தயவு செய்து வோட்டு பண்ணுங்க‌

“கலைஞராலத்தான் இந்த மொபெட் வண்டியில போறேள் , லோகத்துல அவர் இல்லண்ணா நடந்துதான் போகணும் , அப்படித்தானே சொல்லபோறேள்..”

அய்யோ அய்யரே அப்படி எல்லாம் சொல்வோமா? தயவு செய்து வோட்டு பண்ணுங்க‌

உங்களுக்குத்தான் நாங்க தீண்டதகதாவா ஆயிற்றே, ஏன் கை எல்லாம் பிடிக்கிறேள்…

அட காலை கூட பிடிப்போம்

நீங்கதான் சுயமரியாதை கூட்டமாயிற்றே, பையன் இப்படி கும்பிடுறான்?

இங்க பாருங்க, நம்ம பையன் இப்போ காலில் விழ சொன்னாலும் விழுவான்

ஓஓ கோவிலுக்கு வரமாட்டேளே, குங்குமம் வச்சாலும் துடைப்பேளே

அட நீங்க வேற சாமி, ஹோலி பண்டிகை மாதிரி குங்குமம் எல்லாம் அடிச்சி விடுங்க பிரச்சினையே இல்ல‌, அப்புறம் பூனூல் அழுக்காயிற்றா சொல்லுங்க, தம்பி துவைச்சி தருவான்

கலிகாலம், விடுங்கோ நாழியாயிடுத்து

நோ நோ இது தேர்தல்காலம் பெரியமனசு பண்ணுங்க, எங்க ஆட்சியில அய்யர் கடனெல்லாம் உடனே தள்ளுபடி பண்ணிருவோம், அப்புறம் பூசாரிக்கெல்லாம் மானிய விலையில் பெட்ரோல்

அண்ணே தப்பு பண்ணிட்டீயண்ணே

“அண்ணே தப்பு பண்ணிட்டீயண்ணே

இந்த சினிமா ஈழம்னு சுத்தாம, ஒழுங்கா ஆங்கிலத்தில் 2 டிகிரி வாங்கிட்டு பிடல் காஸ்ட்றோ மாவோ புத்தகம் எல்லாம் தமிழில் எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்கும் தெரியுமா?

“புலியரிஞர்” என ஒரு கூட்டம் உன்னை கொண்டாடியிருக்கும் பெரும் அரசியல்வாதியாயிருக்கலாம்

உன்னை போலத்தான் அந்த ஆளும், ஆனால் ஆங்கிலமும் அமைதி தமிழும் அவருக்கு கைகொடுத்தது

மற்றபடி பேச்சு எல்லாம் உன்னை போலத்தான் அண்ணே, வெறும் வாய்சவுடால்

தப்பு பண்ணிட்டியண்ணே, எவ்வளவு பெரிய எதிர்காலம் உனக்கு வீணாய் போயிட்டு தெரியுமா?

ஒரு புலியறிஞர் உருவாகாம போயிட்டாரண்ணே?

என்னமோண்ணே உன் மகனையாவது ஆங்கிலம் நல்லா படிக்க வச்சி “புலியரிஞர்” “பேரோளிஅறிஞர்”னு எதையாவது ஆக்கிருண்ணே…”

சோவியத்தின் கணிப்பு சரியோ

உலகில் எங்கெல்லாம் சமூக, மக்கள் போராளிகள் எல்லாம் உண்டோ அவர்களை எல்லாம் அழைத்து கவுரவபடுத்துவதை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தது சோவியத் யூனியன்

ஆம் பாட்டாளிகளின் பூமி அன்று மக்களுக்காய் உழைப்பவர்களையும், சமூக போரளிகளையும் இனம் கண்டு அழைத்தது

அதில் காமராஜர், ஜெயகாந்தன் என பலர் தமிழகத்திலிருந்து சென்றனர், அந்நாடும் கவுரவபடுத்தியது

ஆனால் சமத்துவம், சமதர்மம், பெண் விடுதலை சாதி ஒழிப்பு என சொல்லிகொண்டிருந்த திக திமுகவினை சோவியத் யூனியன் ஏறேடுத்தும் பார்க்கவில்லை ஏன்?

யார் தமிழகத்தில் உண்மையான மக்கள் சேவகர்கள் என்றும், யார் அமெரிக்காவின் கைகூலி இந்திய தேசியத்து எதிரிகள் எனவும் மிக நுணுக்கமாக தெரிந்து வைத்திருந்தது அந்த நாடு

அதனால்தான் அண்ணா போன்றவர்களை அந்நாடு கொஞ்சமும் சீண்டவில்லை ஆனால் ஜெயகாந்தனை கொண்டாடியது

சோவியத்தின் கணிப்பு சரியோ என அச்சபடும் நிகழ்வு என்னவென்றால்

அண்ணாவுக்கு அமெரிக்கா கொடுத்த முக்கியத்துவமும் அந்த டாக்டர் பட்டமும் கடைசி நேர கடும் சிகிச்சையும்

உலக அரசியலோடு அந்த காட்சிகளை கவனியுங்கள், திக திமுக எல்லாம் யாரின் உருவாக்கம் என்பது நன்றாக தெரியும்

ந‌ரம்பு தளர்ச்சி எதனால் வரும்

திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்பதால் மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாது… ராஜேந்திரபாலாஜி

நரம்பு தளர்ச்சி எப்பொழுது வரும்?

குடித்தால் வரும்

அப்படியானால் குடியினை தடுத்தால் என்ன?

அய்யோ நரம்புதளர்ச்சியாகி செத்துவிடுவார்கள் , அதனால் குடி இருந்தே தீர வேண்டும்

குடித்தால்தான் நரம்பு தளர்ச்சி வருமே

அது தளராமல் இருக்கத்தான் குடிக்க சொல்கின்றோமே??

சரி ந‌ரம்பு தளர்ச்சி எதனால் வரும்

குடித்தால்தான் வரும்

பெரியாரை கட்டி தழுவுவதா பெண்ணியம்??

விவேகானந்தர் என்றொரு மகான் இருந்தார், அவரின் அறிவு மேலும் சில பெண்களுக்கு மயக்கம் இருந்தது

உங்களை போல அறிவான மகனை பெற ஆசை அதனால் என்னை மணந்துகொள்ளுங்கள் என தானாக மயங்கி அவர் முன் நின்ற மங்கையர் ஏராளம்

ராமகிருஷ்ண பரம்மஹம்சரே திருமணமானவர் என்பதால் விவேகானந்தர் திருமணம் செய்ய தடையேதுமில்லை

ஆனால் அந்த இளம் துறவி சொன்னார்” அம்மா, என்னை போல் ஒரு மகனை பெற்றேடுப்பதை விட என்னையே மகனாக தத்தெடுங்கள் தாயே”

ஆம் அறிவு என்பதும் தெளிவு என்பதும் பகுத்தறிவு என்பதும் அதுதான்

இங்கோ சிலதுகள் இப்பொழுது ஈரோட்டு கிழவன் இருந்தால் ஓடிபோய் கட்டுவேன், நொட்டுவேன் என என பெண்ணியம் பேசுகின்றன‌

பெரியாரை கட்டி தழுவுவதா பெண்ணியம்??

அதைத்தான் சன்னிலியோன் மிக அழகாக செய்வாரே? அவரை பெரியாரிஸ்ட் என சொல்ல‌ முடியுமா?

ஏன் அவருக்கு மகளாய் பேத்தியாய் இருக்க கூடாதா? எல்லோருக்கும் மணியம்மை வழிதான் பிடிக்குமா?

ஈரோடு பொள்ளாச்சிக்கு தொலைவில் இல்லை என்பது வேறு விஷயம்

மறுக்க யாராலும் முடியாது

ஜல்லிகட்டு போராட்டம் பெரும் எழுச்சியாய் இருந்தபொழுது தமிழக மக்களுக்கு ஆதரவாக சட்ட திருத்தம் தந்ததும் இந்த அரசுதான்

தமிழக மக்களின் நியாயமான உணர்வுக்கு இந்த அரசு மதிப்பு கொடுத்தது

தமிழன் கலாமிற்கு மாபெரும் நினைவிடம் கட்ட முனைந்தது இந்த அரசு, திராவிட சிங்கங்கள் கலாமிற்காக துரும்பு கூட கிள்ளி போட்டதில்லை

குலசேகரன் பட்டினத்தில் கலாம் பெயரில் ராக்கெட் ஏவும் நிலையம் அமைக்கபடுமென அறிவித்தது இந்த அரசுதான்

பாகிஸ்தானால் பாதிக்கபட்ட தமிழக விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு நியாயம் கிடைத்ததும் இந்த ஆட்சியில்தான்

எய்ம்ஸ் மருத்துவமனை முதல் தேஜஸ் ரயில்வரை கொண்டு வந்ததும் இவர்களே

ரயில் போக்குவரத்திலும் பல நன்மைகள் இங்கு கிட்டியுள்ளன

இணையம் போன்ற மாபெரும் துறைமுகங்களை நிர்மானிக்க முயன்றதும் இவர்களே

தனுஷ்கோடியினை மறுபடியும் பொலிவானதாக்க முயன்றதும், பாம்பன் பாலத்தை சீரமைத்ததும் இந்த அரசுதான்

தனுஷ்கோடியினை மற்ற அரசுகள் தொட்டும் பார்க்கவில்லை

தாதுமணல் தொழில் எனும் பெயரில் அட்டகாசம் நடந்ததை எல்லாம் முறித்து போட்டது இந்த அரசுதான்

தென் தமிழக கடற்கரைக்கு தனி கவனம் எடுத்தது இந்த அரசுதான்

மீணவர்கள் சுடபடுவதை நிறுத்திகாட்டியதும் இந்த அரசுதான்

ஆழ கவனித்தால் ஒன்று புரியும், இப்பொழுதுதான் கிழக்கு கடற்கரையில் நடக்கும் கடத்தல்கள் தடுப்பு பற்றிய செய்திகள் அதிகம் வருகின்றன‌

கடத்த தயாரான கஞ்சா போன்ற பொருட்கள் எல்லாம் அகப்படுகின்றன, கடத்தல்கள் முடிவுக்கு வருகின்றன இலங்கை துப்பாக்கி சூடு இல்லை

என்.ஜி.ஓ என கணக்கில்லாமல் வந்த பணங்களை நிறுத்தி பல தேசவிரோத மற்றும் பிரிவினை வாதசக்திகளுக்கு கடிவாளம் போட்டது இந்த அரசுதான்

நீட் தேர்வு என்றாலும் மாணவ உலகம் ஸ்தம்பிக்கவில்லை, மருத்துவ கல்லூரிகள் தகுதிமிக்க மாணவர்களை சேர்க்கத்தான் செய்தது

இனி குறையவே செய்யாது என்றிருந்த நிலத்து விலை இந்த ஆட்சியில் குறைந்தது, நல்ல விஷயம் அது

நடக்குமோ இல்லையோ, கோதாவரி காவேரி இணைப்பு பற்றி கொஞ்சமாவது சொன்னவர்கள் அவர்கள்தான்

காவேரி சிக்கலுக்கு மாற்றுவழி உண்டு என சொன்னது இவர்கள்தான்

என்னமும் அரசியலுக்காக ஆயிரம் சொல்லட்டும், காமராஜரின் காலத்திற்கு பின் பல நல்ல மத்திய அரசு திட்டங்கள் இப்பொழுதுதான் இங்கு வர தொடங்கியிருக்கின்றன‌

அதை மறுக்க யாராலும் முடியாது, இப்படி ஒரு சில பக்கங்கள் அவர்களுக்கு இருக்கத்தான் செய்கின்றது

ஜாதி ஒடுக்குமுறையும் அதில் பாதிக்கபட்டவனுக்குத்தான் தெரியும்

தலைவலியும்,காய்ச்சலும் மட்டுமல்ல ஜாதி ஒடுக்குமுறையும் அதில் பாதிக்கபட்டவனுக்குத்தான் தெரியும்

இந்தியாவின் ஜாதிய கொடுமைகள் தெரியவேண்டுமானால் அம்பேத்கரின் வாழ்க்கையினை ஒருமுறை படியுங்கள், காந்திக்கு சற்றும் குறையாத மாமனிதன் அவர் என்றான் ஒரு மேல்நாட்டு அறிஞர்

“உங்கள் கோயிலுக்குள் நாங்கள் நுழையமுடியாது, உங்கள் வீதிகளில் நாங்கள் நடக்கமுடியாது, உங்கள் உடைகளை போல நாங்கள் அணியமுடியாது, உங்கள் கிணறு எமக்கு நீர் தராது, காரணம் எங்களை தீண்டினாலே பாவம் எனும் நிலையில் எப்படி வாழ்வது?” அவர் பல போராட்டங்களை நடத்தினார்

அதில் ஒன்றுதான் மகத் சத்தியாகிரகம் இதே மார்ச் 20ம் நாள், 1927ல் நடந்தது

அதற்கு காரணம் பெரியாரின் வைக்கம் போராட்டம், அதுதான் அம்பேத்கருக்கு வழிகாட்டியது

மக்களை திரட்டினார்

“நாமும் மற்றவர்களைப் போல் மனிதர்கள் தாம் என்பதை நிரூபிப்பதற்காக மட்டுமே நாம் அந்த குளத்திற்கு போக விரும்புகிறோம் , ” என சொல்லிவிட்டு கிளம்பினார்

தடையினை மீறி அந்த பம்பாய் மகத் பகுதி ஆலயகுளத்திற்கு சென்று நீராடினார், அது பெரும் புரட்சியாயிற்று

வட இந்தியாவில் நடந்த முதல் தலித் உரிமை போராட்டம் அதுவே, உலகம் அதை உற்று பார்த்தது, அம்மக்களின் உரிமை போராட்டத்தை அது ஆணித்தரமாக சொல்லிற்று

மேல் வர்க்கத்திற்கு சர்ச்சையுமாயிற்று

தீண்டாமை கொடுமை நடந்துவிட்டதாகவும், அபச்சாரம் நிகழ்ந்ததாகவும் பூஜைகள் ஆகமவிதிபடி நடந்தன‌

அம்பேத்கர் பின்னாளில் சாதியற்ற புத்தமதத்திற்கு திரும்ப இதுதான் முதல் காரணம்

அது பெரும் சட்ட திருத்தம் இல்லா காலம் என்பதால் அம்பேத்கருக்கு அது தோல்வியே

ஆனால் 10 ஆண்டுகளில் அக்குளம் எல்லா மக்களும் பயன்படுத்தலாம் என தீர்ப்புபெற அச்சம்பவம் காரணமாயிற்று

தலித்துகளின் விடுதலை அதிலிருந்துதான் தொடங்கிற்று

இதெல்லாம் பிராமண கொடுமை என சொன்னாலும் இதன் எதிரொலி தென்னகத்திலும் இருந்தது

ஆம் வடக்கே அம்பேத்கர் செய்த மகத் புரட்சி மதுரை ஆலய நுழைவு போராட்டமாகவும் வெடித்தது

அதை செய்தவர் வைத்தியநாதய்யர் எனும் பிராமணர், அவருக்கு உதவியவர் முத்துராமலிங்க தேவர்

கவனித்து பாருங்கள்

அந்த கொடுமையான காலகட்டத்தில் முழுக்க வைதீக கட்டுபாடுகளில் இருந்த காலத்தில் நல்ல பிராமணர்களும் இருந்திருக்கின்றார்கள்

அப்படித்தான் பசவண்ணா கன்னடத்தில் பெரும் புரட்சி செய்திருக்கின்றார் அதுவும் 12ம் நூற்றாண்டிலே

அம்பேத்கரின் மகத் புரட்சியினை தொடர்ந்து இங்கு மதுரையில் பிராமண வைத்தியநாதய்யர் கடும் எதிர்ப்புகளையும் மீறி தாழ்த்தபட்ட மக்களை ஆலயத்திற்கு அழைத்து சென்றிருக்கின்றார்

நல்லோர்கள் எல்லோரும் ஒரே வரிசை என்பதே இது

“பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய
மா மலை பயந்த காமரு மணியும்,
இடை படச் சேய ஆயினும் தொடை புணர்ந்து
அரு விலை நன் கலம் அமைக்கும் காலை
ஒரு வழித் தோன்றியாங்கு, என்றும் சான்றோர் 
சான்றோர் பாலர் ஆப,
சாலார் சாலார் பாலர் ஆகுபவே..”

அதாவது பொன், பவளம், முத்து, நிலைபெற்ற பெரிய மலை தரும் விரும்பத்தக்க நீலமணி, ஆகியவை ஒன்றுக்கொன்று தொலைவான இடத்தில் தோன்றினாலும், பெருமதிப்புடைய நல்ல அணிகலன்களில் தொடுக்கும் பொழுது, ஒரே இடத்தில் சேர்ந்திருக்கின்றன.

அதைப் போல், எப்பொழுதும் சான்றோர்கள் சான்றோருடன் சேர்வர். சான்றாண்மை இல்லாதவர்கள், சான்றாண்மை இல்லாதவர்களையே சேர்ந்திருப்பர் என்பது கண்ணகனார் பாடல்

அவ்வாறே பெரியார், அம்பேத்கர், வைத்தியநாத அய்யர் எல்லோரும் ஒரே வரிசையே

அந்த தலித் மக்கள் என்ன கேட்டார்கள்? தங்களை மனிதர்களாக அங்கீகரிக்க சொன்னார்கள்

நாங்கள் ஆடுமாடுகளல்ல, இதயமுள்ள மனிதர்கள் எங்களை மன்னர்களாக நடத்த வேண்டாம் மனிதர்களாக நடத்த வேண்டும் என கதறினார்கள்

ஆப்ரிக்க அடிமைகள் வெள்ளையனிடம் கதறிய கதறல் அது

அந்த கதறலுக்கு நியாயம் கேட்ட பசவண்ணா முதல் பெரியார், அம்பேத்கர், வைத்தியநாதர், பாரதி என எல்லோரும் ஒரே வரிசையே

இன்று அந்த மகத் புரட்சியின் நினைவுநாள், அந்த கொடுங்காலங்கள் இனி திரும்பாது , திரும்பவே திரும்பாது திரும்பவும் கூடாது

ஒரு கொடூர காலம் எப்படி இருந்தது என்பதும் அதை எப்படி எல்லாம் அம்பேத்கர் போன்றவர்கள் கடந்தார்கள் என்பதுமே இன்று நோக்க வேண்டியவை

வரலாற்றில் பெரும் திருப்பம் கொடுத்த நாள் இது, அம்மக்களின் பெரும் வலிகளை உலகிற்கு சொன்ன நாள் இது