அடுத்தகட்ட தொழில்நுட்பம் வேண்டும்

ஏதோ ஹிட்லர் போட்ட திட்டத்தில் விண்வெளி ஆராய்ச்சினை மேற்கொண்ட அமெரிக்காவும் ரஷ்யாவும் இப்பொழுது சலிப்பு தட்டி நிற்கின்றன‌

விண்வெளியினை இப்பொழுது ஆண்டுகொண்டிருப்பது ஹிட்லர் தொடங்கி வைத்த தொழில்நுட்பம், ஆம் அதுதான் அடிப்படை

அதன் பின் அடுத்தகட்டத்துக்கு மானிட குலத்தால் அடியெடுத்து வைக்க முடியவில்லை, நிலாவிற்கு செல்வதே பெரும் பாடு

மனிதன் என்ன விண்கலத்தை கூட எளிதாக‌ இறக்கமுடியவில்லை

இந்நிலையில் மனிதரை விண்வெளிக்கு அழைத்துசெல்வோம் என செயல்பட்ட அமெரிக்க தனியார் நிறுவணமான ஸ்பேஸ் எக்ஸும் தன் தோல்வியினை ஒப்புகொண்டாயிற்று

தன் விண்கலங்களுக்கு எல்லாம் ஓய்வு கொடுத்துவிட்டு ரஷ்யாவின் ராக்கெட்டில் தன் வீரர்களை அனுப்பிகொண்டிருக்கின்றது அமெரிக்கா

அமெரிக்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவணம் செய்த காரியங்கள் எல்லாம் தோல்வியில் முடிந்தன‌

ஆனால் வான்வெளிக்கு சென்று திரும்பும் ராக்கெட்டுகளை வெற்றிகரமாக ஆளில்லாமல் சில மாதங்களுக்கு முன் பரிசீலித்தது

டிசம்பரில் விஞ்ஞானிகளை ஏற்றிசெல்வோம் என அறிவித்துவிட்டு மறுபடியும் சோதனையில் இறங்கியது

அது படுதோல்வியில் முடிந்திருக்கின்றது

ஆக விண்வெளியில் சகஜமாக‌ நடமாட இப்போதிருக்கும் தொழில்நுட்பம் போதாது என உலகம் முடிவு செய்தாயிற்று

அடுத்தகட்ட தொழில்நுட்பம் வேண்டும்

அதற்கு ஹிட்லர்தான் மறுபடி வரவேண்டும்

மிஸ்டர் வீரமணி

மிஸ்டர் வீரமணி

பெரியாருக்கு யுனெஸ்கோ ஒரு விருது கொடுத்திருந்தால் விருதை தாரளமாக காட்டலாம்

அல்லது யுனெஸ்கோவில் புகார் அளித்து விருது கொடுக்கபட்ட நகலையாவது காட்டலாம்

பெரியாரின் சட்டை, பெரியாரின் கைத்தடி, பெரியாரின் மோதிரம், பெரியாரின் தாடிமுடி என எதை எல்லாமோ காட்டும் கும்பல் அவர்பெற்ற விருதை காட்டாதது ஏன்?

நாங்கள் என்ன பெரியாரின் சொத்துகணக்கை கேட்கின்றோமா? அந்த சொத்து மூலம் பெருகிய சொத்துக்களின் மதிப்பினை கேட்கின்றோமா?

நாம் கேட்பதெல்லாம் பெரியார் பெற்ற விருது எங்கே?

அதையும் காட்டாமாட்டேன் அதை நீங்கள் நம்பித்தான் தொலைய வேண்டும் என்றால் எப்படி

சரி வாருங்கள்

கடவுளை நாங்கள் காட்டமாட்டோம் ஆனால் நீர் நம்ப வேண்டும், அப்படி நம்பினால் பெரியாருக்கு யுனெஸ்கோ விருது அளித்ததையும் தமிழகம் நம்பும்

இதுவா உண்மை?

இதை எழுதி பரப்பிகொண்டிருப்பது தும்பி கூட்டம் தவிர யாரும் அல்ல‌

இதுவா உண்மை? சத்தியமாக இல்லை

இங்கு ஏராளமான முறை அந்நியர் ஆட்சி இருந்தது, அது அசோகர் காலத்தில் இருந்தது இன்னும் ஏகபட்டோர் காலத்தில் இருந்தது

இங்கு புத்தமும் சமணமும் ஆண்ட காலத்தில் தமிழகம் வடக்கே இருந்த புத்த சமண சாம்ராஜ்யங்களின் ஒரு அங்கமாகவே இருந்தது

பின்னாளில் தமிழகத்தை ஆண்ட பல்லவர் கூட தமிழர் அல்ல‌

இந்த களபிரர்கள் காலம் என்பது என்னவென்று இன்னும் ஒருபயலும் சொல்லவில்லை

ஏன் இந்த சேர சோழ பாண்டியர் பலமுறை காணாமல் போனார்கள் பின் வந்தார்கள் என்றால் வழிநெடுக அன்னியர் ஆட்சி இங்கு நடந்த சுவடு கிடக்கின்றது

அதுவும் கிபி 1300களில் பாண்டிய, சோழசாம்ராஜ்யம் வீழ்ந்தபின் தமிழகம் விஜயநகர ஆளுமைக்கு உட்பட்டது, அது நெடுங்காலம் நீடித்தது

இடையில் சிவாஜியின் மராட்டிய பேரரசில் தஞ்சையும் இருந்தது

அதன் பின் மொகலாயர் ஆட்சியில் அவனின் ஐதராபாத் நிஜாமின் நிர்வாக‌ பிரிவுக்கு கீழ் இருந்தது, அவனுக்கு அடுத்து இருந்தது ஆற்காடு நவாப்

ஆற்காடு நவாபிற்குத்தான் தென்னக நாயக்க மன்னர்கள் கப்பம் கட்டிகொண்டிருந்தனர்

அந்த நவாப்பினை வளைத்தான் ராபர்ட் கிளைவ், ஆம் அவனின் ஆற்காடு போர்கள்தான் அந்த வெற்றிதான் இங்கு ஆங்கிலேயன் ஆட்சியின் அடித்தளம்

ஆக ஆங்கிலேயன் இந்தியாவினை ஆள அடித்தளம் கொடுத்ததே ஆற்காடு நவாபுக்கு உட்பட்ட தமிழகம்.

ஆற்காடு நவாப் டெல்லி ஆலம்ஷாவிற்கு கட்டுபட்டவனாய் இருந்தான்

ஆக வெள்ளையன் வரும்பொழுது கூட தமிழகம் மொகல் ஆட்சிக்கு உட்பட்டதாகவே இருந்திருக்கின்றது, பின்பு வெள்ளையன் ஆட்சிக்கு வந்தது

இன்னொன்று இது இப்பொழுது இருக்கும் தமிழக மேப் போல இருந்ததே இல்லை

ஏகபட்ட அரசுகள் ஆளாளுக்கு ஒரு வரைபடம் என அது எப்படியோ இருந்தது

தும்பிகள் காட்டும் தமிழகம் மொழிவாரிமாநில பிரிவுக்கு அதாவது 1957க்கு பிற்பட்ட தமிழக வரைபடமே, அதற்கு முன்பு சென்னை மாகாணம், அதற்கு முன் ஏகபட்ட துண்டுகள்

உண்மை இப்படி இருக்க, இந்த விஷ தும்பிகள் எப்படி எல்லாம் கத்தி திரிகின்றன பார்த்தீர்களா?

அவை ஒரு தனி உலகத்தில் இருக்கின்றன, அவர்களுக்காக ஒரு வரலாறு, அவர்களுக்காக ஒரு வரைபடம்

பொதுவாக பைத்தியங்கள் ஒன்று சேராது, நம் துரதிருஷ்டம் இங்கு சேர்ந்துவிட்டன அவ்வளவுதான்

ஆழ கவனிக்காமல் புரியாது

அஜித்குமார் நடிகர் என்பதை கூட எம்மால் ஒப்புகொள்ள முடியாது, சிலருக்கு அவர் அழகாக தெரியலாம் அதுதான் விஷயம்

மற்றபடி அந்த அலைபாயுதே படத்தில் அஜித் ஏன் ஒப்பந்தம் செய்யபடவில்லை எனும் கேள்வியினை மணிரத்னம் எப்படி கடந்து சென்றாரோ அப்படித்தான்

ஆனால் அவருக்கு கொடுக்கபடும் பிம்பமும் இன்னும் பலத்த வெளிச்சமும் இப்போதைக்கு அல்ல பின்னாளைய கணக்கு கொண்டவை

ராஜாஜிக்கு பின் பிராமண சமூகத்துக்கு கிடைத்த பெரும் அடையாளம் ஜெயா

அவருக்கு பின் அச்சமூகத்தில் யாருமில்லை என்ற கவலையினை போக்க கமலஹாசனை வைத்து படாதபாடு படுகின்றார்கள்

கமலின் அரசியல் பிரவேசமும் அவருக்கு கிடைக்கும் மீடியா டிவி வெளிச்சமும் ஒரு கும்பலால் திட்டமிட்டு ஏற்படுத்தபடுபவை

இதே கணக்கில் அஜித்துக்கும் வெளிச்சம் இப்பொழுதே காட்டபடுகின்றது

நம்புகின்றீர்களோ இல்லையோ பின்னொரு நாளில் அவர் அரசியலுக்கு இழுக்கபடலாம், அதற்கான ஆயத்த வேலைகளை இப்பொழுதே திரைமறைவில் ஒரு கோஷ்டி செய்து வருகின்றது

சிலரின் கணக்குகள் துல்லியமும் தொலைநோக்கும் கொண்டவை, ஆழ கவனிக்காமல் புரியாது

உத்திரபிரதேசம்

வற்றாத ஆறு ஓடும் மாநிலம் உத்திரபிரதேசம், அதன் மண்ணும் வளமையானது

அங்கு விவசாயத்துக்கு குறைவில்லை, ஆடுமாடுகளுக்கும் குறைவே இல்லை

அட மாடுகளின் பாதுகாப்புக்கும் கொஞ்சமும் குறைவே இல்லை

உலகின் மிக பிரமாண்டமான ஆறுகளில் ஒன்றான கங்கா ஓடும் பூமி அது, தமிழக நீர் ஆதாரத்தை விட ஆயிரம் மடங்கு பெரிய வளம் கொண்ட இடம் அது

அதன் மண்ணும் மகா செழிப்பானது, பல்லாயிம் ஏன் பல லட்சம் வருடங்களாக விவசாயம் மற்றும் ஆடுமாடு வளர்ப்புக்கு பெயர் பெற்ற பூமி அது

பகவான் கண்ணன் முதல் மொகலாய மன்னர் வரை வந்து அமர்ந்த செழிப்பான பூமி அது

ஆனால் அந்த செழுமையான மாநிலம் பின் தங்கியிருக்க ஒரே காரணம் போதிய கல்வி இல்லை, விழிப்புணர்வு இல்லை, பெரும் பொருளாதார திட்டம் இல்லை

குறிப்பாக கடல் துறைமுகங்கள் அங்கு இல்லை

இப்படி ஏகபட்ட இல்லை உண்டெனினும் மகா முக்கியமான காரணம் அவர்களிடம் சிந்தனை குறைவு, கல்வி குறைவு

ஆக மிக செழிப்பான பூமியாயினும் விவசாயம் ஆடுமாடு மேய்த்தல் என்றால் என்னாகும் என்பதற்கு உபி கண் கண்ட உதாரணம்

வறண்ட ராஜஸ்தானில் இருக்கும் சில விஷயம் கூட விவசாயமும் ஆடுமாடும் செழிக்கும் உபியில் இல்லை என்பதுதான் சோகம்..

இந்தியா என்ன உலகம் முழுக்க சுற்றிபாருங்கள், விவசாயம் ஆடுமாடு வளர்ப்பு எல்லாம் முழு தொழிலாக கொண்ட எதுவும் உருப்படவே இல்லை

இந்த யதார்தத்தை புரிந்து கொண்ட இனம் வாழ்கின்றது..

இங்கோ வறண்ட தமிழகத்தையும் விவசாயம் அரசு தொழில், ஆடுமாடு மேய்த்தல் அரசு தொழில் என ஒரு அரைகிறுக்கனும் அவன் கோஷ்டியும் சொல்லிகொண்டிருந்தால் என்ன அர்த்தம்?

தமிழகத்தை உபியினை விட பின் தங்கிய மாநிலம் ஆக்குவோம் என்பதை விட என்ன அர்த்தம் இருக்க முடியும்?

வெனிசுலாவின் சிக்கலுக்கு காரணம்

வெனிசுலாவின் சிக்கலுக்கு காரணம் விவசாயத்தை கைவிட்டதுதான் என எவனாவது சொன்னால் அவனிடம் பேசவே செய்யாதீர்கள் மகா மூடமான கூட்டம் அது

வெனிசுலாவில் இயற்கை வளம் அதிகம், அதைவிட எண்ணெய் அதிகம்

எண்ணெய் வளம் கொண்ட நாடுகள் சவுதி, குவைத், பஹ்ரைன் போல அமெரிக்காவுக்கு அடிபணிந்து வாழ்ந்தால் வாழலாம்

இல்லை ஈரான் போல வலுவான தலமையும் ஒற்றுமையான மக்களும் இருந்தால் தாக்குபிடிக்கலாம்

இல்லாவிடில் ஈராக், லிபியா போலத்தான் ஆகும்

சதாமுக்கு பின் ஈராக்கும், கடாபிக்கு பின் லிபியாவும் எண்ணெய்க்காக எப்படி அமெரிக்காவால் சூறையாடபடுகின்றதோ அதுதான் சாவேஸின் மறைவுக்கு பின் வெனிசுலாவிலும் நடக்கின்றது

விவசாயத்தை கைவிட்டு என கிளம்புவதெல்லாம் தும்பி கோஷ்டி

கொலம்பியாவும் மெக்ஸிகோவும் விவசாய பூமி , அனுதினமும் மழைகொட்டும் அற்புத பூமி

விதைத்துவிட்டு வந்தால் வானமே நீர்பாய்ச்சு விளைய வைக்கும் சொர்க்க பூமி

ஆனால் விவசாய பொருள் லாபமில்லை என போதை பயிருக்கு மாறி இன்று போதை பொருளின் உற்பத்தி கேந்திரமாக அவை மாறிவிட்டன‌

தாய்லாந்திலும் இந்த சாயல் உண்டு

மிக மிக செழிப்பான பூமிகளே விவசாயம் கைகொடுக்காமல் போதை பயிர்களுக்கு மாறும்பொழுது தமிழக நிலைக்கு எப்படி சாத்தியம்?

இங்கே போதைபயிர் இல்லாமலே தும்பிகள் இவ்வளவு உளறல் இன்னும் போதை பயிர் விளைந்தால் நாடு தாங்குமா?

ராணுவ சீருடையுடன் தீவிரவாதிகள் கைது

இலங்கை ராணுவ சீருடையுடன் அங்கு தீவிரவாதிகள் கைது செய்யபடுவது அதிகரிக்கின்றது

கடும் வேட்டையில் தீவிரவாதிகளின் மறைவிடத்தை கண்டறிந்து சோதனை செய்தால் அங்கு வெடிகுண்டுகளும் ராணுவ உடைகளுமே சிக்குகின்றன‌

ராணுவ உடையில் தாக்குதல் நடத்த அவர்கள் கடும் ஆயத்தமாகியிருப்பது புரிகின்றது என்பதால் அதிர்ந்து கிடக்கின்றது இலங்கை

இம்மாதிரி தாக்குதலை இலங்கையில் தொடங்கி வைத்தவர்கள் யார் தெரியுமா?

சாட்சாத் புலிகள்

ஆம் அவர்களின் முதல் பிரசித்தி பெற்ற நடவடிக்கையே இப்படித்தான் தொடங்கியது

அது பிரபாகரன், செல்லகிளி, விக்டர் என முதல் டீமின் அதிரடி நடவடிக்கை

அப்பொழுது புலிகளிடம் பாரிய வெடிபொருள் கிடையாது, இங்கு சிவகாசியில் இருந்து கடத்தி செல்லும் வெடிபொருளும் பலத்த சேதமில்லை

அப்பொழுது வட இலங்கையில் சிமென்ட் ஆலை இருந்தது அங்கு பாறைகளை தகர்க்கும் வெடிபொருட்கள் இருப்பதை அறிந்தனர் புலிகள்

இலங்கை ராணுவ உடையில் விக்டர் எனும் புலியும் சிலரும் ராணுவம் போலவே அந்த ஆலையில் புகுந்து அரசு உத்தரவு அது இது என சிங்களத்தில் பேசி பெரும் பகுதி வெடிபொருளை கடத்தி வந்தார்கள்

முதலில் அதை வழக்கம் போல சிங்கள அரசு கண்டுகொள்ளவில்லை

ஆனால் அந்த சிமென்ட் ஆலையின் வெடிபொருள்தான் இலங்கையில் பலத்த அதிர்சியினையும் 30 ஆண்டுகால போருக்கும் தொடக்கமாக அமைந்தது

ஆம், அந்த வெடிபொருளில்தான் யாழ் திருநெல்வேலியில் தங்கள் முதலாவது பெரும் தாக்குதலான அந்த ராணுவத்திற்கு எதிரான தாக்குதலை நடத்தி 13 பேரை கொன்றனர் புலிகள்

அதன் எதிரொலிதான் வெலிக்கடை சிறை கலவரம், கொழும்பு கலவரம் இன்னபிற, கிட்டதட்டல் 8 ஆயிரம் தமிழர் கொல்லபட்டு பெரும் அழிவு

அதன் பின்புதான் இந்தியா தலையிட்டதும் போராளிகளுக்கான பயிற்சி இன்னபிற‌

ஆக ராணுவ உடையில் இலங்கை அரசை ஏமாற்றும் புலிகளின் தந்திரத்தையே இப்பொழுதும் ஜிகாதிகள் செய்கின்றனர்

இந்த தந்திரம் முதலில் இருந்தாலும் கடைசி கட்டத்திலும் அதை புலிகள் செயல்படுத்தினர்

ராணுவத்தில் இருந்த சிங்கள கைகூலிகளை வளைத்த புலிகள் இலங்கை ராணுவ உடையில் மனித வெடிகுண்டுகளை அனுப்பினர்

சில வெடித்தன என்றாலும் கோத்தபாய தப்பித்தார்

சில வெளிநாட்டு உளவு அமைப்புகள் கொடுத்த தகவலில் இலங்கை ராணுவம் சில புலிகளின் தற்கொலைதாரிகளை கைது செய்தனர்

அவர்கள் அந்த “ஆர்மி அங்கிள்”களை கைகாட்டினர்

அந்த ஆர்மி அங்கிள் எனும் கருப்பாடுகளை கைது செய்து களையெடுத்த பின்புதான் புலிகளால் பெரும் தற்கொலை தாக்குதலை கொழும்பில் நடத்த முடியவில்லை, ராஜபக்சேயும் தப்பித்தார்

அன்று இலங்கை ராணுவ உடையில் வந்த புலிகளை கையாண்ட விதம் இப்பொழுது கொழும்புக்கு கைகொடுகின்றது

புலிகள் எவ்வளவு நல்ல விஷயத்தை சிங்களனுக்கு செய்திருக்கின்றார்கள் பார்த்தீர்களா?

இப்பொழுது தீவிரவாதிகள் ராணுவ உடையுடன் பிடிபடும் பொழுதெல்லாம் “இதை புலிகாலத்திலே பார்த்துவிட்டோம் வாங்கடா…” என இழுத்து செல்கின்றது சிங்கள ராணுவம்

மனதிற்குள் புலிகளுக்கு நன்றி சொல்லாமலா இருப்பார்கள்?

பிரமாண்ட காலடிதடம்

இமயமலை என்பது ரகசியங்களின் கூடாரம், ஏகபட்ட மர்மங்களை அது கொண்டது

ரிஷிகள், மூலிகைகள், இரண்டாயிரம் வருடமாக வாழும் சாமியார்கள் என ஏகபட்ட விஷயம் அங்கு உண்டு

அதில் ஒன்றுதான் யதி

அந்த நேபாள சொல்லுக்கு பனி மனிதன் என பெயர், ராட்சத மனிதன் போன்ற‌ இனம் ஒன்று உடலெல்லாம் முடியாக அங்கு வாழ்வதாக நம்பபடுகின்றது

அது காட்டுவாசி பழங்குடி போல பனிவாசி பழங்குடி மக்கள் என ஒரு பேச்சும் , இல்லை இல்லை பனிவாழ் கொரிலா என்றொரு தியரியும் உலகில் உண்டு

அவ்வப்போது அதை பற்றிய கதைகள் வரும்

சிலமுறை ராணுவ வீரர்களும், மலையேற்ற வீரர்களும் அதை கண்டார் என்பார்கள்

எவரெஸ்ட் ஏற சென்று வழிதவறி சிக்கிய ஒருவனை யதி காப்பாற்றிவிட்டு சென்றதாகவும் முன்பு செய்தி வரும்

அப்படியான யதி பற்றிய செய்தி மறுபடியும் வந்திருக்கின்றது

பிரமாண்ட காலடிதடம் அங்கு சிக்கியிருக்கின்றது, இது யதியின் காலடி தடம் என்கின்றார்கள்

ஆனால் ஒரு கால் தடம்தான் இருக்க்கின்றதாம் அதுதான் பலத்த யோசனையினை கொடுக்கின்றது

ஆக ஒற்றைக்கால் யதியும் இருக்கலாம் அல்லவா?

சர்வதேச தீவிரவாதி

ஒரு வழியாக மசூத் அசார் எனும் கொடிய பங்கரவாதியினை சர்வதேச தீவிரவாதி என ஐ.நா அறிவித்துவிட்டது

ஐ.நா சும்மா அறிவிக்கமாட்டார்கள், சில பகிரங்க மற்றும் சில ரகசிய தகவல்கள் கிடைத்து அவை உறுதிபடுத்தபட்டால் மட்டுமே நடவடிக்கை இருக்கும்

இலங்கை தாக்குதல் நடந்து, அந்த தீவிரவாத கும்பலுக்கு தெற்காசியா நாடு ஒன்று பயிற்சி வழங்கிற்று, உலகிற்கே அது தீவிரவாதத்தை வழங்கும் நாடு என அமெரிக்காவின் மைக் பாம்பியோ இரு வாரங்களுக்கு சொன்னபொழுதே பலருக்கு நெற்றி சுருங்கிற்று

ஆம் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் ஏதோ சொல்கின்றார், நிச்சயம் திட்டம் இருக்கின்றது என்றார்கள்

அப்படி அறிவிப்பு இப்பொழுது வந்திருக்கின்றது

ராஜதந்திர ரீதியாக இந்தியாவுக்கு வெற்றி, பாகிஸ்தானுக்கும் சைனாவுக்கும் தோல்வி

இலங்கை தாக்குதலில் தன் பெயர் ரகசியமாக அடிபடுவதால் பாகிஸ்தானும் இதில் கனத்த மவுனம்

இனி என்னாகும்?

ஒன்றும் ஆகாது, இதுவரை பகிரங்கமாக பாகிஸ்தானில் வலம் வந்த மசூத் அசார் இனி ரகசியமாக எங்காவது மதராசாவில் மல்லாக்க கிடப்பான்

அவன் எங்கள் நாட்டில் இல்லை என பாகிஸ்தான் கைவிரிக்கும்

பின்லேடனுக்கே அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான் , அவன் அங்கு கொல்லபடும் வரை அவன் அங்கே இல்லை என சொன்ன பாகிஸ்தான் மசூத்தை விடுமா?

ஆனால் இதற்கெல்லாம் அவன் உயிரோடு இருக்க வேண்டும்

இந்திய தாக்குதலில் அவன் படுகாயமுற்றான் என செய்திகள் உண்டு

ஒருவேளை அந்த மசூத் அசார் செத்து தொலைந்தாலும் பாகிஸ்தான் அவன் எங்கள் நாட்டில் இல்லை என சொல்லிகொண்டே அவன் கல்லறைக்கு அஞ்சலி செலுத்தும்

பிழைத்திருந்தால் அவனை தேடிகொண்டிருக்கின்றோம் என சொல்லியபடியே அவன் வாயில் ஆரஞ்சு பழத்தை பிழிந்து கொடுத்து கொண்டிருக்கும்

ஏன் இப்படி கசியவிட்டார்கள்?

பசிபிக் கடலில் இருந்து எப் 35 விமானத்தை மீட்டுவிட்டோம் என சொன்ன அமெரிக்கா, கொஞ்ச நேரத்தில் அது உறுதிபடுத்தவில்லை என சொல்லி பின்வாங்கிவிட்டது

நேற்று அந்த விமானம் மீட்கபட்டது என பரபரப்பினை கிளப்பினார்கள், ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை கொஞ்ச நேரத்தில் இல்லை விமானம் இருக்குமிடமே தெரியவில்லை என பின்வாங்கிவிட்டார்கள்

ஏன் இப்படி கசியவிட்டார்கள்?

ஒருவேளை அமெரிக்கா விமானத்தை மீட்டது என்றதும் ரஷ்யா அல்லது சைனா “அண்ணே பொய் சொல்லாதீங்க‌ விமானம் எம்மிடம் இருக்கின்றது..” என நடிகர் செந்தில் பாணியில் சொல்வார்கள் என எதிர்பார்தார்களோ?

அந்த விமானத்தில் தரையிரங்கும் பொழுது லேண்டிங் கியர் சிக்கல் முன்பே இருந்திருக்கின்றது

இப்பொழுதும் இருந்திருக்கலாம், அதனால் கடலில் விமானத்தை இறக்கி விமானி பரிசோதித்தாரோ என்னமோ?

இனி அவர் வந்தால்தான் உண்மை தெரியும் அவரையும் காணவில்லை எனபதுதான் மர்மம்