பெரும் அறிவிப்பு

பெரும் அறிவிப்பு என மோடி சொன்ன விஷயம் இதுதான்

இந்தியா தன் அதிநவீன செயற்கை கோள் எம்சாட் (EMISAT) என்பதை அடுத்தமாதம் விண்ணுக்கு செலுத்துகின்றது, அது மிக நவீனமானது

29 செயற்கைகோளுடன் செலுத்தபடும் அந்த கோள் விண்ணில் 7563 கிமீ தூரத்தில் நிலைநிறுத்தபடும் இதில் இருந்து மிக நுட்பமாக விளக்கபடும்

அதில் மிக மிக நவீன வசதிகள் உண்டு, நடமாட்டம் மட்டுமல்ல அது போக அணு ஆயுத ரகசியம், சிக்கல் என்றால் எலக்ட்ரானிஸ் விஷயங்களை கட்டுபடுத்தும் நுட்பம் என நிறைய உண்டு

தீவிரவாதிகளின் தகவல் தொடர்பை இடைமறிப்பது, கோடிங் டிகோடிங்கை நொடியில் செய்வது என ஏக விஷயங்கள்

விமான கடத்தல் போன்ற விஷயங்களில் இது பெரும் கைகொடுக்கும், யுத்தம் என்றால் ஆயிரம் அலாவுதீன் பூதத்திற்கு சமம்

இதனால் இந்தியாவின் உளவுபார்க்கும் திறன் மட்டுமல்ல பாதுகாப்பும் பன்மடங்கு உயரும்

இனி இமயமலை சரிவுகளில் என்ன நடக்கின்றது என்பதற்கு உளவு விமானங்களை பயந்து அஞ்சி அஞ்சி இயக்க வேண்டிய அவசியமில்லை

நேரடியாகவே துல்லியமாக பார்க்கலாம்

சிட்டி ரோபோவினை விண்ணில் நிறுத்தினால் எப்படி இருக்கும், அதுதான் இந்த எம்சாட் செயற்கைகோள்

இப்படியான செயற்கோளை விண்ணில் நிறுத்தினால் எதிரி நாடு சும்மா இருக்குமா?

இருக்கும் , எப்பொழுது இருக்குமென்றால் செயற்கைகோளை தகர்க்கும் ஏவுகனைகள் அந்நாட்டில் இருந்தால் இருக்கும் இல்லாவிட்டால் தகர்த்துவிடும்

அமெரிக்கா ரஷ்யா, சீனா என மூன்று நாடுகளிடமும் இது உண்டு

விண்வெளி என்பது ஆதிக்கபோட்டி நடக்குமிடம், ஒரு செயற்கைகோளை தகர்க்க பல கட்டங்களை தாண்ட வேண்டும்

லேசர் போன்ற கதிர்களாலே ஏவுகனையினை பொசுக்கும் நுட்பமெல்லாம் அங்கு உண்டு, அதை எல்லாம் சமாளிக்கும் வண்ணம் ஏவுகனை செய்வது என்பது மகா சிக்கலானது

விண்வெளியில் நடக்கும் சண்டை வெளிதெரியாது என்பதால் பல சொல்வதில்லை

பலமுறை அமெரிக்க செயற்கை கோள் ரஷ்யாவினை உளவுபார்க்கும் பொழுது ரஷ்யா இப்படி உடைத்திருக்கின்றது

அதைவிட முக்கியமாக விண்வெளியில் புல்டோசர் போல ஒன்றை சுற்றவைத்திருக்கின்றது ரஷ்யா, அதாவது ஒவ்வொரு நாடும் செயற்கைகோள் செலுத்தபடுவதால் அங்கும் குப்பை அதிகம்

குப்பை செயற்கை கோளை உடைக்கின்றேன் என ரஷ்யா வைத்திருக்கும் அந்த புல்டோசர் பலமுறை அமெரிக்க உளவு செயற்கை கோளை உடைத்தும் தள்ளியிருக்கின்றன‌

இது போக செயற்கை கோளை தகர்க்கும் ஏவுகனைகளும் அவர்களிடம் உண்டு

சமீபத்தில் அமெரிக்க உளவுசெயற்கை கோளை சீனா தகர்த்தது

தன் மிக அதிநவீன உளவு செயற்கை கோளை செலுத்தும் இந்தியா கவனமாக இருக்க வேண்டும் அல்லவா? அதனால்தான் இந்த ஏவுகனை சோதனை முடிவு இன்று அறிவிக்கபடுகின்றது

மிஷன் சக்தி எனும் அச்சோதனையில் அக்னி 5 ரக ஏவுகனை பயன்பட்டிருக்கலாம் என்கின்றார்கள்

சுருக்கமாக சொன்னால் தங்கம் வாங்குவது பெரிதல்ல அதை காக்க லாக்கர் வேண்டாமா? குறைந்தபட்சம் வெட்டரிவாளாவது வேண்டாமா?

அதுதான் இது

நிச்சயம் மிகபெரும் விஷயம் இது, ராணுவத்திற்கான உளவு செயற்கைகோளை செலுத்துவதும் அதை காக்க செயற்கைகோளை தகர்க்கும் ஏவுகனையினை செலுத்துவதும் மாபெரும் விஷயம்

உலகில் நாம் 4ம் இடத்தில் இருக்கின்றோம் என்றாலும் இஸ்ரேலும் களத்தில் உண்டு

இந்தியா இதனால் உலகின் மிகபெரும் வலிமையான நாடாக மாறியிருக்கின்றது, மாபெரும் பாதுகாப்பினை தேசம் பெற்றிருக்கின்றது

இது நமது செயற்கைகோளுக்கு பாதுகாப்பு மட்டுமல்ல, இந்தியாவினை உளவு பார்த்து கொண்டிருக்கும் சீன அமெரிக்க செயற்கை கோள்களுக்குமான எச்சரிக்கையும் கூட‌

இதெல்லாம் 1980லே உலகிற்கு வந்துவிட்ட விஷயங்கள், அன்றே இந்தியா இதனை பெறவேண்டும் என இந்திராவும் கலாமும் கனவு கண்டனர்

அவர்கள் தொடங்கிய திட்டம் மோடி காலத்தில் நடந்திருகின்றது

இந்திராவினையும் கலாமினையும் இந்த இடத்தில் நினைத்து பார்க்க வேண்டும்

அக்னி ஏவுகனைகளை மேம்படுத்திய அந்த டெய்சிதாமஸ் என்பவரும் மறக்கமுடியாதவர்

தேசம் மாபெரும் சாதனையினை செய்திருக்கின்றது, தன் ஆட்சியின் கடைசி காலத்தில் நல்ல செய்தி சொல்லிவிட்டு கீழே இறங்க அவருக்கும் காலம் இருந்திருக்கின்றது

நிச்சயம் அந்த செயற்கொளை பாதுகாக்கவே இச்சோதனை நடந்திருக்கின்றது, அந்த மாபெரும் விஷயம் DRDO தயாரிப்பு என்றாலும் பலநாட்டு பங்களிப்பும் உண்டு

காலத்தில் பெற வேண்டிய பெரும் பாதுகாப்பினை தேசம் பெற்றிருக்கின்றது

அரசியல் தேர்தல்களை தாண்டி ஒவ்வொரு இந்தியனும் பெருமைபட வேண்டிய நேரமிது

(எனினும் இது போன்ற பல விஷயங்களை எல்லாம் முந்தைய அரசுகள் சாதாரணமாக கடக்கும்

இது மோடி அரசு அல்லவா? தேர்தல் நேரம் வேறு அல்லவா? அதனால் ஒரு பிரேக்கிங் நியூஸ் போல சொல்லி கொண்டார்கள், அவர்கள் சூழல் அப்படி )

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s