யுனெஸ்கோ மன்றத்து விருது

ஆஸ்கர் விருதுக்கும், ஆஸ்கர் ரவிசந்திரன் விருதுக்கும் வித்தியாசம் உண்டா இல்லையா?

அப்படித்தான் யுனெஸ்கோ விருது என ஒன்றை யுனெஸ்கோ மன்றத்து விருது என கொடுத்து வீரமணிக்கு ஒரு காலத்தில் விபூதி அடித்திருக்கின்றார்கள்

ஆம் அந்த விருதை வழங்கியவர் கலைஞர்தான்.

கலைஞர் சமாதியில் அடித்து புரண்டு நியாயம் கேட்க வேண்டிய வீரமணி வழக்கம் போல் பிராமண சூது என கிளம்பிவிட்டார்

வீரமணியின் சட்டையினை பிடித்து “எந்த பிராமணன் உன்னை யுனெஸ்கோ விருது என ஏமாற்றினான்? சூத்திரந்தான் உன்னை ஏமாற்றினான்” என கேட்க இங்கு ஒரு பிராமணரும் இல்லை

வீரமணிக்கு கலைஞர் விபூதி அடித்தது இருக்கட்டும்

கொஞ்ச நாளைக்கு முன்பு கலைஞருக்கு ஆஸ்திரிய அரசு ஸ்டாம்ப் வெளியிட்டது என ஒருவர் வந்தார், ஸ்டாம்போடு கலைஞரை எல்லாம் சந்தித்தார்

விரைவில் ஸ்டாம்ப் கதை வெளிவரும் என்கின்றார்கள்

நமக்கு அடுத்த சுவாரஸ்ய தருணம் காத்திருக்கின்றது

எதையும் நம்பாதே, உன் சொந்த அறிவில் யோசி என சொன்ன பெரியாரின் வாரிசுகள் எப்படி எல்லாம் யோசிக்காமல் சிக்கி இருக்கின்றன‌?

யோசிக்க கொஞ்சமேனும் அறிவு வேண்டும் என்பதையும் பெரியாரா சொல்வார்?

அறிவு இருந்தால்தானே யோசிக்க?

இங்குள்ள யதார்த்தம் அது

அந்த நீதிபதி ஓபி ஷைனி என்பவரை ஆளாளுக்கு விமர்சிக்கின்றார்கள்

நாட்டில் நேர்மையான நீதிபதிகளில் அவரும் ஒருவர், கனிமொழிக்கும் ஆ.ராசாவுக்கும் ஜாமீன் மறுத்தவர் அவர்தான்

ஆனால் விடுதலை செய்தவரும் அவர்தான்

இப்பொழுது கோகாய் விவகாரத்திலும் அவரை இழுக்கின்றார்கள்

நீதிபதிகள் எவ்வளவு நேர்மையாய் இருந்தாலும் அவர்களுக்கும் சில கட்டுபாடுகள் உண்டு சாட்சியும் ஆதாரங்களும் வலுவாக வேண்டும்

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட அந்த தீர்ப்பின் வரிகளை இப்படித்தான் எழுதினார் ஷைனி “சிபிஐ தகுந்த ஆதாரங்களை சமர்பிக்க தவறியதால் கனிமொழியும் ஆ.ராசாவும் விடுவிக்க படுகின்றார்கள்”

மனிதன் எனும் படத்தில் ஜட்ஜாக வரும் ராதாரவி பாத்திரம் மிக அழகாக இந்த உண்மையினை சொல்லும் இப்படியாக‌

“இது கோர்ட், நான் ஒரு நீதிபதி எனக்கு தேவை வலுவான ஆதாரமும் தகுந்த சாட்சியும். அது இல்லாமல் நான் என்ன தீர்ப்பு சொல்லமுடியும்?”

ஆம் நீதிபதிகள் சரியாக இருந்தாலும் சாட்சிகளையும் ஆதாரங்களையும் சமர்ப்பிப்பதையும் குழப்பி அடித்தால் எந்த வழக்கிலும் யாரும் தப்பலாம்

இங்குள்ள யதார்த்தம் அது

அடுத்து சீனா என்ன செய்ய போகின்றது

சீன அமெரிக்க வர்த்தக போர் முடியும், உலகின் பொருளாதாரம் தேக்கத்தில் இருந்து விடுபடும் என எதிர்பார்த்தவர்களுக்கு பலத்த அதிர்ச்சி கொடுத்திருக்கின்றார் டிரம்ப்

கொஞ்ச நாட்களாகவே வெளிநாட்டு பொருளுக்கு அதிக வரிவிதிக்கும் முடிவில் இருந்தார் டிரம்ப், அது பேச்சுவார்த்தைக்கு சீனாவினை இழுத்துவந்தது

பல கட்ட பேச்சுவார்த்தை நடந்து சுமூக தீர்வு எட்டபடும் என உலகம் நம்பியது

இரு பெரும் பொருளாதார வல்லரசுகள் நடத்திய பேச்சுவார்த்தை என்பதால் பெரும் கவனம் இருந்தது

ஆனால் டிரம்பானவர் வம்பானவர் அல்லவா? சீன பொருட்களுக்கான வரியினை 10 முதல் 25 சதவீதம் உயர்த்திவிட்டார்

இதனால் சீனா கடும் கோபத்தில் இருக்கின்றது, டிரம்ப் பெரிதும் அலட்டிகொள்ளவில்லை

முன்பே இப்படி வரிவிதித்துத்தான் சீனா பேச்சுவார்த்தைக்கு வந்தது , இவ்வளவு நாள் இழுத்து பேசி மறுபடியும் அதே முடிவு என்றால் எப்படி என பல்லை கடிக்கின்றது சீனா

ஒரு காலத்தில் சோவியத் பக்கம் இருந்த சீனா உருப்படவில்லை, தள்ளாடியது

அங்கிள் சைமன் போல விவசாயம் பன்றிவளர்ப்பு வாத்து வளர்ப்பு என பேசிகொண்டிருந்த மாவோவின் திட்டம் பெரும் தோல்வி

சோவியத் பக்கம் இருந்து சீனாவினை பிரித்து சில சலுகைகளை கொடுத்தது நிக்சனின் அமெரிக்கா

அதில் இருந்து சீனா நாலுகால் சீற்றத்தில் முன்னேறியது, டெங் ஜியோ பிங் அதை புயல் வேக முன்னேற்றமாக மாற்றினார்

இப்பொழுது சீனாவினை தட்டிவைக்க வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு இருப்பதால் சில மோதல்கள் நடகின்றன‌

எனினும் பஸ்மாசுரனுக்கு வரம் கொடுத்த கதைதான், சீனாவிடமும் அந்நிய செலாவணி உட்பட சில பல‌ங்கள் இருக்கின்றன அதை அமெரிக்காவுக்கு எதிராக திருப்பினால் நிச்சயம் அமெரிக்காவும் சிறிது பாதிக்கபடும்

ஆட்டத்தின் அடுத்த கட்டத்தை டிரம்ப் தொடங்கியிருக்கின்றார், அடுத்து சீனா என்ன செய்ய போகின்றது என உலகமே பார்த்துகொண்டிருக்கின்றது

மோடி மட்டும் மே 23ம் தேதியினை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றார்

ஒரே சீற்றம்

ஆளாளுக்கு எங்க சாதி பொண்ணை தொட்டால் என ஒரே சீற்றம்

இந்த பெரும் அழகிகளை கொண்ட துருக்கி, இஸ்ரேல்,ஸ்பானிஷ் மற்றும் லத்தீன் அமெரிக்காவில் கூட ஒரு இனவெறியனும் இப்படி கத்தவே இல்லை

அட மஞ்சள் மேனியும் குறும் சிரிப்பு கண்களும், உடுக்கு போல் உடல் கொண்ட சீன தாய்லாந்து பெண்களை கொண்ட நாட்டுக்காரனும் இப்படி கத்தவே இல்லை

பெரும் அழகு பெட்டகங்களை கொண்ட சாதிக்காரன் எல்லாம் உலகெங்கும் அமைதியாய் இருக்க, இந்த மொக்கை அழகு பெண்களை வைத்துகொண்டு இவர்கள் செய்யும் காவல் மற்றும் மிரட்டல் அழிச்சாட்டியம் தாங்க முடியவில்லை

என்னமோ போங்கடா, காக்கைக்கும் தன் சாதி அழகு பெண் கொண்ட‌ சாதி

உங்க சாதி பெண்களை நீங்களே காத்துகொள்ளுங்கள்,

இதோ உலக அழகுபெண்கள் கூடம் காவலின்றி திறந்தே கிடக்கின்றது

அங்கெல்லாம் சாதிபெருமை பேச எந்த மடையனும் அரைகிறுக்கனும் இல்லை..

இந்த அழகிகளின் கால் தூசுக்கு கூட உங்கள் சாதி பெண்கள் வரமுடியாது

வெறும் மொக்கை பெண்களை வைத்து கொண்டே இவ்வளவு சாதிவெறி, இப்பெண்களை போல பெண்கள் அச்சாதியில் கிடைத்தால் என்ன ஆட்டம் ஆடுவார்கள்?

ஆட்டுக்கு வாலை ஆண்டவன் அளந்துதான் வைத்திருக்கின்றான், அழகு பெண்கள் எங்கு பிறக்க வேண்டும் என்பதும் அவனுக்கு தெரிந்திருக்கின்றது.

உலகம் ஆச்சரியத்தின் உச்சத்தில் பார்க்கின்றது

ரமலான் மாதம் என்றாலும் பாலஸ்தீனம் பற்றி எரிகின்றது, ஏகபட்ட ஏவுகனைகள் டெல் அவிவ் மேல் ஹமாஸ் போராளிகளால் எறியபட்டாலும் இஸ்ரேலிய அயன் டோம் அட்டகாசமாக முறியடிக்கின்றது

இன்றைய உலகின் மிக நுட்பமான ஏவுகனை பாதுகாப்பு சாதனம் அதுதான், உலகம் ஆச்சரியத்தின் உச்சத்தில் பார்க்கின்றது

கார்த்திகை மாத மழையாக ஏவுகனைகள் அடைமழையாக கொட்டினாலும் உட்புக முடியவில்லை, அட்டகாசமான நுட்பம் அது

அறிவு அற்றம் காக்கும் கருவி என்பதை டெல் அவிவில்தான் காணமுடிகின்றது

அவர்களின் எதிர்ப்பு ஏவுகனைகள் நாகபாம்பு போல வளைந்து நெளிந்து சென்று சரியாக எதிரியின் கனையினை வீழ்த்தும்பொழுது பல கண்களால் அதை நம்பவே முடியவில்லை

ஆச்சரியங்களை கொடுக்கும் நாடு அது, அவர்களுக்கு இதெல்லாம் சாதாரணம்

சரி, பாலஸ்தீன போராளிகளுக்கு இவ்வளவு ஆயுதங்களும் ஏவுகனைகளும் எங்கிருந்து வருகின்றன? யார் சப்ளை

அந்த தொடர்ச்சி லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அதன் பின்னணி பலமான ஈரான், சிரியா என பல திசைகளுக்கு செல்கின்றன‌

இஸ்ரேல் சிரியாவில் தீபாவளி வைக்க இதுதான் காரணம்

இப்பொழுது வழக்கமான முரட்டு அடியில் இறங்கியிருகின்றது இஸ்ரேல்

ஆம், நாளை அவர்களின் சுதந்திர தினம், கிட்டதட்ட 2 ஆயிரம் ஆண்டு போராட்டம் நினைவான தினம்

இன்னொருமுறை இஸ்ரேலை விட்டு அகலமாட்டோம், எந்த ஆபத்துவந்தாலும் உலகையே எதிர்த்தாவது விரட்டுவோம் என நிற்கும் அந்த வெறிமிக்க கூட்டம் பல இடங்களில் சொல்லும்

இப்பொழுது பாலஸ்தீனத்தை அப்படி சொல்லித்தான் நொறுக்கி சொல்லிகொண்டிருக்கின்றது

அநேகமாக நாளை பெரும் தாக்குதலை நடத்திவிட்டுத்தான் டெல் அவிவில் தேசிய கொடியினை ஏற்றுவார்கள் போல..

ராஜராஜன் சமாதி

இது ராஜராஜன் சமாதி என ஒன்றை தோண்டபோகின்றவர்களுக்கு பெரும் சிக்கல் இருக்கின்றது, ஆபத்தும் இருக்கின்றது

அங்கு என்ன சிக்கல் இருக்கின்றது என்றால் அங்கு என்ன கிடைக்கும் என தெரியாது, சில எலும்பு போன்ற எச்சம் சில கிடைக்கலாம்

ஒரு வேளை எலும்பு கிடைத்தாலும் அது எப்படி சோழனின் எலும்பு என உறுதிபடுத்துவார்கள்? நிச்சயம் சிரமம்

சோழனின் வாரிசு யார்? யாரை கொண்டு உறுதிபடுத்துவது?

இதில் வருவதுதான் ஆபத்து

சோழனின் வாரிசு செந்தமிழன் சீமான், அதனால் அந்த எலும்புகளை எங்களிடம் கொடுங்கள் எங்கள் லேப் டெஸ்டில் அது சைமனின் முன்னோர் என நிரூபிக்கின்றோம் என கிளம்புவார்கள்..

ஜனாதிபதியாகும் வாய்ப்பு

கலைஞர் கருணாநிதிக்கும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு முன்பு சில இடங்களில் வந்தது

மிகசிறந்த அரசியல்வாதியும் , காலங்களை மிக கச்சிதமாக கணக்கிடுபவருமான அவர் தனக்கே உரித்தான வரிகளில் சொன்னார்

“என் உயரம் எனக்கு தெரியும்யா” என சொல்லிவிட்டு மறுத்தார்

அதாவது மாநில அரசியல்வாதியான தான் அங்கு அமர்வது ஒரு விதமான கைவிலங்கு என்பதும், பல காரணங்களுக்காக அதை விரும்பவில்லை

ஆம் இந்திய தேசியத்தில் ஒருமாதிரி குறிக்கபட்ட திமுக ஜனாதிபதி பதவியில் அமரமுடியாது, அமரவைக்கபட்டாலும் ஆயிரம் சிக்கல் வரும்

இதை கவனமாக கணித்து தவிர்த்து வந்தார் கலைஞர்

அவருக்கு அறிவு இருந்தது

சரி துரைமுருகன் சொல்லும் இன்னொரு காமெடியினை பாருங்கள்

இன்னும் 25 ஆண்டுகளில் ஸ்டாலின் ஜனாதிபதியாம், ஸ்டாலினுக்கு இப்பொழுதே 66 வயதாயிற்று, 91 வயதில் அவர் ஜனாதிபதி ஆனால் என்ன? ஆகாவிட்டால் என்ன?

ஸ்டாலின் ஜனாதிபதியானால் யார் பிரதமர் என துரைமுருகனிடம் நல்ல வேளையாக யாரும் கேட்கவில்லை

கேட்டிருந்தால் கதிர் ஆனந்த் என சிரிக்காமல் சொல்லியிருப்பார்