ஆனால் நடந்தது என்ன?

பெரிதும் எதிர்பார்க்கபட்டார் மோடி, தேசம் அவரை கொண்டாடி ஆட்சியில் வைத்தது, ஆனால் நடந்தது என்ன?

ஆரம்பத்திலே சொதப்பினார்கள், ரம்ஜான் வாழ்த்து சொல்ல கூட பிரதமரால் முடியவில்லை

தனியாக மன் கீ பாத் என புலம்பினாரே தவிர பத்திரிகையாளரை சந்தித்து ஒரு செய்தி சொல்ல நிமிடமில்லை

உலகெல்லாம் ஓடினார் மோடி நல்லது தேசத்துக்காக செல்லலாம் ஆனால் ஒரு நிபுணர் குழு செல்ல வேண்டிய இடத்திற்கெல்லாம் பாரத பிரதமர் சென்று பல்லிளித்தது ஒருவித நெருடலையே கொடுத்தது

கருப்பு பண ஒழிப்பு என கொண்டுவந்தார்கள் நல்லது, ஆனால் அதனால் பொதுமக்கள் படபோகும் பாடுபற்றியோ அவர்களின் பரிதவிப்பு பற்றியோ கிஞ்சித்தும் கவலையில்லை

கச்சா எண்ணெய் விலை தரைமட்டில் கிடந்தாலும் இவர்களுக்கு விலைகுறைக்க மனமில்லை, அது ஏன் என்றும் தெரியவில்லை

அய்யாகண்ணு எனும் கோமாளியினை விடுங்கள், மகராஷ்ட்ர விவசாயிகள் கால் தேய தேய நடந்தாலும் அரசு கண்டுகொள்ளவில்லை

ஜிஎஸ்டியில் குழப்பமோ குழப்பம், அது கத்திமேல் நடப்பது போன்ற விஷயம் ஆனால் குழப்பிய குழப்பில் தொழில்துறை நசுங்கியது

அதெல்லாம் கூட நிர்வாக விஷயம் என்றாலும் பாஜக ஆட்சி எனும் பெயரில் அவர்களின் சில்லுண்டிகள் செய்த அட்டகாசம் கொஞ்சமல்ல‌

மாட்டுகறி சர்ச்சையும் அந்த கவுரி லங்கேஷ் போன்றோரின் கொலையும் சாதாரணம் அல்ல, அதற்கு அரசின் கனத்த மவுனம் பெரும் அதிர்ச்சி

எங்கும் எதிலும் ஒருவித மனோன்னத நிலை இருந்தது, யாருக்கு நாங்கள் பதில் சொல்லவேண்டும்? என்ற ஒரு இறுக்கம் இருந்தது

அந்த இறுமாப்பு தமிழகம் வரை வந்தது

ஆம் தமிழக பாஜகவில் அந்த இறுமாப்பு தெரிந்தது, வசமாக மத்திய அரசிடம் சிக்கிய அதிமுகவிலும் அது தெரிந்தது

ஜெயா சாவு மர்மத்தில் தெரிந்தது, மிக சரியாக சசிகலா முதல்வராகாமல் உள்ளே தள்ளுவதில் தெரிந்தது

மசூதி இடிப்பில் அத்வாணிக்கு தீர்ப்பே வராதாம் ஆனால் சசிகலாவுக்கு உடனே வருமாம்

நிர்மலா தேவி விவகாரத்தில் அந்த சந்தாணம் அறிக்கை என்ன ஆனது என்பதிலும் பாஜகவின் அராஜக மனப்பான்மை தெரிந்தது

எங்களை யார் என்ன செய்யமுடியும்? யாருக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டும் என்ற ஒருவித மேட்டுகுடி மன்ப்பான்மை பாஜக ஆட்சியில் அப்பட்டமாக தெரிந்தது

அது எங்கெல்லாம் எதிரொலித்தது?

நிச்சயம் திமுக அன்று செய்த கருப்புகொடி போராட்டமும் சர்வதேச பார்வையாளர் முன்னால் மோடி அவமானபடுத்தபட்டதும் கண்டிக்கதக்கது

அந்த இறுமாப்பில் முக ஸ்டாலினை உள்ளே பிடித்து போட்டு வைகோவினை மிசாவில் நொறுக்கியது போல் நொறுக்கி இருக்கலாம்

ஆனால் அதை செய்யாமல் தூத்துகுடியில் வேதாந்தாவிற்காக சுட்டது கால கொடுமை

கவனியுங்கள்

பாஜகவிடம் இருந்த அந்த மகோன்னத மனப்பான்மை தமிழக பாஜகவுக்கும் அதிமுக அரசுக்கும் எப்படி ஒட்டிகொண்டது என்பதற்கு தூத்துகுடி சூடே சாட்சி

கலவரம் என்றால் கலைக்க கட்டுபடுத்த ஆயிரம் வழி உண்டு கண்ணீர் புகை குண்டு முதல் ரப்பர் தோட்டா வரை ஏராளம்

சுடுவதும் காலுக்கு கீழ்தான் சுடவேண்டும்

ஆனால் அந்த கொடூர சூடு சாட்சாத் குஜராத் கலவர காட்சி சாயல்

மறக்க முடியுமா?

அந்த துப்பாக்கி சூட்டைவிட அதிர்ச்சி மோடியின் அமைதியும், அதிமுக பாஜகவின் அசால்ட் அறிக்கையும்

இதைத்தான் மனிதாபமானமுள்ளோர் கண்டித்தனர்

இன்னும் ஏராள சம்பவம் உண்டு, சொன்னால் சொல்லிகொண்டே இருக்கலாம்

நிச்சயம் கலைஞர், ஜெயா போன்றவர் இருந்தால் இக்கொடுமை நடந்திருக்காது

இந்த முக ஸ்டாலின் என்பவருக்கு 4 வார்த்தை பேச தெரியாமல் இருக்கலாம், பழமொழி சொதப்பலாம் மனிதர் எப்படியும் குழப்பி பேசுபவராக‌ இருக்கலாம்

ஆனால் பல அநீதிகளுக்கு எதிரான குரலை கொடுக்க முடியும், அந்த குரல் இங்கு பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தும்

அது அவரால் மட்டுமே சாத்தியம்

தேசிய அளவில் ராகுல் வலுவான இளம் அடையாளம், இந்திரா ராஜிவுக்கு பின் பாரதம் காணும் இளம் தலைவர்

சில இடங்களில் சொதப்பினாலும் நாட்டு மக்களை அரவணைத்து செல்லும் பெரும் மாண்பும் பக்குவமும் எளிமையும் அவரிடம் தெரிகின்றது

எல்லா பத்திரிகையாளர்களையும் தயக்கமின்றி சந்திப்தே மோடியினை விட அவரின் தகுதியினை சொல்கின்றது

இது தேசம் , எந்த பதவியும் யாருக்கும் மொத்த சொந்தம் அல்ல‌

ஆட்சி மாற வேண்டும் தகுதியுள்ளோர் வரவேண்டும்

அதைவிட மகா முக்கியம் தகுதியான அமைச்சரவை வேண்டும்

கடந்த 5 ஆண்டுகளாக நடக்கும் குழப்பங்களும் இன்னும் பல மிரட்டல்களும் இன்றோடு ஓயட்டும்

பாஜக அப்படி இறுமாப்பான ஆட்சி நடத்தவில்லை என யாராவது மல்லுகட்டினால் பதிலுக்கு ஏகபட்ட விஷயம் சொல்லலாம்

எனினும் மாபெரும் சாட்சி ரகுராம் ராஜன்

வல்லரசுகள் எல்லாம் தங்கள் வங்கிக்கு ஆலோசகராகும் தகுதி கொண்ட ஒருவரை இவர்கள் என்னபாடு படுத்தினார்கள் என்பது உங்களுக்கே தெரியும்

ரகுராம் ராஜன் என்ன? ராணுவ தளபதி ராவத்தின் புலம்பலும் பல விஷயங்களை மவுனமாக சொல்கின்றன‌

நாடு ஒருவித இறுக்கத்திலும் அச்சத்திலும் இருந்தது உண்மை

பெரும் அறிவாளிகளும் இன்னும் பல சிந்தனையாளர்களும் கொல்லபட்டும் மிரட்டபட்டும் அவமானபடுத்தபட்டும் வந்தது கடந்த 5 ஆண்டு கொடும் வரலாறு.

கடந்த 5 ஆண்டுகளை அசைபோட்டுவிட்டு வாக்கு பட்டனை தட்டுங்கள்..

ஏற்கனவே சில மாநிலங்களில் தட்டிவிட்டார்கள், மபி ராஜஸ்தான் என அவர்கள் சொல்லிவிட்டார்கள்

இது தமிழ்நாட்டு முறை, நமது முறை

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s