அதற்கு பிரார்த்திப்போம்

அந்தபெண் அப்படி ஒரு பெரும் தவறும் செய்யவில்லை, தன் பெயருக்கோ குடும்பத்துக்கோ களங்கம் வரும் எந்த தீச்செயலையும் செய்யவுமில்லை

அவளுக்கு அந்த டிக்டாக் பிடித்திருந்தது, அதில் அவள் ஏதோ சிறிய மகிழ்வினை தேடிகொண்டாள், அதில் தவறொன்றும் இருக்க முடியாது

டிக்டாக்கில் பெண்கள் வரகூடாது என எந்த மதம் சொன்னது, சுதந்திரமான இஸ்லாமிய நாட்டு பெண்கள் துருக்கி போன்ற மார்டன் இஸ்லாமிய நாட்டுபெண்கள் வரத்தான் செய்கின்றார்கள்

இந்த ஒரு சாதாரண விஷயத்துக்காக ஒரு கும்பலே கூடி ஒரு பெண்ணை அவளின் கணவனிடம் இருந்து பிரிப்பது அவள் வாழ்வினை நாசமாக்குவது எல்லாம் கடவுளுக்கே அடுக்கா அதர்மம்

ஒரு பெண் மாபெரும் தவறே செய்திருந்தாலும் “பொய்மையும் வாய்மையிடத்து” என சொல்லி ஒரு பெண்ணை வாழவைக்கும் சமூகம் இது

அந்த ஆயிரம்காலத்து பயிர் நிலைக்க ஆயிரம் பொய்களை சொல்லலாம் அது தவறே அல்ல என போதித்த பூமி இது

ஓரு பெண்ணின் தாலி நிலைக்கவும் அவள் வாழ்வாங்கு வாழவும் எந்த பொய்யினையும் சொல்லலாம் அது தவறே இல்லை என்பதுதான் இத்தமிழகம் கண்ட தர்மம்

ஆனால் மதத்தின் பெயரால் அதை சிதைத்திருக்கின்றார்கள் அந்த பாவிகள்

மதத்தின் பெயரால் ஒரு அழகிய குருவிகூட்டை கலைத்துவிடும் கொடிய பாவத்தை செய்திருக்கின்றார்கள் கொடியவர்கள்

உங்கள் மேல் தவறே இல்லாதவன் முதல் கல்லை எறியட்டும் என சொன்ன இயேசு போல இவர்களிடம் கேட்டால் ஒரு பயலும் இருக்கமாட்டான்

ஆனால் அந்த அபலைக்கு அவர்கள் எல்லோரும் நீதிபதிகளாகிவிட்டனர்

எனினும் ஒரு விஷயம் உறுத்துகின்றது

அப்பெண்ணின் கணவனை நோக்கி பார்க்கலாம், ஊர் ஆயிரம் சொல்லட்டும், உலகம் ஏதும் பேசலாம்..

அவன் எப்படி நம்பலாம்?

அவள் அவனை நம்பி வந்தவள், அவனுக்காக தன் தாய் தந்தை குடும்பம் என எல்லாவற்றையும் துறந்து வந்தவள்

அவளை அவன் எவ்வளவு நம்பியிருக்க வேண்டும்? எப்படி எல்லாம் பாதுகாத்திருக்க வேண்டும்?

அவளுக்கு அவனல்லவா பாதுகாப்பு? முதல் பாதுகாப்பு அவன் தானே?

அப்பெண்ணுக்கு இப்பொழுது ஊர் சொன்னதா வலிக்கும்? அந்த கணவனும் நம்பிவிட்டதல்லவா வலிக்கும்?

ஊர் சொல்வதை நம்பிய கணவன் தான் சொல்லியதை நம்பவில்லை என்ற ஆதங்கம் அல்லவா அவளை கொல்லும்?

தன்னையே அவனிடம் அவனை மட்டும் நம்பியே ஒப்படைத்த ஒரு பெண்ணை இப்படி ஊருக்காக விரட்டிவிடுதல் எவ்வகையிலும் சரியே அல்ல‌

அந்த பெண்ணின் மனநிலையில் இருந்து நினைத்து பாருங்கள், நெஞ்சு தாங்கா சோகம் உங்களை தொற்றும்

அப்பெண் யாரென தெரியாது, எங்கிருக்கின்றார் என தெரியாது

ஆனால் அந்த சகோதரிக்காக நாம் அழுகின்றோம், அவளுக்கு ஆறுதல் சொல்கின்றோம்

தனக்காக வாழும் மனைவியினை யாரோ சிலர் சொற்கெட்டு பிரிந்த அந்த கயவன் அல கய்தா ஐ.எஸ் தீவிரவாதியினை விட கொடியவன்

அவனை அந்த தெய்வம் ஒரு காலமும் மன்னிக்காது

மாபெரும் தவறு செய்துவிட்ட அவன் அதற்கு பிராயசித்தமாக அவளை தேடி வந்து ஏற்றுகொள்ளட்டும்

அதற்கு மதமும் அந்த கூட்டமும் தயாராக இருக்குமென்றால் அவன் தூக்கி எரியட்டும்

அவள் அவனுக்காக காத்தே இருக்கின்றாள், நிச்சயம் இந்த உலகில் அவனுக்கு கொடுக்கபட்ட கடமை அவளை பாதுகாத்து அவளோடு வாழ்வது

அதற்கு தயாரில்லாமல் மதம்தான் பெரிதென செல்வானானால் நிச்சயம் மாபெரும் நரகம் அவனுக்கான இடத்தை இப்பொழுதே குறித்து வைத்திருக்கும்

கணவனை தவிர யார்முகமும் அறியாத அந்த அபலை வாழ்வில் மறுபடியும் வசந்தம் வரட்டும், அவன் வந்த் அவளை ஏற்றுகொள்ளட்டும்

அதற்கு பிரார்த்திப்போம்

ஒரு பெண்ணை நிம்மதியாக வாழவைப்பது புண்ணியங்களில் எல்லாம் பெரும் புண்ணியமானது

அந்த நல்ல தெய்வம் அவளுக்கு இரங்கட்டும், அவள் வாழ்வில் அதிசயம் நடந்து அவள் வாழட்டும்

அக்கணவன் கொஞ்சமாவது சிந்தித்து மதத்தை விட மனைவி பெரிதென திரும்பி வரட்டும், அந்த அல்லாஹூம் அதைத்தான் விரும்புவான்.

Advertisements

தமிழகத்து மனிதநேயம்

யாரென்றே தெரியாத இந்து பெண்ணின் மடியில் இஸ்லாமிய பெண்ணொருவர் சாய்ந்திருக்கும் இந்த படம் இணையமெங்கும் சுற்றி வருகின்றது

தமிழகத்து மனிதநேயம் இப்படியானது என உரக்க சொல்கின்றது இப்படம்

இதற்கு பெரியாரும் அவரின் பேச்சும் சிந்தனையுமே காரணம் என எவனாவது திராவிட குஞ்சு சொன்னால் அவனை உடனே அடித்து விரட்டுங்கள்

இங்கு இஸ்லாமும் இந்தும் மட்டுமல்ல கிறிஸ்தவம் போன்ற எல்லா மதமும் இங்கு சகோதரத்துவமாகவே அந்நாளில் இருந்தே பழகி வருகின்றன‌

ஒருகாலமும் மத துவேஷத்திற்கு இம்மண் இடம் கொடுக்காது

தவித்த பெண்ணுக்கு மடிகொடுத்த அந்த தாய்க்கு வாழ்த்துக்கள்

(ஆனால் ஒருவிஷயம் சொல்லியாக வேண்டும்

சங்கமும் இப்படி யாராவது சாய மடிகொடுக்க தயார், சாயத்தான் யாரும் தயாராக இல்லை

எக்காலமும் மானிட நேயம் கொண்ட சங்கம் முக்காலமும் அதற்கு தயார் என்பதையும் சொல்லிகொள்கின்றது.. )

வன்மையாக கண்டிக்கின்றோம்

இந்த இலங்கை ராணுவதளபதியின் பேச்சை வன்மையாக கண்டிக்கின்றோம்

அந்த தளபதி தங்களின் கையாலாகாத தனத்தையும் இன்னும் பல விஷயங்களை மறைக்கவும் கொழும்பு தாக்குதல் தீவிரவாதிகள் இந்தியாவில் பயிற்சி எடுத்ததாக பேட்டி அளித்திருக்கின்றார்

இது வன்மையாக கண்டிக்கதக்கது

இலங்கையில் பாகிஸ்தானின் நடமாட்டட்த்தையும் அங்கு ஐஎஸ் இயக்கத்தின் ஆட்கள் வந்து செல்வதையும் எத்தனையோ முறை சொல்லி எச்சரித்த நாடு இந்தியா

அப்பொழுதெல்லாம் அலட்சியம் செய்துவிட்டு, நன்றாக பலகாரம் தின்றுவிட்டு இப்பொழுது விபரீத விலை கொடுத்தபின் தீவிரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்றார்கள என்பது எங்கணம் நியாயம்?

ஒவ்வொரு இந்தியனும் இதை வன்மையாக கண்டிக்கின்றான், சர்வதேச அளவில் இந்தியாவினை தீவிரவாதிகளின் நாடு போல சித்தரிக்கும் இப்பேச்சு நிச்சயம் அநாகரிகமானது

நிச்சயம் அவர்களுக்கு பயிற்சி அளித்தது யார்? எந்த நாட்டு மத குருமார்கள் உட்பட எல்லா விவகாரமும் சிங்கள தளபதிக்கு தெரிந்தும் ஏன் இந்த திசை திருப்பல்

அவரின் இந்திய வெறுப்பு அப்படி

இது அந்நாட்டுக்கு நன்மையினை ஒருகாலமும் கொண்டுவராது

எனினும் புலிகள் ஒருகாலத்தில் சிங்கள ஆர்மியினை பற்றி சொன்னதுதான் சரி

“மொக்கை சிங்களவன்…. பலகாரம் தின்பதில் மட்டும் சூரன்”

காரல் மார்க்ஸ்

“உலகத்தை புரட்டி போட்டவர்களில் அழியா புகழுடையவர் காரல் மார்க்ஸ், உலகம் கண்ட வரலாற்று மனிதர்களில் அவருக்கான இடம் எக்காலமும் அழியாதது

அவர் ஒரு யூதர், ஆனால் கிறிஸ்தவ யூதர். நமக்கெல்லாம் ஹிட்லர் யூதரை ஒழித்தது தெரியும். ஆனால் இயேசுவிற்கு பின்னால் ரோமர் யூதரை போட்டு சாத்தினார்கள், ரோமின் அரசராக போப் வந்த பின் ஐரோப்பா எங்கு அடிக்கடி போட்டு அடித்தார்கள்

அப்படி அடிதாங்கமுடியாமல் கிறிஸ்தவத்திற்கு மாறிய சில யூதர்கள் உண்டு, காரல் மார்க்ஸின் முன்னோர் ஜெர்மனில் அப்படி கிறிஸ்தவரானார்கள்.

இயேசு நாதரின் உறவு வம்சமோ என்னமோ, தன்னலம் மறந்து மற்றவர்களுக்காக கவலைபட்ட யூதர் மார்க்ஸ், யூதருக்கே உரிய அறிவு அவரிடமும் இருந்தது, மிக சிறந்த அறிவாளி அதனை விட முக்கியம் அவரின் எழுத்துக்கள்

தொழிலாளருக்காக கண்ணீரிவிட்டு அவர்கள் வாழ்வு முன்னேற முதலில் சிந்தித்தவன் அவனே

அவரின் பட்டமும், பதவியும், அறிவும், வாதமும் அவருக்கு பெரும் புகழை கொடுத்தன, வாதத்தில் அன்று அவரை வெல்வார் யாருமில்லை

பெரும் அறிவாளிகள் உலகினை ஒட்டிவாழமுடியாது, பெருத்த‌ அறிவு ஒரு வகை பிணி, ஒரு சாபம். அது அந்த மனிதனை அவன் வாழும் சமூகத்தால் பரிகசிக்க வைக்கும், ஒதுக்கி வைக்கும், அவனை பைத்தியக்கார வகையில் சேர்க்கும், அவன் வாழ்வு மிக அலங்கோலமாய் அமையும்

ஆனால் பின்னால் வரும் தலைமுறை அவனை கொண்டாடும், அவனுக்காய் அழும், உலக வினோதம் இது,

மிக சிறந்த உதாரணம் தமிழகத்து பாரதி

பாரதிக்கு முன்னோடி மார்க்ஸ், அவன் அறிவும் எழுத்தும் அவனை வினோதமாக பார்க்க வைத்தன‌, நிச்சயம் ஏதோ சொல்கின்றான், ஆனால் சமூகத்திற்கோ குடும்ப வாழ்க்கைக்கோ ஒத்து வராதவன் என உலகம் அவனை ஒதுக்கியது.

அந்த பெண்ணும் அவள் காதலும் இல்லை என்றால் மார்க்ஸ் இல்லை, கம்யூனிசம் இல்லை, லெனின் இல்லை, சோவியத் ரஷ்யா இல்லை, தமிழகத்தில் திராவிட குரலும் இல்லை

அவள் ஜென்னி, மிகுந்த பணக்கார வாரிசு, அழகியும் கூட.

யூதனாயிலும் பார்க்க சகிக்காத அழகர் மார்க்ஸ், கிட்டதட்ட நம் போல அழகற்ற முகம், ஆனால் மிக மெலிந்த தேகம், மொத்தத்தில் பெண்கள் விரும்பாத ஆண் அவர்.

ஆனால் ஜென்னி அவன் அறிவிற்காக காதலித்தாள். அந்த ஒன்றிற்காக அவனை சுற்றி சுற்றி வந்தாள். அவளின் அணைப்பு ஒன்றிலே தன் அவமானத்தை எல்லாம் துடைத்துவிட்டு எழுதினார் மார்க்ஸ்

ஆம் உலகில் பணத்துக்கும் அழகுக்கும் இன்னும் என்ன கண்றாவிக்கு எல்லாமோ காதல் வரும், ஆனால் வறுமையான ஒருவன் மேல் அவன் அறிவுக்காக வரும் காதல் என்பது அரிது

சம்பாதிக்க தெரியாதவன் என்றும், பொறுப்பில்லாத உருப்படாதவன் , பணமில்லாத கிறுக்கன் என ஒதுக்கபட்ட ஒருவனின் அறிவு அவளுக்கே புரிந்தது

அரிசந்திரன் மனைவி சந்திரமதியின் தாலி அவன் ஒருவனுக்குத்தான் தெரியும் என்பது போல, மார்க்ஸின் அறிவு அவள் ஒருத்திக்குத்தான் தெரிந்தது

ஆம் அந்நாளில் அவன் அறிவினை அவள் நம்பினாள், ரசித்தாள், உருகினாள் அவன் அறிவுக்காய் பின் தொடர்ந்தாள்

அது எந்திரங்கள் வந்து உற்பத்தி பெருகிய தொழில் புரட்சி காலம், ஆனால் தொழிலாளர்கள் உரிமை இல்லா காலம். மார்க்க்ஸ் அழுதது அவர்களுக்காக, சிந்தித்தது அவர்களுக்காக ஏதும் செய்யமுடியுமா? என முழுநேரமும் வாழ்ந்தது அவர்களுக்காக‌

காரணம் அத்தொழிலாளிகள் 18 மணி நேர வேலை செய்யவேண்டும், உரிமை என உணவினை தவிர எதுவுமில்லை. சுருக்கமாக சொன்னால் ஏரில் கட்டிய மாடும் அக்கால தொழிலாளியும் ஒன்று

மார்க்ஸ் வீட்டிலோ வறுமை, முதலாளிகளை பகைத்ததில் சுத்தமான வறுமை. ஆனாலும் ஜென்னி அவனை விட்டு செல்லவில்லை. அவள் காதல் அறிவிற்காக வந்ததல்லவா?

அது மார்க்ஸிடம் நிரம்ப இருந்ததால் அவள் காதல் குறையவில்லை, இவன் 4 காசு சம்பாதிக்க மாட்டான், இவனுக்கு உன்னை திருமணம் செய்துகொடுக்கமாட்டோம் என சொன்ன பெற்றோர்களை தூக்கி எறிந்தாள் ஜெனி

மார்க்ஸின் எழுத்துக்கள் அடிமையான தொழிலாளர்களுக்கு கடவுளின் வார்த்தையாய் ஓளிவீசின, அவர் கொண்டாடபட்டார், விளைவு ஐரோப்பா எங்கும் விரட்டபட்டார். நீ எழுதகூடாது என சொல்லியே நாடுகள் அவரை அனுமதித்தன‌

எந்த ஒரு புரட்சியாளனும் தன்னைபோல ஒருவன் கிடைத்துவிட்டால் பற்றி எரிவான், ஏங்கல்ஸை சந்தித்தபின் அப்படி எரிய தொடங்கினார் மார்க்ஸ், “உலக தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்” என அவன் நாடு, மொழி,இனம்,மதம் கடந்து அழைத்தபொழுது ஐரோப்பா திடுக்கிட்டது

ஏங்கல்சும் மார்க்சும் இணைந்தபின் ஐரோப்பா எங்கும் தொழிலாளர் குரல் ஓங்கியது, அது பிரான்சில் தெரிந்தது, பெல்ஜியத்தில் தெரிந்தது, ரஷ்யாவில் எதிரொலித்தது, அரசுகள் திகைத்தன‌

மறுபடியும் ஓட விரட்டபட்டார் மார்க்ஸ், ஜென்னியினை விபசார பொய்வழக்கில் எல்லாம் சிக்க வைத்து மார்க்ஸை சித்திரவதை செய்தனர், அவள் அசரவுமில்லை, மார்க்ஸை அழவிடவும் இல்லை

என்னைபற்றி உங்களுக்கு தெரியும், இவர்களுக்கும் இந்த உலகுக்கும் என்ன தெரியும்? என அவள் கேட்ட கேள்விக்கு மார்க்ஸிடம் கண்ணீரை தவிர வேறு பதில் இல்லை

ஆம் அவளையும் அவள் அன்பையும் நினைத்து அவனால் அன்று அழத்தான் முடிந்தது

வாழ்வெல்லாம் சோதனையினை மட்டும் கடந்தன அந்த காதல் ஜோடிகள், லண்டன் வாழ்வு அவர்கள் சோதனையின் உச்சமானது,

ஆம் மூன்று குழந்தைகளும் வறுமையால் இறந்தன‌

மார்க்ஸ் அந்த பிஞ்சு குழந்தையின் சடலத்தை மார்போடு அணைத்து சொன்னார், “மகனே நீ பிறக்கும்பொழுது தொட்டில் வாங்க காசில்லை, நீ இறக்கும்பொழுது சவபெட்டி வாங்கமும் பணமில்லை” அப்படித்தான் இருந்தது வறுமை

எவ்வளவு பெரும் சோகம்? யார் தாங்குவார்?

ஆனால் ஜென்னி தாங்கினாள், உங்களுக்கு பிறகுதான் எனக்கு குழந்தைகள் வந்தார்கள், நீங்கள்தான் முக்கியம், உங்கள் அறிவுதான் முக்கியம் என கொஞ்சமும் அசராமல் சொன்னாள்

“ஒரு பெரும் அசாத்தியமான பெண்ணான ஜெனி என்னை தாங்கி நின்றபொழுதுதான், நான் மகத்தான காரியத்தை படைக்க பிறந்தேன் எனும் நம்பிக்கை எனக்கு வந்தது” என மார்க்ஸே சொன்னார்

உலக காதலர்களில் மிக உன்னத இடத்தில் வைக்கவேண்டியது மார்க்ஸ் ஜென்னி காதல். உலகத்தின் நம்பர் 1 காதல் இதுதான்.

ஆனால் உலகம் சொல்லாது, காரணம் இந்த காதலில் சுயநலமின்றி ஏழை தொழிலாளரின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அல்லவா இருந்தது

இந்த சோதனைக்கு பின்புதான் மார்க்ஸ் மூலதனம் எனும் புத்தகத்தை எழுதினார், மூன்று பாகமாக எழுதினார்

இயேசு கிறிஸ்து, டார்வின், ஐன்ஸ்டீன் வரிசையில் , உலத்தை அதிரவைத்த வரிசையில் மார்க்ஸ் வந்தது அந்த புத்தகம் மூலம்தான்

அது ஒன்றும் பெரும் விஞ்ஞானம் அல்ல, எளிய தத்துவம் அதாவது விவசாயி காய்கறியினை உற்பத்தி செய்கின்றான், நாம் கடையில் வாங்குகின்றோம். உண்மையில் நாம் நமது தேவைக்கு அவன் உழைப்பினை கோருகின்றோம், அவன் உழைத்து தருகின்றான். ஆனால் நாம் கொடுக்கும் பணம் அவனுக்கு முழுவதுமாக சேர்கின்றதா? இல்லை இடையில் இருக்கும் வியாபாரி கையில் சேர்கின்றதா?

இதனை தடுத்து உழைப்பவனுக்கு முழுபலனும் கிடைக்க என்ன வழி? என போதிகும் புத்தகம்தான் அந்த மூலதனம்

அதுவரை மத புத்தகங்களையும் இன்னபிற ஏமாற்றுகொள்கைகளையும் பார்த்துகொண்டிருந்த ஐரோபா அந்த புத்தகத்தால் அதிர்ந்தது, இது சாத்தியமா? உழைப்பவனுக்கு அவன் முழு உரிமையும், பொருளும் கிடைக்குமா?

நிச்சயம் கிடைக்கும் அதற்கான வழிமுறை இது என பல்லாண்டு கால ஆராய்சியில் அழகாக சொல்லியிருந்தார் மார்க்ஸ், அது ஒரு லாஜிக், சூத்திரம் போன்றது. இப்படி செய்தால் தொழிலாளர்களை வாழ வைக்கலாம் எனும் சித்தாந்தம் அது

முதன் முதலில் உலகில் தொழிலாளர் நலனுக்காக எழுதபட்ட புத்தகம் அதுதான், அது ஒன்றுதான்.

இந்த புத்தகம் தான் கம்யூனிஸ்டுகளின் பைபிள் ஆனது, உலகெல்லாம் எல்லா கம்யூனிஸ்டுகளுக்கும் வேதமானது. அதாவது அதுவரை தொழிலாளர்களை வாழவைக்க முதலாளிகளால் மட்டும் முடியும் என உலகம் நம்பிகொண்டிருந்தது. மார்க்ஸின் சிந்தனை அவற்றை தகர்தெறிந்து எப்படி தொழிலாள்ர்கள் நிர்வாகத்தையே நடத்தமுடியும் என சொல்லிகொடுத்தது

கிட்டதட்ட ஆதாமுக்கு கிடைத்த ஞானபழம் போல, தொழிலாளருக்கு மூலதனம் எனும் புத்தகம் கிடைத்தது, அது உலகை மாற்றிற்று

அதனை பின்பற்றி சோவியத் ரஷ்யா அமைந்தது, சீனா, கியூபா என எல்லா தேசங்க்ளும் அமைந்தன, கொரியாவும் ஒரு கம்யூனிச தேசமாக மலர்ந்திருக்கும், அமெரிக்கா கெடுத்தது அது இன்றுவரை தீரவில்லை, இன்று அந்த கம்யூனிச வடகொரியா அமெரிக்காவின் சவால்

இன்று எல்லா நாடுகளிலும் உள்ள தொழிலாளர் நலனுக்கான சட்டங்களின் மூலம் இந்த கார்ல் மார்க்ஸின் கொள்கைகளே, அவரின் சிந்தனைதான் இன்று ஓரளவிற்காவது உலக தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தருகின்றது

இன்று காரல் மார்க்ஸுக்கு பிறந்த‌ நாள்

மானிட நேயம் என்றால் என்ன? தொழிலாளர் நலன் என்றால் என்ன? என முதன் முதலில் சிந்தித்த அந்த கடவுளின் நினைவுநாள் . சாதிப்பது பெரிதல்ல , வறுமையிலும் சாதித்தான் அல்லவா? அதுதான் பெரிது

கம்யூனிச உலகிற்கு அவனும் அந்த ஜெனியும் மறக்க முடியாதவர்கள்

உலகெல்லாம் இன்று மார்க்ஸ் கொண்டாடபட்டாலும், பல நாடுகளின் தலைமகனாக அவன் வீற்றிருந்தாலும் அன்று வறுமை அவன் குடும்பத்தை கொன்றது, பின் அவனருமை ஜெனியினை கொன்றது

ஜெனி இறந்த கொஞ்சநாளில் மார்க்ஸும் இறந்தார், அந்த ஜெனியும் அவள் காதலும் இல்லையேல் மார்க்ஸ் இல்லை, இல்லவே இல்லை

மார்க்ஸின் அறிவு மீது அவளுக்கு அவ்வளவு நம்பிக்கையும், காதலும் இருந்திருக்கின்றது, அது பொய்க்கவில்லை மாறாக வரலாறு ஆயிற்று என்பதுதான் அவள் கண்ட ஒரே நிம்மதி

மார்க்ஸின் வாழ்விற்கும் பாரதி வாழ்விற்கும் நிறைய ஒற்றுமை காண முடியும், மார்க்ஸ் கவிஞன் கூட‌

பெருத்த அறிவு பெரும் நோவு என சொன்ன பழமொழி பொய்யல்ல, பெரும் அறிஞர்களின் வாழ்வு இப்படித்தான் இருந்திருக்கின்றது. அவர்களை புரிந்துகொள்ள 100 ஆண்டுகளுக்கு பின் கழிந்து முடிந்திருக்கின்றது

மார்க்ஸுக்கு ஜெனியும், ஏங்கல்சும் கிடைத்தார்கள் ஆயுளும் கிடைத்தது, ஆனால் நம் பாரதிக்கு இப்படி ஒன்று கூட வாய்க்கவில்லை.

வாய்த்திருந்தால் அவன் உலகில் பெரும் உயரத்தில் எங்கோ சென்றிருப்பான்.

இன்று மார்க்ஸின் பிறந்த‌ நாள் , முதன் முதலில் தொழிலாளிகளுக்காய் கண்ணீர் விட்ட, உலக தொழிலாளர்களின் வாழ்விற்காய் தன் வாழ்வினை அர்பணித்தவனும், இக்காலம் வரை தொழிலாளர் பெறும் அனைத்து சலுகைகளுக்கும் மூல காரணமான அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி

இது கணிணி யுகமாக இருக்கலாம் ஆனால் தொழிற்சங்கம் அமைத்து தொழில்பாதுகாப்பாக இருக்கும் கொத்தனாருக்கும், மில் தொழிலாளிக்கும் உள்ள தொழில்பாதுகாப்பு ஐடி தொழிலாளிக்கு இல்லை

தொழில்நுட்பம் எவ்வளவும் மாறலாம், உலகம் மாறலாம் ஆனால் உழைப்பவன் உரிமையினை மீட்டெடுக்க எந்நாளும் மார்க்ஸ் தேவைபடுவார்

காரணம் அவர் தனக்காக வாழ்ந்தவர் அல்ல, தொழிலாளரின் நல்வாழ்வுக்காக வாழ்ந்தவர் , பிறருக்காக வாழ்ந்தவர்

அந்த ஜெனி மார்க்ஸின் அறிவிற்காக வாழ்ந்தவள். இருவருக்கும் தன்னலம் என்பது கொஞ்சமுமில்லை

சரித்திரத்தில் கடவுளை போலவே அவர்கள்
அமர்ந்துவிட்டது இதனால்தான்.

கட்டடம் தெரியுமே தவிர அஸ்திவாரம் தெரியாது, மரம் தெரியுமே தவிர வேர் தெரியாது

ஆம் வேரென ஜெனி இருந்ததால்தான் மார்க்ஸ் வீழ்ந்துவிடாதிருந்தான்

வியட்நாம் வீடு படத்தில் கண்ணதாசன் எழுதிய “உன் கண்ணில் நீர் வழிந்தால்..” என வரும் பாடல் அப்படியே மார்க்ஸ் தன் ஜெனிபற்றி சொன்ன வரிகளின் சாயல்

ஆம் உண்மை காதல் என்றால் அதுதான், அதுவேதான்

“நீ சம்பாதி இல்லை சம்பாதிக்காமல் போ, நீ அழகாய் இரு இல்லை இல்லாமல் போ, என்னை நேசி இல்லை நேசிக்காமல் போ அது சிக்கல் அல்ல‌

நான் உனக்காக வாழ்வேன், ஒவ்வொரு நொடியும் உனக்காக உன் நலனுக்காகவே வாழ்வேன், அதில் தாய்பாசம் பிள்ளைபாசம் வரை தியாகம் செய்வேன், ஏன் ஏற்க கூடா பழியினை கூட உனக்காக ஏற்பேன் அதுதான் என் காதல் என நின்றாளே ஜெனி”, அதுதான் காதல்

யாருக்கு இப்படி காதலி அமைவாள், அதுவும் மனைவியாகி தொடர்வாள்

வாழ்வில் எதை எல்லாமோ இழந்த மார்க்ஸ் பெற்றுகொண்ட மிக சிறந்த அதிர்ஷ்டம் ஜெனியும் அவளின் அந்த காதலும்

அவ்வகையில் அவன் கொடுத்து வைத்தவன், அவனின் தன்னலமில்லா சேவைக்காக ஆண்டவன் கொடுத்த வரம் அவள்

இன்றும் எல்லா எழுத்தாளரும் மார்க்ஸிடம் மிக பொறாமைபடும் விஷயம் அவனுக்கு கிடைத்த தன்னலமில்லா தியாகத்தின் சிகரமான அந்த ஜெனி கொடுத்த தீரா காதல்..

இஸ்லாமிய பெண் எழுத்தாளர்

பொதுவாக இஸ்லாமிய சமூகத்தில் பெண் எழுத்தாளர்கள் குறைவு அதுவும் பெண்ணியம் பேசுபவர்கள் மிக குறைவு

ஆனால் அந்த பெண்மணி முதலிலே வித்தியாசமாக நோக்கபட்டார், அவரின் கவிதைகள் ஒருவித அணலை ஏற்படுத்தின‌

அந்த அணல் பின்னாளில் அவர் அந்த நாவலை எழுதும்பொழுது உலகை அதிர வைத்தது

அந்நாவல் “அர்த்த ஜாமத்து கதைகள்” , இஸ்லாமிய பெண்களின் நிலை பற்றி முகத்தில் அறைந்த புத்தகம் அது

பெரும் அதிர்வுகளை மனதில் கொடுக்கும் வலி நிறைந்த நாவல், கொஞ்சம் பொறுமையுடன் நுண்ணிய ரசனையுடன் வாசிக்க வேண்டிய நாவல் அது.

வாசிப்பு பழக்கம் அதிகம் இல்லா தமிழகத்தில் அந்த நாவல் சில சலசலப்பினை ஏற்படுத்தியதோடு ஓய்ந்தது ஆனால் உலகளவில் அது சல்மான் ருஷ்டி, தஸ்ரிமா நஸ்ரின் போல அவரும் நோக்கபட்டார்.

உறுதியாக சொல்லலாம், ஈரானிய கோமேனி போன்றவர்கள் இந்த நாவல் வரும்பொழுது இருந்திருந்தல் நிச்சயம் அவர் தலைக்கு கோடி விலை அறிவித்திருப்பார்

அப்படிபட்ட அதிர வைத்த எழுத்தாளர் Rajathi Salma

இஸ்லாமை பற்றி அவர் எழுதி சலசலப்பு வந்தாலும் மக்களிடம் அவருக்கு ஒரு வரவேற்பு இருந்தது, சுயேட்சையாக போட்டியிட்டு வென்று பேரூராட்சி தலைவராகவும் இருந்தார்.

அப்பொழுதுதான் கலைஞர் அவரை கட்சியில் சேர்த்தார்

ஒரு விஷயத்தில் கலைஞர் பாராட்டுகுறிவர், அவருக்கு எழுத்தாளர்களையும் சிந்தனையாளர்களையும் நிரம்ப பிடிக்கும்

கட்சிக்கு அப்படியானவர்கள் தேவை என்றும், இஸ்லாம் மற்றும் பெண்கள் வாக்கு என பலகணக்குகளை கணித்து அவரை அரசியலுக்கும் கொண்டுவந்தார்

அதன்பின்பு திமுகவின் மகளிரணி முக்கியஸ்தர் ஆனார் அவர்

நிச்சயம் சொல்லலாம் திமுகவில் சேர்ந்தபின் அவரிடம் அந்த பழைய நெருப்பு கொட்டிய எழுத்துக்கள் ஏனோ இல்லை

இன்று இந்தியாவின் குறிப்பிடதக்க பெண் எழுத்தாளர் அவர், அவரின் அர்த்த ஜாமத்து கதைகள் நாவல் அமெரிக்க பல்கலைகழகத்தின் பிராதன ஆய்வு புத்தகம்

ஐரோப்பா அமெரிக்கா என உலகெல்லாம் அவருக்கு ஏராளமான பெண் எழுத்தாளரும் சிந்தனையாளரும் உண்டு எனும் அளவில் அவரின் முகம் அறியபட்டது

இந்திய எழுத்தாளர்களில் இன்று சிறப்பானவர்கள் பட்டியலில் அவருக்கும் இடம் உண்டு

சந்தேகமில்லை அவர் தமிழகத்து “தஸ்லிமா நஸ்ரின்”. அந்த என்பவருக்கு இன்று பிறந்த நாள்

இறுக்கமும் கட்டுபாடும் மிகுந்த சமூகத்தில் இருந்து அவைகளை விமர்சித்து ஒரு நாவல் எழுதுவது என்பது தீகுளிப்பதற்கு சமம்

அவர் அதை சவாலாக செய்தார்.

இன்று ஒரு இஸ்லாமிய‌ பெண் டிக்டாக் வந்ததற்காக அவருக்கு விவாகரத்தே வாங்கி கொடுத்திருக்கும் கும்பல் அவரை எப்படி மிரட்டியிருக்கும்

அவர் திமுகவில் சேர்ந்தபின்பே அந்த மிரட்டல் ஓய்ந்தது

என்பவரை திமுக மேடைகளில் பார்க்கும்பொழுதெல்லாம் ஒரு விஷயம்தான் தோன்றும்

எழுத்தாளர்களுக்கும், முற்போக்கு சிந்தனை கொண்டோருக்கும் அடைக்கலம் கொடுத்தது திமுக எனும் இயக்கம் மட்டுமே

அதன் அடிப்படையும் கட்டுமானமும் அப்படியானது, எம்மதம் ஆயினும் மானுடத்தை நேசிக்கும் எழுத்தாளருக்கு அங்கு எந்நாளும் முன்வரிசையில் இடம் உண்டு

அதைத்தான் Rajathi Salmaவிக்கு கிடைத்த அரசியல் அங்கிகாரம் அறுதியிட்டு சொல்கின்றது

அவருக்கு இன்று பிறந்த நாள், கலைஞரால் கைதூக்கிவிடபட்டவர்கள் வரிசையில் அவருக்கும் நிச்சயம் இடம் உண்டு

நல்லதோர் வீணையொன்று மத மற்றும் பல கட்டுப்பாடுகளால் அடைக்கபட்டிருந்தது

அதை காலசுவடு பத்திரிகை உலகிற்கு காட்டியது, திமுக அது அழகாக பாட பாதுகாப்பும் வழியும் செய்து கொடுத்தது

கலைஞரால் கை தூக்கிவிடபட்டவர்கள் பெரும் உயரம் அடைந்தது போல இவரும் இன்னும் உயரட்டும்

கலைஞர் போலவே நீண்ட வாழ்வினையும் அவர் பெறட்டும், வல்ல இறைவன் அவரை எல்லா நலன்களாலும் ஆசீர்வதிக்கட்டும்

அதுதானே கிறிஸ்துவ வழி

இந்த கிறிஸ்தவ வழிபாட்டில் சில திருத்தங்களை செய்யவேண்டியிருகின்றது

இந்த திருப்பலி என்பது என்ன? யூத வழிபாட்டில் முன்பு ஒரு ஆட்டை வெட்டி பலிகொடுப்பார்கள் அதன் பின்பு அனைவரும் அதை அப்பத்தோடு உண்பார்கள்

பலி என்பது அதுதான், ஆடு பெரும்பான்மை எனினும் மாடும் சில நேரம் உண்டு. பாஸ்கா எனும் விழாவில் அது உண்டு

கிறிஸ்துவும் இதை தன் கடைசி விருந்தில் கொடுத்திருக்கின்றார், அப்பமும் ஒயினும் ஆட்டுகறியுமாக பங்கு வைத்திருக்கின்றார்

கிறிஸ்தவம் தோன்றும்பொழுது கிறிஸ்து நினைவாக அவர் கடைசியாக விருந்து வைத்த நினைவாக கிறிஸ்தவ ஆலயங்களில் முதலில் அப்பம் எனும் ரொட்டியும் ஒயினும் ஆட்டுகறியும் கொடுக்கபட்டது என்கின்றார்கள்

பின்பு அப்பமும் ஒயினும் என மாறிற்று

பின் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க பட்ஜெட் தாங்காமல் ஒயின் நிறுத்தபட்டு அப்பம் என்பது 10 ரூபாய் காயின் அளவு ஒரு சிறிய வெள்ளை அடையாளமாக மாறிவிட்டது

ஆம், இதுவா கிறிஸ்து சொன்ன கிறிஸ்தவம்? இல்லவே இல்லை

இயேசு எப்படிபட்ட இரக்கம் உள்ளவர்? தன் செய்தி கேட்க வந்த மக்கள் பசியாய் இருக்க கண்டு அப்பமும் மீனும் பலுகி பெருக செய்து அவர்களுக்கு பசி தீர்த்தவர்

இந்த ஞாயிற்றுகிழமை தூக்கத்தை விட்டு இன்னும் என்னவெல்லாமோ விட்டு ஆலயம் செல்லும் பக்தர்களுக்கு, பசியோடு செல்லும் மக்களுக்கு குருமார்கள் என்ன செய்யவேண்டும்?

இயேசுவின் போதனையினை மட்டும் சொன்னால் போதுமா? அவர் செய்தது போல் செய்ய வேண்டாமா?

சிலம்ப கலைஞன் ஒரே கம்பை பலவிதமாக சுழற்றுவது போலவும், சர்க்கஸ் மங்கையர் ஒரே வளையத்தை பலவிதமாக சுழற்றி சாகசம் காட்டுவது போல ஒரே பைபிளை புரட்டி புரட்டி சாகசம் செய்கின்றார்களே தவிர வேறு ஒன்றுமில்லை

இயேசு செய்ததை செய்கின்றோம் என்பவர்கள், இயேசு போல ரொட்டியும், ஒயினும் ஆட்டுகறியும் தரவேண்டாமா?

அதுதானே கிறிஸ்துவ வழி

அதைவிடுத்து அப்பம் என ஒரு ஓலை பண்டத்தின் துளியில் ஒன்றை கொடுப்பது எங்கண நியாயம்?

ஆக இனி திருப்பலியில் பர்கர் அல்லது ஒரு துண்டு பீட்சாவும் ஒரு கப் ஒயினும் வழங்கபட வேண்டும் என கிறிஸ்த ஆலயங்களுக்கு கோரிக்கை வைக்கபடுகின்றது

உடனே இந்த மறுமலர்ச்சியினை கிறிஸ்தவ சமூகம் செய்தாக வேண்டும்

இல்லை என்றால் அடுத்த தற்கொலை தாக்குதல் ஐ.எஸ் இயக்கத்தால் நடத்தபடாது

பசியோடு அவர்களின் பைபிள் கழுத்தறுப்பை பொறுக்கமுடியாமல் அமர்ந்திருக்கும் ஒரு கிறிஸ்தவனாலே கூட நடத்தபடலாம்

இனி பீட்சா பிய்க்கபட்டு ஒயின் வழங்கபடட்டும் , அதற்கும் மேல் கிறிஸ்துவினை போல் மீனும் வழங்கினால் கூடுதல் மகிழ்ச்சி

பரமண்டலங்களில் இருக்கும் கர்த்தரும் கிறிஸ்துவும் இன்னும் அதிகமாக மகிழ்வார்கள்

மர்ம நபரான லாட்டரி மார்டின்

மறுபடியும் வெளிச்சத்திற்கு வருகின்றார் அந்த மர்ம நபரான லாட்டரி மார்டின்

மிகபெரும் சர்ச்சை நபரான அவரை தமிழகத்தில் வலுக்க காலூன்ற வைத்த பெருமை கலைஞர் கருணாநிதி என்பவரையே சாரும்

ஆம் அன்னார் கலைஞரின் சில கதைகளை படமாக தயாரிக்க உதவினார், அதன் பிரதிபலனாக இங்கு மிக சுதந்திரமாக உலாவ அனுமதிக்கபட்டார் மார்ட்டின்

ஆம் திராவிடம் இப்படிபட்ட பல சாதனைகளை செய்திருக்கின்றது

இவ்வளவுக்கும் மார்ட்டின் என்பவர் பர்மா அகதியாக வடகிழக்கு மாநிலத்த்தில் வாழ்க்கையினை தொடங்கியவர், முழு தமிழரும் அல்ல‌

ஆக ஒரு மோசடி பேர்வழியினை இங்கு காலூன்றவைத்து பெரும் புள்ளியாக வளர்த்திருக்கின்றது திமுக‌

கலைஞர் அதை செய்தார், இதை செய்தார் தமிழகத்த்தை இப்படி எல்லாம் வளர்த்தார் என பொங்கி வழிபவர்கள் எல்லாம் மார்ட்டின் விவகாரத்தில் வாயினை திறப்பார்கள் என நினைக்கின்றீர்கள்?

வாயினை பெவிக்கால் போட்டு ஒட்டிகொண்டு கம்மென்று இருப்பார்கள்

ஆக திராவிடம் என்பது பணத்தால் வளைக்கும் ஒரு கொள்கையாக இருந்திருக்கின்றது என்பதுதான் தமிழக சோகம்…