உடன்பிறப்பே

“உடன்பிறப்பே

திராவிட திருநாடாம் தமிழகத்தில் புகமுடியாதவர்கள், தமிழர் தன்மான கோட்டையாம் பெரியார் மண்ணாம் இந்த எக்கு கோட்டையில் புகமுடியாதவர்கள் சுரங்கம் தோண்டி நம் காலடிக்கு வரபார்க்கின்றார்கள்

விடலாமா?

அம்மையார் கட்சி அவர்கள் அடிமைகட்சி ஆனபின் அதிகார பாசறையின் குத்தீட்டிகளை நம்மேல் பாய்ச்சி நம்மை பயமுறுத்துகின்றார்கள் வீணர்கள்

உடன்பிறப்பே, கழக கண்மணி துரைமுருகன் வீட்டில் பணசுரங்கம் இருந்ததாம், பல்லாயிரம் கோடி இருந்ததாம் அதை எல்லாம் தமிழகம் நம்புமாம்

நம்புமா? நம்ப முடியுமா? நம்பவிட விட்டுவிடத்தான் முடியுமா?

சொல் உடன்பிறப்பே

அவர் கல்லூரி நடத்துவது எதற்காக? ஏழை மாணவர்கள் அதுவும் அரசு கல்லூரியில் இடம் கிடைக்கா மாணவர்கள் கற்பதற்காக‌

அவர் தொழிற்சாலை நடத்துவது எதற்காக? ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக‌

அவர் என்றல்ல இந்த எ.வ வேலு, பொன்முடி மற்றும் இதர திமுக தலைவர்கள் எல்லாம் கல்லூரியும் தொழிற்சாலையும் அமைத்திருப்பது பெரியாரும் அண்ணாவும் சொன்ன இந்த ஒப்பற்ற தத்துவத்தால் அன்றி வேறல்ல‌

மற்றபடி நாம் ஏழைகள், பெரும் ஏழைகள், அன்னை அஞ்சுகத்தைவிடவா ஒரு ஏழைத்தாய் உண்டு

கயவர்கள் சொல்வதை விடு, நீ சிந்தித்துபார் உடன்பிறப்பே

இருக்கும் கல்லூரி எல்லாம் ஊழல், பல்கலை கழகம் எல்லாம் ஊழல் பின் எப்படி நற்படிப்பு கிடைக்கும் இதற்குத்தான் நம் கட்சியினர் கல்லூரிகளாய் பள்ளிகளாய் கட்டி வைத்தோம்

மற்றபடி நாம் ஏழைகள்

அதில் கைபற்றபட்ட பணம் ஆசிரியர்கள் சம்பளபணமன்றி வேறல்ல‌, பின் தங்கிய மாணவருக்கான கட்சி நிதியும் அதில் உண்டு

இந்த ஆட்சியில் தொழில் இல்லை வேலைவாய்ப்பு இல்லை அதை ஒழிக்கத்தான் நம் கழக கண்மணிகள் தொழிசாலை கட்டியிருக்கின்றன‌

நாங்கள் தொலைகாட்சி வைத்திருக்கின்றோமேயாருக்காக?
மக்கள் உண்மையினை தெரிய வேண்டும் என்பதற்காக மற்றபடி சம்பாதிக்க அல்ல‌

நாங்கள் காரில் செல்வது யாருக்காக? உங்களுக்காக எங்களுக்காக அல்ல‌

தமிழக மக்களின் மொத்த உரிமைக்கும் நாங்கள் எப்படி மொத்த உருவமோ, அப்படியே மக்களின் சொத்துக்களும் எங்களிடம் சில இருக்கலாம்

அவை எல்லாம் உங்களுக்காக நாங்கள் பாதுகாக்கும் சொத்துக்கள்

உயிரினும் மேலான உடன்பிறப்பே

இந்த பெரியார் மண்ணிலே காவிகொடி பறக்கவிடலாம், அண்ணாவின் மண்ணிலே அரிவராசனம் பாடலாம் என கனவு கண்டுவரும் எதிரிபடைக்கு தக்க பாடம் புகட்டுவாய்

ஏழை மாணவருக்கு நிதியளிக்கவும், ஆசிரியர்களுக்கு சம்பளமிடவும், ஏழை தொழிலாளருக்கு சம்பளமிடவும் வைத்திருந்த பணத்தை இந்த பாசிச அரசு கொள்ளைபணம் என சொல்ல்லி அருமை கண்மணி துரைமுருகனை குற்றம் சாட்டுகின்றது

இந்த மோசடியினை, நம்மேல் பகைவர் சுமத்தும் களங்கத்தை உடனே துடித்தெழ எழுவாய், உழைப்பாய், வெற்றியினை கொண்டு வருவாய்

நாமெல்லாம் ஏழைகள், ஏழையினும் ஏழைகள் மக்கள் பணியார்கள் என்றும் அடிமட்ட தொண்டர்கள்

நம் பணமெல்லாம் அவர்கள் பணமே, நம் சொத்துக்கள் எல்லாம் அவர்கள் சொத்தே

நாம் அரும்பாடு பட்டு காத்த தமிழ்நாட்டை, அருமை காந்தியும் ஒப்பற்ற நேருவும், தன்னலமற்ற இந்திராவும் , ரத்தபழி ராஜிவும் சொக்கதங்கம் சோனியாவும் காத்த இந்த நாட்டையும் அழிக்க வந்திருக்கும் பாசிச படைகளின் திருட்டு வேலையினை எடுத்து சொல்வாய்

உடன்பிறப்பே இன்று துரைவீட்டுக்கு வந்த பாசிசபடையின் வேட்டை நாய் கும்பல் நாளை உன்னை கடிக்காதா? என்னை கடிக்காதா?

அதை தமிழகத்து எல்லையினை விட்டு விரட்ட வேண்டுமா இல்லையா?

மாட்டுகறி வைத்திருந்தான் என அப்பாவி இஸ்லாமியனை கொன்ற கும்பல், இலவச கல்விக்காக தம்பி துரைமுருகன் வைத்திருந்த பணத்தை கொள்ளைபணம் என சொல்லி அவனை குறிவைக்கின்றது

இந்த பேராபத்தை நாம் ஒன்றுபட்டு களையவேண்டும், தமிழகம் நிம்மதி பெறவேண்டும்

அதை உரக்க கூறி, மக்களை திரட்டி பகைமுடிப்பாய் , நம் தன்மான தளபதிக்கு வெற்றிமுடிமுடிப்பாய்

அதை இயற்கை தந்திருக்கும் சொர்க்கத்தில் இருந்து அண்ணாவும் தந்தை பெரியாரும் பார்த்து மகிழ்வோம் மகிழ்வோம் மகிழ்ந்து கொண்டே இருப்போம்..”

ஆம் இதுவும் “நெஞ்சுக்கு நீதி”

அடுத்த தேர்தலில் யார் வருவார் என தெரியாது, அது அவசியமுமில்லை

ஆனால் இந்த ஆட்சி ரஷ்யவிடமிருந்து வாங்கிய எஸ் 400 சிஸ்டமும், அமெரிக்காவிடம் ஒப்பந்தம் செய்திருக்கும் எப் 21 ரக விமானமும் தேச பாதுகாப்பினை வலுபடுத்தும்

அசாட் ரக ஏவுகனைகள் செயற்கைகோளுக்கு பாதுகாப்பு வழங்கும்

இன்னும் நவீன எமிசாட் போன்றவை சிறந்த உளவுதகவலை தரும்

இந்த அரசில் வெளிவராத விஷயம் இந்தியாவின் ஏவுகனை எதிர்ப்பு ஏவுகனை விவகாரம்

ஓசைபடாமல் அதை வெற்றிகரமாக செய்தது இந்தியா, ஆனால் இன்னும் சில மேம்பாடு வேண்டும் என்பதற்காக அமைதி காக்கின்றது

பன்னெடுங்காலமாக ரஷ்ய பிடியில் சிக்கி வெள்ளையானைக்கு இடும் தீனிபோல் சென்றுகொண்டிருந்த செலவுகளை கட்டுபடுத்தி நாட்டிற்கு எது தேவையோ அதை சரியாக செய்திருக்கின்றது இந்த அரசு

அதை எம்மால் உறுதியாக சொல்லமுடியும்

செயற்கைகோள் முதல் கப்பல்படை வரை மிகபெரும் வலிமையினை செய்துவிட்டுத்தான் விடைபெறுகின்றார்கள்

ஆம் மன்மோகன் அரசு செய்யதயங்கியது அல்லது செய்யதவறியதை எல்லாம் துணிந்து செய்துவிட்டுத்தான் கரையேறுகின்றார்கள்

தமிழன் கலாம் பெயரில் K -Series என வருங்கால ஏவுகனைகளைபெயரிட்டு அழைக்கின்றது இந்த அரசு, மிகபெரும் விஷயம் அது

பலநாட்டு ராணுவ தளவாட நடபடிகளை கவனிக்கின்றோம் என்ற முறையில் எம்மால் இதை உறுதியாக் கூறமுடியும்

நெஞ்சுக்கு எது நீதியோ அதை நாம் சொல்லிகொண்டே இருப்போம்

ஆம் இதுவும் “நெஞ்சுக்கு நீதி”

நான் சங்கியாக இருக்கட்டும்

நான் சங்கியாக இருக்கட்டும், பெரும் பணம் வாங்கிகொண்டு காவியாக மாறியிருக்கட்டும்

உங்கள் அறிவு எங்கே போனது?

1960களின் மிக் விமானங்கள் வேண்டாம் என ராணுவம் கதறியபொழுது காங்கிரஸ் அரசு அதை மாற்றிகொடுக்காதது ஏன்?

இந்திய விமானபடை நவீனமாவக்கம் செய்ய அவர்கள் தயங்கியது ஏன்?

2012ல் செயற்கை கோள் எதிர்ப்பு ஏவுகனைக்கு அனுமதி கொடுக்காதது ஏன்?

ரபேல் விமானம் விரைந்து வருவதை ஏன் சர்ச்சை செய்து தடுத்தார்கள்?

தன் இரண்டாம் பதவிகாலத்தில்தான் ரபேலுக்கு வேண்டா வெறுப்பாக ஒப்பந்தம் செய்தது காங்கிரஸ் ஏன்?

மோடி இப்பொழுதே எப் 21 வாங்க ஒப்பந்தம் செய்திருக்கின்றார் ஏன்?

இப்படி நிறைய ஏன்? உண்டு

கொஞ்சமேனும் நாட்டுபற்றும் மனசாட்சியும் இருந்தால் நீங்களே யோசியுங்கள்

தனிபெரும் இயக்குனரான அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

தமிழ்சினிமாவில் நிறைய குப்பை இயக்குனர்கள் வருவார்கள், அவர்கள் மத்தியில் சினிமாவினை புரட்டிபோடும் இயக்குனர்கள் எப்பொழுதாவதுதான் வருவார்கள்

அவரின் இயற்பெயர் அலெக்ஸாண்டர், தன் ஆசிரியர் ஒருவரின் பெயரான மகேந்திரன் எனும் பெயரை சூட்டிகொண்டு சினிமாவுக்கு வந்தார்

வசனகர்த்தாவாகத்தான் அறிமுகமானார் சிவாஜியின் தங்கபதக்கம் உட்பட பல படங்களுக்கு அவர்தான் வசனம்

சினிமா என்பது தமிழக நாடக வடிவின் அடையாளம், நாடகத்திற்கு மிக முக்கிய மூலம் கதை

அந்த கதை அமைய ஒரு இயக்குநர் நல்ல வாசிப்பாளனாக இருக்க வேண்டும், அவனின் இதயத்தை ஒரு நாவலோ கதையோ பாதித்துவிட்டால் அதுவே அற்புதமான படமாக அமையும்

தன் மனதை பாதித்த அந்த கதையினை படமாக எடுத்தார்

அப்படி முதல் படமான முள்ளும் மலரும் படத்தில் கவனிக்கபட்டார் மகேந்திரன்

ரஜினி எனும் மகத்தான நடிகனை பாலசந்தர் படங்களுக்கு பின் திரையில் ஜொலித்து காட்டிய படம் அது

பாசம், வில்லத்தனம், இயலாமை, கோபம், தன்மானம் என ஒவ்வொரு உணர்ச்சியினையும் அட்டகாசமாக செய்திருப்பார் ரஜினி

அந்த கதை பாசமலர் படதின் தழுவல் என்றாலும் பின்னாளைய காதலுக்கு மரியாதை படம் இதன் தழுவல்

இன்று பார்த்தாலும் பலமுறை பார்க்க தூண்டும் படம் அது

மகேந்திரனுக்கு மங்கா அடையாளமாக அமைந்தது “உதிரி பூக்கள்”, அது புதுமை பித்தனின் கதை என்றாலும் தன் அட்டகாசமான வசன இயக்கத்தால் அதை உன்னத படமாக்கினார் மகேந்திரன்

தமிழ் சினிமாவின் முதல் தரமான பத்து படங்களில் அது எல்லா காலமும் ஒன்று

பெண்களின் வலியினை உரக்க சொன்ன படம் அது “நீ நோயாளி அதனால் இரண்டாம் திருமணம் செய்ய போகின்றேன்” என கணவன் சொல்ல‌

மனகுரலாக “இதையே நான் சொல்லியிருந்தால்” என அந்த நாயகி முகத்தைகாட்டி வசனம் வந்தபொழுது தமிழகம் அதிரத்தான் செய்தது

அதிலும் கடைசி காட்சியில் வில்லனை ஊர்கூடி கொல்ல போகும் நேரத்தில் வில்லன் சொல்வான் அல்லவா?

“நீங்கள் எல்லாரும் நல்லவர்களாக இருந்தீர்கள், என் பாவச்செயலால் உங்களை என்னை கொல்லும் அளவு கெட்டவர்களாக்கிவிட்டேன்

என்னை நீங்கள் கொன்று கொலைகாரர்களாக வேண்டாம், நானே செத்துவிடுகின்றேன்”

எப்படிபட்ட காட்சி அது, உலக சினிமாக்கள் எல்லாம் பார்த்து கைதட்டிய ஒப்பற்ற காட்சி

காந்தியின் மண்ணில் இருந்து அட்டகாசமான படம் என உலகம் கொண்டாடிய காட்சி அது

அப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் இன்றும் திரைகல்வியில் பாலபாடம் , இச்சமூகம் பெண்மையினை எப்படி நோக்கும் என்பதற்கு அப்பெண்ணின் மேல் விரலை கூட பதிக்காமல் பூட்டிய அறையில் இருந்து வெளிவரும் அந்த வில்லன் பாத்திரம் மிக நுண்ணிய காட்சி ,

ஆனால் கொடுக்கும் வலி மிக அதிகம்

தன் படங்களின் காட்சியால் வலிகொடுத்தவர் அந்த மகேந்திரன், அப்படி ஒரு திறமை அவருக்கு இருந்தது

மிக சுருக்கமான வசனங்கள், ஆனால் முகபாவனையிலே விளங்கும் உணர்வுகள் என புதுபாணி அவரால் உருவானது, பின்னாளைய மணிரத்னம் அதை பிடித்து கொண்டார்

ஜாணி படத்தில் ரஜினி ஸ்ரிதேவி என இருவரின் நடிப்பினையும் அற்புதமாக வெளிகொண்டுவந்திருந்தார் மகேந்திரன்

அவர் படத்தின் பாடல்கள் காலத்தை வென்றவை, வசனங்களும் அப்படியே

நல்ல ரசிகனுக்கே இதெல்லாம் சாத்தியம், மனிதர் ரசித்து படமெடுத்திருக்கின்றார்

பல படங்களுக்கு வசனம், சில தொலைகாட்சி தொடர் என அவர் எழுதினாலும் சினிமாவில் அவர் இயக்கிய படங்கள் சொற்பமே

பன்றி பல குட்டி இட்டாலும் யானை ஒன்றுதானே இடும், அப்படி பட்ட இயக்குனர் மகேந்திரன்

சாணக்கியனே ஒரு புத்தகம்தான் எழுதினான், ஷாஜகான் ஒரு மாளிகைதான் கட்டினான்

திறமையானவன் நிலைக்க ஒரு அடையாளம் போதும்

சிலபடங்களில் நடித்தும் இருக்கின்றார் மகேந்திரன்

அந்த மகேந்திரன் இன்று இல்லை, காலமாகிவிட்டார் அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி

தமிழ் சினிமாவுக்கு புது இலக்கணம் வகுத்த அவருக்கு உலகெல்லாம் வரவேற்பும் இருந்தது

ஈழத்து புலி பிரபாகரனே அவரை வரவேற்று உபசரித்து கதை கேட்ட காலமும் இருந்தது, அதைபற்றி மகேந்திரன் சொன்னதுதான் அங்கிள் சைமன் முதுகுக்கு என்றைக்கும் சவுக்கு

மறைந்த ராமசந்திரனுக்கு மகேந்திரன் மேல் மரியாதை இருந்தது, அதுவும் முள்ளும் மலரும் வெற்றிக்கு பின்னால் ரஜினி மகேந்திரன் பக்கம் செல்லாமல் பாதுகாக்கும் தேவையும் இருந்தது

இதனால் மகேந்திரனை கட்டிபோட ஒரு ஒப்பந்தம் செய்தார் ராமசந்திரன் “பொன்னியின் செல்வன்” கல்கி கதையினை தன்னை வைத்து எடுக்கும்படி கோரிக்கை விடுத்தார்

ராமசந்திரனின் ஆசை எங்கிருக்கின்றது பார்த்தீர்களா?

அப்படி ஒன்று நடந்திருந்தால் நாடு தாங்குமா? ஆனால் ராமசந்திரன் திரும்ப நடிக்க முடியாதபடி மத்திய அரசு தடுத்ததால் அந்த ஆபத்து நீங்கியது

சிவாஜிகணேசனுக்கு தங்கபதக்கம் படத்திற்கு மங்கா வசனம் எழுதியவர் என்ற வகையில் ராமசந்திரனுக்கு அவர்மேல் வன்மமும் இருந்தது

மகேந்திரனும் தப்பினார்

அன்று ராமசந்திரனிடம் தப்பிய மகேந்திரன் இப்பொழுது எமனிடம் தப்பமுடியவில்லை

அவருக்கான காலம் முடிந்துவிட்டது ஆனால் அவரின் படைப்புகளுக்கான காலம் முடிவதே இல்லை

அந்த கலைஞனின் மாபெரும் வெற்றி அது

தனிபெரும் இயக்குனரான அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

அந்த முள்ளும் மலரும் கிளைமேக்ஸும், அந்த உதிரி பூக்கள் கிளைமேக்ஸும் கண்ணுக்குள் வந்து போகின்றது

அந்த ஷோபா கடைசி காட்சியில் “அண்ணே…” என கதறி அழுது ஓடிவருவார் அல்லவா?

அப்படி அழ தோன்றுகின்றது

ஏன் அப்படி இருந்தார்கள்?

இந்திய ராணுவம் குறிப்பாக அந்த விமானபடையின் நிலமையினை பார்த்தால் ஒன்று புரிகின்றது

இந்த மன்மோகன்சிங் அரசு பெரும்பாலும் புதிய விமானங்களை வாங்கவோ அதை பலபடுத்தவோ கொஞ்சமும் அக்கறைகாட்டவில்லை

2006களிலே நவீன விமானங்களை வாங்க வேண்டியவர்கள் அமைதி காத்திருக்கின்றார்கள், விமானபடை புத்தாக்கம் தள்ளிபோடபட்டிருக்கின்றது

(இதே காலகட்டத்தில் அதாவது காங்கிரஸ் அரசின் காலகட்டத்தில் இந்தியராணுவத்துக்குள்ளே சில முணுமுணுப்புகள் வந்தது நிஜம் )

இந்திய விமானபடை இடைவிடாமல் வைத்த கோரிக்கைபடி கடைசியில் ரபேலை வாங்குவோம் என்றவர்கள் அதையும் இழுத்தடித்து ஆட்சியும் இழந்து சென்றுவிட்டார்கள்

இந்திய விமானடை அதன்பின் மோடிஅரசுக்கு கோரிக்கை வைத்தது, மோடி அரசு முடிந்ததை செய்தது

அதிலும் ரபேல் ஊழல் என சொல்லி முடக்கியது காங்கிரஸ்

ஆனாலும் பல காரியங்களை விமானபடைக்கு செய்திருக்கின்றது மோடி அரசு

ஒன்று நினைவில் கொள்ள வேண்டும், போர் விமானத்தை நினைத்தவுடன் சந்தையில் கத்திரிக்காய் வாங்குவது போல வாங்கமுடியாது, ஒப்பந்தம் எல்லாம் முடிந்து சில காலம் ஆகும்

ரபேல்தான் வாங்க வேண்டும் என ஒற்றைகாலில் நிற்கின்றது விமானபடை அவர்களின் விருப்ப தேர்வு அது

அது வர கொஞ்சம் தாமதமாகும் என்கின்றார்கள், இது போக பல ரகசிய தேர்வுகளுக்கும் மோடி அரசு செவிசாய்த்திருக்கின்றது

மன்மோகன்சிங்கின் அரசின் அமைதியால் இந்திய விமானபடை கொஞ்சம் வலுவிழக்கின்றது, இந்த சின்ன சண்டையில் மிக் ரக விமானத்தை இயக்கியதே சாட்சி

இதனால் விமானம் பழையதாக இருக்கட்டும், புதிய விமானம் வரும்வரை நவீன ஏவுகனைகளை பொருத்தி ஓரளவு தாக்குபிடிக்கின்றது இந்திய விமானபடை

அவசர தேவைக்கு அதைத்தான் செய்ய முடியும்

நிச்சயமாக சொல்லலாம் 2006களிலே மன்மோகன் சிங் அரசு விமானபடையின் கோரிக்கைக்கு செவிசாய்த்திருந்தால் இந்த சிக்கல் வந்திருக்காது

மோடி அரசு இப்பொழுது செய்திருக்கும் காரியம் இன்னும் சில ஆண்டுகளில் தெரியும், நிச்சயம் நல்ல விஷயம்

ஆம் எப்21 ரக விமானம் உட்பட பல விமானங்களை வாங்க இந்த அரசு ஒப்பந்தம் செய்திருக்கின்றது

அமெரிக்க போர் விமானங்களை இந்தியா வாங்குவது இதுதான் முதல்முறை

ஆனால் மறுபடியும் குழப்பமான அரசு வந்தால் மறுபடியும் சிக்கல்

பாதுகாப்பு விவகாரங்களில் மன்மோகன்சிங் அரசு மெத்தனமாகவே இருந்திருக்கின்றது

மெத்தனமாக இருந்து தொலைத்தவர்கள் பின் ரபேல் இந்தியா வரும்பொழுது ஏன் ஊழல் என குதித்தார்கள்?

ஆம் காங்கிரஸ் தெரிந்தே துரோகம் செய்திருக்கின்றது, ரபேல் இங்கு விரைந்து வர அக்கட்சி உதவியிருக்க வேண்டும்

ஆனால் விமானபடையின் அவசர கோரிக்கை தெரிந்தும் இவர்கள் ரபேலுக்காக பாராளுமன்றத்தை முடக்கினார்கள் என்றால் இவர்கள் மேல் அச்சமே மேலோங்குகின்றது

கவனியுங்கள், காங்கிரஸ் காலத்தில் ரபேல் வேண்டும் என கதறுகின்றது விமானபடை, அதை வாங்கி கொடுக்க வேண்டிய காங்கிரஸ் இழுத்தடிக்கின்றது

பின்பு அது பாஜக காலத்தில் வரும்பொழுதும் குழப்பம் விளைவித்தால் எப்படி? ஏதோ இடிக்கின்றது அல்லவா?

ஏன் அப்படி இருந்தார்கள்?

ஏதோ ஒரு சக்தி நம்மை காக்கும் என நம்பியிருக்கலாம், விமானபடை கோரிக்கையினையும் மீறி ரபேலுக்கு பதில் இன்னொரு நாட்டு பக்கம் சரிந்திருக்கலாம்

அப்படியானால் அந்த சக்திக்கு இந்நாட்டில் என்னென்ன கதவுகளை திறந்துவிட்டார்களோ யாருக்கு தெரியும்?

(இந்திய விமானபடை தனக்கு தேவையானதை அரசுக்கு கோரிக்கையாக வைக்கும் அவர்கள் தனியாக வாங்கமுடியாது

ரபேலுக்கு அன்றே அவர்கள் கோரிக்கை வைத்தார்கள் அது இன்னும் வந்து சேரவில்லை

ஏன் இன்னும் வரவில்லை ஏன் சிலர் வந்துசேர விடவில்லை என சிந்தியுங்கள் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்..)

எப்படி இருந்தவர் கலைஞர்?

எப்படி இருந்தவர் கலைஞர்?

சிலம்பு செல்வர் ம.பொ.சி தனக்கே உரித்தான சிலப்பதிகார அறிவில் “மங்கல அணி” என்ற வரியில் கண்ணகி தாலி என சொல்லிவிட்டார்

அது மங்கல வாத்தியங்கள் இசைக்கும் அணியே தவிர தாலி என்பதல்ல என பலத்த ஆதாரங்களுடன் வாதிட்டார் கலைஞர்

அவர் நடத்திய இலக்கிய சுவாரஸ்ய போரில் அதெல்லாம் கால கல்வெட்டுகள்

அவரின் இலக்கிய அறிவு அப்படி இருந்தது, பூம்புகார் படத்து வசனமெல்லாம் பராசக்தி ரகம்

அவரின் மொத்த புகழையும் கெடுக்க அவர் மகன் வந்திருக்கின்றார், அவரின் உளரலை எல்லாம் கேட்டால் நல்ல திமுகவினருக்கும் தமிழ் உணர்வாளருக்கும் கோபமே வரும்

பெரும் அறசீற்றம் வரும், நாம் சொல்வது உண்மையான திமுகவினருக்கு

கண்ணகி மதுரையில் பிறந்தாராம்

அதைவிட கொடுமை

“சான்றோரும் உண்டு கொல்?” எனும் பாடலை கொலையாய் கொல்கின்றார் ஸ்டாலின்

“சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்?
தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?
வை வாளில் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?’
என்று இவை சொல்லி அழுவாள் கணவன்-தன்”

அதாவது இங்கு சான்றோர்கள் உண்டோ? தெய்வமும் உண்டோ என அவள் கேட்கும் கேள்வி அது

கொல் என்பது தவறு கொல்? என வினவுவது சரி என்கின்றது இலக்கணம்

கொலு போன்ற வார்த்தையின் பாடலது , சான்றோர்கள் இங்கு கொலுவீற்றிருக்கின்றார்களா என அவையினை கண்ணகி கேட்கும் காட்சி அது

மிக உருக்கமான காட்சி, மிக நயமான சொல்லாடல்

அந்த அற்புத சிலப்பதிகாரத்தை
இங்கோ “சான்றோரும் உண்டு கொள்” என மதுரை கோனார் கடைக்கு சான்றோர்களை சாப்பிட அழைக்கின்றார் கலைஞரின் மகன்

எப்படிபட்ட இலக்கியவாதி கலைஞர், மபொசியின் சிலம்பு பற்றிய கேள்விகளுக்கு எப்படி எல்லாம் பதிலளித்தார்?

இவரோ கோனார் கடைக்கு உண்டு கொள் என அழைக்கின்றார்

“சான்றோர் உண்டு கொள்”, எந்த கடையில் உண்ண வேண்டும் என்றும் சொல்லி தொலையவில்லை

மற்றொரு சொதப்பல் கண்ணகி மதுரையில் பிறந்தாளாம், எப்படி இருகின்றது திமுகவின் புதிய சிலப்பதிகாரம்?

எப்படி இருந்தது திமுக?

அவர்களின் இலக்கிய அறிவு தமிழறிவு உலக அறிவு என்ன? எவ்வளவு பிரசித்தி?

கற்றவர்களும் தமிழறிஞர்களும் அறிவாளிகளும் கொண்ட மாபெரும் சபையாக அது ஒரு காலத்தில் இருந்தது

அப்படிபட்ட அந்த இயக்கம் இப்படி சந்தி சிரிக்கும் அளவு ஒரு தடுமாற்ற தலைவனை கொண்டு திரிவதை காலத்தின் கோலம் என்பதன்றி என்ன சொல்ல?

நாம் கட்சி சார்பானவர் அல்ல ஆனால் திமுகவில் அறிவாளிகளும், வாததிறன் மிக்கவர்களும் சிந்தனையாளர்களும் அதன் பெரும் அடையாளம்

அதிமுக எப்பொழுதுமே கோமாளிகளின் கூடாரம் , ஆனால் திமுக என்பது அந்நாளில் அறிவின் மண்டபம்

அது இப்பொழுது வீழ்ந்திற்று

ஒரு மாபெரும் சிந்தனை மண்டபம் ஒன்று சர்கஸ் கூடாரம் ஆகிவிட்டது

அந்த தமிழ்சபையின் ஒளி அணைந்துவிட்டது, நல்லோர் சிலர் உளரேல் அந்த சபையினை மீட்டெடுப்பீர்

அந்த விளக்கினை ஏற்றிவைப்பீர்..

தேர்தல் துளிகள் 02/04/2019 (1)

திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல : முக ஸ்டாலின்

தேர்தல் முடியும் வரை என்ற வார்த்தையினை சேர்க்க மறந்துவிட்டார்

ஆக தேர்தல் முடியும் வரை திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல

************

ஜெயலலிதா வீட்டில் கைபற்றப்ட்டால் அது பிரமாண்டமான நடவடிக்கை, ஊழல் ஒழிப்பு

இன்னும் பலர் வீட்டில் கைபற்றபட்டால் அது செய்ய வேண்டிய நடவடிக்கை, இன்னும் கடுமையாக வேண்டும்

ஆனால் துரைமுருகன் வீட்டில் கைவைத்தால் அது பழிவாங்கும் நடவடிக்கை, அதை தமிழகம் நம்பவே கூடாது

உடன்பிறப்பு தத்துவங்கள்

*************

அனிதா ராதாகிருஷ்ணன் பண்ணை வீட்டில் சோதனை : செய்தி

கீதா ஜீவன் கோஷ்டி கனிமொழியினை நிழலாக சுற்றிவரும்பொழுது அனிதா வீட்டில் ரெய்டு என்றால் இதில் ஏதோ உள்குத்து இருக்கலாம்

அனிதா இனி “அணி தா”வினாலும் தாவலாம்

*************

நானொரு ராசி இல்லா ராஜா…..


நல்ல பாடல்

திமுகவின் கொள்கை விளக்க கூட்டம் இப்படி இல்லை என்றால்தான் ஆச்சரியம்

நயனும் மூன்றாம் கலைஞரும் ஆடியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்

**************

தொலைக்காட்சி தாத்தா கொடுத்தார், செட்டாப்பாக்ஸ் அப்பா நிச்சயம் கொடுப்பார் : உதயநிதி ஸ்டாலின்

திராவிட தத்துவம் தொலைகாட்சியிலும் செட்டாப் பாக்ஸிலுமே இருக்கின்றது