பூமி அதிர்ச்சியினை விட கொடிய அதிர்ச்சி

நேற்று காலை பூமி அதிர்ச்சியினை விட கொடிய அதிர்ச்சி நடந்தது, விஷயம் இப்பொழுதுதான் வெளிவருகின்றது

ஆம் நேற்று காலை முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் சில சமூக ஊடகங்கள் இயங்கவில்லை, அதற்கு முன்பே வாட்சப்பில் சிக்கல் என்கின்றார்கள், நாம் அதிகாலை கனவில் தலைவி குஷ்பு பிரதமராக பதிவியேற்கும் வைபவத்தில் இருந்ததால் அது தெரியவில்லை

ஆனால் முகநூலில் உணர்ந்தோம், நுழையமுடியவில்லை இன்னும் பலர் முகத்தில் சாணியடித்தது போல் அலைந்தார்கள் அட்மின் அங்கும் இங்கும் ஓடிகொண்டிருந்தான், எல்லோர் முகத்திலும் கவலையின் ரேகைகள், ஆயிரம் கப்பல் தங்கத்துடன் மூழ்கினாலும் அப்படி ஒரு கவலை இருந்திருக்காது

நமக்கு முதலில் சிக்கல் புரியவில்லை, ஏதோ ஒரு சங்கி நம் பக்கத்தை முடக்கிவிட்டது என்ற சோகம் அப்பியது

முகநூலை விடுங்கள் அது ஒன்றுமில்லை சிறையில் இருப்பவன் ஓவியம் வரைகின்றேன் அவ்வளவுதான், ஆனால் டிவிட்டரும் இன்ஸ்டாகிராமும் இல்லை என்றால் தலைவி குஷ்புவின் தரிசனமும் குரலும் எங்கிருந்து கிடைக்கும்?

அந்த வாழ்வு நரகம் அல்லவா?

அந்த கிரகண நேரம் மறைந்தபின் பக்கத்து சீட்டில் இருந்த மஞ்சள் மங்கையின் இடுங்கிய கண்கள் ரேஷன் அரிசி போன்ற மஞ்சள் பற்களுடன் சிரித்த பொழுது ஏதோ தோன்றியது, ஆம் அதன் பின் பார்த்தால் முகநூல் திறந்தது

கிட்டதட்ட 4 மணிநேரம் முகநூல் இன்ஸ்டாகிராம் எல்லாம் செயல்படவில்லை, இப்படி சொல்லிவிடலாம் ஆனால் விஷயம் உலகை கலக்கியிருக்கின்றது

பெரும் முதலீட்டாளர்கள் அலறியிருகின்றார்கள், பங்குசந்தைகள் சட்டென சரிந்திருக்கின்றன, உலகெங்கும் பெரும் குழப்பமும் சர்ச்சைகளும் வந்திருக்கின்றன‌

நிலமை சரியானபின் கொஞ்சம் மூச்சுவிட்டிருக்கின்றது உலகம்

ஆம் இன்றைய உலகில் மின்சாரம், பெட்ரோலை விட இந்த சமூக ஊடகங்கள் மகா அத்தியாவசிய தேவையாகிவிட்டதை உலகம் உணர்ந்திருகின்றது

அலாவுதீன் பூதம் போன்றது இவைகள் செய்திகளை மட்டுமல்ல வியாபாரம், தகவல் தொடர்பு என பலவற்றிற்கு இவை தான் இனி ரத்த நாளம்

சமூக ஊடகங்களின் பலம் என்னவென்று சிலமணிதுளிகளில் கண்டுகொண்ட உலகம் இனி அந்த கொஞ்ச தடங்கலும் இனி வரக்கூடாது என்ற மாபெரும் சூளுரையினை எடுத்திருக்கின்றது..

// இந்த சமூக வளைதள சிக்கலில் உலகமே சிக்கியபொழுது இந்தியாவில் ஒருவரிடம் தொடர்பு கொண்டு கேட்டோம், அவர் சொன்னார் “பொள்ளாச்சி பெண்கள் விவகாரம் தெரியுமல்லவா, இனி எந்த பெண்ணும் ஏமாற கூடாது என மோடி தடை செய்துவிட்டார். இதெற்கெல்லாம் பெரிய தைரியம் வேணும் சார்

மோடி சார், கெத்து சார்.

எப்படி கொடுத்தார் பார்த்தீர்களா பெண்களுக்கு பாதுகாப்பு, மோடின்னா சும்மா இல்ல சார்.” //

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s