Where are you?

ஏம்பா திருமா, அந்த பானை சின்னத்தால் தலையினை மூடி இருக்கின்றீரா? கொஞ்சம் கழற்றும்

ஜெகத்ரட்சகன் கோஷ்டி இலங்கையில் 28 ஆயிரம் கோடி முதலீடு செய்கின்றதாமே தெரியுமா?

ஏகபட்ட இலங்கை இருப்பதால் உங்களுக்கு புரியும்படி சொல்கின்றோம், இந்த இனபடுகொலை எல்லாம் நடந்ததே நீர் கூட ரஜினி போக கூடாது என்றெல்லாம் சொன்னீரே அந்த இலங்கை

மிஸ்டர் எட்டுகட்டை வைகோ கேட்டுச்சா?

அந்த தமிழர் ரத்தம் படிந்த இலங்கையில் திமுக கட்சி உறுப்பினர் 28 ஆயிரம் கோடி முதலீடு செய்கின்றாராம்

கழுத்தில் கிடக்கும் அந்த துண்டில் தூக்கு போட்டு உடனே சாகவும்

வேல்முருகன், திருமுருகன் எல்லாம் இப்பொழுது மகா சைலண்ட்

அங்கிள் சைமன் வேர் ஆர் யூ?

எதிர்பார்ப்பு

ராமநாதபுரம் எப்பொழுதும் ஆன்மீகமும் தேசியமும் மிக்கோரின் கோட்டையாகவே இருந்தது

ஏகபட்ட சாட்சிகள் உண்டெனினும் விவேகானந்தரை இந்துமத பிரதிநியாக அமெரிக்காவுக்கு அனுப்பிய ராமநாதபுர மன்னரான சேதுபதியும்

தேசியமும் தெய்வீகமும் எம் கண்கள் என வாழ்ந்த பசும்பொன் சிங்கமும் அதில் குறிப்பிடதக்கவர்கள்

அந்த வழியில் மிகபெரும் தேசியவாதியாக நயினார் நாகேந்திரன் என்பவரை ராமநாதபுரம் உருவாக்குமா என்பதுதான் தென் தமிழக எதிர்பார்ப்பு…

வாரிசு அரசியல்

மாநில கட்சிகள் ஏன் வாரிசு அரசியலில் மாட்டிகொள்கின்றன?

விஷயம் ஒன்றுமில்லை

தேசிய கட்சி நாட்டு நலனை நிறுத்தும், நாடே பிராதனம் நாட்டு முன்னேற்றமும் பாதுகாவலுமே நலம் என கொள்கை கொண்டிருக்கும்

மாநில கட்சிகள் சுயநலமானவை, இந்தியர் என்ற நிலையிலிருந்து நாம், நமது மொழி நமது மொழி என அவர்கள் வட்டம் சுருங்குகின்றது

அது அதன் பின் தன்வீடு தன் குடும்பம் என இன்னும் சுருங்குகின்றது

எந்த சுயநலத்தில் மாநில கட்சி கொடிபிடிக்கின்றார்களோ அதே சுயநலத்தில் ரகசியமாக குடும்ப நலனையும் கொண்டுவந்துவிடுகின்றார்கள்

அதுதான் அடிப்படை உண்மை

சுயநலங்களின் மொத்த உருவம் மாநில கட்சிகள், அது அந்த கட்சி தலைவர்களின் உண்மை உருவமான சுயநலத்தில் குடும்ப கட்சியாக மாறிவிடுகின்றன‌

தேசம் என நாட்டை நேசிப்பவர்களுக்கு அந்த சிக்கல் இல்லை, அக்கட்சிகளிலும் வாரிசு சிக்கல் இல்லை காங்கிரஸ் தவிர‌

தேசிய கட்சிகள் என்பது சேவை, மாநில கட்சிகள் என்பது தனியார் கம்பெனி

அது திமுக முதல் ராஷ்டிரிய ஜனதாதளம் வரை நாடெல்லாம் பல கம்பெனிகளில் தெரிகின்றது.

அபயம் அளிக்கும் அரசியல்

பாகிஸ்தானில் இம்ரான்கான் வென்றபின் பல கிரிக்கெட் வீரர்களுக்கு அந்த ஆசை ஊற்றெடுக்கின்றது

இப்பொழுது அப்படி சிக்கி அந்த வெள்ளத்தில் அடித்து செல்லபட்டிருப்பவர் கவுதம் கம்பீர்

அன்னார் கொஞ்ச நாளாகவே நாட்டுபற்று பொங்கி பேசிகொண்டிருந்தார், இப்பொழுது பாஜகவில் இணைந்தே விட்டார்

எல்லாவற்றிற்கும் காரணம் இந்த இம்ரான் கானும் எம்பியாகிவிட்ட சச்சின் டென்டுல்கரும்

ஆக ரிட்டயர்டு நடிகர்களுக்கு அபயம் அளித்த அரசியல் இனி ரிட்டயர்டு கிரிக்கெட்டர்களுக்கும் இடமளிக்க தொடங்கிவிட்டது

ஆனால் இல்லை

இந்த தேர்தலில் ஒரு விஷயம் கவனிக்கபடுகின்றது

அந்த பிராமண எதிர்ப்பு கோஷம் இப்பொழுது இல்லை, வழக்கமாக ” பார்ப்பான் பார்ப்பான்” என பொங்கி தீர்ப்பார்கள்

பாஜகவினை மூர்க்கமாக எதிர்க்கும் இந்நேரம் நிச்சயம் பார்ப்பன எதிர்ப்பு எனும் கோஷம் வரவேண்டும்

ஆனால் இல்லை

ஆக திக திராவிட கும்பலுக்கு பார்ப்பன எதிர்ப்பு இனி எடுபடாது என தெரிந்துவிட்டது

மவுனமாக அதை கைவிடுகின்றார்கள்

இப்படி இந்துமத எதிர்ப்பையும் விரைவில் விடுவார்கள் என எதிர்பார்ப்போம்..

ஆக கலைஞர் எப்பொழுது காலாவதியாவார்? பிராமண எதிர்ப்பினை எப்பொழுது கைவிடலாம் ? என்றொரு கூட்டமே காத்துகொண்டிருந்தது இப்பொழுதுதான் புரிகின்றது

தேர்தல் அறிக்கை – டிடிவி

டிடிவி தினகரனும் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார்

விவசாயிகளுக்கு இலவசமாக ஆழ்குழாய் கிணறே அமைத்து தருவோம் என்பதில் இருந்து வெளிநாட்டு வாழ் தமிழருக்கு தனி வாரியம் அமைப்போம் என்பது வரை முழங்கியிருக்கின்றார்

அது எப்படி மத்திய அரசில் வெளிநாட்டு வாழ் தமிழருக்கு தனி வாரியம் அமைப்பார்கள்?

மதுபான ஆலையினை மூடுவார்களாம், ஏன் மிடாஸை இபொழுதே மூடினால் என்ன என்றால் மூடமாட்டார்கள்

இருக்கட்டும் இது மக்களுக்கு வாசிக்கபட்ட அறிக்கை

ஆனால் கட்சிக்குள் வாசிக்கபட்ட அறிக்கை என்னவாக இருக்கும்?

தேர்தல் முடிவில் அந்த பன்னீர் செல்வத்தையும் பழனிச்சாமியினையும் பாலா பட ஹீரோக்கள் போல ஆக்கிவிட வேண்டும்

“அவன் இவன்” படத்து ஆர்யா விஷால் போல இருவரையும் ஆக்கியே தீரவேண்டும்.

தேர்தல் துளிகள் 22/03/19

தேனியில் பன்னீர்செல்வம் மகனுக்கு எதிராக தினகரன் களமிறங்குவாரா?

ஆமாம், சிட்டி ரோபாவினை அழிக்க அதை உருவாக்கிய டாக்டர் வசீகரன் வந்தால்தான் முடியும்

***************

இப்பொழுது மிக சரியாக பேசிகொண்டிருக்கும் ஒரே நபர் சுப்பிரமணியன் சாமி ஒருவர்தான்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கைகள் விஷயம் , 7 பேர் விடுதலை சாத்தியமே இல்லை என உண்மையினை சொல்லும் ஒரே நபர் அவர்தான்

************

ஹலோ.. சத்தியமூர்த்தி பவனுங்களா?

கடைய எப்ப சார் திறப்பீங்க?…

(கடந்த ஒருவாரமாக சங்கத்திற்கும் அவர்களுக்கும் இந்த காட்சிதான் ஓடிகொண்டிருக்கின்றது..)

**************

சேலம் திமுகவின் மாபெரும் கோட்டை- முக ஸ்டாலின்

அதானே, அந்த தியாகி வீரபாண்டி ஆறுமுகமும் அவர் பெயர் அடிபட்ட பல கொலைகளும் தமிழகம் மறக்குமா என்ன?

எவ்வளவு பெரும் வரலாறு?

**************

கன்னியாகுமர் மாவட்டத்தில் பார்மசி கல்லூரி தாளாளர் மேல் பெரும் பாலியல் குற்றசாட்டு கிளம்பியிருகின்றது

ஆனால் ஒரு பரபரப்பில்லை , இவ்வளவுக்கும் பொதுமக்கள் அடித்து துவைத்திருக்கின்றார்கள்

ஏன் அப்படி? அதுதான் அரசியல்

ஆம், இந்த கல்லூரி தாளாளர் ஒரு கிறிஸ்தவர்..

சிறுபான்மையினர் போர்வையில் எது செய்தாலும் இங்கு பிராதன கட்சிகள் கண்டுகொள்ளாது

நக்கீரன் பத்திரிகை இங்கு ஏன் செல்லவில்லை என நாம் கேட்க கூடாது…