மாற்றத்திற்கான அறிகுறிகள்

கலைஞர் இருந்திருந்தால் இந்நேரம் ராகுல் கேள்விகளை தமிழில் கேட்கின்றேன் என அவர் அருகிலே இருந்திருப்பார்

கூட்டத்து கவனமோ இல்லை தமிழக கவனமோ ராகுலை நோக்கி செல்லாதவாறு அட்டகாச வித்தைகாட்டியிருப்பார்

தமிழகத்தில் யார் வளரவேண்டும், எப்படி வளரவேண்டும் என்பதை கடந்த 60 ஆண்டுகாலம் தன் கையிலே வைத்திருந்தவர் அவர்

ஜெயா இருந்திருந்தால் இந்நேரம் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி முதல்வர் என்ன பாடுபடுவாரோ தெரியாது

பெரும் பிம்பங்கள் உடைந்தபின் பல தேசிய அடையாளங்கள் இங்கு உதிக்க ஆரம்பிக்கின்றன‌

இவை எல்லாம் மாற்றத்திற்கான அறிகுறிகள்

கொஞ்சமும் திமுக வரலாறு தெரியாமல் ராகுலை நோக்கி கைதட்டி கொண்டிருக்கின்றர் அக்கட்சியினர்

சென்னையில் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடல் நடத்துகின்றார் ராகுல்காந்தி

மிகமிக சுவாரஸ்யமாக கொஞ்சமும் தடுமாற்றமின்றி அவர்களுடன் இயல்பாக பேசி கைதட்டலை அள்ளுகின்றார் ராகுல்

இவ்விஷயத்தில் கடும் உற்சாகமாக இருப்பவர்கள் யாரென்றால் காங்கிராசாரை விட திமுகவினர்

மோடிக்கு இப்படி கூட்டம் நடத்த தைரியம் தகுதி உண்டா என் கேள்வி வேறு

நல்லது, இந்த முக ஸ்டாலின் என்பவருக்கு இப்படி ஒரு கலந்துரையாடல் நடத்த திட்டம் உண்டா? என கேட்டால் பதிலே இல்லை

காலம் மாறி போச்சி

“இனி தமிழ்நாடு போய் எம்ஜிஆர் சிவாஜின்னு பேசாதீக்க ஜி, காலம் மாறி போச்சி

அச்சா?

பின்னே ராகுல் சும்மா காலேஜ் ஸ்டூன்ட் மாதிரி போய் கலக்குறார், இனி நிறைய காலேஜ்ல கூப்பிடுவாங்க போல‌

ஹே ராம் .. நாம என்ன செய்றது?

அதனால இனி ஒவ்வொரு தமிழ்நாட்டு காலேஜுக்கும் போய் பேசுங்க‌

அவங்க GobackModi சொல்வாங்களே மேன்?

அட காலேஜுக்கு மோடி வர்றார்னா கிளாஸ் நடக்காது, அதுனால ஸ்டூடன்ட் அடிக்கடி உங்கள கூப்பிடுவாங்க

நல்ல ஐடியா ஜி, இப்போவே கிளம்புறேன்”

இன்றைய துளிகள் 13/03/2019

இந்த நிகழ்சிக்கு ஏற்பாடு செய்தவன் நிச்சயம் ரெஸ்டாரன்ட் முதலாளியாகத்தான் இருப்பான்

இவ்வளவுக்கும் பெரியாருக்கு சமைத்து கொடுத்து காத்தவர் மணியம்மை என்பது குறிப்பிடதக்கது

(அப்பொழுதும் படுக்கை அறையினை உடைப்போம் என சொல்வில்லை , அது ஏன் என நாம் கேட்க கூடாது )

சென்னை வந்துவிட்டு தலைவிக்கு எந்த தொகுதி என அறிவிக்காமல் கொஞ்சமும் பொறுப்பின்றி கல்லூரி மாணவிகளிடம் அரட்டை அடிக்கும் ராகுல்காந்தியினை சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது

எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு, ஓரளவு வரைக்கும்தான் நாங்கள் பொறுமை காக்க முடியும் மிஸ்டர் ராகுல் காந்தி

GobackRahul என சொல்லும் நிலைக்கு எங்களை தள்ளிவிடாதீர்கள்

பெரியவரவேற்பா?

என்னது தமிழ் மாணவிகள் ராகுல்காந்தியிடம் ஆங்கிலத்தில்உரையாடினார்களா? பெரியவரவேற்பா?

ராகுல்காந்தி தமிழில் பேசவில்லை என்பதை கண்டிக்கவில்லையா?

ஈழத்தில் நம் இனம் அழிந்த கவலை கொஞ்சமும் இல்லையா? அதுபற்றி ஒருத்தியும் கேள்வி கேட்கவே இல்லையா?

அங்கு களமாட ஒரு மானமுள்ள‌ தமிழச்சியுமா இல்லை?

நமது ஆட்சி அமையட்டும் , புனித மரியன்னை கல்லூரியில் 300 மாடு கட்டி, இவளுக அத்தனை பேரையும் மாட்டுசாணம் அள்ளவைத்து பழிவாங்கிவிடலாம்

உண்மையும் நியாயமும் அவரிடம் இருக்கின்றது

அலங்கார உடையில்லை, மோசடி கண்ணீர் இல்லை, பசப்பு வார்த்தையில்லை, வெற்று சவாலுமில்லை, போலி வாக்குறுதியுமில்லை

தமிழ்நாடு என்றவுடன் ராம்சந்திரன் வாழ்க எனும் கோஷமில்லை, ஜெயலலிதா என்ற பேச்சுமில்லை வீண் விளம்பரமுமில்லை

இவ்வளவிற்கும் அவர் தந்தை சிதறி உயிர்விட்ட இடம் அருகில்தான் இருக்கின்றது, அதை சொல்லி கூட ஒரு அனுதாபம் தேட மனமில்லை

மிக யதார்த்தமான பதில்கள், துளியும் ஆவேசமும் கோபமும் இல்லா ஆணித்தரமான நிதானமான பதில்கள்

எல்லா கேள்விக்கும் அவரிடம் பதில் இருக்கின்றது, காரணம் உண்மையும் நியாயமும் அவரிடம் இருக்கின்றது

அன்றொருநாள் இதே தமிழகத்தில் பாமரரோடு பாமரனாக நடந்தாரே ராஜிவ், அவர் வாகனம் பழுதுபட்டவுடன் அருகிருந்த வீட்டின் திண்ணையில் அமர்ந்து முடிந்தவரை அரைகுறை தமிழில் அந்த கிழவிகளுடன் பேசிகொண்டிருந்தாரே, அந்த காட்சிகள் நினைவுக்கு வருகின்றன‌

ஒரு நல்ல இளந்தலைவன் தேசத்திற்கு கிடைத்துவிட்டான் எனும் மகிழ்ச்சி மேலோங்குகின்றது

இன்னும் ஏராளமான தமிழக இளைஞர்களை ராகுல் சந்திகட்டும், தமிழ்நாடு தேசியம் பக்கம் திரும்பட்டும்

அவரிடம் கேள்வி கேட்க எல்லோருக்கும் விருப்பமே, எல்லோருக்கும் பதில் சொல்ல அவருக்கும் விருப்பமே

ஆனால் திமுகவினர் அவரிடம் மனதில் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்

“தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வென்றால் எங்களுக்கு எந்த துறை கொடுப்பீர்கள்”

அதற்கு ராகுலிடமும் பதில் இப்படி இருந்தால் நல்லது

“அது தமிழகத்தில் அமைய போகும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் திமுகவுக்கு காங்கிரசுக்கு கொடுக்க போகும் இடங்களை பொறுத்தது”

ஆம் எந்த திமுக காங்கிரசை தமிழகத்திலிருந்து அகற்றியதோ அதே திமுக இனி காங்கிரசை அரியணைக்கு அழைக்கும் நேரம் நெருங்கி கொண்டிருக்கின்றது

உறுதியாக சொல்லலாம் இனி தமிழகத்தில் தனிபெரும் கட்சி ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை

அந்த மாமனிதன் நேருவினை தமிழகம் காமராஜருடன் கொண்டாடியது, அந்த மனிதனும் தமிழகத்திற்கு வைகை அணை முதல் ஏகபட்ட தொழிற்ச்சாலை உருவாக காரணமாயிருந்தான்

இதே கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்தபொழுது நேருவுக்கு கன்னியாகுமரி கொடுத்த வரவேற்பு கொஞ்சமல்ல‌

நேருவும் “இந்த மக்களின் அன்பு குமரிமாவட்ட தேன் மட்டி வாழைபழம் போல இனிப்பாது” என சொன்னதும் மறக்க கூடியதல்ல‌

அந்த மாமனிதன் நேரு தமிழகத்தை மறுபடி தேடிவந்திருக்கும் நேரமிது, அவரை இந்த மாநிலம் அணைத்து கொள்ளட்டும்

தாழ்ந்துவிட்ட இம்மாநிலம் அந்த “கை”களை பற்றிகொண்டு மேலேறி வரட்டும்

என்ன கேள்வி?

ராகுலிடம் அதை கேட்க வேண்டும், இதை கேட்க வேண்டும் என ஏகபட்ட கேள்விகளை பாஜகவினரே எழுப்புகின்றார்கள்

அதாவது அவரிடம் பல சிக்கல்களுக்கு தீர்வு உண்டு என நம்புகின்றார்கள்

நல்லது

ஆனால் மோடியிடம் தேசமே ஒரே ஒரு கேள்வியினைத்தான் வைக்கின்றது

என்ன கேள்வி?

“என்ன கிழித்துவிட்டீர்கள்? அல்லது எதை கிழிக்க போகின்றீர்கள்? எதற்காக உங்களுக்கு மறுபடியும் வாக்களிக்க வேண்டும்?”

அண்ணே யார் நீங்க?

“பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்து கண்களை குருடாக்க வேண்டும்

அண்ணே யார் நீங்க?

நான் ஞானவேல் ராஜா

இந்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம் எடுத்தவர்தானே?

எக்ஸாட்லி தட் மி

மவனே, இம்மாதிரி சம்பவம் நடக்க முதல் காரணம் அந்த மாதிரி படங்கள்தான், முதலில் உமக்கு அந்த தண்டனையினை கொடுக்க வேண்டும்”

ஆக என்ன முடிவுக்கு வரலாம்?

இரு வாரங்களாகவே இந்த சர்ச்சை இருந்து கொண்டே இருந்தது, பாகிஸ்தானுக்குள் சென்று காணாமல் போன‌ இன்னொரு விமானம் பற்றி தகவல் இல்லை

இந்தியாவின் எல்லை தாண்டிய தாக்குதல், தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் இஸ்ரேலிய பங்கு உண்டு என சில ஊடகங்கள் முணங்கின, சில ஊடகங்கள் அடித்து சொன்னது

விஷயம் கசிந்தது இப்படித்தான்

ஆம் அந்த முகாம்கள் பற்றிய விவரங்கள் இந்தியாவிடமில்லை, அதை கொடுத்த இஸ்ரேல் இன்னொரு உதவியினை கோரியது

அடிக்கும் பொழுது நாங்கள் கைகாட்டும் இடத்தையும் அடிக்க வேண்டும் அதாவது ஜெய்ஸ் இ முகமது இயக்கதின் முகாமினை போல இன்னும் 5 முகாம்களை அடிக்க வேண்டும் என கோரியது

பாகிஸ்தானில் 6 இடங்களில் இந்தியா தாக்கியது இப்படித்தான், ஒரு முகாம்தான் இந்தியாவின் எதிரியே தவிர மீதி 5 பற்றி யாரும் மூச்சுவிடவில்லை

இப்பொழுது அரசல் புரசலாக செய்திகள் வருகின்றன, இது கட்டுகதை இந்தியாவிற்கு எதிராக உலக தீவிரவாதிகளை ஒன்று சேர்க்கும் தந்திரம் என ஒரு பிரிவு சொல்கின்றது

ஒரு பிரிவோ இல்லை, தாக்குதல் நடத்த இஸ்ரேலிய விமானிகளே வந்தார்கள், அவர்கள்தான் தாக்கிவிட்டு திரும்பினார்கள், முழுக்க அவர்கள் தொழில் நுட்பமும் , டெய்சி கட்டர் குண்டுகளுமே (அதாவது தரையினை துளைத்து வெடித்து சுரங்கத்தை தகர்க்கும் குண்டுகள்) தாக்குதலுக்கு பயன்பட்டன‌

இந்திய மிராஜ் விமானங்கள் சென்றாலும் 
இஸ்ரேலிய நவீன ரக விமானமான, உலகின் மகா அச்சுறுத்தும் விமானமாக லக்கீன் மார்டின் எப் 35 மூலம் தாக்கியது என்ற செய்தியும் வந்தது

இந்திய விமானங்கள் திரும்பிவிட இஸ்ரேலிய விமானம் என்ன ஆனது என்பதுதான் மர்மம், அது மகா வேக விமானம் என்பதால் அப்படியே ஆப்கன் பக்கம் சென்று அமெரிக்க தளத்தில் இறங்கியதா, இல்லை அங்கிருந்து வந்துதான் தாக்கியதா என்பது பற்றி தகவல் இல்லை, வரவும் வராது

சொல்வது இஸ்ரேலிய பத்திரிகை என்பதுதான் இன்றைய பரபரப்புக்கு காரணம்

அது யூகம் வதந்தி என்றார்கள், இப்பொழுது மறுபடியும் விஷயம் விஸ்வரூபமாகின்றது ஆனால் இருநாடுகளுமே அமைதி

இதற்கு வாய்ப்பு உண்டா?

நிச்சயம் உண்டு, வரலாற்றில் பதில் இருக்கின்றது

1978ல் மொரார்ஜி தேசாய் காலத்திலே பாகிஸ்தான் அணுகுண்டுக்கு தயாரானது

இந்தியா அணுகுண்டு செய்தவுடன் பாகிஸ்தானும் அலறிஅடித்து அணுகுண்டு செய்ததை கண்டறிந்தது

அது இந்திய வரலாற்றில் மாபெரும் சாதனையாக கொண்டாடி இருக்கவேண்டிய நிகழ்வு ஆனால் மொரார்ஜி தேசாயால் அது தடுக்கபட்டது

ஆம் ராவின் மிகபெரிய சாதனை அது

ஓசைபடாமல் ஆப்கன் வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த ரா உளவாளிகள் பாகிஸ்தானை அட்டகாசமாக உளவு பார்த்தனர்

பாகிஸ்தானின் கவுட்டா பகுதியில் மர்ம தொழிற்சாலை அமைக்கபடுவதை கவனித்த ரா உளவாளி ஒருவர் அங்கேயே சலூன் கடை அமைத்துவிட்டார்

எப்படியோ பாகிஸ்தானிய அணு விஞ்ஞானிகளுக்கும் பணியாளருக்கும் முடிவெட்டும் வாய்ப்பினை பெற்ற அவர் அந்த முடியினை கடத்தினார்

அந்த முடியில் லேசான கதிர்பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கபட்டது, இந்திய தரப்பு உஷாரானது

இதனிலும் இன்னொரு ரா உளவாளி பாகிஸ்தானின் அணுசக்தி மையத்தில் நுழைந்து அந்த அணுமின் நிலையத்து மாதிரி படத்தினையே அசாத்தியமாக கடத்தினான்

இவை எல்லாம் மொரார்ஜி தேசாய் கவனத்திற்கு வந்தபொழுது அவரோ ராவினை மூடிவிடும் முடிவிற்கு வந்தார், அதற்கு ஒதுக்கபடும் நிதியினை குறைத்தார்

ரா அலறி கெஞ்சியது, இது பின்னாளில் பெரும் சிக்கலுக்கு இட்டு செல்லும். நீங்கள் பணம் தராவிட்டாலும் பரவாயில்லை வேறு வகையில் பணம் கிடைக்க சில சட்ட விதிகளை மாற்றுங்கள் என கெஞ்சியது

அசைந்து கொடுக்கவில்லை மொரார்ஜி தேசாய். அந்நிய நாட்டு விவகாரம் நமக்கெதற்கு என அவர்போக்கில் இருந்தார்

ராவினை பின் தொடர்ந்த இஸ்ரேலிய மொசாத்திற்கும் விஷயம் புரிந்தது, அவர்களும் அலறினார்கள்

காரணம் அணுகுண்டு தயாரிக்கபோகும் முதல் இஸ்லாமிய நாடு பாகிஸ்தான். ஈராக், சிரியா எல்லாம் அணுகுண்டு தயாரிக்காமல் பார்த்துகொண்ட அவர்களுக்கு பாகிஸ்தானையும் கண்காணிக்கும் அவசியம் இருந்தது

எல்லாவற்றிற்கும் மேலாக பாகிஸ்தானின் மிக லேட்டஸ்ட்டான அணுகுண்டை வாங்கி தன் பழமையான அணுகுண்டை கொடுக்கும் சீன அரசியலும் நடந்துகொண்டிருந்தது

அதாவது பாகிஸ்தானை பல நாடுகள் கண்காணித்தன, சில மேஜைக்கு கீழ் பேசின‌

அப்பொழுது ஆண்டுகொண்டிருந்த ஜியா உல்கக்கோ அமெரிக்காவினையே காசுக்காக அலைய வைத்துகொண்டிருந்தார்

இந்தியாவினை சமாளிக்க பாகிஸ்தான் அணுகுண்டு செய்வதை கண்டும் காணாமல் இருந்த அமெரிக்காவிற்கு சில விஷயங்களால் அதனை தடுக்கும் அவசியம் வந்தது

இஸ்ரேல் மிக தீவிரமாக இருந்தது, எவ்வளவு தீவிரம் என்றால் அவர்களின் யுத்த பிதாமகன் மோசே தயானே கெஞ்சும் அளவு இறங்கினார்கள்

அன்று பாகிஸ்தான்வரை பறக்கும் யுத்த விமானம் இஸ்ரேலிடம் இல்லை, அதனால் பாகிஸ்தான் அணு உலையினை தாக்க இந்தியா உதவி தேவைபட்டது

ஒரே ஒரு விமானம் தாருங்கள், நாங்கள் பாகிஸ்தான் அணுவுலையினை துவம்சம் செய்துவிடுவோம் என முடிந்தவரை மல்லுகட்டியது இஸ்ரேல்

ஆனால் மொரார்ஜி தேசாய் அசைந்துகொடுக்கவில்லை அத்தோடு விட்டாரா?

இதுவரை நடந்தவை பாகிஸ்தானுக்கு தெரியாது. அடிக்கடி தன்னை பல சக்திகள் தொல்லை செய்வதை தவிர்க்க பாகிஸ்தானில் இந்திய உளவுதுறை செய்த எல்லா விஷயங்களையும் உலகிற்கு சொல்லிவிட்டார் மொரார்ஜி , உளவாளி அடையாளம் உட்பட‌

நன்றி மொராய்ஜி என சுதாரித்த பாகிஸ்தான் அட்டகாசமாக அரசியல் செய்தது.

அத்தோடு தன் அணுவிவகாரங்களை அவசரமாக மறைத்து, இந்திய உளவு வலைப்பின்னலை கண்டறிந்து அனைத்து இந்திய உளவாளிகளையும் கொன்றது பாகிஸ்தான்

இஸ்ரேல் அத்தோடு ஒதுங்கியது

மொரார்ஜி தேசாய்க்கு நிசான் இ பாகிஸ்தான் விருதை வழங்கி நன்றி செலுத்தியது பாகிஸ்தான்

அன்று இஸ்ரேலிய தாக்குதலுக்கு முயற்சி எடுத்தவர் வாஜ்பாய், ஆம் அன்று அவர்தான் வெளியுறவு துறை அமைச்சர்

அன்று ஒதுங்கிய இஸ்ரேல் நேரம் பார்த்து மறுபடியும் களத்தில் இறங்கி அடித்திருக்கலாம்

பாகிஸ்தான் மேலான இந்திய தாக்குதலில் இஸ்ரேலிய பங்கும் இருக்கலாம், மறுக்க முடியாது

ஆக என்ன முடிவுக்கு வரலாம்?

“யோவ் இஸ்ரேலு, ரொம்ப கஷ்டபட்டு நாங்கதான் அடிச்சோம்ணு பெயர் வாங்கி வச்சிருக்கோம்யா, தேர்தல் நேரம்யா, உள்ள புகுந்து கெடுத்துராதய்யா” என்ற் கோரிக்கை டெல்லியில் இருந்து டெல் அவிவுக்கு சென்று கொண்டிருக்கலாம்

அரசியலாக்காதீர்கள்!- தமிழிசை

பொள்ளாச்சி பாலியல் பயங்கரம்: எங்கள் பெண் குழந்தைகளின் ஓலத்தை அரசியலாக்காதீர்கள்!- தமிழிசை

ஆனால் ராணுவ கொடும்சாவு மற்றும் வெற்றிகளை பாஜக அரசியலாக்கும் அதை பற்றி எல்லாம் அக்கா பேசமாட்டார்

கலைஞர் டிவி சர்ச்சை

பொள்ளாச்சியில் கொடுமை நடந்திருக்கின்றது, ஆனால் 273 பெண்கள் 1200 வீடியோ என்பதெல்லாம் மிகைபடுத்தபட்டவை

இன்னொரு விஷயமும் கவனிக்கதக்கது பொள்ளாச்சி எனும் அதிமுக கோட்டை தவிர இன்னொரு இடத்தில் இக்கொடூரம் நடந்தால் இவ்வளவு முக்கியத்துவம் வந்திருக்குமா என தெரியவில்லை

நாம் இதை எந்த கோணத்திலும் சொல்லவில்லை, அக்கயவர்கள் தண்டிக்கபட வேண்டும், அந்த வேட்டை நாய்கள் வீழ்த்தபட வேண்டும் என்பதில் மாற்றுகருத்து இல்லை

நக்கீரனின் அப்பணி வாழ்த்துகுரியது

ஆனால் சந்தடி சாக்கில் கலைஞர் தொலைகாட்சியின் பல சர்ச்சைகள் மறைக்கபடுகின்றது

அதாவது நிர்வாக மாற்றம் வந்ததில் இருந்து புதிதாக வந்த அடிபொடிகளுக்கு அளவற்ற சம்பளமும் பழைய பணியாளர்களை வேலையினை விட்டு வெளியேற்றும் கொடுமையும் நடக்கின்றது

மிகபெரும் மாற்றத்தை அந்த டிவி எதிர்கொள்கின்றது , 
அதற்காக பழைய பணியாளர்கள் வரிசையாக கழுத்தை பிடித்து தள்ளபடுகின்றார்கள்

விபத்தில் சிக்கிய மூத்த பணியாளர் கண்ணன் என்பவரை கலைஞர் டிவி நிர்வாகம் கைவிட்டுவிட்டது என்கின்றார்கள் சிலர்

கலைஞர் டிவியில் நடக்கும் பல சர்ச்சைகளை ஸ்டாலினிடமே சொன்னாலும் தீர்வு எட்டபடவில்லை, ஸ்டாலினால் செயல்பட முடியவில்லை என்கின்றது சில செய்திகள்

மிக பெரும் சிக்கலாக புகைகின்றது விஷயம்

தன் டிவியினையே நிர்வாகிக்க தெரியாதவரா நாட்டை ஆளபோகின்றார் என்ற அதிருப்தி குரல்கள் வெடிக்கின்றன‌

மிக சரியாக அந்த சிக்கல் வெடிக்கும் பொழுதுதான் பொள்ளாச்சியில் கொடிபிடிக்கின்றார் கனிமொழி

ஆக கலைஞர் டிவியில் நடக்கும் சர்ச்சையினை பற்றியும் புலனாய்வு புலி கோபால் எழுதினால் சரியாக இருக்கும்

ஆனால் எழுதுவாரா? செய்யவே மாட்டார்

கலைஞர் டிவி சர்ச்சை வெடிக்கும் நேரம் பொள்ளாச்சி சர்ச்சை வருவதுதான் பலரின் சந்தேகங்களுக்கு காரணம்

முக ஸ்டாலின் மேல் மிகபெரும் சர்ச்சை அவரின் சொந்த டிவியில் தேர்தல்நேரம் வெடிப்பது அவர்களுக்கு நல்லதல்ல‌

இந்நேரமே பொள்ளாச்சி சம்பவமும் அதிமுக பெயர்களும் அடிபடுகின்றன‌

// இரு நாட்களுக்கு முன்பு அப்படி கலைஞர் டிவி பற்றி பெரும் செய்தி கிளம்பியது

https://timestamilnews.in/…/Kalaigar-Tv-clear-off-the-old-e…

எல்லாவற்றையும் ஒப்பிட்டு பார்த்தால் ஏதோ தட்டுபடுகின்றது /