இரு செய்திகள் மனதை மிக நோகடிக்கின்றன‌

இரு செய்திகள் மனதை மிக நோகடிக்கின்றன‌

முதலாவது சென்னையில் நடக்கும் குடிநீர் தட்டுப்பாடு இரண்டாவது விஷயம் மதுரையில் ஆக்ஸிஜன் இல்லாமல் 3 பேர் மருத்துவமனையில் இறந்தது

சென்னையின் குடிநீர் தேவைக்கு அன்றே வழி அமைத்தான் வெள்ளையன் அடுத்த 50 ஆண்டுகால தேவையினை 1900களிலே அவன் பூர்த்தி செய்திருந்தான்

அதன் பின்பு சென்னை மக்கள் தொகையில் வெடிக்கும்பொழுது காங்கிரஸ் அரசும் நன்றாக திட்டமிட்டது தீரர் சத்தியமூர்த்தி கொண்டுவந்த அந்த பூண்டி நீர்தேக்கம் எல்லாம் வரலாறு

கலைஞரும் அவர் செதுக்கிய சென்னையும் நிச்சயம் நன்றாக இருந்தது, உறுதியாக சொல்லலாம் திமுக மேல் ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் சென்னையினை அவர்கள் தொடர்ந்து வளர்த்தெடுத்ததை மறக்க முடியாது

மேம்பாலங்கள் கட்டியது ஒருபக்கம் என்றால் நீர்தேவையினையும் நன்றாகவே மேம்படுத்தினார்கள்

அரசு ரீதியாக செய்யமுடியாததை கூட புட்டபர்த்தி சாய்பாபா மூலம் ராஜதந்திரமாக சென்னைக்கு ஏதோ செய்ய முயன்றார்கள்

மருத்துவதுறையிலும் காங்கிரஸ் போட்டுவைத்த அஸ்திவாரத்தை திமுக நன்றாகவே மேம்படுத்தி கொண்டுவந்தது

ஜெயாவின் ஆட்சி இரும்பு ஆட்சி அதில் நல்லது சில இருந்தாலும் விமர்சனம் என்பது வராது, அவரின் அடக்குமுறை வேறுமாதிரியானது

கடந்த நவம்பரில் பருவமழை சென்னையினை கைவிட்டபொழுதே அடித்து சொன்னார்கள், வரும் கோடை காலம் நினைத்தது போல் இராது , மாபெரும் சிக்கலை சென்னை சந்திக்கும் என்ற பலத்த எச்சரிக்கை விடபட்டது

ஆனால் ஆளுக்கு 5 ஆயிரம் அதன் பின் 2 ஆயிரம் என ஏலம் விட்ட அரசுக்கு ஏகபட்ட வேலைகள் இருந்தன‌

உள்ளாட்சி அமைப்புக்கான தெர்தல் நடைபெறாததால் அந்த துறையும் இப்பொழுது களத்தில் இல்லை

ஆந்திராவில் இருந்து பெறவேண்டிய நீரையும் இந்த அரசு பல காரணங்களுக்காக கேட்கவில்லை, அது அடிமைதனம் என்பது மட்டும் ரகசியமல்ல, பாஜகவுக்கு எதிரான சந்திரபாபு நாய்டு போன்றோருடன் பேச இவர்கள தயங்கினர்

வீராணத்தில் போதுமான நீர் இருந்தும் அதையும் கொண்டுவரும் விஷயத்தில் இவர்கள் இல்லை எல்லாம் தேர்தல் முடிவு பயம்

சென்னை மக்கள் குடிநீருக்கு தவியாய் தவிக்க இவர்களோ தினகரன் எம்.எல்.ஏ 3 பேருடன் 3 சீட்டு ஆட்டம் ஆடிகொண்டிருக்கின்றார்கள்

இந்த அவலத்துக்கு காரணம் இந்த 7 வருட அரசும் குறிப்பாக பழனிச்சாமி அரசும் , உள்ளாட்சி தேர்தல் நடத்தாத கொடுமையுமாகும்

இப்படி சென்னையினை பரிதாபமாக பார்த்து கொண்டே மதுரை பக்கம் வந்தால் 3 பேர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் இல்லாமல் இறந்தே விட்டார்கள்

இது பெரும் கொடுமை

வடக்கே மிக பின் தங்கிய மாநிலத்தில் மட்டும் காணபடும் இக்கொடுமை தமிழகத்துக்கும் வந்திருப்பது நிச்சயம் மனம் கலங்க வேண்டியவிஷயம்

மிக மிக முன்னேறிய மாநிலமாக கருதபட்ட தமிழகம் இன்று மிக பிந்தங்கிய மாநிலமாக சென்றுகொண்டிருப்பது மகா வேதனை

மக்கள் நலம் சிறிதுமில்லா இந்த அரசு எவ்வளவு விரைவில் ஒழிகின்றதோ அவ்வளவுக்கு தமிழகத்துக்கு நல்லது

2016ல் திமுகதான் வென்றிருந்தால் இந்நிலை வந்திருக்காது, உறுதியாக சொல்லமுடியும்

அவர்களின் கொள்கையும் இன்னும் பல காரியங்களும் சர்ச்சைக்குரியவைதான், ஆனால் ஓரளவு மக்கள் நல திட்டங்களை அவர்களால்தான் சரியாக செய்யமுடியும்

காரணம் கலைஞரின் சிந்தனை அப்படி இருந்தது

காமராஜரை மீறி நம்மிடம் ஒப்படைக்கபட்ட ஆட்சியினை மிக சிறப்பாக நடத்தவேண்டும் என்ற வேகம் அவரிடம் இருந்தது

ராமசந்திரன் , ஜெயாவிடம் அப்படி ஒரு எண்ணம் ஒரு காலமுமில்லை

அதையும் மீறி கிடைத்த இடத்தில் எல்லாம் அதே வேகத்தில் பணியாற்றினார் கலைஞர், அதை சொல்லத்தான் வேண்டும்

கலைஞரால் இலக்கணம் வகுக்கபட்ட கட்சி திமுக, நிச்சயம் அவர்கள் ஆட்சியில் இருந்தால் இந்நிலை வந்திருக்காது, இனி இந்த அவலத்தை போக்கவும் அவர்களின்றி இங்கு யாருக்கும் வாய்ப்பு இல்லை

திமுக பல இடங்களில் கடிக்கும் பூதம்தான், ஆனால் காவல் பூதமும் அதுதான்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s