போடா நீயும் உன் சமாதானமும்.

அந்த சண்டையினை தங்கள் ராக்கெட் பலத்தில் ஹமாஸ் தொடங்கி வைத்தது, ஆனால் இஸ்ரேலின் பதிலடி மதம் கொண்ட யானையினை விட மோசமாக இருந்தது

மிக மிக நுட்பமான அதே நேரம் மிக வலுவான தொடர்ச்சியான தாக்குதல்

இஸ்ரேலிய அடியின் முன்னால் ஹமாஸ் இயக்கத்தால் தாக்குபிடிக்க முடியாததால் உடனே வெள்ளைகொடி காட்டிவிட்டார்கள்

அதாவது சமாதானத்துக்கு வருகின்றார்கள்

“போடா நீயும் உன் சமாதானமும்..” என ஏற்காத இஸ்ரேல் தொடர்ந்து அடித்துகொண்டிருக்க, கத்தாரும் எகிப்தும் முடிந்த அளவில் அமைதிக்கு பாடுபட்டுகொண்டிருக்கின்றன

இரு செய்திகள் மனதை மிக நோகடிக்கின்றன‌

இரு செய்திகள் மனதை மிக நோகடிக்கின்றன‌

முதலாவது சென்னையில் நடக்கும் குடிநீர் தட்டுப்பாடு இரண்டாவது விஷயம் மதுரையில் ஆக்ஸிஜன் இல்லாமல் 3 பேர் மருத்துவமனையில் இறந்தது

சென்னையின் குடிநீர் தேவைக்கு அன்றே வழி அமைத்தான் வெள்ளையன் அடுத்த 50 ஆண்டுகால தேவையினை 1900களிலே அவன் பூர்த்தி செய்திருந்தான்

அதன் பின்பு சென்னை மக்கள் தொகையில் வெடிக்கும்பொழுது காங்கிரஸ் அரசும் நன்றாக திட்டமிட்டது தீரர் சத்தியமூர்த்தி கொண்டுவந்த அந்த பூண்டி நீர்தேக்கம் எல்லாம் வரலாறு

கலைஞரும் அவர் செதுக்கிய சென்னையும் நிச்சயம் நன்றாக இருந்தது, உறுதியாக சொல்லலாம் திமுக மேல் ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் சென்னையினை அவர்கள் தொடர்ந்து வளர்த்தெடுத்ததை மறக்க முடியாது

மேம்பாலங்கள் கட்டியது ஒருபக்கம் என்றால் நீர்தேவையினையும் நன்றாகவே மேம்படுத்தினார்கள்

அரசு ரீதியாக செய்யமுடியாததை கூட புட்டபர்த்தி சாய்பாபா மூலம் ராஜதந்திரமாக சென்னைக்கு ஏதோ செய்ய முயன்றார்கள்

மருத்துவதுறையிலும் காங்கிரஸ் போட்டுவைத்த அஸ்திவாரத்தை திமுக நன்றாகவே மேம்படுத்தி கொண்டுவந்தது

ஜெயாவின் ஆட்சி இரும்பு ஆட்சி அதில் நல்லது சில இருந்தாலும் விமர்சனம் என்பது வராது, அவரின் அடக்குமுறை வேறுமாதிரியானது

கடந்த நவம்பரில் பருவமழை சென்னையினை கைவிட்டபொழுதே அடித்து சொன்னார்கள், வரும் கோடை காலம் நினைத்தது போல் இராது , மாபெரும் சிக்கலை சென்னை சந்திக்கும் என்ற பலத்த எச்சரிக்கை விடபட்டது

ஆனால் ஆளுக்கு 5 ஆயிரம் அதன் பின் 2 ஆயிரம் என ஏலம் விட்ட அரசுக்கு ஏகபட்ட வேலைகள் இருந்தன‌

உள்ளாட்சி அமைப்புக்கான தெர்தல் நடைபெறாததால் அந்த துறையும் இப்பொழுது களத்தில் இல்லை

ஆந்திராவில் இருந்து பெறவேண்டிய நீரையும் இந்த அரசு பல காரணங்களுக்காக கேட்கவில்லை, அது அடிமைதனம் என்பது மட்டும் ரகசியமல்ல, பாஜகவுக்கு எதிரான சந்திரபாபு நாய்டு போன்றோருடன் பேச இவர்கள தயங்கினர்

வீராணத்தில் போதுமான நீர் இருந்தும் அதையும் கொண்டுவரும் விஷயத்தில் இவர்கள் இல்லை எல்லாம் தேர்தல் முடிவு பயம்

சென்னை மக்கள் குடிநீருக்கு தவியாய் தவிக்க இவர்களோ தினகரன் எம்.எல்.ஏ 3 பேருடன் 3 சீட்டு ஆட்டம் ஆடிகொண்டிருக்கின்றார்கள்

இந்த அவலத்துக்கு காரணம் இந்த 7 வருட அரசும் குறிப்பாக பழனிச்சாமி அரசும் , உள்ளாட்சி தேர்தல் நடத்தாத கொடுமையுமாகும்

இப்படி சென்னையினை பரிதாபமாக பார்த்து கொண்டே மதுரை பக்கம் வந்தால் 3 பேர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் இல்லாமல் இறந்தே விட்டார்கள்

இது பெரும் கொடுமை

வடக்கே மிக பின் தங்கிய மாநிலத்தில் மட்டும் காணபடும் இக்கொடுமை தமிழகத்துக்கும் வந்திருப்பது நிச்சயம் மனம் கலங்க வேண்டியவிஷயம்

மிக மிக முன்னேறிய மாநிலமாக கருதபட்ட தமிழகம் இன்று மிக பிந்தங்கிய மாநிலமாக சென்றுகொண்டிருப்பது மகா வேதனை

மக்கள் நலம் சிறிதுமில்லா இந்த அரசு எவ்வளவு விரைவில் ஒழிகின்றதோ அவ்வளவுக்கு தமிழகத்துக்கு நல்லது

2016ல் திமுகதான் வென்றிருந்தால் இந்நிலை வந்திருக்காது, உறுதியாக சொல்லமுடியும்

அவர்களின் கொள்கையும் இன்னும் பல காரியங்களும் சர்ச்சைக்குரியவைதான், ஆனால் ஓரளவு மக்கள் நல திட்டங்களை அவர்களால்தான் சரியாக செய்யமுடியும்

காரணம் கலைஞரின் சிந்தனை அப்படி இருந்தது

காமராஜரை மீறி நம்மிடம் ஒப்படைக்கபட்ட ஆட்சியினை மிக சிறப்பாக நடத்தவேண்டும் என்ற வேகம் அவரிடம் இருந்தது

ராமசந்திரன் , ஜெயாவிடம் அப்படி ஒரு எண்ணம் ஒரு காலமுமில்லை

அதையும் மீறி கிடைத்த இடத்தில் எல்லாம் அதே வேகத்தில் பணியாற்றினார் கலைஞர், அதை சொல்லத்தான் வேண்டும்

கலைஞரால் இலக்கணம் வகுக்கபட்ட கட்சி திமுக, நிச்சயம் அவர்கள் ஆட்சியில் இருந்தால் இந்நிலை வந்திருக்காது, இனி இந்த அவலத்தை போக்கவும் அவர்களின்றி இங்கு யாருக்கும் வாய்ப்பு இல்லை

திமுக பல இடங்களில் கடிக்கும் பூதம்தான், ஆனால் காவல் பூதமும் அதுதான்.

பாலஸ்தீன் அழுகைக்கு வயது 71 : 02

பாலஸ்தீன் அழுகைக்கு வயது 71 : 02

யூதர்களின் அன்றைய வெற்றி ஆச்சரியமானது அல்ல, பல விஷயங்கள் அவர்களுக்கு சாதகாமாக இருந்தது.
அதாவது அவர்கள் ஐரோப்பாவில் வாழ்ந்தவர்கள், நவீன போர்முறை அறிந்தவர்கள். பல நாட்டு ராணுவத்தில் பணியாற்றிவர்கள்.

அதனால் யுத்தநேர்த்தி இயல்பாய் வந்தது. நேர்மாறாக பாலஸ்தீன் கூட்டணியிடம் கோபம் இருந்ததே தவிர முறையான பயிற்சி இல்லை.

மொத்தமக்களையும் ராணுவமாக மாற்றி, தாகுதல்,தற்காப்பு என களத்தில் பின்னி எடுத்தது இஸ்ரேல். போர்காலத்தில் எப்படி தப்பிக்கவேண்டும் என்பதில் ஹிட்லர் புண்ணியத்தி யூத இனம் நன்றாக அனுபவட்டிருந்தது.

ஆனால் அராபியருக்கு இது புதிது. தடுமாறினார்கள். ஐரோப்பா ஓட அடித்த ஓணான் இது என நினைத்து அவர்கள் அடித்தது ஓணானை அல்ல டைனோசரை என பின்னால் புரிந்துகொண்டார்கள்.

ராணுவமும், உளவுதுறையும் இல்லை என்றால் இஸ்ரேல் இல்லை என்பதை இஸ்ரேல் அனுபவபூர்வமாக உணர்ந்தது.
பாதிபாலஸ்தீனில் இஸ்ரேலாக இருந்தவர்களுக்கு அகண்ட இஸ்ரேல் கனவு தோன்ற்றிற்று,

இந்த போரின் மூலம் அந்த கனவில் எண்ணெய் ஊற்றினார்கள்.

கோடு போட்டு தீர்த்திருக்கவேண்டிய பிரச்சினைதான், ஆனால் கோடே வேண்டாம் அது தொல்லை, எல்லாம் நமக்கே என்பவர்கள் எப்படி விடுவார்கள்?

பணமும், உலக ஆதரவும் அவர்க்ளுக்கு குவிந்தது, ஆனால் பாலஸ்தீனியர் ஏழைகள் எப்படி அவர்கள் குரல் சபையேறும்?,

ஆனால் அதிர்ஷ்ட வசமாக எகிப்து சூயஸ் கால்வாய் மூலமும், அரபுலகம் எண்ணேய் மூலமும் பணம் குவிக்க அடுத்த போர்கள் ஆரம்பமானது.

விஸ்வரூபமெடுத்து ஆடியது இஸ்ரேல், சகல நாடுகளும் சமாதான உடன்படிக்கை என விலகிவிட்டன. அதாவது எண்ணெய்பணமோ அல்லது வேறுபணமோ நாங்கள் பணக்காரராய் வாழ்கின்றோம், எமக்கு அமெரிக்க உறவு வேண்டும் அவ்வளவுதான்,

பாலஸ்தீனர்களை அப்படித்தான் அந்த தேசங்கள் கைகழுவின.

மிகசில தேசங்களின் ஆதரவில்தான் அராபத் போராடினார், ஆனால் அவராலும் முழுவெற்றி பெறமுடியவில்லை.

பாலஸ்தீன் என ஒரு நாடு, அதனை பிரித்து ஒரு குடியேற்ற நாட்டை உருவாக்கி, குடிவந்த இனம் மொத்த தேசத்தையும் கபளீகரம் செய்த ஆச்சரியம் அங்குதான் நடந்தது.

சுருக்கமாக சொன்னால் ஒரு தேசம் திட்டமிட்டு அழிக்கபட்டது, மண்ணின் சொந்தமக்கள் அனாதைகளாக்கபட்டனர், கேட்பாரில்லை.

எல்லை தாண்டிய பயங்கரவாதம் என சிலவிஷயங்களில் ஒப்பாரி வைக்கும் வல்லரசுகள், இந்த பச்சையான அக்கிரமத்தினை கண்டுகொள்வதே இல்லை.

இன்றும் கூட பாலஸ்தீனை ஆக்கிரமித்து பட்டினிபோட்டு, அவ்வப்போது மற்ற நாடுகளின் எல்லையில் அத்துமீறி தாக்கும் இஸ்ரேல், அது தற்காப்பு என வாசிக்கும் அமெரிக்கா.

பாலஸ்தீனருக்கு ஆதரவான நாடுகளில் முன்பு இந்தியாவும் ஒன்று, இந்திராவும் அவர்களின் அலுவலகத்தை டெல்லியில் திறக்க அனுமதித்தனர். அராபத் மீது அவர்களுக்கு அனுதாபம் இருந்தது. இன்று இந்தியா அப்படியே இஸ்ரேலிடம் சரண்டர்.

இன்று எங்காவது பாலஸ்தீன் நாடு என்று நாம் கேட்கமுடியுமா?, பாலஸ்தீன் என்றால் ஹமாஸ், அவர்கள் தீவிரவாதிகள், இஸ்ரேலின் அமைதியை கெடுப்பவர்கள் என்றே இந்த தலைமுறை நம்புகின்றது.

பாலஸ்தீனியரின் வலியை புரிந்துகொள்ள அவர்களின் வரலாற்றை தெரிந்துகொள்ளவேண்டும், பெரும் துரோகத்தால் சிதைக்கபட்டவர்கள் அவர்கள்.

கர்த்தராகிய தேவன் இஸ்ரேலுக்கு வெற்றியை கொடுத்தார் என பைபிளை கையில் வைத்துகொண்டு கதறுபவர்களை விடுங்கள், அவர்களுக்கு பைபிள் தெரிந்த அளவு மானிட நேயம் தெரியாது

பைபிளை தாண்டி, தோராவை தாண்டி,குரானையும் தாண்டி சிந்தித்தால் ஒன்றே ஒன்றுதான் உங்கள் காதுகளில் கேட்கும்.

அது பாலஸ்தீனத்தின் அழுகுரல், அந்த குழந்தைகளின் அழுகுரல்

சித்திரை கத்திரி வெயிலில் நம் குழந்தைகளை விடவே எவ்வளவு அஞ்சுவோம், அப்படியானால் பாலஸ்தீன தாய்மார்களின் வலி எப்படி இருக்கும்?

அக்குழந்தைகளின் அழுகுரல், “நேற்றுகூட எங்கள் வீட்டில் குண்டு விழுந்தது, ஆனால் எங்கள் அப்பாவை போல‌ நாங்கள் சாகவில்லை..” என அக்குழதைகள் மழலையில் சொல்வதை கேட்டபின்னுமா கடவுளும், மதமும் பெரியவை??

71 வருடமாக தொடரும் அழுகை நிச்சயம் ஒருநாள் நீங்கும். இறைவன் எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு வைத்திருப்பான்.

இஸ்ரேலியர் எதிர்பார்க்கும் மீட்பன் வரட்டும் வராமலே போகட்டும், மீட்பன் அவர்களுக்கு இப்போதைய தேவை அல்ல‌

ஆனால் மெசியா வந்து மீட்டெடுக்க வேண்டிய அவசியம் பாலஸ்தீனியருக்கே இருக்கின்றது, அவர்களுக்கான மெசியா விரைந்து வரட்டும்.

(உலகை ஒரு சுற்று சுற்றிவாருங்கள் இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் இன்னொரு மதத்தார் பெரும்பான்மையான ஒரு நாட்டில் ஓரளவு அமைதியாய் வாழ்கின்றனர் என்றால் அது இந்த பாரத தேசம் ஒன்று அன்றி வேறல்ல‌

அது உலகின் வேறு எந்த நாட்டிலும் அல்ல‌

அந்த ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்க கடும் காவி, ஐ.எஸ், இந்த அழிச்சாட்டிய கிறிஸ்தவ கும்பல் என யார்வந்தாலும் விடவே கூடாத பெரும் கடமை ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு)

செஞ்சிலுவை சங்கம்

அப்பொழுது ஆஸ்திரியா ஹங்கேரி என்றொரு வல்லரசு இருந்தது. அதற்கும் ஜெர்மனுக்கும் உறவும் இருந்தது. அவர்களும் உலகாள ஆசைபட்டனர்

இதில் ஆட்டோமன் சாம்ராஜ்யமும் சேர்ந்து கொண்டது

அதனை ஒழித்துகட்ட பிரிட்டன் தொடங்கியதே முதலாம் உலகப்போர், அது ஐரோப்பாவில் பெரும் அழிவினை கொடுத்தது, காயம்பட்டோரை கூட மீட்க முடியவில்லை

அப்பொழுது ஈஸ்டர் பண்டிகை வந்ததால் 3 நாள் போர் நிறுத்தம் செய்யவேண்டும் என முடிவு செய்தார்கள், அப்பொழுது ஹென்றி டியூனண்ட் என்பவர் சிகப்பு சிலுவை கொடியுடன் சாமாதான அடையாளம் காட்டிவிட்டு தன் குழுவுடன் மீட்பு பணி செய்தார்

அந்த குழு சிகப்பு சிலுவை குழு எனப்பட்டது, ஆங்கிலத்தில் ரெட் கிராஸ்

எந்த சிகப்பு சிலுவை கொடியினை ஏந்தி சிலுவைபோர் என கடும் ரத்தம் சிந்தபட்டதோ, அதே சிகப்பு சிலுவை இப்பொழுது ஆறுதலாயிற்று

அது மீட்புகுழு அடையாளமும் ஆயிற்று. யாரும் சண்டையிடுங்கள், நாசமாய் போங்கள் ஆனால் அடிபட்டோருக்கு நாங்கள் உதவுவோம் என அவர்கள் உதவினார்கள்

இதனால் அவர்கள் மேல் அனுதாபம் கூடிற்று

கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு ஆதரவு பெருகி செஞ்சிலுவை சங்கம் வளர்ந்தது, பின் போர் மட்டுமல்ல எங்கெல்லாம் மக்கள் பாதிக்கபடுகின்றார்களோ அங்கெல்லாம் அது சேவையாற்றியது

சிலுவை அடையாளம் என்பதன் உண்மை நோக்கத்தை அதுதான் நிறைவேற்றிகொண்டிருக்கின்றது

யாருக்கு தேவையோ அவர்களுக்கு ஓடிவந்து உதவுவார்கள், கைதூக்கிவிடுவார்கள். பாதிக்கபட்டவன் எந்த மதம், இனம், மொழியாக இருந்தாலும் சிக்கல் இல்லை

மனிதன் என்ற ஒரு தகுதி இருந்தால் போதும்

சிலுவையின் மாண்பினை போப் காக்கவில்லை, பிரிவினை கோஷ்டி காக்கவில்லை. உண்மையில் செஞ்சிலுவை சங்கமே உண்மையான கிறிஸ்துவத்தை தாங்கி நிற்கின்றது

இது தொடங்கபட்ட கொஞ்ச காலத்தில் மத அடையாள சர்ச்சை வந்தது, அதற்கென்ன நல்ல இஸ்லாமியராக இருந்தால் சிகப்பு பிறை வைத்து கொள்ளுங்கள் இணைந்து செயலாற்றலாம் என்றார்கள்

இன்று செஞ்சிலுவை, செம்பிறை உலகெல்லாம் பரவி பணியாற்றுவது இதனால்தான்

இந்த உலகில் மிக நன்றிகுரியவர்கள் செஞ்சிலுவை சங்கத்தார், யார் பாதிக்காப்ட்டாலும் ஓடிவருவார்கள். போரில் சீரழிந்த நாடுகளுக்கு ஒரே ஆறுதல் அவர்கள்தான்

சிரியா, ஆப்கன் என பல நாடுகளில் அவர்கள் பணி பெரிது, பாராட்டுகுரியது

ஈழத்திலும் மக்களை புலிகள் மனித கேடையமாக பயன்படுத்துவது குறித்து முதலில் வருந்தியது அவர்களே, இலங்கையிலும் அவர்கள் பணி ஏராளம்

இன்று செஞ்சிலுவை சங்கத்து நாள், போரினால் பாதிக்கபட்டவர்களுக்கு ஏதும் செய்ய வேண்டும் என எண்ணிய ஹென்றி டியூனண்ட் பிறந்த நாள்

அதுவரை போர் என்பது கொடியது, வென்றவர்கள் கொள்ளையிட்டு மகிழ்வார்கள். காயம்பட்டு களத்தில் இருப்பவர்கள் அப்படியே சாவார்கள் அல்லது கொல்லபடுவார்கள்

அவர்களை கவனிக்கவோ அல்லது பாதிக்கபட்ட மக்களை கவனிக்கவோ யாருமில்லை, மிக சில மன்னர்களே அப்படி பெருந்தன்மையாக இருந்திருக்கின்றார்கள்

பெரும்பான்மை போர்கள் நினைத்துபார்க்க முடியா கொடூரத்துடன் முடிந்திருக்கின்றன, அப்படி ஒரு கொடூர காட்சியினை கண்டபின்புதான் அசோகரே மனம் மாறினார்

அவ்வகையில் இந்த ஹென்றி டியூனண்ட் என்பவர் “இரண்டாம் அசோகர்” அல்லது “ஐரோப்பிய அசோகர்”

இன்று காணும் மீட்பு உதவி எல்லாம் அவரால் வந்தது, அந்த பெருமகனை நினைத்து நன்றி செலுத்திவிட்டு, உலகெல்லாம் உள்ள செஞ்சிலுவை, செம்பிறை சங்கத்தாருக்கு வாழ்த்து தெரிவிக்கலாம்

(இப்பொழுது வந்து உனக்கு சிகப்பு சிலுவை, சிகப்பு பிறைதான் தெரியுமா? எங்கள் சிகப்பு ஆர்.எஸ்.எஸ் கொடி தெரியாதா? ஏய் மதவெறியனே என கத்துவார்கள்

சில இடங்களில் ஆர்.எஸ்.எஸ் மீட்பு பணி செய்தது. பிரிவினை காலம், சீனப்போர், வங்கப்போர் காலங்களில் அதன் சில உதவிகள் கவனிக்கதக்கவை

ஆனால் அதன்பின் மசூதி இடிப்பு இன்னும் பல கலவர சர்ச்சைகளில் சிக்கி அது மீட்பு படையாக இல்லாமல் மத இம்சை படையாக மாறிவிட்டது)

பாலஸ்தீன் அழுகைக்கு வயது 71 : 01

பாலஸ்தீன் அழுகைக்கு வயது 71 : 01

(இஸ்ரேலிய சுதந்திர நாள் மே 15, ஆனால் அவர்கள் காலண்டர் படி இன்றுதான் அந்த நாள், அவர்கள் கொண்டாட ஆரம்பித்தாயிற்று

ஆயினும் நியாயம் என்பது பாலஸ்தீன் பக்கம் இருப்பதால் அவர்கள் அழுகின்றார்கள், நாம் அவர்களுக்காக அழுவோம்)

71 ஆண்டுக்கு முன்னால் அழதொடங்கிய பாலஸ்தீனம், இன்னும் அழும். ஒரு பெருந்தலைவன் வரும்வரை அழத்தான் வேண்டும்.

4000 வருடத்திற்கு முன்ஆபிராகாம் வருமுன்னே கானான் என்றும், ஆபிராமின் கொள்ளுபேரன்கள் எகிப்தில் பிரமீடு கட்டிகொட்டிருந்தபொழது பெலிஸ்தின் அல்லது பாலஸ்தீன் என அந்த தேசம் இருந்தது.

பின்னாளில் புகழ்பெற்ற தாவீது,சாலமோன் அரசர்கள் ஜெருசலேமை ஆளும்பொழுது கூட பெலிஸ்தியர் தேசம் இருந்தது, கோலியாத் கதை அதனைத்தான் சொல்கின்றது.

யூதர்களின் சிறிய தேசம் ரோமானியர்களால் சிதறடிக்கபட்ட பின் 2000 வருடமாக இருந்த‌து பாலஸ்தீன்.

இறுதி 400 வருடம் அது ஓட்டோமான் அரசின் ஒரு பகுதி, முதல் உலகப்போர் முடிந்த பின் அது பிரிட்டன் பகுதி.

அன்று அரேபியாவும் மேற்காசியாவும் தரித்திர தேசங்கள், சீண்டுவாரில்லை. எண்ணெய் மட்டும் 1900களில் கண்டுபிடிக்கபட்டிருக்குமானால் ஹிட்லரும் விட்டுவைத்திருக்கமாட்டார், ஏன் பிரிட்டன் கூட விலகியிருக்காது. உலக வரலாறே மாறியிருக்கும்.

இன்று பணக்கார பூமி, ஏராளமான மக்களுக்கு வாழ்வளிக்கின்றது என்பது உண்மை, தமிழக‌ பகுதியிலே அங்கு பணியாற்றாத நண்பர்களோ அல்லது உறவினர்களோ இல்லாமல் யாரும் இல்லை. அவர்கள் அங்கு பணியாற்றி இந்தியாவிற்கு என்னவெல்லாமோ அனுப்புகின்றார்கள்,

பலர் முகநூலில் ஸ்டேட்டஸ் போட்டே கொல்லுவார்கள்.

ஆனால் அன்று அப்படியல்ல, ஒட்டகமும்,பேரீச்சைபழமும் வேண்டாம் என சொல்லி உதற தயாரானது பிரிட்டன். வேறு ஒன்றும் பிரமாதமாக அங்கு இல்லை.

அந்த பக்கம் 2000 ஆண்டுகளாய் ஐரோப்பா முழுதும் அடிவாங்கி, அதுவும் ஹிட்லர் காலத்தில் குற்றுயிராக்கபட்ட யூத இனம் தனிநாடு வேண்டும் என அடபிடித்தது, உலகத்தாருக்கு அவர்கள்மேல் பரிதாபமும் உண்டாயிற்று.

உங்களுக்கு ஆப்ரிக்காவில் ஒருநாடு அல்லது ஆஸ்திரேலியாவில் ஒரு தீவு என வல்லரசுகள் பேரம்பேசும் பொழுதே, அதெல்லாம் ஏற்கமுடியாது என ஒரு பெரும் தந்திரதிட்டத்தை அவர்கள் முன் காட்டியது யூத இனம்.

அதாவது நிலவங்கி என ஒன்றை தொடங்கி இருந்தார்கள். கிட்டதட்ட வட்டிமேல் வட்டி என அன்றே பாலஸ்தீனில் பாதியை விலக்கு வாங்கியே இருந்தது யூத இனம், பாலஸ்தீனருக்கு அது தெரியவே இல்லை. ஏதோ ஐரோப்பிய வங்கி என நினைத்து பாதியை இழந்திருந்தார்கள். மசூதிகளை தவிர 80% நிலம் அந்த வங்கிக்கு இருந்தது அதாவது யூதருக்கு இருந்தது.

அதையயும் கூட‌ உலகம் ஏற்கமறுத்தபொழுது அடுத்த அஸ்திரத்தை எடுத்தது யூத இனம்.

யூதர்களின் தோரா கிடைப்பதற்கரிது, ஆனால் கிறிஸ்தவ பழைய ஏற்பாடு கிடைக்குமல்லவா? வாசியுங்கள், அவர்கள் செய்வதெல்லாம் தந்திரமான காரியம், ஆபிரகாம் காலம் தொடங்கி யூதாஸ் வரைக்கும் ஏராளம் கொட்டிகிடக்கும்.

அப்படித்தான் சூயஸ் கால்வாயை காட்டினார்கள், எகிப்தில் இருக்கும் கால்வாய் அது இல்லை என்றால் ஐரோப்பிய கப்பல்கள் ஆசியா வர கொஞ்சகாலம் ஆகும். கொஞ்ச காலம் என்றால் 3 முதல் 5 மாதம் அவ்வளவுதான்.

அது மகா முக்கியமான சூயஸ் கால்வாய். அது அமைந்திருக்கும் எகிப்தினை மிரட்ட அருகில் ஒரு வெள்ளை ஆதரவு நாடு அவசியம் என காட்டினார்கள். ஒப்புகொண்டது பிரிட்டன் காரணம் இலங்கை,சிங்கப்பூர் எல்லாம் அப்பொழுதும் பிரிட்டன் ஆளுகை.

ஒப்புகொண்ட பிரிட்டன், பாலஸ்தீனை 2 ஆக பிரித்து இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் என தீர்ர்பு எழுதிவிட்டு மூட்டைகட்டியது.

1948 மே 14ல் பிரிட்டன் கப்பலேறி போய்விட்டது. மறுநாள் வரலாறு திரும்பியது.

என்ன வரலாறு, அதேதான் ஆபிரகாம் காலமுதல் இயேசுகாலம் வரை பைபிள் சொல்லுமல்லவா? சீரியர்,அமோனியர்,ஏத்தையர் இன்னும் பல இனங்களுக்கும் யூதருக்கும் நடந்த சண்டைகள், அதே தான்.

சீரியர்கள் இன்று சிரியர்கள், அம்மோனியர்கள் இன்று ஜோர்டான், ஏத்தையர் லெபனான் பகுதி, பெலிஸ்தியர் இன்றைய பாலஸ்தீனியர் அவர்கள் எல்லாம் இஸ்ரேல் மீது போர் தொடுத்தார்கள், அன்றைய அரபு நாட்டின் ஒரே பெயர் சொல்லும் நாடான எகிப்தும் கலந்துகொண்டது.

என்று தொடுத்தார்கள், மறுநாள் அதாவது 1948, மே 15.

அன்று பிறந்த தேசம் அன்று இரவே போரினை எதிர்கொண்ட விசித்திரம் அன்றுதான் உலகில் நடந்தது.

இன்றைய தீரா பாலஸ்தீனியரின் கண்ணீர் அன்றுதான் முதலில் தொடங்கியது.

யார்தவறு? எதில் தவறவிட்டார்கள்? எப்படி கணக்கு தப்பிற்று?

போரில் வென்றது இஸ்ரேல்தான் (அல்லேலூயா..இஸ்ரேலின் கடவுளுக்கு ஜெயம் என சில குரல்கள் கேட்கலாம், விடுங்கள் அவர்கள் அப்படித்தான், இஸ்ரேலில் என்ன நடந்தாலும் இந்த வசனத்தை மாற்றமாட்டர்கள்), ஆனால் இஸ்ரேலியருக்கு அனுகூலமானது நிறைய இருந்தன.

எப்படி சறுக்கினார்கள் அரேபியர்கள்? உண்மையிலே கர்த்தரின் சேனை வந்து போரிட்டதா? எது வெற்றியை தீர்மானித்தது.

பாலஸ்தீன் எப்படி அனாதை ஆக்கபட்டது? பார்க்கலாம்..

(தொடரும்)

சாதிகொடுமையும் அது ஏற்படுத்தும் கொடூர வலியும்

நேற்று நடைபெற்ற ஒரு சம்பவம் தமிழக சாதிகொடுமையினையும் அது ஏற்படுத்தும் கொடூர வலியினையும் படம்பிடித்து காட்டியிருக்கின்றது

அரியலூர் பக்கம் அந்த தாழ்த்தபட்ட இளைஞன் பாலிடெக்னிக் வரை படித்திருக்கின்றான், படிக்கும் பொழுதே மேல் சாதிபெண் ஒருத்தியுடன் காதல் மலர்ந்திருக்கின்றது

காதலுக்கு சாதி, மதம், இனம், கண், அறிவு என எதுவுமே தெரியாது அல்லவா?, இனம்புரியாத ஒரு மயக்கமன்றி அது வேறேன்ன?

இது மானிட விதி, அவர்களுக்குள் விரும்பிவிட்டார்கள் கனவில் மிதந்து காலங்களை மீறி வாழ துடித்திருக்கின்றன அந்த இளம் மான்குட்டிகள்

அவர்களை பொருத்தவரை அவர்கள் காதல் மான்கள், ஒரே மீன்கள் ஆனால் கொடுமையான சாதி சமூகத்துக்கு அப்படியா?

அவன் மான், நீ சிங்கம். சிங்கம் எப்படி மானுடன் குடும்பம் நடத்தமுடியும் என மிரட்டிய சொந்தங்கள் அப்பெண்ணை பிடித்து இன்னொருவனுக்கு திருமணம் செய்துவைத்துவிட்டது

அவள் என்ன ஆடா மாடா? திடீரென கழுத்தில் கயிறை பூட்டி இன்னொருவன் கையில் பிடித்து கொடுத்தவுடன் பின்னால் செல்ல‌

அதுவும் மாடுகள் கூட விற்றுவிட்டபின் பழைய இடத்திற்கே ஓடிவரும் பாசமுள்ள பூமியில் அவள் மனம் ஏங்காதா?

அவள் அலறி துடித்திருக்கின்றாள், அவனை மறக்க முடியாமல் தவித்திருக்கின்றாள்

அவள் மனம் அவன் இன்றி வாழமுடியாது, அவனே தன் முழு மகிழ்சியான வாழ்வுக்கு ஆதாரம் என அவள் கதறி நிற்கும் பொழுது யார் என்ன செய்யமுடியும்?

கடல் மீன்கள் ஆற்றில் வாழா, ஆற்றில் வாழும் சில மீன்கள் கடலில் வாழா

நிலத்தில் வாழ்பவை நீரில் வாழா, மலையில் வாழும் சில பயிர்கள் பொட்டலில் வளராது

இரண்டும் நீர்தானே, இரண்டும் மண்தானே என்றெல்லாம் சொல்லமுடியாது, இயற்கையின் பிணைப்பு வேறுமாதிரியானது

அப்படி அவள் மனமும் அவனையே தேடி ஓடிவந்துவிட்டாள்

உண்மையான காதல் இருந்ததால், அவளின் மனமும் மகிழ்வுமே அவனுக்கு முழு மகிழ்ச்சி என்பதால் புதுவெள்ளத்தை ஏற்கும் குளம் போல அந்த காதலனும் அவளை ஏற்றுகொண்டான்

ஆனால் சாதி சமூகம் விடுமா?

இருவரும் சந்தித்தி அழுதிருக்கின்றார்கள், ஆனால் அடுத்து என்ன செய்வது என்பதுதான் அவர்களுக்கு தெரியவில்லை

நிச்சயம் அவர்களின் காதல் கடல்தான் ஆனால் சாதி எனும் கரையில் அலையாய் அடிக்கமுடியுமே தவிர தாண்டமுடியாது

அந்த சிங்கங்கள் இந்த மான்களை கிழித்துபோடுமே தவிர வாழவிடாது, அதுவும் அவள் மணமாகிவிட்டு திரும்பிய பின் கூடுதல் ஆபத்து

அவர்களால் வாழவும் முடியாது, அதே நேரம் பிரியவும் முடியாது

காதலித்துவிட்டு பிரிந்து வாழ்வது என்பது நடைபிணத்துக்கு சமானம் என்பதால் சாக முடிவெடுத்திருக்கின்றார்கள்

அந்த சாவு கொடுமையானது, அதுவும் வாழதுடிக்கும் இருவர் சாக முடிவெடுத்த தருணம் எப்படி இருந்திருக்கும்

நிச்சயம் அவன் வாழவேண்டும் என அவளும், அவளாவது வாழவேண்டும் என அவனும் விரும்பியிருக்கலாம் ஆனால் இனி முடியாது என்றாகிவிட்டபின் என்ன செய்ய?

சாக முடிவெடுத்து விஷ ஊசி செலுத்தியிருக்கின்றார்கள், அவள் மயங்கி சரிவதை அவன் கண்டிருக்கின்றான்

காதலி மயங்கி சாவதை கண்டபின் எந்த உண்மைகாதலனால் தாங்க முடியும்?

ஆம் அவனின் உலகமே முடிந்துபோன பின்பு அவனும் தூக்கில் தொங்கி செத்துவிட்டான்

ஆனால் அந்த அபலைபெண்ணின் விதி படுமோசமானது, அவளை வாழவிடாத விதி அவளை சாகவும் விடவில்லை

விஷ மருந்து என மயக்கமருந்தை வாங்கி ஊசியேற்றியிருக்கின்றார்கள் இருவரும், அவள் மயங்கி இருக்கின்றாள் இவனுக்கு மயக்கம் வரவில்லை

ஆனால் அவள் இறந்துவிட்டதாக எண்ணி அவன் செத்தே விட்டான், அவளோ சிகிச்சைக்கு பின் பிழைத்து கொண்டாள்

அவனுக்கு இறுதிசடங்கு நடக்கின்றது, அப்பெண் மருத்துவமனையில் இருகின்றாள்

அவளுக்கு இன்னும் உண்மை தெரிந்ததா இல்லையா என தெரியவில்லை, ஆண்டிமடம் ஜெயங்கொண்டம் பகுதியில் பலத்த போலீஸ் காவல் போடபட்டிருக்கின்றது

இந்த செய்தி படித்ததில் இருந்து மனம் நொடிந்து கிடக்கின்றது, இமயமலையே மனம் மேல் அமர்ந்தது போல் மனம் கனக்கின்றது

என்னதான் காதல் ஹார்மோன் விளையாட்டு என்றாலும் அதில் விதிபலனும் முன் ஜென்ம தொடர்ச்சியோ நிச்சயம் உண்டு

ஏன் இருவரும் அதே பகுதியில் பிறக்க வேண்டும்? ஏன் இருவர் உள்ளமும் இணைய வேண்டும்?

கோடிகணக்கான மாந்தர் உள்ள உலகில் இவர்கள் இருவரும் ஏன் பிணைய வேண்டும்?

அட கண்கள் சந்தித்தன சரி, ஆனால் இவள் உனக்கானவன் என்றும் அவளை விட்டுவிடாதே என இவன் மனமும் சொல்லிகொண்டே இருந்தது ஏன்?

இவர்களை காலம் ஏன் சந்திக்க வைக்க வேண்டும்? அதே காலம் ஏன் இவர்களை பிரிக்க வேண்டும்?

இப்படி அவனின் விதி அவன் கண்களிலும் அவள் முகத்திலும் இருந்தது என சொன்னாலும் மகா முக்கியமான கொடுமை இந்த சாதி

காதல் என்பது சுகமானது, சுவாரஸ்யமானது, மனதால் உணர்வால் அனுபவித்து கொண்டாடும் ஒரு விஷயம்

கடவுள் போல அதுவும் அனுபவத்தால் அன்றி விளக்கமுடியாதது

அந்த அற்புதமான காதலை கொண்டாட தமிழகத்தில் சாதி மதம் என ஏக கொடுமைகள்

மானிடனாக பிறந்தாலும் தமிழகத்தில் பிறக்க கூடாது, அப்படி பிறந்தாலும் காதலிக்கவே கூடாது

காதலை துறந்து இன்னும் பல விஷயங்களை சாதி மதத்துக்காக துறந்து மரம் போல் மனத்துடன் வாழ ஒரு சபிக்கபட்ட வாழ்வு அவனுக்கு நிர்பந்திக்கபட்டிருக்கின்றது

இக்கொடுமைகள் எல்லாம் ஓர்நாள் நிச்சயம் களையபடும்

சிகிச்சை பெறும் அந்த பெண்ணுக்கு என்ன ஆறுதல் சொல்ல என தெரியவில்லை

அவள் முதலில் அழட்டும், கதறி அழட்டும் இந்த பாவபட்ட பூமியில் பிறந்ததற்காக அழட்டும், அவளோடு நாமும் அழுவோம்

காலம் எல்லா காயத்தையும் ஆற்றும் அப்படி அவளுக்கும் காயங்களை ஆற்றட்டும்

ரோமியோ ஜூலியட் கதை என ஷேக்ஸ்பியர் என்றோ கற்பனையாய் எழுதிய கதை ஒன்று கண்முன் நடக்கும்பொழுது மனம் பலமுறை வெடித்து வெடித்து அழுகின்றது

இருவருமே அடாவடி பார்ட்டிகள்

ஈரானையோ இல்லை அதன் வெளிநாட்டு நிலையம் ஒன்றை குறிவைத்தோ அமெரிக்கா கப்பலையும் படைகளையும் நகர்த்துவது தெரிகின்றது

சூயஸ்கால்வாயினை நோக்கி வருகின்றது யு.எஸ்.எஸ் லிங்கன் அது விரைவில் அரபுகடலை அடையும்

அமெரிக்க அதிகார பீடங்களான ஜாண் பால்ட்டன், மைக் பாம்பியோ என் இருவரும் ஈரானுக்கு எதிராக முழங்கும் வேளையில் அமெரிக்க படைகலன்கள் ஈரான் பக்கம் சுற்றுவது எதையோ சொல்கின்றது

எதையோ மிக நன்றாக குறிவைத்து ஒரு முடிவோடு வருகின்றது அமெரிக்கா

ஈரானோ நாம் பாலைவன நரி, இந்த மிரட்டலுக்கு கொஞ்சமும் அஞ்சமாட்டோம் எம்மிடம் மோதினால் அவர்களுக்கு அழிவுதான் மிஞ்சும் என கடுமையாக எச்சரிக்கின்றது

இருவருமே அடாவடி பார்ட்டிகள்

விஷயம் என்னவென்றால் ஈரானுக்கு எதிரான கச்சா எண்ணெய் தடை விதிக்கபட்ட நிலையில் மேலும் ஈரானை முடக்க ஒருமாதிரி நடவடிக்கைக்கு தயாராகின்றது