திமுகவினை பலருக்கு எதற்காக பிடிக்காதோ அதே காரணங்களை அவர்களும் விடுவதாக இல்லை, திருந்துவதாகவும் தெரியவில்லை
இந்த ஈழ ஆதரவு பிரிவினைவாதம் முதல் பல விஷயங்களில் அவர்கள் மாறவே இல்லை என்பது தெரிகின்றது
இது மகா ஆபத்தானது, இந்த புலிவேட போராளி இம்சைகளை விட ஊழல் கட்சியோ அடிமை கட்சியோ அதிமுக எவ்வளவோ பரவாயில்லை என்பதுதான் இங்குள்ள யதார்த்தமாயிருந்தது
அவர்களின் போலி பகுத்தறிவு கொடுமை இன்னொருபுறம்
இவை எல்லாம் சேர்ந்துதான் மக்களை அதிமுகபால் தள்ளியது
மறுபடியும் மக்களை அப்படியே இன்னொரு கட்சி பக்கம் தள்ளும் காரியங்களை திமுக மிக கவனமுடன் செய்கின்றது
அங்கே கொடும் போர் முடிந்துவிட்டது, அமைதி திரும்பிவிட்டது
அம்மக்களை அங்கு அனுப்புவதுதான் சரி, அதுதான் தர்மமும் கூட
வீண் அரசியலுக்கு இந்நாட்டில் வைத்து குடியுரிமை வழங்குவதெல்லாம் சரியல்ல
ஈழதமிழர் தாயகம் திரும்பட்டும், அதற்கான விஷயங்களை அரசுகள் செய்யட்டும்