இந்த திமுகவுக்கும் தும்பிகளுக்குமான புலி சண்டையில் எது சரி என்றால் இதுதான்
திமுக என்பது இந்தியாவோடு ஒட்டாமல் இருந்த ஒரு இயக்கம், புலிகள் இந்தியாவினை எதிர்த்த இயக்கம்
இருவரும் அந்த புள்ளியில் ஒன்று சேர்ந்தனர், அதுவும் ராமசந்திரன் காலம் வரை இல்லை, அவர் காலத்துக்கு பின்பே புலியும் கலைஞரும் கூட்டாளி ஆயினர்
அன்று இருந்த ஜெயா ராஜிவ் கூட்டணியினை எதிர்த்து அரசியல் செய்ய புலிகள் அவருக்கு தேவைபட்டனர்
ராமசந்திரன் இல்லா நிலையில் புலிகளுக்கு கலைஞரும் தேவைபட்டார்
இந்த இடத்தில் ஒரு கேள்வி வரலாம்
இந்திராவும் ராமசந்திரனும் புலிகளை வளர்க்கவில்லையா? ஏன் கலைஞரை மட்டும் குற்றம் சாட்டவேண்டும் என்றால் விஷயம் சிக்கலானது
இந்திரா இல்லை, ராமசந்திரன் அமைதிபடையினை பிரபாகரன் எதிர்க்கும்பொழுதே விலக தொடங்கினார்
அமைதிபடைக்கு எதிராக ஒரு புல்லை கூட ராம்சந்தர் புடுங்கவில்லை
ஆனால் கலைஞர் அப்படி அல்ல, புலிகளுக்காக இந்தியாவினை தீவிரமாக எதிர்த்தார், மல்லுகட்டி அமைதிபடையினை திரும்பபெற்றார்
அது 1500 வீரர்களை இழந்ததையோ இன்னும் இந்திய ராணுவம் கண்ட அவமானங்களையோ அவர் கிஞ்சித்தும் நினைக்கவில்லை
அமைதிபடையினை வரவேற்கமாட்டேன் என அதை அவமானபடுத்திய கலைஞர் கொஞ்சமும் குற்ற உணர்ச்சியே இன்றி இந்திய சட்டத்தை காப்பேன் என உறுதிமொழி எடுத்து தேசிய கொடிஎல்லாம் ஏற்றினார்
இந்திய ராணுவத்தை கொச்சைபடுத்திய கலைஞருக்கு கொடிநாளுக்காக நிதி திரட்டவும் வெட்கமே இல்லை
எல்லாம் அரசியல்
புலிகளை இங்கு மகா சுதந்திரமாக உலாவ விட்டார் கலைஞர், இந்திய எதிரிகளாயினும் அவர்களை மனமார ரசித்தார்
முரசொலிமாறனுக்கும் ஆன்டன் பாலசிங்கத்துக்கும் இருந்த உறவு வலுவானது
பத்மநாபா கொலையில் புலிகளை தப்பவிட்டதும் சிவராசனை விடுவித்ததும் கலைஞரின் பெரும் புலிபாசம்
விளைவு ராஜிவ் கொலையில் முடிந்தது
அதன்பின்பே பாம்புக்கு அரசியல் பால் ஊற்றிய வலியினை உணர்ந்தார் கலைஞர்
நன்றிகொன்ற புலி, யாரெல்லாம் அதன் நோய்தீர்த்தார்களோ அவர்களை எல்லாம் கொன்ற புலி தன்னையும் கொல்லும் என அஞ்சினார்
புலிகளும் வைகோவினை பிரித்து கலைஞருக்கு எதிராக நிறுத்தினார்கள்
புலிகளை சுத்தமாக கைகழுவினார் கலைஞர்
அதன் பின் முழுக்க மாறினாலும் ஜெயின் கமிஷன் அவரின் புலி அபிமானத்தையும் ராஜிவ் கொலைக்கு தன்னையறிமாமல் அவர் துணை போனதையும் சொன்னது
உடனே வாஜ்பாய் பக்கம் சென்று அரசியல் ஆட்டம் ஆடி எப்படியோ அதை சமாளித்தார் கலைஞர்
கடைசி வரை புலியினை அவர் மிக வெறுக்கவுமில்லை, அருகே சேர்க்கவுமில்லை
தமிழ்செல்வனுக்கும் அழுது கொண்டிருந்தார், பிரபாகரனுக்கும் அழ தயாரானார்
எல்லாம் எல்லை மீறி செல்ல 1987ல் அவர் செய்த தவறுக்கு 2009ல் மெரீனாவில் மல்லாக்க கிடந்து பாவமன்னிப்பு கோரினார், எல்லாம் அரசியல்
ஆக திமுக என்பது இந்திய எதிர்ப்பு அரசியலை புலிகளோடு சேர்ந்து செய்யபார்த்து கையினை சுட்டுகொண்ட கட்சி
மற்றபடி புலிகள் மகா அயோக்கியர்கள் மற்றும் இந்திய எதிரிகள்
திமுகவும் இவ்விஷயத்தில் அவ்வளவு நல்ல கட்சி அல்ல, தன் அரசியலுக்காக தொட கூடாத புலிகளை பல நிர்பந்தத்தினால் தொட்டு தீராபழியில் சிக்கிகொண்டது
ராஜிவ் கொலைக்கும் அவர்கள் மேல் பழி, முள்ளிவாய்க்காலுக்கும் அவர்கள்மேல் பழி என தீரா பழியினை கூடா நட்பில் தேடிகொண்டது