பாலியல் கல்வி வேண்டும் – குஷ்பு

“கற்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது, இங்கு பாலியல் கல்வி வேண்டும், ஒரு பெண் தனக்கு இழைக்கபடும் அல்லது அணுகபடும் பாலியல் விஷயங்களை வெளிப்படையாக தெரிவிக்க வழி செய்ய வேண்டும்

இங்கு பெண்களுக்குள்ள மிக பெரும் மிரட்டல் என்னவென்றால் அவர்கள் மனதால் பயந்தவர்கள், இச்சமூகம் அப்படி அவர்களை அடக்கி பயமுறுத்தி வைத்திருகின்றது அதை மாற்ற வேண்டும்

பெண் சுதந்திரம் என்கின்றோம் இன்னும் ஒரு பெண்ணும் தனக்கு உரிமையான, தனக்கு மட்டுமே உரிமையான விஷயங்களை வெளி சொல்லவும் முடியாது பேசவும் முடியாது

நல்லதோ கெட்டதோ அவளின் உரிமை அது

பாலியல் கல்வி இல்லாமல் இங்கு பெரும் கொடுமைகளை தவிர்க்க முடியாது, திருமணத்திற்கு முன்போ பின்போ அல்ல விஷயம், ஆண் பெண் என இருபாலருக்கும் பாலியல் பற்றிய அறிவும் புரிதலும் இருக்க வேண்டும்

முக்கியமாக பெண்ணுக்கு பல விஷய‌ங்களில் முழு சுதந்திரம் கொடுக்கபட வேண்டும், அது அழுகையோ இல்லை அனுமதியோ அவளை பொறுத்தது

பெண் என்பவளுக்கும் பொறுப்பு உண்டு, எந்த பொண்ணும் தன் பொறுப்பினை உணராமல் இருப்பதில்லை, நான் முற்போக்குவாதிதான் ஆனால் குடும்பமாக இரு குழந்தைகளை பொறுப்பாக வளர்க்கவில்லையா?”

இதுதான் அன்றொரு நாள் எங்கள் தங்கள் தலைவி குஷ்பு தைரியமாக சொன்னது

இதற்குத்தான் நாதாரிகள் அவர் கலாச்சாரத்தை கெடுத்தார் என்றார்கள், 40 நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள் படுபாவிகள்

அவர்களுக்கு எல்லாம் மன்னிப்பும் கிடையாது, விமோசனமும் கிடையாது

பாலியல் என்பது உணர்வு சம்பந்தபட்டது என சொன்னதற்காக இதே திருமாவளவன் தலைவி மேல் என்ன வழக்கெல்லாமோ தொடுத்தார்

இன்று அவர்தான் பொள்ளாச்சி பயங்கரத்திற்கு போராட வருகின்றாராம்

ஒரு பிரச்சினையினை அதன் அடி ஆழம் வரை அலசி முடிவு சொல்பவர் தலைவி குஷ்பு

நிச்சயம் வருங்காலத்தில் நடக்கும் மாற்றங்களில் எங்கள் அருமை தலைவியினை புரிந்துகொள்வீர்கள்

எதையுமே தாமதமாக புரிந்துகொள்ளும் தமிழகம் தலைவியினையாவது உடனே புரிந்து கொள்ளட்டும்

தலைவி குஷ்புவினையும் அவரின் ஆழ்ந்த அறிவினையும், மிகுந்த தொலைநோக்கு பார்வையினையும் உணர்ந்ததால்தான் சங்கம் உருவானது

தலைவியின் மிக சரியான தீர்க்கதரிசனம் பற்றி சங்கம் பெருமை கொள்கின்றது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s