சட்டத்தை கையில் எடுப்பது தவறான முன்னுதாரணம்

நடந்தது மிகபெரும் கொடுமை சந்தேகமில்லை, அதற்காக சட்டத்தை எல்லோரும் கையில் எடுத்தால் நாடு தாங்காது, அது சரியும் அல்ல‌

நல்லதோ கெட்டதோ சட்டத்தின் மூலம் அவர்களை தண்டிப்பதே சரி

சட்டத்தை விடுங்கள், இத்தனை லட்சம் காரி துப்பிய பின்பு , இனி அவர்கள் சமூகத்தில் தலைகாட்டமுடியாது என்றபின்பு, அவன் கடக்கும் ஒவ்வொரு பெண்ணின் முகமும் அவனை மனதார கொல்லும் பொழுது அதைவிட என்ன தண்டனை வேண்டியிருக்கின்றது

அதெல்லாம் விட முக்கியம்

அவனை பெற்றவர்களும் அவன் குழந்தைகளும் உறவுகளும் தள்ளிவைத்து கொல்லுமே, அதைவிடவா பெருந்தண்டனை உண்டு

இனி அவர்கள் நிச்சயம் சராசரி மனிதர்களாக வாழமுடியாது, இருப்பது இரண்டே வாய்ப்பு

ஒன்று நடைபிணமாக வாழ்வது இல்லை சாவது, நித்திசாமி கூட இவர்களை அருகில் சேர்க்கமாட்டார்

மறுபடியும் சொல்கின்றோம், பெரும் கொடுமையாயினும் தாங்கொணா வன்கொடுமையாயினும் சட்டத்தை கையில் எடுப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்

மக்களே சட்டத்தையும் தண்டனையும் கையில் எடுத்தால் நீதிமன்றம், காவல்துறை, சட்டம் ஒழுங்கெல்லாம் எதற்கு? நாமும் ஆப்ரிக்க ஆப்கானிய காட்டுமிராண்டி போல ஆகிவிடமாட்டோமா?

பின்னூட்டமொன்றை இடுக