சமூக நீதி?

இந்த தேர்தலில் 7 தனி தொகுதிகள் உண்டாம், அதாவது தலித் வேட்பாளர்கள் மட்டும்தான் அதில் நிற்கலமாம்

சரி மீதி உள்ள 32 தொகுதிகளின் நிலை என்ன என்றால் அதிலும் தலித் வேட்பாளர்கள் தடையின்றி நிற்கலமாம்

சில விஷயங்களை நோக்கினால் ஸ்மார்ட் போனை கண்ட சிவகுமார் போல் கோபம் வரத்தான் செய்கின்றது

ஆனால் இதை எல்லாம் பற்றி பேசினால் சமூக நீதிக்கு எதிரான சதிகாரன் ஆகிவிடுவோம்

என்ன செய்தது?

ஈழதமிழர்கள் கொல்லபடும் பொழுது பாஜக என்ன செய்தது :அங்கிள் சைமன்

வாய்யா வாய்யா.. ஒரு கட்சி விடாமல் அடிவாங்க வேண்டும் அப்படித்தானே

1987ல் கலைஞரின் டெசோவில் வாஜ்பாயும் இருந்தார், பிரபாகரன் சகோதர கொலைகளில் , தமிழ் போராளிகுழுக்களை கொல்ல தொடங்கிய பொழுது இனி ஈழமும் உருப்படாது பிரபாகரன் லட்சகணக்கானோரை சாகடிக்காமல் போகமாட்டான் என சொல்லிவிட்டு ஒதுங்கியவர் வாஜ்பாய்

ஆம் பாஜகவும் ஒரு காலத்தில் ஈழதமிழருக்கு ஆதரவாக இருந்தது, அதை கெடுத்தவன் உங்கள் அண்ணன் பிரபாகரன்

தென்னக தொகுதிகள் – பா.ஜ.க

கன்னியாகுமரி, சிவகங்கை, துத்துக்குடி ராமநாதபுரம் என தென்னக தொகுதிகளை குறிவைத்து நிற்கின்றது பாஜக‌

கன்னியாகுமரி, சிவகங்கை, தூத்துகுடிக்கு வேட்பாளர்கள் தெரிவாகிவிட்டது, அதில் சிவகங்கையிலும் தூத்துகுடியிலும் அக்கட்சி டெப்பாசிட் இழப்பதும் உறுதியாகிவிட்டது

கோவையிலும், குமரியிலும் அவர்கள் வெல்ல வாய்ப்பு உண்டு

சரி இந்த ராமநாதபுரத்தில் நிறக போவது யார்? எல்லா தலைவர்களும் வந்தபின் யார் மீதி இருக்கின்றார்கள்?

எமது ஊகம் சரியாக இருந்தால் நயினார் நாகேந்திரன் அந்த ராமநாதபுரத்தில் நிற்கலாம்

சாதி, பணம் , பக்தி என பல விஷயங்கள் அவருக்கு சாதகமானவை என்பதால் அவரே தேர்வாக இருக்கலாம்

1990களில் வளர ஆரம்பித்தவர் நயினார் நாகேந்திரன், ஆரம்பத்தில் அவரின் தொழில்கள் நாகர்கோவில் பக்கமே இருந்தது

அதுவும் பணகுடி பக்கம் இருந்து நெல்லைக்கு அவர் குடிபெயர்ந்தபின் பெரும் உயரத்திற்கு சென்றார்

இப்பொழுது நெல்லையிலிருந்து ராமநாதபுரத்திற்கு கிளம்புகின்றார் அன்னார்

இன வெறி பயங்கரவாதம்

நியூசிலாந்து பயங்கரவாத தாக்குதலில் ஒரே ஒருவனை மட்டும் குற்றவாளி என அறிவிக்கின்றார்கள், மீதி 20 பேரும் விடுதலையாம்

என்ன காரணத்திற்காக சண்டாளன் சுட்டிருக்கின்றான் என்றால் இது “இனவெறி பயங்கரவாதம்”

ஆம் கருப்பர்கள் கொல்லபட வேண்டியவர்கள், வெள்ளையர்கள் ஆளபிறந்தவர்கள் எனும் அந்த பழைய வெறியில் ஊறியவன் அந்த வெறியிலே சுட்டிருகின்றான்

இவ்வளவிற்கும் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் குடியேற்ற நாடுகள். வெள்ளையருக்கு என்ன உரிமையோ அது மற்ற இனங்களுக்கும் உண்டு

ஆனால் ஆளபிறந்த குணம் கொண்டவர்கள் அல்லவா? சுட்டுவிட்டார்கள்

இந்த இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதெல்லாம் உண்மையில் தீவிரவாதமே அல்ல, 1950க்கு முன் எந்த இஸ்லாமிய இயக்கம் இருந்தது

பாலஸ்தீன் விடுதலையொட்டியே இயக்கங்கள் வந்தன அதில் நியாயம் இருந்தது

அதன்பின் கொடூர இயக்கங்கள் ஆப்கனில் ரஷ்யாவினை விரட்ட அமெரிக்காவால் உருவாக்கபட்டவை, அதன் பின் எண்ணெய் அரசியலுக்காகவும் இந்தியா போன்ற நாடுகளை அச்சுறுத்தவும் சிலரால் இந்த கொடூர தீவிரவாதம் இஸ்லாமியம் எனும் அடைமொழியால் வளர்க்கபடுகின்றது

மற்றபடி இஸ்லாமியரால் அச்சுறுத்தல் இல்லை

இந்த சர்ச்சைகளை விட கொடுமையானது இனவெறி, அது ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்ரிக்கா என சுற்றிகொண்டிருந்தது, சமீபகால செயதிகளால் அது அடக்கபட்டிருந்தது

அது இன்னும் உலகில் விடைபெறவில்லை மகா கொடூரமாக சுத்திகொண்டிருக்கின்றது என்பதற்கு இச்சம்பவமே சாட்சி

இது ஓயாது, அவர்கள் அப்படித்தான்

ஆசியர்கள் எல்லோரும் அவர்களுக்கு கருப்பர்கள்தான், இரண்டாம்தரமே

அவர்களை எதிர்க்க ஆசியாவில் மிகபெரும் சக்தி தேவை, இதனால்தான் அன்றே சீனாவினை ஆதரித்தார் நேரு

ஆம், உலக அரசியலில் பல கோணங்கள் உண்டு. அது அங்கிள் சைமனின் தும்பிகளுக்கு தெரியாதது போலவே இந்த சங்கிகளுக்கும் சுத்தமாக தெரியவில்லை

எல்லாவற்றிற்கும் எல்லை உண்டு

எல்லாவற்றிற்கும் எல்லை உண்டு, அதை மீறினால் சிக்கல்தான்

தன் எல்லையினை மீறிய அலெக்ஸாண்டர் 33 வயதிலே செத்தான், ஜெர்மனிக்கு மன்னனாக வாழ்ந்திருக்க வேண்டிய ஹிட்லர் எல்லை மீறி ரஷ்யாவிடம் அடிவாங்கி செத்தான்

ஏன் மெரினா புரட்சியே ஜல்லிகட்டுக்கு அனுமதி வழங்கியபின்னும் இளநீர், மோர் இன்னும் என்னென்னமோ சொல்லி திசைமாறி வன்முறையாய் முடிந்தது

இந்த பொள்ளாச்சி விவகாரமும் அப்படித்தான்

அறிவுமயங்கி இல்லை அஞ்சி இல்லை ஏதோ ஒரு நெருக்கடியில் அந்த கயவர்களிடம் பெண்கள் சிக்கியிருக்கின்றார்கள் நடக்க கூடா விஷயமெல்லாம் நடந்தது

நிச்சயம் நல்வழி நடந்த பெண்களை அக்கோஷ்டி பிடித்து சென்று கதற கதற வீடியோ எடுக்கவில்லை, அந்த அளவு இங்கு நிலமை சீரழியவுமில்லை

சீரழிய வழிதேடி அலைந்தவர்கள் சீரழிந்தார்கள்

இதில் இரு பெண்க்கள் கலெக்டரிடம் துப்பாக்கி வைக்க அனுமதி கேட்டார்களாம் அதுவும் 9 எம்.எம் பிஸ்டலாம்

எதற்காம், அவர்களுக்கு பாதுகாப்பில்லையாம் அதனால் வேண்டுமாம்

எத்தனை கோடி பெண்கள் இருக்கும் தமிழகம் இது? எல்லோருக்கும் கொடுக்க முடியுமா?

இவர்களிடம் அந்த தலைவர் பாணியில் ஒரே ஒரு பதில் மட்டும் சொல்லலாம்

“துப்பாக்கியா? எதற்கு?

சிக்கல் இல்லா உறவு என்றால் துப்பாக்கி முனையில் நீட்டிக்கவும், அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்தால் சுடுவதற்கா”

இந்த பெண்களின் பெயர் என என்று பார்த்தால் ஒரு பெண் பெயர் ஓவியா இன்னொரு பெண்ணின் பெயர் தமிழீழம்

ஓஓ தமிழீழம்

இதற்கு மேலும் சொல்ல என்ன இருக்கின்றது?

இந்த இரு பெண்களிடமும் யாராவது “ஏன் இப்பொழுது உங்களுக்கு துப்பாக்கி ? யாரோ வீடியோ எடுத்துவிடுவார்கள் என சந்தேகமா? யார் அவன்?” என கேட்டால் என்னாகும்?”

இந்தியாவுக்கு காங்கிரஸ் என்ன செய்தது?

காங்கிரஸ் இந்தியாவுக்கு என்ன செய்தது என இந்த மோடியும் அவரின் அடிபொடிகளும் சொல்லிகொண்டே இருக்கின்றன, மிக பெரிய பொய் இது

வரலாற்றில் என்ன நடந்தது? வெள்ளையன் ஆட்சி எப்படி முடிந்து இந்தியா பிறந்தது? அதுவும் உலகபோர் எனும் உலகமே தரித்திர கோலத்தில் நின்ற நேரமது

ஆம் பஞ்சத்திலும் வறுமையிலும்தான் இத்தேசம் பிறந்தது, ஒன்றுமில்லாமல்தான் இத்தேசத்தை விட்டு போனான் வெள்ளையன்

அது சுதந்திரம் பெறும்பொழுதே மாபெரும் கலவரம் குழப்பம், பிரிட்டிசார் விதைத்து சென்ற மத பிரிவினையின் உச்சம், ஒரு கட்டத்தில் மாபெரும் தலைவனின் உயிர்பலியோடுஅது நின்றதது

ஆம் அந்த இக்கட்டான நிலையிலும் காந்தியினை கொன்றது யார் என்பது உலகிற்கே தெரிந்த விஷயம் , அன்றே நாட்டை விட மதம் இவர்களுக்க்கு முக்கியமாய் இருந்தது

சுதந்திரம் கொடுத்தாகிவிட்டது இன்னும் 2 ஆண்டில் இந்தியா 100 துண்டாக சிதறும் என்றார்கள், அதனை எல்லாம் எதிர்கொண்டு கடந்து உலகிற்கே அதிர்ச்சி கொடுத்தது இந்தியா, காங்கிரஸ் ஆண்ட இந்தியா

தேசம் நிலைத்தது, நேரு அந்த அதிசயத்தை செய்தார்

இந்தியர்களுக்கு ஜனநாயகம் தெரியாது, ஆளதெரியாது என்பதை எல்லாம் பொய்யாக்கி ஜனநாயக தேசமாக இதை வளர்த்தது காங்கிரஸ்

பின்னர் காஷ்மீரை காட்டி 2 போர்கள், அதையும் தாங்கியது தேசம், நண்பனாய் நினைத்து ஐ.நா சபையில் நிரந்தர இடம்கொடு என வாதாடும் பொழுதே சுய உருவம் காட்டிற்று சீனா, ஆசிய நாடு ஒன்றிற்கு ஐ.நாவில் அந்தஸ்து என நாம் அவர்களுக்காய் போராட , அவர்களோ ஆசியா தாதா நான் என முதுகில் குத்திற்று.

அதையும் தாங்கி வளர்ந்தது இந்தியா, மறுபடியும் போர், இன்னும் ஏராள பிரச்சினைகள் ஆனால் இந்தியா அசரவில்லை.

மீண்டும் போர், அதையும் தாண்டி மத கலவர முயற்சிகள், மக்கள் தொகை பெருக்கம், எப்போதும் நேரடியாக கொஞ்சமும், மறைமுகமாக நிறையவும் தொல்லை கொடுக்கும் வல்லரசுகள்.

காலிஸ்தான் சிக்கல், திராவிட சிக்கல், ஈழ சிக்கல், நக்சலைட்டுகள் இன்னபிற கொடுமை என எல்லாவற்றையும் சமாளித்து இத்தேசத்தை காங்கிரஸ், சத்தியமாக காங்கிரஸ்

எல்லாம் கடந்து எழும்பிய பொழுது பாபர் மசூதி இடிப்பும் அதை தொடர்ந்த கலவரங்களும் மறுபடியும் தேசத்தை எரிய வைத்தது, செய்தது யாரென வரலாறே சாட்சி

ஆளுக்க்கொரு கட்சி, அவனவக்கொரு கொள்கை, அவர்களுக்கென ஒரு வேலையற்ற கூட்டம், வெற்று கூச்சல், வீண் ஆர்ப்பாட்டம் என தினம் ஒரு பிரச்சினையை சந்தித்தாலும் வளர்கின்றது இந்தியா, குதிரை வேகமாக ஓடலாம், ஆனால் யானை எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் பலமானது, அதுதான் இந்தியா.

அன்று சுரண்டிபோட்ட பாத்திரமாக ஏழை இந்தியாவினை விட்டு சென்றான் வெள்ளையன், அந்த லட்சணத்தில் நாம் பாகிஸ்தானுக்கும் நஷ்ட ஈடு கொடுத்து திவாலில் இருந்தோம், தேர்தல் நடத்த கூட பணமில்லை.

உலகம் இரண்டாம் உலகப்போரின் தாக்கத்தில் இருந்ததால் பெரும் மந்த நிலை.

அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டோம். ஐந்தாண்டு திட்டம் என சொல்லி விவசாயம், பால், கடல் உணவு என உணவுக்கு தன்னிறைவு அடைந்தோம் அதற்கு காரணம் காங்கிரஸ் ஆட்சி

கல்விசாலைகள் கட்டி, அதற்காக பெரும் திட்டம் தீட்டி கல்வியில் உச்சம் பெற்றோம்.இன்று உலகநாடுகள் ஐ.டி உட்பட பல தொழில்களில் இந்தியாவினை மதிக்கின்றது என்றால் அந்த கல்விதான் அடிப்படை, அதற்கு காரணம் காங்கிரஸ் ஆட்சி

அந்த நேருவினையும் காமராஜரையும் மறக்க முடியுமா?

ஒரு துப்பாக்கி கூட செய்ய தெரியா தேசமாக இருந்தோம், கொஞம் கொஞ்சமாக சுதாரித்தோம். இன்று உலகின் ராணுவபலம் பொருந்திய நாடுகளின் முதல் 5 இடங்களில் இருக்கின்றோம்

இதில் இந்திராவினை மறக்க முடியுமா? அவர்தான் அந்த காங்கிரஸ் தலைவிதான் இத்தேசத்தை பலமாக்கினார்

சைக்கிளில் ராக்கெட் பாகங்களை கொண்டுசென்றுதான் விண்வெளி ஆராய்ச்சிகளை தொடங்கினோம், நமக்கு கைகொடுப்பார் இல்லை. தத்தி திணறி தோல்வியுற்று படிபடியாக முன்னேறி இன்று கிரையோஜனிக் என்ஜின் வரை செய்து அசத்தியிருக்கின்றோம்,

செவ்வாய் கிரகம் வரை இந்தியரால் தொட முடிகின்றது.

சிறிய தேசங்கள் முன்னேறுவது விஷயம் அல்ல. இந்த மாபெரும் தேசம் இவ்வளவு பெரும் மக்களை வைத்துகொண்டு அதுவும் பல இன மொழி மக்களை வைத்துகொண்டு முன்னேறுவது வெகு சிரமம்

இன்னொரு நாட்டிற்கு இது சாத்தியமே இல்லை. அந்த அதிசயத்தை நாம் செய்துகாட்டியது அதற்கும் காரணம் காங்கிரஸ்

இவ்வுலகில் உள்ள நாடுகளை கவனியுங்கள், பல நாடுகளில் மக்கள் வாழவே முடியாது,பொறுப்பற்ற அரசாங்கமும் மனித தன்மை இல்லா போராட்டங்களும்,இன்னும் பற்பல கொடுமைகளும் பெரும் அச்சுறுத்தலை மக்களுக்கு கொடுக்கின்றது, உணவு இல்லை, கல்விசாலை இல்லை,ராணுவம் இல்லை, நீதிமன்றம் இல்லை,காவல் இல்லை, ஒன்றுமே இல்லை.

சிலநாடுகளில் ராணுவ ஆட்சி மட்டும் உண்டு, அது பெரும் ஆபத்து, சாப்பாட்டில் உப்பு போடுவதை கூட ராணுவம்தான் நிர்மானிக்கும்.

ஒரு வகையில் நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள், பொருளாதாரம் ஏறும் இறங்கும், ஆனால அமைதியாய் வாழ்கின்றோம், நிம்மதியாய் உறங்கி நம்பிக்கையாய் எழுகின்றோம், என்றாவது இங்கு வாழவே முடியாது என்று குடும்பத்தோடு அகதியாய் நாட்டை விட்டு கிளம்பியிருக்கின்றோமா?,

இதுதான் சுதந்திர இந்தியாவின் வெற்றி. ஆம் காங்கிரஸ் ஆண்ட சுதந்திர இந்தியாவின் வெற்றி

எந்த நாட்டில் சிக்கல் இல்லை? இவ்வுலகின் எல்லா நாட்டிலும் சிக்கலும், வறுமையும் உண்டு, இந்தியாவிலும் அப்படி சில சர்ச்சைகளும் பிரச்சினைகளும் இருக்கலாம். அதற்காக இத்தேசம் மகா மோசம் அதற்கு காரணம் என சொன்னால் அது ஏற்க கூடியதா?

ஆனானபட்ட ஐரோப்பிய தேசங்கள் அகதிகளை ஏற்க தயங்கியபொழுது நாமோ ஈழம், திபெத், வங்கம், மியன்மார் என எல்லா நாட்டு அகதிகளையும் அரவணைக்கின்றோம்

புத்தமும் காந்தியமும் அந்த மானிட நேயத்தை இங்கு கொடுத்திருக்கின்றன, எந்த நாட்டு மக்களையும் நம்மால் காக்க முடிகின்றது, நிச்சயம் பெருமைபட வேண்டும்

அது மோசம், இது மோசம், எல்லாமும் மோசம் எல்லாம் அசிங்கம் என குணா கமலஹாசன் போல மோச ராகம் பாடும் பத்திரிகைகளும், தொலைகாட்சிகளும் ஒன்றை மறந்து விடுகின்றன.

சில நாடுகளில் முகநூல் கூட கிடையாது, சீனாவில் தடைசெய்யபட்ட ஊடகங்கள் சீன பெருஞ்சுவரையும் தாண்டும், இன்னும் சில நாடுகள் செவ்வாய் கிரகத்தில் மனிதனின் நிலைபோல, உலகைவிட்டே துண்டிக்கப்ட்டிருப்பார்கள், ஆனால் இந்தியா அப்படி அல்ல‌

காந்தி முதல் மோடி வரை விளாச முடிகிறது, கார்ட்டூன்கள் போட்டு கலைஞர் வரை கலாய்க்கமுடிகிறது, பெரும் ஊழலை கூட அனாசயமாய் டீகடை பெஞ்சில் விவாதிக்க முடிகிறது, இது எத்தனை நாடுகளில் சாத்தியம்?

இந்த சுதந்திரத்தை கொடுத்ததே காங்கிரஸ்தான், நேரு அதனை செய்தார்

ஏராளமான நாடுகளில் இதெல்லாம் நினைத்தே பார்க்கமுடியாத விஷயங்கள். ஒரு வார்த்தை அரசினை விமர்சித்தாலே பிடுங்கி விடுவார்கள். காலத்திற்கும் சிறை அல்லது கல்லறை.

இத்தேசத்தில் எல்லா உரிமையும் மிக அதிகமாகவே கொடுக்கபட்டிருக்கின்றது.

இந்தியா கடந்த 71 ஆண்டுகளில் கடந்தபாதை மிக சிக்கலானது, எவ்வளவு இழப்புகள், எவ்வளவு நெருக்கடிகள், நிறைய துரோகங்கள்,முக்கியமாக பெட்ரோல் முழுதும் இறக்குமதி, அதனையும் தாண்டி வளர்ந்திருக்கின்றோம் அல்லவா? அதுதான் காங்கிரஸின் வெற்றி

1960களில் ஒரு நுட்பத்தினையும் தரமாட்டேன் அல்லது தரவிடமாட்டேன் என அடம்பிடித்த அமெரிக்கா, தனது செயற்கை கோள்களை ஏவுவதற்கு இந்திய உதவியை நாடுகின்றது அல்லவா? அது வெற்றி.

இந்தியாவின் உதவியின்றி தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் அமைதி சாத்தியமில்லை என உலகம் கருதுகின்றதல்லவா அது வெற்றி. 1962 போல் அல்ல, நாம் அடித்தால் மறுநொடி இந்திய ஏவுகனைகள் ஷாங்காய் வரை தாக்கும் என சீனா யோசிக்கின்றது அல்லவா? அது வெற்றி.

ஐ.நா சபையில் நிரந்தர உறுப்பினராகலாம் எனும் அளவிற்கு தனது முத்திரையினை உலக அரங்கில் பதித்திருக்கின்றது அல்லவா? இது தான் வளர்ச்சி.

சொன்னால் சொல்லிகொண்டே செல்லலாம், அவ்வளவு குறிப்பிடதக்க முன்னேற்றம். அதனாலதான் 1998ல் நடந்த கிழக்காசிய பொருளாதார வீழ்ச்சி, 2008ல் நடந்த சிக்கல், சமீபத்திய கிரீஸ் திவால் மிரட்டல் இவை எல்லாம் இந்தியாவினை தாக்க முடியவில்லை.

இதை எல்லாம் செய்தது யார்? சாட்சாத் காங்கிரஸ் அரசு

.

இந்தியா ஒரு நாடு மட்டுமல்ல, ஒரு மாபெரும் அதிசயமும் கூட, பல இனங்கள், மதங்கள்,கலாச்சாரம் என கலந்து வாழும் அற்புதமான ஒரு அமைப்பு, இந்தியாவினை தவிர உலகில் எந்த நாட்டிற்கும் அது சாத்தியமானதே அல்ல.

அந்த சாத்தியத்தை செய்து காட்டியது காங்கிரஸ்

ஆக பொய்கள் மேல் பொய்களை சொல்லும் பாஜக சொல்வதில் உச்சமான பொய் 71 ஆண்டுகளாக காங்கிரஸ் இத்தேசத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என்பது

இந்த தேசத்திற்கு ஒன்றுமே செய்யவிலை என காங்கிரசை சாடும் பாஜகவுக்கும், திமுக தமிழ்நாட்டுக்கு ஒன்றுமே செய்யவில்லை என கரித்துகொட்டும் இந்த நாம் தமிழர் கோஷ்டிக்கும் வித்தியாசம் ஏதுமில்லை

வரலாற்றிலே புதிது

நாம் கணித்ததுதான் நடந்தது

நெல்லை தொகுதிக்கு வேட்பாளரை நிறுத்துவதில் திமுக பலத்த யோசனைக்கு தள்ளபட்டிருக்கின்றது, உத்தேச வேட்பாளர் என இருவர் பெயரை வெளியிட்டிருக்கின்றார்கள்

இது அரசியல் வரலாற்றிலே புதிது

அதாவது நெல்லை திமுகவில் நாடார் வோட்டு மட்டும் வெல்லாது, ஆனானபட்ட சரத்குமாரே புகழின் உச்சியில் நின்றபொழுது தொகுதி அது

அப்படிபட்ட திமுகவில் ஏகபட்ட கோஷ்டிகள் உண்டு, ஆவுடையப்பன், அப்பாவு இன்னும் ஏக கோஷ்டிகள், இது போக அவ்வப்போது வந்து செல்லும் கருப்பசாமி பாண்டியன் என பல‌

இதில் இந்த ஞானதிரவியம் என்பவரும் கிரகாம் பெல் என்பவரும் ராதாபுரம் தொகுதியில் செங்கோல் செலுத்துபவர்கள், அதாவது திமுகவின் தூண்கள்

அப்பாவு என்பவர் இன்னொரு கோஷ்டி

தமாகாவில் இருந்து வந்தாலும் அப்பாவு வித்தியாசமானவர், 60 ஆண்டுகால திமுக வரலாற்றிலே கலைஞரின் தந்தை முத்துவேலருக்கு ராதாபுரத்தில் சிலை வைத்தவர் அவர்

ஆம் கலைஞர் வீட்டில் கூட அஞ்சுகம் அம்மாள் சிலைதான் இருக்கும், அந்த முத்துவேலர் படம் தேடினாலும் கிடைக்காது ஆனால் அவருக்கு சிலைவைத்த ஒரே நபர் அப்பாவு

இப்பொழுது இவர்களுக்குள்தான் போட்டி, கடைசியில் கிரகாம் பெல் என்பவருக்கு அல்லது ஞானதிரவியம் மகனுக்கு என செக் வைத்து இன்னும் தீர்ப்பு சொல்லாமல் இருக்கின்றது தலமை

ஆக அப்பாவு கோஷ்டி, ஆவுடையப்பன் கோஷ்டி எல்லாம் கனத்த அமைதி

இவர்கள் இப்படி யோசிக்க தினகரன் தரப்பும் ஞானவேல் என்பவரை களத்தில் இறக்கிவிட்டிருகின்றது

முன்பு மைக்கேல் ராயப்பன் என்றொருவர் இருந்தார் அல்லவா? தெரியவில்லை என்றால் விஜயகாந்திடம் கேளுங்கள் சொல்வார்

ஆம் அந்த மைக்கேல் ராயப்பன் போல தொழிலதிபர் இந்த ஞானவேல், இவரும் ராதாபுரம் ஏரியாவே

மிக சரியாக திமுகவுக்கு செக் வைக்கும் விதமாக வேட்பாளரை நிறுத்தியிருக்கின்றார் தினகரன்

இல்லையேல் தென் நெல்லையின் பெரும் வாக்குகள் திமுக பக்கம் செல்லும், அதை கச்சிதமாக முறியடிக்க வழி செய்திருக்கின்றார் தினகரன்

தூத்துகுடி தொகுதியில் திமுகவின் வெற்றி உறுதி செய்யபட்ட நிலையில் நெல்லையில் வேட்பாளர் யார் என அறிவிப்பதிலே கனத்த குழப்பத்தில் இருக்கின்றது திமுக தலமை

உண்மையில் அத்தொகுதியினை காங்கிரசுக்கு ஒதுக்கியிருக்கலாம், அவர்களுக்கு திமுகவினை விட வாக்கு வங்கி அதிகம் எளிதாக வென்றிருக்கலாம்

ஆனால் பல கணக்குகளுக்காக அத்தொகுதியினை கையில் எடுத்த திமுக சிக்கியிருகின்றது

திமுகவுக்கு தென் நெல்லைபக்கம்தான் வாக்கு, அங்கு சரியான நபரை நிறுத்தி பிரித்தால் விஷயம் எளிதாகும்

இந்த நுட்பத்தில் இப்போதைக்கு மிக சரியான பாதையில் செல்கின்றது தினகரன் கோஷ்டி

நடிகர் & சன் ஆச்சர்யம்

ரஜினி அமைதியாய் இருப்பதில் அர்த்தமுண்டு, அஜித்குமார் என்பவர் அமைதியாய் இருப்பதிலும் அர்த்தமுண்டு

ஆனால் அந்த நடிகர் & சன் அமைதியாய் இருப்பதுதான் ஆச்சரியம்

பாஜகவினாலும் அதிமுகவினாலும் விஜயும் அவர் தந்தையும் பட்டபாடு கொஞ்சமல்ல‌

ஆனால் அவர்களுக்கு ஆணி அடித்து புதைக்க வேண்டிய நேரத்திலும் ஏன் அமைதியாய் இருக்கின்றார்கள் என்றால் அதுதான் அரசியல்

இப்பொழுது வந்தால் திமுக காங்கிரஸிடம் சிக்கி கொள்வோம் என்றும், பின்னொருநாளில் திமுகவும் காங்கிரசும் தந்தை மற்றும் மகனின் காலில் விழுந்து கதறவேண்டும், தங்களை மாபெரும் சக்தியாக மாற்ற வேண்டும் என்ற நகர்வு இருக்கலாம்

இல்லாவிட்டால் அரசியல் ஆசையின் உச்சத்தில் ஊறிபோய் இருக்கும் அக்குடும்பம் இந்த வாய்ப்பினை விடாது

இதையும் மீறி அவர்கள் அமைதியாய் இருக்க ஒரே ஓரு காரணம் தான் உண்டு

தங்களின் மொக்கை படத்திற்கு பெரும் விளம்பரம் கொடுக்கும் இந்த பாஜகவினையும் அதிமுகவினையும் ஏன் பகைக்க வேண்டும்? அவர்கள் இல்லாவிட்டால் எப்படி தங்கள் படம் ஓடும்? என்ற சினிமா வசூல் கணக்காக இருக்கலாம்..

மதுரையில் சு.வெங்கடேசன்

மதுரையில் சு.வெங்கடேசன் எனும் வரலாற்று எழுத்தாளர் நிற்பது வரவேற்கதக்க விஷயம்

மதுரை எனும் மிக புராதணமான ஊரின் வரலாற்றையும் கீழடி போன்ற பகுதிகளின் ஆய்வுகளையும் வெளிகொண்டு வர அப்படினயான ஆட்கள் டெல்லிக்கு சென்றே தீரவேண்டும்

அவரை முழு மனதொடும் மிகுந்த மகிழ்ச்சியோடும் ஆதரிக்கின்றோம், அவர் வெற்றிபெறட்டும் மதுரை அதற்குரிய இடத்தை உலகில் பெறட்டும்

கம்யூனிஸ்டுகள் செய்திக்கும் மிகபெரும் நல்ல விஷயம் இது, என்ன இருந்தாலும் கோடிகள் இல்லாதோரும் தகுதி இருந்தால் வாய்பளிக்கபடும் என்பதை அவர்கள் நிரூபித்திருக்கின்றார்கள்

ஆரியபடை கடந்த நெடுஞ்செழியனாக , இமயவரம்பனாக அவர் டெல்லி செல்ல வாழ்த்துக்கள்