அந்த உறவுகள் மறுபடி துளிர்க்கின்றன‌

வட கொரியா அதிபர் ரஷியா வந்தார் – புதினுடன் நாளை முக்கிய பேச்சுவார்த்தை

அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை முறிந்த நிலையில் மறுபடியும் ராக்கெட் அது இது என பழைய பாட்சா பாயாக மாறிவிட்டார் வடகொரிய அதிபர்

வடகொரியா அமெரிக்காவுக்கு கடும் சவால்விட தொடங்கிய காலத்திற்கு பின் புட்டீனை சந்திக்கின்றார் வடகொரிய வெள்ளை தக்காளி

நாளை இருவரும் ஒன்றாக படமெடுத்து சிரிப்பார்கள் அதை பார்த்து சீன அதிபர் வாழ்த்துவார்

தன் வழக்கமான ஸ்டைலான நடு விரலை உயர்த்தி கத்தி கொண்டிருப்பார் டிரம்ப்

வடகொரியா உருவாகவும் அது ராக்கெட் அணுகுண்டு என பலம்பெறவும் சோவியத் ரஷ்யா ஒன்றே காரணம்

அந்த உறவுகள் மறுபடி துளிர்க்கின்றன‌

இந்த புட்டீன் எத்தனை பேரை காப்பாற்றுகின்றார், சிரிய அதிபரை தொடர்ந்து வடகொரிய அதிபரையும் அவர்தான் காப்பாற்ற போகின்றார்..

Advertisements

கோமதியின் சாதனை பெரிது

நிச்சயம் பி.டி உஷாவின் சாதனையினை விட கோமதியின் சாதனை பெரிது

பி.டி உஷா பெற முடியாத இடத்தினை கோமதி அடைந்துவிட்டார், உரிய பயிற்சிகள் கிடைக்கும் பட்சத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கிலும் அவரால் ஆச்சரியங்களை நிகழ்த்த முடியும்

ஆனாலும் இந்திய ஊடக நிலை மற்றும் அரசியல் நிலையினை கவனியுங்கள்

தோற்றுபோன பிடி உஷாவுக்கும் அஞ்சு ஜார்ஜுக்கும் கிடைத்த வரவேற்பு வெற்றிபெற்ற கோமதிக்கு இல்லை

ஏன் என்றால் இப்படித்தான்

இங்கு தமிழருக்கு டெல்லியில் லாபி செய்ய நல்ல தலமையும் இல்லை அவர்களுக்காக வாதிட யாரும் இல்லை.

இதே டோகாவில் வென்ற சாந்தி எனும் தமிழக வீராங்கனையினை இம்மாநிலம் அப்படித்தான் கைகழுவியது

ஆம் அவருக்காக பேச இங்கு யாருமே இல்லை, நீட்டுக்காக செத்துவிட்ட அனிதா போலவே அவரும் ஒரு கண்ணீர் அடையாளம்

அதைபற்றி கவலைபட இங்கு யாருமில்லை, அப்பொழுது மோடி இருந்திருந்தால் கூட தமிழர் உரிமை காக்க கிளம்பியிருப்பார்கள்

ஆனால் சாந்தியின் கெட்ட நேரம் மன்மோகன்சிங்கும் அதில் கலைஞரும் இருந்தார்கள், பின் எப்படி சாந்திக்கு நீதி கிடைக்கும்?

காவேரி முல்லை பெரியாறு போன்ற தேசிய விவகாரங்களில் தேசிய கட்சி ஆதிக்கம் செலுத்தும் அம்மாநிலங்கள் பெரும் பிடியினை கொண்டிருப்பது போல விளையாட்டு துறையிலும் கொண்டிருக்கின்றன‌

தமிழனை காக்க கிளம்பிய யாரும் இங்கு தமிழன் உரிமையினை விளையாட்டு போட்டியில் கூட காக்கவில்லை

இப்பொழுதும் கேளுங்கள், டெல்லி தமிழனை வஞ்சிக்கின்றது என்றுதான் அரசியல் பேசுவார்களே தவிர, இங்கு இவர்கள் கன்னடம் கேரளம் போல் தேசியம் பேசினார்களா என சிந்திக்கவே மாட்டார்கள்

எனினும் தேசத்து தங்க மகளை தமிழ்மகள் என ஒதுக்காமல் உரிய பயிற்சிகளையும் உற்சாகத்தையும் இத்தேசம் கொடுத்தல் வேண்டும்

அந்த அரவணைப்பிலும் தேசம் கொடுக்கும் நம்பிக்கையிலும் டோக்கியோவில் கோமதி ஆச்சரியங்களை நிச்சயம் கொடுப்பார்

இது கிறிஸ்துவத்துக்கு சோகமான மாதம்

இது கிறிஸ்துவத்துக்கு சோகமான மாதம்

பாரிசில் புகழும் பாரம்பரியமும் கொண்ட மாதா கோவில் எரிந்தது, இயேசு மேல் அறையபட்ட ஆணி, அவர் தலையின் முட்கிரீடம் உட்பட்ட பல புனித பொருட்கள் அங்குதான் இருந்தன‌

அவை காப்பாற்றபட்டன ஆனால் அந்த ஆலயம் பெரும் பழுதுபட்டது

அந்த சோகம் தீர்வதற்குள் இலங்கையில் அந்தோணியார் ஆலயமும், செபஸ்தியார் ஆலயமும் நொறுக்கபட்டன‌

இது கிறிஸ்தவ வரலாற்றில் வழிநெடுக நடப்பதுதான்

நொறுக்கபடுவதும் ஒழிக்கபடுவதும் அதிலிருந்து கிறிஸ்தவம் தளைத்து வருவதும் ஒன்றும் புதிதல்ல‌

காரணம் இயேசுவின் வாக்கே அப்படியானது

“இந்த தேவாலயத்தை இடித்து தள்ளுங்கள் மூன்றே நாளில் அதை கட்டுவேன்”

அந்த வாக்கு இந்த இரண்டாயிரம் காலமாக நிறைவேறியே வந்திருக்கின்றது

அது பாரிசிலும் நிறைவேறும், கொழும்பிலும் நிறைவேறும்

ஆலயங்கள் கட்டி எழுப்பபடும் பொழுதே மத ஒற்றுமையும் அன்பும் சகோதரத்துவமும் கட்டி எழுப்பபட வேண்டும்

ஆலயத்தை விட அதுதான் முக்கியமானது..

இதுவரை இயேசுவின் வார்த்தை எல்லாம் பலித்திருப்பதால் மிகுந்த வலுத்த விசுவாசத்துடன் அவரின் இந்த வார்த்தைகளையும் நம்பி கிறிஸ்தவ சமூகம் இந்த வலியான காலங்களை கடக்கின்றது

“இந்த தேவாலயத்தை இடித்து தள்ளுங்கள் மூன்றே நாளில் அதை கட்டுவேன்”

சமூக ஊடகத்துக்கான வெற்றி

தினமலர் பத்திரிகை ஏசப்பா எனும் எகத்தாளத்துக்கு மன்னிப்பு கேட்டிருப்பதும்

சிவகார்த்திகேயனின் வாக்கு தேவை ஏற்படின் கணக்கில் எடுக்கபடாது என தேர்தல் அதிகாரி சொல்லியிருப்பதும் சமூக ஊடகத்துக்கான வெற்றி

மாபெரும் வெற்றி

ஆனால் சிவகார்த்திகேயன் யாருக்கு வாக்களித்தார் என்பதை எப்படி கண்டறிவார்கள் என்பதுதான் சந்தேகம்..

அப்படியானால் யாரெல்லாம் யாருக்கு வாக்களித்தார் எனும் ரகசியம் கண்காணிக்கபடுகின்றதா?

இல்லை சிவகார்த்திகேயன் யாருக்கு வாக்களித்தேன் என இவரிடம் சொன்னாரா?

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இப்படி சொல்லியிருப்பது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்துகின்றது

ஏ தேர்தல் கமிஷனே இதென்ன கொடுமை?

இதோ அடுத்த சர்ச்சையினை கிளப்பியாயிற்று, வாருங்கள் நியாயம் கேட்போம்

விஷயம் சாதாரணம் அல்ல‌

இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொடுத்த எச்சரிக்கை மிக சரி

எளிதில் கட்டுபடுத்தமுடியா அளவு அங்கு சதிகார கும்பல் ஆழ ஊடுருவியிருக்கின்றது, பெரும் சிரமத்தில் இருக்கின்றது சிங்கள பாதுகாப்பு அமைப்பு

புலிகள் போல ஆள் , அம்பாரை, சேனை என இருந்தால் சமாளிப்பது எளிது, இம்மாதிரி கொடூர தீவிரவாதிகளை அடக்குவது சிரமம்

அதில் அனுபவமில்லா இலங்கை தடுமாறுகின்றது

அமெரிக்கா எச்சரித்தபடியே தொடர்ந்து வெடிகுண்டுகள் சிக்குகின்றன, இன்னும் நடமாடும் வாகன வெடிகுண்டுகள் சிக்கவில்லை

மோட்டார் சைக்கிளில் மனித வெடிகுண்டுகள் சவால் விட்டு சுற்றுகின்றன‌

‘உலகத்துக்கு ஒரே கடவுள்’ என எழுதப்பட்ட வாகனங்கள் நிறைய அங்கு தைரியமாக நடமாடுகின்றன, தொட்டால் தொட்டவனும் சாவான் எனும் தைரியத்தில் அவை கடும் சவால் கொடுக்கின்றன‌

நிலமை இப்போதைக்கு சீராவுவது போல் தெரியவில்லை, ஒரு நீண்டகால நெருக்கடிக்கு இலங்கை தள்ளபட்டிருக்கின்றது

விஷயம் சாதாரணம் அல்ல‌

தமிழக கடலோரங்களும் தமிழக ஆலயங்களும் தூதரகங்களும் பொது இடங்களும் கடும் பாதுகாப்புக்குள் வரவேண்டிய நேரமிது

ஜார்ஜ் உக்ளோ போப்

அவர் பெயர் ஜார்ஜ் உக்ளோ போப், கனடாநாட்டுக்காரர். பெயர்தான் போப் தவிர போப்பாண்டவர் அல்ல‌

பிரிவினை கிறிஸ்தவ வழி 1839ல் தன் 20ம் வயதிலே கிறிஸ்துவினை போதிக்க இந்தியா வந்தார். அதை சொல்வதில் தயக்கமே இல்லை.

அவர் கிறிஸ்துவத்தை போதிக்கவே வந்தார்

அந்நாட்களில் ஐரோப்பியர் மனநிலை அப்படி இருந்தது, இந்திய சூழலும் இங்கிருந்த பல வர்க்க வேறுபாடும் சாதியும் அவர்களை “இந்து தேச மாது சிரோ மணிகளை விந்தை ஒளிக்குள் வரவழைப்போம்” என உற்சாகமாக பாட வைத்தது

அதற்கு பல காரணங்கள்.

அந்நாளைய இம்மாதிரி போதகர்களுக்கு மொழி பெரும் தடை, வியாபாரம் ஆட்சி என்றால் டுபாஷி வைத்து சமாளிக்கலாம், ஆனால் போதனை என்றால்? எப்படி தமிழ்படித்தே ஆகவேண்டும்

இந்த போப் தூத்துகுடி பக்கம் சாயர்புரத்தில் தங்கினார், அருகிருந்த ராமானுச பிள்ளை, ராமானுச கவிராயர், நம்மாழ்வாரிடம் தமிழ்படித்தார்.

அப்படியே சிலரிடம் தெலுங்கும் கற்றார்.

கிறிஸ்துவினை போதிக்க தொடங்கினார், அதற்காகத்தானே சம்பளம் கொடுத்து அனுப்பி வைத்தார்கள், தஞ்சாவூர் பக்கமெல்லாம் தங்கி இருந்து கிறிஸ்தவ தொண்டு செய்தார்

தமிழனாக மாற அவர் தனக்கே சூட்டிய பெயர் ஞான சிகாமணி.

(அது சுத்த தமிழ்பெயரா என்றால் இல்லை, ஆனால் அக்கால தமிழ் அப்படித்தான் இருந்திருக்கின்றது)

முதலில் ஒழுங்காக கிறிஸ்தவ பணி செய்திருக்கின்றார், பல மக்களை கிறிஸ்தவராக மாற்றி இருக்கின்றார், ஆனால் சிக்கல் சாதி வடிவில் வந்திருகின்றது. கிறிஸ்தவராக மாறிய பின்னும் “நாங்கள் உயர்ந்த சாதி, அவன் தாழ்ந்த சாதி அவனை எங்களுக்கு அடங்க சொல், கடைசி வரிசையில் வை எங்களுக்கே முன்னுரிமை கொடு..” என சீறியிருக்கின்றார்கள்

“அன்பர்களே கிறிஸ்துவத்தில் சாதி இல்லை, எல்லா சாதியினரின் மீட்புகுக்காக இயேசு சிலுவையில் தொங்கினார்” என்றெல்லாம் அவர் போதித்தாலும் சாதி கிறிஸ்தவர்கள் கேட்கவில்லை

சாதியினை வைத்துகொண்டு கிறிஸ்துவம் வளர்க்க அவர் விரும்பவுமில்லை, இந்த சாதி ஒழியாது எப்படியும் நாசமாய் போங்கள் என மனதிற்குள் சொல்லிவிட்டு சமய பணிக்கு முழுக்கு போட்டார்

அவர் எழுதிய கடிதங்கள் அதைத்தான் சொல்கின்றன, தமிழக சாதி அவருக்கு உண்மையிலே ஞானத்தை கொடுத்தது,

மனிதர் உண்மையான ஞானசிகாமணி ஆனார்.

தமிழ்நாட்டு சாதிவெறி சாதாரணம் அல்ல என்பதும், முழுக்க கிறிஸ்துவம் அறியாமல் மதம் மாறுபவர்களால் சாதியினை விட முடியாது எனபதும் அவருக்கு விளங்கிற்று

இந்த ஞானசிகாமணி அதன் பின் பைபிள் மட்டும் வாசிக்காமல் தமிழரின் எலல இலக்கியதிற்குள்ளும் புகுந்தார்

விளைவு நாலடியார், திருவாசகம் , புறநானுறு, நன்னூல் என பல தத்துவ நூல்களை கற்றார். அதன் பின் அவர் போக்கு மாறிற்று.

ஆம் கிறிஸ்தவ போதனை குறைந்தது, தமிழரின் மிகபெரும் தொன்மையான சிந்தனைக்கு அடிமையானார். திருவாசகம் அவரை அழ வைத்தது. அவரே அது பற்றி எழுதினார், இப்படியாக‌

“பைபிளின் பால் என்பவரும், புனிதரில் பிரான்சிஸ் அசிசி என்பவருமே மிக உருக்கமாக எழுதுவார்கள் என எண்ணியிருந்தேன், இங்கோ மாபெரும் பக்திமான்கள் உருக உருக எழுதியிருகின்றார்கள்

இவர்களை விட மிஷினரிகளின் பக்தி பெரிதல்ல” என உணச்சி வசப்பட்டு சொன்னார்

திருகுறள் அவருக்கு மிகபெரும் ஞான நூலாக தெரிந்தது, இது சாதாரண நூல் அல்ல , உலகத்தார் அனைவரும் படிக்க வேண்டிய நூல் என திருகுறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்

அத்தோடு விடவில்லை அவர் மனம் கவர்ந்த திருவாசகம் முதல் புறநானாறு, நாலடியார், நான்மணிகடிகை எல்லாம் ஆங்கிலத்தில் அவரால் மாறிகொண்டே இருந்தன‌

லண்டனின் பத்திரிகைகளிலும் கல்லூரியிலும் அது கட்டுரையாக வந்தன, தமிழ் இலக்கியங்களுக்கு லண்டனில் பெரும் கவுரவம் அவரால் வந்தது

சமயம் போதிக்க வந்தவன், தமிழ்நாட்டு பண்டை இலக்கியத்தில் வீழ்ந்தால் அந்த மேலிடம் விடுமா?

திமுகவிற்குள் ஏதும் பாஜகவின் ஸ்லீப்பர் செல் வந்து கலந்து கலைஞரின் தமிழில் கரைந்தால் விடுமா?

அவரின் விசுவாச வாழ்வு திசைமாறுகின்றது என சொல்லி முதலில் பெங்களூருக்கு அழைத்தார்கள், அங்கு ஒரு பள்ளி தொடங்கினார்

பின்பு லண்டனுக்கு அழைத்தார்கள், பிரிட்டிஷாருக்கு தமிழத்தை ஆளும் வேலை இருப்பதால் அவரை எப்படி பயன்படுத்தலாம் என யோசித்தார்கள்

இதனால் லண்டன் பல்கலை கழக தமிழ் தெலுங்கு பேராசிரியர் என அமர்த்திகொண்டார்கள், அங்கு காரணம் அன்று ஆளதொடங்கிய வெள்ளையருக்கு தமிழ், தெலுங்கு கொஞ்சம் தெரிய வேண்டிய அவசியம் இருந்தது

தமிழகத்தில் எது செய்யலாம், எது செய்ய கூடாது என்ற பெரும் பாடம் நடத்த போப் தேவைபட்டார், அப்படியே லண்டனில் பணியாற்றி அங்கே மறைந்தார்

அன்றைய தமிழகத்து தமிழறிஞர்களுக்கும், சைவர்களுக்கும் அவர் மேல் பெரும் அபிமானம் இருந்தது. காரணம் திருவாசகத்தை படித்துவிட்டு அவர் அழுததை நேரில் கண்டிருக்கின்றார்கள்

அதனை மொழிபெயர்க்க போகின்றேன் என சொல்லி ஒவ்வொரு வரிக்கும் அவர் ஆங்கிலத்தில் வரி கிடைக்காமல் வார்த்தை கிடைக்காமல் உருகி அழுததை பார்த்திருக்கின்றார்கள்.

ஆம் இனிமையான மொழி என ஆங்கிலேயன் பெருமைபட்ட மொழியில் மாணிக்கவாசகரின் வரிகளுக்கு வார்த்தைகளே இல்லை

ஒரு மேல்நாட்டு ஆங்கிலேயனை நம்ம ஊர் திருவாசகம் இப்படி உருக்கிவிட்டதே என்ற பெருமிதம் அவர்களுக்கும் இருந்திருக்கின்றது

இப்படியாக இந்துக்களிடமும் பெரும் மதிப்பினை பெற்றவர் போப்

தமிழ் தெலுங்கு ஆசிரியராக லண்டனில் பணியாற்றி அங்கேயே மறைந்தார் ஜியு போப்.

“ஒரு தமிழ்மாணவன் இங்கே உறங்குகின்றான்” என என் கல்லறையில் எழுதுங்கள் என்பது தான் இங்கே தங்க போகின்றோம் என்ற நினைப்பில் தன் தமிழக நண்பர்களிடம் சொன்னதே

அப்படி உயில் எல்லாம் அவர் எழுதவில்லை, லண்டனில் அவர் கல்லறையிலும் அப்படி கல்வெட்டு இல்லை.

ஆனால் அப்படி பொறிக்கபட வேண்டும் என அவர் விரும்பியிருக்கின்றார், இன்னும் தன் கல்லறை தமிழர் பணத்தில் அமைய வேண்டும் என்றும் தன் உடல் அடக்கத்தின்பொழுது திருகுறளும் திருவாசகமும் ஆங்கிலத்தில் பாடபடவேண்டும் என்றெல்லாம் சொல்லியிருக்கின்றார்

கல்லறை லண்டனில் அமைந்துவிட்டதால் அவர் ஆசைபடி அவ்வாசகம் பொறிக்கபடவில்லை.

ஆனால் பச்சையப்பா கல்லூரி ஆசிரியர்கள் நிதிதிரட்டி அவர் கல்லறை அமைய‌ அனுப்பினார்கள் என்கின்றது வரலாற்று செய்திகள்

(ஆனால் கல்லறை ஒன்றும் விஷேஷமாக இல்லை, ஒருவேளை கல்லறை நிதியில் ஊழல் நடந்திருக்கலாம்)

அவர் வாழ்ந்த சாயர்புரத்தில் ஒரு கல்லூரி அவர்பெயரால் தொடங்கபட்டு இன்னும் நடக்கின்றது. ஜியு போப்ப்பின் பெயர் இன்றும் இங்கு நிலைபெற்று நிற்கின்றது

அவருக்கு சென்னையிலும் சிலை உண்டு, வள்ளுவன், அவ்வையார் வரிசையில் அவருக்கும் சென்னை கடற்கரையில் சிலை வைத்தார் கலைஞர்.

ஜி யு கிறிஸ்துவினை சுமந்து இங்கு வந்தார், ஆனால் திருவள்ளுவரையும், மாணிக்கவாசகரையும் லண்டனுக்கு கொண்டு சென்றார்

இன்று அவருக்கு பிறந்தநாள்

எங்கிருந்தோ வந்து தமிழ்கற்று தமிழராய் வாழ்ந்து தமிழ் இலக்கியங்களை உலகெல்லாம் கொண்டு சென்ற , ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் தமிழில் திருக்குறளையும் திருவாசகத்தையும் நாலடியாரையும் முழங்கிய அந்த பெருமகனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

இங்கிலாந்து வரலாற்றில் முதன் முதலில் “நானும் தமிழன்” என கம்பீரமாக , பெருமையாக சொன்னவன் அவனே

சம்மனசுகள் செத்துகிடப்பது போல் கிடக்கின்றது அந்த தளிர்கள்

எத்தனையோ பேரழிவுகளையும் போர் காலங்களையும் கொத்து கொத்தான பலிகளையும் பார்த்தாலும் கொழும்பு தாக்குதல் கண்ணுக்குள்ளே நிற்கின்றது

40 குழந்தைகள் ஆலயத்துள் கொல்லபட்டிருக்கின்றார்கள்

குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள் என சொன்ன இயேசுவின் ஆலயம், கையில் குழந்தையோடு அந்தோணியார் சொரூபம் இருக்கும் அந்த ஆலயம்

கொல்லவரும் புலியும் கொத்தவரும் பாம்பும் கூட அந்த மொட்டுக்களை கண்டால் மனமிரங்கி திரும்பியிருக்கும்

அந்த சண்டாளருக்கு அந்த இரக்கமுமில்லை

அந்த குழந்தைகளை கண்டபின்பாவது திரும்பியிருக்க வேண்டாமா? இரக்கமற்ற அரக்கர்களின் வெறியேறிய கொடூரர்களிடம் அதை எல்லாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

தன் குழந்தையினையே கொன்றுவிட்ட அக்கும்பல் இந்த அடுத்தவர் குழந்தையினை விடுமா?

அது திருப்பலிதான் , அதற்கு இந்த பிஞ்சுகளை பலி கொடுத்திருக்கின்றார்கள் சண்டாள பாவிகள்

கோவிலில் மெழுவர்த்தி ஏற்ற வேண்டிய நேரம் இந்த வெள்ளை தேவதைகளையே எரிய வைத்திருக்கின்றார்கள்

அப்பம் பிய்க்கும் நேரம் அந்த அழகு கிளிகளையே கிழித்தெறிந்திருக்கின்றார்கள்

ஆலய மணி அவர்களுக்காக அழுகின்றது, உடைந்த சொரூபங்கள் அவர்களுக்காக அழுகின்றன‌

சம்மனசுகள் செத்துகிடப்பது போல் கிடக்கின்றது அந்த தளிர்கள்