50 வருஷம் இழுக்கலாம்

“ராமர் கோவில் இன்னும் கட்டவில்லை, கட்டவும் முடியாது, ஆனா ஏதாவது செய்யாமல் தேர்தல் பக்கமும் செல்ல முடியாது

அதாங்க சொல்றேன், முதல்ல மசூதி இருந்த இடத்துக்கு அப்பால அனுமாருக்கு ஒரு சின்ன கோவில் கட்டுவோம், அப்படியே விஸ்வாமித்திரர்க்கு ஒன்னு கட்டுவோம்

10 வருஷம் அத சொல்லியே அரசியல் செய்யலாம், அப்புறமா கைகேயி கூனிக்கு சிலை வச்சி கல் எறிய சொல்லுவோம், ஆத்தங்கரையில குக‌னுக்கு படகு கோவில் கட்டுவோம், லட்சுமணனுக்கு நடுகாட்டுக்குள்ள கட்டுவோம்

அப்படியே 50 வருஷம் இழுக்கலாம்

ராமருக்கு கோவில்னு இழுத்தமாதிரியும் ஆச்சி, ராமயணத்தாருக்கு எல்லாம் கோவில் கட்டுனமாதிரியும் ஆயிரும் “

இந்திய தளபதி இன்று அதை உறுதிபடுத்தியிருக்கின்றார்

பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்கும் எப்16 விமானம் வீழ்த்தபட்டதற்கும் வலுவான ஆதாரம் இந்திய ராணுவ தளபதியால் வெளியிடபட்டிருக்கின்றது

இன்னும் ஏராளமான ஆதாரம் உண்டெனினும் அதை பாதுகாப்பு கருதி தரமுடியாது என்ற இந்திய தரப்பு, ரேடார் படம் ஒன்றை மட்டும் உலகிற்கு தந்திருக்கின்றது

அதில் பாகிஸ்தானிய விமானங்கள் வந்த தகவல் அட்டகாசமாக பதிவு செய்யபட்டிருக்கின்றது அதில் எஃப்16 ரகமும் உண்டு

இதை கொடுத்தது பாஜகவின் போட்டோசாப் பிரிவு அல்ல‌

மாறாக இந்திய ராணுவ துணைதளபதி ஆர்.ஜே.கே கபூர்

கூடுதலாக பாகிஸ்தான் விமானபடையின் உரையாடலை இடைமறித்து கேட்டபொழுது ஒரு எப் 16 ரக விமானம் திரும்பவில்லை என அவர்கள் பேசியதை மிக நுட்பமாக கேட்டு உறுதிபடுத்தியதை உலகிற்கு சொல்கின்றது இந்தியா

நாம் உறுதியாக சொன்னோம், உலக தரவுகளின் படியும் சொன்னோம்

உலக அரங்கில் ஒரு அரசு பொய் சொல்லமுடியாது அது பலத்த விளைவுகளை ஏற்படுத்தும் , இதனால் தாக்குதல் நடத்தியதையும் நடந்ததையும் இந்தியா சொல்லவேண்டியது அதன் கடமை, அதை உறுதிபடுத்திற்று

இந்தியா அங்கு குண்டுவீசியதும் பதிலுக்கு பாகிஸ்தான் பறந்து வந்ததும் நாம் அவர்களின் எப்16ஐ வீழ்த்தியதும் நடந்த வரலாறு

இந்திய விமானபடை பெரிதும் அலட்டிகொள்ளவில்லை ஆனால் பல தகவல்கள் வெளிவரும் நேரம் சில ஆதாரங்களை வெளியிடவேண்டிய கட்டாயம் இருப்பதால் இப்பொழுது அறிவித்திருகின்றார்கள்

இந்திய தளபதி இன்று அதை உறுதிபடுத்தியிருக்கின்றார

இளைய இந்திரா வரட்டும், இந்தியா செழிக்கட்டும்

பிரியங்கா தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு வரலாம் என்கின்றார்கள், அப்படி வந்தால் அவரை வாழ்த்தி வரவேற்கலாம்

இந்தியாவுக்கு தனிபெரும் தலைவர்கள் தேவை, இந்நாட்டின் ஒருமைபாட்டையும் ஒற்றுமையினையும் பாதுகாக்க ஜாதி , மதம் இனம் மொழி கடந்த தலைவர்கள் தேவை

காலத்தினால் மோடி உருவாகிவிட்டார் நல்லது, ஆனால் அது ஒரு துருவ தலமையாகிவிடும் அது தேசத்திற்கு நல்லதல்ல‌

மோடிக்கு சமமான நல்ல ஆளுமை இன்னொரு இந்திய ஆளுமையாக வரவேண்டும் அதுதான் தேசத்துக்கு நல்லது

அப்படி ஒரு நல்ல ஆளுமையாக வசீகரம் மிகுந்த தலைவராக பிரியங்கா வந்தால் மிக்க நல்லது

இத்தேசத்திற்கு பெரும் தியாகங்களை கொடுத்த அந்த பாரம்பரிய குடும்பத்திலிருந்து அவர் வந்து தேசம் காக்கட்டும்

அந்த வீர மங்கையினை, தியாக தீபத்தை, இந்தியரின் குல கொழுந்தை தமிழகம் மிக மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது

இந்திரா அரசியலுக்கு வரும்பொழுது அவருக்கு வயது 46 , சாஸ்திரிக்கு பின் காங்கிரசும் தேசமும் இருக்காது என்பதை அவர்தான் பொய்யாக்கி தேசம் காத்தார்

ஆச்சரியமாக பிரியங்காவும் அதே 46 வயதிலே அரசியலுக்கு வருகின்றார், ஆம் பாரதம் அந்த அதிசய ஒற்றுமையினை காண்கின்றது

காங்கிரஸ் அன்று இந்திராவினை எதிர்கொண்டது போலவே பிரியங்காவினையும் வரவேற்று கொண்டிருக்கின்றது, தேசம் பெரிதும் அவரை எதிர்பார்க்கின்றது

இளைய இந்திரா வரட்டும், இந்தியா செழிக்கட்டும்

மிக்கிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்@07th April

இன்று ஆயிரம் கார்ட்டூன்கள் வரலாம், ஆனால் கார்டூன் மூலம் உலகை திரும்பி பார்க்க வைக்கமுடியும் என நிரூபித்த முதல் நபர் வால்ட் டிஸ்னி

பெரும் படிப்பில்லை, சர்ச்சில் கூட வேலை செய்ய லாயக்கில்லை என்றார்கள். அவரின் தொடக்க வாழ்வு அப்படி இருந்திருக்கின்றது

தவறினை சரியாக செய்தால் வெற்றிபெறலாம் என்பது போல தத்ரூப ஓவியங்களை கிண்டலாக சரியாக வரையவேண்டும் என அவர் வரைந்தார்

அப்படி வந்ததுதான் மிக்கி மவுஸ்

அந்த மிக்கி மவுஸ் உலகத்தை கலக்கியது கொஞ்சமல்ல, இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரும், ஸ்டாலினும் ராணுவத்தால் உலகை முற்றுகையிட்டபொழுது தன் கார்ட்டூன்களாலும் உலகை முற்றுகையிட்டவர் டிஸ்னி

பெரும் புகழும் பணமும் அவருக்கு கொட்டின, உலகமெல்லாம் இன்று கொடிகட்டி பறக்கும் கேளிக்கை நிலையமான டிஸ்னிலேன்ட் அப்படி அமைக்கபட்டது

அந்த மாபெரும் கேளிக்கை சாம்ராஜ்யம் அமைய அவருக்கு வழிவிட்டது அவரின் மிக்கி மவுஸ்

சில நாடுகள் மத, கலாச்சாரபடி எலி அருவெருப்பானது, இதனை அனுமதிக்கமுடியாது என சொன்னாலும் மக்கள் ரகசியமாக ரசித்தார்கள்.

பின்னாளில் மாபெரும் சாம்ராஜ்யத்தை டிஸ்னி அமைக்க அந்த மிக்கி மவுஸ்தான் காரணம், அந்த எலிதான் இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை அமைத்தது

அந்த மிக்கிமவுஸ் உலகிற்கு அறிமுகமான நாள் இது, அதன் பின்னும் டொனால்ட் டக் போன்ற பாத்திரங்களை டிஸ்னி கொடுத்தாலும் வரலாற்றில் நின்றுவிட்டது மிக்கி

அந்த மிக்கிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

களத்தில் ரசிக்க வைத்த காட்சி இது..

குழந்தைகளை மிக நேசித்தார் நேரு, அவரை சந்திக்கும் குழந்தைகள் ரோஜா மலர் ஒன்றை கொடுத்தால் குழந்தை போல் அதை மகிழ்வுடன் வாங்கிகொள்வார் என்பார்கள்

வரலாறு திரும்புகின்றது

மிக பெரும் பாதுகாப்புடன் கடும் நெருக்கடியுடன் பிரச்சாரம் செய்யும் அந்த நேருவின் வாரிசு , ஒரு சிறு குழந்தைக்காக தன் வாகனத்தை நிறுத்தி அக்குழந்தையிடம் இருந்து ரோஜாவினை பெறுகின்றது

கள்ளமில்லா பிள்ளைமனம் என்பது இதுதான்,

மேன் மக்கள் என்றும் மேன் மக்களே
சுட்டாலும் சங்கு வெண்மை தரும்..

களத்தில் ரசிக்க வைத்த காட்சி இது..

பிணம் எங்கோ அங்கு கழுகுகள் கூடும்

“பிணம் எங்கோ அங்கு கழுகுகள் கூடும்” என்பது பைபிள் வாக்கு

கச்சா எண்ணெய் எங்கு இருக்கின்றது அங்கு பிணம் விழுந்தாக வேண்டும், அங்கு நமக்கு பணம் வந்தாக வேண்டும் என்பது அமெரிக்க கொள்கை

ஆச்சரியமாக அமெரிக்க அரசின் சின்னமும் கழுகு

இது காலம் வரை அக்கழுகு எங்கெல்லாம் எண்ணெய் உண்டோ அங்கெல்லாம் பிணகுவியல் நடத்தியது

இப்பொழுது அந்த கழுகுக்கு ஆபத்தாக இரு கழுகுகள் வந்திருக்கின்றன, அதன் பெயர் ரஷ்யா

ஆம் ஆச்சரியமாக ரஷ்ய அரசின் அடையாளம் இரு கழுகுகள்

இரு கழுகுக்கு சமமான புட்டீன்
எங்கெல்லாம் அமெரிக்காவுக்கு எண்ணெய் சல்லி விலையில் செல்லுமோ அங்கெல்லாம் ஆப்பு வைத்து ரஷ்ய எண்ணெயின் மார்க்கெட்டை நிறுத்துவார்

சிரியாவில் அப்படி குதித்தார், வெனிசுலாவுக்கு வெள்ளைஅடிக்கின்றார்

இப்பொழுது லிபியாவிலும் கால் பதிக்கின்றார், ஈராக் போலவே அரசியல் குழப்பம் அமெரிக்காவால் தொடங்கி வைக்கபட்டு , எண்ணெய் அமெரிக்காவுக்கு கொள்ளை போகும் நாடு அது

மிக சரியாக “என்னடா இங்க சத்தம்?” என சில அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றது ரஷ்யா

விரைவில் ரஷ்ய கப்பலோ விமானமோ லிபியா பறக்கலாம்

ஆக ஒரு கழுகினை, இரு கழுகுகள் கொத்தி சண்டையிடுகின்றன‌

மறுபடியும் முதல் வரியினை படியுங்கள், அட்டகாசமாக பொருந்தும்

இயேசு பெருமான் மாபெரும் ஞானி என்பதும் காலத்திற்கும் நிற்கும் வார்த்தைகளை சொன்னவர் என்பதும் அழகாக புரியும்

உலக காதலர்களில் ஆசீர்வாதம் பெற்றவள் மும்தாஜ்

இதுவரை உலகம் கண்ட மன்னர்களில் பெரும் பெயரும் வீரமும் பெற்றவர்கள் அதிகம், ஆனால் வாழ்வாங்கு வாழ்ந்து முத்திரை பதித்தவர் குறைவு.

அலெக்ஸ்ஸாண்டர் 15 ஆண்டுகாலம் போரிலே கழித்தவர், அனுபவித்து வாழ்ந்திருக்கவேண்டிய ஜூலியஸ் சீசரும் அண்டனியும் கிளியோபாட்ராவிற்காகவே இறந்தார்கள, இந்திய அரசர் அசோகரோ ஒரு துறவியின் மனநிலைக்கு மாறினார், தென்னிந்திய மாபெரும் அடையாளம் ராஜராஜ சோழனின் அரண்மனை இருந்த இடம்கூட தெரியவில்லை.

அதாவது குருபகவான் உச்சியில் இருந்தாலும், சுக்கிரன் அதளபாதாளத்தில் தலைகீழாக கிடந்தார், எதனையும் அனுபவிக்க விடவில்லை.

ஆனால் உலகிலே வாழ்வாங்கு வாழ்ந்த முதல் மன்னன் சாலமோன், சாலமோன் மகா ஞானி, யூதரல்ல்வா? அதுவும் வரம்பெற்ற யூதன், ஒரு காலமும் இனி யாரும் தொடமுடியாத உயரம் அவர், அவர் கட்டிய ஆலயமும், அவர் அமைத்த சிம்மாசனமும், அவருக்கு மங்கா புகழ் கொடுத்தன என்பார்கள்.

மகா ஆச்சரியமாக ஷாஜகானுக்கும் அதே வாய்ப்பு கிடைத்தது, விசித்திரமான வரலாறு அது.

முப்பாட்டன் காலத்திலே இந்தியாவில் மொகல் ஆட்சி தொடங்கிற்று, ஷாஜகான் 5ம் மன்னராக ஆட்சிக்கு வரும்பொழுது அது பெரும் சக்தி ஆயிற்று, எதிரி என யாருமில்லை, வியாபார வெள்ளையர் வரை அவனுக்கு வரி கட்டினர், எதிரியே இல்லாத பணக்கார மன்னன் என்ன செய்வான்? அதுவும் அவனுக்கு கலைமனமும் ரசிக்கும் தன்மையும் இருந்தால்? கொஞ்சம் தனது பெயர் நிலைக்கவேண்டும் எனும் ஆசையும் இருந்தால்?

ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்துவிட்டு எனது பெயர் ஏன் கல்வெட்டில் வரவில்லை என கேட்பவர்கள் நிறைந்த உலகிது, ஒரு டியூப்லைட் வாங்கி அன்பளிப்பாக கொடுத்தாலும் அதில் பெயர் பதிப்பார்கள் அல்லவா?

அவன் மன்னனாக இருந்தால் கட்டங்களை அமைப்பான், அப்படித்தான் ஷாஜகானும் அமைத்தார், இன்று டெல்லியின் பெரும் அடையாளமான செங்கோட்டை ஆகட்டும், பாகிஸ்தானின் லாகூரின் அழகான கட்டங்களாகட்டும், டில்லி பெரிய பள்ளிவாசலாகட்டும், ஜஹாங்கீரின் அழகிய சமாதி, ஷாலிமர் தோட்டங்கள் என அவர் ரசித்து ரசித்து உருவாக்கிய கலை வடிவங்கள் காலத்தை கடந்தவை.

அதனினும் டெல்லி அரண்மனை இன்றளவும் கலைநயத்திற்கு சவால் விடுவது, ஆசியாவின் மிக அழகான அரண்மனை என முதலிடத்தில் இருப்பது.

அவற்றை எல்லாம் பாருங்கள், ஒரு விதமான ஈர்ப்பு கிடைக்கும், மனம் அதில் ஏதோ ஒரு நிறைவை காணும், இதுதான் ஷாஜகானின் கலை மனம்.

அப்படித்தான் ஆசை மனைவி, 12 உயிர் காதலி (மும்தாஜின் ஆருயிரும் இவரிடம்தான் இருந்தது) மும்தாஜிற்காக அவர் கட்டிய தாஜ்மகால் உலக பிரசித்தி பெற்று என்றென்ன்றும் நிலைத்து நிற்பது, உலகிற்கு காதலின் சின்னமாய் இந்தியா கொடுத்த அற்புத அடையாளம் அது.

அதை காணவேண்டும் என ஆசையில்லாத முற்றும் துறந்த முனிவர்கள் கூட அரிது.

தாஜ்மகாலை போலவே ஷாஜகானின் இன்னொரு மாபெரும் அடையாளம் “மயிலாசனம”, அதாவது அழகான ஒரு அரியணையை சுத்ததங்கத்தில் செய்து (இரு மயில்கள் இணைந்திருக்கும் தோற்றமது), அதை நவரத்தினங்களால் அழகுபடுத்தி அதன் உச்சத்தில் கோஹினூர் வைரத்தை பதித்து, முத்துக்களால் வெண்கொற்றகுடை செய்து உலகின் மிக அழகான அல்லது விலைஉயர்ந்த அரியாசனமாக அதனை அமைத்தார்.

உலகெல்லாம் இருந்து அதனை காண்பதற்கே மன்னர்கள் வந்து பெருமூச்சு விட்டார்கள் என்பது வரலாறு, பின்னாளில் மொகல்வம்சம் சிதற ஈரான் மன்னன் வந்து முதலில் தூக்கியது அந்த மயிலாசனத்தைதான், இன்றுவரை அதன் முடிவு தெரியவில்லை, ஈரானில் இன்று காட்டபடும் மாதிரி கூட அதன் அழகில் கால்வாசியில் செய்யபட்ட போலி ஆசனம்தான்,

அதாவது இப்படித்தான் இருந்திருக்கும் என்பது இப்போது காட்டபடும் மயிலாசனம், உண்மை மயிலாசனத்தின் கால்வாசி அழகுதான், ஆனால் அதுவே மகா உச்சம்.

அந்த போலி மயிலாசனத்தை கூட இந்தியாவிடம் ஈரான் ஒப்படைக்கவேண்டும் என கோரிக்கைகள் முன்பு எழும், இப்பொழுது அகண்ட பாரதம், கோட்ஸே என சர்ச்சைகள் எழும் நேரம், அது ராமரின் ஆசனமாக இருந்தால் கிளம்பி இருப்பார்கள், ஷாஜகான் ஆசனம் எப்படி? இனி அவ்வளவுதான்.

ஆனால் இந்திய செல்வத்தை உலகிற்கு காட்டியது அது, தாஜ்மஹால் இந்தியாவில் கலை அழகினை காட்டுவது, செங்கோட்டை ஒரு கம்பீரத்தை காட்டுவது, இன்றுவரை இந்திய அரசின் திருவிழாக்கள் அந்த கோட்டையில்தான் கொண்டாடபடுகின்றது.

அப்படி அழிக்க முடியாத முத்திரை பதித்து 15ம் நூற்றாண்டிலே இந்தியாவை அற்புதமான கலைகளஞ்சியமாக உருவாக்கினான்.

ஆனால் இறைவன் சோதிப்பவன் அல்லவா?, அப்படித்தான் கலைமனம் படைத்த மன்னர்களையும் சோதித்தான், கடைசிகாலத்தில் அவர்களை மிக மிக சோகமாகவே இறக்க வைத்தான்.

அந்த விளையாட்டிற்கு முதலில் கிடைத்தவர் மாமன்னன் சாலமோன், அவர் அமைத்த முதலாவது யூத ஆலயம் அந்நாளைய உலகின் அழகான கட்டங்களுள் ஒன்று, தங்கத்தாலும் உயர்தர மரத்தாலும் அழகான கற்களாலும் அவர் அமைத்த அழகிற்கு எந்த தெய்வமும் அதன் முன்னால் வந்து அமரும் என்பார்கள்,

அந்த ஆலயத்திற்கு அடுத்து பெரும் புகழ்பெற்றது அவரின் சிம்மாசனம், இரு சிங்கங்களின் உருவம் மீது பல படிகள் அமைத்து அவரும் தங்கத்தில் அதனை உருவாக்கியிருந்தார், அதன் சிறப்பும் உயர்ந்தது.

இப்படியாக கட்டத்திலும் அரியணையிலும் அழகை தேடிய இருவரும், அதனை அமைப்பதில் உலகபுகழ்பெற்று காலத்தை மிஞ்சி முத்திரையிட்ட இருவரின் இறுதிகாலமும் மாகா சோகமானது

வாரிசு போட்டியாலும், மனங்கவர் காதலிகளாலும் தடுமாறி சோகமாகவே இறந்தார் சாலமோன், இறுதிகாலம் மகா நொந்த மனது அவருடையது. இவ்வளவிற்கும் அவர் மாபெரும் ஞானி, தீராபுகழ்பெற்ற தீர்ப்புகளை வழங்கியவர், ஆனால் சொந்தவாழ்க்கை சோகமானது.

விதிவேறு மதிவேறு என்பதற்கு அவரை தவிர வேறு ஆதாரமில்லை.

ஷாஜகான் வாழ்க்கை இன்னும் விசித்திரமானது, நல்லவரா? கெட்டவரா? என இன்னும் அறியபடாத மர்மனான ஔரங்கசீப்பால் சிறையில் அடைக்கபட்டார், தனது இறுதிகாலத்தில் வெள்ளை தாஜ்மகாலுக்கு எதிர்புறம் ஒரு கருப்புதாஜ்மகால் அமைக்கபடவேண்டும் அதில்தான் தான் புதைக்கபடவேண்டும் என்ற அவரின் ஆசை நிறைவேறாமலே போனது.

ஔரங்கசீப் மட்டும் காலராவிலோ அல்லது சண்டையிலோ செத்திருந்தால் இன்னொரு தாஜ்மகால் கருங்கல்லில் கிடைத்திருக்கும், இன்னும் ஏராளமான கட்டங்கள் கிடைத்திருக்கும், அவரின் ரசனை அப்படி.

ஆனாலும் அவுரங்கசீப் மகனல்லவா? தசை ஆடிற்று, சிறையில் ஷாஜகானுக்கு தாஜ்மகாலை நோக்கி பார்க்கும் வசதியுள்ள அறையை கொடுத்தார், அதுதான் தந்தைக்கு அவர் ஆற்றிய நன்றி கடன்.

அந்த ஜன்னல் வழியாக தாஜ்மஹாலை நோக்கியபடியே நொந்தபடி பார்த்துகொண்டே இறந்து கிடந்தார் ஷாஜகான்.

இந்திய மன்னர்களில் குறிப்பிடதகுந்த அடையாளம் அவர், அவரின் பிறந்தநாள் நேற்று (05 ஜனவரி), ஆனால் மாபெரும் இந்தியா அவரை ஏன் நினைவு கூறவேண்டும், இந்த இந்தியாவிற்கு உண்மையாக பாடுபட்ட கோட்சேக்கள் தானே நினைவு கூறபடவேண்டும்,

எப்படியும் போகட்டும் இது ஜனநாயக நாடு, ஆட்டோ சங்கர் தவிர சகலரையும் போராளிகளாவும், தியாகிகளாகவும் கொண்டாட தயாராகும் நாடு.

ஆனாலும் ஒரு காலத்தில் இந்தியாவை ஆண்ட மன்னன் அவர், அதைவிட முக்கியம் இந்திய கலாரசனையை உலகிற்கு சொல்லும் உன்னத கட்டங்களை தந்திருக்கின்றார், நினைவு கூர்வதில் தவறில்லை.

தாஜ்மகாலை நோக்கி அவர் அந்திம காலத்தில் விட்ட பெருமூச்சு உருக்கமானது, ஷாஜகானை நினைத்தால் அந்த மூச்சு நம்மிடமிருந்தும் வரும்.

ஆனாலும் இறைவன் மாக விசித்திரமானவன், எல்லா கலைதுறைகளிலும் அற்புதமான கலைஞர்களை தருவான், ஆனால் அவர்களின் இறுதிகாலம் மகிழ்ச்சியாக மட்டும் இருக்காது, அதை மட்டும் இறைவன் கொடுக்கவே மாட்டான்.

அது மாமன்னனோ அல்லது அவனைபுகழ்ந்து பாடிய அற்புதமான கவிஞனோ, இந்த விதியிருந்து தப்பவே முடியாது, வரலாறு திரும்ப திரும்ப அதனையே சொல்கிறது.

அவர்கள் நிம்மதி இல்லாமல் செத்திருக்கலாம், ஆனால் அவர்களின் படைப்புக்கள் பலபேருக்கு நிமதியை கொடுக்கும், தாஜ்மகாலும் அப்படித்தான் அதனை பார்ர்போருக்கு எல்லாம் ஒரு மகிழவையும், நிறைவையும் கொடுக்கும்,

கொஞ்சம் காதல் மனதில் இருந்தால் அதனை பார்க்கும் பொழுதே உதட்டோரம் ஓர் ஆனந்த புன்னகையும் வரும்,

மானிடர் இருக்கும் வரை காதலும் இருக்கும், காதல் இருக்கும் வரை தாஜ்மகாலும் இருக்கும், அது இருக்கும் வரை ஷாஜகானும் வாழ்வார்

அந்த மும்தாஜ்தான் எவ்வளவு கொடுத்து வைத்தவள்

தன்னை ஒருவன் உருகி உருகி காதலிப்பதும், அவளுக்காய் வாழ்வதும், தான் இல்லா காலத்திலும் தனக்காக மாபெரும் மாளிகையினை அவன் உருவாக்கி வைத்து கண்ணீர் வடிப்பதும் ஒரு பெண்ணுக்கு எவ்வளவு பெரும் அதிஷ்டம்.

உலக காதலர்களில் ஆசீர்வாதம் பெற்றவள் மும்தாஜ் ஒருத்திதான், காதலை அணு அணுவாக உணர்ந்திருக்கின்றாள்

தேசபக்தி இவர்களிடம் படாதபாடு படுகின்றது

பி.எஸ்.என்.எல் மட்டுமல்ல ஏர் இந்தியாவும் கடும் நஷ்டத்தில் இருக்கின்றது கிட்டதட்ட திவால் நிலை

ஆனால் அதை மீட்டெடுக்காமல் அதற்கு முயற்சி செய்யாமல் ஜெய்ஹிந்த் என சொல்ல சொல்வது எல்லாம் தேசிய அவமானம்

ஏர் இந்தியா இருக்கும் லட்சணத்திற்கு ஜெய்ஹிந்த் என சொன்னால் அது இந்தியாவுக்கு மாபெரும் தலைகுனிவு, உலகமே சிரிக்கும்

செத்துகொண்டிருப்பவனுக்கு சிகிச்சை அளிக்காமல் ஜெய்ஹிந்த் என சொல்ல சொல்வது காட்டுமிராண்டிதனம்

ஜெய்ஹிந்த் என சொல்லும்பொழுது சென்னை விமான நிலையம் 100ம் முறை இடிந்துவிழும், அப்ப்பொழுதும் விழுந்துவிட்டது ஜெய்ஹிந்த் என்றுதான் சொல்ல வேண்டுமாம்

தேசபக்தி இவர்களிடம் படாதபாடு படுகின்றது

அவர்கள் ஒருமாதிரி என தெரியும்

அவர்கள் ஒருமாதிரி என தெரியும், ஆனால் இப்படி அரைகிறுக்கு கூட்டம் என தெரியாது

கலைஞரின் வாழ்வே திறந்த புத்தகம், அதுவும் கடைசி காலங்களில் எதுவும் மறைக்கபடவில்லை

அவருக்கு முடியாவிட்டாலும் மாலை 1 மணிநேரமாவது மக்கள் அவரை சந்திக்க முடியும்

சந்தித்த சாட்சிகள் ஏராளாம், ஆம் பாமரனும் சாமானியனும் “ஹலோ மிஸ்டர் கருணாநிதி ஹவ் ஆர் யூ” என சந்திக்க முடிந்தது

முடியாநிலையிலும் முடிந்தவரை பார்வையாலே வரவேற்றார் கலைஞர்

பிரத்யோக மருத்துவர் அவர் அருகிலே இருந்ததும், அவரை கடைசி வரை கண்ணின் மணி போல குடும்பத்தார் பார்த்ததற்கு சாட்சிகள் கோடி

அங்கு என்ன ஒளிவுமறைவு இருந்தது?

கலைஞரை எல்லோரும் சந்தித்தார்கள் ஏன் மோடி கூட வந்து பார்த்தார், முடிந்தால் பழனிச்சாமி கேட்டுபார்க்கட்டும்

அறிமுகமே இல்லாதவர்களும் சந்தித்த கலைஞர் எங்கே? ஆளுநரே வந்தாலும் பார்க்க முடியாத ஜெயாவின் மர்மம் எங்கே?

விரக்தியின் உச்சத்தில் இருக்கின்றார் பழனிச்சாமி..தற்கொலை செய்துகொண்டாலும் ஆச்சரியமில்லை

“திருமதி பழனிச்சாமி” கொஞ்சம் கவனமாக இவரை பார்த்து கொள்வது நல்லது

ஜெயகாந்தன்

“சமுதாயம் சார்ந்த எழுத்தென்றால் என்னவென்று இவன் எழுதுவதிலிருந்து உலகம் கற்றுகொள்ளட்டும்” என இறைவன் சொல்லி அனுப்பிய அற்புத எழுத்தாளர் ஜெயகாந்தன்.
அது மகா உண்மையும் கூட, தமிழ் எழுத்துலகிற்கு தலைகீழ் திருப்பம் கொடுத்தவர்களில் புதுமைபித்தன் போல முன்வரிசையில் நிற்பவர் ஜெயகாந்தன்.

தொடக்ககல்வி மட்டுமே உண்டு, 20 வயதிற்குள் அவர் கிட்டதட்ட 50 தொழில்களை செய்திருப்பார், இறுதியாக கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வந்தார், அது என்னவோ தெரியவில்லை, இறுக்கமான பொதுநல கொள்கையால் அற்புதமான கலைஞர்களை அக்கால கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கிற்று, பட்டுகோட்டை கல்யாண சுந்தரம், பாவலர் வரதராஜன் குழுவின் இளையராஜா,

அதனை போலவே ஜெயகாந்தன்.
சுருக்கமாக சொன்னால் மக்கள் கட்சி, மக்களின் கஷ்டமறிந்த கலைஞர்களை உருவாக்கிற்று.

ஒரு கட்டத்தில் கம்யூனிஸ்டை விட்டு காமராஜர் கட்சிக்கு வந்தார், அந்த மேதைக்கு தெரிந்திருகின்றது, லெனின் வேறு காமராஜர் வேறு அல்ல என்று.

அதன்பின் எழுத்தில் தீவிரம் கூடிற்று, நாவல்கள், கட்டுரைகள், தொடர்கள்,சிறுகதைகள் என அணல் பறக்க எழுதினார். ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகள் அவரின் தொடருக்காகவே விற்ற காலமும் உண்டு.

100க்கும் மேற்பட்ட கதைகள், 50க்கும் மேற்பட்ட நாவல்கள் என அவர் அள்ளி வீசிய படைப்புக்கள் ஏராளம், அவற்றில் ஒன்றிற்கு மிக உயர்ந்த ஞானபீடவிருதும் கிடைத்தது, சில கதைகள் படமாக கூட வந்தன, பாடலும் எழுதினார்.

ஞானபீட விருதென்றால் முகநூலில் வழங்கபடும் விருதுகள் அல்ல, அது இந்திய இலக்கியத்தின் நோபல் அல்லது பாரதரத்னா
அவர் படைப்புகளின் மக்கள் சிந்தனை, சமூக நலன், சொல்லாடல் என சிறப்புக்களை விளக்க எத்தனையோ பேர் எழுதிவிட்டார்கள், இன்று இன்னமும் எழுதுவார்கள், படியுங்கள் தெரியும்.

ஆனால் நாம் ஆச்சரியமாக பார்ப்பது எல்லாம் பாரதியாருக்கு பின் ஒரு தமிழனுக்கு இருந்த முற்போக்கும், மக்கள் நலனும், எளிய பாமர சொல்லாடலும், தீர்க்கமான கருத்துக்களும்.

அவைதான் அவரை மகாவித்தியாசபடுத்தி, ,”ஞான செறுக்கன்” என அழைக்கபடும் அளவிற்கு உயர்த்திற்று.

சினிமாவை அறவே வெறுத்தவர், ஒருமுறை எம்.ஜி.ஆர் அழைத்தும் பார்க்க செல்லாமல் சிறையில் இருந்த எம்.ஆர் ராதாவை வலிய காண சென்றார், கண்டன குரல்கள் எழும்பின, எப்படி எங்கள் எம்.ஜி.ஆரை பார்க்காமல் ராதாவை காண செல்லலாம்

அமைதியாக சொன்னார் ஜெயகாந்தன் “உங்கள் எம்.ஜி.ஆரை சிறைக்கு செல்ல சொல்லுங்கள், கண்டிப்பாக பார்க்கின்றேன்”, இவ்வளவிற்கும் எம்.ஜி.ஆர் தமிழகத்தின் பெரும் சக்தி, கொஞ்சமும் அஞ்சவில்லை ஜெயகாந்தன்.

சிவாஜி கணேசன் காங்கிரஸில் இருந்தபோது ஒரு கூட்டம் காமராஜர் கூட்டத்தில் இப்பக்கம் காந்திபடம் அப்பக்கம் காமராஜர் படம் நடுவில் சிவாஜிபடம் இருக்க மேடையேறிய ஜெயகாந்தன் சீறினார்

“இப்பக்கம் மகாத்மா காந்தி அப்பக்கம் கருப்பு காந்தி, இடையில் யார் இவன்? நாட்டிற்கு செய்த நன்மை என்ன? இப்படித்தான் அண்ணா ஒரு பாம்பினை வளர்த்து அது இன்று நாட்டை கெடுக்கின்றது” என கர்ஜித்து அதனை கண்டித்தார்.

அந்த மகா பிரபல நடிகர் இந்துவாக நடிக்க மொட்டை போட்டார், கிறிஸ்தவ வேடத்தில் நடிக்க உபவாசமிருந்தார் என பத்திரிகைகள் (இன்றும் அப்படித்தான்) எழுதிதள்ள, எரிச்சலோடு கண்டித்து எழுதினார்

“அவர் இஸ்லாமியர் வேடத்தில் நடித்தார் அல்லவா? அப்பொழுது சுன்னத் செய்திருந்தாரா? அதனையும் எழுதுங்கள்”

இப்படி சமூக சீர்கேட்டை, பத்திரிகையின் தவறுகளை கண்டித்த எழுத்தாளன் எங்காவது இன்று தமிழகத்தில் உண்டா? இனி வருவானா?

சிங்கம்போல எதற்கும் பயபடாமல் தமிழகத்தில் ஒரு எழுத்தாளர் இருந்தார் என்றால் நிச்சயம் அது ஜெயகாந்தன் ஒருவரே.

முன் நவீனத்துவம்,பின் நவினத்துவம், கவித்துவம், கவிதானுபவம்,பிரக்ஞை என்பதெல்லாம் அவருக்கு தெரியாது. அடிதட்டு மக்கள் உழைப்பாளிகள், சாமானியர்கள் என அவர்களில் ஒருவராக மாறி எழுதினார்.

அதனாலதான் பிச்சைகாரி பாத்திரத்தில் கூட அவர் எழுத்து ஜெயித்தது.

புகழின் உச்சத்தில் இருக்கும்பொழுது எழுத்தை நிறுத்தினார், காரணம் இத்தமிழகம் எழுதி திருத்தமுடியாதது என்பதாகவும் இருக்கலாம், அவர் பெரிய தீர்க்கதரிசி, மகா தீர்க்கதரிசி

இந்திய அமைதிபடை திரும்பிய நேரம், தமிழகத்தில் யாருமே புலிகளை விமர்சிக்க அஞ்சிய நேரம் (அவர்கள் வெல்லவே முடியாதவர்கள் என உலகம் நம்பவைக்கபட்ட நேரம்), புலிகள் பத்மநாபாவை சென்னையில் கோரமாக கொன்ற நிசப்தம் கலந்தநேரம், மிக தைரியமாக புலிகளின் அழிவையும், அவர்கள் எப்படி இல்லாமல் போவார்கள் என்பதையும், அனாதைகளாக அழிவார்கள் என்பதையும் ஆனித்தரமாக பேசியவர் ஜெயகாந்தன் மட்டுமே.

(உண்மையில் பத்மநாபா கொலையோடு பெரும் நடவடிக்கை எடுக்கபட்டிருந்தால் திருப்பெரும்புதூர் சம்பவத்திற்கு வாய்ப்பு குறைவு)

தமிழகத்தின் பெரும் எழுத்தாளருக்க்கு, சிந்தனை சிற்பிக்கு, ஒரு சிங்கத்திற்கு, எழுத்துலக பீஷ்மருக்கு இன்று நினைவு நாள்,

தமிழகத்து மாபெரும் சிந்தனையாளாரான அவரை நிச்சயம் நினைவு கூறலாம்.

பாரதி,புதுமைபித்தன் வரிசையில் நிச்சயம் இடம்பெறும் அந்த எழுத்தாளரின் தைரியாமான எழுத்துக்கள் இருக்கும்வரை அவருக்கு அழிவே இல்லை

குறுகிய வட்டத்தில் சிக்காமல், மானுடத்தை நேசித்த மாபெரும் பரந்த மனமுடைய எழுத்தாளர் அவர், பொதுவுடமைவாதியாக , இந்திய தேசியவாதியாக உயர்ந்து நின்றவர்

சமூகத்திற்கான எழுத்து என்பது என்ன? தைரியமான எழுத்து என்றால் என்ன? என்பதை தமிழகத்திற்கு முதலில் சொல்லி தந்த மாபெரும் சிந்தனையாளனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்