நெல்லை தொகுதியில் திமுக வேட்பாளர்

தென் தமிழகத்தில் நெல்லை தொகுதியில் திமுக வேட்பாளர் தேர்வில் சொதப்பியிருக்கின்றது என்கின்றன செய்திகள்

நிச்சயம் அந்த அப்பாவு என்பவர் சரியான தேர்வாக இருந்திருக்க கூடும்

இப்போதைய வேட்பாளர் மேல் பலத்த சர்ச்சைகள் ஏராளம் ஓடிகொண்டிருக்கின்றது அது திமுகவின் மொத்த இமேஜையும் காலி செய்திருக்கின்றது

பொதுவாக அப்பகுதி காங்கிரஸின் கோட்டை, அதை உடைத்து திமுகவினை மிக நுட்பமாக வளர்த்திருந்தார் கலைஞர்

அப்பாவு என்பவரை அப்படித்தான் உள்ளே இழுத்து போட்டு கட்சியினை வலுவாக வைத்திருந்தார்

இப்பொழுது அனுபவம் குறைந்த ஸ்டாலின் அதை அடித்து நொறுக்கிவிட்டார்

திமுகவின் வெற்றி அங்கு அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை என்பதால் மனோஜ் பாண்டியன் கோஷ்டி மர்ம சிரிப்பு சிரிக்கின்றது

அங்கு மிகபெரும் வெற்றிபெற வேண்டிய திமுக , அறிவாலயத்தில் கோடிகளை கொட்டினால் சீட் கிடைக்கும் என்ற ஒருவித “நல்ல” பெயருடன் தவித்து கொண்டிருக்கின்றது

கலைஞர் காலத்து ஆட்களை ஸ்டாலின் விலக்குவது கட்சிக்கு சரியல்ல‌

கலகலத்து கிடக்கின்றது கலைஞர் உருவாக்கிய நெல்லை திமுக முகாம்..

வசந்தகுமார் அங்கு அட்டகாசமாக நெல்லையின் தென்பகுதி குமரி என கட்சியினை வலுபடுத்தி வருகின்றார்

அவருக்கு சவாலாக அப்பாவுவினை உருவாக்கி இருக்கலாம் அந்த வாய்ப்பினை ஸ்டாலின் பறிகொடுத்துவிட்டார்

இன்னும் ஏராளம் பறிகொடுப்பார் இருந்து பாருங்கள்..

ரகசிய விசாரணை நடந்தால் நல்லது

ரபேல் விமானத்தின் பாதுகாப்பு அம்சங்கள், நவீன நுட்பங்கள் போன்றவை வெளியில் வராதவண்ணம் ரகசிய விசாரணை நடந்தால் நல்லது

அவை சற்று வெளிதெரிந்தாலும் உலக அரங்கில் இந்திய விமானபடை பலத்தின் ரகசியம் வெளிவந்துவிடும் என்பதால் அதைத்தான் செய்ய வேண்டும்

புலிகளிடம் சிக்கிய கிழக்கு மாகாண போராளிகள்

2002 பேச்சுவார்த்தைக்கு பின் புலிகள் இயக்கத்தில் சலசலப்பு வந்தது.

முன்பே நாம் சொன்ன விஷயம்தான் ஆனையிறவின் மகத்தான வெற்றிக்குபின்னும் புலிகள் யுத்தத்தை தொடரவில்லை. காரணம் ஆட்கள் பற்றாகுறை

யாழ்பாணத்தார் வசதியானவர்கள் என்பதால் புலிகளுக்கு கப்பம் கட்டிவிட்டு ஐரோப்பா , கனடா என தப்ப புலிகளின் ஆள்திரட்டல் குறி வறுமையான கிழக்கும் பக்கம் பதிந்தது

இந்நிலையில் நார்வே வேறு பேசிகொண்டிருந்தது, இம்முறை புலிகள் முடிவிற்கு வந்தே தீரவேண்டும் என கட்டளை இட்டன மேற்குலக நாடுகள்

பிரபாகரனோ நார்வேக்கு போக்குகாட்டிவிட்டு ஆட்களை திரட்டி யுத்தம் செய்ய முயன்றார், நார்வேயினை விரட்டிவிட்டு இந்தியா சமரசம் பேசவரவேண்டும் என்றார்

இனி புலிகள் யுத்தம் தொடர்வார்கள் என்றால் மிக கேவலமான தோல்வியினை சந்திர்ப்பார்கள் என்ற இலங்கைக்கான அமெரிக்க தூதர் எச்சரித்தும் புலிகள் கண்டுகொள்ளவில்லை

இந்நிலையில்தான் நார்வேயில் நடந்த பேச்சுவார்த்தையில் சமாதானத்தை பரிசீலிப்போம் , நல்ல தீர்வு ஏற்பட்டால் ஆயுதம் தொடமாட்டோம் என முடிவு சொல்லி வந்தனர் பாலசிங்கமும், கருணாவும்

உலகம் புரியாத பிரபாகரனுக்கு இது பொறுக்கவில்லை, போராட்டத்தை விற்றுவிட்டார்கள் என குதித்த அவர் பாலசிங்கத்தையே விரட்டினார், நார்வே தூதர் எரிக் சோல்கிம்மிடம் எதையும் புரியும் மனநிலையில் பிரபாகரன் இல்லை, இனி லட்சகணக்கான மக்கள் சாகும் என சொல்லிவிட்டு விடைபெற்றார் பாலசிங்கம்

கருணாவின் நிலை சிக்கல், காரணம் கிழக்கு மாகாணம் அவன் கட்டுபாட்டில் இருந்தது. கருணா அமைதிபடை காலத்தில் பிரபாகரனை காத்தது முதல், ஆனையிறவு வரை அபாரமாக சண்டையிட்டவன்

பிரபாகரனின் வலதுகை என்ற முறையில் அவன் தைரியமாக சொன்னான் “இனி யுத்தம் தொடர்வது சாத்தியமில்லை, இந்தியா வரவே வராது. இலங்கைக்கு உலகமே உதவுகின்றது, நமக்கோ யாருமில்லை.

தொடர்ந்து சண்டையிட்டால் அழிவே தவிர வேறு ஒன்றுமில்லை” , அறிவு என்பது இருந்ததால் அப்படி சொன்னான் கருணா.

அவ்வளவுதான் பிரபாகரனின் பதில் சீறியது, “மாத்தையா மாதிரியே நீயும் பேசுகின்றாயா?”

“யோசிப்போம் என சொன்னேன்” என பதிலளித்த கருணா அதன் பின் சென்றுவிட்டான்

ஆனால் அந்த பிரபாகரனின் வார்த்தை அவனை உறங்கவிடவில்லை, மாத்தையா போல என்றால் என்ன அர்த்தம்?

அவனின் நினைவுகள் சுழன்றன 1987க்கு பின்னரான காலத்துக்கு சென்றன‌

மாத்தையா கருணா போல பிரபாகரன் வலதுகை, சுத்தமான வீரன். ஆனால் அமைதிபடை காலத்திற்கு பின் , ராஜிவ் கொலைக்கு பின் அவன் போரை தொடர விரும்பவில்லை, சமாதனமாய் செல்ல ஆசைபட்டான்

இது இந்திய ராவுடன் மாத்தையா தொடர்பு என திரிக்கபட்டு, பிரபாகரனை கொல்ல மாத்தையா சதி என சொல்லபட்டு மாத்தையா பிரபாகரனால் கொல்லபட்டான்

மாத்தையா பிரிவு போராளிகள் 700 பேர் புலிகளால் கொல்லபட்டனர்

இதனை நேரில் இருந்து பார்த்தவன் கருணா என்பதால் பிரபாகரன் சொன்னதற்கு என்ன அர்த்தம் என்பது அவனுக்கு புரிந்தது

கீழ்மட்ட தலமைகளுக்கு உறுதியாக சொன்னான், யாழ்பாணத்தான் எல்லாம் ஐரோப்பா சென்று வாழ கிழக்குமாவட்ட நாங்கள் மட்டும் போரில் சாகவேண்டுமா? ஆள் எல்லாம் திரட்டவேண்டாம், சென்று அமைதியாக வாழுங்கள்.

இங்கோ பிரபாகரனுக்கு சிக்கல், கருணா தான் ஒழிந்தான் ஆனால் அந்த படைகள் முக்கியம். கிழக்கு அணி உடனே வரவேண்டும் என கட்டளையிட்டார்

அவர்கள் ஆயிரம் பேர் இருக்கலாம், பலர் எங்கோ சென்றார்கள், உண்மையான போராளிகள் குழம்பி நின்றார்கள்.

பிரபாகரனின் உத்தரவு எல்லோரும் கிளம்புங்கள் என கட்டளை இட்டனர் வந்தவர்கள், ஆனால் போராளிகள் கருணா உத்தரவும் வேண்டும் என்றனர். உடனே புலிகள் முடிவு செய்தனர் நீங்கள் எல்லாம் துரோகிகள், கருணா விசுவாசிகள்

கிழக்கு மாகாண போராளிகள் கருணா உத்தரவின்றி வரமறுக்க , பிரபாகரனோ அவர்களை பிடித்துகொண்டு வர கட்டைளையிட விஷயம் விவகாரமானது

வரமறுத்தவர்கள் துரோகிகள் என அறிவிக்கபட்டு மரணதண்டனை பெற்றனர்.

ஆம் மாத்தையாவோடு கிட்டதட்ட 700 பேர் கொல்லபட்ட கொடூரம் மறுபடியும் அரங்கேறியது

வெறுகல் என்பது கிழக்கில் ஓடும் ஆறு, அங்கே கருணா தரப்பு போராளிகளுக்கும் புலிகளுக்கும் மோதியது

சிங்களனை எதிர்க்க கிளம்பியவர்கள் தங்களுக்குள் மோதினர்.

புலிகளுக்கோ மாத்தையா விசுவாசிகள் போல இவர்கள் கருணா விசுவாசிகள் , அது போதும் இவர்கள் சாகட்டும் என முடிவெடுத்தனர்

தண்டனை எனும் பெயரில் அந்த வெறுகல் படுகொலை அரங்கேறிற்று, கிட்டதட்ட 700 போராளிகள் கொல்லபட்டனர்

“அண்ணா, நாங்களும் போராட வந்தவர்கள், சகோதர தமிழர்கள் எங்களை கொல்லாதீர்கள்..” என கண்ணீரோடு நின்ற அவர்களை பிரபாகரன் உத்தரவின் பேரில் கொடூரமாக கொன்றவர்கள் புலிகள்

தன் படைபிரிவு தன் கண்முன்னாலே கொல்லபடுவதை கண்ட கருணாவிற்கு வேறுவழி இல்லை, மாத்தையா போல என்பதன் அர்த்தம் அவன் கண்முன் தெரிய ஆரம்பித்தது

என் படைபிரிவினை கலைக்கின்றேன் இனி நான் போராளி அல்ல என சொல்லிவிட்டு தன் உயிரை பாதுகாக்க இந்தியா தப்பினான். இந்தியா அவனை சந்தேக கண்ணோடு நோக்கிவிட்டு “நீ திருந்தியது உண்மை என்றால் சிங்களன் பக்கம் போ” என சொல்லிவிட்டு நகர்ந்தது

கோத்தபாயா அவனை அரவணைத்து கொண்டான்.

மாத்தையா சொல்லி கேட்காமல் அவனை 700 போராளிகளோடு விசாரணை என சொல்லி கொன்ற பிரபாகரனுக்கு கருணாவினை அப்படி கொல்லமுடியவில்லை

மாத்தையாவினை கொன்ற பாவம் பின்னாளில் கருணா மூலம் பிரபாகரனை பழிவாங்கிற்று

அடுத்து நடந்த யுத்தத்தில் கிழக்கு மாகாண போராளிகள் இல்லை , கருணா இல்லை

விளைவு படு மோசமான வீழ்ச்சியினை சந்தித்து புலிகள் இயக்கம் அழிந்தும் போயிற்று

ஜப்பான் முதல் அமெரிக்கா வரை பரந்த இவ்வுலகில் புலிகளுக்கு ஆதரவாக ஒரு நாடும் வரவில்லை என்றால் காரணம் இம்மாதிரி விஷயங்கள்தான்

இதை எல்லாம் வைகோ, பழநெடுமாறன், சைமன், திருமுருகன் காந்தி, வேல்முருகன் என எவனும் சொல்லமாட்டார்கள், அப்படி ஒரு சம்பவம் நடக்காதது போல் கம்மென்று இருப்பார்கள்

ஆனால் மே 17 என்றாலோ நவம்பர் 26 என்றாலோ ஏ இந்திய தேசியமே என குட்டிகரணம் அடிப்பார்கள், அயோக்கியர்கள் அவர்களும் சொல்லமாட்டார்கள்.

மே 17க்கு முன்பான மிக கொடுமையான நாள் ஏப்ரல் 10

ஈழம் அமைவதை யார் கெடுத்தார் என்றால் சாட்சாத் புலிகள்தான், ஒருவேளை அது அமைந்தால் கூட சிரியா போல் ஆகியிருக்குமே அன்றி அமைதி வந்தே இருக்காது

புலிகளின் தலமை எவ்வளவு கொடூரமான ரத்தவெறி பிடித்தது என்பது டெலோ ஒழிப்பு, பத்மநாபா படுகொலை, மாத்தையா கொலை, அமிர்ந்தலிங்கம் கொலை என வரலாறு எங்கும் காண கிடக்கின்றது.

இதெல்லாம் புலிகள் தமிழரை கொன்ற கணக்கு, ராஜிவ் கொலை, அமைதிபடை பலி, சிங்கள பலி எல்லாம் தனி கணக்கு.

இப்படி கொல்வது மட்டுமே கொள்கை என செயல்படுத்திய இயக்கம் எப்படி உருப்படும், உலகநாடுகள் எல்லாம் சேர்ந்து வெறிநாயினை அடிப்பது போல அடித்து கொன்றார்கள்.

அந்த புலிகளிடம் சிக்கிய கிழக்கு மாகாண போராளிகள் 700 பேர் வெறுகல் ஆற்றுகரையில் கொடூரமாக கொல்லபட்ட நாள் இன்று.

இதே ஏப்ரல் 10ம் தேதி, 2004ல் அக்கொடுமை நடந்தது.

இப்படி எல்லோரையும் கொன்று தங்களை கொஞ்சம் கொஞ்சமாக ஒழித்து இறுதியில் அழிந்தே போனது புலிகள் இயக்கம்

ஆனால் இங்கிருப்பவன் கலைஞர் கெடுத்தார்,காங்கிரஸ் கெடுத்தது என சொல்லிகொண்டே இருப்பான்

அந்த வெறுகல் ஆற்றங்கரையில் புலிகளால் கொல்லபட்ட அந்த தமிழ்போராளிகளுக்கு வீரவணக்கம்

காங்கிரசல்லா முதல் பிரதமர்

நிச்சயம் மொரார்ஜி தேசாய் இந்தியாவின் காங்கிரசல்லா முதல் பிரதமர், காங்கிரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவர்

காங்கிரசை எதிர்த்து ஒரு மத்திய அரசு சாத்தியம் என அவர் சொல்லிகொடுத்த வழியில் இடையில் விபிசிங் தோற்றாலும் பின்ன்னாளில் பாஜக பெரும் சக்தியாய் வியாபிக்க முடிந்தது

ஆனாலும் மொரார்ஜி தேசாயின் சில சர்ச்சைகள் மறுக்க முடியாதவை அவர் மீதான கருப்பு புள்ளிகள் அவை

நல்ல நிர்வாகி, மும்பை மகராஷ்ட்ரா பிரச்சினைகளை எல்லாம் தீர்த்தார். மும்பை போன்றவை தனி நிர்வாகம் கொண்ட தொழில்நிலையங்களாக நிர்வகிக்கபட வேண்டும், இனம் மொழி அதில் ஆதிக்கம் செலுத்தகூடாது போன்ற அவரின் கருத்துக்கள் சரி

அண்டை நாடுகளுடன் நேரு போல் மிக அமைதியான தொடர்புகளை பேண முயன்றதும் நல்லது, ஆனால் பெரும் சறுக்கலில் இத்தேசம் அவரால் சிக்கியது

இந்திரா இந்திய உளவுதுறையான ராவினை நன்றாக வளர்த்திருந்தார், அது பல சாதனைகளை செய்தது

அதில் ஒன்றுதான் இந்தியா அணுகுண்டு செய்தவுடன் பாகிஸ்தானும் அலறிஅடித்து அணுகுண்டு செய்ததை கண்டறிந்தது

அது இந்திய வரலாற்றில் மாபெரும் சாதனையாக கொண்டாடி இருக்கவேண்டிய நிகழ்வு ஆனால் மொரார்ஜி தேசாயால் அது தடுக்கபட்டது

ஆம் ராவின் மிகபெரிய சாதனை அது

ஓசைபடாமல் ஆப்கன் வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த ரா உளவாளிகள் பாகிஸ்தானை அட்டகாசமாக உளவு பார்த்தனர்

பாகிஸ்தானின் கவுட்டா பகுதியில் மர்ம தொழிற்சாலை அமைக்கபடுவதை கவனித்த ரா உளவாளி ஒருவர் அங்கேயே சலூன் கடை அமைத்துவிட்டார்

எப்படியோ பாகிஸ்தானிய அணு விஞ்ஞானிகளுக்கும் பணியாளருக்கும் முடிவெட்டும் வாய்ப்பினை பெற்ற அவர் அந்த முடியினை கடத்தினார்

அந்த முடியில் லேசான கதிர்பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கபட்டது, இந்திய தரப்பு உஷாரானது

இதனிலும் இன்னொரு ரா உளவாளி பாகிஸ்தானின் அணுசக்தி மையத்தில் நுழைந்து அந்த அணுமின் நிலையத்து மாதிரி படத்தினையே அசாத்தியமாக கடத்தினான்

இவை எல்லாம் மொரார்ஜி தேசாய் கவனத்திற்கு வந்தபொழுது அவரோ ராவினை மூடிவிடும் முடிவிற்கு வந்தார், அதற்கு ஒதுக்கபடும் நிதியினை குறைத்தார்

ரா அலறி கெஞ்சியது, இது பின்னாளில் பெரும் சிக்கலுக்கு இட்டு செல்லும். நீங்கள் பணம் தராவிட்டாலும் பரவாயில்லை வேறு வகையில் பணம் கிடைக்க சில சட்ட விதிகளை மாற்றுங்கள் என கெஞ்சியது

அசைந்து கொடுக்கவில்லை மொரார்ஜி தேசாய். அந்நிய நாட்டு விவகாரம் நமக்கெதற்கு என அவர்போக்கில் இருந்தார்

ராவினை பின் தொடர்ந்த இஸ்ரேலிய மொசாத்திற்கும் விஷயம் புரிந்தது, அவர்களும் அலறினார்கள்

காரணம் அணுகுண்டு தயாரிக்கபோகும் முதல் இஸ்லாமிய நாடு பாகிஸ்தான். ஈராக், சிரியா எல்லாம் அணுகுண்டு தயாரிக்காமல் பார்த்துகொண்ட அவர்களுக்கு பாகிஸ்தானையும் கண்காணிக்கும் அவசியம் இருந்தது

எல்லாவற்றிற்கும் மேலாக பாகிஸ்தானின் மிக லேட்டஸ்ட்டான அணுகுண்டை வாங்கி தன் பழமையான அணுகுண்டை கொடுக்கும் சீன அரசியலும் நடந்துகொண்டிருந்தது

அதாவது பாகிஸ்தானை பல நாடுகள் கண்காணித்தன, சில மேஜைக்கு கீழ் பேசின‌

அப்பொழுது ஆண்டுகொண்டிருந்த ஜியா உல்கக்கோ அமெரிக்காவினையே காசுக்காக அலைய வைத்துகொண்டிருந்தார்

இந்தியாவினை சமாளிக்க பாகிஸ்தான் அணுகுண்டு செய்வதை கண்டும் காணாமல் இருந்த அமெரிக்காவிற்கு சில விஷயங்களால் அதனை தடுக்கும் அவசியம் வந்தது

இஸ்ரேல் மிக தீவிரமாக இருந்தது, எவ்வளவு தீவிரம் என்றால் அவர்களின் யுத்த பிதாமகன் மோசே தயானே கெஞ்சும் அளவு இறங்கினார்கள்

அன்று பாகிஸ்தான்வரை பறக்கும் யுத்த விமானம் இஸ்ரேலிடம் இல்லை, அதனால் பாகிஸ்தான் அணு உலையினை தாக்க இந்தியா உதவி தேவைபட்டது

ஒரே ஒரு விமானம் தாருங்கள், நாங்கள் பாகிஸ்தான் அணுவுலையினை துவம்சம் செய்துவிடுவோம் என முடிந்தவரை மல்லுகட்டியது இஸ்ரேல்

ஆனால் மொரார்ஜி தேசாய் அசைந்துகொடுக்கவில்லை அத்தோடு விட்டாரா?

இதுவரை நடந்தவை பாகிஸ்தானுக்கு தெரியாது. அடிக்கடி தன்னை பல சக்திகள் தொல்லை செய்வதை தவிர்க்க பாகிஸ்தானில் இந்திய உளவுதுறை செய்த எல்லா விஷயங்களையும் உலகிற்கு சொல்லிவிட்டார் மொரார்ஜி , உளவாளி அடையாளம் உட்பட‌

நன்றி மொராய்ஜி என சுதாரித்த பாகிஸ்தான் அட்டகாசமாக அரசியல் செய்தது.

அத்தோடு தன் அணுவிவகாரங்களை அவசரமாக மறைத்து, இந்திய உளவு வலைப்பின்னலை கண்டறிந்து அனைத்து இந்திய உளவாளிகளையும் கொன்றது பாகிஸ்தான்

இஸ்ரேல் அத்தோடு ஒதுங்கியது

அதன் பின் வந்த இந்திராவும் இவை எல்லாம் வெளிவந்த அதிர்ச்சியில் அடக்கி வாசித்தார்

இம்மாதிரி சொதப்பலால் அடுத்த தேர்தலில் படு மோசமாக தோற்றார் மொரார்ஜி தேசாய்

இந்திய பிரதமர்களில் மிக மிக மோசமான அடிமுட்டாள் தனமான பிரதமர் ஒருவர் உண்டென்றால் சந்தேகமே இல்லை மொரார்ஜிதான்

பாகிஸ்தானை அவர் சகோதர நாடு என நினைத்ததுதான் இத்தனைக்கும் காரணம், அந்நாடு இந்தியாவிற்கு எவ்வளவு பெரும் மிரட்டல் என அவர் நினைக்கவில்லை

விளைவு அன்று தன் அணுநிலையத்தின் மீது சிறு துரும்பும் விழாமல் பாதுகாத்த பாகிஸ்தான் தொடர்ந்து 1998ல் அணுகுண்டு செய்தது

பாகிஸ்தானில் இந்தியா வைத்திருந்த உளவுபின்னலும் நாசமாயிற்று

பாகிஸ்தான் மகிழ்ச்சியில் திளைத்து என்ன செய்தது என்றால் அவர்களின் மிக உயரிய விருதான “நிசான் இ பாகிஸ்தான்” விருதை மொரார்ஜிக்கு வழங்கியது

இந்திய அரசும் பாரத ரத்னாவினை மொரார்ஜிக்கு வழங்கியது, அது ஏன் என்பதுதான் தெரியவில்லை. காங்கிரசுக்கு மாற்று கொடுத்த வழிகாட்டி என கொடுக்கபட்டிருக்கலாம்

இன்றுவரை பாகிஸ்தான், இந்தியா உயர்விருதை பெற்ற ஒரே நபர் மொரார்ஜி ஒருவரே

மனிதர் இப்படி சொதப்பினாரே அன்றி ஊழலிலோ இல்லை வேறு சர்ச்சையிலோ சிக்காதவர், சாகும்பொழுதும் சொந்த வீடு இல்லை , இன்று அவர் குடும்பமும் அரசியலில் இல்லை

தனிபட்ட வகையில் அவர் அறிவாளி, ஆனால் பாகிஸ்தானுடன் நல்லுறவு என்ற வகையில் அவர் பல காரியங்களை விட்டுகொடுத்து பாகிஸ்தானின் நலனை காத்தார்

அது பின்னாளில் பெரும் மிரட்டலாய் வந்து நிற்கின்றது

எல்லா பெரிய மனிதரும் தவறு செய்வார்கள் எனினும் மொரார்ஜி சொதப்பிய சொதப்பல் மகா அதிகம், பாகிஸ்தானியருக்கே மகிழ்ச்சி என்றால் பாருங்கள்

ஆனால் மொரார்ஜியால் தமிழகத்தில் சில நன்மைகள் விளைந்தன‌

முதலமைச்சர் ஆன பின்பும் எங்கே திரையுலகம் தன் கையினை விட்டு போகுமோ என அஞ்சி மேக் அப் போட்டு நடிக்க வந்தார் ராமசந்திரன்

காவேரி, விவசாயி இன்னபல சிக்கல் இருக்க அவரோ “உன்னை விடமாட்டேன்” என டைட்டில் வைத்து (கலைஞரையாக இருக்குமோ?) லதா சகிதம் சூட்டிங் தொடங்கிவிட்டார்

“ஒன்று நடியுங்கள் இல்லை முதலமைச்சராக இருங்கள் . முதல்வராக இருந்து கொண்டு நீர் கேமரா முன் நடிப்பதை நான் விரும்பமாட்டேன், அரசு டிஸ்மிஸ் ஆகும்” என்றார் மொரார்ஜி

அத்தோடு மேக் அப்பை கலைத்துவிட்டு சமத்தாக முதல்வரானார் ராமசந்திரன். எந்த ராமசந்திரன்?

அண்ணா மறைவுக்கு பின் நீங்கள் நடிப்பதை நிறுத்துங்கள் உங்களை அமைச்சராக்குவேன், அமைச்சர் ராமசந்திரன் நடித்தால் நன்றாய் இருக்காது என சொன்ன கலைஞரிடம் என் பியூச்சரை பாழாக்க சொல்கின்றீரா? நடிப்பதை நிறுத்தமாட்டேன் என சொன்ன அந்த ராமசந்திரன்

கலைஞர் சொல்லி கேட்காத ராமசந்திரன் , மொராஜி சொன்னவுடன் கேட்டார்

இன்னும் மொரார்ஜி பிரதமரான காலங்களில் கலைஞர் மேல் பல வழக்குகள் பதிய சொல்லி பைலோடு அலைந்தது ராமசந்திரன் கோஷ்டி

ஆனால் இந்திரா பற்றியும் அவர் உருவாக்கிய ராமசந்திரன் பற்றியும் நன்கு அறிந்த மொரார்ஜி அதை ஏற்கவில்லை

இந்த இரு விஷயங்கள் மட்டுமே மொரார்ஜியிடம் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம்

மற்றபடி பார்ப்பதற்கு தளபதி படத்து கலிவரதன் போலிருக்கும் மொரார்ஜி தேசாய் பாகிஸ்தானுக்கு செய்த பெரும் உதவி இத்தேசத்தின் பெரும் அவமானம்

ஆனாலும் இந்நாட்டின் பிரதமர் வரிசையில் மாற்றங்களை அறிமுகபடுத்திய அவருக்கு, மாற்று உண்டாக்கிய அவருக்கு இன்று நினைவுநாள்

அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி

நம்மை விட பாகிஸ்தானியர் ககுதா அணுவுலையில் பெரும் அஞ்சலி செலுத்திகொண்டிருக்க கூடும்

காரணம் 17 நாடுகளை தனியே அடித்துவிரட்டிய மாவீரன் மோசே தயானின் கழுகு பார்வையில் இருந்து பாகிஸ்தானின் அணுவுலை தப்பவும், பாகிஸ்தான் அணுகுண்டு செய்யவும் மொரார்ஜி தேசாயின் அணுகுமுறையே பெரும் காரணம்

அணுகுண்டு செய்த முதல் இஸ்லாமிய நாடு எனும் பெருமையினை அது பெற ஒரே காரணம் மொரார்ஜி தேசாய்

அதீத பொய்

அடேய் பொய் சொல்லலாம் ஆனால் அதீத பொய் சொன்னால் நாக்கு அழுகிவிடும்

திமுக பரப்பும் பொய்யில் முதலாவது சென்னை மாகாணம் தமிழகம் என பெயர்மாற்ற சங்கரலிங்கனார் செத்தார் காமராஜர் கண்டுகொள்ளவில்லை

இந்த மொழிவாரி பிரச்சினைக்கு முதலில் செத்தது பொட்டி ஸ்ரிராமலு எனும் தெலுங்கர், மொழிவாரி மாநிலம் வேண்டும் என முதலில் பட்டினி கிடந்து அவர்தான் செத்தார்

காமராஜர் அதில் கனத்த அமைதி, அப்பொழுது அமைதியாக இருந்துவிட்டு சங்கரலிங்கனாருக்கு இறங்கி வந்தால் என்னாகும்?

தமிழனுக்கு காமராஜர் இறங்கினார் என தெலுங்கர் வாய்விட்டு சிரிப்பர், அதைவிட முக்கியம் நாடாரான சங்கரலிங்கத்துக்கு தவித்துவந்தார் காமராஜர் என சாதிமுலாம் பூச பசும்பொன் தேவர் பார்த்துகொண்டிருந்தார்

காமராஜர் சங்கரலிங்கனாரை கண்ணீரோடு தவிக்க விட்டது இதனால்தான்

இரண்டாம் விஷயம் குடகு மலை தமிழகத்தோடு இணைய விரும்பியதாம் காமராஜர் தடுத்துவிட்டு கன்னியாகுமரி வாங்கினாராம் இதனால் காவேரியில் காமராஜர் துரோகம்செய்தாரம்

குடகு மலை கூர்க் இன மக்கள் கன்னடரோடு இணையாமல் அதில் தமிழகத்தோடும் இணையாமல் தனி மாநிலம் காண விரும்பினர், அதற்காக போராடினர்

ஆனால் மிகசிறிய பகுதி என்பதாலும் இன்னும் பல காரணங்களுக்காகவும் அவர்களுக்கு மாநில அந்தஸ்து மறுக்கபட்டது

மிக சிறிய பகுதியான கூர்க் தனிமாநிலம் ஆகியிருந்தாலும் மைசூரை தாண்டி எப்படி காவேரி இங்கு வரும்? இவர்கள் அறிவு அவ்வளவுதான்

அதுவும் போக தேவிகுளம் பீர்மேட்டை விட்டுவிட்டு கன்னியாகுமரியினை ஏன் இணைத்தார்? இது நாடார் பாசம் என்கின்றார்கள்

காமராஜர் விருதுநகர் நாடார், கன்னியாகுமரி நாடார்களுக்கும் அவர்களுக்கும் ஆகாது விஷயம் அதுவல்ல‌

பீர்மேடு தேவிகுளத்தை ஒப்பிடும்பொழுது கன்னியாகுமரி பரப்பில் பெரிது அதைவிட முக்கியம் அங்கு விளையும் நெல்லும் இன்னும் பல பொருட்களும்

அந்த விளைச்சல்தான் காமராஜருக்கு சரியென பட்டதே தவிர சாதி அல்ல..

“விருதுநகரில் விலை போகா மாடு ஒன்று வடசேரி சந்தைக்கு வந்திருகின்றது” என அந்த பெருமகனை மட்டமாக பேசிய கட்சியின் வாரிசுகள் எப்படி இருப்பார்கள்?

இப்படித்தான் இருப்பார்கள்

அவர்களுகாக காமராஜரின் செருப்போடு காத்திருக்கின்றோம்..

இஸ்ரேலில் தேர்தல்

மேற்காசியாவின் தனிபெரும் செல்வாக்கு நாடான இஸ்ரேலில் தேர்தல் நடந்துவிட்டது விரைவில் முடிவு அறிவிக்கபடும்

விஞ்ஞானத்தின் உச்சத்தில் இருக்கும் நாடு அது, இஸ்ரேலில் நுழையும் காற்றை கூட கண்காணிக்கும் நாடு அது

ஆனால் வாக்கு எந்திரம் கிடையாது வாக்கு சீட்டு மட்டுமே, அதுதான் ஆதார பூர்வமான ஜனநாயகமாம்

அங்கு பதவிக்கு வரவேண்டும் என்றால் தமிழகம் போல நடிகர் நடிகை வசனகர்த்தா எல்லாமோ அவர்களின் அடிப்பொடியோ வாரிசுகளோ வரமுடியாது

அங்கு தேர்தலில் நிற்பவர்கள் நாட்டுக்காக போர், ராணுவம்,உளவுதுறை என சிலவற்றில் சாதித்திருக்க வேண்டும்

இப்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பல சூரத்தனமான நடவடிக்கைகளை களத்தில் செய்தவர், உகாண்டாவுக்கு இஸ்ரேல் விமானம் கடத்தி செல்லபட்டு மீட்கபட்டபொழுது இவர் அண்ணன் உயிரழந்தார்

அதன்பின்பும் அதே போல ஒரு நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு காலில் தோட்டா வாங்கினார் இந்த நேதன்யாகு

மிகபெரும் சாதுர்யமான அவரின் அதிரடி அக்காலத்தில் பிரசித்திபெற்றது, தீவிரவாதிகளிடமிருந்து ரத்தம் சிந்த சிந்த இஸ்ரேலியர்களை அவர் மீட்டார்

அப்படிபட்ட மாவீரர்கள்தான் அங்கு நிற்க முடியும்

எதிர்த்து நிற்கும் இந்த கான்ட்ஸ் என்பவர் கூட முன்னாள் இஸ்ரேலிய தளபதி, 2009ல் லெபனானை போட்டு சாத்தியவரும் , சிரியாவின் அணுவுலைகளை தகர்த்தவரும் அவர்தான்

இருவருக்கும் பலத்த போட்டி என்றாலும் நேதன்யாகு மோடி போல் நம்பிக்கையாய் இருக்கின்றார்

பாஜகவுக்கு ராமர் கோவில் போல அவர்களுக்கு யூத கோவில், அந்த அரசியலும் அங்கு உண்டு

மேற்காசியாவின் மிக வல்லமையான நாடான இஸ்ரேலின், அப்பகுதியின் சமாதானத்தை நிர்ணயிக்கும் மகா பலம் பொருந்திய இஸ்ரேலை ஆளபோவது யார் என்பது மிக விரைவில் தெரியும்

நாட்டுக்காக உயிரை பணயம் வைத்து தன்னை நிரூபித்தால்தான் அவர்கள் அங்கு போட்டிக்கே வரமுடியும், பின்ன ஏன் இஸ்ரேல் உலகையே மிரட்டாது?

ஹிம்ம்

அந்த நாட்டை பார்த்துவிட்டு தமிழக நிலையினை நினைத்து கொள்ளுங்கள் , ஒரு விரக்தி நிறைந்த சிரிப்பு வருமல்லவா? வரும் நிச்சயம் வரும்

அதுதான் நம் அருமை தமிழகத்தின் சோகமான‌ தலைவிதி

இந்த சோக தலைவிதியினை சிரிக்க சிரிக்க எழுதியது யாரென்றால் சாட்சாத் திமுகவும் அதன் அரசியலும்

அதில் சந்தேகமே இல்லை

புரபல்லா குமார் மகந்தா

அசாம் மாநிலத்தில் ஒரு இஸ்லாமியர் மாட்டுகறிக்கு தாக்கபட்டதாகவும் பன்றிகறி உண்ணுமாறு கொடுமைபடுத்தபட்டதாகவும் பல காட்சிகள் வருகின்றன‌

அசாமில் சிக்கல் ஏராளம், ஒரு காலத்தில் புரட்சி எல்லாம் வெடித்தது

மாணவர் புரட்சி வெடித்து அதில் ஒரு தலைவரும் நாட்டுக்கு வந்தார், அவர் பெயர் புரபல்லா குமார் மகந்தா

ஆம், இந்தியாவில் 28 வயதில் முதல்வரான முதல் நபர் அவர்தான், இன்றுவரை இளம்வயதில் முதல்வரானது அவர்தான்

நாடே அவரை திரும்பி பார்த்தது, மாபெரும் புரட்சி அசாமில் நடந்ததாக உலகம் சொன்னது

மிக துடிப்பான அவரால் அசாமினை மாற்றமுடிந்ததா என்றால் இல்லை, மத்திய அரசை எதிர்த்துவிட்டு ஒரு மாநிலத்தை உருப்படவைக்க முடியாது என்பது அவருக்கு தெரிந்தது

கூடவே அந்நிய சக்திகள் தேசத்தை எப்படி எல்லாம் கூறுபோடும் என்பதையும் கண்டார்

அரசியலில் அதன் பின் திணறினார், மாநில நலனா நாட்டு பாதுகாப்பா என அவர் குழம்பி உல்பாவுக்கு எதிரான நடவடிக்கையில் சைக்கியா கமிஷனால் சிக்கலுக்குள்ளானார்

தேசிய கட்சிகளை எதிர்த்து ஒரு மாநில கட்சி நிலைக்க முடியுமா என்பதில் ஏற்றமும் தாழ்வுமாக அவரின் போராட்டம் நீடிக்கின்றது

ஒரு நல்ல இந்தியன் மாநில நலனை காத்து இந்தியனாக எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு என்றுமே மகந்தா எடுத்துகாட்டு

இந்த சந்திரபாபு நாய்டு, மம்தா, மாயாவதி,தேவகவுடா அவ்வப்போது ஸ்டாலின் என சிலர் செய்யும் தேசிய அரசியல் மோசடி இம்சைக்குள் அவர் வரமாட்டார், வித்தியாசமானவர் அவர்

இத்தனைக்கும் தனி சிறப்பு பெற்ற அரசியல்வாதி

இப்பொழுது பாஜக ஆட்சி நடக்கும் அசாமில் இந்த இஸ்லாமியர் கொடுமை படுத்தபட்டதாக செய்தி வருகின்றது

வழக்கம் போல இது அசாம் பிரிவினைவாதிகள் செயல் என்கின்றன பாஜக கோஷ்டிகள், மகந்தா கனத்த அமைதி

அந்த அமைதிதான் உண்மையிலே இது அந்நிய சக்தி விளையாட்டா? என யோசிக்க வைக்கின்றது

அந்த மாபெரும் அசாம் புரட்சியினை தாண்டி அம்மாநிலம் மகந்தாவின் கைகளை விட்டு சென்றதென்றால் அங்கு வேறு ஏதோ சிக்கல் இருகின்றதல்லவா?

இந்தியாவில் மாநில கட்சிகள் நிறைய உண்டு, அவைகள் தேசிய கட்சியிடம் வெற்றியும் தோல்வியும் பெறும்

ஒரு மாநில கட்சியாக தேசிய கட்சிக்கு பெரும் தோல்வி கொடுத்தது திமுக‌

ஆம் ராமசந்திரன் மட்டும் விலகாமல் இருந்தால் ஜோதிபாசுவின் சாதனையினினை கலைஞரால் முறியடித்திருக்க முடியும்

28 வயதில் மாபெரும் புரட்சியாளனாக களத்திற்கு வந்த மகந்தாவுக்கும் கலைஞருக்கும் என்ன வித்தியாசமென்றால்

கலைஞருக்கு நீதிகட்சி, பெரியார், அண்ணா என பல வேர்கள் இருந்தன, ஆனால் மகந்தா ஒரு சுயம்பு

ஏன் கலைஞர் நிலைத்தார் மகந்தா தடுமாறினார் என்றால்

கலைஞர் நெளிவு சுளிவுகளோடு கட்சி நடத்தினார் காலமும் விதியும் அவருக்கு ஒத்துழைத்தது

மகந்தா அப்படி அல்ல அவருக்கு பல விஷயம் சாதகமில்லை

அரசியலில் அதிர்ஷ்டமும் வேண்டும் கலைஞருக்கு அது நிறைய இருந்தது.

விளம்பரம் செய்தால் என்ன?

கலைஞர் தன் சாதனைகளை வெளியில் சொன்னதே இல்லை உபிக்கள் வேதனை

2010 வாக்கில் ஒரு பல்கலைகழகம் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது , அப்பொழுது இவர் என்ன கிழித்துவிட்டார் இவருக்கு டாக்டர் பட்டம் என குரல்கள் எழும்பின‌

அமைதியாக முரசொலியில் எழுதினார் இப்படியாக‌

“உடன்பிறப்பே எனக்கு எதற்கு டாக்டர் பட்டம் கொடுத்தார்கள் என எனக்கே தெரியவில்லை, 14 வயதிலே இந்தியினை எதிர்த்தேனே அதற்கா? 18 வயதிலே பகுத்தறிவு பேசினேனே அதற்கா? 20 வயதிலே சாதி ஒழிக்க கிளம்பினேனே அதற்கா என தொடங்கி

இந்தி ஒழிப்பு, சமூக நீதி, இட ஒதுக்கீடு, பெண்ணுரிமை என நீட்டி முழங்கி

இந்த தள்ளாடும் வயதில் இன்னும் தமிழகத்திற்காக உழைக்கின்றானே இந்த கருணாநிதி அதற்கா, இதில் எதற்கு எனக்கு டாக்டர் பட்டம் கொடுத்தார்கள் என எனக்கே தெரியவில்லை”

எவ்வளவு நுட்பமான அதே நேரம் குறும்பான எழுத்து அது?

கலைஞர் தன் திட்டமெல்லாம் வெளிதெரியுமாறு கவனமாகத்தான் இருந்தார், அதில் ஒன்றும் ரகசியமல்ல‌

ஆனால் 11 ஆண்டு தமிழகத்தை கட்டி எழுப்பியபின் காமராஜரிடம் கேட்டார்கள், அய்யா உங்கள் சாதனையினை விளக்கி விளம்பரம் செய்தால் என்ன?

பட்டென பதில் சொன்னார் காமராஜர்.

“இது என்ன பைத்தியகாரதனம்ணேன், ஒரு தாய் தன் பிள்ளைக்கு கொடுத்த பால் கணக்க வெளில சொல்வாளா?”

அடேய் யார்டா நீங்க…

அடேய் யார்டா நீங்க…

எம் பதிவினை இப்படியா திருடி வீடியோ ஆக்குவீர்கள்?

இப்படி எல்லாமா எம்மை கவனிப்பீர்கள்? எம் கை கால்கள் எல்லாம் நடுங்குகின்றது

எழுதுவது நாம் அதை வாசித்து கைதட்டலும் சில டாலர்களும் வாங்குபவன் எவனோ ஒருவன், விதி என்பது இதுதான்.

இவ்வளவு கவனம் நாம் பெறுவது நல்லதல்ல, இதெல்லாம் எம் எல்லைக்கு அப்பாற்பட்டது

(அடேய் ராசா இதேபோல் தலைவி பதிவினையும் எடுத்து அவரிடம் காட்டிவிடுவாயா?

ஜென்மபலன் பெற்ற மகிழ்சியில் இந்த முகநூலை விட்டு சென்றுவிடுகின்றேன்

தயவு செய்து அதைமட்டும் செய்துவிடும்..)

ஹிட்லரின் விஞ்ஞானிகள் கூட்டத்துக்கு வராத ஐடியா

ஹிட்லரின் விஞ்ஞானிகள் கூட்டத்துக்கு வராத ஐடியா கூட அங்கிள் சைமன் கோஷ்டிக்கு வரும்

ஒடும் ரயிலில் மின்சாரம் எடுப்பது சாத்தியமென்றால் மற்ற நாடுகளில் ரயிலே இல்லையா?

இதுபற்றி ஒரு தும்பியிடம் விசாரித்தோம், தும்பி ஆர்வமாக சொல்லிற்று

“அண்ணே ஒரு 11 ஏக்கர் நிலம் வேண்டும் அதில் நிறைய தண்டவாளம் அமைத்து ரயிலை ஓடவிட வேண்டும், அது ஓட ஓட டர்பன்களை சுழற்றினால் மின்சாரம் எளிது ஆளுக்கு 25 பைசாவுக்கு கொடுக்கலாம், ரயில் என்சின்ல புலி சின்னமும் பிரபாகரன் படமும் இருக்கும், புலி உறுமுற சவுண்ட்ல கரண்ட் அப்படி வரும்ணே

வாவ் சூப்பர், சரி ரயிலுக்குபதில் ராக்கெட் என்சினை இப்படி இயக்கினால் மின்சாரம் 5 பைசாவுக்கு கொடுக்கலாமே?

அண்ணே நீங்கெல்லாம் ஏன் எங்கள் கட்சியில் இல்லை?, வாங்கண்ணே நம்ம அறிவால் தமிழகத்தை வளர்ப்போம் என கண்ணீர் விட்டது தும்பி

ஆனந்த கண்ணீரை அப்புறம் விடு, இந்த ரயில் எப்படி இயங்கும்

அதுக்கு டீசலோ நிலக்கரியோ வேண்டும்

இந்த அணல் மின் நிலையம் எல்லாம் எப்படி இயங்குகின்றது?

இதே நிலக்கரிண்ணே இல்ல டீசல்மாதிரி ஏதாவதுண்ணே

ஆக உங்க ரயிலுக்கும் அதெல்லாம் வேண்டுமல்லவா?

ஆமாண்ணே இல்லண்ணா ரயில் ஓடாது.

பின்ன எதுக்குடா இந்த ரயில் விளையாட்டு, அணல் மின் நிலையம் போதாதா?

ஆமாணே, இருங்க அண்ணன்கிட்ட கேட்டுட்டு வாரேன்

வராத அப்படியே ரயில்ல விழுந்து சாவு”