பொருளாதர சரிவு

ஒரு நாட்டின் பொருளாதார வலிமை அதன் கரன்சி மதிப்பிலே தெரியும், பணமதிப்பு ஏற ஏற அந்நாடு பெரும் சரிவினை சந்திக்கின்றது என பொருள்

சுருக்கமாக சொன்னால் ஒருநாட்டின் பணம் குப்பையாக சென்றுகொண்டிருக்கின்றது என பொருள்..

இது ஜிம்பாப்வே , இந்தோனேஷியா, ஈரான், வடகொரியா போன்ற நாடுகளில் மில்லியன் கணக்கில் சென்றுவிட்டது, அதாவது அந்நாட்டு பணம் குப்பைக்கு சமானம்

இந்தியாவின் மன்மோகன் காலம் வரை சிக்கல் இல்லை, 2008 உலக பொருளாதார பெருமந்தம், கச்சா எண்ணெயின் உச்சபட்ச விலை என எல்லா நிலையிலும் அதை காத்தார் அவர்

சிக்கல் மோடி வந்தவுடன் தொடங்கிற்று, தாலிபன்களை ஆப்கனில் கண்ட காட்சிபோல உலகம் அஞ்சிற்று, இந்தியா என்றாலே உலக நாடுகள் தயங்கின‌

என்னதான் மோடி சுற்றினாலும் இந்த மாட்டுகறி முதல் பல கலவர சூழல்கள் அவர்களை அச்சுறுத்தின‌

இந்திய கரன்சி மதிப்பு வேகமாக சரிந்தது, இந்திய கரன்சி ஆயிரத்தை தாண்டும் நிலை வந்தது, சும்மா இரண்டாயிரம் என்றால் அவர்கள் சாயம் வெளுக்கும் அல்லவா?

அதில்தான் பணமதிப்பு நாடகம் ஆடினார்கள், பதுக்கலை ஒழிப்போம் என்றார்கள்

பதுக்கலை ஒழிக்க ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டா கொண்டுவருவார்கள்?

ஆனால் இவர்கள் கொண்டுவந்தார்கள், அதற்கு இது தற்காலிக ஏற்பாடு என்றார்கள்

ஆண்டு பலவாகியும் ஏன் அந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டு களையபடவில்லை என்றால் அது பதுக்கலை தடுக்க கொண்டுவரபட்டது அல்ல‌

மாறாக இங்கு அவர்கள் அடைந்த தோல்வியினை ஒப்புகொள்ளும் பொருட்டு கொண்டுவந்தது

கடைசி வரை அவர்களால் அதை களையமுடியவில்லை

ஆம் அவர்கள் ஆட்சியின் பொருளாதார சரிவின் மாபெரும் சாட்சியாக இந்தியாவில் அது வலம் வருகின்றது

அது கரன்சி அல்ல, இந்திய பொருளாதார சரிவினை காட்டி நிற்கும் அளவுகோல், நிச்சயம் இந்த அரசின் மிகபெரும் சறுக்கல் அது.

அதுவும் அந்த கரன்சியில் தரம் இருக்கின்றதல்லவா? அது அதன் மதிப்பை விட உலக அரங்கில் இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவினையே கொண்டு வந்திருக்கின்றது

இன்னொரு முறை இவர்கள் வந்தால் நிச்சயம் 5 ஆயிரம் பத்தாயிரம் ரூபாய் கரன்சி இந்தோனேஷியா போல் இங்கும் வரும்

அதன் பின் பர்ஸ் போதாது, ஸ்கூலுக்கு செல்வது போல் பெரும் பையில் இந்திய பணத்தை கொண்டுதான் கடைகளுக்கு செல்ல வேண்டும்

அதை இந்த தேசம் நிச்சயம் விரும்பாது

தேர்தல் துளிகள் 26/03/2019 (1)

ஒரு பைசா லஞ்சம் ஊழல் இருந்தால் விஷ ஊசி போட்டு கொன்றுவிடுவோம் : சீமான்

சயனைடை கடி, குண்டுவெடித்து சாவு என போதித்த பிரபாகரனின் தம்பி எப்படி பேசுவார்?

இப்படித்தான் பேசுவார்..

எப்பொழுதும் போராட்டம் சிறை என வாழ்ந்த அந்த எளிய தமிழச்சி, அன்றொரு நாள் மாபெரும் மக்கள் நல போராட்டத்திற்கு திமுக மகளிரணி சார்பாகதயாராகி களத்திற்கு சென்ற காட்சி இது

நெற்றியில் உதயசூரியன் எல்லாம் வரைந்து வந்தது குறிப்பிடதக்கது

கேப்டனுக்கு பேசுவதற்கு பயிற்சி அளிக்கபடுகின்றது, “ஒளிமயமான எதிர்காலம்” எனும் எம்ஜிஆர் பாடலை பாடுகின்றார் கேப்டன் : பிரேமலதா

என்னது அந்த பாடல் ராமசந்திரன் பாடியதா? எல்லாம் சகவாச தோஷம்

அது இருக்கட்டும் அம்மணி, கேப்டன்
“மூணு முடிச்சால முட்டாளா ஆனேன் 
கேளு கேளுதம்பி.
.நான் இருந்தேன் தேருக்குள்ள,
இப்போ விழுந்தேன் சேறுக்குள்ள” என்றல்லவா பாடி கொண்டிருக்கின்றாராம்.

ஸ்டாலின் நாகரீகம் தெரியாதவர், மேஜையில் ஏறி சட்டசபையிலே ஆட்டம் போட்டவர் : பழனிச்சாமி

கலைஞர் இருந்தால் எப்படி பதில் சொல்வார் தெரியுமா?

“மேஜைக்கு அடியில் புகுந்து யார் காலிலோ விழுந்து கிடந்தவர்களுக்கு நாம் தரையில் நடப்பது கூட மேஜைக்கு மேல் நடப்பது போலத்தான் தெரியும் உடன்பிறப்பே…”

சில விஷயங்களை கவனித்து பார்த்தால் சைமன் என்பவர் அதிமுக தயாரிப்பு என்பதும், திருமுருகன் காந்தி என்பவன் திமுகவின் தயாரிப்பு என்பதும் தெரிகின்றது

வேல்முருகன் என்பவர் வைகோ போல ஜெயாவின் கண்ணசைவில் இருந்தவர் என்பதும் புலனாகின்றது

இந்த கவுதமன் என்பவர் சைமனின் இசுஸ் காரை பார்த்துவிட்டு அதைபோல் இல்லாவிட்டாலும் ஒரு சுவிப்ட் காராவது வாங்கவேண்டும் என்ற வெறியில் களம் புகுந்திருப்பது நன்றாகவே தெரிகின்றது

டெல்லியில் இஸ்லாமியனை தாக்கினால் “ஹேய்ய்ய் இந்தியாவில் இஸ்லாமியனுக்கு பாதுகாப்பில்லை..” என பொங்குவதும்

தமிழகத்தில் ராமலிங்கம் போன்றோர் கொல்லபட்டாலும், கோவையில் பலநூறு பேர் கொல்லபட்டாலும் அமைதி காப்பது மத சகிப்புதன்மை எனப்படும்

அதைவிட மிகபெரும் சகிப்புதன்மை கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளை விடுவிக்க சொல்வது, அதுதான் இங்கு நாட்டுபற்றும் மதசார்பற்ற நிலையுமாகும்

“எல்லா பேப்பரும் நாம ஜெயிக்கமாட்டோம்ணே எழுதியிருக்காங்க, ஆனா எச்.ராசா நம்மள ஜெயிக்க வச்சிருவார்..”

( செட்டி புள்ள வெட்டி…)

ஸ்டாலினும் கனிமொழியும் கலைஞர் போலவே பேச தொடங்குகின்றார்கள் ஆனால் இடையிலே தங்களுக்கே உரித்தான தடுமாற்றத்தில் தள்ளாடுகின்றார்கள்

கலைஞரை போல மிக அழகாக பேசுபவர் முக அழகிரி ஒருவர்தான், ஆம் சிக்கலான நேரங்களில் ஓரிரு வார்த்தைகள் தவிர கலைஞர் அதிகம் பேசியதில்லை

ஒரு அஞ்சலி செய்திருக்க வேண்டும்

“தோனி இந்திய அணியினை கரை சேர்த்த தோணி”

அந்த முரசொலி வரிகளைதான் மறக்க முடியுமா?

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் முதல் டோனிவரை ரசித்தவர் அவர். மிகசிறந்த கிரிக்கெட் ரசிகர் கலைஞர்

சட்டமன்றத்தில் ஆளும்கட்சி மட்டையாளர்கள் என்றும் எதிர்கட்சி பந்துவீசும் கட்சி என்றும் அவர் பேசிய பேச்சுக்கள் காலத்தின் சுவாரஸ்ய பக்கங்கள்

உறுதியாக சொல்லலாம், அந்த புல்வாமா அஞ்சலி நிகழ்ச்சி அந்த மைதானத்தில் கலைஞரின் நினைவேந்தலை தள்ளி போட்டுவிட்டது

இல்லை வேண்டுமென்றே மேலிடம் மறைத்திருக்கலாம்

ஆனால் அந்த மாபெரும் கிரிக்கெட் ரசிகனுக்கு ஒரு அஞ்சலி செய்திருக்க வேண்டும்

மேலவை உதிக்கட்டும்

தேர்தல் அறிக்கைகள் என ஆயிரம் வந்துகொண்டிருக்கின்றன, இன்னும் வரலாம்

தமிழக கட்சிகள் ஒன்றாவது தமிழக மேலவை அமைக்கபாடுபடும் என சொல்லவே இல்லை என்பதுதான் சோகம்

இந்தியாவுக்குள் எல்லா சிக்கலும் எங்களால் தீர்க்கபடும் என்கின்றார்கள், ஆனால் மேலவையினை மட்டும் மறக்கின்றார்கள்

அதில் பலத்த அரசியல் உண்டு

கற்றோராலும் சிந்தனையாளராலும் நிரம்பபட்டிருந்தது அந்த அவை, ராமசந்திரன் வரும்வரை அது நன்றாய் இருந்தது

பொதுவாக தன்னைவிட படித்தவர்கள் தனக்கு அடங்கி இருக்க வேண்டும் என்ற எண்ணம் ராமசந்திரனுக்கு இருந்தது கட்சிக்குள் அது பலித்தது

ஆனால் மபொசி போன்றவர்கள் இருந்த மேலவையில் அது பலிக்கவில்லை

சட்டமன்றம் போலவே அதையும் நாடகமேடையாக்க நினைத்த ராமசந்திரன் வெண்ணிற ஆடை நிர்மலாவினை அங்கு அனுப்ப முயன்று தோற்று அந்த அவமானத்தில் அதை கலைத்தே விட்டார்

அது திரும்ப வரகூடாது என்பதில் கவனமாய் இருந்தது டெல்லி, அதில் அதற்கொரு சந்தோஷம்

கலைஞர் கடைசி வரை தமிழக சட்டசபையில் தனி மெஜாரிட்டி இல்லை என்பதால் அவராலும் கொண்டுவரமுடியவில்லை

தன்னால் முடிந்தவரை அதை அமைக்க போராடினார் கலைஞர் ஆனால் சில சக்திகள் அதை முறித்துகொண்டே இருந்தது

ஜெயா ராமசந்திரன் வழி , இப்போதைய பழனிச்சாமி என்ன வழி என அவருக்கே தெரியாது

தமிழகத்தில் அந்த மேலவை நிச்சயம் கொண்டுவரபட வேண்டும்

நிச்சயம் இது நாடாளுமன்ற தேர்தல்தான் ஆயினும் இந்த கோரிக்கை இப்பொழுதே ஒலிக்க தொடங்கினால்தான் சரி

கலைஞரின் மிகபெரிய கனவு அது,நியாயமான கனவும் கூட‌

மேலவை மறுபடி இங்கு உதிக்கட்டும், சிந்தனையாளர்களால் அது நிரம்பட்டும்

மனித தன்மை இல்லாதது

ஒரு கிறிஸ்தவன் இறந்துவிட்டார் , அவர் உடலை இந்துமதபடி அடக்கம் செய்ய இந்துத்வா கும்பல்கள் மல்லுகட்டின என்றொரு வீடியோ காணமுடிந்தது

இப்பொழுது வரும் வீடியோக்களில் அங்கிள் சைமனின் வீடியோ தவிர ஏதும் நம்ப கூடியவை அல்ல, அங்கிள் ஒருவரை முழுக்க நம்பலாம்

இந்த வீடியோ சம்பவத்தின் மூல சிக்கல் எதுவென தெரியவில்லை, ஒருவேளை அவர் மதமாற்றம் செய்யபட்டிருக்கலாம்

சில நாடுகளில் “நீ எந்த மதத்தையும் பின்பற்று ஆனால் உன் அடையாளம் இந்தமதம்தான் , அரசு ஆவணபடி அதுதான். நீ எந்த மதத்தில் செத்தாலும் ஆவணம் சொல்லும் மதம்தான் உனது, அதுபடிதான் இறுதிகாரியம்” எனும் மவுன சட்டங்கள் உண்டு

இங்கு அப்படியாக ஊர்கட்டுபாடு என ஏதோ இருந்திருக்கலாம், அது சர்ச்சையாகியிருக்கலாம்

என்ன இருந்தாலும் இறந்தவர் உடலில் மதபேதம் பார்ப்பது சரியல்ல‌

“ஒருவன் இறந்தால் அந்த இடத்தில் நீ ஞானம்பெறும் பொருட்டு அவன் பகைவனாக இருந்தாலும் போ, இறந்தவன்னை தகனமோ அடக்கமோ செய்வது வாழும் மனிதனின் கடமை” என்றுதான் எல்லா மதமும் சொல்ல்கின்றன,

இந்த சர்ச்சை நிச்சயம் மனித தன்மை இல்லாதது

ஆயினும் சாதி அடிப்படையில் பிரிந்து இந்த சாதி கிறிஸ்தவன் உடலை அந்த‌ சாதி கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய விடமாட்டோம் எனும் கொடூர கிறிஸ்தவர்கள் செய்யும் காரியத்தை விட இது ஒன்றும் கொடியதல்ல‌

சாதி கொடுமையினை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் இதை கண்டிக்க தகுதியே இல்லாதவர்கள்

இது கண்டிக்கதக்கது

ஏர் இந்தியா நிறுவனத்தில் விமான டிக்கெட்டுகளில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற்று இருந்தது, தேர்தல் வீதி மீறல் என்பதால் டிக்கெட்டுகளை உடனடியாக திரும்ப பெறுகிறது

இது கண்டிக்கதக்கது, மோடி நாட்டின் பிரதமர் மன்னர் அல்ல‌

ஏதோ இது மன்னராட்சி போலவும் , ஏர் இந்தியா அவரின் குடும்ப சொத்து போலவும் டிக்கெட்டில் எல்லாம் அவர் படம் அச்சிடபட்டிருந்தது சரியல்ல‌

அதை நீக்கிவிட்டார்கள்

தேர்தல் ஆணையம் என ஒன்று இல்லாவிட்டால் ராணுவத்தின் ஏகே 47 முதல் சுகோய் விமானம் வரை இவர் படம் ஒட்டியிருப்பார்கள்

இம்மாதிரியான ஓவர் விளம்பரங்களும் அதை மோடி கண்டிக்காததும் அவர்களுக்கு பெரும் பின்னடைவே..

சங்கிகளின் அட்டகாசம்

இந்த வெறிபிடித்த சங்கிகளின் அட்டகாசம் எல்லை மீறி செல்கின்றது, உலகில் ஐ.எஸ் கொடூர தீவிரவாதிகளை ஒடுக்கிவிட்ட உலகம் இனி இவர்களைகண்டு அஞ்சினாலும் ஆச்சரியமில்லை

அப்படி ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாமல் வெறிபிடித்து அலைகின்றார்கள்

அதாவது கிறிஸ்தவம் இங்கு பரவதொடங்கியது 1500களில், கிபி 2ம் நூற்றாண்டிலே அது கேரளாவில் உண்டென்றாலும் 15ம் நூற்றாண்டில் அதுவும் பிரான்ஸிஸ் சேவியர் எனும் துறவியின் வருகைக்கு பின்பே அது வேகமாக பரவியது

15ம் நூற்றாண்டின் மிக பழமையான கிறிஸ்தவ ஆலயங்கள் உண்டு, அவை வெகு சில‌

அதன் அமைப்பு எப்படி இருக்குமென்றால் அன்றைய வழக்கபடி கல்தூண்கள் அமைத்து கல் கூரை அமைத்து கிட்டதட்ட இந்து ஆலயங்கள் போலவே இருக்கும்

பிரசித்திபெற்ற வடக்கன்குளம் பழைய ஆலயமும் அப்படியானதே

அன்று உறுதியான கட்டடம் அமைக்க கற்களையே பயன்படுத்தியதால் கிறிஸ்தவ ஆலயம் சிலவும் அப்படி அமைக்கபட்டது

இதை கண்ட சங்கி கும்பல்கள் பாபர் மசூதி கண்ட கரசேவகர்கள் போல் துள்ளி குதிக்கின்றன, இதோ நமது ஆலயத்தை கிறிஸ்தவ ஆலயமாக மாற்றிவிட்டார்கள் என பொங்குகின்றன‌

அதிலும் அறிவுகெட்ட சங்கிகள் ஆதாரத்தோடு வருகின்றதாம், என்ன ஆதாரமாம்?

அந்த பழைய கோவில்களில் “இதோ உன் தாய் ” என தேவமாதாவினை சொல்லும் வசனத்தை பொறித்திருப்பார்கள், சிலுவையில் சாகும்பொழுது இயேசு தன் தாயினை தன் சீடரிடம் ஒப்படைத்து சொன்ன புகழ்பெற்ற வசனம்

சிலுவையில் தொங்கியபடி இயேசு சொன்ன வலிமிக்க வசனம்

அந்த வசனத்தை பிடித்து கொண்டு, இது காளிதாசன் காளியினை நோக்கி சொன்னது, கம்பன் காளியினை நோக்கி சொன்னது அதனால் இது இந்து ஆலயம் , கிறிஸ்தவர் மாற்றிகொண்டார்கள் என வெறிபிடித்து அலைகின்றது அக்கோஷ்டி

சங்கிகளின் ஒருமுகம் ஆபத்தானது, எங்கெல்லாம் காலூன்ற நினைப்பார்களோ? அங்கெல்லாம் அவர்கள் முதலில் செய்வது கலவரமே

அது மண்டைக்காடு, கோயமுத்தூர், அயோத்தி , குஜராத் என எல்லா இடமும் பிரசித்தி

அதனை சில புனிதமான கிறிஸ்தவ ஆலயங்கள் மேலும் காட்ட வெறியோடு அலைகின்றதுசில கோஷ்டி

தமிழகத்தில் சாதி கலவரம் உண்டே தவிர மதரீதியான மோதல் வெகு குறைவு அல்லது இல்லை

ராமநாதபுரம் ஆன்மீக பூமியில் கூட இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் உரசியதில்லை

பாஜகமேல் அபிமானம் கொண்ட கிறிஸ்தவர் கன்னியாகுமரியில் உண்டு

ஆனால் புதிதாக ஒரு வன்மத்தோடு களமிறங்கியிருக்கின்றது சில சங்கிகள்

அவையே கல்லால் அமைந்த கிறிஸ்தவ மாதா கோவில்கள் காளிகோவில் என சொல்லி இங்கும் ஒரு அயோத்தியினை உருவாக்க துடிக்கின்றன‌

இவைகளால் இங்கு ஒரு நல்லதும் நடக்காது, பாஜகவுக்கு டெப்பாசிட்டும் கிடைக்காது

எனினும் நல்ல இந்துக்கள் இந்த வெறியர்களிடம் கவனமாக இருக்கவும்.

கிறிஸ்தவர்கள் இந்த கும்பலை புன்னகையோடு கடப்பார்கள், அப்படித்தான் கடக்க வெண்டும்

பொது அமைதியினை குலைக்கவும் மத நெருப்பினை மூட்டி அதில் ஆதாயம்பெறவும் ஒரு கோஷ்டி சுற்றுகின்றது

தேவமாதா அவர்களை மன்னிக்கட்டும், காளிதேவி அவர்களுக்கு நல்லபுத்தி அருளட்டும்

தெளிவாகத்தான் இருக்கின்றார்கள்..

“ஏண்டா பாஜகாஸ் சிவகங்கை பக்கம் , ராமநாதபுரம், தூத்துகுடி பக்கம் எல்லாம் எப்படி?

கண்டிப்பா ஜெயிப்போம்ணே

டெப்பாசிட் தேறுமா?

அட டெப்பாசிட் வாங்குறதுதான் எங்க வெற்றி, அதுக்குத்தான் இவ்வளவு போராட்டம்

அப்படியா?

பின்ன எச்.ராசா டெப்பாசிட் வாங்கினாலே சிதம்பரத்துக்கு அவமானம்ணே, தமிழிசை வாங்கிட்டா கனிமொழிக்கு பெரிய அவமானம்

அப்படியா?

ஆமா, அதாண்ணே எப்படியாவது டெப்பாசிட் வாங்கி அவங்க மூஞ்சில கரிய பூசுவோம்ணே, அது போதும்ணே மற்றபடி யாரும் ஜெயிக்கட்டும்ணே”

அவர்கள் தெளிவாகத்தான் இருக்கின்றார்கள்..

எங்கள் பிரியதலைவியே வருக

ஏப்ரல் 1க்கு பின் காங்கிரசுக்காக பிரச்சாரம் செய்வேன் : குஷ்பு

ஆக உடனே பாஜக அரசின் சொதப்பல்களை குறிப்பெடுத்து வைத்து குவிக்க வேண்டும், அது ஏகபட்டது இருப்பதால் சிக்கல் இல்லை.

அதை எல்லாம் கொடுத்து தலைவி பிரச்சாரத்திற்கு வரும்பொழுது அவருக்கு வலு சேர்க்க வேண்டும், இதை விட என்ன பெரிய வேலை இருக்கின்றது?

இதை செய்யாவிட்டால் சங்கம் நடத்துவதன் குறிக்கோளே அடிபட்டு போகும், சாத்தான் கூட அதன்பின் நரகத்தில் சேர்க்கமாட்டான்

2 ஆயிரம் ரூபாய் நோட்டு ஏன் வாபசாகவில்லை என்ற பெரும் கேள்வியோடு சங்கம் தலைவியினை வரவேற்கின்றது..

பிரியங்காவிற்கே வழிகாட்டும் எங்கள் பிரியதலைவியே வருக….அரிய வழி தருக

ஸ்டாலினை சாட‌ கொஞ்சமும் தகுதி கொண்டவர் அல்ல

என்ன இருந்தாலும் அந்த கட்சியில் தனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து இருப்பவர் ஸ்டாலின்

ஒரு சலூன் கடையில்தான் திமுக இளைஞரணியினை அவர் தொடங்கினார், வரலாறு அப்படித்தான் சொல்கின்றது, அதுதான் அவரை கட்சிக்குள் பலமாக கொண்டுவந்தது

கட்சியினை ஒரு நொடியும் பிரியாமல் அதோடு வளர்ந்தவர் ஸ்டாலின்

மிசா காலத்தில் சிறையில் ஸ்டாலின் அடிவாங்கியபொழுது கமலஹாசன் என்பவர் பரதநாட்டியம் ஆடிகொண்டிருந்தார்

இந்திராவினையும் ராமசந்திரனையும் திமுக எதிர்த்த காலங்களில் கமலஹாசன் ஏராளமான பெண்களோடு கிசுகிசுக்கபட்டுகொண்டிருந்தார்

ஸ்டாலின் அரசியலில் போராடிகொண்டிருந்தபொழுது கமலஹாசனுக்கு நடனமும் சினிமாவும் உணவும் நீருமாயிருந்தது

1990களில் ஜெயலலிதாவினை எதிர்த்து ஸ்டாலின் அரசியல் செய்ய தொடங்கியபொழுது கமலஹாசன் சரிகாவின் பார்வைக்கு தவமிருந்தார்

சென்னை மேயராகவும், பல தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து ஏராளமான பணிகளை ஸ்டாலின் செய்தபொழுது கமலஹாசன் கவுதமி பக்கம் பார்வையினை திருப்பியிருந்தார்

ஒரு இடத்திலாவது சமூகத்தை பற்றியோ அரசியல் பற்றியோ கமல் பேசியதே இல்லை

அப்படிபட்ட கமலஹாசன் இன்று திடீரென வந்து முக ஸ்டாலினை கேள்வி கேட்பதெல்லாம் ஏற்றுகொள்ளமுடியாத விஷயம்

ஸ்டாலின் அரசியல் கடலிலே நீந்தியவர் இன்னும் நீந்துபவர். ஆனால் கமல் திடீரென அரசியலில் குதித்த கரடி

எந்த இடத்திலும் ஸ்டாலின் தான் அரசியலை விட்டு செல்வதாக சொன்னதே இல்லை, கமலஹாசனோ இரு வருடம் முன்பு வரை அரசியலுக்கு வருவதாக சொன்னதே இல்லை

இவ்வளவுக்கும் கலைஞருக்கு நெருக்கமாகவும் அடுத்த இடமாகவும் இருந்தவர் முரசொலிமாறன், மாறன் இருக்கும்வரை ஸ்டாலின் தொண்டனே

இப்பொழுதும் மாறன் இருந்திருந்தால் ஸ்டாலின் தலைவராகியிருக்க முடியாது

ஒரு சில இடங்களில் ஸ்டாலின் தடுமாற அதுதான் காரணம், ஆம் மாறனே கலைஞரின் அரசியல் வாரிசு. ஸ்டாலின் மாறனாகி கலைஞராக சில தடுமாற்றம் வரத்தான் செய்யும்

கலைஞர் இல்லா இடம் என்பதை விட, முரசொலிமாறன் இல்லா இடத்தைத்தான் ஸ்டாலின் நிரப்பினார், அதுதான் சரி.

இந்த கமலஹாசன் என்பவர் ஸ்டாலினை சாட‌ கொஞ்சமும் தகுதி கொண்டவர் அல்ல, ஒரு காலமும் அந்த தகுதி வரவும் வராது