கராத்தே செல்வினின் மனைவி

கராத்தே செல்வினின் மனைவி திமுகவுக்கு ஆதரவளித்துவிட்டாராம், அதற்கு அம்மணி சொல்லும் விஷயம்தான் கவனிக்கதக்கது

அதாவது திமுக கிறிஸ்தவர்களுக்கு காவலாம், போதாதா? இதோ இந்துக்களின் காவலன் என பாஜகவினை அதிமுக காட்டாதா?

கராத்தே செல்வின் தென்னகத்தில் 1990களில் பிரபல நாடார் தாதா, இந்த வெங்கடேஷ பண்ணையார், ராக்கெட் ராஜா எல்லாம் அவரிடம் நிற்கமுடியாது

பல கொலை தீரா புகழ் என சுற்றிவந்தார், ஜாண் பாண்டியனும் பசுபதிபாண்டியனும் அவர் இருந்தபொழுது பெரும் பிம்பமில்லை

ஒரு கட்சி கூட நடத்தினார் செல்வின்

அடுத்த எம்பி ஆகும் நிலையில் அவர் இருந்தார், அவ்வளவு பெரும் செல்வாக்கு அவருக்கு கூடியிருந்தது, சுய சாதி கிறிஸ்தவ நாடார்களை தாண்டி இந்துநாடார் வரை அவருக்கு செல்வாக்கு இருந்தது

சில வழக்குகளில் விடுதலையாகி சில வழக்குகளை எதிர்கொள்ளும்பொழுது பாளை சிறைவாசலில் கொல்லபட்டார்

25 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை நாடார்களின் பெரும் பிம்பமாக கருதபட்ட அந்த செல்வினின் மனைவியினை களமிறக்கியிருக்கின்றது திமுக தரப்பு

முன்பு வெங்கடேஷ பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வியினை இழுத்து வந்தது போல திமுக இவரை இழுத்து வந்திருகின்றது

ஆனால் இது எவ்வளவு தூரம் பலனளிக்கும் என தெரியாது, காரணம் செல்வின் கொல்லபடும் பொழுது திமுகதான் ஆட்சியில் இருந்தது

எனினும் ஒரு விஷயம் உண்மை

பொதுவாக திமுக மேடைகளில் “பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே” என அந்த பிராண்ட் பாடலை நாகூர் அனிபா குரலில் பாடவிடுவார்கள்

இனி செல்வினுக்கும் அப்பாடல் பொருந்தும், ஆம் செல்வினும் அச்சிறையில் பல்லாண்டு இருந்தார்

ஆக இனி திமுக மேடையில் அப்பாடல் ஒலித்தால் அது கலைஞருடன் செல்வினுக்கும் சேர்த்து என நாடார்கள் ஆனந்த கண்ணீர் விடுவார்கள்..

பாஜக விளம்பர கோஷ்டி

பாஜக விளம்பர கோஷ்டி என்பது இந்த அரசில் அல்ல அது வாஜ்பாய் அரசிலே தெரிந்தது

வீண் விளம்பரத்திற்கு 1998 அணுகுண்டு வெடித்து பொருளாதார தடை தேடினார்கள், நாடுபட்ட சிக்கல் கொஞ்சமல்ல‌

திருந்தா தேசம் என ஒதுக்கி வைத்த பாகிஸ்தானுக்கு விளம்பரத்திற்கு பஸ் விட்டார்கள், பூரா பயலும் அதில் ஏறி கார்கிலில் வந்து பதுங்கினான் அதன் பின் பஸ்ஸை நிறுத்திவிட்டு போருக்கு சென்றார்கள்

ஒவ்வொரு செயலிலும் விளம்பரத்தை அந்த அரசு செய்தது கொஞ்சமல்ல‌

மோடி விளம்பரத்திற்கு வாஜ்பாய் அரசுதான் முன்னோடி, விளம்பர அரசை தொடங்கியதே அவர்கள்தான்

ஆனால் இன்று மோடி வெற்று விளம்பரம் என கொக்கரிக்கும் திமுக, அன்று அமைதியாய் இருந்தது. அன்று வாஜ்பாய் செய்ததைத்தான் இன்று மோடியும் செய்கின்றார்

ஆனால் அன்று அமைதி , இன்று அலறல் ஏன்?

ஆம், அந்த வாஜ்பாய் ஆட்சியில் திமுக இருந்தது, அதற்கு அமைச்சர்களும் இருந்தனர்.

முகநூல் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றது

இந்த முகநூல் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றது என்ற சம்பவம் தொடர்கின்றது

சென்னை வாலிபருக்கும் இலங்கை பெண்ணுக்கும் முகநூலில் காதல் மலர்ந்திருக்கின்றது, அப்பெண்ணும் அவனை தேடி சென்னை வந்திருக்கின்றாள்

இருவரும் ஓர்மனம் கண்டு , ஒருவழியாகி பல இடங்களுக்கு சுற்றியிருக்கின்றார்கள்

விசா காலம் முடிவடைந்து அப்பெண் செல்லவேண்டிய நேரம் வந்திருக்கின்றது

அவளோ தாலிகட்டி இங்கே இருக்க விரும்பியிருக்கின்றாள், அதில் தவறோன்றும் சொல்ல முடியாது

இந்த பாதகன் ஏனோ இழுத்திருகின்றான் உறவுகள்தானே தொடர்கதை , உணர்வுகள் சிறுகதை என அவன் முடித்து கொள்ள அந்த அபலைபெண் தற்கொலை செய்துவிட்டாள்

விஷயம் இலங்கை தூதரகம் வழியாக வெடிக்க அந்த காதலனிடம் விசாரணை நடக்கின்றது

இந்த விஞ்ஞான வளர்ச்சியில் உலகின் எந்த மூலையில் இருந்தும் ஆணும் பெண்ணும் எளிதில் சந்திக்கலாம் பழகலாம் அதற்காக வாழ்வின் எல்லா விஷயங்களையும் இங்கேயே தேர்ந்தெடுப்பது சரியல்ல

அடேய் கருப்பு சட்டைகளா

அடேய் கருப்பு சட்டைகளா

உங்கள் ஆராய்ச்சியினை புராணங்களோடு நிறுத்துங்கள், இந்த விண்வெளி விஞ்ஞானமும் ஏவுகனை நுட்பமும் உங்களுக்கு புரியாது

உங்கள் பகுத்தறிவு என்பது எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்கும், ஆனால் அவ்வளவு உயரத்திற்கு உங்களை இழுத்து சென்று யாரும் காட்டமுடியாது

சீனா தன் செயற்கை கோளை உடைக்கும் பொழுதே அமெரிக்கா ஆதாரம் கொடுத்து சண்டைக்கு செல்லவில்லை

விஷயம் அவ்வளவு சிக்கலானது

உங்களுக்கு ஒன்று புரியவில்லை என்றால் அது இல்லை என்றாகிவிடாது..

எய்ட்ஸ் கிருமி கூட உங்கள் கண்ணுக்கு தெரியாது, அதற்காக அந்த கிருமி இல்லை என்றாகுமா? அந்த ரத்தத்தை உங்களுக்கு ஏற்றிவிடலாமா?

கல்வி புரட்சியா?

தமிழ்நாடு கல்வியில் முன்னேறிற்று, அது திமுகவின் சாதனை அதனால் பாஜக உள்ளே வரவே கூடாது வந்தால் மற்ற மாநிலம் போல ஆக்கிவிடுவார்கள் : திராவிட சேனை

இங்கு கல்வியினை காமராஜர் பெரும் வேகத்துடன் வளர்த்தார், 1967 வரை வளர்த்தார் அதன் பின் என்னாயிற்று?

1970களுக்கு பின்பகுதியில் இருந்தே தனியார் கல்வி நிறுவணங்கள் வந்தன, திமுக ஆட்சியில் கிறிஸ்தவ நிறுவணங்களுக்கு அனுமதி அள்ளி கொடுக்கபட்டது

வெள்ளைகாரன் ஆட்சியின் தொடர்ச்சியாக ஆங்கில பள்ளிகள்,கான்வென்டுகள், பன்னாட்டு பள்ளிகள் என அவர்கள் அள்ளிகுவிக்க திமுக துணைபோனது..

காமராஜரை சரித்துவிட்டு இதுதான் நடந்தது

கொஞ்சநாளில் கட்சிகாரனுக்கே கொடுத்தார்கள்,சாராயம் விற்றவன், கட்ட பஞ்சாயத்துகாரன், ஊர் சுற்றியவன் எல்லாம் கல்வி தந்தையானார்கள்

அதுவும் 1980களில் ராமசந்திரன் ஆட்சியில் நிலை மகா மோசம்

ஏகபட்ட பொறியியல், மருத்துவ கல்லூரிகள் மார்டன் ஆங்கில பள்ளிகள் அப்பொழுதுதான் வந்தன‌

விளைவு அரசு கட்டுபாட்டில் இருந்து கல்வி தனியார் மயமாயிற்று, மருத்துவமும் அப்படியே

தமிழகம் இவர்கள் ஆட்சியின் திறமையில் இப்படி மாறவில்லை, கல்வி மருத்துவ துறைகளை தனியாருக்கு விற்றார்கள் அல்லது தங்கள் பினாமிகளுக்கு மாற்றினார்கள்

இன்று எல்லா கட்சிகாரனுக்கும் இங்கு கல்லூரி, மருத்துவமனை அது இது என தனி அரசாங்கமே நடக்கின்றது

அத்தோடு விட்டார்களா சண்டாளர்கள்? சாதி சங்கங்கள் எல்லாம் கல்வி நிறுவணம் நடத்த வழிவிட்டார்கள், ஆம் வாக்கு வங்கி அரசியல்

சாதிவாரியாக கல்லூரிகள் வந்தன, இன்னும் என்னவெல்லாமோ வந்தது

சுயதொழிலும் தெரியாத, டிகிரி தவிர வேறு வேலை செய்ய தெரியாத கூமுட்டை தலைமுறை ஒன்றை உருவாக்கியது அதன் சாதனை..

மற்றமாநிலங்களில் இது இல்லை, நிச்சயமாக இல்லை

அவர்கள் மனசாட்சிபடி யோசிக்கின்றார்கள், இதெல்லாம் அரசு கடமை கல்வியும் மருத்துவமும் தனியாரிடம் சென்றால் மக்கள் பாதிக்கபடுவார்கள் என அஞ்சுகின்றார்கள்

அவர்களுக்கு மனசாட்சி இருக்கின்றது, தன் கட்சிக்காரன் சம்பாதிக்க மாநிலத்தை சூறையாடும் அநியாயத்தை அவர்கள் செய்யவில்லை

அதனால் அவை எல்லாம் பின் தங்கியது போலவும் இவர்கள் கொள்ளையடித்தும் முறைகேடாகவும் உருவாக்கிய சாம்ராஜ்யங்கள் கல்வி முன்னேற்றம் போலவும் காட்சியளிகின்றன‌

உண்மையில் அரசுடமையினை தனியாருடமை ஆக்கி கோடிகணக்கில் சம்பாதிக்க்க இவர்கள் செய்ததே இந்த கல்வி மருத்துவ பணி அன்றி வேறல்ல‌

இதனால் கொஞ்சமும் தரமில்லா பட்டதாரிகளை பிராய்லர் கோழியாக உருவாக்கிவிட்டார்கள், உதவாக்கரைகள் அதிகம்

பல்கலை கழகம் முதல் எல்லா இடங்களிலும் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகின்றது

எவ்வளவுக்கு என்றால் ஜெயா இறந்தபின் சசிகலாவினை சந்திக்க சென்ற துணைவேந்தர்களும் கல்வி தந்தைகளுமே சாட்சி

எல்கேஜி முதல் மருத்துவகல்வி வரை பூராவும் தனியாருக்கு கொடுத்துவிட்டு அதில் கட்சிக்காரனும் கட்சியும் சம்பாதிக்க முழு வகை செய்த செயலுக்கு பெயர் கல்வி புரட்சியாம்

பச்சையப்ப முதலியாரும், அண்ணாமலை செட்டியாரும் இன்னும் ஏராள ஆதீனங்களும் சொந்த பணத்தில் கல்லூரி கட்டினார்கள்

சாரா டக்கர் முதல் ஐடா ஸ்கேடர் வரை லண்டனில் இருந்து பணம் கொண்டுவந்து கல்லூரி கட்டினார்கள்

அதில் எல்லாம் இலவசம்

இன்று அப்படியா? கல்வி தந்தைகள் எல்லாம் தேர்தலை நிர்ணயிக்கும் அளவு செல்வத்தில் புரள்கின்றார்கள்

இங்கு என்ன கல்வி புரட்சி நடந்தது என இனியாவது தெரிந்து கொள்வது தமிழகத்திற்கு நல்லது

நல்ல அரசு வரவேண்டும் இதை எல்லாம் நாட்டுடமை ஆக்க வேண்டும்

முன்பு தனியார் வசமிருந்த போக்குவரத்து முதல் வங்கி வரை அரசுகள் அரசுடமை ஆக்கிற்று

பல அரசர்களின் சொத்துக்கள் அப்படி பறிக்கபட்டன‌

அவ்வாறே இந்த இம்சை கல்விதந்தைகளின் சொத்துகளையும் பறித்து அவற்றை அரசுடமை ஆக்கினால் இவர்கள் செய்திருக்கும் கல்வி புரட்சி என்னவென தெரியும்

தேர்தல் துளிகள் 29/03/2019

வன்முறையே திமுகவின் கலாச்சாரம்; ஓபிஎஸ் விமர்சனம்

அதிமுகவின் கலாச்சாரம் என்ன?

காலில் விழுந்துகிடப்பது, நேரம் வரும்பொழுது காலை வாரி அடித்து ஆளை கொன்றுவிட்டு பதவிக்கு வருவது

***********

அயோக்கிய பயலுகளா..

கட்சியில் சேர்ந்து 2 நாளில் ஊர்மிளாவுக்கு வாய்ப்பு

பல வருடமாக கட்சிபணி செய்யும் தலைவி குஷ்புவுக்கு சீட் இல்லையா?

இந்த கொடுமையினை நாடு தாங்குமா? இந்த கட்சிதான் உருப்படுமா?

இனி காங்கிரசை குழிதோண்டி புதைப்பதே என் வேலை என சொன்னாரே ஈரோட்டு கிழவன், அப்படி சங்கமும் மண்வெட்டியுடன் கிளம்பியாயிற்று..

************

வேட்பாளர் இவர்தாம்மா. ஆனா கட்சி என்னோடது

அதெல்லாம் சரிதாம்ப்பா, அப்பாவ பின்பறறி கட்சிக்கு வந்தது சரி, அதுக்காக இப்படி அப்பா மாதிரியே மஞ்சள் சட்ட போட்டுட்டு வோட்டு கேட்டா வருவீங்க..????

இந்த மஞ்சள் சட்டை சென்டின்மென்டை இன்னும் உங்க குடும்பம் விடவில்லையா?

************

எந்த வேட்பாளருக்கு சொத்துகுவிப்பு சிக்கல் இருந்தாலும் இந்த தமிழச்சி தங்க பாண்டியன் என்பவருக்கு மட்டும் அந்த சிக்கல் வரவே வராது

அந்த மேக் அப்புக்கும் கம்மலுக்கும் மைசூர் சமஸ்தானமாக இருந்தாலும் இந்நேரம் வறுமை கோட்டுக்கு கீழேதான் இருக்கும்

************

ராமதாஸ் ஆணையிட்டால் ஸ்டாலின் தமிழகத்தில் எந்த பகுதியிலும் நடமாட முடியாது : வைத்தி

காடுவெட்டி குரு இதைவிட அதிகமாக சவால்விட்டவர், இதெல்லாம் திமுகவுக்கு சாதாரணம்

இப்படி எல்லாம் பேசிய காடுவெட்டி குடும்பதிற்கு ராமதாஸ் என்ன செய்தார் என கேட்டுவிட்டு வந்து இந்த வைத்தி இப்படி பேசலாம்

காடுவெட்டி குடும்பத்திடம் கேட்டுவிட்டால் ஏன் பேசபோகின்றார்?

*************

திராவிடக் கட்சிகள் தேர்தலில் தனித்து போட்டியிடாதது ஏன்?- சீமான் ஆவேசம்

நீர்தான் பெரிய தும்பிபடை வைத்திருக்கின்றீரே? எதிர்த்து நின்று வென்றால்தான் என்ன?

28 நாடுகளின் படையினை தனியாக‌ எதிர்த்த பிரபாகரனின் தம்பியா நீர்?

உலகின் 4வது பெரும் ராணுவத்தை திருப்பி அனுப்பிய வீரபுலி தம்பியா நீ?

வேதனை அவமானம் வெட்கம்..

*************

தினகரன் அணிக்கு பரிசுபெட்டி சின்னம் கொடுக்கபட்டிருக்கின்றதாம்

சாதாரண பெட்டி என்றாலே சும்மா கொடுக்க மாட்டார்கள் , இதில் பரிசுபெட்டி வேறாம்..

இந்த பரிசுபெட்டி பழனிச்சாமி கும்பலுக்கு சவபெட்டி என அவர்கள் அட்டகாச பிரச்சாரம் செய்ய கூடும்..

எனினும் அவர்களுக்கு நரிகுட்டி சின்னம் ஒதுக்கியிருக்கலாம், மிக சரியாக இருந்திருக்கும்..

**********

பெண்டுல நிலை தான்

சுஜாதா ஒரு விஞ்ஞான விளக்கம் கொடுப்பார்

ஒருவன் வடதுருவத்தில் இருந்து தென் துருவத்திற்கு குழிதோண்டி என்றால் என்னாகும்?

அதாவது நாம் இப்படியே குழி தோண்டி சென்றால் மறுமுனையில் இருக்கும் அமெரிக்காவுக்கு செல்லலாமா? சாத்தியமா?

(இது முடியாது நடுவில் எரிந்து கொண்டிருக்கும் பூமியின் மையம் இருக்கும், ஆனால் அதை தாண்டியும் சென்றால் என்னாகும் என்பதை அவர் சொன்னார்)

அவனால் வடதுருவத்தை அடைய முடியுமா என்றால் முடியாது, முதலில் புவிஈர்ப்பு விசையால் கீழ்நோக்கி செல்வான் பின் தென் துருவம் நோக்கி செல்வான் மறுபடி கீழே விழுவான்

அப்படியே அமெரிக்காவுக்கு இங்கிருந்து குழி தோண்டினாலும அதுதான் நடக்கும், குழி தோண்டி அமெரிக்கா தெரிந்ததும் குதித்தால் அமெரிக்காவில் வெளிவரமுடியாது

கீழே விழுவதும் மேலே எழுவதுமாக பெண்டுலம் ஆடுவோமே தவிர இப்பக்கமும் வரமுடியாது, அந்த பக்கமும் செல்ல முடியாது

அப்படியே பெண்டுலம் போல ஆடிகொண்டே இருக்க வேண்டியதுதான்

தேர்தல் முடியும் வரை நம் நிலமையும் அப்படித்தான் இருக்கும் போல…