பகத்சிங்

மிக இளம்வயதிலே சுதந்திர இந்தியா பற்றி சிந்தித்து, போராடி வெறும் 23 வயதிலே தனது வாழ்க்கையை முடித்த தியாகி, நிச்சயம் நினைவுகூற தக்கவர்.

1919ம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த பின்னால் 12 வயது சிறுவனாக, இரத்தம் சிந்தியமண்ணை எடுத்து தனது ஆடையில் முடிந்துகொண்டு போராட புறப்பட்ட ஒரு இளைஞன்,

அமைதியான முறையில் போராடிகொண்டிருந்த பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராயின் படுகொலை அவனை போராளியாக்கி கொலைகுற்றவாளி ஆக்கிற்று.

சாண்டர்ஸின் கொலையில் தேடபடும்பொழுதே ஆட்சியாளர் மன்றத்தில் ஒரு சட்டத்தை கண்டித்து குண்டுவீசி, அதன் நியாத்தை அமைதியாக வெளிகாட்டிய போராளி.

அக்குண்டுவீச்சில் யாரும் கொல்லபடவில்லை எனினும், இவரால் ஏற்பட்ட எழுச்சியினை கண்டு பயந்த அரசாங்கம் அவரை கொல்ல இது பெரும் வாய்ப்பாக கருதிற்ற, தூக்கு தண்டனை விதித்தது.

ஆசிரமம்,சத்தியாகிரகம்,ஆண்மீக சோதனை இன்னும் என்னவெல்லாமோ செய்துகொண்டிருந்த காந்தி, பகத்சிங்கினை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை, (காந்தி எனும் பெயர்கொண்டோர் யாரையும் தூக்கில் இருந்து காப்பாற்றமாட்டார்கள் போல..)
வன்முறைக்கு நான் எதிரி என சொல்லிவிட்டு “ரகுபதிராகவ ராஜாராம்” என பாட சென்றுவிட்டார் காந்தி,

அப்படியானால் லாலா லஜபதிராய் தானே தலையில் அடித்து செத்துவிட்டாரா என கேட்டால் அமைதியாக ஆட்டுப்பால் குடித்துகொண்டிருந்தார்.

வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது என சொன்னார் காந்தி, பகத்சிங்கினை அவர் ஆதரிக்கவில்லை.

அதே நேரம் பகத்சிங்கிற்கும் நாட்டுக்காக சாவதில் தயக்கமேதுமில்லை.

24 வயதில் சர்ச்சைக்குள்ளான முறையில் தூக்கிலபட்டதாக அறிவிக்கபட்ட பகத்சிங்கின் மரணம் மிகுந்த சர்ச்சைக்குள்ளானது, அதில் மறைக்கபட்ட பல விஷயங்கள் உண்டு.

குறுகிய காலம் வாழ்ந்தாலும் மாபெரும் எழுச்சியினை அவரின் மரணம் தோற்றுவித்து அடுத்த 15 ஆண்டுகளில் விடுதலை கொடுக்கும் அளவிற்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மாற்றம் கொண்டுவந்தது.

ஆனால் ஒரு வகையில் பகத்சிங் அதிர்ஷ்டசாலி, அவன் விரும்பிய சுதந்திரத்தினை காணாவிட்டாலும், அவனால் தாங்கமுடியாத இந்திய பிரிவினையும்,அதுவும் சொந்த பஞ்சாப் 3 துண்டாக உடைக்கபட்ட கொடுமையும் காண அவன் இல்லை.

அன்று

சாண்டர்ஸ் கொல்லபட்டபொழுது மொத்த இந்தியாவும் ஆர்ப்பரித்தது, பகத்சிங் தீர்ப்பு அறிவிக்கபட்டபொழுது ெல்லி,மும்பை,கல்கத்தா,சென்னை, லாகூர், கராச்சி என மொத்த‌ இந்தியாவும் கதறியது.

இன்று

அவன் போராடிய லாகூரில் இருந்து பல ஏவுகனைகள் அணுகுண்டோடு இன்று டெல்லியையும்,மும்பையும் குறிபார்த்து நிற்கிறது.

அவனுக்காக பாரதியோடும், வ.வு.சிதம்பரத்தோடும் அழுத தமிழகத்தின் கடற்கரையில் இந்திய கப்பல்களால் லாகூரும்,கராச்சியும் 24 மணிநேரமும் குறிவைக்கபடுகிறது.
காலம்தான் என்ன விசித்திர விளையாட்டுக்களை எல்லாம்ஆடுகிறது..

இன்று அந்த மாவீரனின் இறந்தநாள், அவன் பிறந்த லாகூர் இந்தியாவில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவன் நினைவுகளை இத்தேசம் ஒருநாளும் மறக்காது, இந்திய மண்ணோடும் , காற்றோடும் கலந்தவன் அவன்

அவனுக்கு வீர வணக்கம்…

பெண்ணாதிக்க சமூகம் இது..

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தார் என நிர்மலாதேவி படாதபாடு படும் தமிழகத்தில் அதே வகையில் ஒரு அம்மணி சிக்கியிருக்கின்றார் ஆனால் பரபரப்பில்லை

பள்ளி ஆசிரியை ஒருவர் வட மாவட்டம் ஒன்றில் பள்ளி மாணவர்களை ஆம் மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்ததாக விஷயம் விஸ்வரூபமாகின்றது

அவரை பணி நீக்கம் மற்றும் போக்சோ சட்டப்படி தன்டிக்க இருப்பதாக செய்திகள் வந்தது ஆனால் உறுதியில்லை

ஆக ஆண் மாணவர்களுக்கு சமூகத்தில் பாதுகாப்பில்லை என்பது உறுதியாகின்றது

இதுபற்றி எல்லாம் யாராவது பேசுவார்களா? கொடிபிடிப்பார்களா நிச்சயம் இல்லை

பதின்மவயது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மிகபெரும் பாலியல் தொல்லை இங்கு கொடுக்கபட்டு கொண்டேதான் இருகின்றது

ஆனால் பெண் என்றால் பொங்கும் சமூகம் ஆண்கள் பாதிக்கபட்டால் கண்டுகொள்வதில்லை

பெண்ணாதிக்க சமூகம் இது..

தமிழக அரசும் இதை பின்பற்றலாம்

வெயில் கொடுமை தொடங்கிவிட்ட நிலையில் இந்தியாவிற்கு ஒரிசா அரசு வழிகாட்டுகின்றது

இப்பொழுதெல்லாம் ஒரு மாநில அரசு மிக சிறப்பாக நடக்கின்றது என்றால் அது ஒடிசா அரசுதான்

ஆம், உலக அளவிலான ஹாக்கி போட்டியினை அது நடத்திகாட்டியவிதம் அவ்வளவு அழகானது, வியந்து பார்க்கபட்டது

அது போக ஏக நல்ல விஷயங்கள்

இப்பொழுது வெயில் கொடுமையிலிருந்து மாணவர்களை காக்க அதிரடி திட்டங்களுக்கு வந்துவிட்டார்கள்

பள்ளி காலையே தொடங்கி 11.00 மணிக்குள் முடியுமாம், வெயிலில் மாணவர்களை விடவே கூடாதாம்

மீறி வெயிலில் வதைத்தால் கடும் தண்டனையாம், இது போக மாணவர்களையும் ஊழியர்களையும் வெயிலிலிருந்து காக்க கடும் அறிவிப்புகள்

தமிழக அரசும் இதை பின்பற்றலாம் ஆனால் தேர்தல் பரபரப்பில் அவர்களே கடும் வெயிலில் சுற்றுவதால் இதை சிந்திக்க நேரமில்லை

பின் தங்கிய மாநிலம் என கருதபட்ட ஒரிசா, ஒடிசா ஆனதிலிருந்து பெரும் மாற்றம் வந்திருக்கின்றது

விரைவில் “ஒடிசாவினை பார் திருந்து” என மற்ற மாநிலங்கள் சொல்ல காலம் நிச்சயம் வரும்..

20 வருடமாக அசைக்க முடியாமல் ஆளும் நவீன் பட்நாயக்கின் ஆட்சியில் ஒடிசா வேகமாக மாற்றம் பெறுகின்றது என்பது மட்டும் உண்மை

மனிதர் கலைஞர் சாதனை, ஜோதிபாசுவின் சாதனை எல்லாம் தவிடு பொடியாக்கி விடுவார் என இப்பொழுதே சொல்லலாம்

எச்.ஏ.எல் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்..

வரலாற்றில் முதன் முறையாக இந்திய தயாரிப்பு நிறுவணமான தேஜஸ் விமானங்களை வெளிநாட்டு ராணுவ விமான கண்காட்சிக்கு அனுப்பியிருக்கின்றது

ஆம் மலேசியாவில் நடைபெறும் விமான கண்காட்சிக்கு அது அனுப்பபட்டிருக்கின்றது

ஒரு நாடு போர் விமான கண்காட்சி நடத்துகின்றது என்றால் அதற்கு ராஜதந்திர அர்த்தம் என்னவென்றால், நாங்கள் போர் விமானம் வாங்க தயாராக இருக்கின்றோம்

அதற்காக பல நாடுகளுக்கு அழைப்பு விடுக்கபட்டது, பாகிஸ்தானின் ஜே7க்கும் அழைப்பு விடுத்தது அது சீன தயாரிப்பு

ஆனால் பாகிஸ்தான் கலந்துகொள்ளவில்லை

இதனால் இந்திய மற்றும் தென்கொரிய விமானங்களை மலேசியா வாங்க வாய்ப்பு அதிகம்

மலேசியா இதில் அட்டகாச அரசியல் செய்கின்றது

அதாவது மலேசியாவின் பிரதான ஏற்றுமதியான பாமாயிலை வாங்க ஐரோப்பிய நாடுகள் ஆர்வம் காட்டவில்லை, ஏதோ சொல்லி தடையிடுகின்றன‌

அப்படி எங்கள் பாமாயிலை வாங்காவிட்டால் ஐரோப்பிய விமானங்களை வாங்கமாட்டோம் என சொல்லிவிட்டது மலேசியா

இந்நிலையில்தான் விமான கண்காட்சி நடக்கின்றது

அவர்களுக்கு 36 விமானங்கள் தேவையாம், எச்.ஏ.எல்லின் தேஜசும் களத்தில் இருக்கின்றது

ஒரு கேள்வி எழலாம்?

இந்திய படைகளுக்கு இல்லாமல் ஏன் தேஜஸ் வெளிநாட்டுக்கு விற்படும் என்பதுதான் அது.

இந்த ஆண்டிற்குள் 78 தேஜஸ் விமானங்கள் இந்திய விமானபடையிடம் ஒப்படைக்கபடும் என சொல்லியிருக்கின்றது எச்.ஏ.எல்

எப்படியோ வரலாற்றில் முதன் முறையாக இந்திய தயாரிப்பு போர்விமானம் ஏற்றுமதிக்கு வந்திருக்கின்றது

காங்கிரஸ் அரசுதான் இதை தொடங்கியது, மோடி அரசு கைவிடாமல் காத்தது

நாட்டின் பெருமையினை உயர்த்திய எச்.ஏ.எல் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்..

எப்படிபட்ட பல்டி பார்த்தீர்களா?

கொஞ்சநாளாக வடுக வந்தேறி எனும் பிரசித்திபெற்ற அங்கிளாரின் முழக்கம் காணாமல் போனதிலும் அர்த்தம் இருந்திருக்கின்றது

விஷயம் படுகாமெடியானது

அதாவது இந்த காளிமுத்து அதாவது சைமனின் மாமனாருக்கு இரு மனைவிகள் முதலாம் மனைவி நிர்மலா, அவர் தேவர் சாதி ஆனால் அதைவிட கிறிஸ்தவ வெறியர். இந்த காளிமுத்துவின் பகுத்தறிவு நிர்மலாவிடம் மண்டியிட்டது விளைவு புனிதா, டேவிட் அண்ணாதுரை, செந்தமிழ் சாம்ராஜ்,தென்றல் வேதமணி, ரோஸ்லின் கிரேஸ்

திராவிடமும் கிறிஸ்தவமும் இணைந்த கால்டுவெல் கனவு கண்ட பெயர்கள்

குடும்பம் இப்படி இருக்க காளிமுத்து திராவிட சிங்கம் அல்லவா? இரண்டாம் தாரம் ஒன்று கட்டாவிட்டால் கட்சி பாரம்பரியம் என்னாகும்?

அப்படி மனோகரி என்பவரை இரண்டாவது மணக்கின்றார், அம்மணி தெலுங்கு வம்சாவளி கம்மாள நாயுடுவும் தெலுங்கு விஸ்கர்மாவும் கலந்த கலப்பு, கொஞ்சமும் தமிழச்சி அல்ல‌

இவர்களுக்கு பிறந்ததுதான் மணிகண்ட பாண்டியன், அமுத பிரசன்னா, அருண்மொழிதேவன் மற்றும் கயல்விழி

(இந்த கயல்விழிதான் அங்கிள் சைமனின் மனைவி ஆண்டி கயல்விழி சைமன்)

இதெல்லாம் நடக்கும்பொழுது காளிமுத்து தமிழாசிரியர் அதன் பின் அமைச்சர் சபாநாயகர் அளவுக்கு வந்துவிட்டார்

வசதிவந்தால் என்னாகும்? இருதாரம் என்றால் என்னாகும்? அந்த அக்னி நட்சத்திரம் காட்சிகள்தான்

இரு குடும்பத்திற்கும் தீரா யுத்தம், மிக கடுமையான மோதல் எல்லாம் நடந்திருகின்றது, புலிகளுக்கும் சிங்களனுக்குமான மோதலை விட கடுமையான மோதல் எல்லாம் இருந்திருக்கின்றது

ஒரு கட்டத்தில் சுமார் 30 லட்சம் கடனில் காளிமுத்து மரிக்க, அவரின் வாரிசுகள் கடனை கட்டவேண்டும் என சொன்னது நீதிமன்றம்

அய்யய்யோ நாங்கள் காளிமுத்துவுக்கு சட்டபடி வாரிசே அல்ல என அலறி அடித்து மனோகரி குடும்பம் ஓடிய காலமெல்லாம் உண்டு

சரி இந்த “அக்னி நட்சத்திரம்” இப்பொழுது எங்கு வந்திருக்கின்றது?

இந்த காளிமுத்துவின் முதல் தாரத்து மகனான டேவிட் அண்ணாதுரையினை விருதுநகர் வேட்பாளராக தினகரன் அறிவித்துவிட்டார்

அதன் பின்பே காளிமுத்துவின் இளையதாரத்து மகனான அருண்மொழிதேவனை தன் கட்சி வேட்பாளராக நியமிக்கின்றார் சைமன்

புரிகின்றதா?

விஜயகாந்திற்கு ஒரு பிரேமலதா என்றால் அங்கிள் சைமனுக்கு ஆண்டி கயல்விழி

வாரிசு அரசியலுக்கு சைமனும் வந்தாயிற்று அதைவிட முக்கியம் தெலுங்கு வந்தேறிகளை அவரே தேர்தலில் நிறுத்தியுமாயிற்று

எப்படிபட்ட பல்டி பார்த்தீர்களா?

இந்த தும்பிகள் எல்லாம் மார்கழி மாத நாயாக ஒருமாதி பல்லை காட்டி திரிவதும், எவ்வளவு மிதித்தாலும் அமைதி காப்பதும் இதனால்தான்

மிக பகிரங்கமாக சைமன் வீட்டு குடும்ப அரசியலும் வந்தேறிகளை வாழவைக்க அவர் படும் பாடும் தெரிகின்றது

யாருமே திருமணம் செய்ய தயங்கும் சைமனை ஒரு பெண் திருமணம் செய்யும்பொழுது பலரின் புருவங்கள் உயர்ந்தன‌

மிக சரியாக அவரை வளைத்து வைத்து முதுகில் குத்துகின்றது காளிமுத்துவின் இரண்டாம் இன்னிங்க்ஸ் குடும்பம்

இனவிடுதலை என்பதை விட இனி அங்கிள் சைமனை இந்த தெலுங்கு குடும்பத்திடம் இருந்து விடுவிப்பதே முடியாது போலிருக்கின்றது

வீழ்ந்துவிடா வீரம் கயல்விழியிடம் வீழ்ந்து கிடக்கின்றது, மண்டியிடா மானம் மல்லாக்க கிடக்கின்றது

(நான் தெலுங்கச்சி மனோகரி குடும்பத்துக்கு அடிமை என அன்றே சைமன் உறுதியேற்ற காட்சி..

முப்பாட்டன் அருண்மொழிதேவன் என மேடைக்கு மேடை ஏன் அங்கிள் அலறினார் என்ற அர்த்தம் கயல்விழி அண்ணனான அருண்மொழிதேவனை மேடை ஏற்றும்பொழுதுதான் நமக்கே புரிகின்றது)

நெல்லை திமுகவுக்கு இனி சவால்…

நெல்லையில் தினகரன் அணி வேட்பாளர் மாற்றபட்டிருகின்றார், அவரை ஓசூருக்கு மாற்றிவிட்டார்களாம்

வெல்லத்தானே சோதனை, தோற்பதற்கு எந்த தொகுதி வேண்டியிருக்கின்றது என அந்த வேட்பாளரும் ஓசூருக்கு பெட்டி கட்டி கிளம்பிவிட்டார்

அடித்த போஸ்டரும், பேனரும்தான் வீண் என்கின்றார்கள்

இப்பொழுது புதிய வேட்பாளர் யார் தெரியுமா? மைக்கேல் ராயப்பன்

அன்னார் பல விஷயங்களில் வெளிதெரிந்தவர், முதலில் விஜயகாந்த் கட்சியில் இருந்து வென்ற அவர் பின்பு அதிமுகவுக்கு மாறினார், விஜயகாந்தின் முதல் எதிரி இவர்தான்

பின்னர் அன்பானவன் அடங்காதவன் படம் எடுத்து சிம்புவுடன் மல்லுகட்டியவர்

இப்பொழுது மறுபடியும் தேர்தலில் 
மல்லுகட்ட வருகின்றார்

இவர் வருவதனால் யாருக்கு லாபம் என்றால் சாட்சாத் மனோஜ் பாண்டியனுக்கு, ஆம் நிச்சயமாக அவருக்கே

ஞானதிரவியம் கோஷ்டிக்கு பெரும் சவாலாக நிறுத்தபடுகின்றார் இந்த முன்னாள் எம்.எல்.ஏ

தென் நெல்லை மாவட்ட நாடார் மற்றும் கிறிஸ்தவ வாக்குள பிரியும் பொழுது அது மனோஜ் பாண்டியனுக்கு கூடுதல் பலமாக அமையும்

நெல்லை திமுகவுக்கு இனி சவால்…