அந்த விஷயம்தான் நெருடுகின்றது

அந்த விஷயம்தான் நெருடுகின்றது

விஸ்வரூபம் பட சர்ச்சையின் பொழுது கையில் காசு இல்லை நடுதெருவில் நிற்கின்றேன் நான் என புலம்பியவர் கமலஹாசன்

பெரும் பணம் இருந்தால் மருதநாயகம் படமெடுப்பேன் என சொல்லி திரிந்தவர்

நான் ஒரு சினிமா விவசாயி, சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் முதலீடு செய்பவன், விவசாயி போலவே ஆண்டி என பகிரங்கமாக சொன்னவர் அவர்

திடீரென இவ்வளவு பணம் இவரிடம் வந்தது எப்படி? டிவிக்களில் இடையில்லாமல் விளம்பரம் செய்ய பலநூறு கோடி வந்த வழி எது?

இதை எல்லாம் விசாரிக்க போவது யார்?

மய்யத்தை தோண்டினால் பல புதையல்கள் இருக்கலாம், ஆனால் ஏதோ ஒரு பூதம் புதையலை காத்து நிற்கும் பொழுது அது எப்படி சாத்தியம்?

பணமழை கொட்டும் நாள் நெருங்கியாயிற்று

கூடிவந்த தேர்தல் மேகம் பணமழை கொட்டும் நாள் நெருங்கியாயிற்று

ஆங்காங்கே சில துளிகள் விழதொடங்கிவிட்டன‌

இன்னும் 12 மணிநேரத்தில் கனத்த பணமழை பெய்யும் என தேர்தல் கமிஷன் நம்புவதால் அது கடும் விழிப்புடன் தயாராக இருக்கின்றது

இப்போதைக்கு அதிமுக அமமுக போன்றவைதான் மழை கொடுக்கும் மேகங்கள்.

பல குளங்களும் ஆறுகளும் ஏன் சிப்பிகள் கூட அவற்றின் துளி நீருக்காக காத்து கொண்டிருக்கின்றது

திமுக மேகம் வெற்றி நமக்கே என நம்பிகொண்டு துளி மழையும் இழக்கவில்லை என்கின்றன செய்திகள்

வெற்றி சுத்தமாக நமக்கல்ல என்பதால் பாஜகவும் வெண் காவி மேகமாகவே கடந்து செல்கின்றது

இந்தியர் மனநிலையினை மிக சரியாக கணித்திருக்கின்றான் சர்ச்சில்

இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கவே கூடாது என்ற கருத்தில் உறுதியாய் இருந்தார் சர்ச்சில்

ஒருவேளை பிரிட்டனை பிடித்தாலும் இந்தியாவுக்கு சுதந்திரமே இல்லை என கூட்டாளிகளிடம் சொல்லிகொண்டிருந்தான் ஹிட்லர்

இந்தியாவில் புரட்சி வெடிக்கும் பொதுவுடமை மலரும் என்றெல்லாம் பகல் கனவு காணமாட்டேன், இந்தியாவுக்கு எதுவுமே சரிவராது என்றார் ஜோசப் ஸ்டாலின்

இதில் சர்ச்சிலிடம் மட்டும் ஒரு பேட்டியில் ஏன் இந்திய சுதந்திரத்தை மறுக்கின்றீர்கள் என குறிப்பிட்டு கேட்க அவர் பதில் இப்படி சொன்னார்

“இந்தியர்களுக்கு தேவை முடியாட்சி, அவர்களுக்கு ஜனநாயகம் தெரியாது அல்லது புரியாது

நீங்கள் ஜனநாயகத்தை கொடுத்தாலும் அதை காலில் போட்டு மிதிப்பார்களே தவிர அதை நல்லவிதத்தில் பயன்படுத்த அவர்களுக்கு தெரியாது

சுதந்திரம் கொடுத்தால் எவ்வளவு கூத்துக்களை அரங்கேற்றுவார்கள் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது”

இந்தியர் மனநிலையினை மிக சரியாக கணித்திருக்கின்றான் சர்ச்சில்

ராஜாஜி எதற்கு பயந்தாரோ அது நடந்தே விட்டது

“சுதந்திரம் வாங்குவது பெரிதல்ல, நாம் இந்த நாட்டை நாம் ஆளும்பொழுது கடுமையான சட்டமும், பெரும் கட்டுப்பாட்டுக்குள் ஆட்சிநடத்தும் ஆட்சியாளர்களும் நமக்கு தேவை.

இல்லை என்றால் கொஞ்சநாளில் இந்த சுதந்திர போராட்ட கஷ்டம் எல்லாம் நம் மக்களுக்கு மறக்கும், தியாகிகள் செல்லாகாசாகிவிடுவர்

அரசியல் அயோக்கியர்கள் கையில் சிக்கும், எங்கும் பிரிவினைவாதமும், லஞ்சமும், ஊழலும், மக்கள் நலம் காக்காத‌ அரசுகளின் சுயநலமும் பெருக்கெடுக்கும்.

அப்பொழுது வெள்ளையன் ஆட்சி எவ்வளவு பரவாயில்லை என மக்கள் வாய்விட்டுசொல்லும் காலம் வரும்,

அதனால்தான் சொல்கின்றேன் சுதந்திர இந்தியா பற்றியும், அதன் ஆட்சிமுறை பற்றியும் பெரும் திட்டமில்லாமல் சுதந்திரம் வாங்குவது மகா ஆபத்தானது

காலம் காலமாக மன்னராட்சியிலும் பின் பிரிட்டனிடனும் அடிமையாக வாழும் இந்நாட்டு மக்களுக்கு மக்களாட்சியின் மகத்துவம் புரியாது, இவர்கள் நிச்சயம் அரசியல் அடிமைகளாக மாற வாய்ப்புக்கள் அதிகம்

கஷ்டபட்டு நாம் அமைக்கும் மக்களாட்சியினை இவர்கள் மிக சுலபமாக மன்னராட்சிக்கு திருப்பிவிடும் ஆபத்து உண்டு…”

1946ல் ராஜாஜி இப்படி சொல்லியிருக்கின்றார்

எவ்வளவு அழகான தீர்க்கதரிசனம், மேன்மக்கள் என்றும் மேன்மக்களே

துரதிருஷ்டவசமாக ராஜாஜி எதற்கு பயந்தாரோ அது நடந்தே விட்டது.

மாபெரும் மர்மம்

பாஜக ஆட்சியின் கொடுமையிலே பெரும் கொடுமை இந்த நிர்மலா தேவி

அவர் மேல் ஒரு புகார் என்றதும் ஆளுநர் ஓடிவந்து ஏன் விசாரித்து அந்த அறிக்கை ஏன் ரகசியமாக காக்கபட வேண்டும்?

இன்றுவரை அந்த அறிக்கை வெளியிடபடவில்லை ஆச்சரியமாக கோர்ட்டில் கூட சமர்பிக்கபடவில்லை

இதுதான் மாபெரும் மர்மம்

இப்படி ஏகபட்ட மர்மங்களின் முகமூடி பாஜக ஆட்சி என்பதுதான் மாபெரும் அச்சம்..

ஏகபட்ட மர்மங்கள் இவர்கள் ஆட்சியில் இப்படி உண்டு, அதுதான் அவர்கள் மேல் சந்தேக பார்வையினை விழ வைக்கின்றது

சலாமு அலைக்கும் , சவுதி அரசரா?

சலாமு அலைக்கும் , சவுதி அரசரா?

அலைக்கும் சலாம் , ஸ்பீக்கிங்

மன்னர் சமூகத்துக்கு வணக்கமுங்க, இங்க தேர்தல் நேரம் காரும் வண்டியுமா பறக்குதுங்க.

அதுக்கென்ன?

என்னவா? எவ்வளவு பெட்ரோல் டீசல் உங்களுக்கு விற்பனையாகியிருக்கும் 4 மடங்கு பெருகியிருக்காது?

ஆமா ஆமா சொல்லுங்க‌

எல்லாம் என்னாலதானுங்க, என்னை தோற்கடிக்கணும்னு எதிர்கட்சியும் ஜெயிக்கணும்னு நானும் விழுந்து விழுந்து ஓடித்தான் உங்களுக்கு இவ்வளவு சேல்ஸ்

இப்போ என்ன சொல்ல வர்ரீங்க?

மன்னர் சமூகம் சவுதில ஏதும் உயரிய விருது இருந்தா தேர்தல் முடியறதுக்குள்ள எனக்கு கொடுத்திட்டீங்கன்னா ரொம்ப உபயோகமா இருக்கும்

விசாரிக்கிறேன்

மன்னர் சமூகம் அந்த இம்ரான்கான்கிட்ட விசாரிச்சாலே போதுமுங்க..உடனே கொடுத்துருவீங்க‌, இன்ஷா அல்லாஹ்”

பண மழை

இப்போதைய பண மழையில் நனைந்து கொண்டிருப்பது இந்த 100 நாள் வேலைதிட்ட பணியாளர்கள்

வழக்கமாக என்ன செய்வார்கள் என்றால் சம்பளம் வாங்குவதை தவிர ஒன்றுமே செய்யமாட்டார்கள், அதிலும் இப்பொழுது கூடுதல் மகிழ்ச்சி

அதாவது சாலையோர சீமை உடைமரங்கள் அடியிலோ இல்லை பனைமரத்து நிழலிலோ அவர்கள் பட்டினத்தார் போல அமர்ந்திருப்பதை கண்டால் டாட்டா சுமோவும் , இன்னும் பல வாகனங்களும் ஹரி படத்தில் வருவது போல சுற்றிகொள்கின்றதாம்

அதிலிருக்கும் நபர்கள் ஓடிவந்து அள்ளி கொடுத்துவிட்டு பறந்துவிடுவார்களாம்

அவர்கள் வந்து சென்றபின் அடுத்த கோஷ்டி வருமாம்

இதை கவனித்த பணியாளர்கள், இடம் மாற்றி ஒய்வெடுத்து அடுத்த ரவுண்டு கலெக்சன் அடிக்கின்றார்களாம்

அரசியல்வாதி போலவே அறிவுகெட்ட அவர்களின் மடையர்களும் கொடுத்தவர்களுக்கே மறுபடி மறுபடி கொடுக்கின்றார்களாம்

“அட அட இந்த தமிழகம் எவ்வளவு இனிமையான மாநிலம் தெரியுமா?..” என புன்னகைத்தபடி ஆனந்தமாக ஓய்வெடுக்கின்றார்கள் 100 நாள் வேலைதிட்ட மக்கள்

வாக்காளர்களுக்கு கூடுதல் வசதியாயிற்று

ஆயிரம் ரூபாயினை ஒழித்து 2 ஆயிரம் ரூபாயினை கொண்டு வந்தவர் மோடி என்பது வாக்காளர்களுக்கு கூடுதல் வசதியாயிற்று

இதுவரை திட்டி கொண்டிருந்தவர்களுக்கு தேர்தல் நேரத்தில் மோடி செய்திருக்கும் மாபெரும் நல்ல விஷயம் புரிகின்றது

கொடுத்தால் பெரிய நோட்டை கொடு என மிரட்டி வாங்கிகொண்டிருக்கின்றது பொதுஜனம்

அப்பொழுதும் மோடியினை திட்டிகொண்டே இரண்டாயிரம் ரூபாய் நோட்டை நீட்டுகின்றது அந்த கோஷ்டி

அவர்கள் நகர்ந்தபின் “மோடிக்கு வாக்களித்தால் 5 ஆயிரம் ரூபாய் நோட்டு வரும், உங்களுக்குத்தான் நல்லது, அடுத்த தேர்தலை எண்ணி பாருங்கள்” என செலவே இல்லாமல் விளம்பரம் தேடுகின்றது பாஜக.

பணம் கொடுத்தவனுக்கு வோட்டா?

இல்லை ஆயிரத்தை இப்பொழுது இரண்டாயிரமாக மாற்றி அடுத்தமுறை 5 ஆயிரமாக நோட்டை மாற்றி பெரும் வழி செய்பவனுக்கு வோட்டா என தலையினை பிய்த்து கொள்கின்றது வாக்கள குடி

என்ன இருந்தாலும் நன்றியுள்ள தமிழ் மனம் அல்லவா? அது திகைத்து நிற்கின்றது.

“எப்படி வச்சார் பாத்தியால ஆப்பு, மோடில , ராஜ தந்திரில.. ..” என சொல்லி சிலிர்த்துகொள்கின்றது தென்னக பாஜக தரப்பு

மருத்துமனையில் சசி தரூர்

துலாபாரம் செலுத்த சென்று உச்சிமண்டையில் அடிவாங்கி மருத்துமனையில் கிடக்கின்றார் சசி தரூர்

அவர் காங்கிரசின் மிகபெரும் பிம்பம். மன்மோகன், ப.சி வரிசையில் வரும் பெரும் அடையாளம்

அவரை காண ராகுலும் செல்லவில்லை பிரியங்காவும் செல்லவில்லை

ஆனால் நிர்மலா சீத்தாராமன் ஓடோடி சென்றிருக்கின்றார்

இதுபற்றி நெகிழ்ந்த தரூர், நிர்மலா பெரும் நாகரீகத்தின் அடையாளம் என உருகியிருக்கின்றார்

இந்த நாகரீகம் வளரட்டும், நாடு செழிக்கட்டும்

(அதெல்லாம் இருக்கட்டும், நிர்மலா தமிழக பிரச்சாரத்திற்கு கூட வராமல் சுற்றும் மர்மம்தான் என்ன?

அதை பற்றி நாம் கேட்க கூடாது)

யாருக்கு வாக்கு?

இந்த தேர்தல் களத்தில் தமிழகத்தில் காங்கிரசுக்கு வாக்களித்தால் திமுகவுக்குத்தான் லாபம்

பாஜகவுக்கு வாக்களித்தால் அதிமுகவுக்குத்தான் லாபம்

இரண்டுமே சரியில்லை, ஒன்று ஊழல் இன்னொன்று ஊழலுக்கு காத்திருப்பது அவ்வளவுதான் விஷயம்

மீதி இருப்பவர்களை கவனித்தால் இந்தியாவினை விட்டே கிளம்ப சொல்லும் மனம்

இதில் எங்கிருந்து வாக்கு செலுத்துவது?

அகில இந்திய அளவில் தேசிய பாதுகாப்பு என கருதினால் பாஜகதான் தேர்வு, மிக நல்ல பாதுகாப்பினை கட்டி எழுப்ப பாடுபடுகின்றார்கள்

ஆனால் மற்ற விஷயங்களில் கடும் சறுக்கல். ராமர் கோவில் மாட்டுகறி இன்னும் பல அராஜகங்களுக்கு அவர்கள் மவுன துணை போவதை யாரும் ரசிக்க முடியாது

காங்கிரஸ் நல்ல கட்சிதான் ஆனால் வலுவாக இல்லை. நிச்சயம் கூட்டணியாக வந்து அமர்வார்கள், மந்திரி சபை வேட்டை நாய்களிடம் சிக்கிய மானாக படாத பாடு படும்

தனிமெஜாரிட்டியுடன் காங்கிரஸ் வந்தால் நல்லது, அவர்கள் ஆட்சியில் ஓரளவு பொருளாதார திட்டங்கள் வகுக்கபடும்

ஆக இரு கட்சிக்கும் வாக்களிக்க வேண்டும், தலைவி வேறு காங்கிரசில் இருக்கின்றார்

இருப்பதோ ஒரு வோட்டு நான் என்ன செய்வேன்?

“இரண்டு வோட்டு வேண்டும்
தேர்தல் கமிஷனிடம் கேட்பேன்.

பாஜக காங்கிரஸ் இரண்டானால்
திமுக அதிமுக‌ இரண்டானால்
வோட்டுக்கு 2 ஆயிரம் என்றானால்
வோட்டு ஒன்று போதாதே……”