட்சி என்பது மட்டும் புரிகின்றது

அடேய் அதிகம் பேசாதீர்கள்

அடேய் அதிகம் பேசாதீர்கள்

இந்திய வரலாற்றிலே ரிசர்வ் வங்கி வைத்திருக்கும் உபரி நிதிக்கு ஆட்டையினை போட முயன்ற ஒரே அரசு இதுதான்

ரிசர்வ் வங்கி ஆளுநர்களுடன் கால்பந்து ஆடிய ஒரே அரசு இதுதான்

போரும் இல்லை, உலக பொருளாதார நெருக்கடியுமில்லை, கச்சா எண்ணெய் கடும் உயர்வுமில்லை

பெரும் இயற்கை அழிவுமில்லை

அவ்வாறான ஒரு இடர்பாடுமே இல்லா நேரத்தில் உபரி நிதியினை கோரினால் இவர்களின் நிர்வாகமும் ஆட்சியும் எப்படி இருந்திருக்கும்?

முகநூல் டிவிட்டரில் எல்லாம் அரசியல் பேச கூடாதாம்

தேர்தல் தேதி அறிவித்துவிட்டார்களாம், இனி முகநூல் டிவிட்டரில் எல்லாம் அரசியல் பேச கூடாதாம், பல வித எச்சரிக்கைகள்

இந்திராவின் மிசா காலங்களில் அரசியல் கூட்டங்களுக்கு தடை என்றபொழுது கல்யாண வீடுகளும், காது குத்து வீடுகளும் அரசியல் மேடைகளாயின‌

இன்னும் என்னென்ன வழியில் எல்லாமோ தமிழகத்தில் அரசியல் பேசி ஆனானபட்ட இந்திராவுக்கே தலைசுற்ற வைத்த தமிழகம் இது

மோடி ஆண்ட கதை என பழங்கதையினை சொன்னால் அது அரசியலா ஆகும்? வரலாற்று கதைதான் ஆகும்

தமிழகம் இதற்கெல்லாம் அஞ்சாது

அரசியல் பேசகூடாது என்றால் சங்கம் நிம்மதியாக குஷ்பு படம் பார்த்து அது பற்றிய பதிவுகளை இட்டுகொண்டே இருக்கும்

அதிலும் அந்த நடிகன் படத்தில் தாடி 
சத்யராஜையும் கவுண்டமணியினையும் பார்க்கும் போழுது மோடி அமித்ஷா போலவே இருக்கின்றது என்றால் அது என்ன தேர்தல் கால அரசியல் பதிவாகவா ஆகும்?

ஆகவே ஆகாது..

பொள்ளாச்சியில் பாலியல் வன்முறை

பொள்ளாச்சியில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் காப்பாற்றிட ஆளுங்கட்சியே துணை போவதா? – ஸ்டாலின் அறிக்கை

மிக சரியான கேள்வியினை எழுப்புகின்றார் ஸ்டாலின், தமிழகத்தில் பல கட்சிகள் கள்ள மவுனம் காக்கும் பொழுது எதிர்கட்சி தலைவர் மிக பொறுப்பான கேள்வியினை கேட்டிருப்பது மிக நல்ல விஷயம்

நீதி கிடைக்கும் வரை அவரின் போராட்டம் தொடரட்டும், அவருக்கு துணை நிற்க வேண்டியது தமிழகத்தார் கடமையாகும்

தன் இயலாமையின் உச்சத்தில் அப்பெண் கண்ணீர் மல்க “உன்னை நம்பித்தானே வந்தேன்?” என்றும், “அடிக்காதிங்க…………. என்றும் கையறு நிலையில் மனம் உடைந்து அழும் அழுகையினை கடந்து செல்ல முடியவில்லை

பெண்கள் அழும் தேசமும் வீடும் வாழாது என்பார்கள்

தெய்வங்களோடு தமிழ்நாடும் தலைகுனிந்து நிற்கும் நேரமிது

சமூக சீர்கேடு அல்லது இன்னும் பெண்களுக்கு விழிப்புணர்வு இல்லா நிலை

இப்பொழுதும் பொள்ளாச்சி கொடூர சம்பவத்தில் எந்த கட்சியினை இழுக்கலாம் என அரசியல் செய்ய சிலர் ஆசைபடுகின்றார்களே தவிர, நடந்துவிட்ட கொடூரத்தை பற்றி யாரும் பெரிதாக கவலைபட்டதாக தெரியவில்லை

இது நிச்சயம் சமூக சீர்கேடு அல்லது இன்னும் பெண்களுக்கு விழிப்புணர்வு இல்லா நிலையின் எதிரொலியே அன்றி வேறல்ல‌

நிச்சயம் பாதிக்கபட்ட பெண்கள் தப்பி வந்ததும் அவர்கள் மனம் துடித்திருக்கும், தன் நிலையினை யாரிடாமாவது சொல்லி அவர்களை பழிவாங்கவோ இல்லை தன் மன கொதிப்பிற்கு பரிகாரம் தேடவோ அவர்கள் துடித்திருப்பார்கள்

ஆனால் எங்கு செல்வார்கள்? அங்குதான் இருக்கின்றது சிக்கல்

பெற்றோரிடமோ இல்லை மற்றவர்களிடமோ சொல்லமுடியா சிக்கல் இது, அவர்களுக்கு கல்வி நிலையங்களிலோ இல்லை சமூக அமைப்புகளிலோ மிக பெரும் பாதுகாப்பும் ஆற்றுபடுத்துதலும் கொண்ட மையங்களோ இல்லை அதற்கேற்ற ஆட்களோ இருந்தால் நிச்சயம் சொல்லியிருப்பார்கள்

ஆனால் அதற்கு வழியுள்ள சமூகமா இது, அப்படிபட்ட அமைப்புகள் இங்கு இல்லை, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இப்படிபட்ட நிலை இல்லை

பெண்களுக்கு நமபகமான, தன் நியாயமான கவலையினை மன உளைச்சலை கொட்டி ஆறுதலோ வழியோ பெற இங்கு ஒன்றுமே இல்லை

இதனால்தான் முதல் பெண்ணை தாண்டி அவர்களால் 100க்கு மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையில் விளையாட முடிந்திருக்கின்றது

இணையம் என்பது முகம் தெரியாதோர் அலையும் காட்டுக்கு சமம், இங்கு மகா எச்சரிக்கையாக இருக்க வேண்டியது பெண்களின் கடமையும் கூட‌

இன்னொன்று இப்பொழுதுள்ள இளைய சமூகமும் எல்லாவற்றையும் எளிதில் அடைய துடிப்பதும், எவ்வித வரைமுறைக்கும் உட்படா சமூகமாகவும் உருவாகின்றது

அந்த அளவு சினிமா, டிவி இன்னபிற அமைப்புகள் அவர்களை ஒருவித மனநிலைக்கு தள்ளியிருக்கின்றன‌

அழுத்தம் மிகு கல்வி முறையும், பெற்றோர் அரவணைப்பு இல்லா வாழ்க்கைமுறையும் பதின்மவயதினரை மிக தவறான பாதைக்கு இட்டு செல்கின்றன‌

இனி இவ்வாறான விஷயங்கள் நடக்காமல் தடுக்கும் பொறுப்பு எல்லா தரப்புக்கும் உண்டு. பெற்றோர் முதல் கல்வி நிலையங்கள் சமூக அமைப்புகள், படைப்புக்கள் என எல்லோருக்கும் உண்டு

பெண் விடுதலை என்பதற்கும் ஊதாரித்தனம் என்பதற்குமான வித்தியாசத்தை முதலில் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்

மான்கள் இருக்கும் வரை புலிகள் சுற்றத்தான் செய்யும், இது இயற்கையின் விதி,இதில் இருந்து எப்படி தப்புவது என்றால் பழைய கதைதான்

அந்த ஊரில் இருந்த பெண் ஒருத்தி மேல் ஒருவனுக்கு மயக்கம், அவளை நோட்டமிட்டமாறே சுற்றியிருக்கின்றான்

அவளும் மிக சாமார்த்தியமாக கையாண்டிருக்கின்றாள், அவனை ஏய் சண்டாளா என விரட்டவுமில்லை, தலைவிரி கோலமாய் கண்ணை கசக்கவுமில்லை

அவனை வீட்டுக்கு அழைத்து விறகு வெட்டுவது முதல் மாட்டுக்கு புல்வெட்டுவது 
வரை சிரித்தே வேலை வாங்கியிருக்கின்றாள், அவனும் செய்திருக்கின்றான்

அடுத்தடுத்த கடின வேலைகள் அவனை செய்ய சொல்லி அவனே கை எடுத்து என்னை விட்டுவிடு என்றாலும், அவள் சிரித்துகொண்டே இந்த “கேழ்வரகினை திரித்து கொடு” என கொடுக்கும் பொழுது அவள் கணவன் வந்துவிட்டனாம்

கணவன் வந்துவிட்டான் ஓடு என்றவுடன் அவன் ஓடியிருக்கின்றான்

மறுநாள் அவனை அழைத்திருக்கின்றாள், அவனோ “ஏன் மீதி இருக்கும் கேழ்வரகினை திரிக்கவா?” என கேட்டு விட்டு அலறி அடித்து ஓடிவிட்டான்

“குறை கேப்பையினையும் திரிக்கவா?” என்ற பழமொழி அன்றுதான் உருவானது

ஆக அன்றே இம்மாதிரி ஆட்களை எப்படி கையாள வேண்டும் என சொல்லியிருக்கின்றார்கள் முன்னோர்கள்

இப்பொழுதும் முகநூலில் பெண்கள் ஏமாந்த கதை ஒரு பக்கம் வந்தாலும் இன்னொரு பக்கம் சுவாரஸ்யமான கதைகளும் வருகின்றது

பண மோசடி அல்ல விஷயம்

இப்படி இன்பாக்ஸில் வருபவர்களை வசமாக பிடித்து வீட்டுக்கு அழைத்து, ஒட்டடை அடித்தல், பெயின்ட் அடித்தல், வீட்டை கழுவி விடுதல் போன்ற கடின வேலைகளை செய்ய வைத்துவிட்டு வேலை முடிந்ததும் “அய்யோ அவர் வந்துகொண்டிருக்கின்றார் ஓடு” என விரட்டிய கதைகளும் உண்டு

அதன் பின் அவன் அப்பெண்ணின் இன்பாக்ஸ் பக்கம் செல்வானா? மாட்டான்

அதாவது தன் பின்னால் சுற்றுபவனை வசமாக இழுத்து போட்டு தனக்கு ஆதாயமான வேலைகளை செய்ய வைத்துவிட்டு அவனை அப்பக்கமே வராமல் விரட்டி அடிப்பது, அவனாகவே தலை தெறிக்க ஓட வைப்பது

இப்படியாக புத்தியுள்ள பெண்கள் தப்பித்துகொண்டுதான் இருக்கின்றார்கள் என்பதும் கவனிக்கதக்கது

இன்னொரு வகை இருக்கின்றது, அது Devi Somasundaram போன்ற வகை, அம்மணியே 1 கோடி தருகின்றேன் என்னை சந்திக்க வருகின்றாயா என செய்தி அனுப்பினாலும் ஒரு பயல் செல்வான்?

“இருப்பாய் பெண்ணே நெருப்பாய்..” என்பது அதுதான்

Where Are You?

இது மிகபெரும் விவகாரமாக வெடித்துவிட்டது, இனியும் மீடியாக்களும் அரசும் மவுனம் காப்பது சரி அல்ல‌

நிர்மலா தேவி விவகாரம் போல பல மர்மங்கள் இருக்கும் போல தெரிகின்றது

நிர்மலா தேவி என்றால் பொங்கிவந்து விசாரணை அறிக்கை அமைத்த கவர்ணரை இப்பொழுது காணவே இல்லை

மிஸ்டர் கவர்ணர், Where Are You?

தேர்தல் துளிகள் 10/03/2019

அன்புமணி, பிரேமலதா வரிசையில் பத்திரிகையாளர்களிடம் சிக்க வேண்டியவர் வைகோ

மிகபெரும் குற்றசாட்டுகளை திமுகமேல் சாட்டியவரும், ஏன் அடியெல்லாம் கூட வாங்கியவர் அவர்தான்

ஆனால் அவரை யாராவது பேட்டி எடுப்பார்களா? குறுக்கு கேள்வி கேட்பார்களா என்றால் இல்லை

ஏன் என்றால் அப்படித்தான். அதுதான் பத்திரிகை அரசியல்

என்ன விட்டு அம்மா கட்சி கூட போகாத விஜி………”

“இந்த விஜயகாந்த எல்லோரும் தெருவுல போட்டு அடிச்சாங்க, அப்பவும் அவருக்கு நான் இருக்கேன்னோ, என் கூட கூட்டணி வைக்கணும்னோ தோணலியே ஏன்?

எப்படி விஜிக்கு நான் இருக்குறது மறந்து போயிட்டு?

“விஜி.. நான் தான்.. விஜி….அங்க போகாத விஜி….. …என்ன விட்டு அம்மா கட்சி கூட போகாத விஜி………”

ஜெயா மரண மர்மமே இன்னும் தீரவில்லை ஆறுமுகசாமி கமிஷன் முடிவும் வரவில்லை

அதற்குள் காடுவெட்டி குரு சாவில் மர்மம் என்றொரு பெரும் பரபரப்பு வரும் போல் தெரிகின்றது, என்னதான் ஆளும்கட்சி ஆதரவு என்றாலும் சாதி வோட்டுகள் கைவிட்டால் டாக்டர் & சன் கட்சியின் நிலை சரத்குமார் நிலைதான்

காடுவெட்டி குருவும் அப்பலோவில்தான் மரித்தார், இவர் எத்தனை லட்சங்களுக்கு இட்லி சாப்பிட்டார் என்ற கணக்கு இனிதான் வரும்