விஷயம் வில்லங்கமானது

பல விவகாரங்கள் இலங்கையில் இருந்து கிளம்புகின்றன‌

கடந்த ஜனவரி மாதமே 100 கிலோ வெடிபொருள் புத்தளம் பகுதியில் கைபற்றபட்டது

புலிகள் இல்லாத நிலையில் அதை பதுக்கியது யாரென விசாரித்ததில் பாகிஸ்தானை சேர்ந்த சிலர் மேல் சந்தேகம் வந்து விசாரித்தனர்

விஷயம் வில்லங்கமானது

எனினும் இந்தியாவுக்கு எதிராகத்தான் ஏதோ திட்டமிடுகின்றார்கள் என சந்தேகித்த இலங்கை விஷயத்தை பெரிதுபடுத்தவில்லை

பாகிஸ்தான் தீவிரவாதிகளின் நடமாட்டம் இலங்கையில் வலுவாக உள்ளது என்ற இந்தியாவின் அறிவிப்பினை இலங்கை பெரிதாக கண்டுகொள்ளவில்லை ஒரு மாதிரி ரசித்தது

ஆனால் இந்தியாவின் பதில் நடவடிக்கையில் தாக்குபிடிக்க முடியாத இலங்கை இந்தியா இலங்கை அதிபரை கொல்ல பார்க்கின்றது என்றேல்லாம் ஆட்டத்தை மாற்றி ஆடியது

அதாவது ஏதோ முன்பே நடந்தது, ராஜபக்சே கூட பிரதமராக முயன்றார் நினைவிருக்கின்றதா?

ஆக கூட்டி கழித்து வகுத்து பெருக்கி பாருங்கள்

ஏதோ அங்கு பாகிஸ்தான் செய்ய நினைத்திருக்கின்றது, இலங்கை அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் இந்தியாவுக்கு எதிராக சிந்தித்திருக்கின்றது

இதில் இந்தியாவுக்கும் கொழும்புக்கும் ரகசிய மோதல் நடந்திருக்கின்றது

கடைசியில் வரம் கொடுத்தவன் தலையிலே கையினை வைத்துவிட்டான் பஸ்மாசுரன்

ஆக இலங்கை அரசு தடுத்திருக்க வேண்டிய சதிசெயலை சில காரணங்களுக்காக விட்டுவைத்து அது அவர்களுக்கே எமனாக விடிந்துவிட்டது

பல நாடுகளின் அமைதியும் விஷயத்தை உறுதிபடுத்துகின்றன

சதிகாரர்கள் ஒரு கோணத்தில் சிந்திக்க, இலங்கை அரசு இன்னொரு கோணாத்தில் சிந்திக்க கடைசியில் இலங்கை மேலேயே அவர்கள் பாய கடைசியில் செத்தது 300 பேர் காயமடைந்து போராடுவது 500 பேர்

அங்கிள் சைமன் அங்கு ராதிகா உயிர்தப்பியது போல் தப்பினால் எப்படி இருந்திருக்கும்?

இலங்கையில் நடந்தது பெரும் துயரம்தான்

ஆனால் அங்கிள் சைமன் அங்கு ராதிகா உயிர்தப்பியது போல் தப்பினால் எப்படி இருந்திருக்கும்?

வியப்பும் திகைப்பும் மிகுந்த கதை நமக்கு கிடைத்திருக்கும்

“அடிக்கடி இலங்கை போய் நிலமைய பார்த்துட்டு வருவேன் காரணம் எப்படி எங்க அடிக்கணும்னு கள நிலவர வேணுமில்ல, அப்பத்தான ராஜபக்சேவ தூக்க முடியும் கொழும்ப கைபற்றி இன விடுதலை அடைய முடியும்

அங்கதான் அண்ணன் பிரபாகரன் மாறுவேடத்துல இறால் வித்துட்டு இருக்காரு இது ஒரு பயலுக்கும் தெரியாது, நான் இறால் வாங்கிறது மாதிரி தகவல் சொல்லிட்டு வருவேன் அவன் ஆமை ஓட்டுக்குள்ள தகவல் வச்சி தருவார், 2 நிமிஷத்துல முடிச்சிருவோம்

அன்னைக்கு நான் விடுதில இருந்தேன் , ஒருத்தன் ஒரு மாதிரி முழிச்சிட்டே உள்ளே வந்தான்

ஆமை கறி தின்னாலும் அக்கம் பக்கம் பார்க்கணும்னு அண்ணன் சொன்னத நா மறக்கல, அவர் பார்வையிலே கண்டுபிடிச்ச்சிட்டேன்

அவன் விசைய அழுத்தும் முன்னால அங்க சாப்பாடு மூடி வச்ச பெரிய தட்ட எடுத்துட்டு ஜன்னல் பக்கம் இருந்த திரைசீலைய கிழிச்சிட்டு ரெடியாயிட்டேன்

அவன் டிரிக்கர அமுத்தவும் வெடிச்சிட்டு, நான் அந்த மூடியல என்ன மூடிகிட்டேன்,

சக்திவாய்ந்த வெடிப்பு என்ன ஒரு 5 கிமீ தூரத்துக்கு வானத்துல தூக்கி அடிச்சி, நான் அந்த மூடி மேல உட்கார்ந்துட்டு ராக்கெட்ல போனமாதிரி போனேன் ஹஹஹஹஹஹா

ஒரு கட்டத்துல தட்டு கீழ இறங்க ஆரம்பிச்சிட்டு உடனே அந்த ஜன்னல் திரைச்சீலைய பாராசூட் மாதிரி கட்டிட்டு சர்ர்னுனு இறங்கிட்டேன் ஹாஹா

இறங்கி பார்க்குற்றேன் ஒரே சாவு ரத்தம் கூட்டம், அழுகை இதெல்லாம் அண்ணன் கூட நிறைய பார்த்ததுனால பழகி போச்சி

நடந்துட்டே இருந்தேன் ஒரு சிங்களன் என்ன உத்து பார்த்தான் ஆனா அடையாளம் காண முடியல, ஏன்னா பாராசூட்ல குதிக்கும் போதே சும்மாதான இருக்கோம்னு மீசை எல்லாம் எடுத்துட்டு கூலிங் கிளாஸ் போட்டுட்டேன்

அவன் குறுகுறுன்னு பார்த்தும் அடையாளம் காண முடியல,, அப்புறம் அப்படியே விமான நிலையம் வந்து இங்க வந்துட்டேன்

இதுக்கெல்லாம் ஒரே காரணம் என் அண்ணன் கொடுத்த பயிற்சிதான், இனி அணுகுண்டு வெடிக்கும் பொழுது எப்படி தப்பிக்கணும்னு தம்பிகளுக்கு இத பயிற்சியா கொடுக்கலாம்னு இருக்கேன்”

இலங்கை குண்டுவெடிப்பு சொல்வது இதுதான்

இலங்கை குண்டுவெடிப்பு சொல்வது இதுதான்

ஒரு நாட்டில் ஆயிரம் சிக்கல் இருக்கலாம் ஆனால் அந்நிய நாட்டினை உள்ளே விட்டால் என்னாகும் என்றால் இப்படித்தான்

அவர்களிடம் சிக்குவது எளிது, மீள்வது கடினம்

இலங்கையினை இந்த நுட்பத்தில் சிக்க வைத்திருந்தது இந்தியா

தன் ராணுவ முகாம் ஆசை பிரேமதாசா + ஆண்டன் பாலசிங்கம் கூட்டணியால் நடக்கவில்லை என்றாலும் அதன் கணக்கு வேறாய் இருந்தது

என்னதான் புலிகளால் இந்தியாவுக்கு பெரும் நஷ்டம் எனினும் கடிநாய் என்றாலும் அது நமக்கு ஒருவிதமான காவல் நாய் என கருதியது இந்தியா

இல்லை என்றால் என்றோ புலிகளை முடித்திருப்பார்கள்

ஜெயவர்த்தனே தொடங்கி பிரேமதாச சந்திரிகா என பலருக்கு அமெரிக்கா சைனா ரஷ்யா என உதவிகேட்டு புலிகளை முடிக்க வெகு நேரமாகி இருக்காது

ஆனால் பின்வரும் விளைவுகளை கணித்து புலிகளை ஒருமாதிரி கையாண்டனர் அந்த ஆட்சியாளர்கள்

ஆனால் மகிந்தா மாறினார், அந்நிய சக்தி கொண்டு புலிகளை துடைத்தொழித்தார்

மிக தைரியமாக புலிகளை ஒழித்தாலும் அந்நாடு அந்நிய கைக்குள் சிக்கிவிட்டது

இலங்கையின் தந்திரம் பெரும் வெற்றி அளிக்கவில்லை

வல்லரசுகளுக்கான அதிகார போட்டியில் ரத்தவெள்ளம் சாதாரணம்

ஒரு நாட்டின் கையிலிருந்து ரத்த வெள்ளத்திலே அதிகாரம் கைமாறும், அது இப்பொழுது கொழும்பிலும் நடந்து கொண்டிருக்கின்றது

இலங்கை ஆட்சியாளார்களில் ஜெயவர்த்தனேவும் பிரேமதாசவும் சந்திர்காவும் கில்லாடிகள்

மகிந்தவுக்கு பத்ம வியூகம் போல நுழைய தெரிந்ததே தவிர வெளிவர தெரியவில்லை

அவர்கள் வரலாற்றை படித்தால் ஜெயவர்த்தனேவும் பிரேமதாசவும் மகா கில்லாடிகள்.

அது எந்த நாடு?

கொழும்பு குண்டுவெடிப்பு விசாரணை தகவல்கள் வர தொடங்கிவிட்டன,

30 பேரை கைது செய்திருக்கும் அந்நாடு கடும் விசாரணையில் இருக்கின்றது, கைது செய்யபட்டோர் விவரம் இன்னும் வெளியிடபடவில்லை

கைது செய்யபட்டவர்கள் பற்றி முழு விவரம் தெரியாவிட்டாலும் இலங்கை அரசு சில விஷயங்களை கோடிட்டு காட்டுகின்றது

அதாவது நாட்டில் அடிப்படைவாத இயக்கம் மேல் தடை உத்தரவு அமல்படுத்தபடும் என்கின்றது இலங்கை அரசு

இஸ்லாம் பவுத்தம் என பல அடிப்படை வாத கும்பல் அங்கு உண்டு என்பது வேறு விஷயம் இதனால் ஒரு விஷயத்தைச் சீரியசாக கசிய விடுகின்றார்கள்

மிக முக்கியமாக கசியும் விஷயம் சந்தடி சாக்கில் வாகனம் நிறைய குண்டு ஏற்றி இந்திய தூதரகத்தை தகர்க்க நடந்த சதி தெய்வாதீனமாக நடக்கவில்லை

அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டிய நபர் கடைசி நேரத்தில் சொதப்பி இருக்கலாம் என்கின்றார்கள்

இந்திய தூதரகம் எப்படியோ தப்பிவிட்டது

ஆக அடிப்படைவாத இயக்கம், இந்திய தூதரக குறி என எல்லாவற்றையும் கூட்டி கழித்து பாருங்கள், இந்த திட்டம் இந்தியாவுக்கு எதிரான நாடு ஒன்றின் திட்டமாக முடியும்

அது எந்த நாடு?

இலங்கை அரசு பொறுமை காப்பதால் நாமும் பொறுமை காக்கத்தான் வேண்டும்

மானிட குலத்திற்கே மாபெரும் அவமானம் இவர்கள்

உலகம் அலறி கிடக்கின்றது , இலங்கை அழுது அழுது நொந்து கொண்டிருக்கின்றது

இந்த மிக சோகமான நேரத்திலும் மத ரீதியாக மிக கேவலமாக ஒரு பிரபல பத்திரிகை நடந்து கொள்வது நாகரீகம் அல்ல‌

தினமலர் தன் தரத்தை மிக மோசமாக தாழ்த்திகொள்ளும் நேரமிது

கொஞ்சமும் மனிதாபிமானமின்றி லட்சகணக்கானோர் அழும் நேரம் மதத்தை சீண்டும் இந்த போக்கு ஐ.எஸ் இயக்கத்தைவிட காட்டுமிராண்டிதனமாது

மானிட குலத்திற்கே மாபெரும் அவமானம் இவர்கள்

உடன்பிறந்தே கொல்லும் நோய்

உடன்பிறந்தே கொல்லும் நோய் என்பார் அவ்வையார், அப்படி திமுகவிலும் ஒரு உடன்பிறப்பு பிறந்திருக்கின்றது

அதன் பெயர் மாறன் பிரதர்ஸ்

அவர்களை அன்றே பிரகலாதன் என தனக்கே உரிய வார்த்தைகளுடன் குறிப்பிட்டார் கலைஞர், ஜொலிக்கா கூழாங்கல் என தட்டியும் வைத்திருந்தார்

என்னதான் கண்கள் பனித்தாலும் இதயம் இனித்தது என சொன்னாலும் அவரின் சந்தேகம் அகலவே இல்லை

கலைஞர் இருக்கும்வரை அடங்கியிருந்த பிரகலாதன் பிரதர்ஸ் அவர் இல்லா காலத்தில் மறுபடியும் நமோ என சொல்ல ஆரம்பித்தாயிற்று

சன்டிவியில் திமுகவுக்கு எதிரியாக உருவாகும் கமலஹாசனுக்கு கடும் விளம்பரம் கொடுத்தது ஒரு வகை

இப்பொழுது தினகரன் நாளிதழில் குஜராத்தின் கோத்ரா பகுதி இஸ்லாமியர் எல்லாம் பாஜக விரும்பிகள் அவர்கள் அந்த கலவரத்தை எல்லாம் மறந்து விட்டார்கள் என்பது போல செய்தி வெளியிட்டிருக்கின்றது தினகரன்

தங்கள் தொழிலையும் டிவி பத்திரிகையினையும் காப்பாற்றவும் வழக்குகளிலிருந்து வெளிவரவும் இவர்கள் பாஜக பக்கம் சரிந்துவிட்டது தெரிகின்றது

ஆக திமுகவிலும் பழனிச்சாமி பன்னீர்செல்வம் போல பாஜக அடிமைகள் ரெடி

விரைவில் நாடு முழுக்க இஸ்லாமியர் பாபர் மசூதியினை மறந்து மோடிக்கு ஜே என சொல்கின்றார்கள் என அடுத்த செய்தி வரலாம்

கலைஞரும் முரசொலிமாறனுமே சன் குழுமத்துக்கு அடிக்கல்

அந்த அடிக்கல்லை உருவ பார்க்கின்றார்கள், இதெல்லாம் நிச்சயம் நல்ல பலனை தராது

எந்த நரசிம்ம அவதாரமும் அவர்களை காக்க முடியாது

பேசிய பேச்சு கொஞ்சமா?

கொழும்பு குண்டுவெடிப்பு தொடர்பாக கடும் விசாரணை தொடங்கிவிட்டது

இலங்கை அரசுக்கு யார் யார் எதிரிகள் என பெரும் பட்டியல் தயாராகி சம்பந்தபட்ட நாடுகளுக்கு விளக்கம் கேட்டு அனுப்பபட்டாயிற்று

இதில் வைகோ சைமன் பெயர் எல்லாம் நிச்சயம் உண்டு

அதிலும் சிங்கள பெண்களை கற்பழிப்பேன் என்றும் ஒரு சிங்களவனை விடமாட்டேன் என்றும், மொத்த இலங்கையினையும் பிடிப்பேன் எனவும் சைமன் கர்ஜித்த வீடியோ எல்லாம் பெரும் ஆதாரம்

விரைவில் அவர் மேலும் ரகசிய விசாரணை நடக்கலாம் என்கின்றார்கள்

பாவம் தமிழக விவசாயிகள், அவர்களை காக்க சைமன் ஒருவர்தான் களத்தில் இருந்தார் , அதை பொறுக்காத சிங்களவன் சைமனை சிக்க வைத்து விவசாயிகள் சோலியினை முடிக்கின்றனர்

இதெல்லாம் சிங்கள இந்திய சதி தமிழ்நாட்டில் விவசாயி இருக்கவே கூடாது எனும் சதி என்ற அளவில் சதி என தும்பிகள் கிளம்பும்

எனினும் சைமனின் பேச்சை கேட்டு அவர் போலவே சிங்களனை விடமாட்டேன், சிங்கள பெண்களை கற்பழித்து சிங்களனை துண்டு துண்டாக்காமல் வீர தமிழன் ஓயமாட்டேன் என கர்ஜித்த தும்பிகள் எல்லாம் இப்பொழுது கடும் அப்செட்

அங்கிள் சைமனும் கலக்கம் என்கின்றன செய்திகள்

ஆம் அவர் என்னவெல்லாமோ பேசினார், சிங்களருக்கும் இலங்கைக்கும் அவர் விடுத்த சவால் கொஞ்சமல்ல‌

எல்லாவற்றிற்கும் மேல் பிரபாகரன் தம்பி நான், அவர் என்னிடம் அனுதினமும் பேசுகின்றார் அவர் கட்டளையிடும் நாளில் இலங்கை இருக்காது என்றெல்லாம் பேசியவர் சைமன்

இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்?

மேடையில் சவால் விடுவது எல்லாம் சாதாரணம் அல்ல, சிக்கல் வரும்பொழுது தப்ப முடியாது, நிச்சயம் அவர் மேலும் விசாரணை கரங்கள் நீளலாம்

பேசிய பேச்சு கொஞ்சமா?

இலங்கைக்கு எதிரான சக்திகள் எனும் நோக்கில் விசாரணை இங்குதான் திரும்புகின்றது என்கின்றார்கள்

ஒருவேளை சைமனிடம் விசாரணை தொடங்கினால் என்னாகும்?

ராம் படத்தில் கஞ்சா கருப்பு காமெடி போல நிச்சயம் கன ஜோராக இருக்கும்

சிறப்பான தரமான சம்பவங்கள் இனிதான் நடக்கலாம்

தான் ஆடாவிட்டாலும் உலகெல்லாம் இருக்கும் ஈழதமிழருக்கு சதை ஆடுகின்றது

கொழும்பில் தாக்குதல் என்பது தங்கள் சொந்த நாட்டு தாக்குதல் என்பதால் கூடுதலாக துடிக்கின்றார்கள், அலறுகின்றார்கள்

அப்படித்தான் இருக்க வேண்டும் அதுதான் சரி

ஆனால் இதை எல்லாம் காணும் தும்பிகளுக்கும் அவர்களின் தலைவன் குளவிக்கும் கண்கள் சிவந்து வயிறு எரிகின்றது

லட்சகணக்கான தமிழரை கொல்ல உத்தரவு பிறப்பித்த கொழும்பு எரியும் பொழுது அழுபவன் எப்படி தமிழனாக இருக்க முடியும்? என தும்பிகளில் சிலது கத்த ஆரம்பித்துவிட்டது

அவர்கள் அப்படித்தான் என்பது நமக்கு தெரியும், ஈழதமிழனுக்கு இப்பொழுதுதான் தெரிகின்றது

என்ன இருந்தாலும் அது எங்கள் நாடு என ஈழதமிழர் சொல்ல, அடேய் அது சிங்கள ஊர் அது நாசமாகட்டும் என தும்பிகள் சொல்ல , கடும் காமெடி நடக்கின்றது

பாவம் தும்பிகளுக்கு கொழும்பில் நிறைய தமிழர் இருப்பதும் தமிழக தமிழர் ஏராளம்பேர் தொழில் நடத்துவதும் தெரியாது பாவம்.

இதுவரை தமிழன் தமிழ் தேசியம் அதன் தலைவர் சைமன் என சொல்லிகொண்டிருந்த கூட்டம் இப்பொழுது ஒன்றை ஒன்று முறைத்து நிற்கின்றது

அநேகமாக ஈழதமிழர் போலி விசாவில் வந்து தும்பிகளை போட்டு சாத்தலாம் எனும் அளவுக்கு நிலமை செல்கின்றது

அங்கிள் சைமன் தலைமேல் கை வைத்து அமர்ந்துவிட்டார்

சிறப்பான தரமான சம்பவங்கள் இனிதான் நடக்கலாம்

இது மாபெரும் தேசவிரோதம்

ஒரு ரகசிய ஆய்வு செய்தி உலகெல்லாம் பரவுகின்றது

மோடி சுற்றிய நாடுகளில் அதானி சில ஒப்பந்தகளை பெறுகின்றார், குஜராத்திய வணிகர்கள் பல பயன்களை அடைகின்றனர்

நிலக்கரி சுரங்கம், துறைமுகம் , விமான நிலைய பணி என ஏதோ ஒன்று ஒரு நாட்டில் மோடி கால்வைத்தபின் அவர்களுக்கு கிடைக்கின்றது

அதற்கு பிரதிபலனாக அந்த நாட்டு பொருட்களுக்கு இங்கு வரிவிலக்கு வழங்கபடுகின்றது

புரிகின்றதா?

குஜராத்திய புள்ளிகள் வெளிநாடுகளில் குவிக்கும் பெரும் பணத்துக்கு ஈடாக இங்கு இந்நாட்டுக்கு வரவேண்டிய வரிபணம் விட்டுகொடுக்கபடுகின்றது

இது மாபெரும் தேசவிரோதம்

பொறுப்பான எதிர்கட்சி இந்த விஷயத்தை கையில் எடுத்தால் பெரும் விவகாரம் ஆகும் என்கின்றார்கள்

ஆனால் காங்கிரஸ் ஏன் இதை கையில் எடுக்கவில்லை என்பதுதான் சோகம்

ஆம் அவர்களுக்கும் தொழிலதிபர்கள் இருக்கலாம், உலகெங்கும் அவர்களும் தொழில் நடத்தலாம்

பொய் சொல்வதில் நோபல் பரிசு

“கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என, அண்டை நாடான, பாகிஸ்தானை எச்சரித்தோம். அதனால் தான், நம் விமானப் படை விமானி, அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்,” குஜராத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி

பொய் சொல்வதில் நோபல் பரிசு என ஒன்று இருந்தால் அது நிச்சயம் இவருக்குத்தான்

அந்த பரபரப்பான நேரங்களை உன்னிப்பாக கவனித்தவர்களுக்கு சில விஷயம் புரியும்

அபினந்தன் கைது செய்யபட்டார், ஆனால் ஒரு கைதி எப்படி நடத்தபட வேண்டுமோ அப்படி நடத்தபடுகின்றார் என வீடியோ சகிதம் உலகிற்கு சொன்னது பாகிஸ்தான்

அவர்கள் சரியாக இருந்தார்கள்

இந்திய தரப்பில் இருந்து பெரும் கோரிக்கை ஏதும் இல்லை, ராணுவ அதிகாரிகளோ உள்துறையோ ஏன் மோடி கூட பாகிஸ்தானை மிரட்டவில்லை

உலக நாடுகள் ஜெனிவா ஒப்பந்தத்தை பின்பற்ற பாகிஸ்தானை கோரின‌

பாகிஸ்தான் அரசு ஒரு விஷயத்தில் கவனிக்க வேண்டியது உண்டு

அதாவதும் இம்மாதிரி நேரங்களில் எதிரியினை பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள் நிபந்தனை பேரிலே விடுவிப்பார்கள்

அது எவ்வளவு பெரும் வல்லமை மிக்க எதிரி ஆனாலும் சரி, அன்று அந்த அன்னக்காவடியான கொமேனியே இப்படி அமெரிக்காவினை மிரட்டியிருக்கின்றார்

இன்னும் எங்கெல்லாமோ மிரட்டினார்கள்

அபினந்தன் பாகிஸ்தான் கையில் கிடைத்த துருப்பு சீட்டு ஆனால் ஒரு நிபந்தனையுமின்றி வெளியில் விட்டார்கள் ஏன்?

பாகிஸ்தானை ஆள்வது பிரதமர் என்றாலும் ராணுவமே பிரதான முடிவு

யாரோ ஒரு கும்பல் ஐஎஸ்ஐ பேச்சை கேட்டு இந்தியாவிடம் வம்பு இழுத்ததுக்கு பாகிஸ்தான் ராணுவம் ஏன் போருக்கு செல்ல வேண்டும் என்ற நிதானம் அவர்களிடம் இருந்தது

அதனால்தான் அபினந்தன் விடுவிக்கபட்டான்

இன்னொன்று ஏக சிக்கலில் இருக்கும் பாகிஸ்தான் யுத்தத்தை விரும்பவில்லை

ஆக உண்மை இப்படி இருக்க ஏதோ நாங்கள் மிரட்டினோம் 12 ஏவுகனைகளை காட்டி பயமுறுத்தினோம் என்பதெல்லாம் கட்டுக்கடங்காத பொய்

சரி 12 ஏவுகனையும் பெரும் வல்லமையும் உண்டல்லவா? நாலந்துலா பக்கம் அதை காட்டி சைனாவினை மிரட்டினால் என்ன?

அருணாச்சல பிரதேஷ் பக்கம் ஓடினால் என்ன?

செய்யமாட்டார்கள்

ராணுவத்தையும் அதன் வலிமையினையும் அரசியலாக்கும், 12 ஏவுகனை என மொத்த பலத்தையும் வெளி சொல்லும் இந்த மடத்தனத்தை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்

பிரச்சாரத்திற்கு வேறு காரணங்களை மோடி தேடுவது நல்லது