உருப்படியாக பேசகூடிய வேட்பாளர்கள்

39 தொகுதிக்கு ஏகபட்ட‌ வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றார்கள்

இதில் நாடாளுமன்றத்தில் உருப்படியாக பேசகூடிய வேட்பாளர்கள் யாரென பார்த்தால் வெகு சொற்பம்

கனிமொழி, தயாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி ஈவிகேஸ் இளங்கோவன், சு.வெங்கடேசன் என சில முகங்கள்தான் இருகின்றன அதுவும் திமுக கூட்டணியில்தான் இருகின்றன‌

அன்புமணி போன்ற சிலமுகங்கள் எதிர்தரப்பில் இருக்கின்றன‌

ஆனால் அதே கூட்டணியில்தான் ஜெகத்ரட்சகன் போன்ற சர்ச்சை நபர்களும் இருக்கின்றார்கள், துரைமுருகன் மகன் மக்களவையில் சம்பள பணம் எண்ணிகொண்டிருந்தால் நன்றாயிராது

தரமில்லா திமுக வேட்பாளர், ஏற்கனவே அடிமைகளாய் இருந்த அதிமுக‌,, தேமுதிகவின் இம்சைகள், மன்சூர் அலிகான் போன்றவர்கள் டெல்லிக்கு சென்று என்ன பேசுவார்கள் என்பதுதான் தெரியவில்லை

ஏராளமான வேட்பாளர்கள் களத்தில் உண்டு எனினும் தொகுதிக்காகவும் மக்களுக்காகவும் பேசகூடிய தகுதியும் திறமையும் வெகு சிலருக்குத்தான் இருக்கின்றது

மக்கள் அதை கவனித்து வாக்களித்தால் அவர்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் மாநிலத்திற்கும் மிக்க நல்லது

தும்பிகளுடன் பேசுவது எப்பொழுதுமே சுவாரஸ்யமானது

தும்பிகளுடன் பேசுவது எப்பொழுதுமே சுவாரஸ்யமானது

“ஏண்டா உங்க இலக்கு இனவிடுதலை

ஆமாண்ணே இனம்ணே காப்பாத்தணும்ணே

இந்தியா உங்களுக்கு ஏற்புடையது அல்ல, ஈழ அழிவுக்கெல்லாமும் தமிழக சீரழிவுக்கெல்லாம் இந்தியா காரணம்

கண்டிப்பாண்ணே இப்படித்தான் உண்மை சொல்லணும்

பின்ன ஏன் இந்த எம்பி தேர்தலில் நிற்கின்றீர்கள்? டெல்லிக்கு சென்று என்ன செய்வீர்கள்?

அண்ணே இது உரிமை மீட்புண்ணே டெல்லிய ஆட்டிருவோம்

சரி அதெல்லாம் அப்புறம்டா அங்க போய் என்ன செய்வீங்க?

கச்சதீவு மீட்பு , அணுவுலை முடக்கம் இப்படி எல்லாம் டக்கு டக்குன்னு செய்வோமுண்ணே, காவேரில நீர் இல்லண்ணா அலறவிடுவோம் மத்த பயலுக மாதிரி கிடையாது , விவசாயி வாழணும்னே

எப்படி அலறவிடுவ அத சொல்லு

பாராளுமன்றத்துல கத்துவோம்

வழக்கம் போல கண்டுக்கல என்ன செய்வ‌

ம்ம்ம் ரோட்டில உருளுவோம்

அய்யாகண்ணு அம்மணமா உருண்டும் ஒண்ணும் ஆகல‌

அப்போ கேஸ் எல்லாம் போடுவோம்

அதான் திமுக அதிமுக எல்லாம் கேஸ் நடத்திச்ச, நீங்கதான கிண்டல்லாம் பண்ணீங்க திரும்பவும் கேஸுண்ணா நீங்க எதுக்கு? உங்க ஸ்பெஷல் என்ன அத சொல்லு

தனி நாடு கேட்போம்ணே

உடனே கிடைச்சுரும்டா

இல்லண்ணே அப்படி மிரட்டுவோம் இந்தியா பயந்து எங்க காலுக்கு வந்திரும்..

அட கிறுக்கு பயல தனிநாடுன்னாலும் காவேரி இந்தியாவுல்தான இருக்கும், படை எடுப்பியா?

இல்ல சர்வதேச நீதிமன்றம் போவோம்

அதுக்கு டெல்லி கோர்ட்டே பரவால்ல, சரி கச்சதீவு எப்படி மீட்கபோறீங்க சொல்லு

இப்போ சொன்னமாதிரிதாண்ணே

இது எல்லா கட்சியும் செய்றத்தான அழுத்தம், வலியுறுத்தல் கோரிக்கை, முடியா பட்சத்தில் வழக்கு , உங்க ஸ்பெஷல் என்னடா?

அண்ணே நாங்க கேட்டது நடக்கலைன்னா உடனே செத்துருவோம்

ஒஹோ இவ்வளவு செலவு பண்ணி தேர்தல் நடத்தி உங்கள டெல்லிக்கு பேச அனுப்பினா செத்துருவீங்க‌

பின்ன பதவில இருந்து எதுக்குண்ணே

அப்போ பதவிக்கு வராமலே செத்துரு”

தேர்தல் நெருங்குவதற்குள் இன்னும் என்னென்ன விருதெல்லாம் வருமோ?

ரஷ்யாவில் பல விருதுகள் உண்டு சில சோவியத் காலம் சில அவர்களின் புகழ்பெற்ற அரசனான பீட்டர் காலத்தில் ஏற்படுத்தபட்டது

அப்படி பீட்டர் த கிரேட் எனும் புகழ்பெற்ற ரஷ்ய மன்னன் அந்த விருதினை அறிவித்தான்

அதன் பெயர் “ஆர்டர் ஆப் ஆன்ட்ரூ”

அதாவது அந்திரேயா அல்லது ஆன்ட்ரு எனப்படும் புனிதரை கொண்டாடிய ரஷ்ய திருச்சபையின் உருவில் கொடுக்கபட்ட விருது அது

தோமா இந்தியாவுக்கான அப்போஸ்தலர், பீட்டர் வாடிகனுக்கான அப்போஸ்தலர் என்பது போல ஆன்ட்ரு ரஷ்யாவுக்கான அப்போஸ்தலர்

ஆண்ட்ரு இயேசுவின் அப்போஸ்தலர், மிக மதிப்பானவர்

அவருக்கு சமமாக மதிக்கின்றோம் என என்றோ அந்த பீட்டர் மன்னன் உருவாக்கி வைத்தான்

மகா பீட்டர் சாதாரணம் அல்ல, ரஷ்யாவின் புகழ்பெற்ற அடையாளம் ரஷ்யாவின் முன்னோடி.

அது பீட்டர் மன்னன் காலத்தில் இருந்தது பின் சோவியத் காலத்தில் நிறுத்திவைக்கபட்டது , 1998ல் அது எல்ட்சினால் மறுபடி கொண்டுவரபட்டது

அது மிக உயர்ந்த விருதான அது மிக சில வெளிநாட்டவருக்கே அறிவிக்கபட்டிருக்கின்றது

முன்பு சீன அதிபர் ஜின்பெங் எல்லாம் வாங்கினார்..

திமுக காங்கிரஸ் அன்பர்கள் நல்ல மருத்துவரை அருகில் வைத்து கொள்ளாமல் இப்பதிவை படிக்க வேண்டாம்

காரணம் நீங்கள் மறுபடியும் ரத்த கொதிப்பில் எகிறும் சம்பவம் ஒன்று நடந்துவிட்டது

ஆம் அந்த விருது இன்று மோடிக்கு அறிவிக்கபட்டிருக்கின்றது

உலக அரசியலில் தவிர்க்க முடியாத நபராகவும் ரஷ்ய இந்திய உறவுக்கு பாடுபட்டதற்காகவும் தெற்காசிய அமைதிக்கு பாடுபடும் தலைவராகவும் மோடி விளங்குவதால் இந்த விருதாம்

தேர்தல் நெருங்குவதற்குள் இன்னும் என்னென்ன விருதெல்லாம் வருமோ தெரியாது

ஒரு கதை உண்டு

இந்தியாவில் கிரிக்கெட்டை வளர்த்த பஞ்சாப் மன்னருக்கு தன் மகன் யுவராஜை கிரிக்கெட் வீரனாக வளர்க்க ஆசை அவனோ ரவீந்திர ஜடேஜா போல ஆகிவிட்டான்

அதனால் என்ன? பவுலர்களை செட் செய்துவிட்டு மகனை களத்தில் இறக்கினார்.

வரலாற்றில் முதல் மேட்ச் பிக்ஸிங் அதுதான்

மைதானத்தில் அவன் சிக்சராக அடித்து தூக்கினான், எல்லா பந்தும் சிக்ஸர் என்றால் எப்படி?

மைதானம் ஒருமாதிரி நமுட்டு சிர்ப்பு சிரிக்க மகராஜா எழுந்தார்

“மகனே யுவராஜா இனி சிக்ஸர் அடிக்காதே, தயவு செய்து அடிக்காதே” என கத்தினார்

அப்படி மோடியும் இனி விருது வேண்டாம் என உலக நாடுகளை பார்த்து கத்த போகின்றாரோ என்னமோ?

நாட்டுக்கு நல்லது

இந்த வருடம் இந்த குருத்து ஞாயிறு பெரிய வெள்ளி எல்லாம் தேர்தலையொட்டி வருகின்றது

பொன் ராதாகிருஷ்ணன் குருத்தோலையுடன் “ஓசான்னா..” பாடபோகின்றார்

அப்படியே பெரிய வியாழன் கிறிஸ்தவ சடங்கான பாதம் கழுவுதல் நிகழ்ச்சியில் 12 பேருக்கு என்ன 12 ஆயிரம் பேருக்கும் பாதம் கழுவி முத்தி செய்ய அவர் ரெடி

தமிழிசை அக்கா முக்காடு இட்டுகொண்டு “பொறுத்தருளும் கர்த்தாவே எனது ஜனத்தின் பாவங்களை பொறுத்தருளும்” என சிலுவை பாதை சொல்ல போகின்றது

“உம் ரத்ததால் சிகப்பு தாமரை மலரட்டும் இயேசப்பா..” என கேட்டுகொண்டே பிரார்திப்பார்

எவ்வளவு உருக்கமான காட்சிகள்?

இந்த யழவு தேர்தல் ரம்ஜானை ஒட்டி வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் தெரியுமா?

இவர்கள் அவர்களுடன் நோன்பிருப்பார்கள் இரவில் ஆடுவெட்டி சமைத்து கொடுப்பார்கள், நோன்பு கஞ்சி எல்லாம் காய்ப்பார்கள்

தேர்தல் கமிஷன் இதை குறித்து கொள்வது நாட்டுக்கு நல்லது

வழக்கம் போல காணவே இல்லை..

ராஜிவ் கொலைவழக்கு பற்றி ரகோத்தமன் எழுதிய புத்தகத்தில் இப்படி ஒரு காட்சி வரும்

இந்த சின்ன சாந்தன் என்பவன் இப்படி சொல்வான்

“அய்யா அவர் யாரென்று தெரியாது வெள்ளை ஆடை அணிந்து வருவார், அவரும் சிவராசனும் வை.கோ அடுத்த முதலமைச்சர் என்பதையும் அவர் முதலமைச்சர் ஆனபின் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சீரியசாக பேசிகொண்டிருப்பார்கள்”

கவனியுங்கள் சீரியசாக பேசுவார்களாம்

என்னது வைகோ முதலமைச்சராவார் என அந்த புலிகூட்டம் அவ்வளவு நம்பியதா , 
பின்னர் ஏன் மொத்தமாக அழிந்துபோக மாட்டார்கள்?

வைகோவினை எல்லாம் நம்பி ஒரு உலகை எதிர்த்த போராட்டத்தை நடத்திய புலிகள் எவ்வளவு அறிவு கெட்டவர்களாக இருந்திருப்பார்கள்?

இப்படி அறிவுகெட்ட ஒரு கூட்டத்திடம் ஈழம் சிக்காமல் சென்றதற்கு ராஜபக்சேவுக்கு ஈழமக்கள் நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும்…

இந்த தேர்தலிலும் வைகோ என்பவரை வழக்கம் போல காணவே இல்லை..

தேர்தல் துளிகள் 12/04/2019(1)

ஆக’ ன்னு சொல்லாம அடுத்த வார்த்தை ஸ்டாலினை பேச சொல்லுங்க பார்ப்போம் : சீமான்

ராசா, அவர் உளறினாலும் உண்மையினை உளறுகின்றார்

நீர் கத்தி கத்தி பேசினாலும் உண்மை என்பது கொஞ்சமும் இல்லை

அவர் ஆக என பேசுவது இருக்கட்டும், நீர் ஒரு உண்மையினை பேசிவிடும் பார்க்கலாம்

என்னதான் தமிழகத்தில் தாமரை மலராது கருகும் என திமுகவினர் சொல்லிகொண்டே இருந்தாலும், கலைஞர் வீட்டில் ஏற்கனவே தாமரை மலர்ந்துவிட்டது

ஆம் முக ஸ்டாலின் மகளின் பெயர் “செந்தாமரை”

அக்கா தமிழிசை இதை எப்படி மறந்தார்?

தூத்துகுடி கருவாட்டு சந்தையில் நெத்திலி கருவாடு விற்றுகொண்டிருக்கும் அக்கா தமிழிசைக்கு தகவல் சொல்லியாயிற்று

திமுக பேனரில் பெரியார் இடத்தை பிடித்துகொண்ட கண்ணன் உண்மையிலே கெட்டிக்காரன்

இனி பெரியார் சிலைகளை இடித்துவிட்டு கண்ணன் சிலையினை திமுகவினரே வைத்துவிடுவார்கள் போல..

அப்பொழுது ஸ்டாலின் பெயர் பரந்தாமன் எனவும் அவர் மகனின் பெயர் உதய கிருஷ்ணா எனவும் மாற்றம் பெறும்

ஆம் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சியே அல்ல, கிருஷ்ணனை அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்

அதனால்தான் “கோபால”புரத்தில் குடியேறினார் கலைஞர், அதுவும் வேணுகோபாலசாமி கோவில் அருகிலே குடியேறினார்

இனியாவது நம்பி தொலையுங்கள்

“சுவாமி நான் பாவியாய் இருக்கின்றேன் என் பாவங்களுக்காக மன்றாடும்

மகனே நீ பாவியாய் மட்டுமல்ல காவியாகவும் இருக்கின்றாய்

சுவாமி என் பாவங்களுக்காகவும் தேர்தலில் நான் வெற்றி பெறவும் ஜெபம் செய்யுங்கள்

கர்த்தரே ஏப்ரல் 18 வரை கிறிஸ்தவனாய் இருக்கும் இவரைமன்னிப்பீராக, அப்படியே வேறுவழியின்றி பல கல்லூரிகளையும் பள்ளிகளையும் இவர்கள் அனுமதியின்றி நடத்தமுடியா காரணத்தால் இவர்கள் பின்னால் செல்லும் எங்களையும் மன்னியுங்கள் தேவனே…”

“தம்பி சித்திரை 1 வருது, “தமிழ்புத்தாண்டு வாழ்த்து” என சொல்லி சிக்கி கொள்ளாமல் இரும், நமக்கு தை 1 தான் புத்தாண்டு. இதை நீர் சொல்கின்றீரா? நான் சொல்லட்டுமா?

ஒரு புல்லும் புடுங்க வேண்டாம், தேர்தல் முடியும் வரை வெளிநாடு போய் தொலையும் , என் மனைவி கண்ணில் பட்டீரென்றால் தொலைத்துவிடுவார் ஜாக்கிரதை”

ராஜராஜ சோழனின் கல்லறை

ராஜராஜ சோழனின் கல்லறையினை கண்டாயிற்று என ஒரு கூட்டம் சொல்லிகொண்டிருக்க, நீதிமன்றமும் அதற்கான ஆய்வு உத்தரவினை கொடுத்துவிட்டது

இதில் சில விஷயம் கவனிக்கதக்கது

தமிழருக்கு உடலை எரிக்கும் வழக்கம் உண்டு, புதைக்கும் வழக்கம் இல்லை என சொன்னால், ஆதிச்சநல்லூரில் தாழி கிடைக்கவில்லையா என்பார்கள்

ஆதிச்சநல்லூர் நாகரீகம் பழமையானது, காலத்தால் முந்தையது. காலம் மாற மாற பல மாற்றங்கள் வந்தன , பல நம்பிக்கைகள் வாழ்க்கை சடங்குகளை மாற்றின‌

பிற்கால தமிழகம் சோழர்காலத்தில் மாறி இருந்தது, அங்கு உடலை எரிக்கும் பழக்கம் இருந்ததை பட்டினத்தார் தன் பாடலிலே, அதாவது அன்னைக்கு கொள்ளிவைத்த பாடலிலே இப்படி சொல்கின்றார்

”முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே

வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை”

அர்த்தம் என்னவென்றால் முப்புரம் சிவனால் எரிந்தது, தென்னிலங்கை அனுமனால் எரிந்தது, என் வயிறு அன்னையால் எரிகின்றது, என் அன்னைக்கு நானே தீ மூட்டுகின்றேனே

என்னை காத்து நின்ற அன்னை கை எரிகின்றதே , சாம்பல் ஆகின்றதே என புலம்புகின்றார்

கோவணம் உடுத்தி சாமியாராய் போனாலும் தன் தாய் இறந்த இடத்தில் அப்பாசத்தில் பட்டினத்தார் இப்படித்தான் உருகி நிற்கின்றார், அவரின் தாய்பாசம் அப்படி இருந்திருக்கின்றது

பட்டினத்தார் சோழவம்சம் பெரும் வாழ்வு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது

தமிழர் உடலை எரித்தனர் என்பதற்கு இதுபோன்ற ஏராளமான ஆதாரம் உண்டு

சிவநடனம் என்பதே மையானத்தில் சாம்பலை பூசி ஆடுவது என்ற அளவில் இருந்தது, சிவன் ஆடினாரா இல்லையா என்பது அல்ல பிரச்சினை, எரித்த சாம்பல் இருந்தது என்பது கவனிக்க வேண்டியது

ஆனால் சித்தர்கள் என சொல்லபட்டவர்களை எரிக்கவில்லை, காரணம் அவர்கள் அஷ்டமா சித்து கற்றவர்கள் எந்நேரமும் உடலில் உயிர் வரலாம் என்பதற்காக அப்படியே புதைத்தார்கள்

வாழும் காலத்தில் சித்தர்கள் காட்டிய விளையாட்டும் அப்படி, கூடுவிட்டு கூடுபாய்தல் எல்லாம் அக்கலை

இதனால் சித்தர்களுக்கு சமாதி உண்டே தவிர, மற்ற யாருக்கும் இல்லை. பட்டினத்தார் பாடல் மட்டுமல்ல ஏராளமான பாடலை சொல்ல முடியும்

கொள்ளி என்றால் கொள்ளுதல் என பொருள், காவேரி வெள்ளத்தை திருப்பிகொள்ளும் இடம் இன்றுவரை கொள்ளிடம் என்றே அழைக்கபடுகின்றது

அப்படியாக சுடுகாட்டு சடலம் தீகொள்ளும் நிகழ்வு கொள்ளி ஆனது, இறுதியில் கொள்ளி என்றால் சடலத்தில் தீவைப்பது என்றே நிலைத்துவிட்டது

இப்படியான வார்த்தைகளும், இன்னும் ஏராளமான ஆதாரங்களும் இலக்கிய பாடல்களும், அக்கால தமிழர் வாழ்வினை சொல்லும் பல ஆவணங்களும் சொல்வது தமிழர் உடல் எரிக்கபட்டது என்பதே

தமிழகம் மட்டுமல்ல, காசி முதல் கன்னியாகுமரி வரை ஒரே நம்பிக்கையுடன் வாழ்ந்த இத்தேசத்தில் சடலம் எரிக்கவே பட்டது

அதனால் ராஜராஜன் சமாதி, பாண்டியன் சமாதி இன்னபிற மன்னாதி மன்னர்கள் சமாதி , கம்பன் சமாதி , வள்ளுவன் சமாதி எல்லாம் எங்கே?என தேடிகொண்டே இருக்க வேண்டியதுதான்

எமது சந்தேகமெல்லாம், தமிழக முறைப்படி, சைவ சமய முறைப்படி, அந்நாட்களில் உடலை எரித்துவிடுவார்கள். தொன்றுதொட்டு இன்றுவரை வரும் மரபு அது. பின் எப்படி அவரை புதைத்திருக்க முடியும்?? நிச்சயமாக வாய்ப்பு இல்லை.

அப்படி அது அவரின் சமாதி என்றால், மற்ற அரசர்கள் சமாதி எல்லாம் எங்கே??? அன்றைய காலத்து தமிழ் மன்னர்களுக்கு அரண்மனையே கிடையாது. கோயிலில் தங்கி அங்கே வாழ்ந்து முடிந்தவர்கள்.

இன்னொன்று காலத்தால் மறைந்த சோழன் பெயரை, கல்வெட்டுகளை படித்து தமிழருக்கு அவர் பெயரை சொல்லிதந்ததே ஒரு ஜெர்மானியர்தான். அப்படி இருந்ததுதான் தமிழக தஞ்சை நிலை..