நன்றி இருந்தால் விரல் அங்குதான் நீளும்..

இந்த மோனாலிசா ஓவியம் புகழ்பெற்றது, ஒருமுறை அது திருடுபோயிற்று

ஆனானும் அந்த ஓவியம் இருந்த இடத்தை பார்க்க கூட்டம் அப்படி அலைமோதிற்று, ஆம் அந்த அற்புத ஓவியம் இருந்த இடத்தை ஓடி ஓடி வந்து பார்த்தார்கள்

பெரும் அடையாளம் நின்ற இடத்தை கூட மறக்கா உலகமிது

அப்படியாக தலைவி களத்தில் இல்லை என்றாலும் காங்கிரஸ்க்கு வாக்களிக்க வேண்டியது நம் கடமை

அது போக இலவச மின்சாரம் பெற்றுகொண்டிருக்கும் விவசாயியாக எந்நாளும் திமுகவுக்கு நன்றிகடன் உண்டு

பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்து உடன்பிறப்புக்கும் சரிபங்கு சொத்துகொடுக்க வைத்ததை தவிர அவர்கள் மேல் ஒரு கோபமுமில்லை

அதனால் என்ன?

அந்த நன்றிக்காக சகோதரி வோட்டும், பெண் பிள்ளைமேல் அதீத பாசம் கொண்ட தாயின் வோட்டும் அவர்களுக்கே..

அவர்கள் என்ன?

வாக்களர்கள் பெண்களோ, மாணவர்களோ , விவசாயியோ, அரசு பணியாளரோ, பத்திரிகையோ, சினிமாவோ எத்துறையில் இருந்தாலும் கொஞ்சம் நிதானமாக சிந்தித்தால் அவர்கள் விரல் தானாக திமுகவுக்கே வாக்களிக்கும்

ஆம் நன்றி இருந்தால் விரல் அங்குதான் நீளும்..

சம உரிமை இருக்கின்றது

இது இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு சந்தேகமில்லை ஆனால் எல்லா மத மக்களும் வாழவேண்டிய நாடு

எல்லா மக்களுக்கும் இந்த நாட்டில் சம உரிமை இருக்கின்றது

மதரீதியான பாகுபாடுகள் இங்கு சிக்கலையே உருவாக்கும், சீக்கிய சமூகத்திற்கு அன்றைய காங்கிரஸ் செய்த சில வலியான சம்பவங்கள் தீரா சோகத்தோடு முடிந்தன‌

காஷ்மீரிலும் அதைத்தான் செய்கின்றோம், இஸ்லாமியர் இந்நாட்டில் பாதுகாப்பாக அமைதியாக எல்லோரையும் போல் வாழலாம் எனும் நம்பிக்கையினை உண்டாக்க வேண்டுமே அன்றி ஆயுதபலத்தால் அவர்களை அடக்கிவிட முடியாது

அதுவும் பாபர் மசூதியினை இடித்துபோட்ட கட்சியின் ஆட்சியில் அவர்கள் எங்களம் நம்பிக்கையோடு வாழ்வர்?

எல்லா மதமும் இனமும் வாழும் இந்த அற்புதமான நாட்டில் மதமும் ஜாதியும் அரசியலுக்கு பயன்படுவது ஆபத்து

இந்த உலகினை உற்று பார்த்தால் மத பீடத்தின் ஆட்சி நடக்கும் எந்த நாடும் உருபட்டதாக சரித்திரமே இல்லை

பெருவாரியான மக்கள் பின்பற்றும் மதம் என்பதற்காக அது சார்ந்து ஆட்சி நடத்தும் நாடுகள் நாசமாயிருக்கின்றன எண்ணெய்வள நாடுகளை தவிர

பெரும் வளம் இல்லா தேசத்தில் அமைதியும் சகிப்புதன்மையும் மத துவேஷமில்லா ஒற்றுமையான உழைப்பே பெரும் முன்னேற்றம் கொண்டுவரும்.

உலக நாட்டு நடப்புகள் சொல்வது அதுதான், ஒரு தேசம் மதவாதிகள் கையில் சிக்கினால் அது முன்னேறுவது மாபெரும் கடினம்

காரணம் எல்லா மதமும் காலத்தால் முற்பட்டவை, அந்த கருத்துக்களை இன்றைய காலத்திற்கு ஒட்டமுடியாது, மீறி அழுத்தினால் கற்காலத்திற்கு திரும்பிவிடுவோம்

ஜப்பான் முதல் அமெரிக்கா வரை இப்படித்தான் சிந்தித்து மதத்தை கட்டுக்குள் வைத்திருக்கின்றன‌

இந்து மதத்தின் ஒப்பற்ற ஞானி சுவாமி விவேகானந்தர் சொன்னதுதான்

“இந்நாட்டிற்கு தேவை மதம் அல்ல , அது இங்க நிறையவே இருக்கின்றது. அதன் தத்துவங்களும் வழிபாடும் போதுமான அளவு இருக்கின்றன‌.

இந்நாட்டிற்கு தேவை கல்வியும் அறிவும் சகிப்புதன்மையும் சிந்தனையும் கொண்ட இளம் தலைமுறை, அறிவார்ந்த இளைஞர்களை திரட்டி நாட்டை செழிக்க செய்யும் நல்ல எழுச்சி

அறியாமை அகலவேண்டும், இந்தியர் தன்னை உணர வேண்டும், மாபெரும் ஒற்றுமையில் இத்தேசம் செழிக்க வேண்டும்

மதம் இன்றைய தேவை அல்ல, மாறாக அறியாமை நீங்கிய அறிவுடை சமூகமும், சிந்திக்க தெரிந்த தலைமுறையும் நமது அவசிய தேவை

அதை உருவாக்குவதே நம் கடமையும், தேச சேவையுமாகும்”

அந்த இந்துமதத்தின் ஞான ஒளி சொன்ன வார்த்தைகள் உங்கள் காதோரம் ஒலிக்க வாக்கு சாவடிக்கு செல்லுங்கள்

ஆனால் நடந்தது என்ன?

பெரிதும் எதிர்பார்க்கபட்டார் மோடி, தேசம் அவரை கொண்டாடி ஆட்சியில் வைத்தது, ஆனால் நடந்தது என்ன?

ஆரம்பத்திலே சொதப்பினார்கள், ரம்ஜான் வாழ்த்து சொல்ல கூட பிரதமரால் முடியவில்லை

தனியாக மன் கீ பாத் என புலம்பினாரே தவிர பத்திரிகையாளரை சந்தித்து ஒரு செய்தி சொல்ல நிமிடமில்லை

உலகெல்லாம் ஓடினார் மோடி நல்லது தேசத்துக்காக செல்லலாம் ஆனால் ஒரு நிபுணர் குழு செல்ல வேண்டிய இடத்திற்கெல்லாம் பாரத பிரதமர் சென்று பல்லிளித்தது ஒருவித நெருடலையே கொடுத்தது

கருப்பு பண ஒழிப்பு என கொண்டுவந்தார்கள் நல்லது, ஆனால் அதனால் பொதுமக்கள் படபோகும் பாடுபற்றியோ அவர்களின் பரிதவிப்பு பற்றியோ கிஞ்சித்தும் கவலையில்லை

கச்சா எண்ணெய் விலை தரைமட்டில் கிடந்தாலும் இவர்களுக்கு விலைகுறைக்க மனமில்லை, அது ஏன் என்றும் தெரியவில்லை

அய்யாகண்ணு எனும் கோமாளியினை விடுங்கள், மகராஷ்ட்ர விவசாயிகள் கால் தேய தேய நடந்தாலும் அரசு கண்டுகொள்ளவில்லை

ஜிஎஸ்டியில் குழப்பமோ குழப்பம், அது கத்திமேல் நடப்பது போன்ற விஷயம் ஆனால் குழப்பிய குழப்பில் தொழில்துறை நசுங்கியது

அதெல்லாம் கூட நிர்வாக விஷயம் என்றாலும் பாஜக ஆட்சி எனும் பெயரில் அவர்களின் சில்லுண்டிகள் செய்த அட்டகாசம் கொஞ்சமல்ல‌

மாட்டுகறி சர்ச்சையும் அந்த கவுரி லங்கேஷ் போன்றோரின் கொலையும் சாதாரணம் அல்ல, அதற்கு அரசின் கனத்த மவுனம் பெரும் அதிர்ச்சி

எங்கும் எதிலும் ஒருவித மனோன்னத நிலை இருந்தது, யாருக்கு நாங்கள் பதில் சொல்லவேண்டும்? என்ற ஒரு இறுக்கம் இருந்தது

அந்த இறுமாப்பு தமிழகம் வரை வந்தது

ஆம் தமிழக பாஜகவில் அந்த இறுமாப்பு தெரிந்தது, வசமாக மத்திய அரசிடம் சிக்கிய அதிமுகவிலும் அது தெரிந்தது

ஜெயா சாவு மர்மத்தில் தெரிந்தது, மிக சரியாக சசிகலா முதல்வராகாமல் உள்ளே தள்ளுவதில் தெரிந்தது

மசூதி இடிப்பில் அத்வாணிக்கு தீர்ப்பே வராதாம் ஆனால் சசிகலாவுக்கு உடனே வருமாம்

நிர்மலா தேவி விவகாரத்தில் அந்த சந்தாணம் அறிக்கை என்ன ஆனது என்பதிலும் பாஜகவின் அராஜக மனப்பான்மை தெரிந்தது

எங்களை யார் என்ன செய்யமுடியும்? யாருக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டும் என்ற ஒருவித மேட்டுகுடி மன்ப்பான்மை பாஜக ஆட்சியில் அப்பட்டமாக தெரிந்தது

அது எங்கெல்லாம் எதிரொலித்தது?

நிச்சயம் திமுக அன்று செய்த கருப்புகொடி போராட்டமும் சர்வதேச பார்வையாளர் முன்னால் மோடி அவமானபடுத்தபட்டதும் கண்டிக்கதக்கது

அந்த இறுமாப்பில் முக ஸ்டாலினை உள்ளே பிடித்து போட்டு வைகோவினை மிசாவில் நொறுக்கியது போல் நொறுக்கி இருக்கலாம்

ஆனால் அதை செய்யாமல் தூத்துகுடியில் வேதாந்தாவிற்காக சுட்டது கால கொடுமை

கவனியுங்கள்

பாஜகவிடம் இருந்த அந்த மகோன்னத மனப்பான்மை தமிழக பாஜகவுக்கும் அதிமுக அரசுக்கும் எப்படி ஒட்டிகொண்டது என்பதற்கு தூத்துகுடி சூடே சாட்சி

கலவரம் என்றால் கலைக்க கட்டுபடுத்த ஆயிரம் வழி உண்டு கண்ணீர் புகை குண்டு முதல் ரப்பர் தோட்டா வரை ஏராளம்

சுடுவதும் காலுக்கு கீழ்தான் சுடவேண்டும்

ஆனால் அந்த கொடூர சூடு சாட்சாத் குஜராத் கலவர காட்சி சாயல்

மறக்க முடியுமா?

அந்த துப்பாக்கி சூட்டைவிட அதிர்ச்சி மோடியின் அமைதியும், அதிமுக பாஜகவின் அசால்ட் அறிக்கையும்

இதைத்தான் மனிதாபமானமுள்ளோர் கண்டித்தனர்

இன்னும் ஏராள சம்பவம் உண்டு, சொன்னால் சொல்லிகொண்டே இருக்கலாம்

நிச்சயம் கலைஞர், ஜெயா போன்றவர் இருந்தால் இக்கொடுமை நடந்திருக்காது

இந்த முக ஸ்டாலின் என்பவருக்கு 4 வார்த்தை பேச தெரியாமல் இருக்கலாம், பழமொழி சொதப்பலாம் மனிதர் எப்படியும் குழப்பி பேசுபவராக‌ இருக்கலாம்

ஆனால் பல அநீதிகளுக்கு எதிரான குரலை கொடுக்க முடியும், அந்த குரல் இங்கு பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தும்

அது அவரால் மட்டுமே சாத்தியம்

தேசிய அளவில் ராகுல் வலுவான இளம் அடையாளம், இந்திரா ராஜிவுக்கு பின் பாரதம் காணும் இளம் தலைவர்

சில இடங்களில் சொதப்பினாலும் நாட்டு மக்களை அரவணைத்து செல்லும் பெரும் மாண்பும் பக்குவமும் எளிமையும் அவரிடம் தெரிகின்றது

எல்லா பத்திரிகையாளர்களையும் தயக்கமின்றி சந்திப்தே மோடியினை விட அவரின் தகுதியினை சொல்கின்றது

இது தேசம் , எந்த பதவியும் யாருக்கும் மொத்த சொந்தம் அல்ல‌

ஆட்சி மாற வேண்டும் தகுதியுள்ளோர் வரவேண்டும்

அதைவிட மகா முக்கியம் தகுதியான அமைச்சரவை வேண்டும்

கடந்த 5 ஆண்டுகளாக நடக்கும் குழப்பங்களும் இன்னும் பல மிரட்டல்களும் இன்றோடு ஓயட்டும்

பாஜக அப்படி இறுமாப்பான ஆட்சி நடத்தவில்லை என யாராவது மல்லுகட்டினால் பதிலுக்கு ஏகபட்ட விஷயம் சொல்லலாம்

எனினும் மாபெரும் சாட்சி ரகுராம் ராஜன்

வல்லரசுகள் எல்லாம் தங்கள் வங்கிக்கு ஆலோசகராகும் தகுதி கொண்ட ஒருவரை இவர்கள் என்னபாடு படுத்தினார்கள் என்பது உங்களுக்கே தெரியும்

ரகுராம் ராஜன் என்ன? ராணுவ தளபதி ராவத்தின் புலம்பலும் பல விஷயங்களை மவுனமாக சொல்கின்றன‌

நாடு ஒருவித இறுக்கத்திலும் அச்சத்திலும் இருந்தது உண்மை

பெரும் அறிவாளிகளும் இன்னும் பல சிந்தனையாளர்களும் கொல்லபட்டும் மிரட்டபட்டும் அவமானபடுத்தபட்டும் வந்தது கடந்த 5 ஆண்டு கொடும் வரலாறு.

கடந்த 5 ஆண்டுகளை அசைபோட்டுவிட்டு வாக்கு பட்டனை தட்டுங்கள்..

ஏற்கனவே சில மாநிலங்களில் தட்டிவிட்டார்கள், மபி ராஜஸ்தான் என அவர்கள் சொல்லிவிட்டார்கள்

இது தமிழ்நாட்டு முறை, நமது முறை

தும்பிகளின் பகல் கனவு

ராஜபக்சே ஈழநாடு கொடுத்தாலும் கொடுக்கலாம் இந்த சைமன் தும்பிகளின் பகல் கனவு ஒரு நாளும் நடக்காது

முழு விவசாய நாடு என எதுவும் எங்கும் சாத்தியமில்லை

முதலில் அதை பரிசோதித்து கையினை சுட்டது சோவியத் யூனியன், முழு விவசாயம் நாட்டுக்கு உதவாது என்றபின்பே தொழில்துறைக்கு திரும்பினார்கள்

அடுத்து திருந்தியவன் சீனத்து மாவோ, கலாசார புரட்சி என நகர்புறத்தில் இருந்தவர்களை கிராமத்துக்கு விரட்டி அடித்து விவசாயம் பார்க்க வைத்தான்

ஆனால் நாடு நாசமாயிற்று, அதன் பின் விவசாயம் முழு பொருளாதாரதிற்கு உதவாது என உணர்ந்த மாவோ அமெரிக்க பக்கம் சாய்ந்தான்

அதன் பின் நடந்ததே சீன எழுச்சி

வியட்நாமிலும் தாய்லாந்திலும் விளையாத அரிசி இல்லை காய்கறி இல்லை ஆயினும் நாடுகள் முன்னேறவில்லை

தாய்லாந்து விவசாயத்துக்கு சொர்க்க பூமி, நடுதெருவிலும் நெல்விளையும் அற்புத பூமி ஆனால் என்னாயிற்று?

இன்னும் போதை பொருள் முதல் ஏகபட்ட விஷயங்களில் பணத்தை தேடுகின்றார்கள்

பர்மாவும் வங்கதேசமும் அரிசிக்கு புகழ்பெற்ற நாடுகள் அதுவும் பர்மா உலகிற்கே சோறுபோடும் தன்மையுள்ள நாடு

ஆனால் என்னாயிற்று?

இந்த தும்பிகள் நார்வே பால் உற்பத்தி பார், ஹாலந்தின் உருளை கிழங்கைபார் என கத்துமே தவிர நார்வே ஹாலந்து எல்லாம் ஐரோப்பிய யூனியன் நாடுகள் என்பதையோ அங்கு உற்பத்தியாகும் நவீன கருவிகள் பற்றி எல்லாம் பேசாது

அல்லது தெரியாது

உலகை உற்று கவனியுங்கள், தொழில்துறையில் பெரும் பணம் கொட்டும் நாடுகள் அதனை கொண்டுதான் விவசாயத்தை காப்பாற்றுகின்றன‌

மாறாக விவசாய பணத்தை கொண்டு தொழில்துறையினை வளர்க்கவில்லை அது சாத்தியமுமில்லை

முழு விவசாயம் தக்காளி மட்பாண்டம் கருப்பட்டியில் வல்லரசு எல்லாம் இந்த இம்சைகள் கனவு காணும் விஷயம்

கொஞ்சமும் பொருளாதார அறிவோ பொறுப்பான பேச்சோ எதுவுமே இல்லை

அட தமிழக விவசாயிகளை காக்க எதற்கு அந்நியநாட்டு தீவிரவாதிபடம் என யாரும் இவர்களை கேட்க போவதுமில்லை

இந்த இம்சைகளை விட கமலஹாசன் எவ்வளவோ பரவாயில்லை

மய்யம் இந்த கொசுகூட்டத்துக்கு மருந்து அடித்தால் அவரை வரவேற்கலாம்

தோத்தாலும் ஜெயிச்சாலும்

அந்த குமரி அனந்தனின் பேச்சுக்கு 1960களில் அப்படி ஒரு மவுசு இருந்தது

இலக்கியமும் தமிழும் அவரின் நாவில் அப்படி கொட்டியது, சந்தேகமில்லை அண்ணாவுக்கு சரி நிகராக அவரை காங்கிரஸ் நிறுத்தியது

காமராஜரின் வலகரமாகவே அவர் இருந்தார்

மாற்று கட்சியாயினும் கலைஞரும் ராமசந்திரனும் அவரை கொண்டாடினர், கலைஞருக்கு அவர் மேல் தனி மரியாதை இருந்தது

காமராஜருக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கிய அனந்தன் ஒரு கட்டத்தில் ஒதுங்கியே விட்டார்

இப்பொழுது ஏன் அந்த கதை, விஷயம் இருக்கின்றது அதற்குள் நாம் கவுரவம் படத்தின் ஒரு காட்சியினை பார்க்க வேண்டும்.

படத்தில் சிங்கம் பெரியப்பா சிவாஜியிடம் மகன் சிவாஜி ஆசிவாங்க வருவார்

இருவரும் அடுத்தநாள் கோர்ட்டில் மோத இருப்பார்கள், இந்நிலையில் தான் வெல்ல ஆசீர்வதிக்கும்படி வந்து நிற்பார் சின்ன சிவாஜி

உணர்ச்சி பூர்வமான அந்த காட்சியில் உச்சத்தில் பெரிய சிவாஜி இப்படி சொல்வார்..

“டேய் டாமிட், நீ தோத்தாலும் ஜெயிச்சாலும் இரண்டுமே எனக்கு அவமானம்டா…”

தூத்துகுடி தேர்தலில் தமிழிசையினை பார்த்து இதே வசனத்தை மனமார சொல்லிகொண்டிருக்கின்றார் குமரி அனந்தன்

அம்மணி தோற்றாலும் வென்றாலும் அது அவருக்கு அவமானமே

“சொல்லி கொடுத்ததோ துரோணரின் கவுரவம்
அவர்மேல் தொடுத்ததே அர்சுனன் கவுரவம்..”

பலத்த ஆச்சரியங்களை கொடுக்கின்றது

தமிழக தேர்தல் களம் பலத்த ஆச்சரியங்களை கொடுக்கின்றது

முன்பெல்லாம் வாக்கு செலுத்த இவ்வளவு ஆர்வமும் கூட்டமும் வராது, கட்சிகாரர்கள் உழைப்பை பொறுத்தே கூட்டம் வரும்

இப்பொழுது அப்படி அல்ல மக்கள் விழித்துவிட்டார்கள்

எங்கெல்லாம் இருந்தோ தேர்தலுக்கு அலறி அடித்து வருகின்றார்கள்

3 நாள் விடுமுறை அல்ல விஷயம், வெறுப்பு வேறு எங்கோ இருக்கின்றது

ஜல்லிகட்டுக்கு பொங்கிய தமிழகம் போல ஏதோ பெரும் வன்மத்தில் களமிறங்குகின்றார்கள்

அலை அலையாக மக்கள் படையெடுப்பதை பார்த்தால் மிகபெரும் மவுனபுரட்சிக்கு தமிழகம் தயாராவது தெரிகின்றது

எடப்பாடியார் காசு கொடுத்துதான் பழம் வாங்கினார்

எடப்பாடியார் காசு கொடுத்துதான் பழம் வாங்கினார் : அதிமுகவினர் சத்தியம்

இதை நம்பித்தான் தீர வேண்டும்

காசு கொடுத்து நீதிபதி குமாரசாமி முதல் குப்பத்து சுப்பன் வோட்டுவரை வாங்கும் கட்சிக்காரர்கள் அவர்கள்

இன்னும் யார் யாரையோ காசுகொடுத்து வாங்கியவர்கள்.

அதுவும் தேர்தல் நேரத்தில் வோட்டுக்கு மிக சரியாக காசு கொடுப்பார்கள், வோட்டுக்கே கொடுக்கும் பொழுது வாழை பழத்திற்கு கொடுக்கமாட்டார்களா?

அதனால் பழனிச்சாமி பழத்திற்கு காசு கொடுத்தது சந்தேகத்திற்குஅப்பாற்பட்டது.