இதை எளிதாக கடந்துவிட முடியாது

இதை எளிதாக கடந்துவிட முடியாது

எதையோ கேரள காவல்துறை மறைக்கின்றது என்பது மட்டும் புரிகின்றது

மனிதவெடிகுண்டு என்பது சாதாரண விஷயம் அல்ல, ஏகபட்ட நுட்பம் வேண்டும், தனி மனிதனால் அதை செய்துவிட முடியாது

ஆப்பமோ, கொழுக்கட்டையோ, பிட்டோ செய்வது போல மனிதவெடிகுண்டு எல்லாம் செய்துவிட முடியாது

அதுவும் ஒரு பெண்ணுக்காக மனிதவெடிகுண்டு வெடிப்பதெல்லாம் சாத்தியம் இல்லை, கொல்ல ஆயிரம் வழிகள் உண்டு, சாகவும் உண்டு

விஷயம் வேறு எங்கோ இருக்கின்றது, கேரளாவில் வெடிபொருட்களும் குண்டுக்கான நுட்பமும் எளிதாக கிடைக்கும் அளவு நிலமை சிக்கலாகின்றது

ராகுல் போட்டியிடும் கேரளாவில் அதுவும் சபரிமலை உட்பட ஏக சர்ச்சை உள்ள கேரளாவில், அரேபிய தீவிரவாதிகள் காசர்கோடு பக்கம் உலவுகின்றார்கள் எனும் அபாயமிக்க கேரளாவில் ஒருவன் சர்வசாதாரணமாக உடலில் குண்டை கட்டி காதலிக்காக வெடிக்கின்றான் என்பது சாதாரணம் அல்ல‌

மறுபடியும் சொல்கின்றோம் இது கள்ளகாதலுக்காக நடந்த கொலை அல்ல, அப்படி காதல் இருக்குமானால் காதலியின் கணவனை போட்டு தள்ளினால் முடிந்தது விஷயம்

குண்டு வெடித்தது இஸ்லாமிய பெண் வீடு என்பதால் பலத்த சந்தேகம் எழவேண்டிய நேரமிது

சரி அவன் மனிதவெடிகுண்டாக இருந்தாலும் அந்த அளவு அபாயமிக்க குண்டை இவனுக்கு கொடுத்தது யார்? கட்டி விட்டு பயிற்சி அளித்தது யார்?

ஆக கேரளா கடும் அச்சுறுத்தலில் இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளமுடிகின்றது

மிக வேகமான நடவடிக்கை எடுத்து மிக இறுக்கமான விசாரணை நடத்தினால் அதிர்ச்சி தரும் செய்திகள் கட்டாயம் வரும்

ராகுல் தேர்தல் பிரச்சாரம் செய்யும் நேரம் மிக மிக வலுவான பாதுகாப்பு அவசியம் என்பதே இம்மாதிரி செய்திகள் சொல்லும் செய்தி

கேரளாவில் மிகபெரும் நாசவேலைக்கு திட்டமிடுகின்றார்கள் என்பதெல்லாம் அவ்வப்போது வரும் செய்திகள்

கேரள அரசு விழித்துகொள்வது சால சிறந்தது, இல்லையேல் விளைவுகள் மிகபயங்கரமாக இருக்கலாம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s