சமூக சீர்கேடு அல்லது இன்னும் பெண்களுக்கு விழிப்புணர்வு இல்லா நிலை

இப்பொழுதும் பொள்ளாச்சி கொடூர சம்பவத்தில் எந்த கட்சியினை இழுக்கலாம் என அரசியல் செய்ய சிலர் ஆசைபடுகின்றார்களே தவிர, நடந்துவிட்ட கொடூரத்தை பற்றி யாரும் பெரிதாக கவலைபட்டதாக தெரியவில்லை

இது நிச்சயம் சமூக சீர்கேடு அல்லது இன்னும் பெண்களுக்கு விழிப்புணர்வு இல்லா நிலையின் எதிரொலியே அன்றி வேறல்ல‌

நிச்சயம் பாதிக்கபட்ட பெண்கள் தப்பி வந்ததும் அவர்கள் மனம் துடித்திருக்கும், தன் நிலையினை யாரிடாமாவது சொல்லி அவர்களை பழிவாங்கவோ இல்லை தன் மன கொதிப்பிற்கு பரிகாரம் தேடவோ அவர்கள் துடித்திருப்பார்கள்

ஆனால் எங்கு செல்வார்கள்? அங்குதான் இருக்கின்றது சிக்கல்

பெற்றோரிடமோ இல்லை மற்றவர்களிடமோ சொல்லமுடியா சிக்கல் இது, அவர்களுக்கு கல்வி நிலையங்களிலோ இல்லை சமூக அமைப்புகளிலோ மிக பெரும் பாதுகாப்பும் ஆற்றுபடுத்துதலும் கொண்ட மையங்களோ இல்லை அதற்கேற்ற ஆட்களோ இருந்தால் நிச்சயம் சொல்லியிருப்பார்கள்

ஆனால் அதற்கு வழியுள்ள சமூகமா இது, அப்படிபட்ட அமைப்புகள் இங்கு இல்லை, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இப்படிபட்ட நிலை இல்லை

பெண்களுக்கு நமபகமான, தன் நியாயமான கவலையினை மன உளைச்சலை கொட்டி ஆறுதலோ வழியோ பெற இங்கு ஒன்றுமே இல்லை

இதனால்தான் முதல் பெண்ணை தாண்டி அவர்களால் 100க்கு மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையில் விளையாட முடிந்திருக்கின்றது

இணையம் என்பது முகம் தெரியாதோர் அலையும் காட்டுக்கு சமம், இங்கு மகா எச்சரிக்கையாக இருக்க வேண்டியது பெண்களின் கடமையும் கூட‌

இன்னொன்று இப்பொழுதுள்ள இளைய சமூகமும் எல்லாவற்றையும் எளிதில் அடைய துடிப்பதும், எவ்வித வரைமுறைக்கும் உட்படா சமூகமாகவும் உருவாகின்றது

அந்த அளவு சினிமா, டிவி இன்னபிற அமைப்புகள் அவர்களை ஒருவித மனநிலைக்கு தள்ளியிருக்கின்றன‌

அழுத்தம் மிகு கல்வி முறையும், பெற்றோர் அரவணைப்பு இல்லா வாழ்க்கைமுறையும் பதின்மவயதினரை மிக தவறான பாதைக்கு இட்டு செல்கின்றன‌

இனி இவ்வாறான விஷயங்கள் நடக்காமல் தடுக்கும் பொறுப்பு எல்லா தரப்புக்கும் உண்டு. பெற்றோர் முதல் கல்வி நிலையங்கள் சமூக அமைப்புகள், படைப்புக்கள் என எல்லோருக்கும் உண்டு

பெண் விடுதலை என்பதற்கும் ஊதாரித்தனம் என்பதற்குமான வித்தியாசத்தை முதலில் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்

மான்கள் இருக்கும் வரை புலிகள் சுற்றத்தான் செய்யும், இது இயற்கையின் விதி,இதில் இருந்து எப்படி தப்புவது என்றால் பழைய கதைதான்

அந்த ஊரில் இருந்த பெண் ஒருத்தி மேல் ஒருவனுக்கு மயக்கம், அவளை நோட்டமிட்டமாறே சுற்றியிருக்கின்றான்

அவளும் மிக சாமார்த்தியமாக கையாண்டிருக்கின்றாள், அவனை ஏய் சண்டாளா என விரட்டவுமில்லை, தலைவிரி கோலமாய் கண்ணை கசக்கவுமில்லை

அவனை வீட்டுக்கு அழைத்து விறகு வெட்டுவது முதல் மாட்டுக்கு புல்வெட்டுவது 
வரை சிரித்தே வேலை வாங்கியிருக்கின்றாள், அவனும் செய்திருக்கின்றான்

அடுத்தடுத்த கடின வேலைகள் அவனை செய்ய சொல்லி அவனே கை எடுத்து என்னை விட்டுவிடு என்றாலும், அவள் சிரித்துகொண்டே இந்த “கேழ்வரகினை திரித்து கொடு” என கொடுக்கும் பொழுது அவள் கணவன் வந்துவிட்டனாம்

கணவன் வந்துவிட்டான் ஓடு என்றவுடன் அவன் ஓடியிருக்கின்றான்

மறுநாள் அவனை அழைத்திருக்கின்றாள், அவனோ “ஏன் மீதி இருக்கும் கேழ்வரகினை திரிக்கவா?” என கேட்டு விட்டு அலறி அடித்து ஓடிவிட்டான்

“குறை கேப்பையினையும் திரிக்கவா?” என்ற பழமொழி அன்றுதான் உருவானது

ஆக அன்றே இம்மாதிரி ஆட்களை எப்படி கையாள வேண்டும் என சொல்லியிருக்கின்றார்கள் முன்னோர்கள்

இப்பொழுதும் முகநூலில் பெண்கள் ஏமாந்த கதை ஒரு பக்கம் வந்தாலும் இன்னொரு பக்கம் சுவாரஸ்யமான கதைகளும் வருகின்றது

பண மோசடி அல்ல விஷயம்

இப்படி இன்பாக்ஸில் வருபவர்களை வசமாக பிடித்து வீட்டுக்கு அழைத்து, ஒட்டடை அடித்தல், பெயின்ட் அடித்தல், வீட்டை கழுவி விடுதல் போன்ற கடின வேலைகளை செய்ய வைத்துவிட்டு வேலை முடிந்ததும் “அய்யோ அவர் வந்துகொண்டிருக்கின்றார் ஓடு” என விரட்டிய கதைகளும் உண்டு

அதன் பின் அவன் அப்பெண்ணின் இன்பாக்ஸ் பக்கம் செல்வானா? மாட்டான்

அதாவது தன் பின்னால் சுற்றுபவனை வசமாக இழுத்து போட்டு தனக்கு ஆதாயமான வேலைகளை செய்ய வைத்துவிட்டு அவனை அப்பக்கமே வராமல் விரட்டி அடிப்பது, அவனாகவே தலை தெறிக்க ஓட வைப்பது

இப்படியாக புத்தியுள்ள பெண்கள் தப்பித்துகொண்டுதான் இருக்கின்றார்கள் என்பதும் கவனிக்கதக்கது

இன்னொரு வகை இருக்கின்றது, அது Devi Somasundaram போன்ற வகை, அம்மணியே 1 கோடி தருகின்றேன் என்னை சந்திக்க வருகின்றாயா என செய்தி அனுப்பினாலும் ஒரு பயல் செல்வான்?

“இருப்பாய் பெண்ணே நெருப்பாய்..” என்பது அதுதான்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s