காணவே இல்லை

மூச்சுக்கு முன்னூறு தரம் பெரியார் மண் என்பவர்களை எல்லாம் பொன் அமராவதி பக்கம் பற்றி எரியும் இத்தருணத்தில் காணவே இல்லை

அரியலூரில் திருமாவுக்காக குரல் கொடுத்த வீரமணியினை இங்கு காணவில்லை, ஸ்டாலின் சத்தமே இல்லை

இன்னும் சமூக நீதி இம்சைகளான சுபவீ, மதிமாறன் , கோட்டார் கொளத்தூர்மணி எல்லாம் கனத்த அமைதி

இவர்களை மிக நன்றாக கவனித்தால் ஒன்று புரியும்

பொதுவாக சாதிகலவரத்தில் கனத்த அமைதி காப்பார்கள் ஆனால் வன்னியன் இருந்தால் ராமதாஸுக்காக பொங்குவார்கள்

ஒரே நிபந்தனை ராமதாஸ் எதிர்கோஷ்டியில் இருக்க வேண்டும் இவர்கள் கூட்டணி என்றால் கப்சிப்

ஆனால் எக்காரணம் கொண்டும் முக்குலத்தோர் சம்பந்தபட்ட கலவரங்களுக்கு வாயே திறக்கமாட்டார்கள்

ஏனென்றால் அதுதான் வாக்கு வங்கி

பொன் பரப்பி என்றால் கத்திய ஸ்டாலினும் வீரமணியும் பொன் அமராவதி என்றால் அமைதி ஏன்?

எல்லாம் முக்குலத்தோருக்கான பயம்

வன்னியன் செய்தால் தவறு, முக்குலத்தோர் செய்தால் அதுவே சரி

இதெல்லாம் இவர்களின் நியாயங்கள்

ஒருவேளை பெரியார் மண் என்பது இதுதான் போலிருக்கின்றது

இதுவே பிராமணன் ஒருவன் சம்பந்தபட்டிருக்கட்டும் இந்நேரம் தமிழகம் தாங்கும் என நினைக்கின்றீர்கள்?

ஆடி ஆடி தீர்ப்பார்கள் , எல்லா வகை நடனமும் ஆடுவார்கள்

முக்குலத்தோருக்கு ஒரு நீதி மற்ற குலத்தோருக்கு தனி நீதி அதிலும் பிராமணனுக்கு ஸ்பெஷல் நீதி என்பதுதான் திராவிடம், பெரியாரியம்

அன்னை மரியாள் அலைமரித்து திரிந்தது

பெரிய வெள்ளி துயரத்தில் மாபெரும் துயரம் அன்னை மரியாள் அலைமரித்து திரிந்தது

பைபிளின் மகா உருக்கமான காட்சி அது, அதை பிரிவினை கோஷ்டிகள் சொல்லாது , இரக்கமே இல்லா கூட்டம் அது

ஆனால் மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும் அழும் மிக உருக்கமான காட்சி அது

கலைஞர்களில் அதை மிக உருக்கமாக சொன்னவன் கண்ணதாசன் இப்படியாக உருக்கமாக இயேசு காவியத்தில் சொன்னான்

“தாயிருக்கப் பிள்ளைசாகும் சங்கடங்கள் கொஞ்சமோ,
சாட்டையாலே வேட்டையாடி சாவதென்றால் தாங்குமோ?
வாயிருந்தும் தேவஅன்னை மௌனமாக நின்றனள்
வாழ்வுதாழ்வை தெய்வம்பார்க்கும் என்பதை அறிந்தனள்!

அன்னை மரியாள் மடியினிலே
அன்பின் வடிவம் தேவமகன்
பொன்னை மணியைப் புதுநதியைப்
பொய்யாய்ப் போன உடல்தன்னைத்
தன்னந் தனியே வைத்தார்கள்
தாயும் மகனைப் பார்த்தபடி
கன்னங் கரைய நீர்பெருகிக்
கடவுள் பெயரைச் சொன்னாளே!

சுற்றி அழுவோர் கிடையாது
சொந்தம் என்போர் அங்கேது?
பற்றும் பாசமும் அலைமோத
பசுவும் கன்றும் ஒன்றாக
உற்றுப் பார்க்கக் கல்வாரி
ஒன்றே சாட்சி ஆனதுகாண்”

என நீண்ட பாடலாக அது வரும். படிக்கும் பொழுதே கண்கள் பனிக்கும் இதயம் விம்மும்

‘தாயிருக்கப் பிள்ளைசாகும் சங்கடங்கள் கொஞ்சமோ..” என்ற ஒரு வரியிலே அழாத மனமும் அழுதுவிடும்

இந்த காட்சியினை மகா தத்ரூபமாக சிலை வடித்தவன் மைக்கேல் ஆஞ்சலோ

அவனின் மடோனா எனும் அந்த வியாகுல மாதாவின் சிலை சிற்பங்களுக்கெல்லாம் உச்சம்

ஆம் இயேசுவுக்காக உலகிற்கு வந்த கலைஞர்கள் இவர்கள்

இயேசு காவியம் எழுதியபின் தன் கடமை முடிந்து கிளம்பினான் கண்ணதாசன், சில படங்கள் வரைந்த பின் ஆஞ்சலோவும் இல்லை

சிலுவை பாடுகளில் மாதாவின் காட்சி வரும் பொழுதெல்லாம் இந்த இரு கலைஞர்களின் படைப்பும் நிச்சயம் நினைவுக்கு வரும்

இயேசுவுக்கும் மரியாளுக்கும் அழும் நேரத்தில் கலை மனது இந்த இருவருக்காகவும் அழுகின்றது

அவர்கள் நிச்சயம் அந்த அழுகைக்கு தகுதியானவர்கள்

நூலகமாக மாற்றிகொடுத்த முதல்வர் உண்டா?

அவர்மேல் பல சர்ச்சை இருக்கலாம் , ஆனால் வாசிப்பினை மூச்சாக கொண்டிருந்தார் பலரை வாசிக்க ஊக்குவித்தார் என்பதை மறுக்க முடியாது

கல்வியும் புத்தகவாசிப்பும் ஒரு சமூகத்தை மாற்றும் என மனதார நம்பினார் கலைஞர்

உறுதியாக சொல்லலாம் அவர்கள் ஆட்சியில் ஊரெல்லாம் நூலகம் திறந்தார்கள், கிராமத்து நூலகம் முதல் அண்ணா நூலகம் வரை ஆயிரகணக்கான நூலகங்களை கொடுத்தார்கள்

கலைஞர் தன் கிராமத்து இல்லத்தை நூலகமாக மாற்றி கொடுத்தார்

தமிழகத்தில் எத்தனையோ முதல்வர் இருந்தார்கள் இன்னும் வருவார்கள்

ஆனால் இப்படி சொந்த வீட்டையும் நூலகமாக மாற்றிகொடுத்த முதல்வர் உண்டா?

நிச்சயம் இல்லை

போயஸ் கார்டன் வீடும், கொடநாடும், சிறுதாவூர் பங்களாவும் இப்படி மாறுமா? நடக்குமா?

ஒரு காலமும் இல்ல்லை

ஆனால் அந்த மனிதனே இங்கு ஊழல்வாதி, அவனே தமிழ்நாட்டை கெடுத்தவன் என சொல்லிகொண்டே இருப்பார்கள்

+2 தேர்வு முடிவு வந்தாயிற்று

+2 தேர்வு முடிவு வந்தாயிற்று

இனி நீட் தேர்வுக்காக பாகிஸ்தான் எல்லைக்கு செல்லவும் இங்கே தயாராக இருப்பர் மாணவ மாணவியர்

ஆனால் இந்த அரசியல்வாதிகள் கனத்த அமைதி

ஒரு பாசிச எதிர்ப்பு போராளியாவது, ஒரு திராவிட சிங்கமாவது இல்லை கல்வியினை இட ஒதுக்கீட்டால் காக்க வந்த கருணையாளவானது நீட் தேர்வு எழுத செல்லும் ஒரு மாணவனை தடுக்கட்டும் பார்க்கலாம்

சும்மா தேர்தல் என்றால் நீட் முதல் எல்கேஜி வரை எல்லா தேர்வும் ரத்து செய்வோம் என முழங்க வேண்டியது

ஆனால் மாணவ சமூகம் இவர்களை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை அவர்களின் பெற்றோர் அறவே கண்டுகொள்ளவில்லை என்பதுதான் நல்ல விஷயம்

ஜெட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ் மூடபட்டதற்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் தெரியவில்லை, வண்ணாந்துறையில் உள்பாவாடை காணாமல் போனால் கூட மோடிதான் காரணம் என்பதும் சரியல்ல‌

அம்பானிக்க்கும் விமானம் இல்லை

இது வியாபார போட்டி உலகம், எல்லா பிசினஸும் போலவே விமான நிறுவணங்கள் கடும் சவாலில் இருக்கின்றன‌

நீண்ட தூர பயணமான குறிப்பாக அமெரிக்கா ஜப்பான் என பறக்கும் பெரிய லெவல் விமான நிறுவணங்களே தவிக்கும் வேளையில் குறுகிய தூர சேவை விமான நிலை மகா மோசம்

உதாரணம் கோலலம்பூர் டு சென்னை 4 மணி நேர பயணம், சீட் மட்டும் கிடைத்தால் போதும் டவுன்பஸ்ஸில் வருவது போல வந்துவிடலாம் என்பதால் பட்ஜெட் விமானம் இங்கு தூள் பறத்துகின்றது

ஆனால் இவ்வகை சிறிய விமானங்களால் அமெரிக்கா போன்ற நீண்டதூர நாடுகளுக்கு இயக்க முடியாது, நீண்ட பயணங்களுக்கான விமான அமைப்பும் சேவையும் வேறுமாதிரி

அதனால் குறுகிய தூர விமான நிறுவணங்கள் அதாவது சிறிய விமானங்களை இயக்கும் நிறுவணம் எல்லாம் தவிப்பில்தான் இருக்கின்றது

ஜெட் ஏர்வேஸ் வந்தபொழுது அதற்கு போட்டியில்லை ஏர் இந்தியாவும் சில அரபு விமானமுமே போட்டி

காலவாக்கில் யாரெல்லாமோ வந்தார்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டில் இருந்தும் வந்து குவிந்தார்கள்

அதில் மல்லையா போன்றோர் அனுபவமின்றி காணாமலே போனார்கள்

ஜெட் ஏர்வேஸ் 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற டிக்கெட்டை அவர்கள் 7 ஆயிரத்துக்கு கொடுத்தார்கள்

போட்டி அதிகரிக்க அதிகரிக்க நடுத்தர வர்க்கத்தின் விமான பயணம் எளிதாயிற்று, இன்று யாரும் பறக்கலாம்

இதெல்லாம் காலமாற்றம்

ஒரு காலத்தில் காருக்கு ஊரே ஏங்கும் இன்று ஏகபட்ட வீடுகளின் முன்னால் கார் நிற்கின்றது

தொழில் போட்டியால் ஒரு காலத்தில் கனவான விஷயங்கள் எல்லாம் எல்லோர் காலடியில் கிடக்கின்றன‌

உடைந்த டிவி லேப்டாப் உள்ளிட்ட பொருட்களின் குப்பையினை என்ன செய்ய என தெரியாமல் தவிக்கின்றது உலகம்

ஜெட் ஏர்வேஸ் விவகாரமும் அப்படியே

அவர்கள் வந்து ஏர் இந்தியாவினை விரட்டினார்கள், இன்னும் பலர் வந்து ஜெட் ஏர்வேஸினை விரட்டினார்கள்

இப்பொழுது ஜெட் ஏர்வேஸ் தாக்குபிடிக்க முடியாமல் மூடபட்டுவிட்டது

மலின்டோ, ஏர் ஏசியா போன்ற பட்ஜெட் விமானங்களும் கடும் கடனில்தான் தள்ளாடுகின்றன , நிலை சொல்லிகொள்ளும்படி இல்லை

இதெல்லாம் துல்லியமான வியாபார கணக்கு,

மக்களுக்கு லாபமா என்றால் நிச்சயம் லாபம், போட்டிமிகு உலகில் குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடிகின்றது

இதனைத்தான் பார்க்க வேண்டுமே தவிர மோடி ஆட்சியில் ஜெட் ஏர்வேஸ் மூடபட்டது என்பதெல்லாம் அபத்தம்

மாறாக மோடி ஆட்சியில் ஏர் டிக்கெட் விலை குறைந்திருக்கின்றது என்பதுதான் நிஜம்

(மோடி ஆட்சியில்தான் அனில் அம்பானியும் திவாலாகியிருக்கின்றார் அது பற்றி ஒரு பயலும் பேசமாட்டான்

ஆனால் முகேஷ் அம்பானிக்கு பயந்து மோடியும் பேசமாட்டார்)

தேர்தல் முடியும் நேரம் பொன்பரப்பி கலவரம்

தேர்தல் முடியும் நேரம் பொன்பரப்பி கலவரம் என்பதால் பெரும் சிக்கலில் இருந்து தமிழகம் தப்பித்தது

இல்லையென்றால் இந்நேரம் மாபெரும் அசம்பாவிதங்கள் ஆங்காங்கே தலைதூக்கியிருக்கும்

இம்மாதிரி நேரங்களில் ஒன்றை செய்யலாம்

காவல்துறை களத்தில் இறங்கி சம்பந்தபட்ட இரு தரப்பையும் முடக்கி விசாரிக்க வேண்டும்

ஆழ விசாரித்தால் இதில் எல்லாம் யாரோ இருவரின் தனிபட்ட பகை தவிர ஏதும் இருக்காது, பழிவாங்க சாதியினை இழுத்திருப்பார்கள்

எல்லா சாதிகலவரமும் இப்படித்தான் தொடங்கி அரசியலில் முடியும்

அதைவிட முக்கியம் இதை கலவர நோக்கில் பரப்புவதை தடுக்க வாட்சப் முதல் முகநூல் வரை கடும் கட்டுபாடுகளை விதித்து காட்சி பரவுவதை தடுக்க வேண்டும்

இல்லாவிடில் பொன்பரப்பி அமைதியாகும் நேரம் வேறு எங்கோ எரிந்து கொண்டிருக்கும்

பதற்றமான நேரம் சமூக ஊடகங்களை முடக்கு என்பது இப்பொழுது உலகெல்லாம் இருக்கும் ராஜநீதி

தமிழக காவல்துறை அதை உடனே செய்தால் நல்லது

தமிழக காவல்துறைக்கு வாழ்த்துக்கள்

எது எப்படி ஆயினும் கடந்த 30 நாளாக கடும்பாடு பட்டு , உணவு மறந்து துயில் மறந்து, குடும்பத்தை பிரிந்து வேகாத வெயிலிலும் வியர்க்கும் இரவிலும் அயராது பாடுபட்டு தமிழக அமைதியினை காத்தவர்கள் தமிழக காவல்துறையினர்

அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்களை நாம் தெரிவித்தே தீரவேண்டும்

அவர்கள் பணி நிச்சயம் அரும்பணி

பெரும்பணி

தமிழக காவல்துறைக்கு வாழ்த்துக்கள், இந்த தேர்தலில் மிக முக்கியமான பணி அவர்களுடையது