மில்லியன் டாலர் விலையாக இருக்கலாம்

தொன்மையான ஆவணம் என்றாலும் குறிப்பு என்றாலும் ஆங்கிலேயனாலும், சீனராலும் அவர்கள் மொழியில் படிக்கமுடிகின்றது

லத்தீன் மொழி ஜூலியஸ் சீசர் காலத்து குறிப்புகளை படிக்களவும் இன்றும் அப்படியே இருக்கின்றது

யூத இனம் தொலைந்து போன ஹீப்ரு மொழியிக்கே உயிர்கொடுத்து பண்டைய வரலாற்றினை புள்ளிமாறாமல் படிக்கின்றது

ஆனால் 100 வருடம் முந்தைய நிலபத்திரங்களை கூட தமிழன் படிக்க முடியாமல் தடுமாடுகின்றான்

அவனுக்கும் 3 தலைமுறைக்கு முந்தைய தமிழுக்கும் கூட தொடர்பே இல்லை

இதில் பண்டைய தமிழும், ஓலைசுவடி தமிழும் எப்படி புரியும்?

மொழி சீர்திருத்தம் என்பது நடந்திருக்க கூடாத ஒன்று, பன்னெடுங்காலமாக இருந்த சங்கிலியினை அது தகர்த்துவிட்டது

சீர்திருத்தபட்ட தமிழ் என்பது ஒலைசுவடி போன்ற தொன்மங்களை படிக்கவிடாத தலைமுறையினை உருவாக்கிவிட்டது

சில விஷயங்களில் கை வைக்க கூடாது, அதன் போக்கில் விட்டால்தான் பண்டைய தொடர்ச்சி வருங்காலத்திற்கு கிடைக்கும் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது

தமிழை காட்டுமிராண்டி மொழி , அதை திருத்த போகின்றேன் என சொன்னவர்களை அன்றே அடித்துவிரட்டியிருந்தால் இந்நிலை வந்திருக்காது

தமிழ் அரை நூற்றாண்டாக எப்படி இங்கு வளர்ந்திருக்கின்றது என்றால் அந்த பரிதாபம் வார்த்தையால் சொல்ல கூடியது அல்ல‌

இன்னும் 100 ஆண்டுகளில் தமிழை எழுத வாசிக்க தெரிந்தவர்களை கண்டறிவது மில்லியன் டாலர் விலையாக இருக்கலாம்

பழைய சொத்து ஆவணங்களை, ஓலை குறிப்புகளை அவர்கள் படித்து சொல்ல பல கோடிகள் கேட்கலாம்

பசவண்ணா என்றொரு புரட்சியாளர்

இங்கு பாரதி , பெரியார் பிற்காலத்தில் பேசிய பெண்விடுதலையினை அன்றே கன்னடத்தில் சொன்ன பசவண்ணா என்றொரு புரட்சியாளர் இருந்தார்

அவர் இந்திய வரலாற்றில் முக்கியமானவர், லிங்காயத் பிரிவு அவரால் தொடங்கபட்டது, பெரியாருக்கு 700 ஆண்டுகள் முன்பு பிறந்த பசுவண்ணா பல புரட்சி செய்தார்

பசவண்ணாவினை பெரியாருடன் ஒப்பிட்டால் பசவண்ணா இந்திரா காந்தி, பெரியார் மோடி, இதற்கு மேல் நீங்களே முடிவு செய்யுங்கள்

அப்படி என்ன செய்தார் என்றால் ஏகபட்ட சீர்திருத்தங்களை அன்றே செய்தார், ஆச்சரியமான புரட்சியாளர் அவர், சந்தேகமில்லை

இந்துமதத்தில் சில கொடுமைகள் நடந்த பொழுது சிவலிங்கத்தை முன்னுறுத்தி, லிங்காயத் என்ற சமயத்தை ஏற்படுத்தினார், எடியூரப்பா எல்லாம் அந்த வகை

ஒருவகையில் கன்னியாகுமரியில் விஷ்ணுவின் நாராயண வழிபாட்டை ஏற்படுத்தி, அதாவது இந்துவாக இருந்து இந்துபிராமண கொடுமையினை எதிர்த்த வைகுண்டருக்கு இந்த பசவண்ணாவே முன்னோடி

ஆனால் அவரை பற்றி அதிகம் பேசமாட்டார்கள் ஏனென்றால் பசுவண்ணா பெயர் அரசியலுக்கு பயன்படாது.

மகா முக்கியமாக அவர் பிராமணர்

அந்த சீர்திருத்த திருமணத்தில் அய்யர் கிடையாது, மந்திரம் யாகம் எல்லாம் கிடையாது. சம்பிரதாயம் கிடையாது, ஆனால் தாலி உண்டு, அதுவும் மணமகனின் கழுத்தில் மணமகள் கட்ட வேண்டும்

மற்ற திருமணங்களில் தாலி கட்டியபின்புதான் கணவன் மனைவிக்கு அடிமை, ஆனால் அந்த திருமணத்தில் தாலி கட்டும்பொழுதே அடிமை

எனினும் மிகசில இடங்களிலே இம்முறையில் திருமணம் நடக்கின்றது, அப்படி ஒரு திருமணம் சமீபத்தில் கன்னடத்தில் நடந்திருக்கின்றது

மணமகன் கழுத்தில் தாலிகட்டி அவன் 
தன் கணவாக வர பிச்சை போட்டு மூன்று முடிச்சும் போட்டிருக்கின்றாள் மனைவி

உலகம் இதை வித்தியாசமாக நோக்க, அன்றே பசுவண்ணா இதை எல்லாம் செய்திருக்கின்றார் என்ற வரலாறும் வருகின்றது

அம்பேத்கர் என்பார்கள் இன்னும் பலரை புரட்சியாளர் என்பார்கள், உண்மையில் பிராமணராக பிறந்து பெரும் புரட்சி செய்த பசவண்ணாவே வரலாற்றில் மிகபெரும் எடுத்துகாட்டு

ஆனால் அவர் இந்துமத அபிமானி என்பதாலும், பிராமணர் என்பதாலும் மாற்றுமதங்களை தூக்கிபிடிக்கவில்லை என்பதாலும் அவரை கவனமாக மறைப்பார்கள்

பெண் விடுதலையினை அவளே தாலிகட்டும் உரிமைவரை கொடுத்த அந்த பசவண்ணா பெரும் போராளி என்பதில் சந்தேகமில்லை

அக்கா கேட்ட கேள்வி

அக்கா தமிழிசையினை எப்படி கலாய்த்தாலும் இப்பொழுது அவர் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு காங்கிரசாரிடமே பதில் இல்லை

ராகுலை நோக்கி அவர் எழுப்பிய கேள்விகள் நிச்சயம் காட்டமான ஆனால் படுநியாயமான கேள்விகள்

பழைய வரலாறுகள் குறிப்பாக இனதுரோகி என உங்களை அழைத்த சக்திகளுடன் உங்களுக்கு கூட்டணி ஏன் என்பதெல்லாம் காங்கிரசார் கேட்க வேண்டிய கேள்விகள் ஆனால் பாஜக தலைவரான தமிழிசை கேட்டிருக்கின்றார்

அக்கா கேட்ட கேள்வியில் மிக அருமையான கேள்வி காமராஜரை ஏன் காங்கிரஸ் ஒதுக்கி வைத்தது? என்பது இதற்கு ராகுலிடமும் பதில் இல்லை

(அதைவிட முக்கியமாக அக்கா கேட்க மறந்த கேள்வி, காமராஜரை படு தீவிரமாக எதிர்த்த திமுகவுடன் எப்படி காங்கிரஸ் கைகோர்த்தது என்பது..)

அக்கா ஏன் இவ்வளவு உக்கிரமாகிவிட்டார்?

ஆம் குமரி அனந்தன் காமராஜரின் சீடராக இருந்தவர், காமராஜர் கண்ட அவமானங்களை நேரில் உணர்ந்தவர்

அவர் வீட்டில் அதை சோகமாக உருக்கமாக பகிர்ந்தது அன்று சிறுவயதாக இருந்த தமிழிசையினை பாதித்திருக்குமோ?

என் அப்பா சோகத்திற்கு காரணமான காங்கிரஸ் திமுகவினை சும்மா விடமாட்டேன் என அன்றே சபதம் எடுத்திருப்பாரோ

இருக்கலாம், அக்காவுக்கு அப்படி ஒரு பிளாஷ் பேக் இருக்கலாம்

எப்படி ஆயினும் இப்பொழுது அக்கா கேட்டிருக்கும் நியாயமான கேள்விக்கு கைதட்டி வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது

அதை படித்து பாருங்கள், வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என சொல்லாமல் ஆதாரத்தோடு சொல்ல ஸ்டாலினிடமே பதில் இல்லை

எமது யூகம் சரியாக இருக்குமென்றால் விரைவில் பத்திரிகையாளர் கூட்டமெல்லாம் நடத்தி பல அதிரடிகளை காட்ட போகின்றார் அக்கா..

நிச்சயம் இந்த உலகம் நமக்கானது மட்டுமல்ல

வறட்சி ஒருபுறமும், அவைகளின் வாழ்விடங்களில் மனிதர்கள் ஊடுருவி ஆக்கிரமித்து அவைகளை விரட்டுவதாலும் இப்பொழுதெல்லாம் யானை உட்பட காட்டுமிருகங்கள் அடிக்கடி வெளிவந்து சாவது அதிகரித்துவிட்டது

நிச்சயம் இந்த உலகம் நமக்கானது மட்டுமல்ல, அவைகளுக்கும் இவ்வுலகில் சரிபங்கு உண்டு. நம் எல்லைக்குள் அவை வருவதே இல்லை, நாமே அதன் எல்லைக்குள் சென்று அவைகளின் வாழ்வினை சாகடிக்கின்றோம்

நாம் அறிவில் உயர்ந்துவிட்டோம் என்பதை தவிர என்ன இறுமாப்பு இருக்க முடியும்? அவைகளுக்கு நம் அளவு சிந்திக்க தெரியாது ஆனால் அவைகளும் உயிர், அவைகளும் வாழவேண்டும் அல்லவா?

அவைகளை விரட்டி அடிப்பதும், காட்சி பொருளாக்குவதும் இன்னும் ஏராளமான அட்டகாசங்கள் செய்வதும் நிச்சயம் பாவம்

இந்த பாவம் எதில் முடியும்?

அதைத்தான் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் சொன்னார்

“இந்த பிரபஞ்சத்தில் மனிதனை போல பல உயிர்கள் இன்னொரு கிரகத்தில் இருக்கலாம், அவை மனிதனை விட அதிக புத்திசாலிகளாக இருக்கலாம்

அவை மனித வடிவில் இருக்க வேண்டிய அவசியமில்லை ஏன் பூச்சி புழுவாக கூட இருக்கலாம் ஆனால் அறிவில் மனிதனை மிஞ்சி இருக்கலாம்

மிக சிறிய மனிதன் மிகபெரும் கப்பல்களை கட்டுவது போல, அந்த சிறிய புத்திசாலி இனமும் மாபெரும் ஓடங்களை கட்டி இங்கு வரலாம், ஏன் வந்தே இருக்கலாம்

நம் தொழில்நுட்பங்களை விட மேலான நுட்பங்கள் அவர்களுக்கு இருக்கலாம், நம்மை பார்த்து கேலி செய்யலாம், மனிதர்களை காட்சி பொருளாக அங்கே கொண்டு சென்றிருக்கலாம், சிலரை கடத்தியும் இருக்கலாம்

நாம் விலங்கு கண்காட்சி நடத்துவது போல அவர்கள் அந்த கிரகத்தில் இப்பொழுது செய்யலாம்

ஒரு காலத்தில் இங்கே அவர்கள் குடியேற வரலாம், நமக்கும் அவர்களுக்கும் யுத்தம் நடக்கலாம், நம் பூமியினை அவர்கள் ஆக்கிரமிக்கலாம்..” என அன்றே சொன்னார் ஹாக்கின்ஸ்..

இந்த காட்டு விலங்குகளை மனிதன் பாடாய் படுத்தும்பொழுது அந்த ஸ்டீபன் ஹாக்கின்ஸ் சொன்னது நினைவுக்கு வருகின்றது

அதுவும் அவர் நினைவுநாளன்று அதிகமாகவே வருகின்றது

ஆம் காட்டுவிலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பூமியில் மானிடன் தான் அறிவாளி என செய்யும் ஒவ்வொரு பாவத்திற்கும் நிச்சயம் அவனை விட ஒரு அறிவாளி இனத்திடம் கணக்கு கொடுத்தே தீரவேண்டும்

காட்டுமிருகம் இந்த காட்டை வைத்து என்ன செய்யபோகின்றது, மனிதனிடம் இருந்தால் பலருக்கு பயனாகும் என சிந்திக்க தெரிந்த இருமாப்பில் மனித குலம் இன்று அதை விரட்டலாம்

நாளை இந்த அழகான பூமி இந்த அவலமான மனிதனிடமிருந்து என்னாக போகின்றது, எங்களிடமிருந்தால் எப்ப்படி இருக்கும் தெரியுமா? சனியன்களே ஒழிந்து போங்கள் என இன்னொரு அறிவார்ந்த உயிரினம் வரலாம், வரும்

ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு, ஒவ்வொரு சக்திக்கும் மேலான ஒரு சக்தி உண்டு

தர்மத்தின் விதி அது..

எது நியாயம் என மனதிற்கு படுமோ அதை எழுதுவோம்

நாம் ஒரு இந்தியன், ஒரு இந்தியனாக இந்நாடு நன்றாயிருக்க வேண்டும் என்பதே எம் நிலைப்பாடு

மற்றபடி கட்சி அபிமானம் ஏதுமில்லை, இங்கு சுத்தமான அரசியல் கட்சி என ஏதுமில்லை அப்படி இருக்கவும் முடியாது

பரந்த இந்திய வானமும் கடலும் இருக்கும்பொழுது குறுகிய கட்சி வட்டத்துக்குள் நிற்பது ஒருவித சிறை, ஒருவித கட்டுப்பாடு அது எமக்கு சரிவராது.

இங்குள்ள யதார்த்த நிலைக்கு 100% சுத்தமான ஆட்சியினை யாரும் கொடுக்கவும் முடியாது

எல்லா கட்சிக்கும் நல்ல பக்கங்களும் உண்டு, மோசமான பக்கங்களும் உண்டு. நாம் இரண்டையுமே சொல்வோம் அதில் தயக்கமில்லை

இன்னொன்று நீங்கள் நினைப்பதை எல்லாம் நாம் எழுத முடியாது, அதற்கு நானோ இந்த பக்கமோ தேவையே இல்லை, ஐடியினை உங்களிடம் கொடுத்துவிடுகின்றேன் நீங்களே எழுதிகொள்ளுங்கள்

எது நியாயம் என மனதிற்கு படுமோ அதை எழுதுவோம், அவ்வளவுதான் விஷயம்

மாறாக எம்மை திட்டிகொண்டே இருப்பதில் அர்த்தமில்லை

வேண்டுமென்றால் உங்கள் கட்சிக்கு பாதுகாப்பான கருத்துக்களை ரகசியமாக கேளுங்கள் உரிய ஆலோசனை வழங்கபடும்

அப்படியே எதிர்தரப்புக்கும் அதற்கு சமமான ஆலோசனை இலவசமாக வழங்கபடும்

அப்பொழுதுதான் எல்லோரும் குழம்பி திரிவீர்கள், நன்றாக குழம்பி தெளிந்தால்தான் கட்சிகள் நலனை விட‌ நாட்டுக்கு எது நலம் என்பது உங்களுக்கு புரியும்

காமராஜரை மனதால் சாகடித்தவர்கள்

காமராஜரை கொல்ல முயற்சித்தது பாஜக அதாவது அந்நாளைய ஜனசங்கம் என சொல்லிகொண்டிருகின்றது ஒரு கோஷ்டி, யாரென உற்றுபார்த்தால் பல திமுக முகம்

உண்மையில் காமராஜரை மனதால் சாகடித்தவர்கள் அன்றைய திமுகவினர், ஒன்றா இரண்டா? அம்மனிதனை படாதபாடு படுத்தினார்கள்

ஆம் அவரை வீழ்த்திவிட்டால் தமிழ்நாடு தங்களது என கணக்கிட்டார்கள், அந்த காவல் தெய்வத்தை விரட்டிவிட்டால் அரசு கஜானா சுரங்கம் தங்களது என களமிறங்கினார்கள்

அம்மனிதன் அப்பொழுதெல்லாம் அமைதியாக கடந்து சென்றானே தவிர ஒருவரையும் பழித்ததில்லை

இப்பக்கம் நேருவுக்கு பின் அதுவும் சாஸ்திரிக்கு பின் காமராஜரை காங்கிரஸே விரட்டியது, அதுவும் இந்திரா படிக்காத கிழவன் என விரட்டிகொண்டிருந்தார்

தான் தூக்கிவளர்த்த குழந்தை என காமராஜர் உரிமையில் சொன்னதெல்லாம் இந்திராவுக்கு கவுரவ பிரச்சினையானது

ஒரு பக்கம் திமுக, இன்னொரு பக்கம் இந்திரா, இன்னொரு பக்கம் காமராஜர் இருக்கும் வரை கமிஷன் வாங்கமுடியாது சம்பாதிக்க முடியாது என்றிருந்த அன்றைய காங்கிரசார்

இந்த நெருக்கடியில்தான் டெல்லியில் அவர்மேல் கொலை முயற்சி நடந்தது

அது ஒன்றும் திட்டமிட்ட கொலை முயற்சி அல்ல , அன்று டெல்லியில் பசுமாட்டு காவல் பேரணி டெல்லியில் நடந்தது, அந்த பசுமாட்டு ராமராஜன் போன்ற டவுசர் பார்ட்டிகளுக்கு இன்றுவரை அதுதான் அரசியல், அன்றும் அதுதான் அரசியல்

ஒரு கட்டத்தில் அவர்கள் பேரணி வன்முறையாக மாறி பல இடங்களுக்கு தீவைக்கபடடது , அதில் காமராஜர் இருந்த வீடும் சிக்கியது அவர் தப்பினார்

அது பற்றி அவர் அதிகம் அலட்டவில்லை ஒரே ஒரு இடத்தில் சொன்னார் “அவனுக காந்தியினையே கொன்ன கூட்டம்ணேன், நான் மதவாதி இல்லங்கிறதுக்காக, நாங்கெல்லாம் இருக்கும்வரை மதவாதம் வளராதுண்ணேணேன், அந்ந்த கோவத்துல அவனுக‌ என்ன கொல்ல வந்திருக்கலாம்ணேன்..”

அத்தோடு நிறுத்திகொண்டார் மற்ற இடங்களில் அனுதாப அரசியல் தேடவே இல்லை

கடைசியாக போராட்டம் நிறைந்த மனதில் இருந்தாலும் இந்திரா ஒரு பிரதமர், கருணாநிதி ஒரு முதல்வர் என்ற அளவில் அவரின் நாவு மரியாதையாகவே வார்த்தைகளை வெளியிட்டது

அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர்கள், அதனால அவர்களை குறை சொல்ல ஒன்றுமில்லை என்ற மிக கண்ணியத்தோடு இருந்தார் காமராஜர்

கடமை..கண்ணியம் ..கட்டுப்பாடு என்பது அவரிடம்தான் இருந்தது

அதனால்தான் தன்னை தோற்கடித்த சீனிவாசனின் திருமணத்தில் கூட முதல் ஆளாக கலந்து கொண்டார், “மக்களுக்கு அவரத்தான் பிடிச்சிருக்குண்ணேன், இது மக்கள் தீர்ப்புண்ணேன் அத மதிக்கணும்ணா இந்த சீனிவாசன மதிக்கணும்ணேன்” என அவர் சொன்னதெல்லாம் கண்ணீர் வரவழைக்கும் காட்சிகள்

அப்படியும் ஒரு மனிதன் இருந்திருக்கின்றான், பரிதாபம்

ஒரு மகா நல்லவன், துளியும் குற்றம் சொல்லமுடியா உத்தமன் சொந்த கட்சியிலும் எதிர்கட்சியிலும் எவ்வளவு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டுமோ அவ்வளவையும் கொஞ்சமும் குறைவின்றி பெற்றவர் காமராஜர்

இதைத்தான் சோ சொன்னார், அவர் இறந்த அன்று இந்திரா, கருணாநிதி எல்லாம் அஞ்சலி செலுத்தும் பொழுது மிக தைரியமாக சொன்னார்

“யாரெல்லாம் அந்த மனிதனை மனதால் சாகடித்தார்களோ இன்று அவர்களே அவருக்கு அஞ்சலியும் செலுத்த வருகின்றார்கள்”

ஆம் சொந்த கட்சியும், எதிர்கட்சியும் அம்மனிதனை கொத்தி விரட்டியதை விட, தீ வைத்த சம்பவம் நடந்த பின் தவறுதலாக நடந்தது என சொன்ன ஜனசங்கம் ஒன்றும் மோசமானது அல்ல‌

அந்த மாபெரும் கொடுமையினை அவருக்கு செய்தார்கள்

பொதுவாக எதையும் மனம்விட்டு சொல்லாதவர் காமராஜர், அவர் வீட்டு வேலைக்காரர் சொல்வார், “காமராஜர் கடவுளை வணங்காதவர் ஆனால் வீட்டில் ஒரு நடராஜர் சிலை அன்பளிப்பாக கிடைத்தது ஒன்று உண்டு, அதையே சில நேரம் எங்காவது கிளம்பும் பொழுதும் வந்த பின்பும் உற்று பார்ப்பார், சில நேரம் கண்கள் கலங்கியிருக்கும்”

காமராஜரின் மனதினை அந்த நடராஜர் சிலைமட்டும் அறிந்திருக்கலாம்

அப்படி காமராஜர் மனம் என்ன சொல்லியிருக்கும், அவரை படித்தவர்களுக்கு அதை யூகிப்பது சிரமம் அல்ல‌

“காந்தியோடே நான் செத்திருக்க வேண்டும், அல்லது நேரு சாஸ்திரியோடு என் காலமும் முடிந்திருக்க வேண்டும். இந்த தராதரம் தெரியாதவர்களோடு அவமானபடவா இன்னும் என் காலம் மிச்சமிருக்கின்றது??”

நடந்த வரலாறு என்ன?

இந்து என்ற பெயர் எங்கே இருக்கின்றது என பலர் கிளம்பிவிட்டார்கள், அதற்கெல்லாம் ஆதாரம் சங்க இலக்கியத்திலே இல்லையாம்

இது யாருக்கு தெரியாது? இவர்களா கண்டுபிடித்தார்கள்?

நடந்த வரலாறு என்ன?

அன்று கடல்வழி தொடர்பு பெரிதாக இல்லை, அலெக்ஸாண்டர் காலத்தில் கூட கப்பற்படை இல்லை

அப்பொழுது நிலவழி தொடர்பில் இந்தியா இமய மலையாலும் , சிந்து நதியாலும் தனிமைபடுத்தபட்டிருந்தது

இங்கு இருந்த மக்கள் தங்கள் மதத்தை தர்மம் என்றும், அறவழி என்று பெயரில் சைவம் வைணவம் பின்பற்றிகொண்டிருந்தனர்

பிரிவுகள் இருந்ததே தவிர மூல கொள்கையில் வழிபாட்டில் சிக்கலே இல்லை

அப்பக்கம் அதாவது சிந்து நதிக்கு அப்பக்கம் இருந்தவர்களுக்கு குறிப்பாக ஐரோப்பாவில் இருந்து வந்தவர்களுக்கு இவர்களை எப்படி அழைப்பது என சிக்கல் வந்தது

சிந்துநதிக்கு அப்பக்கம் இருப்பது (இதில் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும், சி என்பது அவர்களுக்கு ஹி என மாறும், அப்படித்தான் சிந்து இந்துநதி ஆனது, கிரேக்கர் அதை இன்டஸ் என்றே அழைத்தனர்

சில எழுத்துக்கள் அப்படி மாறும், ஜெருசலேம் இங்கு எருசலேம் ஆகும், யாழ்பாணம் ஜாப்னா ஆகும் , அப்படித்தான் சிந்து என்பது இந்து ஆனது, சிந்து மலை, சிவ மலை என்பதெலாம் இந்துகுஷ் மலை, இமயமலை என்றானது)

ஹிந்தஸ், இந்து , இந்தியா என்றானது இப்படித்தான்

அதாவது இந்து என்பது அந்நியர் சூட்டிய பெயர், அது நிலைத்துவிட்டது

உலகில் யார் தனக்கு சொந்த பெயர் சூட்டினார்கள்? எல்லா பெயர்களும் இன்னொருவரால் சூட்டபடுபவையே

சொந்தமாக பெயர் சூட்டுவதும், தனக்குதானே பட்டமளிப்பதும் திராவிட கட்சிகளின் கலாச்சாரம்

இங்கிருக்கும் நிலபரப்பும் அதில் வாழ்ந்த கலாச்சாரமும் இந்து எனும் பெயர் அன்னியனாலே அழைக்கபட்டது

இங்கு அது சைவம் வைணவம் என பல பிரிவுகளாக இருந்ததது, அந்நியர் மொத்தமாக இந்து என்றார்கள்

அதற்காக இந்து என்ற வார்த்தை சங்க இலக்கியத்தில் இல்லை அப்படி ஒரு மதமே இல்லை என்றால் எப்படி?

இதற்கெல்லாம் நன்றாக கேள்வி கேட்பவர்களின் காதை பிடித்து திருகி நாமும் கேட்டிருகின்றோம்

இந்த திராவிடம் என்பது எங்கே உண்டு? எந்த பண்டை இலக்கியங்களில் உண்டு

அட தமிழ்நாடு என்பதே எங்கே உண்டு? தமிழ் கூறும் நல்லுலகம் என சொன்னதே அன்றி தனி தமிழ்நாடு என எந்த இலக்கியம் சொல்லிற்று?

இங்கே சேர சோழ பாண்டி மன்னன், கடையேழு வள்ளல் நாடு என ஏகபட்ட நாடுகள் இருந்திருக்கின்றன‌

என்று இது திராவிட நாடு? தனிதமிழ் நாடு என இருந்தது?

இதை எல்லாம் கேட்டால் பதில் வராது, வரவே வராது

இந்து எனும் வார்த்தை அந்நியனால் இங்கிருக்கும் மதத்திற்கு சூட்டபட்டது, பல பிரிவுகளை கொண்ட மதம் ஒரே வார்த்தையில் அறிய அப்படி அழைக்கபட்டது

ஆனால் திராவிடம் என பெயர் சூட்டியவன் யார்? அதன் நோக்கம் என்ன? அப்பெயரால் இங்கு செய்யபடும் அரசியலுக்கு யார் மூலம் என்பதெல்லாம் சொல்லவே மாட்டார்கள்

அது முழுக்க தெரிந்தாலும் தெரியாதவர் போல் இருப்பார்கள், அவர்கள் அப்படித்தான்

தொன்மை வாய்ந்த இந்துக்களுக்கு பல அடையாளம் உண்டு, தொன்மை வாய்ந்த திராவிட அடையாளம் என ஒன்றை காட்டுங்கள் பார்க்கலாம்

மிக பெரும் அறிவாளி ஹாக்கின்ஸ்

ஐன்ஸ்டீனுக்கு அடுத்து மாபெரும் விஞ்ஞானி , மிக பெரும் அறிவாளி அவர். விண்வெளி ஆராய்ச்சி அவரின் பிடித்தமான விஷயம். இளம் வயதிலே டாக்டர் பட்டம் வாங்கிய ஹாக்கின்ஸ் 21 வயதில் மிக கடுமையான நரம்பு நோயினால் பாதிக்கபட்டார்

அதாவது கைகால் அசையாது, பேசமுடியாது கிட்டதட்ட பக்கவாத நிலை. என்ன செய்துவிட முடியும்? கிட்டதட்ட வசூல்ராஜா ஆனந்த் சார் போல சப்ஜெக்டாக அவர் வாழ்ந்திருக்க வேண்டும்

ஆனால் அவரின் அறிவினை பாழாக்க விரும்பா விஞ்ஞான சமூகம் அவருக்கு பிரத்யோக மெஷினை தயார் செய்தது, ஆம் விழி அசைவில் இயங்கும் கணிணி மூலம் உலகோடு பேச தொடங்கினார்

கவனியுங்கள், பேனா இல்லை பேப்பர் இல்லை, புத்தக குறிப்புகளுமில்லை ஆனால் அவர் தன் ஆராய்ச்சி முடிவினை கண்களால் சொன்னபொழுது உலகம் அதிர்ந்தது

குவாண்டம், காஸ்மோலாஜி, தெர்மல் என இவர் பல ஆராய்ச்சி முடிவுகளை சொல்ல சொல்ல பெரும் ஆச்சரியமாக பார்க்கபட்டார்

கருந்துளை ஆராய்ச்சி என்பது கருந்துளை எதையும் வெளியேற்றாது எல்லாவற்றையும் ஈர்க்கும் எனும் கருத்தோடு ஐன்ஸ்டீனே விடைபெற்ற பின், இல்லை கருந்துளையிலிருந்தும் சில கதிர்கள் வருகின்றன என ஆய்வுகளை சொன்னார், அது நிரூபணமும் ஆனது

அந்த கதிர்களுக்கு ஹாக்கின்ஸ் கதிர்கள் என்றே பெயரிட்டது விஞ்ஞான உலகம்

இவரின் இயற்பியல் கணிதத்தை எளிய முறையில் மாணவர்களுக்கு கற்பிக்கும் சூத்திரமான “காலம் ஒரு வரலாற்று சுருக்கம்” எனும் திட்டத்தை உலகம் ஏற்றுகொண்டது, அதற்காக அவருக்கு 6 மில்லியன் டாலர் பரிசும் கிடைத்தது

இது தமிழிலும் புத்தகமாக வந்தது

அவர் எழுதிய இரு புத்தகங்கள் A Brief History of Time, The Universe in a Nutshell விஞ்ஞான உலகின் புதிய ஏற்பாடாக கொண்டாபடுகின்றன‌

பாமரரும் படித்து புரிந்துகொள்ளும் அளவு எளிமையான மொழியும் அவருக்கு வந்தது, படியுங்கள் மிக எளிதாக விண்வெளி புரியும்

இவரின் முதல்மனைவி இவரை பற்றி எழுதிய “theory of everything” என்ற புத்தகம் சக்கை போடு போட்டு திரைபடமாக வந்தது

மாணவர்கள் முதல், ஹாலிவுட் டைரக்டர்கள், விஞ்ஞானிகள் என பலர் அவருக்காக எப்பொழுதும் காத்துகொண்டே இருந்தனர்

விண்வெளி ஆராய்சியினை தாண்டி வேற்றுகிரக மனிதர்கள் ஆய்விலும் இருந்தார். எல்லோரும் ஏலியன்ஸ் அப்படி இருப்பார்கள் இப்படி இருப்பார்கள் என சொன்னபொழுது ஹாக்கின்ஸின் ஆருடம் வேறுமாதிரி இருந்தது

அவர்கள் புழுவாக இருக்கலாம், பாக்டீரியாவாக இருக்கலாம், கண்ணுக்கு தெரிந்த தெரியா வடிவில் நம்மோடு இருக்கலாம், நம்மை போலவே இருக்க என்ன அவசியம் உண்டு என அவர் சொன்னது வேற்றுகிரகவாசி ஆராய்ச்சியில் புதிய கோணத்தை திறந்தது

வேற்றுகிரக வாசிகள் உண்டு என்பதையும் அவர்கள் எதனையோ தேடி அலைகின்றார்கள் என்பதையும், பின்னொரு நாளில் பூமி அவர்களால் ஆட்கொள்ளபடும் என்பதையும் சொல்லியிருக்கின்றார்

செயற்கை அறிவு எந்திரங்கள் பெருகுவது நல்லதல்ல ஒரு கட்டத்தில் அவை மனிதனையே கட்டுபடுத்தும் நிலைக்கு செல்லும் என சொன்னதும் அவரே.

இவரின் ஆராய்சி முடிவுகள் எல்லாம் சிலிர்ப்பூட்டுபவை, பெரும் ஆச்சரியமானவை

கண்களை தவிர ஏதும் அசைக்கமுடியா மனிதனா இவ்வளவு விஷயங்களை கொடுத்தான் என நம்பவே முடியாத அதிசயம் அவர்

எல்லோரும் போல அவர் நலமாக இருந்தால் எவ்வளவு கொடுத்திருப்பார் என பலர் யோசிக்க, இதுகாலம் காத்து இவ்வளவாவது பெற்றோமே என கண்களை துடைகின்றது விஞ்ஞான உலகம்

விஞஞானிகள் ஒவ்வொரு முடிச்சையும் விட்டு செல்வார்கள், அதனை இன்னொரு விஞ்ஞானி வந்து அவிழ்ப்பார், இந்த சங்கிலி தொடரால்தான் இவ்வுலகம் இவ்வளவு மாற்றங்களை பெற்றது

அப்படி கலிலியோ, கோபர் நிக்கஸ், நியூட்டன், ஐன்ஸ்டீன் வரிசையில் வந்தவர் ஹாக்கின்ஸ். விண்வெளி இயற்பியல், குவாண்டம், காஸ்மோலாஜி என பல துறைகளை எங்கோ இழுத்து நிறுத்திவிட்டு மறைந்திருக்கின்றார்

இனி வரும் விஞ்ஞானிகள் அதிலிருந்து இன்னும் உயர்த்துவார்கள்

உடலால் சுத்தமாக முடியாதபோதும், வானத்தை ஏறெடுத்து கூட பார்க்கமுடியா நிலையிலும் விண்வெளி ஆய்வுகளை மகத்தான முறையில் வெற்றியாக்கிய அந்த ஸ்டீபன் ஹாக்கின்ஸ் எனும் அசாத்திய மனிதருக்கு இன்று முதலாம் நினைவு நாள்

ஹிக்கின்ஸின் கோட்பாடு இன்றி இனி அமையாது பல ஆராய்ச்சிகள்.

விஞ்ஞானி மட்டுமல்ல , உடற்பேறு குறந்தோருக்கெல்லாம் மாபெரும் தன்னம்பிக்கை எடுத்துகாட்டு

உடலால் பழுதின்றி வாழும் காலத்திலே சுயநலமாக வாழ்ந்துவிட்டு, பலர் வாழ்வினை அழித்த்துவிட்டு செல்லும் உலகில், தலையினை கூட அசைக்கமுடியா நிலையிலும் பல்வேறு விண்வெளி ரகசியங்களை சொல்லிவிட்டு சென்ற அந்த ஹாக்கின்ஸ் விஞ்ஞான உலகின் தலைசிறந்த, தனித்து நிற்கும் ஒரே விஞ்ஞானி

அந்த மாபெரும் விஞ்ஞானிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள், 21 வயதிலே முடிந்திருக்கவேண்டிய அவரின் ஆராய்சியினை 78 வயதுவரை நீட்டித்த அந்த மேற்குலக விஞ்ஞானிகளுக்கும் நன்றிகள்.

நாம் அழுத்தமாக சொல்கின்றோம்

நாம் அழுத்தமாக சொல்கின்றோம்

இது இந்துக்களின் நாடு, காலம் காலமாக அவர்கள் பெரும்பான்மையாக தொன்றுதொட்டு வாழும் ஒரே நாடு, உலகில் இந்து அடையாளங்களும் அதன் அபூர்வமான தத்துவ கோட்பாடுகளும் நிலைத்துவாழும் ஒரே நாடு

அந்த ஜெருசலேமினையும் யூத ஆலயத்தையும் எடுத்துவிட்டால் அதில் என்ன இருக்கின்றது? அது வெறும் பூமி என சொல்லும் யூதரை போல, இந்து மதம் என்ற ஒன்றை எடுத்துவிட்டால் இந்தியாவில் என்ன உண்டு?

இந்நாட்டின் மாபெரும் அடையாளம் அம்மதமும் அதன் பாரம்பரியமும், அது நிச்சயம் காக்கபட வேண்டும்

அதில் சந்தேகமில்லை, அந்த இந்து மக்களும் இந்துமா கடல் போல் பெரும் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள் என்பதில் சந்தேகமில்லை

அவர்களின் மிகபெரும் அமைதியான சுபாவத்தாலும், இந்நாட்டின் அமைதி அவர்கள் கையில் இருப்பதை அறிந்து தேசநலன் காப்பதில் அமைதியாய் இருப்பதாலுமே இத்தேசம் அமைதியாய் இயங்குகின்றது

இந்துமதம் போலவே மிக மிக பரந்த பெருந்தன்மையான மனம் கொண்டவர்கள அவர்கள்

அவர்கள் மதமும் மிக மிக அமைதியான, சுதந்திரமான , யாரையும் காயபடுத்தா மதம்

ஆனால் அதிலும் மிக குறுகிய மனமுள்ளோர் இருக்கின்றார்கள், மிக மூர்க்கமான ஐ.எஸ் இயக்கத்தைவிட கொடியவர்களும் இருக்கின்றார்கள்

அவர்கள்தான் இல்லா பொய்களை வெறுப்புகளை மற்ற மதம் மேல் திணிக்கின்றார்கள்

கற்பழிப்பினை இஸ்லாமும் கிறிஸ்தவமுமே உலகிற்கு சொன்னது என அவர்கள் சொல்லபோக நாமும் சிலவற்றை எழுதினோம்

அது காமத்தை வாழ்வின் ஒரு அங்கமாக இந்துமதம் சொன்னதை, மிக புனிதமாக சொன்னதைத்தான் நாமும் சொன்னோம்

கோவிலில் எரிந்தால் அது தீபம், சுடுகாட்டில் எரிந்தால் அது வேறு

இங்கு பொள்ள்ளாச்சியில் பிடிபட்டிருப்பதும் சுடுகாட்டு தீ வெறியர்கள்

அவர்களை பழிப்பதாக நினைத்து இஸ்லாமும் கிறிஸ்தவனுமே இத்தேசத்தில் கற்பழிப்பினை கொண்டுவந்தான் என்றால் எங்கணம் நியாயம்?

அதைத்தான் சாடினோம், மகாபாரதத்திலும் ராமாயணத்திலும் பெண்களை அவமானபடுதியோர் எப்படி அழிந்தார்கள் என சொல்லத்தான் விழைந்தோம்

வாலி எனும் மாவீரனே பெண்ணை தொட்டதால் அழிந்தான்

அதாவது கற்பழிப்பு விஷயங்கள் எல்லா மதத்திலும் இனத்திலும் உண்டு, அதன் கொடூர விளைவுகளையும் அவை சொல்ல தவறவில்லை

இதைத்தான் சொன்னோமே தவிர ராமனையும் கண்ணணையும் இந்துமதத்தையும் இழிவுபடுத்தி எதையும் சொல்லவில்லை

சொல்ல போவதுமில்லை

எம்மைபற்றி தெரிந்தவர்களுக்கு சொல்ல ஒன்றுமில்லை, எம் இந்துமத அபிமானம் அவர்கள் அறிந்தது

அறியோதோர் பலர் திட்டிகொண்டிருக்கின்றனர், அவர்களுக்கு இவ்வளவுதான் சொல்லமுடியும்

இவனை பெற்ற அன்னை பரிதாபத்திற்குரியர்

மூடர் முனிதக்க சொல்லுங்கால், – கேடருஞ்சீர்ச்
சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரை
ஈன்றாட்கு இறப்பப் பரிந்து.

அதாவது ஒருவன் செய்யகூடாத செயலை செய்யும் பொழுது அவனை காண்போர், “இவனை பெற்ற அன்னை பரிதாபத்திற்குரியர்” என சொல்வர்

உலக இயல்பு அதுதான்

அந்த அற்புதம்மாள் வரிசையில் பொள்ளாச்சி திருநாவுக்கரசு தாயாரும் சேர்ந்துவிட்டதுதான் சோகம்

மிக வலுவான ஆதாரங்களுடன் அவன் சிக்கிவிட்டபின்பும் இன்னும் என்மகன் குற்றமற்றவன் என தாய்பாசத்தில் அந்த அன்னை அழும்பொழுது பரிதாபம் தவிர ஏதும் மிஞ்சவில்லை