ஆனந்தரங்கம் பிள்ளை

17ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் பெரும் போர் ஐரோப்பியரால் நிகழ்த்தபட்டன, காரணம் அவர்களா என்றால் இல்லை

இங்கிருந்த சிற்றரசர்கள் வாரிசு சண்டையில் அவர்கள் உதவியினை கேட்க ராபர்ட் கிளைவும் டுப்ளெவும் ஆளுக்கொரு பக்கம் குதித்தனர்

உண்மையில் டெல்லி மொகலாய அரசு அன்று பலமாக இருந்தது, இந்த சிற்றரசர்கள் கப்பம் கட்டிகொண்டுதான் இருந்தார்கள்

யார் உரிமையாக‌ கப்பம் கட்டுவோம் என்பதில்தான் சண்டை, அதற்குத்தான் போர்.

முதலில் கிளைவும் டுப்ளெவும் ஆற்காடு நவாபின் வாரிசுகளுக்கு ஆதரவாக மோதினாலும், ஒரு கட்டத்தில் நவாபினை தள்ளிவிட்டு இவர்கள் இருவரும் பகிரங்கமாக மோதினார்கள்

இதில் சென்னை கோட்டையே சில நேரம் டூப்ளேவால் கைபற்றபபட்டது, இறுதியில் ராபர்ட் கிளைவின் அடி முன்னால் நிற்க முடியாது பிரான்ஸ் படை அன்று பிரான்சில் நடந்த குழப்பங்களாலும் தன் எல்லையினை பாண்டிச்சேரியோடு சுருக்கிற்று

இன்றும் பாண்டிச்சேரியில் டூப்ளே சிலை உண்டு

இந்த ஐரோப்பிய காலணியாக்கத்தை நமக்கு யார் வரலாறாக கொடுத்தவர் என்றால் டூப்ளேவின் மொழிபெயர்ப்பாளராக இருந்த சில தமிழர்கள்

அவர்கள் அன்றாடம் நடந்த நிகழ்வுகளை எழுதி வைத்திருக்கின்றார்கள்

இதனால்தான் எப்படி ஆங்கிலேயன் காலூன்றினான், எப்படி பிரென்ஞ்படை பின் வாங்கியது? ஏன் ஆங்கில ஆட்சி ஏற்பட்டது பிரென்ஞ் ஆட்சி ஏன் இந்தியாவில் மலரவில்லை என பல கேள்விகளுக்கு விடை கிடைக்கின்றது

அன்றைய டெல்லி சுல்தான், நவாப், தமிழக பாளையத்தார் என பல வரலாறுகளை அது வெளிச்சம் போட்டு காட்டுகின்றது

மாவீரன் மருதநாயகம் பற்றிய குறிப்புகளை இவர்கள்தான் எழுதி வைத்தார்கள்

அவர்களில் ஒருவர் ஆனந்தரங்கம் பிள்ளை,

அன்றே சில மொழிகள் படித்தவர். சொந்தமாக கப்பல் இருந்த வியாபாரியும் கூட, இதனால் ஐரோப்பியர் பழக்கம் உருவாகி அப்படியே சென்னை கோட்டையில் திவானாக இருந்தவர்.

அப்பொழுது அங்கு வந்தவனே ராபர்ட் கிளைவ்

இவர் மூலமே தமிழக நிலவரத்தை அறிந்தான் கிளைவ்

சென்னை கோட்டையினை பிரென்ஞ்படை பிடித்தபொழுது பிரென்ஞ் பக்கம் சென்றார், அம்மொழியும் அவருக்கு தெரிந்திருக்கின்றது. அவர் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளவர்

அன்றைய அரசுபணிக்கு அது அவசியமாகவும் இருந்தது.

1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார் என்பதுதான் இவரின் சாதனை

அவர் கடமைக்காக எழுதினாலும் பின்னாளில் அது பெரும் வரலாற்று பெட்டகம் ஆனது

அந்த காலகட்டத்தை கண் முன் நிறுத்தும் பெரும் கல்வெட்டாக அவரின் நாட்குறிப்பு நிற்கின்றது

இந்தியா ஆங்கில அடிமையான அந்த தொடக்க காலங்கள் சுவாரஸ்யமானவை, துரோகம், அவமானம், வீரம் என எல்லாம் கலந்த கலவை

நாமும் பழைய வரலாறுகளை ஊன்றி படிக்கின்றோம், அரசர்களின் ராஜ வாழ்க்கை மிக கொண்டாட்டமாய் இருந்திருக்கின்றது

சாதி என்பது அரசனை பாதுகாக்கவே வகுக்கபட்டிருகின்றது, அவனுக்கே எல்லோரும் பணியாளாய் இருந்திருக்கின்றனர்

பிராமணன் அவனுக்காக பிரார்த்திருக்கின்றான், சத்ரியன் அவனுக்காக சண்டையிட்டிருக்கின்றான், வைசியன் அவனுக்காக வியாபாரம் பார்த்திருக்கின்றான், சூத்திரன் அவனுக்காகவே உழைத்திருக்கின்றான்

ஆண்டாண்டு காலம் நாங்கள் ஒடுக்கபட்டோம் எங்கள் சாதி ஒடுக்கபட்ட சாதி , பிராமணிய கொடுமை என்பதெல்லாம் சுத்த அரசியல்

எல்லாம் அரசனுக்கு அடிமை சாதியாகவே இருந்திருக்கின்றது, வெள்ளையன் வருமுன் அப்படித்தான் இருந்திருக்க்கின்றது

மனுதர்மம் என்பது பிராமணுக்காக அல்ல, அரசனுக்காகவே உருவாக்கபட்டிருக்கின்றது

அப்படித்தான் அக்கால அரசவைகள் இருந்திருகின்றன, இந்தியா என்றெல்ல ரஷ்ய ஜார் மன்னனின் அரசு வரை அப்படித்தான் இருந்திருக்கின்றது

அதில் வெள்ளையன் வந்த காலம், அவன் ஆட்சி இங்கு துளிர்விட்ட காலம் எல்லாம் வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டம்

அந்த சரித்திரத்தை நமக்கு பதிந்து தந்தவர் ஆனந்தரங்கம் பிள்ளை

இன்று அவருக்கு பிறந்தநாள். அந்த வரலாற்று தமிழனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s