இந்த தேர்தலில் பல சுவாரஸ்யங்கள்

இந்த தேர்தலில் பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன‌

ஆண்டிபட்டி இடைதேர்தலில் திமுக வேட்பாளர் மகாராசனும் அதிமுக வேட்பாளர் லோகிராசனும் சகோதரர்களாம்

இவர்களின் அன்னை யாருக்கு வாக்களிப்பார்? தினகரனுக்காக இருக்கலாம்

எந்த விருதுநகரில் மாணிக் தாகூர் என்பவரிடம் வைகோ தோற்றாரோ அந்த மாணிக் தாகூருக்காக அங்கு பிரச்சாரம் செய்ய செல்கின்றார் வைகோ

இது போக அங்கிள் சைமன் காமெடி வேறு, ஒரு ஆடியோவில் தும்பி ஒரு வேட்பாளரை நிறுத்துகின்றது அங்கிள் கண்டிக்கின்றார்

ஒரு கட்டத்தில் களமாடுவது யார் என்பதில் தும்பி அங்கிளை எதிர்க்கின்றது

அங்கிள் போ வெளியே என்கின்றார், தும்பியோ அதெல்லாம் முடியாதுண்ணே இது கட்சி, நீங்க பதில் சொல்லியே ஆகணும் என செந்தில் தேங்காய் மூடியோடு நிற்பது போல மல்லுக்கு நிற்கின்றது

எப்படி இருக்கின்றது காட்சிகள்?

இன்னும் ஏராளமான காமெடிகள் வரும் என்பது மட்டும் நிச்சயம்

நமக்கென்ன ரசித்து சிரித்துகொண்டு சிலவற்றை பரிதாபமாக பார்த்துகொண்டே இருக்கலாம்

நிச்சயம் இம்முறை ஐபிஎல் களை கட்டாது, அதை விட மகா சுவாரஸ்யம் இங்குதான் இருக்கின்றது

தேர்தல் துளிகள் 18/03/2019 (3)

அர்ரே பழ்னிசாமி நம்பிள் ராம்சந்தரோட காவல்காரன் படம் பார்த்தான் உடனே நம்பிள் காவல்காரன்னு பேர் வச்சிட்டான், தேங்க்ஸ் பையா

அடடே, இது தெரிஞ்சா மாட்டுக்கார வேலன் சிடி கொடுத்திருப்பேனே

அச்சா, அப்டியும் இருக்கா? உடனே நம்ப யோகிக்கு சிடி அனுப்பி வைங்க மேன், அவரும் பெயரை மாத்துவார்..

உன் தந்தை தெய்வம் தானய்யா….

எந்நாளும் உம்மோடும் எம்மோடும் அவர் மனம் வாழட்டும்

“தாய் இல்லாத நேரம்தான் நீங்க தாய் கழகத்துக்கு வருவீங்கண்ணு அப்பா அடிக்கடி சொல்லுவாருங்க…”

தேர்தல் துளிகள் 18/03/2019 (2)

இருபக்கமுமே பாராளுமன்ற தேர்தலை பற்றி சொல்ல விஷயமே இல்லை

அதிமுக எம்பிக்கள் என்ன செய்தார்கள் என திமுக தரப்பு கேட்டால் எதிர்கோஷ்டி ஒரே வார்த்தையில் இவர்களை அடக்கிவிட முடியும்

ஆம் ஒற்றை வார்த்தை போதும்

10 வருடம் மன்மோகன்சிங் ஆட்சியில் திமுக இருந்தது, ஆனால் கலைஞருக்கு அஞ்சலி செலுத்த அந்த மன்மோகன்சிங் ஏன் வரவில்லை?

எவ்வளவுக்கு பாதிக்கபட்டிருந்தால் அவர் வராமல் இருந்திருப்பார்?

இந்த கேள்விக்கு காங்கிரசிடமே பதில் இல்லை எனும்பொழுது திமுகவிடம் எப்படி இருக்கும்?

பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை , பக்தாஸ் பரவசம்

அங்கிருக்கும் நபர்களை பாருங்கள். வாஜ்பாய், மோடி, யோகி, உமா பாரதி, பொன்னார் இன்னபிற‌

இதில் யாருக்கு குடும்பம் இருக்கின்றது? பின் எங்கிருந்து வாரிசு வரும்?

சுத்த சாமியார் கோஷ்டி அது, இந்த மடங்களில் இருப்பதை போலவே நாடும் அரசியலும் இருக்கவேண்டும் என எதிர்பார்த்தால் எப்படி?

இந்த தேர்தலில் அவர் இருந்தால் இப்படித்தான் கேட்டிருப்பார்

“அவர் காவல்காரனா?

யாருக்கு?

நாட்டுக்கா? மாட்டுக்கா? இல்லை அம்பானி வீட்டுக்கா?”

சவுக்கிடார்ன்னா என்ன அர்த்தம்னுதான?

அது தெரியாதா? அந்த ஆளு
சாவ கிடக்காராம்

சத்தமே இல்லை

அந்த 37 எம்பிக்களும் என்ன கிழித்தார்கள் என திமுக தரப்பு பெரும் குற்றசாட்டை முன்வைக்கின்றது

சரி அதற்கு முன்பிருந்த திமுக எம்பிக்கள், 40/40 எடுத்த காலங்களில் எல்லாம் தமிழகத்திற்கு பெரிதாக என்ன செய்தார்கள், 15 ஆண்டுகாலம் மத்தியில் அமைச்சராக இருந்தபொழுது என்ன செய்தார்கள் என கேட்டால் சத்தமே இல்லை

சத்தம் வரவும் வராது

திமுக மத்தியில் இருந்தால் ஒன்றுமே செய்யாவிட்டாலும் விளம்பரம் கடுமையாக இருக்கும், அவர்களின் பிரச்சார ஊடக பலம் அப்படி

மற்றபடி பெரிதாய் ஒன்றும் இருக்காது, ஆனால் பெரிய சாதனை போல் காட்டிகொள்வார்கள்

இந்த 37 அடிமைகளுக்கு அது தெரியவில்லை அவ்வளவுதான் விஷயம்

ஆக மொத்தத்தில் 2 கோஷ்டியுமே ஒன்றுதான் என்பதில் சந்தேகமே இல்லை

வாரிசு அரசியல்

வாரிசு அரசியல் இன்றைய காலத்தில் அல்ல எந்த காலத்திலுமே தவிர்க்க முடியாதது

சுருக்கமாக சொல்லிவிடலாம், அதிகாரம் எங்கெல்லாம் உண்டோ அதை காக்கும் ஆசையும் எல்லோருக்கும் உண்டு மன்னர்களுக்கு பின் அவர்கள் வாரிசுகள் வருவது அப்படித்தான்

ஜனநாயகம் என சொல்லிகொண்டாலும் கட்சி அரசியலும் அதிகாரம் தக்க வைக்கும் போட்டியே, மன்னர்காலம் போல ஆயுத வெட்டு குத்து இல்லை என்றாலும் மறைமுக வெட்டு குத்துக்கள் அதிகம்

வாரிசு அரசியல் வடகொரியாவில் இருந்து இலங்கையின் பண்டாரநாயகே, பாகிஸ்தானின் பூட்டோ குடும்பம் , உட்பட ஏராளமான நாடுகளில் அப்படியே இருக்கின்றது,

மானிட சுபாவம் இது

அது அமெரிக்கா வரை பரவித்தான் இருக்கின்றது, கென்னடி குடும்பம் முதல் புஷ் குடும்பம் வரை ஏராள சாட்சி உண்டு

இந்தியாவில் நேரு குடும்பம் அதை தொடங்கி வைத்தது அதும் 4ம் தலைமுறை வரை வருகின்றது

ஒரு விஷயத்தை கவனித்தால் புரியும், நேரு குடும்பத்தினை விட்டாலும் காங்கிரஸ் சரியும், சீத்தாராம் கேசரி காலத்தில் அதுதான் நடந்தது பின்பு வலிய சோனியாவிடம் சரணடைந்தார்கள்

காங்கிரஸ் என்றல்ல பல கட்சி நிலை அப்படியே

பாஜக விதிவிலக்கு என்பார்கள், அது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முகமூடி, சீனா போன்ற கம்யூனிச நாடுகளில் பொலிட் பீரோ யாரை சொல்லுமோ அப்படி ஆர்.எஸ்.எஸ் சொல்பவரே அங்கு தலைவர்

அது ஒருவகை சர்வாதிகாரம், சீன கம்யூனிஸ்டுகளுக்கும் அவர்களுக்கும் வித்தியாசமில்லை

மற்றபடி எந்த கட்சி எடுத்தாலும் வாரிசு அரசியலின்றி அக்கட்சி சாத்தியமில்லை, ஏன் சந்திரபாபு நாயுடுவே வாரிசு அரசியலில் வந்தவர்தான், அங்கு என்ன குறைந்தது?

ஏன் வருகின்றது வாரிசு அரசியல்?

அரசியலில் நேரடி எதிர்களை விட கூட இருந்து முதுகில் குத்தும் எதிரிகளே அதிகம், ஜூலியஸ் சீசர் காலத்திலே அதுதான் இருந்தது

யாரையும் நம்ப முடியாதது அரசியல், திமுகவினையே எடுங்கள் கலைஞர் மகனை வளர்த்தார் மருமகனை வளர்த்தார் என்பார்கள் ஆனால் ஏன் வளர்த்தார்?

திமுகவினை சம்பத் உடைத்தார் அது வலியில்லை ஆனால் எந்த நடிகனை கலைஞர் கொண்டாடினாரோ அந்த ராமசந்திரனால் கட்சி உடைந்தது

பின்பு வைகோ உடைத்தார், எத்தனையோ பேரினை கலைஞர் ஏற்றிவிட்டு முதுகில் வாங்கினார், பின் யாரை அவர் மனம் நம்பும்?

தன் வீட்டு வாரிசென்றால் பாதுகாப்பு எனும் அந்த அரச தந்திர தொடர்ச்சியே அன்றி அவர் செய்தது வேறல்ல‌

எல்லா கட்சியிலும் நிலை அதுதான்

வாரிசுகள் கட்சியின் ஒரே முகமாக அறிபடுவது முதல் சிக்கலற்ற அடுத்த தலைவராக வருவது வரை ஏக அனுகூலங்கள் உண்டு

இதெல்லாம் பல்லாயிரமாண்டு மானிட குணத்தின் தொடர்ச்சியே

ஆனால் பொல்லாத வாரிசுகளை மக்கள் தூக்கி எறியவும் தயங்கவில்லை என்பது மக்களாட்சியின் மாபெரும் வசதி

அண்ணாவுக்கும், ராமசந்திரனுக்கும், ஜெயாவுக்கும் நேரடி வாரிசு இல்லை. இருந்திருந்தால் நாடு தாங்கியிருக்காது

மன்னராட்சியிலிருந்து மக்களாட்சிக்கு மாறினோமே தவிர மனதால் அதே சுயநலம், வஞ்சகம், அதிகார் போட்டி, அரசியல் கொலை என எல்லா குணங்களும் எல்லோருகுள்ளும் இருக்கின்றது

அதிலிருந்து தப்ப அந்நாளைய மன்னர்கள் வாரிசுகளை சொந்தங்களை நம்பியது போலவே இப்பொழுதும் நம்புகின்றார்கள், வேறு தெரிவு இல்லை. நம்ப கூடாதவரை நம்பினால் நொடியில் முதுகில் குத்துவார்கள்

அதிகார அரசியல் ஆசை எனும் போதை என்பது அப்படியானது

அது மாறாது, மனித சுபாவம் அப்படி

இங்கு காமராஜர், அண்ணா, ராம்சந்திரன், ஜெயா என யாருக்கும் நேரடி வாரிசு இல்லை

ஆனால் கலைஞருக்கு இருந்தது, அதனால் அவரை வாரிசு அரசியல் செய்தார் என சொல்கின்றார்களே தவிர வேறொன்றுமில்லை

இதில் கலைஞரின் தவறு ஏதுமில்லை, மொத்த உலகினையும் உற்று பாருங்கள், ஏன் இங்குள்ள மாநிலங்களையே பாருங்கள் அங்கே நடந்ததுதான் இங்கும் நடந்தது, இப்படித்தான் நடக்கவும் வேண்டும் அதுதான் கட்சிக்கும் நல்லது

அதனால் கட்சி ஆட்சி என ஒன்று இவ்வுலகில் இருக்கும் வரைக்கும் வாரிசு அரசியல் என ஒன்று இருந்தே தீரும், அது மாறவே மாறாது.

தேமுதிக வேட்பாளர் பட்டியல்

இன்று பிரேமலதாவின் பிறந்தநாளையொட்டி தேமுதிக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கபடுகின்றது

“எறியென்று எதிர்நிற்பாள் கூற்றம்; சிறுகாலை
அட்டில் புகாதான் அரும்பணி; – அட்டதனை
உண்டி உதவாதான் இல்வாழ்பேய்; இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை”

கணவன் சொல்லுக்கு அஞ்சாது ‘அடி’ என்று எதிர்த்து நிற்பவள் எமன், காலையில் சமையல் அறைக்குப் போகாதவள் கொடிய‌ நோய், கணவனுக்கு சமைத்த உணவைத் தராதவள் வீட்டிலிருக்கும் பிசாசு;

இந்தப் குணத்தை கொண்ட பெண்டீர் கணவனுக்கான கொலைகருவி ஆவார்.

சகிக்கமுடியாததாக தெரியவில்லை

புரட்சி என்றால் என்னவென்றே தெரியாதவரை புரட்சி தலைவரென்றும்,

தியாகத்திற்கு அர்த்தமே தெரியாதவரை தியாக தலைவியியென்றும்,

ஒரு களமும் காணாதவரை தளபதி என்றும் சொல்லிகொண்டிருப்பதை விட சவுக்கிட்டார் ஒன்றும் சகிக்கமுடியாததாக தெரியவில்லை

அப்பக்கமும் ஒருவன் கரும்பை கடித்துகொண்டு நானே செந்தமிழன் என்கின்றார், அவரையெல்லாம் விட்டுவிடுவார்கள்