இயற்கை விவசாயமே தீர்வு

இந்தியாவின் மக்கள் தொகைக்கும் இன்னும் பல காரணங்களுக்காகவும் இப்போதைக்கு இயற்கை விவசாயம் சாத்தியமில்லை எனினும் அது பலன் இல்லாதது என சொல்ல முடியாது

70 வருடங்களுக்கு முன்பு இன்றைய நவீன விவசாயமில்லை, இரண்டாம் உலகபோரும் அது கொடுத்த பஞ்சமும் இவ்வுலகை ரசாயண விவசாயம் பக்கம் திருப்பின, குறிப்பாக மக்கள் தொகை மிகுந்த இந்தியாவில் அது அவசியமானது.

இன்று அதுவே இந்தியாவின் பசியினை போக்குகின்றது, அதே நேரம் உலக நிலைப்பாட்டையும் ஒப்பிட்டு பார்க்கலாம்

ஒவ்வொரு நாடும் தன் மக்கள் நலமே நாட்டு நலம் என்பதில் கடும் அக்கறை கொண்டிருக்கின்றன, மக்கள் நலனே நாட்டின் எதிர்காலம் பலம் என அவை உணர்ந்திருக்கின்றன‌

ஒவ்வொரு நாடும் உடற்பயிற்சி வசதி , உணவு தரம் இன்னும் ஏகபட்ட விஷயங்களில் மக்களுக்கு கண்ணும் கருத்துமாய் பாடுபட்டுகொண்டிருக்கின்றன‌

அந்த நாடுகளின் உணவு தரத்தை உற்று பார்க்கின்றேன், குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பா

ஆம் பலவகை நோய்கள் ஏன் வருகின்றன என கடும் ஆராய்ச்சியில் இறங்கிய அவர்கள் இயற்கை விவசாயமே தீர்வு என உணர்ந்து அதில் இறங்கிவிட்டார்கள்

அது விளைச்சல் குறைவு என்பதால் விலை அதிகம், ஆனால் அவர்கள் அதைத்தான் உண்ண சொல்லுகின்றார்கள்

எப்படி எல்லாம் மக்களுக்கு அறிவுறுத்துகின்றார்கள்?

அமெரிக்க ஐரோப்பிய உணவு பொருட்கள் மட்டுமல்ல பற்பசை போன்ற மனிதர் பயன்படுத்தும் அனைத்திலும் எது ரசாயாணம் எது பாதி ரசாயாணம் எது இயற்கை பொருள் என அவர்களே குறியீடாக சொல்கின்றார்கள்

உதாரணம் பற்பசை முதல் பிரட் வரை பாக்கெட் ஓரத்தில் ஒரு அடையாளம் வைக்கின்றார்கள்

கருப்பு என்றால் அது முழு ரசாயாணம், நீலம் என்றால் நல்ல பொருள், சிகப்பு என்றால் அரைகுறை

இந்தியாவில் பற்பசையினை எடுங்கள் அடிப்பாகம் கருப்பு மட்டுமே காணமுடியும் மற்ற நிறங்களை நீங்கள் பார்க்க முடியாது

பாக்கெட் பழங்களில் எப்படி அடையாளபடுத்துகின்றார்கள் என்றால் பார்கோட் எனப்படும் நம்பருக்கு கீழ் சில இலக்கம் வரும்

அது 4ல் தொடங்கினால் ரசாயாணம், 5ல் தொடங்கினால் மரபணு மாற்றபட்டது, 9ல் தொடங்கினால் இயற்கை விவசாய பழம்

ஆனால் நீங்கள் தலைகீழாக நின்றாலும் 9ல் தொடங்கும் இயற்கை விவசாய ஆப்பிளையோ ஆரஞ்சையோ காய்கறியினையோ மற்ற நாடுகளில் பார்க்க முடியாது

எல்லாம் 4ல் தொடங்கும் ரசாயாணம்

அதாவது நன்கு மேற்கு நாடுகளை கவனித்தால் ஒன்று விளங்குகின்றது

தங்கள் நாடுகளில் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து தங்கள் நாட்டு மக்களை காக்கின்றார்கள்

ஆனால் அடுத்த நாட்டு மக்கள் குறிப்பாக ஆசிய ஐரோப்பிய மக்கள் எப்படியும் போகட்டும் என அங்கு கண்டதையும் விற்று வியாபாரம் செய்கின்றார்கள்

நம்மாழ்வார் சொன்னதிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை

சந்தேகம் இருந்தால் பொருட்களில் இருக்கும் சிறிய வர்ண குறியீடுகளையும் சில பார்கோட் நம்பர்களையும் கவனியுங்கள்

அவை என்ன தெரியுமா?

இது எல்லாம் இந்த வகைதான், வாங்கி தின்று சாகவேண்டுமென்றால் சாவு, காசு இருக்கின்றதா நல்லதாக வாங்கி பிழைத்துகொள் எனும் ஒருவகை எச்சரிக்கை

தன் நாட்டு மக்களுக்கு ஒரு பாதுகாப்பு என்றும் அடுத்த நாட்டு மக்கள் வாழ்வில் வியாபாரம் எனும் பெயரில் விஷத்தை கொடுக்கும் கொடூரம்

ஏதும் கேட்டால் முறையாக எச்சரித்துதான் விற்கின்றோம், அதை உங்கள் அரசும் மக்கள் நல அரசு அமைப்புகளும்தான் முன்னெடுக்க வேண்டும் என சிரிக்காமல் சொல்வார்கள்

உலகம் அப்படித்தான், நம்மை நாமேதான் காப்பாற்றிகொள்ள வேண்டும்

உலகம் மிக கவனமாக இயற்கை பொருளுக்கும் பாதுகாப்பான உணவுக்கும் மாறிகொண்டேதான் இருக்கின்றது

இங்குதான் எல்லாம் சர்ச்சையாகின்றது

மறுபடியும் பரபரப்பினை கிளப்புகின்றார்

மறுபடியும் பரபரப்பினை கிளப்புகின்றார் வடகொரிய வெள்ளை தக்காளி

வடகொரியா ஏவுகனை எதிர்ப்பு சோதனையினை செய்ததாக குற்றம் சாட்டுகின்றது தென்கொரியா

அதாவது குறிப்பிட்ட ஏவுகனை வடகொரிய எல்லைக்குள் வரும்பொழுது அதை அந்நாடு வீழ்த்திற்றாம்

இதை சொல்லி அவர்கள் இன்னும் பலம்பெறுகின்றார்கள் என அலறுகின்றது தென்கொரியா

அமெரிக்காவுடன் பேச்சு தோல்வியில் முடிந்து, வடகொரிய அதிபர் அண்ணாமலை ரஜினியாக சவால்விட்டு வந்தபின்பு நடக்கும் முதல் அதிரடி இது

இந்த நுட்பம் எப்படி வடகொரியாவுக்கு கிடைத்தது? இதை எல்லாம் ஏன் அவர்கள் முன்பே சோதிக்கவில்லை?

மிக சரியாக புட்டீனை வடகொரிய கிம் சந்தித்தபின் மட்டும் இச்சொதனை வெற்றிகரமாக நடப்பது எப்படி?

ஆக புட்டீனை சும்மா சந்திக்கவில்லை வெள்ளை தக்காளி

அர்ஜூனன் சிவனிடமிருந்து பிரம்மாஸ்திரம் வாங்கியது போல வாங்கித்தான் வந்திருக்கின்றார்கள்

இனி என்னாகும்?

விரைவில் ஈரானும் இதே சோதனையினை நடத்தலாம்

ஆக காதுகளில் புகை வர அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருக்கின்றார் டிரம்ப்

எப்படி?

படையப்பா படத்தில் ரஜினி திருமண வீடியோவினை ரம்யா கிருஷ்ணன் பார்ப்பார் அல்லவா? அப்படி திரும்ப திரும்ப பார்த்துகொண்டிருக்கின்றார்

யார் கொடுத்திருப்பார்கள்?

இலங்கையில் தவுபிக் ஜமாத் தீவிரவாதிகளின் நடமாட்டம் யாழ்பாணத்திலும் இருக்க்கின்றது என்ற தகவலை அடுத்து வட இலங்கையினை முற்றுகையிட்டிருக்கின்றது இலங்கை ராணுவம்

காரணம் அங்கிருந்து இந்தியா தப்புவது என்பது எளிது

இதனால் ஒரு இடம் விடாமல் தேடியிருகின்றார்கள், யாழ்பாணம் கல்லூரியும் அதன் விடுதியும் தப்பவில்லை

அங்கு ஒருவன் கண்ணிவெடி துப்பாக்கி தோட்டா வெடிபொருள் சகிதம் சிக்கியிருக்கின்றான், அவன் அறையில் பிரபாகரனின் படமும் இருந்திருக்கின்றது

போதாதா? அணில் வேட்டைக்கு சென்று முயல் சிக்கிய கதையாக அவனை கொத்தி சென்றிருக்கின்றது இலங்கை ராணுவம்

மறுபடியும் புலிகள் தலையெடுக்கின்றார்களா? என அடுத்த பரபரப்பு ஆரம்பமாயிற்று

காரணம் புலிகளின் ஆரம்ப காலமும் இப்படித்தான் இருந்தன , இதனால் முதலிலே கிள்ளி எறிய அவனிடம் கடும் விசாரணை நடக்கின்றது

கண்ணிவெடி கொடுத்தது யார்? துப்பாக்கி குண்டு கொடுத்தது யார் என ஏக விசாரணை?

யார் கொடுத்திருப்பார்கள்?

எமக்கு தெரிந்து பிரபாகரனோடு இருந்து ஏகே 74ல் சுட்ட முதல் இந்தியன் அங்கிள் சைமனே, அவரே அப்படி சொல்லியிருக்கின்றார்

ஏகே 74 பயிற்சி பெற்றவர், கண்ணிவெடி பயிற்சி பெற்றிருக்கமாட்டாரா என்ன?

இதோ மற்றுமொரு சாதனை என பொங்க போகின்றார்கள்

இன்னும் இரு நாட்களில் மோடியும் அவரின் அடிப்பொடிகளும் இதோ மற்றுமொரு சாதனை என பொங்க போகின்றார்கள்

ஆம் நவீன நீர்மூழ்கி கப்பல்கள் வேண்டும் என 2012ல் இருந்தே இந்திய கடற்படை சொல்லி அதற்காக பிரான்ஸ் நிறுவணத்துடன் சேர்ந்து அதை கட்டும் வேலையும் தொடங்கியாயிற்று

இப்பொழுது இந்தியாவிடம் இருப்பது 10 நீர்மூழ்கிகள் அதுவும் பழைய வகை, அரிகந்த் இப்பொழுதுதான் இணைந்தது

சீனாவிடம் 30 நீர்மூழ்கியும் பாகிஸ்தானிடம் 7 நீர்மூழ்கியும் உள்ள நிலையில் இந்தியாவிடம் குறைந்தது 25 நவீன நீர்மூழ்கி வேண்டும்

இதனால் 24 நீர்முழ்கிகளை கட்டும் திட்டம் மன்மோகன் சிங் ஆட்சியிலே தொடங்கபட்டது

முதல் கட்டமாக 3 கப்பல்கள் முடிக்கபட்டிருக்கின்றன அது இன்னும் இரு நாளில் வெள்ளோட்டம் விடபடும்

அடுத்தடுத்த கப்பல்கள் கட்டிமுடிக்கபட 2024 முதல் 2026 வரை ஆகலாம் என்கின்றார்கள், எப்படியும் இன்னும் சில ஆண்டுகளில் 25 நவீன நீர்மூழ்கிகளுடன் இந்தியா பலம்பெறும்

இதுபற்றி சங்கிகளிடம் கேட்டால், நீர்மூழ்கி பற்றி எமக்கு அதிகம் தெரியவில்லை ஆனால் 2040ல் அவை பயன்பாட்டுக்கு வந்தால் மோடிதான் அவற்றை இயக்கிவைப்பார், அவர்தான் இருக்க வேண்டும் என ஒருமாதிரி கண்சிவக்க சொல்லிகொண்டிருக்கின்றன

இதெல்லாம் இந்த உலகிற்கு புதிதா?

இலங்கையில் தாக்குதல் நடத்திய இஸ்லாம் வெறியனின் பேச்சினை பார்த்து பலர் பொங்குகின்றார்கள், நிச்சயம் அது மகா கொடுமையான விஷயம், முளையிலே கிள்ளி எறிந்திருக்க வேண்டிய விஷயம், எல்லை மீறிவிட்டது அதற்கான விலை கொடுக்கபட்டாயிற்று

ஆனால் இதெல்லாம் இந்த உலகிற்கு புதிதா? என்றால் நிச்சயமாக இல்லை

இந்த உலகின் வரலாற்று சக்கரம் அடிக்கடி சுழன்றுகொண்டே இருக்கின்றது, ஒரு இனம் ஒரு கட்டத்தில் ஆடுவதும் அடுத்த கட்டத்தில் அடிவாங்குவதும் மறுபடி ஆடுவதும் மறுபடி அடிவாங்குவதும் இங்கு சுழற்சியாக நடக்கும் விஷயம்

அலெக்ஸாண்டர் காலத்தில் அவனுக்கு அடங்கி இருந்த துருக்கி, ஆட்டோமன் காலத்தில் அவர்களை அடக்கியது

செங்கிஸ்கான் காலத்தில் மங்கோலியாவிடம் சிக்கிய ரஷ்யாவும் சைனாவும் பின்பு இன்று மங்கோலியாவினை அடக்கி வைத்திருக்கின்றன‌

தாவீது அரசன் காலத்தின் மின்னிய இஸ்ரேல் பின் மிதிபட்டு அடிபட்டு 3000 ஆண்டுக்கு பின் அதை இப்பொழுது மீட்டுகொண்டது

இப்படி ஏராள நாடுகளையும் இனங்களையும் பார்க்க முடியும்

அவை ஆட்டம் போட இரு காலம் உண்டென்றால் அடங்கி ஒடுங்கவும் அடிபட்ட நாடு பாயவும் ஒரு காலம் உண்டு

காலமே எல்லாவற்றையும் நடத்தும், வரலாற்றை சுழற்றும்

உலகெல்லாம் நாடுகளில் மட்டுமல்ல மதங்களிலும் இது பொருந்தும்

ரோமை மதம் கிறிஸ்தவத்தை ஆரம்பத்தில் அழித்தொழித்ததும் கிறிஸ்தவர்களை கொன்றதும் கொஞ்சமல்ல பின்னொரு நாளில் ரோமாபுரியினையே கிறிஸ்தவம் கைபற்றி இன்று ஆட்சியில் இருக்கின்றது

இன்னொரு நாளில் ரோமின் பண்டைய மதமும் எழும்ப கூடும்

இந்தியாவில் சைவமும் வைணவமும் அப்படி மோதின‌

பின்னாளில் புத்தமும் சமணமும் இங்கு ஆட்கொண்டன, ஆனால் இந்து எழுச்சியில் அவை ஓடவிரட்டபட்டன‌

சமணர் கழுவேற்றம் என்பது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் காணபடும் ரத்த வரலாறு

அவர் ஞானப்பால் குடித்தவர் என்றாலும், மிகபெரும் பக்திமான் என்றாலும் அந்த திருஞானசம்பந்தரின் பல பாடல்கள் சர்ச்சையானவை இப்படி

“‘மண்ண கத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ணகத்திரு வாலவா யாய்அருள்
பெண்ணக கத்தெழில் சாக்கியப் பேய்அமண்
தெண்ணர் கற்ப ழிக்கத்திரு வுள்ளமே’

அதாவது இந்து அல்லாத புத்த சமண பெண்களை எல்லாம் கற்பழிக்க வேண்டுமாம், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம், மீதிபாடல்கள் எல்லாம் இதே வகை

அவர் காலத்தில் மதுரையில் மட்டும் எட்டாயிரம் சமணர் கொல்லபட்டதாக செய்தி

ஆம் இன்றைய ஐ.எஸ் இயக்க தலைவர் பேச்சைத்தான் அன்றே திருஞானசம்பந்தர் சமணருக்கு எதிராக பேசியிருக்கின்றார்

ஆம் இந்துக்களின் கொடூரமான முகம் அப்பொழுது அப்படி இருந்திருகின்றது, சமணர்கள் அப்படி செத்திருக்கின்றார்கள்

ரோமின் நீரோ மன்னனிடம் கிறிஸ்தவர்கள் பட்ட சித்திரவதைக்கு கொஞ்சமும் குறையாதது இந்துக்களிடம் சமணர் பட்ட கொடுமைகளும் சாவும்

ஆனால் அந்த இந்துமதம் பின்பு இஸ்லாமிய மன்னர்களிடம் அடிவாங்கி ஒடுங்கியிருக்கின்றது

எங்கெல்லாம் சமணம் ரத்தம் சிந்தபட்டதோ அங்கெல்லாம் இஸ்லாமிய மன்னர்கள் வந்து இந்துக்களை ஒடுக்கியிருக்கின்றார்கள்

மதுரையில் சமணர் ரத்தம் சிந்திய இடத்தில் மாலிக்காபூர் காலத்தில் இந்துக்களின் ரத்தம் ஓடியிருக்கின்றது

இப்பொழுது இந்துதர்மம் மீண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றது

இந்த தீவிரமான‌ மதவாதிகள் எல்லா காலத்திலும் மிக கடுமையானவர்களாகவே இருந்திருக்கின்றார்கள்

தங்கள் மதமே பெரிது என்றும் அதை பின்பற்றாதோர் சாகவேண்டும் ஒழிக்கபட வேண்டும் என்ற இருமாப்பில் இருந்திருக்கின்றார்கள்

அது கிரேக்கர், ரோமர், சமணர், புத்தர், இந்த திருஞான சம்பந்தர் ஏன் இயேசுநாதரிடம் கூட இருந்திருக்கின்றது

ஆம் இயேசு யூத மக்களை மட்டுமே வாழும் காலத்தில் நேசித்தார், இஸ்ரேலை விட்டு ஒரு அங்குலம் அவர் நகரவில்லை

ஒரு ஏழை புறஜாதி பெண்மணி தன் மகனுக்காக ஏங்கும் பொழுது “பிள்ளைகளின் உணவினை நாய்க்கு போடமாட்டேன்” எனும் கொடூரமான இனவாத வார்த்தை அவரிடம் இருந்தே வந்தது

ஆம் மதவாதிகள் அப்படித்தான் எக்காலத்திலும் வெறியூட்டுவார்கள்

மானிட குலம் இருக்கும் வரை வெறியூட்டுவார்கள்

அதை சிந்தித்து சீர்தூக்கி மானிட நேயத்தில் எல்லோரையும் அணைத்து செல்லும் நல்வழியினை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்

மதவாதிகள் எப்பொழுதுமே வெறியர்கள், அவர்களுக்கு அந்நிய மதத்தவர் ரத்தம் சிந்தபட்டுகொண்டே இருக்க வேண்டும்

அது வரலாற்றில் எல்லா மதத்துகாரனுக்கும் இருந்தது

பண்டைய காலத்தில் பாக்தாத் மன்னன் நெபுகாத் நேச்சரின் மதவாதிகளுக்கு இருந்தது, எகிப்து மதவாதிகளுக்கு இருந்தது

இந்து மதவாதிகளுக்கும் இருந்தது, இந்த மனுதர்மம் அப்பொழுது உருவானது

யூதனுக்கு கேட்கவே வேண்டாம் நிறையவே இருந்தது

ரோமைக்கும், கிரேக்கத்துக்கும் மதவெறியும் பேச்சாளர்களும் இருந்தனர்

திருஞான சம்பந்தர் போன்றவர்களுக்கு இங்கு சமணர் காலத்தில் மிக கடுமையாக இருந்தது

அதன் தொடர்ச்சிதான் இப்பொழுது ஐ.எஸ் என வந்து நிற்கின்றது

மதமும் அது உருவாக்கும் குருமார்களும் அவர்களின் கடும் இறுக்கமான போதனையும் எக்காலத்திலும் உண்டு

அவர்கள் அப்படித்தான் வெறி ஏற்றும் கொடூர பேச்சுக்களையும் காட்டுமிராண்டி தனங்களையும் செய்ய சொல்வார்கள்

ஆனால் மதத்தை பின்பற்றுவோர்தான் மதத்தில் மானிட நேயத்தை கலந்து அம்மதங்களின் உண்மையான நோக்கமான அமைதியான அன்பான உலகத்தை படைக்க முழு முயற்சியும் எடுக்க வேண்டும்

அது எந்த மதமாக இருந்தாலும் சரி, மத குருமார்களை கட்டுக்குள் வைக்காத மதம் கொடூரமான மதமாகவேத்தான் மாறிவிடும்

வரலாறு அதைத்தான் பல இடங்களில் சொல்கின்றது, இப்பொழுது இலங்கையிலும் சொல்கின்றது

மாவீரனான‌ மைசூர் புலி

இந்தியாவில் முதன் முதலில் பிரிட்டிசார் முடிசூட்டிகொண்ட இடம் கல்கத்தா, அங்கிருந்தேதான் படை நகர்த்தலை தொடங்கினார்கள், பின்புதான் சென்னை பக்கம் வந்தார்கள் அப்படியாக வடக்கே இருந்து தேற்கேயும், தெற்கே இருந்து வடக்கேயும் நகர்ந்து நகர்ந்துதான் இந்தியாவினை பிடித்தார்கள்

ஆற்காடு யுத்தத்தில் கிளைவ் வரி வசூலிக்கும் உரிமையினை பெற்றாலும், வெள்ளையர் ஆளதொடங்கியது பிளாசி யுத்தத்தின் பின்பே

எந்த இடத்திலும் அவர்கள் பெரிதாக திணறியதாக சரித்திரம் இல்லை, அசால்ட்டாக அடித்துவிட்டு, முன்னேறிகொண்டிருந்தார்கள், வடக்கே பெரும் எதிர்ப்புகள் அவர்களுக்கு அன்று இல்லை. அடிக்கவேண்டும், மிரட்டவேண்டும் அல்லது லஞ்சம் கொடுக்கவேண்டும் அவ்வளவுதான், கம்பெனி கொடி பறக்கும்.

தெற்கேயும் ஆற்காடு நவாப் குடும்பசண்டையினை பயன்படுத்தி வசமாக காலூன்றினார்கள்.

இந்தியாவில் அவர்கள் சந்தித்த ஒரு பெரும் சவால் மாவீரன் ஹைதர் அலியும், அவரின் மகன் மைசூர் சிங்கம் திப்புசுல்தானும், உண்மையில் ஹைதர் அலி சாதாரண பணியாளர்தான், ஆனால் சீர்கெட்டு கிடந்த மைசூர் சாம்ராஜ்ய நிர்வாகத்தை, ஒரு நாட்டுபற்றாளனாய் நின்று காப்பாற்ற அரியணை ஏறி அதனை செய்தும் காட்டினார்.

ஆங்கிலேயருக்கு பெரும் சிம்மசொப்பணமாய் இருந்தவர் ஹைதர் என்றால், அவர்களுக்கு புலிசொப்பனமாக இருந்தவன் மாவீரன் திப்பு சுல்தான். அவனது ஆட்சி அப்படி, நிர்வாகம் அப்படி,எல்லாவற்றிற்கும் மேல் அவரது மதசகிப்புதன்மை அப்படி.

ஹைதருக்கு பின்னால் மைசூர் அவ்வளவுதான் என இளம் திப்புவினை எடைபோட்டு வந்தனர் வெள்ளையர்.
முதல் மைசூர்போரில் அடிபடும்பொழுதே ஆங்கிலேயருக்கு தெரிந்தது, “இவன் வேறமாதிரி” என்று, இரண்டாம் மைசூர் போரில் வெள்ளையனுக்கு திப்பு உயிர்பிச்சை அளித்தபொழுதே தெரிந்தது இவன் வெல்லமுடியாதவன் என்று.

அந்த முதல் இரு மைசூர் போரிலும் வெள்ளையர் அலறிகொண்டு ஓடினர். அப்படி ஒரு தோல்வியினை அப்பொழுதுதான் இந்தியாவில் பெற்றனர்.

அடி என்றால் அப்படி ஒரு அடி

புலியாக‌ இருந்தார் திப்பு, அவர் புகழ் ஐரோப்பாவிலும் பரவியது. “என்ன பெரிய பிரிட்டன் ஆர்மி? இந்தியாவில் மைசூர் மன்னன் திப்பு இருமுறை போட்டு புரட்டிவிட்டான் தெரியுமா? இன்னும் கொஞநாளில் இந்தியாவினை விட்டு பிரிட்டன் ஓடபோகின்றது” என்றெல்லாம் பேசிகொண்டார்கள்

ஐரோப்பாவில் நெப்போலியன் புகழ் பரவும்பொழுதே திப்புவின் புகழும் சேர்ந்து பரவியது. நெப்போலியன் தன் இந்திய கனவு திப்புவின் மூலம் நிறைவேறும் என நம்பினான்

எகிப்தை தான் கைபற்றியபின் திப்புவிற்கு தன் படை அனுப்பவும் அவன் திட்டமிட்டிருந்தான்

பிரென்ஞ் மாவீரன் நெப்போலியன் தன் காலத்தில் ஒரு சகவீரனை மதித்து ராணுவ உதவி அளிக்க தயாராக இருந்தார் என்றால் அது திப்பு மட்டுமே, காரணம் வீரனின் பெருமை வீரனுக்குத்தான் தெரியும்.

ஆனால் ஐரோப்பாவில் பலபோர்களில் அவர் பிசியாக இருந்ததால் உதவிக்கு வரமுடியவில்லை, உச்சமாக எகிப்தில் நடந்த குழப்பங்களால் அவருக்கு சோதனையாயின‌

நெப்போலியனையும் திப்புவினையும் சேரவிட கூடாது என்பதில் பிரிட்டன் தீவிரமானது

கொஞ்சமும் சோர்ந்துபோகாத திப்பு சுல்தான் மூன்றாம் மைசூர் போரில், 500 அடிவரைபாயும் ஏவுகனைகளை பயன்படுத்தி ஆங்கிலேயரை அலறவிட்டார், உண்மையில் அந்தபோரோடு கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவினை விட்டே ஓடும் நிலைக்கு தள்ளபட்டது

வரலாறு அப்படித்தான் சொல்கின்றது, ஆங்கிலேய ஆவணம் அப்படி சொல்கின்றது, இப்படியாக ” திப்பு சுல்தான் மாபெரும் சவால், கிட்டதட்ட துருக்கி ஆட்டோமான் போல வெல்லமுடியாத அரசராக இருக்கின்றார். இனி கம்பெனியின் வெற்றிகள் சாத்தியமில்லை”

படைகளால் வெல்லமுடியாத அம்மாவீரனை வேறுமாதிரி அடக்க எண்ணினர் வெள்ளையர், அதாவது அவன் இஸ்லாமியனாக இருந்தாலும் எல்லா மதங்களையும் நேசித்தார்,மதித்தார். புகழ்பெற்ற சிரிரங்கபட்டினம் ஆலயத்திற்கு அவர் அள்ளிகொடுத்த நகைகளும், சிலைகளுமே அதற்கு சாட்சி.

கிட்டதட்ட 200 இந்து ஆலயங்களுக்கு அவர் நன்கொடை அளித்ததும் வரலாறு. ஒரு மிக சமத்துவமான ஆட்சியினை செய்துகொண்டிருந்ததுதான் அவர் பலம், அவரது படையில் சரிக்குசரி இந்துக்களும் இருந்தனர்.

திப்புவிற்கு மற்ற மன்னர்கள் உதவிக்கு வரவில்லை, இதுதான் வெள்ளையனை சிந்திக்க வைத்தது. இப்போதைக்கு வரவில்லை, ஒருவேளை வந்துவிட்டால்..?

இங்குதான் வெள்ளையர் சிந்தித்து இந்து முஸ்லீம் வேற்றுமையினை வளர்த்தனர், பல வழிகளில் அவர் இந்துவிரோதி என சித்தரிக்கபட்டு, இறுதி போரில் தான் மிக நம்பிய தனது திவானால் வஞ்சகமாக வீழ்த்தபட்டார்.

ஆம் அவரின் திவானே கோட்டையினை திறந்து ஆங்கில படைகள் உள்வர வழி செய்தான்

ஸ்ரீரங்கப்பட்டணத்தில் நடந்த போர்முடிவில் வெள்ளையர் அரண்மனை முழுக்க அவனை தேடினர், சுரங்கபாதையில் தேடினர், துறைமுகத்தில் தேடினர்

அவனோ வீரரோடு வீரராக செத்து கிடந்தான். அவன் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தது. அது துப்பாக்கி சண்டை நடந்த இடமல்ல. துப்பாக்கி படை அக்களத்திற்கு வரவில்லை

பின் எப்படி சுடபட்டான் என்றால் அதுதான் துரோகம், உடன் இருந்த கைகூலிகளே அவனை கொன்றனர்

அந்த வெள்ளை கமாண்டர் திப்புவின் உடலுக்கு தன் தொப்பியினை கழற்றி அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தான், ஒரு உண்மையான வீரனை கண்டேன் என வாய்விட்டு சொன்னான்

பின் சென்னை கவர்னர் லண்டனுக்கு கடிதம் எழுதினார் “இனி இந்தியா நமக்கானது”

இந்த வெற்றியில் வெள்ளையன் ஒரு பாடம் படித்திருந்தான். இந்தியாவினை துப்பாக்கி முனையில் ஆள்வது கடினம், ஆனால் இந்து முஸ்லீம் பிரிவினையில் ஆள்வது மகா சுலபம்.

அந்த ஸ்ரீரங்கப்பட்டண களத்தில் வெள்ளையன் படித்தபாடம்தான் பின்னாளில் 150 வருடம் அவன் இங்கு ஆளவும், இந்த தேசம் இன்று 3 ஆக உடையவும், இன்றும் கலவர காடாகவும் இருக்கின்றது

நிச்சயமாக திப்பு மாவீரன், இந்த மண்ணிற்கு கிடைத்தவரம். இன்றும் அவன் பயன்படுத்திய ஏவுகனையின் வடிவம் அமெரிக்காவில் உண்டு. ஏவுகனை உலகின் பிதாமகன் வான் ப்ரவுண் நெற்றியில் அடித்தார்போல் சொன்னார் ” நான் ஒன்றும் கண்டுபிடிப்பாளன் அல்ல, திப்புசுல்தான் எனும் இந்தியனின் கண்டுபிடிபினை மேம்படுத்தினேன்”.

அதனாலதான் அமெரிக்கன் அப்துல்கலாமினை அப்படி சொன்னான், இவர் “இரண்டாம் திப்புசுல்தான்”.

இன்று மனசாட்சியே இல்லாமல் அவரை திட்டி தீர்க்கின்றார்கள், அந்தோ பரிதாபம். இவர்களுக்கும் இறுதியுத்ததில் வெள்ளையருக்கு கதவினை திறந்துவிட்ட அந்த தேசதுரோகிக்கும் என்ன வித்தியாசம் இருக்கமுடியும்?

மாவீரன் மருதநாயகம், மாவீரன் திப்புசுல்தான்,சீக்கியர்களின் ரஞ்சித் சிங் இவர்கள் எல்லாம் வெள்ளையரை எதிர்த்த அடையாளம் அல்லவா? இவர்கள் இந்துக்கள் இல்லை என்றால் இந்தியர்கள் இல்லை என்பது நிச்சயம் கண்டிக்கதக்கது.

இங்கு மதத்தின் பெயரால் அட்டகாசம் செய்பவர்களுக்கு, அதனை பிழைப்பாக கொண்டு திரிபவர்களுக்கு எல்லா மதத்தினரையும், எல்லா ஆலயங்களையும் மிக சமமாக கருதி, குறிப்பாக இந்து ஆலய அடையாளங்களை பாதுகாத்த அந்த மாவீரனை பழிக்க ஒரு தகுதியும் இருப்பதாக உண்மையான தேச அபிமானிகள் நினைக்கவே மாட்டார்கள்.

சிலர் சொல்வார்கள் தஞ்சை பகுதி கால்வாய்களை உடைத்தான், இந்து மக்கள் என்பதால் உடைத்தான் என்றெல்லாம் கதையளப்பார்கள், அதன் உண்மை என்ன?

அக்காலத்தில் காவேரியில் வரும் வெள்ளம் தஞ்சை பயிர்களை அழித்தால் அதற்கு மைசூர் சமஸ்தானம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும், ஆம் அப்படியும் ஒரு காலம் இருந்திருக்கின்றது

திப்புவிற்கு வேலுநாச்சியார், மருதுபாண்டியர், கொங்குமண்டலம் எல்லாம் பெரும் ஆதரவு இருந்தது, தமிழகத்தை திப்புவிடம் இருந்து பிரிக்க வெள்ளையர் அந்த நஷ்ட ஈடு பிரச்சினையினை பெரிதாக்கினர்

தஞ்சைவாசிகள் அதிகபடியான நஷ்ட ஈடு வெள்ளையாரால் கேட்க வைக்கபட்டு பின் அதில் குழப்பங்களும் விளைந்தன, தஞ்சை மராட்டிய மன்னனும் அதற்கு துணை சென்றார்

இந்த சிக்கல்தான், இந்த நஷ்ட ஈடு பிரச்சினைதான் பின் மைசூர் அணை கட்டவும், ஒரு சொட்டு நீர் தஞ்சைக்கு வராமலும் போனதற்கு பிள்ளையார் சுழி

திப்பு தஞ்சை மக்கள் இந்துக்கள் என்பதால் காவேரியில் சர்ச்சை செய்யவில்லை. வெள்ளம் வந்தால் நான் பணம் தரவேண்டுமா என்றுதான் கேட்டுகொண்டிருந்தான்.

பெரும் வீரனாயினும், ஒரு பக்கபலம் இல்லாமல் போரிட்டான் திப்பு. மராட்டியர் உதவிக்கு வரவில்லை, மலையாள மன்னர்களும் உதவிக்கு வரவில்லை, அப்படி ஒற்றுமையாக வந்திருந்தால் அன்றே வெள்ளையன் கதை முடிந்திருக்கும், இந்திய வரலாற்றில் பெரும் தவறு இது.

தூரத்தில் நெப்போலியன் உதவ தயாராக இருந்தும், பக்கத்து நாட்டுகாரர்கள் முகம் திருப்பி வெள்ளையரோடு கைகோர்த்தார்கள் அல்லவா? இங்குதான் இந்தியாவின் தலைவிதி திருத்தி எழுதபட்டது.

அந்த தவறினை செய்துதான் இந்நாடு இப்படி பின் தங்கிவிட்டது, இன்னும் அவன் இஸ்லாம் என்றே சொல்லி அதே தவறினை செய்வீர்களாயின் இந்நாடு இன்னும் 100 வருடம் நிச்சயம் பின்னோக்கி சென்று, ஆப்கன் நிலையினைத்தான் அடையும்.

இவர்கள் சொல்வதனால் எல்லாம் அம்மாவீரனின் புகழ் மங்காது. இந்தியாவின் புலி என வெள்ளையன் எழுதிவைத்த சரித்திரமும். அவன் அடக்க சடங்குகளில் வெள்ளையர் காட்டிய உயர் மரியாதையும் காலத்தின் கல்வெட்டு பக்கங்கள்.

அவன் உருவாக்கிய அந்த ஏவுகனை அவனின் அறிவுதேடலுக்கு பெரும் சாட்சி, அவ்வளவு ஏன் அவர் இறந்த பின் அந்த வாளினை வீசிபார்த்தோர் ஆச்சரியத்தில் உறைந்தனர், அது பல மூலிகை இன்னும் பல உலோகளால் ஆன எடை மிக குறைந்த மகா உறுதியான வாள், அதிலே அவனின் ஆற்றல் தெரிந்தது.

அந்த வாள் பிரிட்டானியரால் லண்டன் கொண்டுசெல்லபட்டது பின் விஜய் மல்லையா ஏலத்தில் எடுத்து இங்கு கொண்டுவந்தார், மல்லையாவின் ஒரே உருப்படியான காரியம் அதுதான்.

(இனி மல்லையாவினை ஏலம் எடுத்துத்தான் இங்கு கொண்டுவரவேண்டும் என்பது வேறு விஷயம்)

சமீபத்தில் திப்புவின் துப்பாக்கி, புலிவாள் உட்பட ஏராளமான பொருட்கள் லண்டனில் ஏலம் விடபட்டபொழுது இந்த அரசு கொஞ்சமும் அசையவில்லை

நிச்சயம் அவனின் பொருட்கள் இங்கு கொண்டுவரபட்டிருக்க வேண்டும், இந்த ஆட்சியில் அந்த நியாயத்தை எல்லாம் எதிர்பார்க்க முடியாது

பாபர்மசூதி இடிப்பு போலவே இந்த அரசு செய்த இன்னொரு மாபெரும் துரோகம் அது

நிச்சயமாக சொல்லலாம் திப்பு இந்தியாவின் நெப்போலியன், சொன்னது நாம் அல்ல அவனோடு யுத்தம் நடத்திய கிழக்கிந்திய கம்பெனி

நெப்போலியன் துரோகத்தால் சாய்க்கபட்டது போலவே திப்புவும் சாய்க்கபட்டான்

இன்று திப்புவின் நினைவுநாள், அந்நியருக்கு மிகபெரும் சிம்ம சொப்பணமாய் விளங்கிய அந்த மாவீரனுக்கு, இத்தேசம் வெள்ளையனுக்கு கிடைக்காமல் இருக்க பெரும் எதிர்ப்பினை கொடுத்த அவனுக்கு வீர வணக்கம்

இந்தியா உள்ள அளவும் அந்த மாவீரனான‌ மைசூர் புலியின் பெயர் நிலைத்திருக்கும்.

இந்தியா எனும் மாபெரும் தேசத்தை இந்து முஸ்லீம் என பிரித்தால் சுலபமாக ஆளலாம் என வெள்ளையன் அன்று உணந்த நாளும் இதுவே

இனி ஒருகாலமும் அப்படி பிரிக்கவிட மாட்டோம், மதவாத பிரிவினைகள் இங்கு சாத்தியமில்லை என ஒவ்வொரு இந்தியனும் எடுக்கும் சத்தியமே அந்த மாவீரனுக்கான உண்மையான அஞ்சலி

ஜெய்ஹிந்த்

(இந்த பதிவால் ஆர்.எஸ்.எஸ் வழங்கும் 200 ரூபாய் இன்று கிடைக்காது, அதனால் இஸ்லாமிய நண்பர்கள் வருமானத்திற்கு வழிசெய்துவிடவும்

ஒரு துண்டு மீன் வாங்கும் செலவுக்காவது அனுப்பி வைக்கவும்)

அறிவின் உந்துதலில் ஆத்ம திருப்திக்காக எழுதினான்

சுஜாதாவினையும் திராவிட சிங்கங்கள் விடவில்லை, சுஜாதா ஒரு பார்ப்பானிய வெறியர், சிந்தனையாளர் என வழக்கம் போல பொய்பிரச்சாரத்தில் இறங்கிவிட்டார்கள்

அவர் எழுத்தில் சமூக நீதி இல்லையாம், பார்ப்பானிய ஆதிக்கம் இருந்ததாம்

அந்த திராவிட கும்பலுக்கு ஒரே ஒரு கேள்விதான்

சுஜாதா சமூக நீதி எழுதாதவராகவே இருக்கட்டும், ஆனால் அவரின் சொத்து கணக்கு சமூக நீதியினை பக்கம் பக்கமாக எழுதி அதில் அரசியலுக்கு வந்து பல்லாயிரம் கோடியினை எல்லை இல்லா தலைமுறைக்கு சேர்த்துவிட்டவர்களின் சொத்து மதிப்பில் ஒரு குண்டூசிக்கு ஈடாகுமா?

அவன் பணத்துக்காக எழுதவில்லை, அறிவின் உந்துதலில் ஆத்ம திருப்திக்காக எழுதினான்

யதார்தத்தை உணர்ந்து எழுதினான், ஏராளமானோரின் மனதை தொட்டான்

மானமுள்ள எழுத்தாளன் அவன், தன் எழுத்தின் வீரியத்தில் என்ன சம்பாதித்தான்?, அல்லது யாரிடம் கையேந்தி நின்றான்

பழைய ரிஷிகளின் ஞானிகளின் பெருந்தன்மையின் கடைசி வரிசை சுஜாதா

தப்பான பிரச்சாரமோ இல்லை சுயநலத்தில் மொத்த சமூகத்தையும் தன் பக்கம் திருப்பி அதில் சுரண்டி கொழுக்கும் அசிங்கத்தை அவன் செய்யவில்லை

அவனின் சொத்துக்களையும் திராவிட சிங்கங்களின் சொத்துபட்டியலையும் ஒப்பிட்டு பாருங்கள்

அதன் பின் பேசவே மாட்டீர்கள்