அந்த வீணை போன்ற குரல்

மிக மிக திறமையானவர்கள், ரசிகர்களை கட்டி போட்ட கலைஞர்களில் பெரும்பான்மையானோர் நெடுநாள் இருப்பதில்லை

திறமையினையும் ரசிக கூட்டத்தையும் அபூர்வ வரங்களையும் கொடுத்த இறைவன் சிலருக்கு ஆயுளை கொடுப்பதில்லை

மிக சிறு வயதிலே பாடவந்து 37 வயதிலே மரித்தும் போன சொர்னலாதாவும் அதில் ஒருவர்

மிக சிறந்த பாடகி, அதனைவிட சிறந்தது அந்த வீணை போன்ற குரல்

90களில் இருந்து 2008 வரை அவரின் காலம் இருந்தது, இளையராஜாவின் உச்ச காலம் அப்படியே ரகுமானின் தொடக்க காலத்தில் அற்புதமான பாடல்களை கொடுத்தவர் அவர்

தேனை வெண்கல குழாயில் மெதுவாக ஊற்றியது போன்ற குரல் அது, ஒரு வித இனிமையும் உருக்கமும் ஏக்கமும் கலந்த குரல் அது.

தமிழரை கட்டிபோட்ட பாடல்களை கொடுத்த குரல் அது, தேசிய விருதுகளும் பெற்று கொடுத்தது

மனதை உருக்கிய அந்த குரலுக்கு சொந்தகாரரான அற்புத பாடகி ஸ்வர்ன லதாவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

ஆண்டுகள் ஓடினாலும் அக்குரல் காற்றில் ஒலித்துகொண்டே இருக்கும்

அவரின் பிறந்தநாளில் ஆழ்ந்த அஞ்சலிகள்

“போறாளே பொன்னுத்தாயி பொலபொலவென கண்ணீர் விட்டு…” என்ற அற்புதமான பாடலை பாடியவர் அவர், அதற்கு தேசிய விருது கிடைத்தது

ஆனால் நம்மை அப்படி கண்ணீர் சிந்தவைத்துவிட்டு அவர் சென்றுவிட்டது என்ன நியாயம்?

கடவுளிடம் விருதுபெற சென்றிருக்கலாம்

இந்த ஆண்டவனுக்கு அழகான விஷயங்களை மானிடருக்கு கொடுத்துவிட்டு அதை பறித்து கொள்வதிலும் அதில் மானிடர் துடிப்பதை பார்ப்பதிலும் அப்படி ஒரு ஆனந்தம்

பாரதி, பட்டுகோட்டை முதல் பலரை அப்படி பறித்துவிட்டவிட்ட அக்கொடியவன் இந்த குயிலையும் பறித்துவிட்டான்

அவரைத்தான் அவனால் பறிக்க முடிந்ததே அன்றி, அவரின் பாடல்களை அவனால் தொட முடிந்ததா?

முடியாது, காலமுள்ள காலமளவும் அது நிற்கும். அவ்வகையில் ஆண்டவனை வென்றிருக்கின்றாள் சுவர்ணலதா.

வயதாகி குரல்வற்றி முகம் சுருங்கி சாவதை விட அவள் எக்காலமும் இளமையான குரலோடும் முகத்தோடும் மக்களிடம் நின்றுவிட அந்த பரம்பொருளுக்கு விருப்பமோ என்னமோ..

இதுதான் அவர் நம்பாத கடவுளின் விளையாட்டு

கலைஞரின் அரசியலை விமர்சியுங்கள், அவர் மதுகொள்கை இன்னபிற கொள்கைகளை விமர்சியுங்கள், ஆனால் இலங்கை போரை ஏன் நிறுத்தவில்லை என விமர்சிப்பதற்கு முன் கொஞ்சம் யோசிக்கலாம் ஆனால் செய்யமாட்டார்கள்

1983 கலவரத்தையொட்டி இந்தியா களமிறங்கியதும், போராளிகளை ஆதரித்ததும் இன்னும் பிற உதவிகளும் உலகறிந்தவை விட்டுவிடலாம்.

1986ல் வடமராட்சியில் பிரபாகரன் சுற்றி வளைக்கபட்டதும் ராஜிவ் தலையிட்டு, இனி உங்களால் மக்கள்தான் சாவர்கள், போதும் விளையாட்டு, இனி அமைதியாக வாழுங்கள் என ஒப்பந்தம் செய்ததும், அந்த அமைதிகாக்கும் படையினை புலிகள் சீண்டியதும், மக்கள் அழிவினை தாண்டி போராடமுடியாத இந்தியபடை கைகட்டி அடிவாங்கியதும் அதனை சிங்களனோடு சேர்ந்து புலிகள் “இந்திய நாய்களுக்கு இங்கு என்ன வேலை?” என சொன்னதையும் விட்டுவிடலாம்.

கலைஞர் அக்கால தமிழீழ‌தேசிய தலைவர் அமிர்தலிங்கத்தை ஆதரித்ததும் அவருக்கு இந்திய அளவில் ஒரு அங்கீகாரம் பெற்றுகொடுத்ததிலும் கலைஞருக்கு பங்கு உண்டு.

அகில இந்திய அளவில் டெசோ எனும் வலுவான அமைப்பினை தொடங்கி, மதுரையில் மநாடும் நடத்தி இனி ஈழதமிழர் மீது கை வைத்தால் இந்தியா பொங்கும் என ஒரு நிலையினை உண்டாக்கியது அவர்தான்.

டெலோ சபாரத்தினத்தினை கலைஞர் ஆதரித்ததும், பத்மநாபா மீது அன்பு கொண்டிருந்ததும் மறக்க கூடியவை அல்ல.

மற்ற இயக்கங்களை புலிகள் அழிக்க தொடங்கியவேளை, “முதலில் பழம் விழட்டும், சுளைகளை பின் பங்கு வைக்கலாம்” என புலிகளிடம் மன்றாடியவரும் அவர்தான்.

(மனிதர் அன்றே கனி,பழம் என்றுதான் சிந்தித்திருக்கின்றார் 🙂 )

அதன் பின் சுமார் 1000 தமிழ்போராளிகள், கவனிக்கவும் தமிழ் சக போராளிகளையும், சபாரத்தினத்தினத்தையும் கலைஞரின் எதிர்ப்பினை மீறி புலிகள் கொல்லும் போது கலைஞர் கண்ணீர் விட்டார். நிச்சயம் செய்திருக்க கூடா கொலை அது.

நாங்களும் உயிரை கொடுத்து போராட வந்த போராளிகள் என அவர்கள் கையெடுத்து கும்பிட்டபோதும் கோரமாக கொன்று, நடுதெருவில் டயர்போட்டு எரித்தது யார்? சிங்களனா?

புலிகளின் கோஷ்டி பூசலில் கிட்டு கால் இழக்க, 80 மாற்று இயக்க போராளிகளை “கந்தன் கருணை” இல்லத்தில் சுட்டது யார்? சிங்களனின் வெலிக்கடை சிறை கொடூரத்திற்கு இது குறைந்ததா?

அதன்பின் தமிழீழ தேசிய தலைவர் என அழைக்கபட்ட‌ அமிர்தலிங்கத்தை புலிகள் கொல்லும்போதும் கண்டித்தார்

இப்படியாக அவரை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் அவர்கள் பாட்டுக்கு கொலைகள் புரிந்தனர் புலிகள், எம்ஜிஆர் மறைந்து கலைஞர் நெடுநாளைக்கு பின் முதல்வரானாலும் தமிழகத்தில் புலிகளை அவர் தடுக்கவில்லை, சாவகாசமாக புலிகள் அலைந்தனர்.

அன்றைய பிரதமர் விபி சிங் அரசிடம் சொல்லி அமைதிபடையினை மீட்டதே கலைஞர்தான், அக்காலத்தில் அமைதிபடை பிரபாகரனின் முகாமினை மணலாற்றுபக்கம் வளைத்திருந்தது, இரு வாரம் தாமதித்திருந்தால் அன்றே அவர் காலி.

அதன்பின் பத்மநாபாவினை புலிகள் கொன்று கலைஞர் ஆட்சி கலைக்க காரணமாயினர், எப்படி இருந்திருக்கும் கலைஞருக்கு???, அவரிடம் என்ன பிரச்சினை என்றாலும் பத்மநாபா பற்றி முறையிட்டிருக்கலாம் அல்லவா? ஒரு மாநில முதல்வராக அவர் எப்படி அவமானபட்டிருப்பார்.

அதன்பின் உச்சமாக ராஜிவ் கொலை, அதோடு திமுக 5 ஆண்டு தலையெடுக்கவிலை, அதன்பின் அவரை அரியணை ஏற்றியது ஜெயலலிதாவின் ஊழல்.

இப்படியாக இவர்கள் யாருக்கும் அடங்கா அமைப்பு, இது அதிதீவிர அமைப்பு என கண்டுகொண்ட கலைஞர் அதன்பின் ஒதுங்கிகொண்டார், அதன்பின் எந்த சிக்கலுமில்லை, 1995ல் புலிகளை யாழ்பாணத்தில் இருந்து விரட்டியபோது கூட சிக்கல் இல்லை.

புலிகளுக்கு சர்வதேச ஆபத்து 2001ல் வந்தது, கண்ணி வைத்து பிடிக்க எண்ணிய மேற்குலகம் நார்வே மூலம் களமிறங்கியது, 2002 பத்திரிகையாளர் மாநாடு முதல் கண்ணி, பகிரங்கமாக சிக்கினார் பிரபாகரன், காரணம் பதிலளித்தவர் எல்லாம் பாலசிங்கம், பிரபாகரன் அம்மா மேடையில் பன்னீர் செல்வமாக அமர்ந்திருந்தார்.

இந்த புள்ளியில் வலை பின்னபட்டது, பாலசிங்கம் புலிகளின் முகமாக அமைதிபேச்சு வார்த்தையில் பங்கெடுத்தார், பிரபாகரனை மீறி அவரால் பதிலளிக்கமுடியவில்லை, அவர் ஒதுங்கிகொள்ள கருணா பிரிந்தார்.

ஆனால் மேற்குலகம் கடுமையாக காய் நகர்த்தியது, அமெரிக்காவில் வசித்த கோத்தபாயாவும், சரத்பொன்சேகாவும் களத்திற்கு வந்தனர், கடுமையான பயிற்சி, ஒரு முடிவோடு மேற்குலகம் எச்சரித்தது “இது புலிகளுக்கு இறுதிவாய்ப்பு, இல்லை என்றால் அவமானமான தோல்வியினை புலிகள் சந்திப்பர்” சொன்னது அமெரிக்க தூதுவர்.

அதோடு தனது முதல் அஸ்திரத்தை தொடுத்தது, அது 2006ல் ஐரோப்பாவில் புலிகளுக்கு தடை, இந்த தடையினை கலைஞரா கொண்டுவந்தார்?

2006ல் மாவிலாறில் யுத்தம் தொடங்கிற்று, செயற்கைகோள் தகவல் இலங்கைக்கு பறந்தது, புலிகள் தோல்விமுகம் தொடங்கிற்று, தமிழ்செல்வன் கொல்லபட்டது ஆப்கனில் பின்லேடன் மீது நடந்த நவீன தாக்குதலுக்கு நிகரானது, நிச்சயம் இந்திய பங்களிப்பு அல்ல, அதாவது லண்டனுக்கு பேசிய 5ம் நிமிடத்தில் ஆள் காலி. இந்த தொழில்நுட்பம் எல்லாம் இந்தியாவிடம் ஏது?

யுத்தம் தொடர்ந்து புலிகள் மொத்தமாக முடக்கபட்ட நிலையில் கலைஞர் மீது கண்டனம் பாய்ந்தது, அவரை பத்திரிகை மாநாடு நடத்த சொன்னார்? அவரா நார்வே குழு அனுப்பினார், அவரா பொன்சேகாவையும், கோத்தபாயாவையும் கொழும்பு அனுப்பினார்.

இந்திய நிலை சிக்கலாக இருந்தது, யுத்தத்தில் திரிகோணமலை இந்திய‌ ஆயில் டேங்கர்களை காக்கும் பதற்றம் இருந்தது, பெயருக்கு டம்மி ஆயுதங்களை கொடுக்கும் முன்னால் பாகிஸ்தானும்,சீனாவும் மறைமுகமாக அமெரிக்காவும் அள்ளி கொடுத்தன, சில் ஜப்பானிய பங்களிப்பும் உண்டு, காரணம் புலிகள் சில ஆயுதம் வாங்கிய இடம் வடகொரியா போதாதா?

இப்படி தன்னால் தடுக்கமுடியாத யுத்தம் என இந்தியா உணர்ந்தது, ஆனாலும் உயிரிழப்புக்களை தடுக்க சில யோசனைகளை முன்வைத்தது 1987ல் இருந்த இந்திய நிலைப்பாடு அது, ஆனால் புலிகள் இறுதிவரை அதற்கு ஒப்புகொள்ளவில்லை. விளைவு சகல் அழிவு,

ஒருவேளை இந்திய அரசு மகா தைரியமாக செயல்பட்டு இந்திய ராணுவத்தை அனுப்பினாலும் அது செல்லுமா? நிச்சயம் மறுக்கும். 1500 படைவீரர்களை இழந்து இரு எதிரிகளோடு போராடி அதுபட்ட அவமானம் கொஞ்சமல்ல, எப்படி செல்லும்?

அப்படியும் புலிகள் இல்லா யாழ்பாணமோ,மட்டகிளப்போ ஒரு அழிவினையும் காணவில்லை. உண்மையில் இனி யாழ்பாணத்திற்கு புலி ஆபத்து இல்லை என அம்மக்களே நிம்மதி அடைந்திருக்கின்றார்கள்.

இறுதி யுத்தத்தில் எத்தனை தமிழர் தமிழகத்தில் தீ குளித்தார், யாழ்பாணத்தில் அரை ஸ்பூன் மண்ணெண்ணெயினை எந்த தமிழனவது தலையில் இட்டானா? மட்டகிளப்பில் ஒரு சிமிழி பெட்ரோலை எவனாவது தொட்டானா?

அவர்களே அமைதியான போது கலைஞர் மட்டும் தீகுளிக்க வேண்டுமா? அவர் நிலையில் என்ன செய்யமுடியும்? அதே தான் 2 மணி நேர சம்பிரதாய உண்ணாவிரதம் தான். புலிகள் இவருக்கு எத்தனை முறை தண்ணி காட்டினார்கள், அவர் யோசிக்கமாட்டாரா? அமிர்தலிங்கமும், பத்மநாபாவும் அவர் கண்முன் வந்திருக்கமாட்டார்களா?

இப்படியாக பலநாடுகள் இணைந்த விளையாட்டில் இந்தியாவே திணற, அதாவது புலிகளை அழிக்க இந்தியா ஒருபோதும் நினைக்காது, சர்வதேச அரசியல் அது. அப்படி நினைத்தால் 1995 சந்திரிகாவுடனோ, 2000 ஆனையிறவு யுத்தத்திலோ இந்தியா புலிகளை அழித்திருக்கும், இது புலிகளுக்கும் தெரியும்.

ஒரு அனுதாபத்தில் இந்தியா பிரபாகரனை காப்பாற்றினாலும், நாளை காஷ்மீர தீவிரவாதிகள் யாரையாவது விடுவார்களா? அசாம் பிரிவினைவாதிகள் எப்படி சிந்திப்பார்கள்? நக்சலைட்டுகள் எப்படி யோசிப்பார்கள்? ஓகோ, இவ்வளவுதான் இந்தியவா? யாரையும் கொன்றுவிட்டு கொஞ்சநாளில் நாம் நினைத்ததை சாதிக்கலமா? பரவாயில்லையே, ம்ம் கிளம்பட்டும் தற்கொலைபடை என அணி அணியாய் கிளம்பமாட்டார்களா?

உண்மையில் தவறு யாரிடம்? லட்சகணக்கான ஈழமக்களை அகதிகளாக துரத்தியவர்களிடம் என்ன எதிர்பார்க்கமுடியும்? அகதியான மக்களுக்கு புலிகள் செய்ததென்ன? எத்தனை ஆயிரம் குடும்பங்கள் அனாதை ஆகின. அவர்களை பற்றி என்றாவது புலிகள் கவலைபட்டதுண்டா?

பல நாடுகளும் சிங்களனுக்கு உதவியாக நிற்க, புலிகளுக்கு யாருமில்லை, இதனைத்தான் சாகும் தருவாயில் புலி தமிழினி சொல்லியிருக்கின்றார்,

“எல்லா இனங்களையும் பகைத்துவிட்டு ஒரு இனம் விடுதலை நாடு அடைவது சாத்தியமா?”

இன்று தமிழுணர்வாளர்கள் தெலுங்கு மக்களை வம்புக்கு பகைக்கும்போதும் நாம் அதனைத்தான் சொல்கின்றோம், எல்லா இனங்களையும் பகைத்துவிட்டு எப்படி அமைதியாக வாழ முடியும்? சாத்தியமா?

இப்படியாக எல்லா தவறையும் புலிகள் செய்வார்களாம், சுருக்கமாக சொன்னால் 4 மாடும் ஒரு சிங்கமும் கதை தெரியுமல்லவா? அப்படி கடைசியாக சிங்கத்திடம் சிக்கிய மாடுதான் புலிகள்.

மற்றபடி மற்ற இயக்கங்களை போல ஒரு இயக்கமாக தொடங்கி, மற்ற எல்லா இயக்கங்களையும் அழித்து, தான் மட்டும் தமிழர்களின் ஒரே அடையாளமாகி, உதவ வந்தவனை எல்லாம் கொன்று விரட்டி, ஒரு அரசியலும் இல்லாமல் ஒரு முடிவுக்கும் வராமல் உலகை பகைத்து தானும் அழிந்து, மொத்த போராட்டத்தையும் முடிவிற்கு கொண்டு வந்ததின் மொத்த பொறுப்பும் புலிகளுக்கானது.

தமிழரின் உரிமை கொடுக்காமல் அங்கு அமைதி சாத்தியமில்லை எனும் கோஷத்தை, பிரபாகரன் கையில் ஆயுதம் இருக்கும் வரை அங்கு அமைதி சாத்தியமில்லை என மாற வைத்தது புலிகள்.

இன்று நிலை என்ன ஆனது?, இதோ பிரபாகரன் இல்லை நாடு எவ்வளவு அமைதி பார்த்தீர்களா? என சொல்லவைத்தாகிவிட்டது. மக்கள் நிலை முன்னிலையினை விட இன்று பலஆண்டு பின்னோக்கித்தான் சென்றுவிட்டது,

இனி அவர்கள் காயங்கள் ஆறி மறுபடி உரிமை கேட்கவே பல ஆண்டுகள் ஆகலாம்.

இதற்கெல்லாம் காரணம் கலைஞர்,சோனியா. இதனை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்றால் நம்ப நாம் என்ன அப்பாவி வன்னி மக்களா?

இதில் சுவாரஸ்மான விஷயம் என்னவென்றால் அரசியல் தொடக்க காலத்தில் கலைஞரின் சித்துவிளையாட்டுக்கள் ஏராளம், அப்படி செய்த தப்புகளில் எல்லாம் தப்பியவர், இன்று செய்யாத தப்பிற்காக பெரும் பழி சுமக்கின்றார்,

இதுதான் அவர் நம்பாத கடவுளின் விளையாட்டு.

இப்பொழுது கலைஞர் இருந்தாலும் ஏன் இலங்கை குண்டுவெடிப்பை நிறுத்தவில்லை? அவர் எதிர்கட்சி தலைவர் பதவியினை ராஜினாமா செய்யட்டும் என்றுதான் சொல்லிகொண்டிருப்பார்கள்.

வேறு எதுவுமாக இருக்கவே முடியாது

முகமது நபியின் புனிதமான போதனையினையும், அவருக்கு பின் வந்த புனிதமான கலீப்பாக்களின் ஆட்சியினையும் படித்து பாருங்கள்

இஸ்லாம் அல்லாதவரை கொல்லுங்கள் என எங்குமே அவர்கள் சொல்லவில்லை

இஸ்லாமிய வரலாற்றில் முகமது நபி காலம் முதல் ஆட்டோமன் துருக்கியர் மொகல் காலம் வரை எல்லா காலத்திலும் எல்லா மதத்தாரும் வாழ்ந்திருக்கின்றனர்

இவ்வளவுக்கும் இஸ்லாமியரின் பரம வைரியான யூதர்களே நபி காலத்தில் இருந்து ஆட்டோமன் காலம் வரை பாதுகாப்பான வாழ்வினையே வாழ்ந்திருக்கின்றனர்

மிக சிறந்த இஸ்லாமிய மன்னரான சலாவுதீன் யூதருக்கும் கிறிஸ்தவருக்கும் எல்லா பாதுகாவலையும் வழங்கியிருக்கின்றார்

இந்தியாவின் அக்பர் இந்துக்களுடன் நல்லுறவினை பேணியிருகின்றார்

எல்லா புகழ்பெற்ற இஸ்லாமிய மன்னருக்கும் ஆட்சி சிறக்க எல்லா மதத்தாரையும் அனுசரித்து செல்லும் அணுகுமுறை தெரிந்திருக்கின்றது

அதைவிட முக்கியம் எது உண்மையான இஸ்லாம் என மிக கவனமாக தெரிந்து பின்பற்றியிருக்கின்றார்கள்

இஸ்லாம் போதனையில் எங்கும் இஸ்லாம் அல்லோதரை கொல்லுங்கள் என சொல்லவே இல்லை

ஒருவேளை இவர்களாக ஒரு வரியினை அப்படி காட்டினால் அது “சாத்தானின் வரிகள்” அன்றி, வேறு எதுவுமாக இருக்கவே முடியாது.

தமிழ் தேசிய கும்பலுக்காக சென்றீரா?

கோமதி மாரிமுத்து என்பவர் நிச்சயம் நல்ல ஓட்டபந்தய வீரர்

ஆனால் ஜெகத் கஸ்பர் என்பவருடன் அமர்ந்து பேட்டி கொடுத்தபின் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் அம்மணி குழப்பவாதி

தெளிவானவர்களுக்கு ஜெகத் கஸ்பர் எனும் போலிபாதிரியோடு என்ன தொடர்பு?

அட கரகாட்ட கோஷ்டிகளும் நாட்டுபுற கோஷ்டிகளுமே ஜெகத்கஸ்பாரை கண்டு தலைதெரிக்க ஓடும்பொழுது அம்மணிக்கு என்ன வந்தது?

அம்மணி முன்பு ஆடிய விளையாட்டுக்காக அவருக்கு அரசுபணி கொடுக்கபட்டிருக்கின்றது, நிச்சயம் வாழ்த்துகுரியது

அதாவது அரசு அவருக்கான உதவிகளை சரியாக செய்கின்றது, நல்ல வேலை எனும் பொருளாதார அடித்தளத்தை அமைத்து கொடுத்திருக்கின்றது

இதோ கத்தாருக்கு சென்ற செலவெல்லாம் ஜெகத் கஸ்பாரா கொடுத்தார்?

இல்லை, நிச்சயம் இல்லை

அரசின் விளையாட்டு மேம்பாட்டு துறையில் சில சுணக்கம் இருக்கலாமே தவிர அடிப்படை காரியங்களில் கைவிடுவது இல்லை

அவர்களுக்கு வேலையும் இன்னபிற பாதுகாப்பும் கொடுக்கின்றது, அதிலிருந்து மேல் ஏறி வரவேண்டியது விளையாட்டாளரின் பொறுப்பு மற்றும் தேடல்

இங்கிருக்கும் யதார்த்தம் அது

பறக்கும் சீக்கியரான மில்கா சிங் பாகிஸ்தானில் அப்பட்டம் பெற்றார், ஆம் அந்த பாகிஸ்தான் அய்யூப் கான் தந்திரமாக “பறக்கும் இந்தியன்” என்பதற்கு பதிலாக “பறக்கும் சீக்கியன்” என வார்த்தையினை மாற்றி சொல்லி வாழ்த்தினான்

ஆனால் தேசத்திற்கு மில்கா சிங் இந்தியனாக வந்தார்

ஆம் அவர் வெறும் காலோடுதான் ஓடினார், ஷூ எல்லாம் இல்லை

தேசத்துக்காக ஓடும்பொழுது ஷூ என்ன? வெறும் கால் என்ன? பாகிஸ்தானை வென்றேனா இல்லையா? என சொல்லிவிட்டு சென்றான் மில்கா சிங்

ஆம், அவன் இந்தியன்

அப்படிபட்ட சாதனையாளர்கள் தேசபற்றாளர்கள் வாழ்ந்த பூமியில் இந்த கோமதி போலி பாதிரியுடன் கண்ணீர்விடுவது சரியல்ல‌

அம்மணிக்கு இத்தேசம் நல்ல பணியினை கொடுத்திருக்கின்றது, பாதுகாப்பு இன்னபிற வசதிகளை கொடுத்திருக்கின்றது

பணியினை தமிழகத்துக்கு மாற்றி கேட்கலாம் அது சரி ஆனால் ஏதோ தேசம் கைவிட்ட பெண்மணி போல கண்ணை கசக்குவது சரி அல்ல‌

அம்மா கோமதி, உனக்கு ஒன்றே ஒன்றை இத்தேசம் சொல்கின்றது

இந்த தமிழ்தேசிய கும்பலுக்கு இங்கு குழப்பம் ஏற்படுத்த தெரியுமே அன்றி யாரையும் வாழவைக்க தெரியாது

அவர்களால் அழிந்தவர் தொகை பல லட்சம் இருக்குமே அன்றி வாழ்ந்தோர் என ஒருவரையும் காட்டமுடியாது

ஆனால் அவர்கள்மட்டும் வாழ்வாங்கு வாழ்வார்கள்.

இந்த சதியில் நீயும் சிக்கிவிடாதே தாயே, சாதிக்க வேண்டுமானால் இந்தியனாய் இரு

இல்லையேல் இந்த தமிழ்தேசிய கும்பலிடம் சிக்கி நாசமாய் போ

அந்த மில்கா சிங்கையும் உன்னையும் ஒப்பிட்டு பார்த்து நாணத்தால் தலைகுனிகின்றோம்

அவனுக்கு இருந்தது நாட்டுபற்று, நாடு வெல்லவேண்டும் எனும் வெறி. வீரனுக்கு அதுதான் தேவை

மாறாக நான் எனது, எனக்கு என்ற குறுகிய வட்டம் கொண்ட , சுயநல வீரன் எவனும் சாதித்ததாக சரித்திரமே இல்லை

ஒவ்வொரு நாடும் விளையாட்டுக்கு கொட்டி கொடுப்பது ஏன்?

அதில் நாட்டுபற்றும் மக்கள் உடல் நலமும் இன்னும் பல தேவைகளும் இருக்கின்றன‌

ஆம் விளையாட்டை விரும்பி உடலை பலமாக்கும் சமூகமே சிறந்த ராணுவத்தை பெறும்

அதை முதலில் சொன்னவன் அலெக்ஸாண்டர், அந்த முதல் ஒலிம்பிக் போன்ற போட்டிகள்தான் அதில் உருவான வீரர்கள்தான் அலெக்ஸாண்டர் பெற்ற மாபெரும் வெற்றிக்கு அடிபப்டை

நெப்போலியனும் ஹிடலரும் இதில்தான் தோற்றார்கள், அவர்கள் சிறந்த தளபதியாயினும் வீரர்கள் சொத்தைகள்

இன்றும் உலகில் முன்னணியில் இருக்கும் சைனா அமெரிக்கா ரஷ்யா எல்லாம் ஒலிம்பிக்கில் சாதித்து முதலிடம் வர துடிக்கின்றார்களே எப்படி?

நல்ல விளையாட்டு வீரனே நல்ல ராணுவ ரீதியாக வரமுடியும் அல்லது அவனை பார்த்து உருவாகி வருபவர்கள் வரமுடியும்

உலகமெல்லாம் ஒவ்வொரு நாடும் விளையாட்டை ஊக்கபடுத்துவது அந்த அடிபப்டையிலே, நாட்டுபற்றை வளர்க்கவே

ஆனால் நீர் செய்யும் செயல்….வேண்டாம் அதிகம் பேச வைக்காதீர். தேசபற்றில்லா பதர்கள் நாட்டின் களைகள்

அது யாராய் இருந்தாலும் சரி

தமிழ் தேசிய கும்பலுக்காக சென்றீரா? இல்லை இந்தியாவுக்கா?

முக ஸ்டாலினும் ஜெகத்கஸ்பரும் அனுப்பினார்களா? இல்லை விளையாட்டுதுறை அனுப்பியதா?

இந்த நாட்டில் விளையாடி, இந்த நாட்டு அரசில் பணி பெற்று, இந்நாட்டின் சார்பாக பதக்கமும் பெற்று, இந்நாட்டின் தேசிய கொடியினை ஏந்திவிட்டு

கேவலம் திமுக கொடுத்த 10 லட்சம் ரூபாய்க்காக ஸ்டாலினை பார்த்தது தேசிய கீதம் என்பதும், ஜெகத் கஸ்பர் எனும் அவர்களின் பினாமியோடு சேர்ந்து
கண்ணீர் விடுவதும்

ச்ச்சீ…ச்ச்சீ.. தமிழகம் உன்னால் நாணி குனிகின்றது

இதையா இஸ்லாம் போதித்தது?

இலங்கை கொடூர தீவிரவாதியில் ஒருவனுக்கு சிறு குழந்தை இருக்கின்றது

ராணுவம் வளைத்து நிற்கும் பொழுது அவன் மதிகெட்டு தற்கொலை தீவிரவாதியாய் செத்துவிட அக்குழந்தையும் காயம்பட்ட நிலையில் வாப்பா வாப்பா என கதறுகின்றது.

ராணுவம் குறிப்பிட்ட‌ வீட்டிலிருந்து அக்குழந்தையினை மீட்கின்றது,

அக்குழந்தையோ வாப்பா வாப்பா என அழுது என் அப்பாவிடம் என்னை சேர்த்துவிடுங்கள் என மழலையில் கத்துகின்றது

ராணுவம் அக்குழந்தையின் காயத்துக்கு மருந்திடும் பொழுதே வாப்பா வாப்பா என அது மழலையில் கதறுவது இந்த நூற்றாண்டின் உருக்கமான சோக காட்சி

அக்குழந்தைக்கு நடந்தது எதுவும் தெரியாது, புரியவும் செய்யாது

அது குழந்தை அதற்கு மதம் தெரியாது, தீவிரவாதம் தெரியாது, கடவுளுக்கு அதை தெரியுமே அன்றி அதற்கு கடவுள் தெரியாது.

தெரிந்ததெல்லாம் தந்தையும் குடும்பமும் அந்த மகிழ்ச்சியுமே

தன் தந்தை ஒருவனே தனக்கு பாதுகாப்பு எனவும், ராணுவம் தன்னை தூக்கி செல்கின்றது எனவும் அஞ்சி கத்துகின்றது.

இலங்கையர் எல்லோரும் கண்ணீர் சிந்தும் காட்சி அது ராணுவத்தார் உட்பட‌

பெற்ற குழந்தையினை தவிக்க விட்டு அவன் என்ன இஸ்லாமிய தியாகம் புரிந்தானோ தெரியவில்லை, அந்த அளவு மதிகெட்டிருகின்றான்

வரும் காலத்தில் உண்மை தெரியும் பொழுது இக்குழந்தை எவ்வளவு மனசிக்கலுக்கு ஆளாகும்?

மிக மிக கவனமாக வளர்க்கவேண்டிய குழந்தை இது, இது சந்திக்கபோகும் வலி கொஞ்சம் அல்ல‌

இதையா இஸ்லாம் போதித்தது?

அக்குழந்தையின் அழுகுரல் இலங்கையினை மட்டுமல்ல உலகையே உலுக்கிகொண்டிருக்கின்றது.

“வாப்பா.. வாப்பா” என்ற கதறல், சிலுவையில் “இயேசு என் தந்தையே.. என் தந்தையே” என கத்திய அந்த வலிக்கு ஈடானது.

ஓவிய ராஜா ரவிவர்மன்

கலைகளில் சிறந்ததும் கடினமானதும் மிக நுட்பமானதும் ஓவிய கலை, மற்ற கலைகளில் பெருந்தவறு என்றாலும் திருத்தலாம்

ஆனால் ஓவியத்தில் சிறு பிழை என்றாலும் முடிந்தது விஷயம், சிற்பமும் ஓவியமும் அப்படியே

சிற்பத்தின் அஸ்திவாரம் ஓவியம் என்பதால் அதுதான் முதல்படி

இதைத்தான் பகவான் கண்ணன் தெளிவாக சொன்னான் “அர்ஜூனா கலைகளிலே நான் ஓவியம்”

ஓவிய கலையில் பண்டைய இந்தியா சிறந்திருந்தாலும் , தென்னிந்தியாவில் அது சிற்ப கலையாகவே வளர்ந்து நின்றது. கல்லில் வடிக்கும் ஓவியங்கள் காலத்திற்கும் நிலைக்கும் என தமிழரின் கலை அதை நோக்கியே இருந்தது

சோழ சாம்ராஜ்யம் கொடிகட்ட பறந்த காலங்களில் பசி ஒழிந்து செல்வம் நிறைந்து, பாதுகாப்பும் நிறைந்த காலங்களில் தஞ்சை கலைகளின் தலைநகரமாயிற்று. அப்பொழுது கரை நாடக இசை, சிற்பம், பாடல், ஓவியம் , கட்டட கலை என அது மிக உச்சத்தில் இருந்தது

அப்பொழுதுதான் தஞ்சாவூர் ஓவியங்களும் புகழ்பெற தொடங்கின, தஞ்சாவூர் ஓவிய பாணி தனிபுகழ் பெற்றது. வண்ண வண்ணமாய் ஓவியங்கள் வந்தன‌

பிற்காலத்தில் நாயக்கரும் மராட்டியரும் தஞ்சை பக்கம் வந்தபோதும் அது சிறந்தது. அதில் தங்க துகள் மாணிக்க கற்கள் பதித்து அது இன்னொரு கட்டத்திற்கு நகர்ந்தது

இந்தியாவின் மன்னர்கள் எல்லாம் தஞ்சாவூர் ஓவியகலை தெரிந்தவனினிடம் தங்கள் அரண்மனை ஓவியனை பயிற்றுவித்து தங்களை வரைந்து அதை தங்கத்தால அலங்கரித்து மகிழ்ந்தார்கள்

இன்றும் இந்தியாவின் பெரும் பழம் மன்னர்கள், பழம்பெரும் கடவுள்களின் படங்கள் எல்லாம் தஞசாவூர் ஓவிய பாணியிலே அமைந்திருக்கும், அந்த அளவு அது தனித்து நின்றது

அப்படிபட்ட தஞ்சை ஓவியத்தை கற்க திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்து வந்தான் ரவிவர்மா, ஆனால் கற்றுகொடுப்பார் யாருமில்லை. ஒருவழியாக மதுரையில் ஒரு ஓவியனை பிடித்து ஓரளவு கற்றார்

தஞ்சாவூர் ஓவியம் வண்ணத்தில் சிறந்தது, ஆனால் தத்ரூப ஓவியம் என்பதில் வராது.

தத்ரூபம் என்றால் சேலையின் மடிப்பினை கூட அப்படியே வரைவது

தஞ்சாவூர் ஓவியங்களை இன்னும் மேம்படுத்த ரவிவர்மா எண்ணியபொழுதுதான் ஐரோப்பிய ஓவிய‌ தொடர்பு கிடைத்தது

நிச்சயம் ஐரோப்பிய ஓவிய கலைக்கு மைக்கேல் ஏஞ்சலோ தலைகீழ் திருப்பம் கொடுத்திருந்தான். தத்ரூப ஓவியங்களை எப்படி வரைவது என்பதை அவன் சொல்ல்லிகொடுத்திருந்தான் போப் ஆண்டவரே அவனை ஆலய ஓவியங்களை வரைய சொன்னார்

முகத்தில் உணர்ச்சிகள் கொட்டும் ஓவியபாணி அவன் தொடங்கி வைத்தது, இன்று கத்தோலிக்க‌ கிறிஸ்தவ ஆலயங்களில் வணங்கபடும் மிக உருக்கமான ஓவியம் மற்றும் சிலை மாடல்கள் எல்லாம் அவனால் உருவானவை.

டாவின்சி என்பவன் ஆல்ரவுண்டர் அவன் விஞ்ஞானம் , சிற்பம், ஓவியம், அறிவியல், மருத்துவம், கட்டடகலை, கருவிகள் என அவனுக்கு பல நூறு மூளைகள் மற்றும் மண்டைகள்

மைக்கேல் ஏஞ்சலோ ஓவியனும் சிற்பியுமாய் இருந்தான், இன்று கத்தோலிக்க உலகம் காணும் ஏகபட்ட ஓவியம் அவன் கொடுத்ததே

அப்பாணி பின் மன்னர் அரண்மனைக்கும் சென்றது, அவன் வழிவந்த ஓவியர்கள் அரசன், ராணியினை எல்லாம் பெரும் உயரமாக வரைந்து வைத்தார்கள் அதுவும் அரண்மனையினை அலங்கரித்தது

அக்கால ஐரோப்பிய மன்னர்கள் எல்லாம் இன்று அப்படித்த்தான் ஓவியமாக தொங்குகின்றார்கள்

இந்த பாணியும் அதற்குரிய வண்ணங்களும் கிடைத்தபின் ரவிவர்மா ஓவியம் புகழ்பெற தொடங்கியது, கொஞ்சம் கொஞ்சமாக புகழடைந்தான், சென்னை ஓவிய போட்டியில் அவன் ஓவியங்கள் பரிசை தட்ட தொடங்கியதும் வெளிநாட்டு போட்டிகளுக்கும் அனுப்பபட்டது

சிகாகோவில் அவன் ஓவியம் பெரும் வரவேற்பினை பெற்றது

தத்ரூப ஓவியங்களை வரைவதில் அவன் பெரும் புகழ்பெற்றான், மன்னர்களை வரைந்தது போக யார் யாருக்கோ வரைந்தான், குறிப்பாக வெள்ளையர்களுக்கு, அந்த ஓவியம் இன்றும் சென்னை விக்டோரியா ஹாலில் உண்டு

அவனுக்கு தனி அரண்மனையும் ஆட்களும் நியமிக்கபட்டனர், வெள்ளையர் அவனை சர் பட்டம் கொடுத்து ராஜா ரவிவர்மா என கொண்டாடினர்

எப்படி அவன் கொண்டாடபட்டான் என்றால் அக்காலத்திலே அவனுக்காக தனி தபால் நிலையம் திறக்கபட்டது, அந்த அளவு உலகெல்லாம் இருந்து கடிதமும் பாராட்டும் வந்துகொண்டே இருந்தன‌. அவன் வாழ்ந்த ஆட்டுங்கால் பகுதியில் அவன் ஒரு ராஜா போலவே நடத்தபட்டான்

“ஓவிய ராஜா” ஆனார் ரவிவர்மா

மன்னர்களை வரைய தொடங்கிய அவர் பின்பு புராண, இதிகாச படங்களை வரைந்தார். அதில் அந்த தயமந்தி படம், சாகுந்தலா படமும் பெரும் புகழ் கொடுத்தன‌

இலக்கியத்தில் காளிதாசனும் இன்னும் பலரும் சொன்ன அழகியல் காட்சிகளை அப்படியே தூரிகையால் கண்முன் நிறுத்தினான் ரவிவர்மன்

பின்னர் அது புராண காட்சி என வளர்ந்து கடவுளரை வரையும் அளவுக்கு இழுத்து சென்றது

இந்து கடவுள்களை மிக சிரத்தையாக வரைந்தான் ரவிவர்மா

அதுவரை இந்து கடவுள்கள் புராணங்களில் இருந்தன, ராமனுக்கு நீல‌கரிய நிறம், கண்ணன் கரிய நிறம், லட்சுமி வெண் தாம்ரையில் செல்வத்தோடு இருப்பாள், சரஸ்வதி கையில் வீணை இருக்கும் என ஏட்டிலேதான் இருந்தன‌

சில சிற்பங்களில் அது தெரிந்தது, ஆனால் வண்ண ஓவியமாக இல்லை

அதுவரை குழந்தை கண்ணன், ராமன், சரஸ்வதி போன்ற கடவுள்களுக்கு தத்ரூப படங்கள் இல்லை.

ரவிவர்மனே இந்து தெய்வங்களை மிக மிக தத்ருபமாக வரைந்த முதல் ஓவியன். அது லட்சுமி, சரஸ்வதி, ராமன், வெண்ணை திருடும் கண்ணன், விஸ்வரூப கண்ணன் என எதுவாகட்டும் அவனே மூலம்

அந்த ஓவியங்கள் பார்ப்போர் மனதை உருக்கின, இந்துக்களின் தெய்வங்கள் எல்லா வீடுகளிலும் வர தொடங்கின‌

இன்று காலண்டர் முதல் பூஜை அறை வரை நாம் காணும் மிக உருக்கமான இந்து ஓவியங்கள் எல்லாம் அவனே கொடுத்தது, இன்றும் அவைதான் பிரதியெடுக்கபடுகின்றன‌

மைக்கேல் ஆஞ்சலொ கிறிஸ்தவ மதத்திற்கு ஒவியம் மூலம் ஆற்றிய பெரும் பணியில் சற்றும் குறையாதது இந்து மதத்திற்கு தன் ஓவியம் மூலம் ரவிவர்மா ஆற்றியிருப்பது

இன்று அவனின் பிறந்த நாள். இந்துக்களின் தெய்வத்திற்கு உருகொடுக்க வந்த தெய்வீக ஓவியனின் பிறந்தநாள்

நீங்கள் இந்துவாக இருந்தால் உங்கள் வீட்டில் வணங்கபடும் எந்த தெய்வம் என்றாலும் அந்த தெய்வீக உருவம் அவன் கொடுத்தது, கடைகள் இன்னபிற இடங்களில் எல்லாம் இருக்கும் அட்டகாச ஓவியம் அவன் வரைந்து கொடுத்தது

அவ்வகையில் தன் கலையால் பெரும் சேவை செய்தவன் அந்த மாபெரும் கலைஞன்

கலைகளில் நான் ஓவியம் என சொன்ன பகவான் கண்ணனை தன் கலையால் தத்ரூபமாக கண்முன் நிறுத்தியவன் ரவிவர்மன்

அந்த வெண்ணை உண்ணும் கண்ணன் முதல், ஆலிழையில் ஆடும் நாதன், கருமை நிற கண்ணன், கோதையருடன் உலாவும் கண்ணன், பாஞ்சன்யம் எடுக்கும் கண்ணன், உச்சமாக விஸ்வரூபமெடுக்கும் கண்ணன் என எல்லாம் அவன் வரைந்து கொடுத்ததே

கண்ணனை மட்டுமல்ல இந்து தெய்வங்களின் அருளும் புன்னகையும் கொட்டும் முகமும் தெய்வீக வடிவமும் அவன் கொடுத்தது

கவிராஜா கம்பன் என்றால் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் ஓவிய ராஜா ரவிவர்மன்.

தன் அசாத்திய கலையால் உலகத்தோரை திரும்பி பார்க்க வைத்த அந்த மாபெரும் கலைஞனுக்கு பிறந்தநாள்

இந்தியாவில் எங்கு திரும்பினாலும் அவன் வரைந்த ஏதாவது ஒரு ஓவியத்தை பார்க்காமல் ஒரு நாளை கடக்க முடியாது என்ற அளவில் இங்கு நிலைத்துவிட்ட அந்த பெரும் கலைனுக்கு அஞ்சலிகள்

அவர்கள் எண்ணபடியே வாழட்டும்

பள்ளிவாசல் என்றால் குரான் இருக்கும் இன்னும் ஏகபட்ட இஸ்லாமிய நூல்களும் அவற்றுக்கான விளக்கங்களும் இருக்கும்

வந்தோருக்கு உணவும் இன்னும் பிற நல்ல விஷயங்களும்தான் பள்ளிவாசலில் இருக்கும், இதுவரை உலகம் கண்டது

ஆச்சரியமாக இலங்கை பள்ளிவாசல்களில் என்னவெல்லாமோ மீட்கபடுகின்றன, அதில் வாள் முதல் ஏகபட்ட ஆயுதங்களும் அடக்கம்

பாலில் கலந்துவிட்ட விஷம் போல அந்த கொடூர கும்பல் புனிதமான பள்ளிவாசல்களை ஆயுத குடோனாக மாற்றி வைத்து தொலைத்திருக்கின்றன‌

இந்நிலையில் அங்கு ஒரு விஷயம் மனதை உருக்குகின்றது

தேவாலயங்களில் பலியானோருக்காக நல்ல இஸ்லாமியர் ஒருபக்கம் பிரார்த்திக்கின்றனர்

இந்து ஆலயங்களிலும் சிறப்பு விளக்கு வழிபாடுகள் நடக்கின்றன, ஏராளமான இந்து ஆலயங்களில் சிறப்பு பூஜை நடத்தி கிறிஸ்தவர்களுக்கான ஆறுதலை இலங்கை சைவ மக்கள் உருக்கமாக தெரிவிக்கின்றனர்

அம்மக்கள் மகா ஒற்றுமையாக வாழத்தான் நினைக்கின்றார்கள், அவர்கள் எண்ணபடியே வாழட்டும்

அமெரிக்கா கடும் அதிருப்தியில் இருக்கின்றது

தனது மாபெரும் பலமும் தன் வான்பலத்தின் அடையாளமுமான எப் 35 ரக விமானம் பசிபிக் கடலில் இன்னும் மீட்கபடாதத விவகாரத்தில் அமெரிக்கா கடும் அதிருப்தியில் இருக்கின்றது

இந்த பழனிச்சாமி அரசு அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது போல அவற்றை பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு சும்மா இருக்க முடியாது

காரணம் அதன் அதிநவீன தொழில்நுட்பம் எதிரிகளான சீனா, ரஷ்யா கையில் கிடைத்துவிட்டால் சிக்கல், அதே போல தயாரித்துவிடுவார்கள்

இதனால் மிக கடுமையான முயற்சி செய்தும் விமானம் விழுந்த இடம் துல்லியமாக தெரிந்தும் தன் முழு சக்தியினையும் பயன்படுத்திவிட்டு கையினை பிசைந்து நிற்கின்றது அமெரிக்கா

அவர்களிடம் வானில் பறந்தபடியே கடலடியில் 25 ஆயிரம் அடி வரை கண்காணிக்கும் சிறப்பு விமானங்கள் உண்டு, நீர்மூழ்கியினை கண்டறிய செய்யபட்டது அவை. இது போக நீர்மூழ்கியில் நவீனமானவையும் உண்டு

ஆனாலும் மீட்கமுடியவில்லை என்றால் வஸ்து அங்கே இல்லை என்ற முடிவுக்கு வந்திருக்கின்றது அமெரிக்கா

அப்படியானால் எப் 35 எங்கே? பயிற்சிக்காக கிளம்பிய விமானம் அது

விமானியின் கடைசி உரையாடலான “என்னால் பயிற்சியினை தொடர முடியவில்லை, இடையில் முடிக்கின்றேன்” என அந்த விமானி சொன்னதை படையப்பா ரம்யா கிருஷ்ணன் ரஜினி கல்யாண கேசட்டை பார்ப்பது போல திரும்ப திரும்ப பார்த்த அமெரிக்கா சட்டென விமானியினை தேடியது

ஆம் விமானி என்பவரையும் காணவில்லை

விமானத்தையும் காணவில்லை விமானியினையும் காணவில்லை என்பதால் பொறிதட்டி விமானியின் தரவுகளை சோதித்தால் அன்னார் புதியவர் பெரும் அனுபவம் எல்லாம் இல்லை

ஆக முன்பு ஈராக்கிய மிக் விமானத்தை இஸ்ரேல் அதன் விமானியினை வளைத்து கடத்தியது போல கடத்தினார்களா என சோதித்தால் விமான கண்காணிப்பு ரேடாரில் விமானம் எங்கு காணாமல் போனதென்றால் கடலுக்கு மேல்தான், எல்லை கடந்ததாக அது காட்டவில்லை

அப்படியானால் யாரும் அடித்து தூக்கிவிட்டார்களா, இல்லை விமானி சதிசெய்து ரேடாரில் இருந்து மறைத்தாரா?

அந்த விமானம் எதிரி நாட்டு ரேடாரில் சிக்காத வகை, அதை சொந்தநாட்டுக்கு எதிராகவே காட்டிவிட்டாரா? என ஏக குழப்பம்

அமெரிக்கா கனத்த அமைதி, 3 வாரமாக தேடியும் விமானம் அகப்படவில்லை

ஆக விமானமும் காணவில்லை விமானியும் காணவில்லை

விமானம் எதிரிகளிடம் சிக்கி இருக்கலாம் அது அவர்களுக்கு தேவை? இந்த விமானி எதற்கு தேவை? ஜப்பானிய சுஷி சமைப்பதற்கா

விஷயம் இல்லாமல் இல்லை அதி நவீன 5ம் தலைமுறை ஸ்டெல்த் விமானமான விமானம் கிடைத்தாலும் அதை இயக்க்கும் விமானி கிடைப்பாரா?

அதனால் மொத்தமாக இரண்டையும் அள்ளிபோட்டு சென்றிருக்கின்றார்கள்

ஏதோ ஒரு புலி குறிவைத்து பதுங்கி பாய்ந்திருக்கின்றது குறி தப்பவில்லை, அது திமிங்கலம் போல கடலுக்குள் இருந்ததா இல்லை தரையில் இருந்ததா என தெரியவில்லை

விஷயம் கசிகின்றது, விமானம் எதிர்தரப்புக்கு சென்றுவிட்டது உறுதி என்கின்றது ஒரு செய்தி

இனி அமெரிக்கர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா?

ஒருவேளை சும்மா ஒரு டப்பாவினை கடலில் இருந்து இழுத்து இதோ வீழ்த்தபட்ட விமானம் என சொன்னாலும் சொல்வார்கள் அவர்கள் கெத்து அப்படி

கடும் எச்சரிக்கை

இலங்கையில் இன்னும் தாக்குதல் நடத்த படலாம் என கடும் எச்சரிக்கை விடுதிருக்கின்றது அமெரிக்கா

அமெரிக்காவினை விட இஸ்ரேலின் எச்சரிக்கையே கடும் அச்சம் கொடுக்கின்றது, ஆம் இலங்கையின் இஸ்ரேலியருக்கு மிக மிக உச்சபட்ச எச்சரிக்கையினை அந்நாடு கொடுப்பது சரியான அறிகுறி அல்ல‌

பிடிபடும் ஆயுதமும் கொல்லபடும் நபர்களிடமிருந்து கைபற்றபடும் தகவலும் பெரும் அதிர்ச்சி அளிக்கும் ரகம்

கொழும்பு மட்டுமல்ல, மொத்த இலங்கையினையே ஆப்கன் போல நாசமாக்கும் பெரும் சதிதிட்டம் இது

ஆடிப்போய் இருக்கின்றது சிங்கள உச்சபீடம்

நிலமை இன்னும் சரியாகவில்லை எனினும் கடும் சோதனையிலும் இறுக்கமான நடவடிக்கையிலும் யாழ்பாணம் முதல் கொழும்புவரை பலர் கைது செய்யபட்டும் வெடிபொருள் மீட்கபட்டு கொண்டிருக்கின்றது

ஆனாலும் அமெரிக்கா உச்சகட்ட அறிவிப்பு வெளியிட்டிருப்பதும் இஸ்ரேல் அதனை ஆமோதித்திருப்பதும் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன

உலக வழக்கம் இது

இஸ்லாமியர் என்றாலே கொடூரமானவர்கள் என்றும் கொள்ளை அடிப்பவர்கள் என்றும் ஆலயங்களை நொறுக்கி தீக்கிரையாக்குவார்கள் என்றும் ஏகபட்ட பேர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

உண்மை அது அல்ல, அக்காலத்தில் மதகுருக்களின் மறைமுக ஆட்சியில் ஆலயமே செல்வங்களின் பொக்கிஷங்களின் கஜானாவாக இருந்தது

ஆலயங்களை உடைத்து புதையலை தேடுவது அக்கால வழக்கம், சாலமோன் அரசனின் ஆலயத்தை நெபுகாத்நேச்சர் எனும் பாக்தாத் மன்னன் அப்படித்தான் உடைத்தான்

அனுராதாபுர புத்த விகாரையினை ராஜராஜ சோழன் அப்படித்தான் கொள்ளையடித்து வந்தான்

அலெக்ஸ்டாண்டரும், நெப்போலியனும் எகிப்தின் கல்லறைகளையும் ஆலயங்களையும் விடாமல் நொறுக்க்கி தேடினார்கள்

உலக வழக்கம் இது

ஆப்கனின் கஜினி எனும் ஊரில் இருந்த முகமது எனும் அரசனும் அதை செய்யவே இந்தியா வந்தான்

கிட்டத 17 முறை அவன் படையெடுத்தான் , சிலமுறை தோல்வி சிலமுறை சிறிய வெற்றி

அவன் ஒன்றும் மாவீரன் அல்ல, அப்படி இருந்திருந்தால் இங்கே தன் சாம்ராஜ்யத்தை அமைத்திருப்பான், அவனோ சிறிய குழுவோடு வந்து கொள்ளையிட்டு ஓடிபோகும் கொள்ளையனாய் இருந்தான்

மாலிக்காபூர் மதுரை ஆலயத்தை உடைத்ததும் அவ்வகையே

உமர் அலி எகிப்தை தாக்கியதும் அப்படியே

இந்த நாதிர்ஷா மற்றும் தைமூர் எல்லாம் அப்படித்தான் இந்தியா மேல் பாய்ந்தார்கள்

அது அக்கால வழக்கம், 1400 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் இல்லை , அப்பொழுதும் ஆலய கொள்ளைகளும் இன்னும் பலவும் நடந்தன‌

செங்கிஸ்கான் செய்திருக்கும் கொடூரம் ஏராளம் அவன் என்ன இஸ்லாமியனா?

இல்லை

போர் என நாகரீகமாக சொன்னாலும் அதன் பெயர் கொள்ளை முயற்சியே

அதை பின்னால் வந்த அரேபிய மன்னர் செய்தார்கள் அவ்வ்வளவுதான் விஷயம்

ஐரோப்பாவில் நடக்கா போரா? இரு உலகபோரே அவர்கள்தான் நடத்தினார்கள் அது பற்றி எல்லாம் யாரும் பேசமாட்டார்கள்

இதெல்லாம் மானிட விதி, வலுத்தவன் வெல்லும் காட்சி

ஆனால் இக்கால இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல்களுக்கு முதல் காரணம் கச்சா எண்ணெய் மற்றும் உலக அரசியல்

ஆம் இங்கு எதுவும் மதத்துக்காக நடப்பது அல்ல‌

எண்ணெயால் கொழுத்துவிட்ட அரபுலகம் இஸ்லாமிய நிதி என அள்ளிகொடுக்கின்றது, அதை வைத்து சிலர் சில காரியங்களை செய்யும் பொழுது பல பன்னாட்டு சக்திகள் தவறான வழிகாட்டுகின்றன‌

மார்க்க நெறியிலிருந்து அவர்களை சாத்தானின் வழிக்கு இழுத்து செல்கின்றன‌

இவர்களும் அந்த தவறான உபதேசத்தில் மயங்கி இந்த படுபாதக செயல்களை செய்கின்றார்கள்

அரபு உலகின் கடைசி சொட்டு எண்ணெய் தீரும் வரை அல்லது எண்ணெய்க்கு மாற்று பொருள் கண்டுபிடிக்கும் வரை இச்சிக்கலுக்கு தீர்வு இல்லை

இஸ்லாமிய பெருமக்களே ஒப்புகொள்ளும் விஷயம் எமது போதகர்களிலே கடும்போக்கான போதகர்கள் யாராலோ உருவாக்கபட்டு எப்படியோ வழிநடத்தபட்டு எம் மக்களில் சிலரை சைத்தானிய வழிக்கு இழுத்து செல்கின்றார்கள் என்பது

ஆம் இவர்கள் யார்? யாரால் உருவாக்கபடுகின்றனர்? இவர்களுக்கான வெடிபொருள் முதல் இலக்கு வரை யாரால் நிர்ணயிக்க படுகின்றன?

இவற்றை எல்லாம் கவனமாக பாருங்கள் அது அரபு அரசியல் மற்றும் எண்ணெய் பணம் என்றுதான் முடியும்

அதுதான் சமீபகால குழப்பங்களுக்கு காரணம்

மற்றபடி இஸ்லாமியர் என்றாலே அவர்கள் வன்முறையாளர் என சொல்வது சரியல்ல‌

ராஜராஜ சோழனுக்கு ஈழத்தில் என்னவேலை? அலெக்ஸாண்டருக்கு ஆசியாவில் என்ன சோலி

செங்கிஸ்கானுக்கு ரஷ்யாவில் என்ன ஆட்சி?

ஆக அந்த வரிசையில் இஸ்லாமிய மன்னர்கள் ஆண்டால் மட்டும் அது மத வன்முறையா ? அல்ல‌

இதில் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும்

இந்து மன்னர்கள் ஏன் இப்படி பெரும் அடையாளமில்லை என கேட்டால் விஷயம் சிக்கலானது

பண்டைய இந்துக்களில் அப்படி மன்னர் இருந்தனர் ஆனால் பிற்காலத்தில் இந்த புத்த மதமும் சமணமும் இந்தியாவினை ஆட்கொண்டது

அதன் தாக்கத்தில் நாடு பிடித்தல் பெரும் போர் நடத்துதல் என இந்தியா செல்லவில்லை

ஆதிசங்கரர் எழுச்சிக்கு பின் இந்துமதம் தழைத்து ஓங்கினாலும் வளமான கங்கா, சிந்து கோதாவரி காவேரி என சுகமான ஆட்சி செய்த மன்னர்களுக்கு அடுத்த நாட்டை பிடிக்கும் அவசியம் இல்லை

ஆம் எல்லா கொள்ளை அரசுகளும் ஒன்றுமில்லா பாலை நிலம் அல்லது கடும்குளிர் தேசத்தில் இருந்துதான் உருவாகும்

இந்தியா செழிப்பான நாடு என்பதால் அடுத்தவனை கொள்ளையிட அவசியமில்லை

ராஜ ராஜ சோழன் போன்ற ஒரு சிலரே பிற்காலத்தில் மதத்துக்காக அதிலும் வியாபாரத்திற்காக யுத்தம் நடத்தியிருக்கின்றார்கள்

மற்றபடி இந்தியாவில் அன்று எல்லாம் இருந்ததால் அண்டை நாட்டில் கொள்ளையிடும் அவசியம் இல்லை

இந்த இஸ்லாமிய தீவிரவாதமெல்லாம் வெறும் 40 ஆண்டுகளுக்கு முன்புதான் தீவிரமாயின‌

ஆம் எண்ணெய் பணம் கொட்ட கொட்ட படுதீவிரமாயின அதுவும் சோவியத்தின் வீழ்ச்சிக்கு பின் பேயாட்டம்

ஆனால் ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலுக்கு பின்னும் ஒரு வல்லரசு அதனால் பெரும் பயன்பெறும்

அதை ஆழ கவனியுங்கள் இஸ்லாமியர் மேல் உங்களுக்கு பரிதாபமே மிஞ்சும்