இருந்து பாருங்கள், நிச்சயம் செய்வார்கள்

ராணுவ வீரர்கள் 44 பேர் செத்தற்கே விடுதலை புலிகள் படத்தை வைத்து வீரவணக்கம் செலுத்திய கோஷ்டி சங்கி கோஷ்டி

மிக சீரியசாக கண்ணீர் எல்லாம் விட்டு அஞ்சலி செலுத்தி சத்தியம் எல்லாம் செய்தது

அப்படிபட்ட கோஷ்டி இதோ பாகிஸ்தான் செயற்கை கோளை தகர்த்த விஞ்ஞானிகள் என இவர்கள் படத்தையும் வைத்து வணங்குவார்கள்

இருந்து பாருங்கள், நிச்சயம் செய்வார்கள். அவர்களின் நாட்டுபற்று அப்படி..

இதென்ன பிரமாதம்

“இதென்ன பிரமாதம்,

எங்க அண்ணன் விட்டான் பாரு ஒரு ராக்கெட், அதுல விண்புலிகள் 10 பேர் போனாங்க அண்ணன் தான் ஓட்டுனாரு, நேரே போய் சிங்களனுக்குள்ள செயற்கை கோளை அணைச்சி போட்டானுக‌ நம்ம புலிகள்.

நானும் அண்ணனும் அதை கவனிச்சிட்டே இருந்தோம்

அது ராத்திரி 12 மணிங்கிறதுனால உலகம் தூங்கிட்டு எவனுக்கும் தெரியல, அந்த‌ நேரத்துல இலங்கையில‌ தொலை தொடர்பு இல்ல, அந்த இடைவெளியிலதான் புலிகள் ஆயுதம் வாங்குறது, சிங்களன அடிக்கிறது எல்லாம்

பொட்டண்ணா கூட அப்போ கொழும்புல டீ குடிக்க போயிருக்காரு ஆனா பிடிக்க முடியல‌

விண்வெளியில எப்படி நேரம் பாக்குறது? அதான் அண்ணன் சேவல் கோழி ஒண்ணு கொண்டு வந்திருந்தாரு, 4 மணிக்கு அது கூவவும் சட்டுண்ணு சுவிட்ச் எல்லாம் போட்டுட்டு வான் புலிகள் செட்டுகுள்ள வந்தாச்சி

அண்ணன் சர்ருன்னு வன்னி காட்டுக்குள்ள இறங்கிட்டாரு

சிங்களன் முழிச்சி பார்த்தா ஒண்ணுமில்ல, எல்லாம் அள்ளிட்டு போயாச்சி, செயற்கை கோள நம்பி இருந்தவன் மலங்க மலங்க முழிச்சான்

எப்டின்னே இதெல்லாம்னு கேட்டேன்

அண்ணன் சொன்னார், “இனத்துக்கு ஒண்ணுண்ணா எங்க போய் எதையும் அணைச்சி போட தயாரா இருக்கணும்டா, அது வானமா இருந்தாலும் சரின்னு சொன்னார்”

எனக்கு இந்த வண்டிய தாங்கண்ணு கேட்டேன், நாடு அடைஞ்ச பின்னாடி நாம இதுலதான்டா ஒவ்வொரு நாட்டுக்கும் போவேன், இந்த சில்ற பயலுகமாதிரி சாதாரண விமானத்துல போகமாட்டேன்னாரு..”

ஹஹஹ்ஹஹ ஹஹஹஹஹ ஹாஹ ஹாஹஹ்

செயற்கைகோள் முக்கியம்

வறுமை அமெரிக்காவிலும் உண்டு, சீனாவிலும் உண்டு, ரஷ்யாவிலும் உண்டு

வறுமை இல்லா நாடு என ஒன்றுமில்லை அது எல்லா நாட்டிலும் எல்லா இனத்திலும் இருக்கின்றது

நாட்டின் பாதுகாப்பே பிரதானம் அதற்கு பல விஷயங்களை செய்யத்தான் வேண்டி இருக்கின்றது

என்ன செய்து தொலைப்பது எதிரிகள் நமக்கு உருவாக்கபட்டார்கள் நாம் உருவாக்கவில்லை, இந்த யழவுபட்ட உலக அரசியலில் நம் பாதுகாப்பையும் பார்க்க வேண்டி இருக்கின்றது

செயற்கை கோள்களை அனுப்பித்தான் புயல் வருவதையும் மழை வருவதையும் எச்சரிக்க முடிகின்றது

தொலைதொடர்பு முதல் பங்கு வர்த்தகம், வங்கி, ராணுவம் வரை இன்று செயற்கை கோளை நம்பியே உலகம் இருக்கின்றது

இதோ இணையமும் செல்போனும் அதில்தான் இயங்குகின்றது,

அது அல்லாது இன்றைய உலகமுமில்லை பாதுகாப்புமில்லை

ஒரு கழிவறை கூட சொந்தமாக கட்ட தெரியாதவனுக்கு எல்லாம் அல்லது சதா சர்வகாலமும் கழிவறை சிந்தனையில் இருப்பவனுக்கு செயற்கைகோள் முக்கியத்துவமும் அதன் அருமையும் புரியபோவதுமில்லை

ஏன்?

அந்த ஆளு பிரதமராக இருந்தால் அடுத்தமுறை உலக கோப்பையினை வாங்கவே கூடாது

ஏன்?

பின்னே, உடனே வந்து கோப்பையினை பிடுங்கி என்னால்தான் வெற்றி என்பார்,

கண்டிப்பா வந்து சொல்வார்

அதை கூட தாங்கலாம். ஆனால் அடிபொடிகள் மோடி அடித்ததில் பந்து பாகிஸ்தானில் விழுந்தது, மோடி பவுலங்கில் ஸ்டெம்ப் லண்டனுக்கு பறந்தது நாங்கள் கண்ணால் பார்த்தோம் என்பார்கள், அதை தாங்கமுடியுமா?

சத்தியமா முடியாது, அதுவும் ஒரே பந்துல 9 விக்கெட் எடுத்தாரு, ஒரே பந்துல 10 சிக்ஸ் அடிச்சாருன்னு வருவானுக பாரு

அவர்களுக்கு புதிதா என்ன?

மோடி எதிரி நாட்டு செயற்கை கோளை உடைத்துவிட்டார் என மறுபடியும் கானசபா கோஷ்டிகள் தொடங்கிவிட்டன‌

சும்மா இன்னொரு நாட்டு செயற்கை கோளை மாட்டுகறி வைத்திருந்த இஸ்லாமியனை அடிப்பது போல் எளிதாக அடிக்க முடியாது

பாபர் மசூதி போல சும்மா இடிக்கவும் முடியாது

அதுவும் பாகிஸ்தான் செயற்கைகோள் எல்லாம் விஷயமே அல்ல, அவர்களே சாதாரண செயற்கைகோளுகே தடுமாறுகின்றார்கள்

இந்த சோதனையில் பாகிஸ்தானின் செயற்கைகோள் எதுவும் தொட்டு கூட பார்க்கபடவில்லை

பூமியில் மட்டுமல்ல விண்வெளியிலும் ஏகபட்ட கைவிடபட்ட விணகலன்கள், செயற்கைகோள்கள் உண்டு

ஆம் ஆயுள் முடிந்தவுடன் அவை வெறுமனே சுற்றும், இந்த வைகோ அறிவாலயத்தை சுற்றுவது போல அதுபோக்கில் சுற்றிகொண்டே இருக்கும் ஆனால் செயல்படாது

விண்ணில் பூமி வட்டத்துள் போடபடும் எதுவும் சுற்றிவரும் என்பது விஞ்ஞான விதி

அப்படி வைகோ, திருமா, சைமன் போல கைவிடபட்ட செயற்கைகோள்கள் நிறைய உண்டு

அதை இடித்து தள்ளி தன் செயற்கை கோளை நிறுத்த ரஷ்யா ஸ்பெஷல் இடிவண்டியினையே அங்கு நிறுத்தியிருக்கின்றது என்றால் விஷயத்தை புரிந்துகொள்ளுங்கள்

அந்த குப்பைகளில் ஒன்றை ஏன் இந்தியாவால் கைவிடபட்ட ஒன்றை கூட டம்மியாக வைத்து சோதித்திருக்கலாம்

குப்பை தொட்டியினை அடித்தற்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம்? அட பதர்களா?

மற்றபடி எதிரிநாடுஎன நம்மை கண்காணிப்பது அமெரிக்காவும் சீனாவுமே

பாகிஸ்தான் பரிதாபநாடு இதை எல்லாம் செய்ய அறிவோ தெம்போ இல்லாநாடு

எதிர்நாட்டு செயற்கை கோள் என்றால் சீனாவும் அமெரிக்காவுமே அவர்களை தொட்டு பார்த்தாலே முடிந்தது விஷயம்

ஒருவேளை சீனா கைவிட்ட செயற்கை கோளை உடைத்திருப்பார்களோ?

ஆளில்லா வீட்டில் சவுண்ட் விடுவது அவர்களுக்கு புதிதா என்ன?

பெருங்கொடுமை

கோவையில் 6 வயது சிறுமியினை கற்பழித்து கொன்றிருக்கின்றார்கள்

இதெல்லாம் இனி சட்டம் போட்டு தடுக்கும் கதையாக தெரியவில்லை, சீர்கேடுகள் வேறு எங்கோ இருக்கின்றன

சட்டத்தால் தடுக்க முடியாததை விழிப்புணர்வு மூலமாகத்தான் தீர்க்கமுடியும்

இச்சமூகத்தின் கடைசி சிறுமிக்கு ஆபத்து நிகழ்ந்தபின் யோசிப்பதை விட இப்பொழுதே உரிய திட்டங்களை தீட்டுதல் நலம்

அதற்கு முன் இந்த குற்றவாளிகளுக்கு மாபெரும் தண்டனை கொடுத்தே தீரவேண்டும்

கடும் பசியிலிருக்கும் விலங்குகள் கூட குட்டிகளை தொடுவதில்லை. இந்த கொடூரர்கள் அவைகளை விட மகா மோசம்

பத்திரிகை புலிகளையும், புலனாய்வு புலிகளையும் இங்கு காணவில்லை காரணம் பணமும் வராது, அரசியலும் செய்ய முடியாது

இப்படி ஒரு பெருங்கொடுமை பூமியில் எங்குமே இல்லை

பூக்கும் முன்னே கசக்கி எறியபட்ட அந்த மொட்டுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

பாழ்பட்ட இந்த பூமியில் நீ பிறந்ததாலும் உன்னை காக்க இச்சமூகம் தவறியதாலும் எங்களை மன்னித்துவிடம்மா என கதறிகொண்டிருக்கின்றோம்..

அழுதாலும் தீரா சோகத்தோடு அழுகின்றோம்..

மனசாட்சி கொண்ட மனிதர்களெல்லாம் உனக்காக அழுகின்றோம், அது ஒன்றைத்தான் எங்களால் செய்யவும் முடியும்

அந்த திசைபார்க்க அழுது கொண்டிருக்கின்றோம்

இதற்கொரு முடிவுகட்டாமல் இனி அழுகையினை இச்சமூகம் நிறுத்துதல் கூடாது

இதோ கோவை சிறுமி, 6 வயதுதான்

ஆசிபா போலவே கொடூரமாக கொல்லபட்டிருக்கின்றாள், ஆனால் ஒரு சத்தம் வரும்?

செத்தாலும் இங்கு சிறுபான்மை மதம், இனமாகத்தான் சாகவேண்டும் போலிருக்கின்றது

உலகிற்கே புதிது

வழக்கமாக மாபெரும் சோதனை முடிவுகளை தலமை விஞ்ஞானி அறிவிப்பார்

பிரதமர் வாழ்த்துவார்

சதீஷ் தவான் காலத்திலிருந்து இந்த ரவி அருணன், சிவன் காலம் வரை அதுதான் நடந்திருக்கின்றது

சம்பந்தபட்ட விஞ்ஞானதரப்புத்தான் வெற்றியோ தோல்வியோ அதற்கு பொறுப்பு அவர்கள்தான் சொல்ல வேண்டும், அதுதான் முறை

இப்பொழுது பிரதமர் செய்தி வாசிக்கின்றார், விஞ்ஞானிகள் எல்லாம் கைதட்டுகின்றனர்

இதெல்லாம் இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகிற்கே புதிது.