மோடிக்கும் அவர் அமைச்சரவைக்கும் வாழ்த்துக்கள்

இரண்டாம் முறையாக சிங்கம் போன்ற அசுர பலத்துடன் பதவிஏற்றிருக்கின்றது மோடி அரசு

இந்திய வரலாற்றில் இது ஒருவகை சாதனையும் கூட‌

1987களில் தொடங்கிய கூட்டணி குழப்பத்திற்கு 2014ல் முடிவு கட்டிய இந்தியா 2019 தேர்தலிலும் அதை தொடர்ந்திருகின்றது

நாம் இந்தியர்கள், இந்திய கண்ணோட்டத்தில் இப்படித்தான் சொல்லமுடியும்

சுதந்திரத்திற்கு பின் இந்தியா உடையும் என்றார்கள் நேரு காத்தார், அவருக்கு பின் சாஸ்திரி

சாஸ்திரிக்கு பின் அவ்வளவுதான் என்றார்கள் இந்திரா வந்தார்

இந்திரா தலைகணம் பிடித்து ஆடுகின்றார் இனி இந்தியா சிதறும் என்றார்கள், ஆனால் இந்தியா அவரிடமே சரண்டைந்தது

ராஜிவ் பலமாக எழும்பினாலும் அது குறுகிய காலமே

விபிசிங் காலத்தில் இருந்து குழம்பியது இந்தியா, அது 2014 வரை நீடித்தது

இந்தியாவில் இருக்கும் அரசியல் குழப்பத்தை பயன்படுத்திஅதை துண்டு துண்டாக உடைக்க வேண்டும் என பகிரங்கமாக மிரட்டினான் சீன அமைச்சர் ஒருவர்

அமெரிக்கா அதை மனமார ரசித்தது

இனி எந்த தனிபெரும் தலைவனும் உறுதியான அரசும் அமையபோகின்றது என உலகம் நினைத்த நேரத்தில் மோடி வந்தார்

ஏகபட்ட சர்ச்சைகள் அவர் மேல் குவிக்கபட்டன, பிரம்ம ராட்சசன் போல அவர் இங்கு காட்டபட்டார்

ஆனால் மக்கள் மிக தெளிவாக அவரையே தேர்ந்தெடுத்தனர், உலகிற்கு ஆச்சரியத்தை கொடுத்தது இந்தியா

மோடிக்கும் அவர் அமைச்சரவைக்கும் வாழ்த்துக்கள்

ஊழலில்லா ஆட்சியினை அவர்கள் கொடுப்பார்கள் என்பது தெரியும், கொஞ்சமும் மத துவேஷமில்லா மத ரீதியான மிரட்டல்கள் இல்லா ஆட்சியினை அவர்கள் கொடுக்கட்டும்

ரமலான் மாதத்தில் பதவிஏற்றிருக்கும் மோடி இஸ்லாமிய மக்களையும் அணைத்து செல்லும் தலைவராக மாறட்டும்

அவர்களின் நெஞ்சிலுள்ள தழும்புகளை ஆற பாடுபடட்டும்

தேசம் அவரிடம் மிகவும் எதிர்பார்க்கின்றது, அவரை நம்புகின்றது

அந்த நம்பிக்கையினை அவர் காப்பாற்றி நல்லாட்சி நடக்கட்டும், அமைச்சர்களும் பொறுப்புணர்ந்து அவருக்கு பலமாய் நிற்கட்டும்

தேசத்தை மோடி வணங்கும் தருணம் , தேசமும் அவரை வணங்கி வாழ்த்தி நாற்காலியில் அமர வைக்கின்றது.

நாடு செழிக்கட்டும், அமைதி நிலவட்டும், பாரதம் உயரட்டும்

பட்நாயக்கின் புதிய ஒடிசா..

ஒரு காலத்தில் பின் தங்கிய மாநிலமாக இருந்த ஒரிசா , ஒடிசாவாக மாறி ஆச்சரியங்களை கொடுக்கின்றது

நவீன் பட்நாயக் ஒடிசாவின் அசைக்கமுடியா தலைவராகிவிட்டார், மூன்றாம் முறையாக பதவியில் அவரும் அவர் காலம் வழிவிட்டால் நிச்சயம் ஜோதிபாசுவின் சாதனைகளை முறியடிப்பார்

ஒடிசா அவரை தயக்கமே இன்றி நிரந்தரமாக அமர்த்திகொண்டது

தந்தை பிஜு பட்நாயக் போட்டு கொடுத்த அடித்தளத்தில் இன்னும் திருமணம் செய்யாமல் ஒடிசா மக்களுக்காக உழைக்கும் அவரை மக்களுக்கு நிரம்ப பிடித்திருக்கின்றது

பல துறைகளில் ஒடிசா மகா வேகமாக முன்னேறி வருகின்றது, நிச்சயம் அங்கு மாபெரும் வளர்ச்சி

இப்பொழுதும் பாருங்கள் மிக எளிய எம்பி என ஒடிசாவில் இருந்துதான் ஒரு சாமான்ய மனிதனை அனுப்பியிருக்கின்றார்கள் ஒரியர்கள்

ஆம் ஓலை குடிசையில் ஓட்டை சைக்கிளில் சுற்றிய அவரை எம்பி என அனுப்பியிருக்கின்றது அம்மாநிலம்

வாரிசுகள் அப்படி உருவாக வேண்டும்

இதோ இந்த நவீன் பட்நாயக்கின் தந்தை பிஜூ பட்நாயக் அக்கால திமுக போல காங்கிரஸ் எதிர்ப்பு நிலையினை கொண்டிருந்தார்

திமுகவினை அதிமுகவினை இணைத்து மாநில சுயாட்சி குரல் எழுப்ப‌ அவர் பட்டபாடுகள் ஏராளம்

ஆனால் மாநில சுயாட்சி பேசி மாநிலம் பின் தங்கி போனதை அனுபவ பூர்வமாக பின்னாளில் உணர்ந்தார்

பிஜூ பட்நாயக் அரசியலுக்கு வந்ததும் தந்தை வழியன்றி மத்திய அரசோடு இணக்கமான போக்கே மாநிலத்திற்கு வெற்றி அளிக்கும் என்பதை உணர்ந்தார்

அந்த அட்டகாசமான அணுகுமுறையில்தான் இந்த மாபெரும் வெற்றி அவருக்கு கிடைத்தது

ஆம் மாநிலத்துக்கு எது நலமோ அதை செய்ய வேண்டும், மற்றபடி கண்டதையும் பேசிகொண்டிருப்பது விஷயம் அல்ல‌

அதில்தான் நவின் ஜொலிக்கின்றார், முக ஸ்டாலின் பின்னால் சென்று தவிக்கின்றார்

நிச்சயம் நவீன் பட்நாயக், முக ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு எல்லாம் ஒரே வரிசை சந்தேகமில்லை

ஆனால் நவீனுக்கு நாடிபிடிக்க தெரிகின்றது, மாநிலத்துக்கு எது தேவை என்பதை உணரமுடிகின்றது, யாரை ஆதரித்தால் இங்கு நன்மை விளையும் என கணிக்க முடிகின்றது

அதனால் அவர் வரலாறாய் ஆகிகொண்டிருக்கின்றார், மற்ற இருவரும் தவியாய் தவிக்கின்றார்கள்

இன்றைய இந்தியாவில் ஒரு முதல்வர் மிகசிறந்த முறையில் மாநிலத்தை தேசத்தோடு சேர்ந்து நடத்துகின்றார் என்றால் அது அந்த நவீன் பட்நாயக் ஒருவர்தான்

அதனால்தான் அவர் சொன்ன பாதையில் வாக்குகளை குவித்து அணிதிரண்டு நிற்கின்றது ஓடிசா

பட்நாயக்கின் புதிய ஒடிசா..

சி.சுப்பிரணியம், ப.சிதம்பரம் வரிசையில் நிதி அமைச்சரான தமிழர்

சி.சுப்பிரணியம், ப.சிதம்பரம் வரிசையில் நிதி அமைச்சரான தமிழர் எனும் பெருமையினை பெறுகின்றார் நிர்மலா சீத்தாராமன்

நிச்சயம் சவாலான பதவிதான், ஆனால் அவர் அனாசயமாக சாதிப்பார் என்பது தெரிகின்றது

ராஜாஜி, காமராஜர் போன்ற அகில இந்திய அடையாளமாக அவர் வரலாம்

இந்தியாவின் இரண்டாம் பெண் நிதியமைச்சர் என்ற பெருமையினை பெற்றுவிட்டா நிர்மலா, அவர் பாரதியின் மாநிலமான தமிழ்நாட்டுக்காரர் என்பது மகிழ்ச்சி மற்றும் நெகிழ்ச்சி

ஒரு விஷயம் உறுதியாக சொல்லலாம், பாரதிய ஜனதா கட்சியின் தன்மையினை உணர்ந்து சொல்லலாம்

வருங்காலத்தில் தமிழர் ஒருவர் பிரதமராகும் வாய்ப்பு உண்டென்றால் அது பெண் பிரதமராக இருக்க கூடும்..

வாழ்த்துக்கள் நிர்மலா மேடம், நாடு உங்களிடம் நிறைய எதிர்பார்க்கின்றது

// பாருங்கள், வீட்டில் ஊறுகாய் தயாரித்து கொண்டிருந்த கரம் ஒன்று நாட்டுக்கே பட்ஜெட் தயாரிக்க போகின்றது

எப்படிபட்ட பெண் விடுதலை?, பெரியார் மண் இதை சாதித்தது, இது பெரியாரின் கனவு என ஒரு பயலாவது கிளம்புகின்றானா?

மாட்டான், அவனுக்கு தமிழக பெண் உயர்ந்தால் பெரியாரால் மட்டுமே உயரவேண்டும் என்ற சுயநலம் மிக அதிகம்//

அணு சோதனையினை புட்டீன் செய்தாரா இல்லையா

பனிப்போர் காலத்தின் முடிவில் அமெரிக்காவும் ரஷ்யாவும் அணு ஆயுத குறைப்புக்கு வந்தன, ரீகனும் கோர்ப்பசேவும் அதை தொடங்கினர், புஷ்ஷூம் எல்ட்சினும் கையெழுத்திட்டனர்

இருவரிடமே 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிசக்தி அணுகுண்டுகள் உண்டு என்பதும் , அதில் 7 ஆயிரத்துக்கும் மேல் செய்யபட்டு தயார் நிலையில் உண்டென்பதும் அன்று மிரட்டிய செய்திகள் என்பதால் உலகம் நிம்மதியானது

பின்னர் 1996 மற்றும் 2000ம் வருடங்களில் இருவருமே இனி அணு ஆயுத சோதனை செய்ய கூடாது என முடிவு செய்யபட்டது

இப்பொழுது புட்டீன் என்பவருக்கு அதிலிருந்து விலகும் எண்ணம் வந்திருக்கலாம்

இப்பொழுதெல்லாம் ஆராய்ச்சிகள் சிறிய ரக அணு ஆயுதங்களை செய்வது எப்படி என்பதே

அமெரிக்கா அதை ஆப்கனில் சோதித்தது என்கின்றார்கள்

இப்பொழுது ரஷ்யா அதை ஆர்டிக் பக்கம் சோதித்தது என கிளம்புகின்றது அமெரிக்கா, விவகாரம் பெரிதானால் அமெரிக்க ரஷ்ய ஒப்பந்தம் முறியும்

மறுபடி ஆளாளுக்கு அணுகுண்டு செய்ய கிளம்புவார்கள், நிலாவிலே அதை போட்டு உடைத்தாலும் ஆச்சரியமில்லை

ஆணு சோதனையினை புட்டீன் செய்தாரா இல்லையா என்பது உறுதிபடுத்தபடவில்லை, ஆனால் விஷயத்தை கிளறிவிட்டதே புட்டீன் தரப்புத்தான் என்கின்றது அமெரிக்க குருவி..

நேருவினை ஏன் எதிர்த்தீர்கள்?

“நேருவினை ஏன் எதிர்த்தீர்கள்?

அவர் திராவிட உரிமையினை பறித்தார்?

காமராஜரை ஏன் விரட்டினீர்கள்?

அவர் தேசியவாதி, தமிழுக்கும் தமிழருக்கும் ஒன்றும் செய்யவில்லை

இந்திராவினை ஏன் அடித்தீர்கள்?

அவர் தமிழரின் உணர்வினை புரிந்துகொள்ள்வில்லை

பின்பு ஏன் காலில் விழுந்தீர்கள்?

அப்பொழுது அரசியல் நெருக்கடி,அதெல்லாம் தந்திரம்

ராஜிவினை ஏன் வெறுத்தீர்கள்?

அவர் இலங்கைக்கு படை அனுப்பினார்

சரி சோனியாவிடம் ஏன் சரணடைந்தீர்கள்?

அவர் சொக்கதக்கம், மணிமேகலை

எப்படி உங்களுக்கு பதவியினை அள்ளி தந்த அட்சயபாத்திரம் என்பதாலா?

அதிகம் பேசாதே, இதெல்லாம் தமிழகத்துக்காக எங்களுக்கு அல்ல‌

சரி பதவியில் இருந்தபொழுது என்ன செய்தீர்கள்?

வரலாற்றை புரட்டிபார் தெரியும்

புரட்டிவிட்டேன் ஒன்றும் தெரியவில்லை, சன்டிவி வளர்ந்த கதையும் கலைஞர் டிவி உருவான கதையும் மட்டுமே தெரிகின்றது

நீ பாஜக அடிவருடி, மானமில்லா பிண்டம்

சரி பதில் சொல் மசூதியினை இடித்த பாஜகவுடன் ஏன் ஆட்சிகட்டிலில் அன்று ஏறினீர்கள்

அது நாட்டுபற்று , இன்னொரு தேர்தலை தேசம் தாங்காது என்பதால்

அவ்வளவு நாட்டுபற்று இப்பொழுது எங்கே போனது?

அது டெல்லியில் இருக்கும் அரசியல் நிலையினை பொறுத்தே எங்களுக்கு வரும்

இப்பொழுது என்ன பிரச்சினை?

எல்லாமே பிரச்சினை, நீட் வேண்டாம், நீட்டாதது வேண்டாம் இன்னும் நிறைய வேண்டாம்

உங்கள் கோரிக்கைதானே காங்கிரஸின் கோரிக்கை, தேர்தல் அறிக்கையிலும் அதுதானே இருந்தது

ஆம்

காங்கிரஸ் தோற்றால் என்ன அர்த்தம்? இந்தியா முழுக்க நீட்டை ஏற்றுகொண்டதாகதானே அர்த்தம்? நீங்கள் மட்டும் ஏன் குதிக்கின்றீர்கள்

இங்கே மருத்துவ கல்லூரி அதிகம், அதில் வடவன் எப்படி வரமுடியும்?

உண்மையினை சொல், தனியார் மருத்துவகல்லூரி பாதிக்கபடும் என்றுதானே குதிக்கின்றாய்?

ம்ம் இல்லை

அப்படியானால் தனியார் மருத்துவகல்லூரி அரசு மயமாக்கபடும் அதன் பின் நீட் ஒழிக்கபடும் என சத்தமாக சொல் பார்க்கலாம்

ம்ம்ம் மாட்டேன்

மோடி மேல் என்ன பெரும் குறை கண்டாய் ஒன்றை சொல்

ம்ம்ம் சர்வாதிகாரம், மாட்டுகறி , மதவெறி இன்னும் ஏராளம் தூத்துகுடி சாவுக்கு கூட மோடி மவுனம், அவர் மதவெறியர், தமிழ் எறியர்

சஞ்சய் காலம் படித்திருக்கின்றாயா? மிசா கொடுமை தெரியுமா

ஆம், அதெல்லாம் பழங்கதை

ஆக அடுத்த ஐந்தாண்டு காலம் கழித்து மோடி உங்களுக்கு பதவி வழங்கினால் இன்று திட்டுவதும் பழம் கதை ஆகுமல்லவா?

அதெல்லாம் காலம் முடிவு செய்யும்

செய்யட்டும், ஆனால் இந்தியா ஒன்று முடிவு செய்துவிட்டது

என்ன?

அகில இந்திய தலைவர்களை உங்களுக்கு ஒரு காலமும் பிடிக்காது, உங்களுக்கு பதவி பிச்சை கொடுத்தால் கம்மென்று இருப்பீர்கள், இல்லை என்றால் கத்துவீர்கள்

இது எங்களுக்காக அல்ல, தமிழ்நாட்டுக்கு

தமிழ்நாட்டின் மாபெரும் மத்திய அரசு திட்டங்கள் நீங்கள் பதவியில் இல்லாதபொழுதுதான் கிடைத்திருக்கின்றது தெரியுமா?

திராவிட எதிர்களுடன் நாங்கள் பேசுவதில்லை நீ கிளம்பலாம்

கிளம்புகின்றேன், உங்கள் சின்னம் என்ன?

தெரியாதா உதய சூரியன்

அதை மாற்றி நரிகுட்டி என மாற்றுங்கள் பொருத்தமாக இருக்கும்..”

ரமலான் மாதம்

இந்த ரமலான் மாதம் இன்னும் சிலதினங்களில் முடிய போகின்றது, அந்த நோன்பு பெருநாளை மகிழ்ச்சிகரமாக கொண்டாட உலகம் தயாராகின்றது.

இஸ்லாமியருக்கு இது புனிதமான மாதம், அதை மிகுந்த பக்தியுடனும் கண்ணியத்துடனும் தங்கள் மத‌ சம்பிரதாயபடி அனுசரிக்கின்றார்கள்.

கொஞ்சம் சிந்தித்தால் இஸ்லாமிய மதத்தின் அடிப்படையான அன்பும் , சகோதரத்துவமும், ஒற்றுமையும் மானிட நேயமும் இக்காலகட்டத்தில் நன்றாக விளங்கும்

அவர்கள் நோன்பு வைக்கின்றார்கள், அதிகாலை முதல் மாலைவரை கடுமையாக அந்த நோன்பினை நோற்கின்றார்கள்

ஆனால் நோன்பினை துறக்கும்பொழுது நண்பர்கள், தெரிந்தவர்கள், பழகியவர்கள் என அனைவரையும் முகம் மலர அழைத்து விருந்து உபசரிப்போடு அதை முடிக்கின்றார்கள்

நிச்சயம் நோன்பு அவர்கள் மதத்தின் கட்டளை, ஆனால் நோன்பே இருக்காத பிற மதத்து அன்பர்களையும் மகிழ்வாக அழைக்க அந்த மதம் வழிசெய்திருக்கின்றது

எந்த மதத்தவனாக இருந்தாலும் இனத்தவனாக இருந்தாலும் அந்த நிகழ்வில் மாலையில் கலந்து கொள்ளலாம்

இஸ்லாமியன் அல்லாத, நோன்பு வைக்காதவனுக்கு இங்கு இடமில்லை என அவர்கள் கிஞ்சித்தும் நினைக்கவில்லை

பசி எல்லோருக்கும் பொதுவானது, நாங்கள் பசியின் வலியறிய இறைவன் கொடுத்திருக்கும் கட்டளை அது, பசி போக்குவது மதங்களுக்கு அப்பாற்பட்ட மானிட கடமை என அவர்கள் உணர்ந்து அழைக்கின்றார்கள்

இஸ்லாமில் தனித்து காணப்படும் அடையாளம் இது

இந்த கிறிஸ்தவமும் இருக்கின்றதே, ஒரு மாற்றுமதத்தவன் திருப்பலிக்கு வந்தாலும் கிறிஸ்தவன் அல்லாதவனுக்கு அப்பம் கூட தரமாட்டோம் என ஒருமாதிரி அவமானபடுத்துவார்கள்

கிறிஸ்துவத்தின் அந்த கடும் போக்கு களையபட வேண்டும், எம்மதமாயினும் அவனை ஆலயத்தில் மதிக்க பழக வேண்டும்

அது அவர்கள் பாடு…

ரமலான் மாதத்தில் இஸ்லாமியரை அருகிருந்து கவனிக்கும் பொழுது அவர்கள் மார்க்கம் ஏராளமான நல்ல மானிட நேய விஷயங்களை கொண்டிருப்பது புரிகின்றது.

சமத்துவம், சகோதரத்துவம் , அன்பு, மாற்று மதமாயினும் அவர்களை பசியுணர்ந்து, தேவை அறிந்து அன்போடு அரவணைத்தல் என ஏராளமான மானிடகுலத்திற்கு தேவையான விஷயங்களை கொண்டிருக்கின்றது

ஒரு சில கடும்போக்கான அரைபைத்தியங்கள் இஸ்லாம் பெயரால் சில செய்ய கூடாத செயல்களை செய்தால் அதற்கு நிச்சயம் அந்த மதமே பொறுப்பாக முடியாது

சேலத்து மாம்பழங்களில் ஒன்றிரண்டு அழுகிவிட்டால் மொத்த பழங்களுமே ஆகாது என்றாகிவிடுமா?

அடிப்படையில் அந்த மார்க்கத்தின் கொள்கைகள் நல்ல கொள்கையே, ஆனால் அந்த‌ ஆலயத்தின் தீ, சில இடங்களில் பெரும் தீயினை எரியவைத்துவிடுவதுதான் சரியல்ல‌

சோவியத் யூனியனை அமைத்த லெனினுக்கு அந்த ஒன்றியத்துக்கு மதம் கொடுக்கும் ஆசை இருந்தது. பொதுவுடமைக்கு மிக நெருக்கமான மதம் என இஸ்லாமையே அவர் விரும்பினார்

ஆனால் அது நடைமுறைக்கு சரிவராது என ஆலோசகர்கள் சொன்னார்கள், ரஷ்ய திருச்சபையினை வீழ்த்தி ஆட்சிக்கு வந்திருக்கும் நாம் இன்னொரு மதத்தை ஆதரித்தால் அது மதரீதியான மோதலாக தொடரும், மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளை சோவியத் யூனியனில் கொள்கை ரீதியாக இணைக்கமுடியாது என சொல்லிவிட்டார்கள்

லெனின் அத்திட்டத்தை கைவிட்டார்

ஆம் பொதுவுடமை போலவே மிக மிக அழகாக சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், அன்பையும், மானிட நேயத்தையும் சொல்லும் மதம் இஸ்லாம் என்பது ரமலான் காலத்தில் தெரிகின்றது

இம்மாதிரி காலங்களை மத ஒற்றுமையினை வளர்க்க கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்திகொள்ள வேண்டும்

இந்தியாவில் அது அதிகம் நடக்கவில்லை என்பதுதான் வருத்தம்..

ஏய் நாய்குட்டியே அவனை தடுக்காதே

ஏய் நாய்குட்டியே
அவனை தடுக்காதே

மோடி அரசு பதவிஏற்பதை காண சகிக்காமல் அந்த கவிஞன் என தன்னையே சொல்லிகொள்பவன் சாக செல்கின்றான்

மோடியின் ஆட்சி என்பதை விட, திமுக மந்திரிகள் இல்லா சபை அவனை கொல்கின்றது

இவனை மேல்சபை எம்பியாக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அவனுக்கு பொய்த்துவிட்டது

எல்லாம் சேர்த்து அவனை விரட்டுகின்றன‌

அவன் ஓடினான், ஓடினான் கடறகரைவரை ஓடினான்

ஏய் நாய்குட்டியே
அவனை தடுக்காதே அவனை தடுக்காதே

தமிழ் இலக்கிய உலகுக்கும், கவிதை உலகமும் உன்னால் காப்பாற்றபடும்

தாயினால் பெற்ற தமிழ் ஒரு நாயினால் காப்பாற்றபட்டதென வரலாறு உன்னை போற்றட்டும்

அவன் அடிக்கடி உன் பாஷையில்தான் பேசுவான், அதை கேட்டுவிடாதே நீயும் தற்கொலை செய்துகொள்வாய், அவன் பேச்சை விட‌ அது உனக்கு நலமாய் தோன்றும்

ஏ நாயே, தமிழக இலக்கிய உலகை காக்கும் பொறுப்பு உன்னிடமே உள்ளது

விலகு, அவன் கடலில் விழட்டும்

தமிழும் தமிழிலக்கியமும் தமிழ் கவிதையும் காப்பாற்றபடட்டும்.

விண்வெளிக்கு சென்ற ரஷ்ய நாய் போல உனக்கும் சிலைவைப்போம்

ஏ கடலே

இந்த டகால்டி ஓடிவிடுவான், உடனே பொங்கு
பூம்புகாரை விழுங்கிய நீ இவனை விழுங்கமாட்டயா?

சிலப்பதிகார நகரத்தை விழுங்கிய நீ
இவனையும் விழுங்கு

அன்று தமிழருக்கு செய்த கொடுமையினை
இவனை விழுங்ங்கி சீராக்கு

தமிழை நேராக்கு

பொறுத்தது போதும் பொங்கு…அவனுக்கு ஊது சங்கு

(பெரிய கடலுள் மாய்ந்த இளம்பெரும்வழுதி என நினைப்பு)

ஆட்டத்தை நம்மோடு ரசிக்கின்றன தும்பிகள்..

தும்பிகள் இப்பொழுது கள்ள சிரிப்பு சிரிக்கின்றன‌

ஆம் அவர்கள் வழக்கமாக செய்யும் காமெடிகளை இப்பொழுது திமுகவினர் செய்ய ஆரம்பித்துவிட்டதால் தும்பிகள் பெவிலியன் திரும்பிவிட்டன‌

அதுவும் பதநீர், மரவள்ளி கிழங்கு, நேந்திரங்காய் சிப்ஸ், பனங்கிழங்கு சகிதம் திமுகவினரின் ஆட்டத்தை பார்த்து கொண்டிருக்கின்றன‌

திராவிட தனிநாடு என திமுகவினர் உரக்க கத்தும்போது “போர்..” என துள்ளி குதிக்கின்றன தும்பிகள்.

அதுவும் இப்பொழுது நிர்மலாவும், ஜெய்சங்கரும் தமிழர்களா? இல்லை இல்லை அவர்கள் தமிழர்கள் அல்ல என திமுகவினர் கொந்தளிக்கும் பொழுது ” சிக்ஸ்ர்..” என கத்துகின்றன தும்பிகள்

இப்படியாக தும்பிகளுக்கு ஏக மகிழ்ச்சி

மோடி புண்ணியத்துல எங்களுக்கு கொஞ்சநாள் ரெஸ்டுண்ண்ணே, இனி அவங்கதான் உங்களுக்கு என்டெர்டெயின்மென் என சொல்லிவிட்டு ஆட்டத்தை நம்மோடு ரசிக்கின்றன தும்பிகள்..

மொத்தத்தில் சென்னை மக்கள் நிலை பரிதாபம்..

ஜெகன்மோகன் ரெட்டியினை சந்தித்த ஸ்டாலின் சென்னைக்கு கிருஷ்ணாநதி நீரை இந்த குடிநீர் பஞ்சத்திலும் கேட்கவில்லை வலியுறுத்தவில்லை எனபது சோகம்

ஸ்டாலினின் மிகபெரும் சறுக்கல் அது, வாய்பினை தவறவிட்டுவிட்டார்

உண்மையான தமிழக பொறுப்பான தலைவர் என்றால் அதை அவர் கேட்டிருக்கலாம், அட்டகாசமான அரசியலும் செய்திருக்கலாம்

அவரின் அரசியல் அறிவு அவ்வளவுதான்

இதை கலாய்க்க வரும் தும்பிகள் கூட ஸ்டாலின் தெலுங்கில் பேசினார் என்றுதான் கலாய்க்கின்றன, கிருஷ்ணா நீர்பற்றி சத்தமே இல்லை

அவர்கள் இவர்களை விட மகா மோசம்

இந்த பாஜகவினரும் ஸ்டாலின் பொட்டு வைத்த வட்டநிலா என்றுதான் பாடுகின்றார்களே தவிர அவர்களுக்கும் தெலுங்கு கங்கை கிருஷ்ணா நதிபற்றி யோசனை இல்லை

அவர்கள் இந்த இருவரையும் விட சுத்தம்

பழனிச்சாமி என்பவர் திருப்பதி சாமியினை கும்பிடுவதோடு சரி..

மொத்தத்தில் சென்னை மக்கள் நிலை பரிதாபம்..

அட்டகாசமான நேசமணி காமெடி ரெடி

நேசமணி தலையில் சுத்தி விழுந்தது வேறு விஷயம்

ஆனால் அந்த சம்பவத்தால் இந்த திமுக கோஷ்டி மட்டும் அந்த நேசமணியுடன் வரும் சார்லி போல மண்டையில் அடிபட்டு சகலத்தையும் மறந்து ஒருமாதிரி நிலைக்கு சென்றுவிட்டதுதான் சோகம்

ஒருமாதிரி அவர்கள் பிதற்றுவதை பார்த்தால் அந்த “கோவாலு” நினைவுதான் வருகின்றது..

அதுவும் குறிப்பாக “பாஸ் அவனுக ரெண்டு பேர்தான் பாஸ் உங்கள கொலைபண்ண பார்த்தானுக” என வசனம் நினைவுக்கு வரும்பொழுது மோடியும் அமித்சாவும் நினைவுக்கு வருகின்றார்கள்

1 லட்சம் ரூபாய் காண்ட்ராக்ட், 2 பேர் கடத்ததுனது என பல காமெடிகளை முடிச்சுபோட்டு பாருங்கள்

“அடேய் இதாம்டா பேலஸ், கைய கால பிடிச்சி வாங்கின காண்ட்ராக்ட்டுடா..” என புலம்பும் காட்சிக்கு முக ஸ்டாலினும், “பாஸ் அவனுக 2 பேர் பாஸ்” என மோடி அமித்ஷாவினை காட்டும் திமுகவினராக சார்லியினையும் பொருத்துங்கள்

அட்டகாசமான நேசமணி காமெடி ரெடி

இதற்கு மேல் கரிபூசபட்ட வடிவேலு நிற்கும் காட்சி நினைவுக்கு வந்தால், அப்படியே தேர்தல் முடிவும் நினைவுக்கு வந்தால் சங்கம் பொறுப்பல்ல..