கரும்பு விவசாயி சின்னமாம்

மெழுவர்த்தி சின்னம் பிடுங்கபட்டு அங்கிள் சைமன் கட்சி இருட்டில் தள்ளபட்டது, விடுவாரா சைமன் இப்பொழுது புதிய சின்னத்தை வாங்கிவிட்டார்

அது கரும்பு விவசாயி சின்னமாம்

இவர்கள்தான் கரும்பு விவசாயம் சரியில்லை, சீனி சரியில்லை , மாட்டு எலும்பெல்லாம் கலக்கின்றார்கள். நாங்கள் ஒரு செடியின் விதையிலிருந்து இயற்கை சர்க்கரை தயாரிப்போம், பனங்க் கருப்பட்டி எனும் இயற்கை சர்க்கரை கொடுப்போம் என என்னவெல்லாமோ சொன்னார்கள்

ஆனால் விதி மறுபடி கரும்பு வடிவிலே வந்திருக்கின்றது, இனி என்னாகும்?

அங்கிள் சைமன் கோஷ்டி கையில் கரும்புடன் சுற்றும், அவர்கள் சுற்றலாம் ஆனால் பார்க்க எப்படி இருக்கும்?

பட்டினத்தார் போலவே இருக்கும்

பட்டினத்தார் கையில் கரும்பு வைத்திருப்பார், வாழ்க்கையின் தொடக்கம் இனிமை முடிவு கசப்பு என சொல்லும் தத்துவமாம் அது

இப்பொழுது அங்கிள் சைமனுக்கும் கையில் கரும்பு கொடுத்தாயிற்று, கிட்டதட்ட சைமனுக்கும் அதே தத்துவம் பொருந்துவதுதான் ஆச்சரியம்

அரசியல் முதலில் இனிப்பு போக போக கசப்பு

எவ்வளவு அழகாக பட்டினத்தாரின் தத்துவ கரும்பை அங்கிள் சைமனுக்கு கொடுத்துவிட்டார்கள்?, தேர்தல் கமிஷனிலும் மகா குசும்பர்கள் இருப்பார்கள் போல‌

ஆக இனி தமிழகத்தில் புதிய பட்டினத்தாராக அங்கிள் சைமன் கையில் கரும்போடு வருவார்

“இது தமிழ் கரும்பு, நீ தமிழன் என்றால் அதை விரும்பு” , “இருப்பாய் தமிழா கரும்பாய்” போன்ற வசனங்களுடன் இனி தும்பிகள் பாய்ந்து வரும்.

இப்பொழுது அங்கிளுக்கு சிக்கல் என்னவென்றால் சின்னம் கிடைத்துவிட்டது, ஆனால் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்தான் கிடைக்கவில்லை

(ஒன்றை கவனித்தீர்களா? இப்பொழுதெல்லாம் அங்கிளின் கட்சி சின்னங்களில் புலி வருவதில்லை, அவர் அண்ணனும் வருவதில்லை)

கள்ளழகர் திருவிழா

கள்ளழகர் திருவிழா நிச்சயம் மதுரைக்கு மட்டுமான திருவிழா அல்ல‌

கிட்டதட்ட 5 மாவட்ட மக்கள் திரளும் பெருவிழா, தென் தமிழகத்தின் மாபெரும் கொண்டாட்டங்களில் ஒன்று, பல லட்சம் மக்கள் கூடும் பெருவிழா அது

அலகாபாத் கும்பமேளா என்றால் அங்கு அன்று தேர்தல் நடத்தபடுமா? காசியில் விழா என்றால் நடத்துவார்களா?

நிச்சயம் இல்லை, வடக்கே ஒரு நியாயம் தெற்கே ஒரு நியாயம் என்பதெல்லாம் சரியல்ல‌

அந்த தேர்தலை கொஞ்சம் முன்னரோ இல்லை பின்னரோ மாற்றினால் மக்களுக்கு இரு திருவிழாக்களையும் உற்சாகமாக கொண்டாட வாய்ப்பு கிடைக்கும்

அப்படியே திருவிழா செலவுக்கு தாங்க முடியாமல் தவிக்கும் மக்களுக்கு வழி பிறந்தது போலவும் இருக்கும்

நியூசிலாந்து துப்பாக்கி சூடு

நியூசிலாந்து துப்பாக்கி சூடு பற்றி பலத்த சர்ச்சை வருகின்றது, இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்லமுடியும்

மசூதியினை தாக்கியிருகின்றார்கள், பல இஸ்லாமியர் கொல்லபட்டிருக்கின்றார்கள்

இப்போதைய இறந்தோர் எண்ணிக்கை 30

இது வேறு ஏதும் தகறாறா? இல்லை மத ரீதியான தாக்குதலா என்பதை நியூசிலாந்து இன்னும் சொல்லவில்லை மாறாக கைது செய்யபட்டவன் ஒரு ஆஸ்திரேலியன் என்றுமட்டும் சொல்லிகொள்கின்றது

அவர்கள் சொல்லவருவது என்னவென்றால் இது வெளிநாட்டு தீவிரவாதிகள் அல்ல, ஆஸ்திரேலியன் ஆஸ்திரேலியன் என திரும்ப திரும்ப சொல்கின்றது

நியூசிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் அவ்வளவு பொருந்தாது என்பது அங்குள்ள அரசியல்

விஷயம் வேறு எங்கோ செல்கின்றது, உளவுதுறை ஆட்டமாக கூட இருக்கலாம்

இது ஏதோ ஆஸ்திரேலிய கிறிஸ்தவ அல்லது வேறு ஏதோ ஒரு அரைமெண்டல்கள் செய்திருப்பதாகவே கருதபடுகின்றது

முழு விவரமும் இன்னும் வரவில்லை

இது பொதுவாக வெளிநாடுகளில் தாக்கும் ஐ.எஸ் , அல் கய்தா போன்ற இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல் இல்லை என்பது மட்டும் உறுதிபடுத்தபட்டிருக்கின்றது

கருப்பு எம்ஜிஆர்

விஜயகாந்த் பிரசாரத்துக்கு வருவார், ஆனால் பேசமாட்டார்- சுதீஷ்

ஆக கருப்பு எம்ஜிஆர் முன்பொரு காலத்தில் அந்த எம்ஜிஆர் எப்படி இருந்தாரோ அந்த நிலைக்கு சென்றுவிட்டார்

என்ன ராசியோ தெரியவில்லை

சின்ன எம்ஜிஆர் கம்பி எண்ணிகொண்டிருக்கின்றார், கருப்பு எம்ஜிஆர் பேசமுடியாமல் ஆகிவிட்டார்

இன்னும் பல அழிச்சாட்டிய எம்ஜிஆர்களை காணவே இல்லை, அவர்களும் செத்திருக்கலாம்

அந்த மனிதரின் பெயர் ராசி அப்படி போலிருக்கின்றது

சங்கத்து சாபம் சும்மா விடாது

இந்த மார்ச் 15 ஒரு நாசமாய் போன நாள், கருப்பு நாள், கலங்க வைத்த நாள்

ஆம் அன்றொருநாள் இதே நாளில்தான் ஜூலியஸ் சீசர் எனும் பெரும் சாகசக்காரன் தான் நம்பியவர்களால் கொல்லபட்டிருக்கின்றான்

ஐரோப்பாவின் நவீன நாகரிகத்தை அவனே தொடங்கி வைத்தான், இன்றளவும் ஐரோப்பாவின் அரச அமைப்பும் பல விஷயமும் அவனையே பின்பற்றுகின்றன‌

அந்த மாபெரும் பராக்கிரமசாலி வீழ்த்தபட்டான், அவனை நம்ப வைத்து உடனிருந்தவர்களே கொன்றனர்

முதல் இரு வெட்டு முதுகில் விழுந்ததும் நண்பர் புரூட்டஸிடம் ஓடினான், அந்த சண்டாளன் வாளை பாய்ச்சினான்

நீயுமா புரூட்டஸ்.. என சொல்லி சரிந்தான் சீசர், அவன் மனம் முதல் செத்தது, உடல் பின்புதான் செத்தது

நல்லவர்களும் வல்லவர்களும் தாங்கள் நம்பியவர்களாலே ஏமாற்றபட்டனர் என்பது வரலாறு, இயேசுபிரான் கொலை வரை அதுதான் நடந்தது

அந்த விதிக்கு குஷ்புவும் தப்பவில்லை

புரூட்டஸ் நீயுமா? என்பதை ராகுல் நீருமா? என சங்கம் உரக்க கேட்கின்றது

ஜூலியஸ் சீசர் கொல்லபட்ட நாளிலே தலைவிக்கு நிகழ்ந்த இந்த மாபெரும் அநியாயம் கண்டு உலகமே தலை குனிந்து நிற்கின்றது

அலங்கார தேர் ஊர்வலம் வரவில்லை என்றால் அது என்ன திருவிழா? வெற்று கும்பல் கூட்டது

எப்படியும் போகட்டும், எல்லாம் நாசமாய் போகட்டும்..

தேர்தலும் மண்ணாங்கட்டியும் மண்ணாய் போகட்டும் , சங்கத்து சாபம் சும்மா விடாது

உலகில் மறுபடியும் பரபரப்பு

மிக அமைதியான நாடு நியூசிலாந்து, பெரும் வம்பு சண்டைக்கு எல்லாம் செல்லாது ஆனால் மனிதாபிமான விஷயங்களுக்கு பாடுபடும் ஒரு நல்ல நாடு

அந்த நாட்டையும் சண்டாள தீவிரவாதம் விட்டுவைக்கவில்லை, இன்று அங்கும் துப்பாக்கி சூடு நடந்திருக்கின்றது

முதல் தீவிரவாத தாக்குதலை தன் நாட்டில் எதிர்கொண்டிருகின்றது நியூசிலாந்து

உலகில் மறுபடியும் பரபரப்பு தொற்றிகொண்டிருக்கின்றது

சீனா விவகாரம்

சீனா விவகாரத்தில் ராகுல் மோடியினை சீண்ட, மோடி கும்பல் ராகுலை இழுத்து வைத்து கேள்வி கேட்கின்றது

என்ன கேட்கின்றார்கள், “சீனாவிற்கு ஐநா சபையில் அந்தஸ்து வாங்கி கொடுத்ததே நேருதானே, அவர்தான் சிக்கலுக்கு முழு காரணம்” என பொங்க தொடங்கிவிட்டார்கள்

எல்லா சிக்கலுக்கும் அந்த காலகட்டத்தை பார்க்க வேண்டும், கோரி முகமது காலத்தில் ஏன் மிராஜ் விமானங்கள் பாவிக்கபடவில்லை என்றால் அது அர்த்தமற்றது

அக்காலம் கொடுமையானது, இந்தியா சுதந்திரமடைந்த புதிது, வறுமையும் இன்னும் ஏராளமான சவால்களும் இங்கு இருந்தன‌

உலகமோ இரு துருவமாக இருந்தது அமெரிக்க முகாமும் சோவியத் முகாமும் உலகெல்லாம் மோதிகொண்டிருந்தன‌

நேரு அமைதிவழி கண்டார், அணிசேரா நாடுகள் என ஒன்றை ஏற்படுத்தி புதுவழிகாட்டினார்

ஐநா சபையில் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கமே இருந்தது, ஆசியாவில் ஐரோப்பாவுக்கு சவால்விடும் ஒரே நாடான ஜப்பான் வலுவாக இல்லை

இந்தியாவுக்கு நிரந்தர அந்தஸ்து கொடுக்க பிரிட்டன் தயாராக இல்லை, தன் அடிமை நாடு தனக்கு சரிக்கு சரி அமருவதை பிரிட்டன் ரசிக்கவில்லை

அன்று ஆசியாவில் சீனா ஒன்றே தேர்வாக இருந்தது, ஐநாவில் ஆசிய குரல் ஒலிக்கவேண்டும் என்ற ஒரேநோக்கிலே நேரு சீனாவுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்கபட வேண்டும் என கோரினார்

மாவோ உருவாக்கிய சீனா மேல் , அந்த சமதர்ம பூமி மேல் நேருவுக்கு நம்பிக்கை இருந்தது

ஆசியாவின் இருபெரும் சக்திகளான இருநாடுகளும் ஒற்றுமையாக இருந்தால் உலக அரசியலில் பல அனுகூலங்களை ஆசியா பெறும் என கணக்கிட்டார்

நேருவின் அந்த கணக்கில் உண்மையும் இருந்தது, சீனா இடம்பெறாவிட்டால் ஐநா சபை ஐரோப்பிய நாடுகளின் ஏக போக கூடாரமாக மாறியிருக்க்கும்

இந்திய சீன சிக்கல் திபெத்தை சீனா பிடித்ததில் இருந்து தொடங்கிற்று

அவர்கள் சொன்னதிலும் நியாயம் இருந்தது, திபெத் சீன மன்னனுக்கு கட்டுபட்ட நாடாகவே இருந்தது, அந்நாளில் அவர்களை தனிநாடு என சொல்லி சீனாவுக்கு எதிராக திரட்டிவிட்டவர்கள் பிரிட்டிசார்

நோஞ்சான சீனா அதை பொறுத்துகொண்டது, மாவோவின் சீனா அது எங்கள் பகுதி என மல்லுக்கு நின்றது

அப்படித்தான் அது திபெத்தை விழுங்க , ஒரு மனிதாபிமான உதவியினை இந்தியா தலாய்லாமாவிற்கு செய்ய போக எழுந்த சிக்கல் உண்டானது

தலாய்லாமா வருகையும் அவரை ஒப்படைக்காத இந்திய நிலைப்பாடும் மாவோவுக்கு வெறுப்பை கொடுத்தன‌

திபெத்தில் தன் கட்டுபாட்டில் இருக்கும் புத்தமதம், அருணாச்ல் பிரதேசத்தில் கட்டுபாடின்றி வளரும் அது தன் கம்யூனிச அரசுக்கு ஆபத்து என கணக்கிட்டார் மாவோ

நேருவோ சோவியத் போன்ற நாட்டை மீறி சீனா வராது என கணக்கிட்டார்

ஆனால் கியூப எல்லையில் ரஷ்யாவும் கென்னடியும் சீறி நிற்க இடம்பார்த்து போர் தொடுத்தான் மாவோ

நேரு அதை எதிர்ப்பார்க்கவில்லை, விவகாரம் இன்றுவரை தொடர்கின்றது

நிச்சயம் நேருவின் கனவு பெரிது அவரின் பெருந்தன்மை மிகபெரிது

சீனாவுக்கோ தலாய்லாமாவினை ஒப்படைக்கா இந்தியா தன் நாட்டு அரசுக்கு எதிரானவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கின்றது என்ற ரீதியில் இந்தியாவினை பகைமையாக கருதிற்று

ஒரு மனிதாபிமான உதவியினை தலாய்லாமாவிற்கு செய்ய போக எழுந்த சிக்கல் இது

இப்பொழுது மசூத் அசார் விவகாரத்தை கையில் எடுத்து தலாய்லாமாவிற்கு இந்தியா அடைக்கலம் கொடுத்த விஷயத்தை கிள்ளிகாட்டுகின்றது சைனா

இது வேறுவகை அரசியல்

ஆனால் வர்த்தக ரீதியாக இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதே ஐரோப்பிய ஏகபோக அரசியலுக்கு அடிகொடுக்க்கும் என்ற ஜாக்கிரதை உணர்வும் சீனாவுக்கு உண்டு

இதெல்லாம் வேறுவகையான கணக்குகள், சீனாவால் இந்தியாவினை முழுக்க பகைக்கவும் முடியாது, திபெத் சிக்கலால் முழுக்க நெருங்கவும் முடியாது

இந்திய இலங்கை உறவு எப்படியோ அப்படியே

ஆயினும் நேரு அக்காலகட்டத்தில் செய்த விஷயம் இந்திய நலனை தாண்டி ஆசிய நலன் அளவில் இருந்தது

இதனால்தான் அவர் ஆசியஜோதி என அறியபட்டார்

ஒருநாளும் அவர் சிறியன சிந்தித்ததே இல்லை, அக்காலகட்டத்திற்கு எது சரியோ அதை செய்தார்

தலாய்லாமாவுக்கு கைகொடுக்க போய் சீன யுத்தம் வந்து அதில் ஆர்.எஸ்.எஸ் நாட்டுபற்றோடு சில விஷயங்களை செய்தது

அதன் பின் நேருவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கை குலுக்கினார்கள்

ஆம் மனம்விட்டு அவர்களை பாராட்டினார் நேரு, ஆம் காந்தி கொலையினை தொடர்ந்து அவர்களை தடை செய்த அதே நேரு

நேருவின் பெருந்தன்மை என்பது இதுதான்

அதனால் உறுதியாக சொல்வோம், நமக்குள் ஆயிரம் அரசியல் இருக்கலாம்

சீனாவினை எல்லோரும் சேர்ந்து எதிப்பதுதான் சரி

இதில் நேரு சரியில்லை, மோடி சரியில்லை என்பது வாதத்திற்கே வராது

ராகுல் இந்த விஷயத்தில் மோடியினை சாடியது தவறு, நிச்சயம் பெரும் தவறு, அப்படி பாஜகவினரும் நேருவினை இழுப்பது சரியல்ல‌

நேருவின் கணக்கு அந்நாளில் சரி, அவர் பெருந்தன்மையும் அப்படி

அன்று நேரு செய்ததைத்தான் இன்று மோடியும் செய்கின்றார், சீனாவுடன் அதே நிலைப்பாடு .

இரண்டாம் நேருவான ராகுல் இனி கொஞ்சம் நிதானிக்கட்டும், தேசத்திற்கு அதுதான் நல்லது