ராகுல் மிக கவனமாக இருக்கட்டும்

உபியில் ராகுல் மேல் துப்பாக்கி சூட்டுக்கு முன் விழும் லேசர் கதிர் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டிருகின்றது, கொலைமுயற்சியாக இருக்கலாம் என்ற தகவல் பாதுகாப்பு அமைச்சிடம் கொடுக்கபட்டுள்ளது

இது பற்றி முழு தகவல் வெளியிடபடவில்லை என்றாலும் ராகுல் மிக கவனமாக இருக்கட்டும் அவருக்கான பாதுகாப்பு வலுப்படுத்தபடட்டும்

இத்தேசத்தின் இளம் தலைவர் அவர், இந்நாடு அவரை எதிர்பார்க்கின்றது, இந்த தலைமுறையினை அவர் வளமான இந்தியாவுக்குள் அழைத்துசெல்வார் என நம்புகின்றது

அவருக்கான பாதுகாப்பினை அரசு வழங்கட்டும், ராகுலும் எச்சரிக்கையாக இருக்கட்டும்

கோடிகணக்கான இந்தியரின் ஆன்ம பலமும் பிரார்த்தனையும் ராகுலுக்கு முழு பலமும் பாதுகாப்பும் அளிக்கட்டும்

அவர் நேருபோல் வாழட்டும் அவரை போலவே ஆளட்டும்

ஜூலியஸ் அசாஞ்ச்சே லண்டனில் கைது

அமெரிக்காவுக்கு தண்ணி காட்டிகொண்டிருந்த ஜூலியஸ் அசாஞ்ச்சே லண்டனில் கைதுசெய்யபட்டுவிட்டார்

அன்னார் உலகெல்லாம் சர்வர்களில் புகுந்து தகவல் திரட்டி அசாஞ்சே லீக்ஸ் என ரகசியங்களை வெளியில் கொட்டிகொண்டிருந்தார்

(ஆனால் அவராலும் கொடநாட்டிலும் கோபாலபுரத்திலும் ஊடுருவ முடியவில்லை, தமிழகம் என்றால் சும்மாவா)

அதில் நிறைய அமெரிக்காவுக்கு எதிரானது என்பதால் அந்நாடு வலைவீசி தேடியது , ஈக்வெடார் நாடு அவருக்கு அடைக்கலம் கொடுத்தது அதை வைத்து லண்டனில் சுற்றிகொண்டிருந்தார்

இந்நிலையில் ஈக்வெடார் அரசு கையினை விரித்துவிட அசாஞ்சே கைதாகிவிட்டார்

அமெரிக்க அரசுக்கான ரகசியங்களை வெளியில் விட்டால் அதற்கு சமமான நாட்டிடம் சென்று சேர வேண்டும்

அதில் எட்வர்ட் ஸ்னோடன் கெட்டிக்காரர், அமெரிக்கா தேடுகின்றது என்றவுடன் ஹாங்காங் வழியாக ரஷ்யாவுக்கு தப்பினார், இப்பொழுது புட்டீனின் பாதுகாப்பில் அமைதியாக இருக்கின்றார்

இப்பொழுதும் ரஷ்ய உளவுதுறை டிரம்புக்கு தலைவலி கொடுத்தபடிதான் இருகின்றது

அசாஞ்ச்சே இதில் சிக்கிகொண்டார், ஸ்னோடன் அவர் போக்கில் ஹாயாக இருக்கின்றார்

நினைத்து பார்க்கவே மனம் நடுங்கும் கொடூரம் இது

மாட்டுக்கு ஆண்மை நீக்கம் செய்து விவசாய பணிகளை செய்யவைப்பது போல ஒரு கொடுமை மனிதர்களுக்கும் மகாராஷ்டிராவில் நடந்திருகின்றது

அதாவது பெண்களுக்கு கருப்பையினை நீக்கிவிட்டு ஒரு இயந்திரம் போல மாற்றி ஒரு கும்பல் பயன்படுத்தியிருகின்றது

கருப்பை இழப்பால் வரும் விளைவுகள் பற்றியோ இதர பலவீனம் பற்றியோ அறியா அப்பாவி பெண்களும் அதில் சிக்கியிருக்கின்றனர்

நிலசுவாந்தார்கள் இன்னும் பலரின் கொடுமையான சிந்தனையில் உதித்த அத்திட்டம் இந்த நாகரீக உலகில் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவினை ஏற்படுத்தியிருக்கின்றது

நினைத்து பார்க்கவே மனம் நடுங்கும் கொடூரம் இது

விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது, மிக மோசமான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன‌

இந்த நாடு இன்னும் செல்லவேண்டிய தூரம் ஏராளம் இருக்கின்றது

பிளாக் ஹோல்

விண்வெளி ஆய்வில் தியரியாக சொல்லபட்டது கருந்துளை அல்லது பிளாக் ஹோல்

அதாவது ஒரு நட்சத்திரம் வாழ்ந்து முடித்தபின் அது சுருங்கி கருப்பு வடிவமாகும் அப்பொழுது அதன் ஈர்ப்பு சக்தி அதிகரிக்கும்

அதனருகில் செல்லும் எல்லாவற்றையும் அது ஈர்க்கும், ஏன் ஒளியினை கூட ஈர்த்துகொள்ளும்

ஒரு பொருளில் ஒளிபட்டு அது எதிரொளியாக நம் கண்ணுக்கு வந்தால்தான் பார்க்க முடியும், ஒளியினையும் இழுத்து ஒலியினையும் அது இழுத்து வைத்தால் என்னாகும்?

அதை காணவே முடியாது உணரத்தான் முடியும், இதுவரை வந்ததெல்லாம் யூக அடிப்படையில் கணிணி வரைந்ததே

விண்வெளியில் ஏகபட்ட கருந்துளை இருப்பதாகவும் இவற்றிற்கு இடையிலான ஈர்ப்பு விசை சமநிலையில்தான் அந்தரத்தில் சூரிய மண்டலமும் பால்வெளியும் இயங்குவதாகவும் சொல்கின்றது தியரி

ஒரு காலத்தில் சூரியனும் கருந்துளை ஆகலாம் அல்லது ஏதேனும் சக்திவாந்த கருந்துளை மொத்த சூரிய மண்டலத்தையும் விழுங்கலாம் என்பது எதிர்கால ஆபத்து

இப்படி சர்வ சக்திவாய்ந்த அந்த கருப்பு சக்தியினை இதுவரை யாரும் படமெடுக்கவில்லை

எப்படி எடுக்க முடியும்?

ஒளியினையும் உள் இழுத்துவிழுங்கிவிடும் அந்த அரக்கனை எங்கிருந்து கேமரா படம்பிடிக்கும்

ஆனால் அதையும் மீறி எப்படியோ பெரும் வெளிச்சத்தை செலுத்தி அந்த கருப்பு அரக்கனை படம் பிடித்துவிட்டார்கள்

இக்கால தொழில்நுட்பம் அதற்கு வழிசெய்திருகின்றது, மானிட குலத்தின் பெரும் சாதனை இது

விண்வெளி ஆய்வில் இது மிகபெரும் மைல்கல்

இனி கருந்துளை பற்றிய ஆய்வுகள் பெரும் பாய்ச்சல் பெறும்

திமுக மேல் என்ன வன்மம்?

ஏன் கலைஞரை போற்றுகின்றாய் அதே நேரம் இப்பொழுதிருக்கும் திமுக மேல் என்ன வன்மம் என்றால் சொல்ல ஒன்றுமில்லை

இப்போதிருக்கும் திமுக என்பது திமுக எனும் மூன்று எழுத்தை போல ஸ்டாலின் உதயநிதி கனிமொழி என ஆகிவிட்டது

கலைஞர் எதில் தனித்து நின்றார் என்றால், காமராஜரை எதிர்த்து அவரின் அரசியல் இருந்தது ஒரு கட்டத்தில் ஆட்சி அவரிடம் சிக்கி கொண்டது

பொற்கால ஆட்சி நடத்திய காமராஜரை வீழ்த்தி மக்கள் இந்த ஆட்சியினை நம்மிடம் கொடுத்திருக்கின்றார்கள் என்றால் அதையும் மீறிய ஆட்சியினை கொடுக்க வேண்டும் என்ற ஒருவித வெறியும் கூடுதல் பொறுப்பும் கலைஞருக்கு இருந்தது

ஆம் அவருக்கு மனசாட்சி இருந்தது

தன் ஒவ்வொரு திட்டமும் காமராஜர் ஆட்சியினை மீறியதாக வரலாற்றில் நிற்கவேண்டும் என கனவு கண்டார், அதை நோக்கி உழைத்தார்

அந்த முதல் 5 ஆண்டு ஆட்சி கலைஞரின் மாபெரும் சாதனை

ஆனால் அவருக்கு சிக்கல் ராமசந்திரன் வடிவில் உருவாக்கபட்டது போராடினார் கலைஞர், அதன் பின் கிடைத்த 2 ஆண்டுகளில் அற்புதமான திட்டங்களை கொடுத்தார்

அதன்பின் ஜெயலலிதாவினை கலைஞருக்கு எதிராக நிறுத்தினார்கள்

கலைஞரும் அட்டகாசமாக சமாளித்தார் அற்புதமான திட்டங்களை கொண்டுதான் வந்தார், நல்லாட்சிதான்

1969 1974 வரையான காலம் 1987 1989 வரையான காலம் 1996 2001 வரையான காலம் எல்லாம் கலைஞரின் பொற்காலம்

ஆம் 1960களில் அவரில் இருந்த நெருப்பும் பொறுப்பும் கொஞ்சமும் குறையவில்லை

காமராஜரை வீழ்த்திவிட்டு வந்தோமே, அவரை விட நல்லாட்சி கொடுத்தாக வேண்டும் என அவ்வளவு பொறுப்போடு போராடினார்

ஆனால் கடைசிமுறை ஆட்சிக்கு அவர் வந்தபொழுது அவர் கையில் ஏதுமில்லை குடும்பத்தார் ஏராளம் உள்ளே வந்தனர்

குடும்பபாசம் எனும் விலங்கு கலைஞரின் கையினையும் கால்களையும் கட்டிபோட்டபின் அந்த பழைய கலைஞர் இல்லை வெறும் பொம்மையானார்

விளைவு என்னவெல்லாமோ நடந்து ஜெயா இருமுறை முதல்வராக வாய்ப்பு கிட்டிற்று

ஆக கவனியுங்கள்

காமராஜரை மீறி வந்த கலைஞர் அந்த பொறுப்புடன் பல நல்லவற்றை செய்தார் மறுக்க முடியாது, மாநில சுயாட்சியும் மத்திய அரசுடன் மோதலும் இல்லை என்றால் மதுகடை வந்திருக்காது, அப்பொழுதும் அவர் முதலில் மூடினார் அடுத்து தொடங்கியது ராம் சந்தர்

விஷயம் இதுதான்

காமராஜரை மீறி நல்லாட்சி கொடுக்க துடித்தார் கலைஞர் அவரின் ஒவ்வொரு அசைவும் அதிலேதான் இருந்தது

ஆனால் இப்பொழுது ஆள்பவர் பழனிச்சாமி, இவரை அடுத்து ஸ்டாலின் வந்தால் என்னாகும்?

துரதிருஷ்டவசமாக பழனிசாமினை முன்மாதிரியாக கொண்டே ஸ்டாலின் ஆட்சி கிடைத்தால் ஆள்வார் போல..

போகிற போக்கு அப்படித்தான் தெரிகின்றது

நாடு தாங்குமா?

ஜாலியன் வாலாபாக் படுகொலை வருத்தம்

பிரிட்டிசார் பெரும்பாலும் உயர்ந்த மனநிலையில் இருந்தவர்கள் இருப்பவர்கள்

தாங்கள் உயர்ந்த நாகரீகம் கொண்டவர்கள் எது செய்தாலும் சட்டபடிதான் செய்வோம் அதன் விளைவுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்ற இருமாப்பில் இருப்பார்கள்

இதனால் கேட்க வேண்டிய பல மன்னிப்புகளை கேட்கவே இல்லை

அதில் முக்கியமானது ஜாலியன் வாலாபாக் படுகொலை

அது நடந்த காலத்தில் உலகத்தின் மிகபெரும் வல்லரசு பிரிட்டன் , அவர்களுக்கு அடுத்து பிரான்ஸ் .

ஸ்பெயினும் ஜெர்மனும் 3ம் இடத்திற்கு மோதிகொண்டிருந்தது

அமெரிக்கா அப்பொழுது இப்போதைய கனடா நியூசிலாந்து போல அமைதியான நாடு

ரஷ்யா ஐரோப்பாவின் பின் தங்கிய நாடு, சீனா மிக மிக பின் தங்கிய நோயாளி நாடு

பிரிட்டனுக்கு சமமான வல்லமை கொண்டது அன்றைய ஆட்டோமன் துருக்கி இஸ்லாமிய சாம்ராஜ்யம் எனினும் அது உலக அரசியலில் இல்லை

ஜாலியன் வாலாபாக் படுகொலை உலகை அலறவைத்தாலும் பிரிட்டனை கேள்வி கேட்பார் இல்லை, அது தவறு என பிரிட்டனுக்கு தெரிந்தாலும் அதன் கவுரவம் அதை தடுத்தது

கேவலம் இந்தியரிடம் மாபெரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் மன்னிப்பு கேட்பதா? என்ற மகோன்னத மனப்பான்மை இருந்தது

பிரிட்டிஷ் அரச குடும்பம் இதுபற்றி வாய்திறக்காது, இந்தியா வந்த சார்லஸ் கூட அதை பற்றி பேசியதில்லை, ஆம் அங்கு அஞ்சலி செலுத்தினாலும் மன்னிப்பு பற்றி பேசமாட்டார்

வரலாற்றில் முதல் முறையாக பிரிட்டன் பிரதமர் தெரசே மே பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்த ஜாலியன் வாலாபாக்கின் 100ம் ஆண்டு நினைவு நாளுக்கு வருத்தம் தெரிவித்திருக்கின்றார்

நன்றாக கவனியுங்கள் மன்னிப்பு அல்ல வருத்தம்

அதாவது தங்கள் நாடு செய்த கொலைக்கு மன்னிப்பு கேட்டால் எப்படி எனும் அதே கவுரவ சிக்கலுடன் வருத்தம் தெரிவிக்கின்றாராம்

வருத்தம் யாரும் யாருக்கும் தெரிவிக்கலாம்

ஆக இன்னும் மன்னிப்பு கேட்காமல் வருத்தம் தெரிவிக்கும் அளவுக்கு வெள்ளை இனவெறியும் பிரிட்டிஷாரின் மகோன்னத உயர்ந்த கவுரவ வெறியும் அப்படியே இருக்கின்றது

பெஞ்சமின் நேதன்யாகு வெற்றிபெற்றுவிட்டார்

இஸ்ரேலில் மறுபடியும் பெஞ்சமின் நேதன்யாகு வெற்றிபெற்றுவிட்டார்

ஹமாஸை ஒடுக்கியது, இஸ்ரேலில் தீவிரவாத கொசு கூட வராமல் தடுத்தது, ஜெருசலேமினை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தது என பல விஷயங்கள் அவருக்கு சாதகமாயிருக்கின்றன‌

மறுபடியும் அரியணை ஏறிய சிங்கம் எப்படி உறுமுகின்றது என்றால் இப்படித்தான்

ஈரானை ஒழிப்போம் விரைவில் 3ம் ஆலயம் ஜெருசலேமில் அமையும் படி மத விவகாரங்கள் இறுக்கமானதாக்கபடும்

ஆக விரைவில் இஸ்ரேலிலும் “கர சேவை” நடக்கலாம்

எப் 35 ரக விமானம் விபத்து

உலகின் நம்பர் 1 போர் விமானம் என அமெரிக்காவின் லாஹின் மார்ட்டினால் அறிமுகபடுத்தபட்ட எப் 35 ரக விமானம் ஜப்பான் பக்கம் விபத்துக்குள்ளாயிருக்கின்றது

இது அமெரிக்காவுக்கு பலத்த அதிர்ச்சி

ஸ்டெல்த் எனப்படும் விமான வகை அது, அமெரிக்காவிடம் மட்டுமே அது உண்டு , சீனா அதை ஓரளவு உருவாக்கிகொண்டிருக்கின்றது

ரஷ்யா இவ்விஷயத்தில் பின் தங்கியே இருக்கின்றது

ஸ்டெல்த்திற்கும் மற்ற விமானங்களுக்கும் தொழில்நுட்ப ரீதியாக வித்தியாசம் இருந்தாலும் பார்த்தவுடன் எப்படி அடையாளம் காண்பது?

மற்றவை உளுவை மீன் போல இருக்கும் இது இந்த வாவல் மீன் உருவில் தட்டையாக இருக்கும்

அப்படிபட்ட மிக பயமுறுத்திய விமானம் ஜப்பானில் விழுந்துவிட்டது அமெரிக்காவுக்கு அதிர்ச்சி

தன் எல்லையில் அமெரிக்காவின் வலிமையான ஆயுதம் வீழ்ந்ததை மவுனமாக உற்று பார்க்கின்றது சீனா மற்றும் ரஷ்யா