ஒன்றும் ஆச்சரியமல்ல

இது தேர்தல் திருவிழா நடக்கும் நேரம் பல வகையான விளையாட்டுக்கள், கூத்துக்கள் எல்லாம் நடக்கும், அது ஒன்றும் ஆச்சரியமல்ல‌

மேளம் அடிக்கும் வேலையினை பத்திரிகைகளும் டிவிக்களும் செவ்வனே செய்கின்றன‌

மக்கள் எனும் ஆடுகளை வெட்ட பல இடங்களில் மஞ்சள் தண்ணீர் தெளித்தாகிவிட்டது, அவைகளும் தலையாட்டி கொண்டு காத்திருக்கின்றன‌

திருவிழாவின் கடைசி நாளில் தீமிதிப்பார்கள், அது வரை கொண்டாட்டம்தான்

முதலில் ஜல்லிகட்டு நடத்தி தங்கள் பலம் காட்டினார்கள், விஜயகாந்த் என்ற காளை மட்டும் போக்கு காட்டியது , அதுவும் பின் அடங்கிற்று

ஆக முடிந்து கண்ணாமூச்சி ஆடினார்கள் அதுவும் முடிந்தது

சில இடங்களில் கரகாட்டம், ஒயிலாட்டம் எல்லாம் தொடங்கிவிட்டது, சில இடங்களில் பொய்க்கால் ஆட்டம், புலியாட்டம் எல்லாம் தொடங்கிற்று

வைகோவின் கம்பு சுற்றுதல் ஒரு பக்கம் நடக்கின்றது

இனி தேர் திருவிழா விரைவில் நடக்குமாம், ஸ்டாலின் சாமி கிளம்பிற்று, அது போக வானிலிருந்து மோடி சாமி, ராகுல் சாமி எல்லாம் வரும்

பழனிச்சாமி உற்சவம் ஸ்பெஷலாக பங்குனி உத்திரமன்று கிளம்பலாம்

அது ஒரு புறம் நடக்க வால்பிடுங்குதல் போட்டி நேற்று தொடங்கியிருக்கின்றது

கண்ணப்பன் என்ற வாலை திமுக பிடுங்க, திமுகவின் எந்த வாலை பிடுங்குவது என தெரியாத அதிமுக சரத்குமார் என்பவரை இன்று பிடுங்கி வாலாக சொருகி கொண்டது

இது போக கார்த்திக் என்றொரு வாலும் இன்று பிடுங்கபட்டிருக்கின்றது

ஆட்டம் தொடர்ந்து நடைபெறுகின்றது, விறுவிறுப்பாக சென்றுகொண்டிருகின்றது

அடுத்தடுத்த ஆட்டம் விரைவில் அறிவிக்கபடும், அநேகமாக தூத்துகுடியில் கரகாட்டம் களை கட்டலாம்

எப்படி அரசியல் செய்வது?

37 எம்பிக்களை வைத்து என்ன வற்புத்தினீர்கள் என ஆளும் கட்சிக்கு ஏக நெருக்கடி கொடுக்கபடுகின்றது

பதில் அவர்களிடமே இருக்கின்றது, ஆனால் அமைதி ஏன் காக்கின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை

முதல் விஷயம் ஜல்லிகட்டு, அந்த மாபெரும் எழுச்சி வெற்றியாக இந்த அரசும் அந்த எம்பிக்களும் காரணம்

இன்னும் காவேரி நடுவர் ஆணையம், எட்டு வழிசாலை, ஜிஎஸ்டியில் பங்கு, அது போக பல விஷயங்கள் நடந்தன‌

ஜல்லிகட்டை நாங்கள் மீட்டோம் என மார்தட்டினாலே எதிர்கட்சிகளிடம் பதில் இருக்காது

நிறைய விஷயங்கள் அவர்களிடமும் இருக்கின்றது ஆனால்
மறந்துவிட்டார்கள் போல‌

இப்படி இருந்தால் எப்படி அரசியல் செய்வது?

ஒய் மைடியர் சன்

“மம்மி, அந்த ஸ்டாலின் பிரதமராக போகுதா?

ஒய் மைடியர் சன்

பின்னே, தேர்தல் அறிக்கைன்னு என்னமோ வாசிக்குது,நம்ம ஆளுங்க சம்பிரதாயத்துக்கு கூட இல்ல. இது பிரதமர் தேர்தலா இல்ல அவங்க சட்டமன்ற தேர்தலா? ரொம்ப ஷேம் மம்மி

மை சன், அவங்கள பத்தி உனக்கு தெரியாது, எங்களை கண்டு அமெரிக்காவும் ரஷ்யாவும் அஞ்சுகின்றன என்றெல்லாம் கூட பேசியவர்கள் அவர்கள்?

இஸ் இட் மம்மி, இப்போ கூட அகில இந்திய பிரச்சினை எல்லாம் அவங்க சென்னையிலே சால்வ் பண்ற மாதிரி சிரிக்காம பேசுறாங்க மம்மி

உங்க கிராண்ட்மா சொல்லிருக்காங்க, அவனுக அங்க என்ன பொய்யும் சொல்லட்டும், நமக்கு விழவேண்டிய வோட்டு விழுந்தா போதும்னு

ஓஒ மம்மி இதெல்லாம் காமெடி அறிக்கைன்னு தமில்நாடு பப்ளிக் நினைக்க மாட்டாங்க்ளா?

அப்படி நினைச்சா அவனுகளுக்கு பழனிச்சாமி முதல்வரா இருப்பாரா மை சன்?”

தேர்தல் துளிகள் 19/03/2019 (3)

காமெடி வரல்ல கார்த்திக்

பழனிச்சாமியின் அறிக்கை மிக நன்றாக உள்ளது , அதிமுகவிற்காக பிரச்சாரம் செய்வேன் : நடிகர் கார்த்திக்

சமீபத்தில் நடந்த இளையராஜா 75ல் இவர் மேடையில் ஏதோ பேச போக இளையராஜா சொன்னார்

“உனக்கு காமெடி வரல்ல கார்த்திக் அதை விட்டுடு”

மிக கடுமையாக வலியுறுத்திகொண்டே இருப்போம்

பல்வேறு பிரச்சினைகளுக்காக அமையபோகும் மத்திய அரசை வலியுறுத்துவோம் : அதிமுக தேர்தல் அறிக்கை

37 எம்பிக்களை வைத்து இவ்வளவு நாளும் என்ன செய்தீர்கள்?

கடுமையாக வலியுறுத்தினோம்

இனி என்ன செய்வீர்கள்?

கடுமையாக வலியுறுத்துவோம்

அப்படியா?

ஆம் மிக கடுமையாக வலியுறுத்திகொண்டே இருப்போம்

என்னது அங்கிள்

உயிர் கொடுத்தாவது விவசாயிகளை நான் காப்பாற்றிவிடுவேன்” – சீமான்

என்னது அங்கிள் சாக போகின்றாரா? நெசமாவா?

அவர் செத்துட்டா ஈழம் அடைவது ஆரு? இன விடுதலை வாங்குறது ஆரு?

ஆக ஈழவிடுதலை, இன விடுதலை, விவசாயி விடுதலை என பலமுறை அங்கிள் சாக போகின்றார் போலிருக்கின்றது

இந்திய குடியுரிமை

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை – திமுக தேர்தல் அறிக்கை

எதற்கு ராஜிவ் கொலையாளி முருகனுக்கும் சாந்தனுக்கும், ராபர்ட் பயாசுக்கும் இங்கு அடைக்கலம் கொடுக்கத்தானே?

பாம்பின் கால் பாம்பறியும் மிஸ்டர் வைகோ

தஞ்சை பெரிய கோவிலில் என்ன நடக்கின்றது

தஞ்சை பெரிய கோவிலில் என்ன நடக்கின்றது என்பது குழப்பமாகவே இருக்கின்றது

அங்கு கடைசியில் நடந்தது மராட்டியர் ஆட்சி அதன் பின் வெள்ளையர் வந்தனர் அத்தோடு நாடு குடியரசானது

இப்பொழுது மராத்தியர் கால கல்வெட்டுகள் புதுபிக்கபடுகின்றது என ஒரு சாராரும் இல்லை தமிழ் கல்வெட்டுகள் இந்தியாக்கபடுகின்றன என இன்னொரு சாராரும் வாதிடுகின்றனர்

இதுபற்றி உண்மையான தகவல் இல்லை

அப்படி ஏதும் இந்திகல்திணிப்பு நடந்தால் தொல்லியல் துறை மேலான பெரும் நம்பிக்கை தகர்ந்துவிடும், அதன் பின் அக்கோவிலை பாதுகாக்கும் தகுதியினை தொல்லியல் துறை இழந்துவிடும்

எனினும் தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் இருக்கும் ஆலயத்தில் புதிய கல்வெட்டு வர வாய்பு இல்லை என்றுதான் கருத தோன்றுகின்றது

ஆண்களின் தன்மையினை பொறுத்ததே நாடு

“நாடாக ஒன்றோ, காடாக ஒன்றோ,
அவலாக ஒன்றோ, மிசையாக ஒன்றோ,
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை வாழிய நிலனே”.

அதாவது ஏ நிலமே! நீ நாடாகவோ, கழனியாகவோ காடாகவோ, பள்ளமாகவோ அல்லது மேடாகவோ, எப்படி இருந்தாலும் இருக்கலாம்

ஆனால் அங்கு வாழும் ஆண்கள் நல்லவர்களாக இருந்தால் நீயும் நல்ல நிலமாக இருப்பாய், அங்கு வாழும் ஆண்கள் சரியில்லை என்றால் நீ நல்ல நிலமாக இருக்க முடியாது

ஆண்களின் தன்மையினை பொறுத்ததே நாடு

(இது அவ்வையார் பாடல், ஆக அவர் காலத்திலே பொள்ளாச்சி கும்பல் போல சில இருந்திருக்கலாம்)

காலங்கள் மாறலாம், காட்சிகள் மாறுவதே இல்லை..

“சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் மன்னே,
பெரிய கள் பெறினே
யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே,
சிறு சோற்றானும் நனி பல கலத்தன் மன்னே,
பெருஞ் சோற்றானும் நனி பல கலத்தன் மன்னே, 
என்பொடு தடி படு வழி எல்லாம் எமக்கு ஈயும் மன்னே,
அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும் மன்னே,
நரந்தம் நாறும் தன் கையால்
புலவு நாறும் என் தலை தைவரும் மன்னே,
அருந்தலை இரும் பாணர் அகன் மண்டைத் துளை உரீஇ 
இரப்போர் கையுளும் போகி
புரப்போர் புன் கண் பாவை சோர
அம் சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்று வீழ்ந்தன்று அவன்
அரு நிறத்து இயங்கிய வேலே, 
ஆசாகு எந்தை யாண்டு உளன் கொல்லோ,
இனிப் பாடுநரும் இல்லை, பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை,
பனித் துறைப் பகன்றை நறைக் கொள் மா மலர்
சூடாது வைகியாங்குப் பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே.”

அதாவது சிறிதளவு கள்ளைப் பெற்றால் எங்களுக்குத் தருவான். நிறையக் கள்ளைப் பெற்றால் எங்களுக்கு அளித்து நாங்கள் பாட அதைக் கேட்டு மகிழ்ந்து அவனும் உண்பான்.

(இந்த ஜெயமுருகன் , ஜெகத்ரட்சகன் பீர் தொழிற்சாலையினை நினைத்து கொள்ளுங்கள், அவர்கள் நடத்திய கவியரங்கம் எல்லாம் நினைவுக்கு வரவேண்டும்)

சிறிதளவு சோறு இருந்தாலும் அதைப் பலருடன் பகிர்ந்து உண்ணுவான். பெருமளவு சோறு கிடைத்தாலும் அதைப் பலரோடு பகிர்ந்து உண்ணுவான். எலும்புடன் கூடிய தசைக் கிடைத்தால் அதை எங்களுக்கு அளிப்பான்.

(இந்த இடத்தில் உள்ளாட்சி தேர்தல் முதல் டெல்லி மந்திரிசபை வரை மனதில் வரவேண்டும்)

அம்புடன் வேல் உடைய போர்க்களமானால் தானே அங்குச் சென்று நிற்பான். நரந்த நறுமணமிக்கத் தன் கையால் புலவு நாற்றமுடைய என் தலையை அன்புடன் தடவுவான்.

(அவர் நடத்திய போராட்டங்களும் இன்னும் வெற்றிகொண்டான் போன்ற பேச்சாளர்களை ரகசியமாக ரசித்தததும் நினைவுகு வருகின்றது)

அவனுடைய மார்பைத் துளைத்த வேல், அரிய தலைமையையுடைய பெரிய கூட்டமாக உள்ள பாணர்களின் அகன்ற பாத்திரங்களைத் துளைத்து, இரப்போர்க் கைகளையும் துளைத்து, அவனால் பாதுகாக்கப்படுபவர்களின்கண்களில் ஒளி மழுங்கச் செய்து, அழகிய சொற்களும் ஆராய்ந்த அறிவையுமுடைய புலவர்கள் நாவில் சென்று விழுந்தது.

(கலைஞர் இல்லா திமுகவில் வைரமுத்து முதல் பா.விஜய் வரை பல புலவர்களை காணவே இல்லை)

எங்களுக்குப் பற்றுக்கோடாக இருந்தவன் எங்கு உளனோ? இனி பாடுபவர்கள் இல்லை.

பாடுபவர்களுக்குக் கொடுப்போரும் இல்லை.

ஆக பாடலை கூர்ந்து கவனியுங்கள் அதியமான் மன்னனுக்கு பின் அவனை அண்டியிருந்தோரின் புலம்பலாக அவ்வை இப்படி பாடுகின்றார்

இது கலைஞரை நம்பி இருந்த கவிஞர் கூட்டம், அரசியல் அடிப்பொடிகள் முதல் பலருக்கு பொருந்தும்

ராமசந்திரன் இறந்தபின் அங்கும் இதே காட்சிகள் வந்து போயின, அவரை பாடிபிழைத்த பலர் விரட்டி அடிக்கபட்டனர்

அவர்கள் புலம்பலும் இப்படித்தான் இருந்தது

காலங்கள் மாறலாம், காட்சிகள் மாறுவதே இல்லை..

விடுவதாக இல்லை, திருந்துவதாகவும் தெரியவில்லை

திமுகவினை பலருக்கு எதற்காக பிடிக்காதோ அதே காரணங்களை அவர்களும் விடுவதாக இல்லை, திருந்துவதாகவும் தெரியவில்லை

இந்த ஈழ ஆதரவு பிரிவினைவாதம் முதல் பல விஷயங்களில் அவர்கள் மாறவே இல்லை என்பது தெரிகின்றது

இது மகா ஆபத்தானது, இந்த புலிவேட போராளி இம்சைகளை விட ஊழல் கட்சியோ அடிமை கட்சியோ அதிமுக எவ்வளவோ பரவாயில்லை என்பதுதான் இங்குள்ள யதார்த்தமாயிருந்தது

அவர்களின் போலி பகுத்தறிவு கொடுமை இன்னொருபுறம்

இவை எல்லாம் சேர்ந்துதான் மக்களை அதிமுகபால் தள்ளியது

மறுபடியும் மக்களை அப்படியே இன்னொரு கட்சி பக்கம் தள்ளும் காரியங்களை திமுக மிக கவனமுடன் செய்கின்றது

அங்கே கொடும் போர் முடிந்துவிட்டது, அமைதி திரும்பிவிட்டது

அம்மக்களை அங்கு அனுப்புவதுதான் சரி, அதுதான் தர்மமும் கூட‌

வீண் அரசியலுக்கு இந்நாட்டில் வைத்து குடியுரிமை வழங்குவதெல்லாம் சரியல்ல‌

ஈழதமிழர் தாயகம் திரும்பட்டும், அதற்கான விஷயங்களை அரசுகள் செய்யட்டும்

ஒன்றும் ஆகபோவதில்லை

நடக்க போவது பாராளுமன்ற தேர்தல், ஆட்சி அமைக்க போவது பாஜக அல்லது காங்கிரஸ்

நிச்சயமாக திமுக தலமையில் அல்லது அதிமுக தலமையில் மத்தியில் ஆட்சி அமையபோவதுமில்லை அதற்கு வாய்ப்புமில்லை

பின்னர் ஏன் இவர்களுக்கு பக்கம் பக்கமாக தேர்தல் அறிக்கை?

காங்கிரஸ் அல்லது பாஜக அறிவித்தால் ஒரு நியாயம் ஏற்றுகொள்ளலாம்

இவர்கள் இருவரும் சீன பெருஞ்சுவர் நீளத்திற்கு அறிக்கை வாசித்து என்னாகபோகின்றது?

ஒன்றும் ஆகபோவதில்லை

இளையவன் என்று இகழ்ந்தால்

“போற்றுமின் மறவீர், சாற்றுதும் நும்மை,
ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்
தாள் படு சின்னீர்க் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்பு உடைக் கராஅத்து அன்ன என்னை
நுண்பல் கருமம் நினையாது 
இளையன் என்று இகழின், 
பெறல் அரிது ஆடே.”

எதிரிப்டை வீரர்களே கேளுங்கள், சிறுவர்கள் விளையாடக் கலங்கும்படியான கால் அளவுள்ள நீருக்குள் யானையைக் கொன்று வீழ்த்தி இழுத்துச் செல்லும் முதலையைப் போன்ற வர் எம் தலைவன்,

அவன் செய்யும் பல செயல்களைக் கருத்தில் கொள்ளாமல், அவனை இளையவன் என்று இகழ்ந்தால், நீங்கள் வெற்றி பெறுவது அரிது.